குழந்தை பிறந்தது முதலே தினம்தோறும் வலியால் துடித்த தாய் : 6 நாட்களில் நடந்த சோகம்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மகப்பேறு அ றுவை சிகிச்சையின் போது, மருத்துவர் செய்த குளறுபடியால் 5 நாட்கள் வ லிதாங்க முடியாமல் அவஸ்தையடைந்த தாய் கைக்குழந்தையை தவிக்கவிட்டு ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 20 வயதான தனுஸ்ரீ என்கிற நிறைமாத கர்ப்பிணி பெண், வழக்கம் போல தன்னுடைய தந்தையுடன் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

ஆனால் அந்த நேரத்தில் பணிக்கு வரவேண்டிய மகப்பேறு மருத்துவர் ரவீந்திர தவால், பணியில் இல்லை. இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கையில், அவர் தனியாக ஒரு மருத்துவமனை வைத்து நடத்தி வருவதால் அங்கிருக்கலாம் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

உடனே தனுஸ்ரீ தவால் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு தந்தையுடன் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், தனுஸ்ரீக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பதால் உடனடியாக அ றுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு 40,000 ரூபாய் செலவாகும் என கூறியுள்ளார்.

இதற்கு தனுஸ்ரீயின் தந்தையும் சம்மதம் தெரிவித்து 23-ஆம் திகதியன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில், தனுஸ்ரீக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

அன்றிலிருந்தே தனுஸ்ரீயின் அடிவயிற்று பகுதியில் வலி எடுக்க ஆரம்பித்துள்ளது. வாந்தியும், பேதியுமாக தனுஸ்ரீ பெரும் அ வஸ்தையடைந்துள்ளார். 27ம் திகதியன்று வலி அதிகரித்ததால், பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

28ம் திகதி சிகிச்சை மேற்கொண்டிருக்கும் போதே ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி ரேத ப ரிசோதனையில், அவருடைய அடிவயிற்றில் பருத்தி துடைப்பத்தை வைத்து தைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தனுஸ்ரீயின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேசமயம், சம்மந்தப்பட்ட மருத்துவரை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மகிழ்ச்சியான செய்திக்காக காத்திருந்த கணவன் : இ ரத்தபோக்கு ஏற்பட்டு உ யிரிழந்த மனைவி!!

காத்திருந்த கணவன்

தமிழகத்தில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் அதிக ர த்த போக்கு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் சென்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் காந்தி தனது மனைவி ஜோதியை முதல் பிரசவத்திற்குகாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஜோதியின் குழந்தை கருவில் இருந்தபோது ஆரோக்கியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தை நன்றாக பிறக்கும் செய்தியை கேட்க காந்தி ஆவலோடு காத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை ஜோதிக்கு பெண் குழந்தை இ றந்தே பிறந்துள்ளது. இதனால் ஜோதியின் குடும்பத்தினர் அ திர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தை இ றந்த து க்கத்தில் இருந்து மீளாத நிலையில், ஜோதிக்கு நேற்று இரவு ர த்தப் போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சி கிச்சை ப லனின்றி ஜோதியும் உ யிரிழந்துள்ளார்.

தாய் மற்றும் குழந்தை இ றந்ததற்கு மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம் என ஜோதியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும் இருவரின் உ யிரிழப்பிற்கு மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். முறையாக சிகிச்சை மேற்கொள்ளாத மருத்தவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அரண்மனை போன்ற வீட்டில் சு ட்டுக் கொ லை செய்யப்பட்டிருந்த 6 பேர் : சிக்கிய கடிதம்!!

சிக்கிய கடிதம்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த இளைஞர் சொந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேரை சு ட்டுக் கொ லை செய்துவிட்டு தானும் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தை சேர்ந்தவர் குர்ச்சரன் சிங். இவருடைய மனைவி குர்தீப் கவுர் (70). இந்த தம்பதியினருக்கு மஞ்சீத் சிங் (55) என்கிற மகனும், பிந்தர் கவுர் (50) என்கிற மருமகளும் உள்ளனர்.

