தேசிய அடையாள அட்டை தண்டப்பணத்தினால் அவதியுறும் மக்கள்!!

அவதியுறும் மக்கள்

தொலைந்த அடையாள அட்டைக்குப்பதிலாக இணைப்பிரதி ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் அறவிடப்படும் 500 ரூபா தண்டப்பணம் செலுத்திப் பெற்றுக்கொள்வதற்கு பலர் அவதியுறுவதாக தெரிவித்துள்ளனர்.

தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் கிராம அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் 15 வயதைப் பூர்த்தி செய்து முதற்தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு ஒருவர் 100 ரூபா செலுத்தல் வேண்டும்.

தேசிய அடையாள அட்டையைத் திருத்தி இணைப்பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 250ரூபாவும் தொலைந்த தேசிய அடையாள அட்டைக்குப்பதிலாக இணைப்பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 500ரூபாவும் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன கடந்த காலத்தில் இத் தண்டப்பணத்தில் வசதியற்றவர்களுக்கு கிராம அலுவலகர் ஊடாக பிரதேச செயலாளருக்கு சிபாரிசு வழங்கும் பட்சத்தில் இத்தண்டப்பணம் விலக்கழிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அத்திட்டம் நிறுத்தப்பட்டு இத்தண்டப்பணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பலர் இந்நடவடிக்கையினால் அவல நிலைக்குச் சென்றுள்ளனர். இதனால் தேசிய அடையாள அட்டையைத் தொலைத்த ஒருவர் 500ரூபா தண்டம், முத்திரைச் செலவுகள் புகைப்படம் உட்பட 1100ரூபாவிற்கு மேல் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழில் அதிகாலையில் நடந்த சோகம் : இளைஞன் பரிதாபமாக பலி!!

இளைஞன் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகி உள்ளார். விபத்து சம்பவம் வடமராட்சி, நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் டிப்பரும் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நவிண்டில் பகுதியை சோ்ந்த முகுந்தன் கிரிஷாந்த் என்ற இளைஞனே சம்பவத்தில் உ யிாிழந்துள்ளாா்.

பாடசாலையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவி : கண்ணீரை வர வைக்கும் சம்பவம்!!

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவி

தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. காலி பாடசாலை ஒன்றில் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இரண்டாம் தவனை பரீட்சைகள் ஆரம்பமானது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது 3 வயது சகோதரனை பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

குறித்த மாணவியின் மற்றுமொரு சகோதரன் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் தாய் அவரை பார்த்து கொள்கின்றார்.

அவரது தந்தை தேயிலை தொழிற்சாலையில் மாத சம்பளத்திற்கு வேலை செய்வதால் அவரால் விடுமுறை பெற முடியாது போயுள்ளது.

இந்நிலையில் தனது தம்பியை வீட்டில் தனியாக விட்டு செல்ல முடியாமையினால் குறித்த மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்துள்ளார்.

உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட ஆசிரியர் முச்சக்கர வண்டி ஒன்றை மாணவியின் வீட்டிற்கு அனுப்பி வைத்து மாணவியை பரீட்சைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதன் போதே குறித்த மாணவி தனது தம்பியை பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

மிகவும் கெட்டிக்காரியான மாணவி வீட்டில் இருக்க கூடாது எனவும், அவர் சுகயீனமடைந்தமையினால் அவர் ஒரு பாதத்தை இழந்துள்ளார். குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காரணங்களின் அடிப்படையில் குறித்த மாணவியை தம்பியுடன் பரீட்சை மண்டபத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கியதாக அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாணவியின் எதிர்கால கல்வி மீது அதிபர் கொண்டுள்ள அக்கறையும், மாணவி தனது சகோதரன் மீது கொண்டுள்ள பாசத்தையும் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

வவுனியாவில் ம து போ தையில் மோட்டர் சைக்கிள் செலுத்தியவருக்கு 76 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

ம து போ தையில்

ம து போ தையில் மோட்டர் சைக்கிளில் ஆவணங்களின்றி பயணித்தவருக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றால் 76 ஆயிரம் ரூபாய் தண்டமாக அறிவிடப்பட்டது.

