ஐரோப்பிய தொழில்நுட்பத்தில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட நவீன மோட்டார் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்வதற்கு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
குறித்த வாகனத்தை 30 லட்சம் ரூபாய்க்கு வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வாகனத்தை இந்த வருடத்தினுள் இலங்கை சந்தையில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக ஐரோப்பிய பிரதான தரப்பு வாகன தயாரிப்பு நிறுவனத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.
1500CC ரகத்திலான வாகனத்தை நவீன தொழில்நுட்பத்திற்கு பொருந்தும் வகையில் தயாரிப்பதற்கே ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தா க்கிய தந்தையை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். திருக்கடலூர், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் சா ராயம் குடித்து விட்டு ஒரு வயது குழந்தையையும் மனைவியையும் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் ம துபோ தையில் இருந்த நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குழந்தையும் மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை.
அதற்கு யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன் என ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்த மாதவன் ராஜ்குமார் தெரிவித்தார்.
53ஆவது ஆசிய ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டித் தொடர், சீனாவின் ஹேர்பின் நகரில் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதில் போட்டிகளின் மூன்றாவது நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவிலும், 23 வயதுக்குட்பட்ட கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டிப் பிரிவிலும் களமிறங்கிய ராஜ்குமார், பலத்த போட்டிக்கு மத்தியில் மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.
இறுதிப் போட்டியில் 30இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், பலத்த போட்டியைக் கொடுத்து அவர் இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டார் என்பது சுட்டிக்காட்டத்தக்க விடயம்.
தனது வெற்றி குறித்து ராஜ் குமார் கூறுகையில், “இவ்வருட இறுதியில் டுபாயில் நடைபெறவுள்ள உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு.
ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்கு யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன்.
அதேபோல, என்னுடைய இலக்கு மிஸ்டர் ஒலிம்பியாட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுவதாகும். அந்த இலக்கையும் என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கு பணம் தான் தேவை.
எனவே, இந்த விளையாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எனக்கு அனுசரணையாளர்கள் கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன். எனது பெற்றோரின் தொழில் மற்றும் வருமானத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விளையாட்டு. ஆனாலும், மலையகத்தில் பிறந்த ஒரு தமிழனாக நிச்சயம் சாதித்து காட்டுவேன்” என கூறினார்.
தனது 15ஆவது வயதில் இருந்து உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றி வருகின்ற ராஜகுமார், நுவரெலியா மாவட்டம், லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். 23 வயது கொண்ட இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
தற்போது இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற இவர், கடந்த வருடம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்டழகர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
மேலும், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
அதன்பிறகு, தேசிய மட்டத்தில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட உடற்கட்டழகர் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்ற அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய உடற்கட்டழகர் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதனைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கனிஷ்ட மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் சம்பியனாகவும் தெரிவானார்.
பிரபல வர்த்தகர், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர், (வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக சபை உறுப்பினர்)
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவத்தொண்டர் நடராஜா தனபாலசிங்கம் அவர்கள் 31-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினாவதி அவர்களின் பாசமிகு கணவரும், கிரிஜா, அருணன், கேசாந்தினி, கேதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுந்திரலிங்கம், காலஞ்சென்றவர்களான சந்திரபாலன், சாந்தலிங்கம், மற்றும் யோகம்மா, செல்வரத்தினம், நாகேஸ்வரி, இரவிச்சந்திரன், சந்திரவதனி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
பாலசந்திரன், ரூபி, சிவகரன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும், பாமிஷா, ஹரிணி, சங்கவி, பாவனா, யாதவி, கயல் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், பத்மநாதன், மகாலிங்கம், தம்பிராஜா, பற்குணன் மற்றும் இலட்சுமணன், சிவலிங்கம், ஜெயலட்சுமி, சுந்தரகாந்தி, சக்திவேல், திருவருட்செல்வி, ஜெயரூபலிங்கம், சிவநிதி, நகுலேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வடக்கு கடலில் மிதந்து கொண்டிருந்த 36 கிலோ பீடி இலைகளை மீட்ட மீனவர்கள், அதை நெடுந்தீவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஒன்றிடம் ஒப்படைத்தனர். கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்திலுள்ள சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த 31ம் திகதி கச்சத்தீவு மற்றும் வடக்கு கடல்களில் கடற்படை வீரர்கள் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கடற்படையினர் 50 கிலோ கிராம் பீடி இலைகளைக் கண்டெடுத்தனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை மேற்கொண்ட ரோந்துகளுக்கு ஆதரவாக மீனவ மக்கள் வழங்கிய இந்த இயற்கையின் நேர்மறையானதொரு பங்களிப்பு என்பதால், அவர்கள் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்திற்கு வழி வகுப்பார்கள் என நம்பப்படுகின்றது.