இவர்களுடன் மகன் சந்தீப் சிங் (27), மகள் அமன்ஜோத் கவுர் (33) மற்றும் பேரக்குழந்தை மனீத் கவுர் (3) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் 6 பேர் து ப்பாக்கியால் சு ட்டுக் கொ லை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார் 6 பேர் உ டலையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பல த்த கா யங்களுடன் உ யிருக்கு போ ராடிக்கொண்டிருந்த குர்ச்சரன் சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், சந்தீப் சிங் கைப்பட எழுதியிருந்த கடிதம் ஒன்றினை கண்டுபிடித்தனர்.

அந்த கடிதத்தில், தங்களுடைய குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை வேறு ஒரு நபருக்கு கொடுக்க குடும்பத்தினர் முடிவெடுத்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும், அதன் காரணமாகவே தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சகோதரி மற்றும் அவருடைய குழந்தையை து ப்பாக்கியால் சு ட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய குர்ச்சரன் சிங் மட்டும் உ யிருக்கு ஆ பத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால் பொலிஸார் எந்த விசாரணையும் மேற்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து உள்ளூர் தலைவர் ஜாக்சீர் சிங் கூறுகையில், கிராமத்தின் நடுவில்,

அரண்மனை போன்று கட்டப்பட்ட வீட்டில் குர்ச்சரன் சிங் குடும்பத்தினர் மிகுந்த செல்வாக்குடன் வசித்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக 25 ஏக்கர் நிலம் உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

16 வயதில் காதல் திருமணம் : 25 வயதில் காட்டுப்பகுதியில் ச டலமாக கிடந்த இளம்பெண்!!

ச டலமாக கிடந்த இளம்பெண்

தமிழகத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கொ லை செய்யப்பட்டு ச டலமாக கிடந்த திருமணமான இளம் பெண் குறித்த அடையாளம் தெரியவந்துள்ளது. திருப்பூரில் உள்ள பனப்பாளையம் – பெத்தாம்பாளையம் சாலையில் ஒரு காட்டுப்பகுதியில் 25 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் முகம் சி தைக்கப்பட்ட நிலையில் கொ டூரமாக கொ லை செய்யப்பட்டு கிடந்தார்.


ஆடைகள் விலகிய நிலையில் இருந்த அவரின் ச டலத்தை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியாமல் இருந்தது.

இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த 31-ந் திகதி வேலைக்கு சென்ற தங்களது மகள் சுகன்யாவை (25) காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கொ லை செய்யப்பட்ட பெண், சுகன்யாவா என்பதை உறுதி செய்ய அந்த பெண்ணின் உடலை கோவிந்தராஜுக்கு பொலிசார் காட்டிய நிலையில் அது தனது மகள் தான் என அவர் அடையாளம் கூறினார்.

இது குறித்த விசாரணையில், பனியன் நிறுவன தையல் தொழிலாளியான சுகன்யா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பணியாற்றிய இமானுவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே த கராறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுகன்யா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அனுப்பர்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

பின்னர் அங்கிருந்து பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் தான் கடந்த 31-ந் திகதி வேலைக்கு போன சுகன்யா மா யமாகி தற்போது ச டலமாக கண்டெடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கொ லையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராவில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் யார் என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

வேலைக்கார பெண்ணை அறைக்குள் இழுத்துச் சென்றேன் அப்போது.. கதறி அழுதபடி நடந்ததை விளக்கிய கொ டூரன்!!

நடந்ததை விளக்கிய கொ டூரன்

தமிழகத்தில் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவரை கொடூரமாக கொ லை செய்த கொ லையாளி தப்பு செய்துவிட்டேன் என அழுது புலம்பியுள்ளார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் வேலைக்கார பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் திகதி ப டுகொ லை செய்யப்பட்டனர்.