நேற்றைய தினம் ம துபோ தையில் மோட்டர் சைக்கிள் காப்புறுதி பத்திரம், வரிப்பத்திரம் இன்றி பயணித்த நபர் ஓருவரை வவுனியா போக்குவரத்து பொலிசார் கை து செய்திருந்தனர்.

குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்திய போது ம து போ தையில் வாகனம் செலுத்தியமை, காப்புறுதி பத்திரம் இல்லாமல் பயணித்தமை, வரி பத்திரம் இல்லாமல் பயணித்தமை ஆகிய 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த நபருக்கு 76 ஆயிரம் ரூபாய் குற்றப் பணமாக செலுத்த நீதிமன்று உத்தரவிட்டது.

நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய இளம் ஜோடி எடுத்த விப ரீத முடிவு : கதறி அழுத உறவினர்கள்!!

இளம் ஜோடி

தமிழகத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறிய இளம் ஜோடி த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள இராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லேஷ். இவர் அதே கிராமத்தில் வசிக்கும் ஜோதி என்ற சொந்தக்கார பெண்ணை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இதனால் இருவரும் தங்கள் காதல் குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த காதல் ஜோடி மிகுந்த வேதனையில் இருந்துள்ளனர். இதற்கிடையில் ஜோதிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க அவர்கள் பெற்றோர் தீவிரம் காட்டி வந்ததால்,

இந்த காதல் ஜோடி, வேறு வழி தெரியாமல் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியேறி காருக்கொண்டப்பள்ளி என்ற இடத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் ர யில் முன் பா ய்ந்து இருவருமே த ற்கொ லை செய்து கொண்டனர். நேற்று காலை தகவல் அறிந்து உறவினர்களும், கிராம மக்களும் அங்கு சென்று பார்த்த போது, காதல் ஜோடியின் உட ல்கள் உடல் சி தறி உயி ரிழந்து கிடப்பதைக் கண்டு கத றி அழுதனர்.

இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், இருவரின் சி தறி கிடந்த உ டல் பாக ங்களை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் மர் மமாக கொ லை செய்யப்பட்டு கிடந்த கணவன் : கதறும் தாய்!!

நள்ளிரவில்..

சென்னை நெற்குன்றம், சக்திநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். ஆட்டோ டிரைவரான இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு மகேந்திரன் என்ற உயிர் நண்பர் உள்ளார். மகேந்திரனுக்கு பானு என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள்.

இந்நிலையில் நாகராஜ் வீட்டுக்கு அடிக்கடி மகேந்திரன் வந்து செல்வதால், நாகராஜுக்கும், காயத்திரிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு காயத்ரி தன்னுடைய சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அதன் பின் கடந்த 10 நாள்களுக்கு முன், காயத்ரியிடமும் நாகராஜிடமும் பேச்சுவார்த்தை நடத்திய உறவினர்கள் இருவரையும் சமரசப் படுத்தி ஒன்றாக இருக்கும் படி அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இருப்பினும் இதே பிரச்சனை மீண்டும் வந்ததால், இருவரும் சண்டை போட்ட நிலையில், நாகராஜு காது, மூக்கில் ர த்தம் வழிந்த நிலையில் அவர் இறந்துகிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவரின் உ டலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் பல திடு க்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், நாகராஜும் காயத்ரியும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால், காயத்ரி கோபித்து கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின் சமரசம் பேசி ஒன்றாக இருக்க வைத்துள்ளனர். அப்போது நாகராஜ் நண்பன் து ரோகம் செய்துவிட்டான், அவனை கொ லை செய்வேன் என்று போ தையில் உளறியதாக காயத்திரி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சமயத்தில்தான், மர் மமான முறையில் நாகராஜ் இற ந்துள்ளார். உடல் பரிசோதனைக்கு பின்னரே முழு விபரமும் தெரியவரும் என்று பொலிசார் கூறி முடித்தார். மேலும் நாகராஜின் மரணம்குறித்து அவரின் அம்மா கவால்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், என் மகன் நாகராஜும் காயத்ரியும் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்திவந்தனர்.

