வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சரவண்டி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஏ9 வீதி வழியாக யாழ் நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிள் ஓமந்தை, கள்ளிக்குளம் சந்திக்கு அண்மையில் வீதியைக் கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 14 வயதான நொச்சிமோட்டையைச் சேர்ந்த உருத்திரகுமார் திவாகர் மற்றும் மோட்டர் சைக்கிள் சாரதியான சுப்பிரமணியம் வெங்கடசரணியன் (வயது 35) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
வவுனியாவின் ஓமந்தை பகுதி தனியான பிரதேச செயலகமாக மாற்றப்பட வேண்டும் என வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளனர். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஓமந்தை தனியான பிரதேச செயலகமாக மாற்றப்பட வேண்டும்.
செட்டிகுளம், நெடுங்கேணி என்பன 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டது. ஆனால் வவுனியா மாத்திரம் 42 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட 219இற்கு மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியுள்ளளது. ஆகவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதன் படி ஓமந்தை ஒரு தனியான பிரதேச செயலகமாக கொண்டு வருவதற்கு இதில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, ஓமந்தை பிரதேச செயலகமாக பிரிக்கும் போது உள்ளடங்கும் கிராமங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் உள்ள எந்தவொரு கிராமத்தையும் உள்வாங்காது வவுனியா பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராமங்களை உள்ளடக்கி மட்டும் ஓமந்தை பிரதேச செயலகம் பிரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இக் கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 14 கிராம அலுவலர் பிரிவுகளை பிரித்து ஓமந்தை பிரதேச செயலகமாக மாற்றுவது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து தீர்மானமாக நிறைவேற்றியதுடன் இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் ஊடாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திற்கு செல்லும் மலைக்கு செல்வதற்கு வடமாகாண சபையால் கொடுக்கப்பட்ட ஏணியை அமைப்பது எனவும் தீர்மானம் எட்டப்பட்டதுடன், வவுனியாவில் காணியற்ற மக்களுக்கு அரச காணிகளை வழங்கி அவர்களை குடியமர்த்துவது எனவும் இக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
இவற்றுடன், வீட்டுதிட்ட பி ரச்சினை, குளப் புனரமைப்பு, வன இலாகாவின் பி ரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இத் திணைக்களங்கள் மாவட்ட அரச அதிபருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும், பொது மக்களை பாதிக்காத வகையில் செயற்படுவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கிலிருந்து காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ். புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு முதல் காங்சேன்துறை வரையான இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆரம்பமாகியுள்ளதாகவும் இந்த சேவைகள் தினசரி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழிலிருந்து இன்று காலை 06.25இற்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட 4082 இலக்க புகையிரதம் காலை 07.43இற்கு கிளிநொச்சியையும், வவுனியாவை 09.02இற்கும் மாலை 04.00 மணிக்கு கொழும்பையும் சென்றடையும்.
இரண்டாவது புகையிரத சேவையில் 4088 இலக்க புகையிரதம் மாலை 05.40இற்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு யாழ். புகையிரத நிலையத்தை 06.16இற்கு வந்தடையும். அங்கிருந்து 06.40இற்கு கொழும்பு நோக்கி புறப்பட்டு அதிகாலை 04.00 மணிக்கு கொழும்பை சென்றடையும்.
இதுவரையில் காங்கேசன்துறையிலிருந்து 06.00 மணிக்கு புறப்பட்டு யாழ். வந்தடைந்து, யாழிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்ட இரவு தபால் புகையிரத சேவை இன்று முதல் காங்கேசன்துறையிலிருந்து இரவு 07.30இற்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை 08.10க்கு வந்தடையும்.
மீண்டும் யாழ். புகையிரத நிலையத்திலிருந்து 08.25இற்கு புறப்படவுள்ள இந்த புகையிரதம் அதிகாலை 04.40இற்கு கொழும்பை சென்றடையும்.
மேலும், இன்றைய தினம் காலை 08.50இற்கு கொழும்பிலிருந்து ஆரம்பமான முதலாவது புகையிரத சேவை மாலை 06.31இற்கு யாழ். புகையிரத நிலையத்தை வந்தடையும்.
இந்த புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தை 03.25இற்கும், கிளிநொச்சி புகையிரத நிலையத்தை மாலை 4.56இற்கும் வந்தடையவுள்ளது.
சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் போன்று இதற்கான கட்டணங்கள் அறவிடப்படும் என்றும் இந்த சேவைகள் மூலம் பணிபுரிவோர் பெரிதும் அனுகூலமடைவர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இரண்டாவது புகையிரத சேவை கொழும்பிலிருந்து இரவு 07.15இற்கு புறப்பட்டு அதிகாலை 04.20இற்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
இதுவரையில் கொழும்பிலிருந்து 8.30க்கு புறப்பட்ட இரவு தபால் புகையிரத சேவை இன்று முதல் இரவு 9.00 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை காலை 05.04இற்கு வந்தடையவுள்ளது.
கொழும்பு மற்றும் யாழிலிருந்து தினசரி காலை மாலை இடம்பெறவுள்ள இந்த இரண்டு புதிய புகையிரத சேவைகள் பரீட்சார்த்தமாக ஒருமாதம் இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய தலைமை அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த இலங்கை மாணவர் ஒருவர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கா ணவில்லை என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தனது மகன் குறித்த தகவல்களை யாரும் அறிந்திருந்தால் தயவு செய்து தமக்கு தகவல் தரும்படி குறித்த மாணவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெல்பேர்ன் Deakin பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் கற்கைநெறியை பயின்றுவந்த 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கா ணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை முதல் குறித்த இளைஞர் கா ணாமல் போயுள்ளார். இந்நிலையில், சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் குறித்த இளைஞர் பற்றிய தகவல் தெரிந்தால் 9566 1555 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ன் Craigieburn பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வந்துகொண்டிருக்கும்போது, தான் வீட்டுக்கு செல்வதாக தொலைபேசியில் பேசிய தனது தந்தைக்கு அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இதன் பின்னரே அவர் கா ணாமல் போயிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர் கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, கடலில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கி அவர் இழுத்து செல்லப்பட்டார். இந்நிலையில், கடற்பாதுகாப்பு பிரிவினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக புலம்பெயர் தமிழர்கள் நீரில் மூழ்கி உ யிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக நேற்று நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கயந்த கருணாதிலக இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பு இதுவரை தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டுத்தாபனம், நியாயாதிக்கசபை நிறுவனங்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு இந்த 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சர் கஜந்த கருணாதிலக பதில் உரைக்கையில்,
எமது அரசாங்கத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 2016ஆம் ஆண்டு இலக்கம் 3இன் கீழான தேசிய வேதன சம்பள கொடுப்பனவிற்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளம் 10 ஆயிரம் ரூபாவாக செலுத்தப்பட வேண்டும்.
இந்த அடிப்படை சம்பளமான 10,000 ரூபா 12,500 ரூபாவாக அதிகரிப்பதற்காக அதாவது 2,500 ரூபாவால் சம்பளத்தை அதிகரிப்பதற்கு என்னால் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி அன்று சமர்ப்பித்த ஆவணத்திற்கு அங்கீகாரத்தை பெற்று கொண்டதுடன், இதனை நடைமுறைப்படுத்துவதற்காக சட்ட வரைவு அந்த பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நான் சபையில் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.
இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து ஆக குறைந்த சம்பளம் தற்போது நடைமுறையில் உள்ள 2005ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட நிவாரணத்திற்கு உட்பட்ட வகையில் தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் 16,000 ரூபாவாக அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக நிர்வாகம் மற்றும் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சம்பள அதிகரிப்பு சபையின் மூலம் இதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவான 2019ஆம் ஆண்டில் சம்பள அதிகரிப்பு சபை சம்பள அதிகரிப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நடைமுறைகளுக்கு அமைவாக அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை போன்று தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பிற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில காலங்களாக அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதானது தனியார் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது குப்பை தா க்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாதம்பே பொலஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 31ஆம் திகதி மாலை சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்பே, கலஹிட்டியாவ பிரதேசத்தில் வைத்து இந்த தா க்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணித்த பல பயணிகள் இந்த தா க்குதலுக்குள்ளாகியுள்ள நிலையில் மாதம்பெ பொலிஸ் நிலையத்தில் தங்களை சுத்தப்படுத்தி கொண்டு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக இந்த தா க்குதல் மேற்கொள்ளப்பட்டதென இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவனெல்லயில் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்த தம்பதியினர் விபத்துக்குள்ளானதில் கணவர் உ யிரிழந்துள்ளார். நேற்று காலை அரநாயக்க வீதியில் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியில் மோட்டார் சைக்கிள் மோதி வி பத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்த கணவர் மற்றும் மனைவி அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் கணவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதான இளைஞனே இந்த சம்பவத்தில் உ யிரிழந்துள்ளார். 25 வயதான மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த தம்பதியினர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். இருவரும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள் எனவும், தினமும் அதிகாலை அரநாயக்கவில் இருந்து ரம்புக்கன வரை மோட்டார் சைக்கிள் அல்லது காரில் பயணிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பல பகுதிகளில் தங்கம் உட்பட பல கனிம வளங்கள் நிறைந்திருப்பதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. தங்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் போர் முடிவடைந்த பின்னர், எல்லை கிராமங்களின் கனிம வளங்களை ஆராய்வதற்காக முதலீட்டு சபை (BOI) வெளிநாட்டு முதலீட்டைப் பெற்று வருவதாக பணியக இயக்குனர் ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, தங்க ஆய்வுக்காக சேருவில, மத்துகம, பெலவத்த போன்ற பகுதிகளில் வெளிநாட்டு முதலீடு உள்ளடக்கப்பட்ட ஆய்வு அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இது போன்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், ஆய்வுகள் மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய காலத்திலிருந்தே இலங்கையில் தங்க அகழ்வுக்கான அனுமதிகளை அரசாங்கம் வழங்கி வருகிறது. 1990 ஆம் ஆண்டில் எம்பிலிப்பிட்டியவிற்கு அருகிலுள்ள பகுதியிலும், 2012 இல் களனி ஆற்றிலும் தங்க அகழ்வு செய்வதற்கு சுமார் 200 அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த உரிமங்கள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் மேற்பார்வையில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இன்று வரையான காலப்பகுதியில் 607 குடும்பங்களைச் சேர்ந்த 2013பேர் குடிநீர் இன்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான குடிநீர் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் வழங்கிவைக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளில் நேற்று மாலை வரையான காலப்பகுதியில் 607 குடும்பங்களைச் சேர்ந்த 2013 பேர் குடிநீர் இன்றி பாதிப்படைந்துள்ளதாக கிராம அலுவலகரினால் பிரதேச செயலகங்களுக்கு அறிக்கையிடப்பட்டு மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு புள்ளிவிபரத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
வவனியா வெங்கலச் செட்டிகுளம் பகுதிகளிலுள்ளவர்களே அதிகமான வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு பாதிப்பை எதிர்கொண்டுள்ளவர்களுக்கான குடிநீர் வழங்கும் நடவடிக்கை அந்தப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு தண்ணீர் தாங்கிகளுடாக தண்ணீர் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட செயலகத்திலுள்ள பௌதீக வளங்களை வைத்து விரைவாக இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் வறட்சியுடனான கால நிலை நீடித்துச் செல்லுமாக இருந்தால் பாதிப்படைபவர்களின் தொகை இன்னும் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பல்வேறு நெருக்கடியான காலப்பகுதியில் இன்று முதலாம் திகதி மாலை 2மணிக்கு வவுனியா மாவட்ட ஒருக்கிணைப்புக்குழுக் கூட்டம் கைத்தொழில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியாவில் குளங்களில் தண்ணீர் சேகரிக்கும் திட்டம் எவையும் இன்றுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை. இத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இன்று வரையிலும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறான ஒரு நடவடிக்கை கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இன்று வவுனியாவில் வறட்சியான கால நிலை ஏற்பட்டிருக்காது.
மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டங்கள் சரியான முறையில் சீராக இடம்பெறுவதில்லை. அவ்வாறு இடம்பெற்றாலும் அதில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை. சகல திணைக்களங்களிலுமுள்ளவர்கள் கலந்து கொள்வதும் கிடையாது மக்களின் அத்தியாவசிய பிரச்சினை ஒன்றினை கூட்டத்தில் முன்வைத்தால் அதற்கான பதிலை வழங்குவதற்கு கூட்டத்தில் அத்திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டு பதிலினை வழங்குவதில்லை.