இதேவேளை, கடலில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்க்க கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பீஐிங் நகரில் நடைப்பெற்ற ஆண்களுக்கான உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி மாதிரி போட்டியில் பதக்கங்களைப் பெற்று இலங்கை மாணவன் சாதித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் சீனாவின் பீஐிங் நகரில் நடைப்பெற்ற ஆண்களுக்கான உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி மாதிரி போட்டி ICN நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது ஆசிய நாடுகளுக்கான ICN சம்பியன் போட்டியில் இலங்கை சார்பில் பங்கு பற்றிய பர்னாஸ் நவாஷ் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்று இலங்கை நாட்டிற்கு பெறுமை சேர்த்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்ரேலியா மெல்பேர்ன் நகரில் அடுத்து சுற்று இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடதக்கதாகும்.
இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய காலநிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிரதேசங்ககளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். கடல் பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிரதேசங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் எனுவும், நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் மாலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மழை பெய்யும் பகுதிகளில் வேகமாக காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடல்சார் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானமாக செயற்பட வேண்டும் என திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
கலாச்சாரத்தை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி கொள்ளவில்லை என்றால் வேலையை காட்ட வேண்டி இருக்கும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ் கலாசாரத்தைக் கெடுக்கும் டி.வி நிகழ்ச்சியை நடத்திவரும் கமல்ஹாசன், தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், எங்கள் வேலையைக் காட்டுவோம் என்று மேடையிலேயே ப கிரங்க மி ரட்டல் விடுத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், ஒரு தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார் அவர். அதில், அது வேண்டுகோள்தான்… மி ரட்டல் அல்ல. ஏற்கெனவே ஒருமுறை அதே டி.வி-யில் ‘கேரளப் பெண்கள் அழகா… தமிழகப் பெண்கள் அழகா என்று விவாதம் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானதும் இது போன்று ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தோம் என தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு றோமன் கத்தோலிக பாடசாலையொன்றில் வைத்து உ யிரிழந்த இ.லிந்துசியா மாணவியின் ம ரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி எஸ். லெனின் குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த தரம் 7 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி கடந்த 29.07.2019 அன்று பாடசாலை சென்றுள்ளதோடு, மதியம் 12.30 மணியளவில் பாடசாலையில் வைத்து அவருக்க இழுப்பு (சுவாச நோய்) ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெரிதும் அவதிப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் 2 மணியளவிலேயே குறித்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ம ரண விசாரணை அதிகாரிகளின் வி சாரணைகளின் முடிவில் மாணவியின் ச டலம் அவரது பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலதிக விசாரணைகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
உ யிரிழந்த மாணவியின் ம ரணத்திற்கு பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனமே காரணமென குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்துவரும் நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி, முல்லைத்தீவு பொலிஸாருக்கு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலை எ திர்கொள்வது தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியினரின் மக்கள் சந்திப்பு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ண தலைமையில் பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பொதுஜன பெரமுன கட்சியியைச் சேர்ந்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுரத்த இதில் விசேட அதிதியாக கலந்து கொண்டு அடுத்து வரும் தேர்தலை வன்னியில் எவ்வாறு எதிர்கொள்வது, புதிய கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் மக்களது பி ரச்சனைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.
இதில் பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அதன் கூட்டுக் கட்சிகளில் ஒன்றாகிய ஈரோஸ் கட்சியின் மாவட்ட அமைப்பாளர், தமிழ் வி டுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் சசிதரன்,
ஈரோஸ் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமதிபால, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உறுப்பினர் வசந்த, மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 20 நாட்களில் காதல் கணவனை மனைவியே உ யிருடன் தீ வைத்து எ ரித்துக் கொ லை செய்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் பகுதியை சேர்ந்த சேதுபதி (24), புதுச்சேரியில் உள்ள பஞ்சர் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த முருகவேணி (19) என்பவரை 20 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இருவரும் சேர்ந்து ஒரு குடிசையில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சேதுபதியின் வீடு தீ ப்பற்றி மளமளவென எரிந்தது. உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சேதுபதியின் அ லறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வேகமாக தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் வேகமாக தீ பரவி சேதுபதி பரிதாபமாக உ டல்கருகி உ யிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது வீடு வெளிப்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. அதோடு அல்லாமல் அந்த சமயத்தில் முருகவேணி வீட்டின் வெளிப்பகுதியில் இருந்துள்ளார். இதனால் ச ந்தேகமடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்த சேதுபதி, முருகவேணியின் ந டத்தையில் சந்தேகப்பட்டு தினமும் ம து அருந்திவிட்டு ச ண்டையிட்டு வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த முருகவேணி, நேற்று ம து அருந்திவிட்டு சேதுபதி உறங்கிக்கொண்டிருந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார். கணவரின் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ வை த்துவிட்டு வீட்டின் வெளிப்புறமாக தாழ்பாளிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முருகவேணியை கை து செய்துள்ள பொலிஸார், அவரது தாயிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொ ள்ளையடிக்க சென்ற இடத்தில் கல்லாவில் பணம் இல்லாததால் வி ரக்தியடைந்த திருடன் கடையின் உரிமையாளருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளான். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மளிகைக்கடை ஒன்றினை நடத்து வருகிறார்.
இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை மூடிவிட்டு இன்று அதிகாலை கடையை திறந்துள்ளார். அப்போது உள்ளிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளன. மேற்பக்க கூரை உடைக்கப்பட்டிருந்துள்ளது.
நள்ளிரவில் கடையின் கூரையை உடைத்துக்கொண்டு உள்ளே குதித்த திருடன் கல்லாவில் பணம் இல்லாததை பார்த்து ஏமாற்றமடைந்துள்ளான். உடனே கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, “உயிரை பணயம் வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா, அதுக்குதான் இந்த குரங்கு வேலை” என கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளான்.
இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த ஜெயராஜ் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அளவில் நடைபெற்ற சித்தா முதுகலை தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் முதலிடம் பிடித்து சாதித்து காட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.கணேசன். இவருக்கு பொன்மணி என்ற மகள் உள்ளார்.
பொன்மணி அங்கிருக்கும் அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார். இதில் 1200-க்கு 1,062 மதிப்பெண்கள் பெற்ற இவர், சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இளநிலை சித்த மருத்துவம் படித்தார். அதன் பின் முதுநிலை பட்டத்திற்கான தேர்வை எழுதினார்.
இந்நிலையில் இந்திய மருத்துவக் கல்விக்காக நடைபெற்ற நீட் தேர்வில் அகில இந்திய அளவில் இவர் முதலிடம் பெற்று சாதித்து காட்டியுள்ளார்.
இது குறித்து பொன்மணி கூறுகையில், எம்பிபிஎஸ் கனவில் தான் படித்தேன். ஆனால், சித்தாதான் கிடைத்தது. இருப்பினும் இதை விருப்பத்தோடு படித்தேன். அதன் பின் இந்திய மருத்துவக் கல்வியின் (ஆயுஸ்) முதுநிலை பிரிவுக்கு நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வை எழுதினேன்.
இதற்கான முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 400-க்கு 377 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளேன், இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, சென்னை தாம்பரத்தில் இருக்கும் தேசிய சித்தா ஆராய்ச்சி மையத்தில் மேல்படிப்பு படிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பி றப்புறுப்பு ஏதும் இன்றி பிறந்த சிறுமி தற்போது உ றுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்தவர் ஜோதி காம்பில்-ரிட். தற்போது 18 வயதாகும் ஜோதி, பிறக்கும்போதே பா லுறுப்பு ஏதும் இன்றி பிறந்தவர்.
ஆனால் தம்மை ஒரு பெண் என பாவித்தே அவர் இதுவரை வளர்ந்துள்ளார். மட்டுமின்றி, அவரது வளர்ப்பு பெற்றோரும் ஜோதியின் விருப்பத்திற்கு எதிராக செயல்படவும் இல்லை என கூறப்படுகிறது.காரணம் ஜோதியை தத்தெடுத்தவர்கள் திருநங்கை தம்பதிகள் என்பதால் அவர்கள் ஜோதியின் விருப்பத்திற்கு பா லுறுப்பு விவகாரத்தை விட்டுள்ளனர்.