இந்தச் சமயத்தில் ஆட்டோ டிரைவர் மகேந்திரனின் நட்பு நாகராஜுக்கு கிடைத்தபிறகுதான், குடும்பத்தில் பல பிரச்னைகள் ஏற்பட்டன. காயத்ரியின் நடவடிக்கைகளும் மாறின. இந்தச் சமயத்தில்தான், நாகராஜுக்கு காயத்ரி குறித்து ஒரு தகவல் தெரியவந்தது. காயத்ரிக்கு தன்னால் முடிந்த புத்திமதிகளை நாகராஜ் கூறினார். ஆனால் காயத்ரி மாறவில்லை.

இதன் காரணமாகவே நாகராஜுக்கு ப்ரைடு ரைஸில் வி ஷம் கலந்து கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகும் நாகராஜின் உயிர் பிரி யாததால், துப்பட்டாவால் கழு த்தை நெரி த்தும், தலையணையால் முகத்தை அழு த்தியும் கொ லை செய்துள்ளனர்.

நாகராஜ் இறந்த சமயத்தில் காயத்ரி எங்கு இருந்தார் என்ற ஒரே கேள்விக்கு மட்டும் விடைகிடைத்தால் போதும், என் மகன் மர ணத்துக்கு யார் காரணம், அநியாயமாக என் மகனைக் கொ லை செய்துவிட்டனர் என்று கதறியுள்ளார்.

பாடசாலையில் நடந்த பய ங்கரம் : மாணவர்களின் கண்முன்னே ஆசிரியைக்கு நடந்த வி பரீதம்!!

ஆசிரியைக்கு நடந்த விப ரீதம்

மதுரையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை அவருடைய கணவர் மாணவர்களின் கண்முன் வைத்தே கொ டூரமாக கு த்தி கொ லை செய்துள்ள சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரத்தை சேர்ந்த பொறியாளர் குருமுனீஸ்வரன், மதுரையை சேர்ந்த ரதிதேவி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினருக்குள் அடிக்கடி ச ண்டை ஏற்படுவதும், உறவினர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சேர்த்து வைப்பதும் வாடிக்கையாகவே இருந்து வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையில் ச ண்டை ஏற்பட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குருமுனீஸ்வரன் சென்னையில் வேலை செய்து வருகிறார்.

ரதிதேவி மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் நண்பர்கள் சிலர், ரதிதேவியின் நடவடிக்கைக்கு குறித்து தவறாக கூறியுள்ளனர். அதனை நம்பிய குருமுனீஸ்வரனும் மனைவி மீது கடும் ஆத்திரமடைந்துள்ளான்.

இந்த நிலையில் இன்று பள்ளி நடந்து கொண்டிருக்கும் போது ஹெல்மட் உடன் ரதிதேவியின் வகுப்பறைக்குள் நுழைந்த குருமுனீஸ்வரன், “உங்க டீச்சரை நான் இப்போ கொ ல்லப்போறேன்” எனக்கூறிக்கொண்டே மறைத்து வைத்திருந்த க த்தியால் சர மாரியாக குத் தியுள்ளான். இரத்த வெ ள்ளத்தில் மயங்கிய ரதிதேவி சம்பவ இட த்திலேயே துடி துடித்து உயி ரிழந்துள்ளார்.

இதனை பார்த்து அதி ர்ச்சியடைந்த மாணவர்கள் சித றியடித்து ஓடியுள்ளனர். அங்கிருந்து தப்ப முயன்ற குருமுனீஸ்வரனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். கொ லைக்கான காரணம் குறித்து வி சாரணை மேற்கொண்ட போது, தன்னிடம் இருந்து குழந்தைகளை பிரித்துக்கொண்டு தனியாக வாழ்ந்ததாலே கொன்றதாக கூறியுள்ளான். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோரமாக மாறிய முகத்தால் பிரித்தானியா திரும்ப முடியாமல் அவஸ்தையடைந்த மாணவி!!