இது தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். அதாவது, உமாவால் தனது தாய் சீனியம்மாள் திமுகவில் வளர முடியவில்லை என்ற கோபத்திலேயே கொ லை செய்ததாக அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் ஒன்றும் அறியாத வேலைக்கார பெண் மாரியம்மாள் கொல்லப்பட்டது தான் பலருக்கும் பலத்த கோபத்தை ஏற்படுத்தியது. அவரை சமையல் அறைக்குள் இழுத்து சென்று கத்தியால் கு த்தி கொ ன்றதாகவும், ர த்த கறையை அங்குள்ள தண்ணீரில் கழுவியதாகவும் கார்த்திகேயன் கூறினார்.

இந்நிலையில் பொலிசார் கார்த்திகேயனிடம், உனக்கும் மேயருக்கும் தானே பிரச்சனை அப்புறம் ஏன் அந்த வேலைக்காரப் பெண்ணை கொன்றாய்? எனக் கேட்டதற்கு, சத்தியமாக அவரை கொ லை செய்யும் எண்ணமே இல்லை.


கதவை திறந்து வந்த அவர் இரண்டு பேர் ரத்த வெ ள்ளத்தில் கிடப்பதை கண்டதும் அழுது கத்தத் தொடங்கினார். ஓடிப்போய் விடு என நான் கோபமாய் கத்தியும் மாரியம்மாள் போகவில்லை. வெளியில் கத்தி என்ன காட்டி கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் வேறு வழியில்லாமல் அவரையும் கொ லை செய்தேன்.

மாரியம்மாள் என்னிடம் எனக்கு மூனு பிள்ளைகள் இருக்காங்க, என்ன விட்டுவிடு என கெஞ்சினார், அது ஆண் பிள்ளைகளாக இருக்கும், எப்படியும் பிழைத்து கொள்வார்கள் என நினைத்து அவரை கொ லை செய்துவிட்டேன். பிறகு தான் மூவரும் பெண் பிள்ளைகள் என தெரியவந்தது எனகூறியவாறு முகத்தை மூடி கொண்டு அழுதுள்ளார்.

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி!!

ஒருவர் பலி

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் இன்று காலை 10.30 மணியளவில் வயோதிபவர் ஒருவர் மோதுண்டு உ யிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றதாகவும் புகையிரதம் வரும் பொழுது புகையிரத வீதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உ யிரிழந்தவர் தலவாக்கலை ஒலிரூட் பகுதியை சேர்ந்த டபிள்யூ.எம்.சந்திரசேன வயது (65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உ யிரிழந்தவரின் சடலம் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நெடுங்கேணியில் இளம் பெண் மீது கொடூர தா க்குதல்!!

கொடூர தா க்குதல்

நெடுங்கேணியில் பெண் ஒருவர் மீது தா க்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,நெடுங்கேணி கந்தரோடை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீடொன்றின் பின்னால் பாதை ஒன்று செல்கிறது.

இரு தரப்பினரிடையே பிரச்சினை காரணமாக இணக்க சபைக்கு சென்ற நிலையில் பாதைக்கு வாயிற்கதவு அமைக்குமாறும், போலியான உறுதி எனவும் அடுத்த வழக்கிற்கு இம்மாதம் 10ம் திகதி வருமாறும் கூறப்பட்டது.

இவ்வாறான நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பாதைக்கு பின்பகுதியிலுள்ள வீட்டிலுள்ளவர்கள் வாயிற் கதவை திறந்துவிட்டு சென்றதனால் மாடு வீட்டினுள்ளே சென்றுள்ளது. இதைக் கேட்க சென்ற பெண் மீது தா க்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தா க்குதலுக்கு இலக்காகிய குறித்த 26வயதுடைய பெண் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவ் விடயம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இத் தா க்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் படையினரின் தீவிர பாதுகாப்புடன் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை!!

புலமைப்பரிசில் பரீட்சை

வவுனியா பாடசாலை பரீட்சை நிலையங்களில் இன்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பொலிசார் மற்றும் படையினரின் பாதுகாப்பில் நடைபெற்றது.