மேலும், ஒரு பெண்ணாகவே தம்மை பாவிக்கும் ஜோதி சில காலமாக தொடர்ந்து ஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொள்கிறார். ஒரு பெண் எனவே தம்மை கருதுவதால், எந்த பாலினம் என்ற கேள்விக்கு முக்கியத்துவம் இல்லை என அழுத்தமாக பதிலளிக்கும் ஜோதி,
தற்போது பா லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார். மேலும், பெண்களுக்கான உறுப்பு மாற்று அறிவை சிகிச்சையையே அவர் தெரிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி ஆண் நண்பர்களுடன் டேட்டிங் செய்து கொள்ளும் ஜோதி, தமது நிலை தொடர்பில் முன்னரே அவர்களிடம் சொல்லிவிடுவதாகவும்,
அதில் தமக்கு எந்த சிக்கலும் இல்லை என பதிலளித்துள்ளார். மட்டுமின்றி பெண்களுடனும் நெருக்கமான உறவை பேணுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் ஜோதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரு கிராமத்தில் பிறந்த ஜோதியை, அவரது இந்த நிலை தொடர்பில் தெரியவந்த அமெரிக்க திருநங்கை தம்பதிகளான சூ மற்றும் பேட்ரிக் ஆகிய இருவரும் முழுமனதுடன் தத்தெடுத்துள்ளனர்.
தற்போது ஜோதியின் பா லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வரவேற்றுள்ள இருவரும், அவரது முடிவில் தங்களுக்கு மகிழ்ச்சியே எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமது வளர்ப்பு பெற்றோருக்கு நன்றி கூறும் ஜோதி, அவர்களால் மட்டுமே தாம் இதுவரை உ யிர் பி ழைத்துள்ளதாகவும், தமது இந்த நிலையை எவரும் ஏற்றுகொள்வது கடினம் எனவும் நெகிழ்வுடன் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் இரண்டு பள்ளி குழந்தைகளை கொ லை செய்த வழக்கில் கொ லையாளிக்கு ம ரண த ண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை ரங்கேகவுடர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித். ஜவுளி வியாபாரி. இவரது குழந்தைகள் முஸ்கான்(11), ரித்திக்(7).
தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வந்தனர். கடந்த 2010 அக்டோபர் 29ம் திகதி காலை பள்ளி செல்வதற்கு வேனில் ஏறினர். பின்னர் வேன் டிரைவர் மோகன கிருஷ்ணன், நண்பன் மனோகரன் ஆகியோர் குழந்தைகளை க டத்தி சென்று பொள்ளாச்சி அருகே பா லியல் ப லாத்காரம் செய்தனர். பின்னர் குழந்தைகள் இருவரையும் கால்வாயில் தள்ளி கொ லை செய்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அ திர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பொலிசார் வழக்குபதிவு செய்து மோகனகிருஷ்ணன், மனோகரனை கை து செய்தனர். இவர்களை வழக்கு விசாரணைக்காக கொண்டு செல்லும்போது தப்பி செல்ல முயன்ற மோகனகிருஷ்ணனை பொலிசார் சு ட்டுக் கொன்றனர்.
இதையடுத்து மனோகரன் மீதான வழக்கு விசாரணை முடிவில் அவருக்கு மர ண த ண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த த ண்டனையை எதிர்த்து மனோகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு வந்த நிலையில் அவருக்கான ம ரண த ண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தூ க்குப் போட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக கருதப்பட்ட பெண் கொ லை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடலூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் வெண்மதி (17). கடந்த மாதம் 17ம் திகதி இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூ க்கில் பி ணமாக தொ ங்கினார். அப்போது அவரது உ டலில் இருந்த கா யங்களை பார்த்த, அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால், அங்கிருந்த சிலர், மரத்தில் தூ க்கில் தொங்கியதால் அதில் உரசியதில் உ டலில் கா யம் ஏற்பட்டு இருப்பதாக கூறினர். இதை நம்பிய ஆறுமுகம் குடும்பத்தினர், வெண்மதி த ற்கொ லைதான் செய்து உள்ளார் என்று நினைத்து உ டலை அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் கு டிபோ தையில், வெண்மதியின் தங்கை லட்சுமியிடம் உன் அக்காவை கொ லை செய்ததுபோல் உன்னையும் கொ லை செய்து விடுவோம் என்று கூறி மி ரட்டல் விடுத்தனர்.
இதுபற்றி அவர், தனது தந்தை ஆறுமுகத்திடம் கூறினார். இதனால் ஆறுமுகத்திற்கு மகள் இ றப்பில் சந்தேகம் ஏற்பட்டு பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து, பொலிசார் மாயானத்தில் புதைக்கப்பட்டிருந்த வெண்மதியின் உ டலை தோ ண்டி பிரேத பரிசோதனை செய்து மீண்டும் பு தைத்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரசாந்த், விஜயகாந்த், விவேகானந்தன், இளையராஜா ஆகியோரை பிடித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிரசாந்த் வெண்மதியின் உறவினர் ஆவார். இதனால் அவரை பிரசாந்த் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
எனவே இதனடிப்படையில் வெண்மதி கொ லை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இதனிடையில் பி ரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் உண்மை தெரியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.