அவஸ்தையடைந்த மாணவி

ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற ஸ்காட்லாந்து மாணவியின் முகம் வீங்கியிருந்ததால், அவரை விமானத்தில் ஏற ரியான் ஏர் விமான நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷானன் வோதர்ஸ்பூன் என்கிற 24 வயதான மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய நண்பர்களுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சுற்றுலாவை முடித்துவிட்டு நாடு திரும்புவதற்காக விமான நிலையம் வந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு தோல் அழற்சி ஏற்பட்டு முகம் வீக்கமடைந்துள்ளது. அதேசமயம் அவருடைய பாஸ்போர்ட்டில் நீர் புகுந்ததால் சிறிது சேதம் ஏற்பட்டிருந்துள்ளது.

விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்ட ரியான் ஏர் விமான நிர்வாக பணிப்பெண், இரண்டு முறை சரிபார்த்து விட்டு பயணம் செய்ய முடியாது என ரத்து செய்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த ஷானன், 10 மணி நேரம் விமான நிலையத்தில் தனியாக காத்திருந்துள்ளார். மேலும் 200 பவுண்டுகள் செலுத்தி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்து வீடு திரும்பியிருக்கிறார்.

இதனை கேள்விப்பட்ட அவருடைய தந்தை தற்போது ரியான் ஏர் விமான நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் குறித்து விமான நிர்வாகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தாய்க்கு வந்த எச்.ஐ.வி-யால் 15 வயது மகனுக்கு நேர்ந்த கதி!!

மகனுக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் எச்.ஐ.வி. பாதித்த மாணவன் 10 நாட்களுக்கு பிறகு மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை காரணமாக வேறு அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் கேரளாவில் லொறி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

லொறி டிரைவரின் 15 வயது மகனுக்கும் எச்.ஐ.வி. நோய் பாதிப்பு இருந்தது. இந்தநிலையில் அங்குள்ள ஊர் கோவிலில் தங்கியிருந்து வந்த மாணவன் 10-ம் வகுப்பு படிப்பதற்காக அரசு பள்ளியில் சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தான். ஆனால் எச்.ஐ.வி. பாதித்து இருப்பதால் அந்த பள்ளியில் மாணவனை சேர்க்க தலைமையாசிரியர் மறுத்து விட்டார்.

இதுகுறித்து மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் கடந்த 11-ந்தேதி பெரம்பலூர் ஆட்சியர் சாந்தாவிடம் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் அரசு பள்ளியில் எச்.ஐ.வி. பாதித்த மாணவனை சேர்க்காதது குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க கோரி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் மற்றும் ஆட்சியர் சாந்த்தா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவனை முதலில் சேர்த்து கொண்டதாகவும், வகுப்பில் அவனது கற்கும் திறன் சரியாக இல்லாததால்தான் மாணவன் தொடர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை என்றும் தலைமையாசிரியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய சாந்தா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கனிடம் மாணவனை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால் மாணவனின் தந்தை அதே பள்ளியில் தனது மகனை சேர்க்க விரும்பவில்லை.

மாணவனுக்கு எச்.ஐ.வி. இருப்பது அனைவருக்கும் தெரிந்ததாலும், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் இடையே பிரச்சினை ஏற்பட்டதாலும் தங்களுக்கு மன உளைச்சல் இருப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாணவன் மற்றொரு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சொக்கலேட் துண்டால் பறி போன 11 வயது பிரித்தானிய சிறுவனின் உ யிர் : க தறும் குடும்பம்!!

பிரித்தானிய சிறுவன்

பிரித்தானியாவில் சொக்கலேட்டால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 11 வயது சிறுவன் பரி தாபமாக மர ணமடைந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை உரு க்குலைய வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சிறுவனின் தந்தை தாமஸ் பவுனால் பிளாக்பர்ன் கொரோனர் நீதிமன்றத்தில் இன்று விளக்கமளித்துள்ளார்.