கூட்டத்தின் தலைமையேற்பவர் முறையான பதில்களை வழங்காமல் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் சரியான பதில் வழங்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
நாட்டில் இடம்பெற்ற கு ண்டு வெ டிப்பு தாக்குதலிகளின்பின்னர் இடம்பெற்ற அமைச்சர்கள் பதவி விலகல் என்பன பல்வேறு குழறுபடிகளுக்கு அப்பால் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று 01.08.2019 மாலை 2மணிக்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நடிகை காஜல் அகர்வால் மீதான மோகத்தால் 75 லட்சத்தை தமிழக இளைஞர் ஒருவர் இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மகனான 27 வயது இளைஞர், சில மாதங்களுக்கு முன்னர் கணனியில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, சில பெண்களின் புகைப்படங்களுடன் விளம்பரம் தோன்றியுள்ளது.
விளம்பரத்தில், நடிகைகளின் ஆ பாச படங்கள் இருந்ததுடன், யாராவது விருப்பப்பட்டால் அந்த நடிகைகளை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கண்டதும் நடிகைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அந்த விளம்பரத்தை கிளிக் செய்து, உள்ளே சென்றுள்ளார். மேலும், தனது தகவல்களையும் அதில் பதிவு செய்துள்ளார்.
அடுத்த நிமிடமே சில நடிகைகளின் படங்கள் தோன்றி, அவர்களில் யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க விரும்பிய அந்த இளைஞர், அந்த படத்தின் மீது ‘கிளிக்’ செய்துள்ளார். இதனை உறுதி செய்ய 50 ஆயிரம் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வந்துள்ளது.
அதன்படி அந்த இளைஞன் மணிகண்டன் என்பவரது வங்கி கணக்கில் பணத்தினை செலுத்தி உள்ளார். சற்றுநேரத்தில் அவரின் செல்போன் எண்ணுக்கு உறுதிசெய்யப்பட்ட எஸ்.எம்.எஸ். வந்தது. இதன் மூலம் நடிகை காஜல் அகர்வாலை சந்தித்து விடலாம் என்று இளைஞர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் இது பற்றிய தகவலை அப்போது அவர் யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே இணையதளத்தில் பதிவு செய்த தகவலைக் கொண்டு அவரிடம் ரூ.50 ஆயிரத்தை கறந்தவர்கள் மேலும் பணத்தை பறிக்க அந்த இளைஞர் யார், அவரது பின்னணி என்ன? என்பது குறித்து ரகசியமாக விசாரித்துள்ளனர். அந்த இளைஞர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதையும் உறுதி செய்துள்ளனர்.
சில நாட்களில் மேலும் ஒரு வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் நடிகை காஜல் அகர்வாலை சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்து சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் உஷாரான அந்த இளைஞர், இது ஏமாற்று வேலை என்று உணர்ந்து பணம் அனுப்ப முடியாது என மறுத்துள்ளார்.
அதற்கு பின்னர்தான் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அடுத்த சிலநிமிடங்களில் அந்த இளைஞனின் செல்போன் எண்ணிற்கு அவரையும் சில பெண்கள் மற்றும் நடிகைகளை இணைத்து, மார்பிங் செய்யப்பட்ட ஆ பாச படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி உள்ளனர்.
உடனே அந்த இளைஞன் அந்த படங்களை அழித்து விடுமாறு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அந்த ஆ பாச புகைப்படங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரவ விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
குடும்ப கவுரவத்தை கருத்தில் கொண்டு அந்த வாலிபர், அந்த மோசடி பேர்வழிகளின் வலையில் விழுந்துவிட்டார். வேறு வழியின்றி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 3 தவணைகளாக 75 லட்சத்தை அனுப்பி உள்ளார்.
இந்த பணத்தை எடுத்துக்கொண்ட அவர்கள், அவர் பொன்முட்டையிடும் வாத்து என்று நினைத்து தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், நடந்ததை வெளியே சொல்ல முடியாமல் அந்த இளைஞன் தொடர்ந்து மன அ ழுத்தத்துக்கு ஆளாகி உள்ளார்.
பின்னர் அவர் வாழப் பிடிக்காமலும் அவமானம் தாங்காமலும் கொல்கத்தா சென்று த ற்கொலை க்கு முயன்றார். இதனை அடுத்து தொழிலதிபர் அளித்த புகாரின்படி ராமநாதபுரம் தனிப்படை கொல்கத்தா சென்று தொழிலதிபரின் மகனை மீட்டுள்ளனர்.