லங்காஷயர் நகரின் பர்ன்லே பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வந்துள்ளார் 11 வயதான ரஃபி பவுனால். இவருக்கு பால் பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் மிகுந்த எச் சரிக்கையுடனே சிறுவன் விவகாரத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுவனின் தந்தை தாமஸ் பவுனால், பால் சேர்க்கப்படாதது என கருதி மோரிசன்ஸ் சொக்கலேட் ஒன்றை அளித்துள்ளார். சிறுவன் ரஃபி அதில் இருந்து 4 துண்டு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சிறுவன் ரஃபி ஒவ்வாமையால் அவதிக்கு உள்ளாகியுள்ளான.

சிறுவனின் நிலை கண்டு அதி ர்ச்சியடைந்த தாமஸ், சிறுவனை காப்பாற்ற போ ராடியுள்ளார். மட்டுமின்றி, அவசர உதவிக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து சிறுவனை ராயல் பிளாக்பர்ன் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அன்றைய நாள் சுமார் 5.43 மணியளவில் சிகிச்சை பல னின்றி சிறுவன் மர ணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

உடற்கூறு ஆய்வில் சிறுவன் சொக்கலேட்டில் கலந்திருந்த anaphylaxis என்ற பொருளாலையே மர ணமடைந்தது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜூன் 8 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை தாமஸ் பவுனால் நீதிமன்றத்தில் இன்று விளக்கமளித்துள்ளார்.

பால் பொருட்கள் கலக்காத சொக்கலேட் என்பதாலையே தாம் தமது மகனுக்கு அளித்ததாகவும், ஆனால் அதனால் ஏற்பட்ட ஒவ்வாமையில் இருந்து தமது மகனை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயனர்களின் மொபைல் சாதனங்களை வெகுவாக பாதிக்கும் FaceApp : வெளியானது அதிர்ச்சித் தகவல்!!

FaceApp

கடந்த சில வாரங்களாக சமூகவலைத்தளங்கள் எங்கும் தமது இளமைப் புகைப்படத்தினை வயதானவர்களின் தோற்றத்துக்கு மாற்றி பகிர்ந்து வருகின்றனர் மக்கள். இது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

இதற்காக FaceApp எனும் அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் இதற்கு பின்னால் பாரிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட குறித்த அப்பிளிக்கேஷன் ஆனது பயனர்களின் மொபைல் சாதனங்களில் இருக்கும் அந்தரங்க தரவுகளை திருடக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிப்பதனால் மொபைல் சாதனங்களின் செயற்பாட்டில் மந்த நிலையையும் ஏற்படுத்துவதாக Kaspersky நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் பரிதாபமாக பலி!!

வாகன விபத்தில்..

திருகோணமலை-மட்கோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உ யிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உ யிரிழந்த இளைஞன் திருகோணமலை-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த சங்கல்ப ஜயசூரிய (26வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது படுகாயமடைந்தவர் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த சஜித் டில்சான் (23 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த இரண்டு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உ யிரிழந்த இளைஞனின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரு தரப்பினருக்கு இடையில் மோ தல் : துண்டாகி போன நாக்கை தேடும் பொலிஸார் : ஆபத்தான நிலையில் மூவர்!!

நாக்கை தேடும் பொலிஸார்..

இரத்தினபுரியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோ தல் காரணமாக வன் முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரக்வானை பகுதியில் இரண்டு தரப்பிற்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது நபர் ஒருவரின் நாக்கை மற்றொருவர் கடித்து துண்டாக்கியுள்ளார்.

மோ தலின் போது கத் தியால் குத் தப்பட்ட நிலையில் மூவர் பொத்துபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஆபத்தான நிலையில் இருந்தமையினால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

நாக்கை கடி த்து துண் டாக்கிய நபர் ரக்வானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துண்டாகிய நாக்கு பகுதி தேடப்பட்ட போதிலும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாக்கை கடித்த நபர் அதனை விழுங்கியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தனது நாக்கை இழந்துள்ளார். குடிநீர் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவருக்கு கிடைத்த அதிர்ச்சி!!

பிரித்தானியாவில் இருந்து

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் தீராத வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த நபர் நுளம்பு கடிக்கு உள்ளாமையினால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பணி புரிந்த போது நுளம்பு கடித்ததால் கொலின் வைட்ஸைட் என்ற பிரித்தானியர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தார். லிவர்பூலில் பிறந்து வசித்து வரும் 52 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். அவரை குணப்படுத்துவதற்காக மனைவி உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்தபோது அவருக்கு நிமோனியா மற்றும் செப்சிஸை என்ற ஆபத்தான நோய்கள் ஏற்பட்டு அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். தற்போது அவரால் கண் மாத்திரமே சிமிட்ட முடியும். முற்றாக அவர் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“இந்த நிலைமை யாருக்கும் ஏற்பட கூடாது. நுளம்பு பரவலை குறைக்க வேண்டும். இவ்வாறான நிலைமையில் இருந்து அவர் எப்படி மீண்டு வருவார் என எங்களுக்கு தெரியவில்லை என பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த குடும்பத்திற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் உதவி செய்துள்ளனர். இந்த நிதியின் மூலம் அவரது வைத்திய செலவுகள் முன்னெடுக்கப்படுவதாக மனைவி குறிப்பிட்டுள்ளார்

பொலிஸாருக்கு தகவல் கொடுத்துவிட்டு காதலியின் கழு த்தை அறு த்த காதலன்!!

சோகத்தை ஏற்படுத்தியுள்ள..

ராஜஸ்தான் மாநிலத்தில் காதலியை கொ லை செய்துவிட்டு காதலனும் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரை சேர்ந்த முகேஷ் (25) என்கிற இளைஞர் சுமன் (20) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த முகேஷ், நான் என்னுடைய காதலியை கொ லை செய்ய போகிறேன் எனக்கூறிவிட்டு துண்டித்துள்ளார்.

பின்னர் தன்னுடைய வீட்டு தோட்டத்தில் வைத்து காதலியின் கழு த்தை அறு த்துள்ளார். அதன்பிறகு வெளியில் இருந்த மரத்தில் தானும் தூ க்கு போட்டு த ற்கொ லை செய்துள்ளார்.

இதற்கிடையில் விரைந்து வந்த பொலிஸார், சட லமாக கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேஸ்புக் நேரலையில் த ற்கொ லை செய்துகொண்ட இளைஞர் : நெஞ்சை உருகவைக்கும் கடிதம்!!

பேஸ்புக் நேரலையில்..

காதலிக்கு வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் மனவேதனையடைந்த இளைஞர் பேஸ்புக் நேரலையில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சேகர்வார் என்கிற இளைஞர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த இளம்பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட இளைஞர் கடந்த சனிக்கிழமையன்று உள்ளூரில் உள்ள கோவிலுக்கு சென்று, அங்கு பேஸ்புக் நேரலையில் த ற்கொ லை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

நேரலையில் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக இளைஞரின் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள்ளாகவே இளைஞர் தூ க்கு போட்டு த ற்கொ லை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த 4 பக்க கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடித்ததில், என்னுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல. தயவுசெய்து யார் மீதும் நடவடிக்கைக்கு எடுக்காதீர்கள்.

என்னுடைய காதலி வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொள்ளப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. இந்த மன அழுத்தம் என்னை அதிகம் பாதித்துவிட்டது. என்னுடைய வேலையை கூட இழந்துவிட்டேன்.

நான் இற ந்ததும் என்னுடைய உ டல் உறுப்புகளை மறக்காமல் தானம் செய்துவிடுங்கள். இந்த முடிவிற்காக என்னுடைய அம்மா – அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.