பின்னர் மணிகண்டனை பிடித்து விசாரித்த போது சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சரவணக்குமார் பட தயாரிப்பிற்காக சில நபர்கள் பணம் தருவார்கள் என்று சொல்லி எனது கணக்கில் பணத்தை பெற்று சென்றார் என கூறியுள்ளார்.
அதன் பேரில் சென்னையில் சரவணக்குமாரை கைது செய்து விசாரணை செய்ததில் நடிகை மோகம் காட்டி ராமநாதபுரம் தொழிவதிபர் மகனிடம் பெற்ற ரூ.75 லட்சத்தில் ரூ.68 லட்சத்தை உலக கோப்பை கிரிக்கெட் சூ தாட்டத்தில் இழந்தது தெரிய வந்தது.
எஞ்சிய தொகை சரவணக்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்துள்ளது. இதனை அடுத்து சரவணக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார், மேலும் இது தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர்.
சுவிஸ்லாந்திற்கு சுற்றுலா சென்ற இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடகிழக்கு சுவிஸ் நகரமான St Gallen பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கியே 22 வயதான இலங்கையர் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது குளத்தில் இறங்கிய இலங்கையரை கா ணவில்லை என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக குளத்தில் இறங்கி அந்த நபரை தேடியுள்ளனர். அத்துடன், அவசரகால மீட்பு நடவடிக்கை குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும், 30 நிமிடங்களுக்கு பின்னர் கா ணாமல் போன நபர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் ச டலம் கரையில் இருந்து 3 தொடக்கம் 4 மீற்றர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் போது உ யிரிழந்த நபருக்கு நீச்சல் தெரியாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அவர் தனியாக குளத்தில் இறங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து St Gallen பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, சுவிஸ்லாந்தில் கடந்த 2018ம் ஆண்டு 37 பேரும், 2017ம் ஆண்டு 41 பேரும் நீரிழ் மூழ்கி உ யிரிந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் தன்னை மிரட்டி பா லியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவில் மருத்துவராகப் பணிபுரிந்து மருத்துவ உரிமத்தை இழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் மருத்துவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த தீபா சுந்தரலிங்கம் என்னும் பெண் வைத்தியரே கனடாவில் மருத்துவ பட்டம் பெற்று, ரொறொன்ரோ மருத்துவமனையில் கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில் தன்னிடம் புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் த காத உறவில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் த காத உறவில் ஈடுபட்டது தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது.
எனினும் தற்போது தன்மீதான குற்றச்சாட்டை தீபா மறுத்துள்ளார். இது தொடர்பில் தன்னிலை விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “சிகிச்சைக்காக வந்த ஒருவர் என்னை மிரட்டினார், ஆ பாச செல்பிக்களை அனுப்பச்சொன்னார், குறுஞ்செய்திகளை மருத்துவக்கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பா லியல் உறவு கொள்ள வைத்தார்” என்று புற்றுநோய் மருத்துவரான தீபா சுந்தரலிங்கம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.
குறித்த மருத்துவர் தொடர்பில் தெரியவருவதாவது, தீபா சுந்தரலிங்கத்திற்கு தற்போது 37 வயதாகிறது. புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நிபுணராக செயற்பட்டு வருகிறார். கடந்த 2010 முதல் மருத்துவராக பணியாற்றும் தீபாவிடம் சிகிச்சை பெற கடந்த 2015 ஆம் ஆண்டு நோயாளி ஒருவர் சென்றார். சிகிச்சைக்காக வந்த அந்த நோயாளிக்கு புற்றுநோய் தாக்கம் இருந்துள்ளது. அன்று முதலே இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர் என்றும் வெளியில் சுற்றியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன.
வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர் என்றும் புற்று நோய்க்கு தீபா சிகிச்சை அளித்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015 ஆம் ஜனவரி முதல் 2016 மார்ச் வரை 23 முறை சிகிச்சை அளித்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென தான் சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் பட்டியலில் இருந்த அந்த நோயாளியின் பெயரை தீபா நீக்கினார்.
இதற்கிடையில் தன்னை பா லியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் என்றும் சிகிச்சைக்கு வந்த போது தன்னுடன் உறவு கொண்டார் என்றும் தீபா மீது அந்த நோயாளி குற்றச்சாட்டை முன் வைத்தார்.தன்னை கைவிட்டு விட்டதாகவும் வேறொரு நபரை காதலிப்பதாக கூறிய அவர் தன்னை நோயாளிகள் பட்டியலில் இருந்தே நீக்கிவிட்டதாகவும் கூறினார்.
தீபா மீது சி.பி.எஸ்.ஓ எனப்படும் College of Physicians and Surgeons இல் முறைப்பாடு அளித்த அந்த நோயாளி, “நான் உடல் ரீதியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். ஒரு முக்கியமான உறவு இழப்பு என்னை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. தீபா என்னை விட்டு விலகியதோடு மட்டுமல்லாமல் எனக்கு சிகிக்சை அளிக்கவும் மறுத்து விட்டார்” எனவும் தனது தரப்பிலான முறைப்பாட்டை அறிக்கையாக சமர்பித்தார்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது தீபா மீது குற்றம் சுமத்திய நோயாளியின் குரல் மட்டுமே மேலோங்கியிருந்தது. அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த தீபா மௌனமாகவே இருந்தார். பதில் எதுவும் கூறவில்லை. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தீபாவின் மருத்துவ உரிமம் ரத்துச் செய்யப்பட்டதோடு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கனடாவில் அவர் மருத்துவராக சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆறு மாதங்கள் கழித்து மருத்துவர் தீபா தனது தரப்பு நியாயத்தினை முன் வைத்துள்ளார். அதாவது “நடந்த சம்பவத்தில் தான் குற்றவாளி அல்ல என்றும் பாதிக்கப்பட்டவரே நான்தான்” என்றும் அவர் கூறியுள்ளார். தன்னை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி அந்த நோயாளி பயன்படுத்திக்கொண்டார் என்றும் ஆ பாச செல்பிக்களை மிரட்டி அனுப்ப வைத்தார் என்றும் முறையிட்டுள்ளார். குறித்த நோயாளி தன்னுடன் உ றவு கொள்ளாவிட்டால் தான் அனுப்பிய குறுச்செய்திகள், ஔிப்படங்களை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி விடுவதாகவும் தான் அச்சுறுத்தப்பட்டதாகவும் தீபா விளக்கியுள்ளார்.
அவமானத்தினால் தான் கூனி குறுகிப்போய் நின்றதால்தான் பேசமுடியவில்லை என்றும் தனது தரப்பு நியாயத்தையும் நீதிமன்றம் கேட்கவேண்டும் என்றும் தீபா முறையிட்டுள்ளார். இந்நிலையில் நோயாளி தரப்பிலான குற்றச்சாட்டினை கவனித்த மருத்துவத்துறை, தீபா தரப்பு நியாயத்தையும் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இரண்டு தரப்பினதும் குற்றச்சாட்டுக்களை சரியான முறையில் விசாரித்து தீர்ப்பினை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபா சொல்வது சரியெனில் அவரின் மருத்துவ உரிமம் உடன் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு சரியான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் மேலெழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வர்த்தக கைத்தொழில், நீண்ட கால அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சராக மீண்டும் பதவியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு வவுனியாவில் இன்று மாலை அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. வவுனியா, மன்னார் வீதியில் உள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அவரது ஆதரவாளர்களால் குறித்த வரவேற்பு வழங்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீ விரவாத தா க்குதலையடுத்து அமைச்சர் ரிசாட் பதியுதீன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லீம் அமைச்சர்கள், முஸ்லிம் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிரூபிக்கப்படவில்லை. இந் நிலையில் அவர் கடந்த 29 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து அமைச்சராகி மீண்டும் வவுனியாவிற்கு வருகை தந்த நிலையிலேயே இவ் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக இணைப்பாளர் முத்து முகமது, அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன், வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அமைச்சருக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.
மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் இருந்து சிசு ஒன்று மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீராவோடை – மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்த சிசுவை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த பெண் தனது தாயுடன் செங்கலடியிலுள்ள தனியார் வங்கிக்கு சென்ற வேளை, வங்கிக்கு அருகில் பெண் சிசு ஒன்று இருப்பதைக் கண்டு, குறித்த சிசுவை மீட்டு நேற்று மாலை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.
இந்த சிசு நான்கு நாட்கள் மதிக்கத்தக்கது எனவும், 2970 கிராம் எடையுள்ளதாகவும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.