இன்று காலை 7.30மணியிலிருந்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாடசாலை வளாகத்தில் வகுப்பு ஆசிரியர்களின் ஒழுங்கு படுத்தலின் பின்னர் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு புலமைப்பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பாடசாலை வளாகத்தில் பொலிசார் மற்றும் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன் பொலிசாரின் ரோந்து வாகனங்களும் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று பரீட்சைகள் ஆரம்பித்துள்ளது

நாடு முழுவதும் இம்முறை 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன் இதற்காக 3050 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. அந்த வகையில் பரீட்சையில் முதலாம் பகுதி காலை 9.30 மணிமுதல் காலை 10.15 மணிவரையிலும் இரண்டாம் பகுதி காலை 10.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் இடம்பெறவுள்ளது.

புலமைப்பரிசில் நிதிக்கான வரையரைக்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் பரீட்சைக்கு தோற்றுவது அவசியம் இல்லை எனவும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவது கட்டாயமானது இல்லை எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜே.கே ரித்தீஷின் மனைவிக்கு மிரட்டல் விடும் நண்பர்கள் : முடிவுக்கு வராத சொத்துப்பிரச்சனை!!

ரித்தீஷின் மனைவிக்கு மிரட்டல்

திரைப்பிபலமும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷின் மனைவிக்கு ரித்தீஷின் நண்பர்களால் பல மிரட்டல்கள் வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரும், முன்னாள் எம்.பியும்மான ஜே.கே.ரித்தீஷ் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். ரித்தீஷின் மறைவுக்கு பிறகு அவரது மனைவிக்கு அவரது நண்பர்களால் நிறைய மிரட்டல் வருவதாக ரித்தீஷின் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

ரித்தீஷின் நண்பரான பாவா என்பவர் ரித்தீஷ் மனைவிக்கு கொ லை மிரட்டல் விடுவதாக கூறப்படுகின்றது. அதாவது கடந்த ஜனவரி மாதம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புடைய பள்ளிக்கூடம் மற்றும் சில வீடுகளை சுப்பிரமணி என்பவரிடம் இருந்து வாங்க ரித்தீஷ் ஒப்பந்தம் போட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.

இதற்காக சுமார் 4 கோடி ரூபாய் வரை சுப்பிரமணிக்கு முன்பணம் கொடுக்கப்பட்டதாக சொல்கின்றனர். இந்த சொத்தை வாங்குவதற்கு முன்பே ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டதால், சுப்பிரமணியிடம் கொடுத்த முன்பணத்தை ரித்தீஷின் மனைவி ஜோதிஸ்வரி கேட்டுள்ளார்.

இதற்கு அந்த பணத்தை ஜோதிஸ்வரியிடம் கொடுப்பதாக சுப்பிரமணியும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இந்த 25 கோடி மதிப்பிலான சொத்தை ரித்தீஷின் நண்பரான ஆதம்பாவா அபகரிக்க முயல்வதாக ஜோதிஸ்வரி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மேலும் ரித்தீஷின் நண்பர் ஆதம்பாவா திடீரென திருவான்மியூர் மற்றும் தியாகராயநகரில் உள்ள தன் வீட்டிற்கு வந்து தனக்கு கொ லை மிரட்டல் விடுத்ததாக ஜோதீஸ்வரி கூறியுள்ளார். மேலும், தனது கணவனின் சொத்துகளை அபகரிக்க நினைப்பதாகவும் அதனால் கடும் மன உழைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு அதிகாரியாக நியமனம் பெற்ற தமிழர்!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தினை சேர்ந்த திருச்செல்வம் விமுக்தி என்பவர் குடிவரவு குடியகல்வு அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்று எருவில் கல்வி பயின்றவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இப்பகுதியை சேர்ந்த ஒருவர், அதிலும் தமிழர் ஒருவர் இவ்வாறான பதவியில் தெரிவுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரினாலும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் அதி உயர் பதவிக்கு தெரிவான இலங்கைத் தமிழர்!!

நிஷான் துரையப்பா

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பீல் நகரின் தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா என்ற தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் சேவைகள் சபை அறிவித்துள்ளது.

நிஷான்( நிஷ்) துரையப்பா பிராந்திய மாவட்ட நடவடிக்கை பிரிவின் பிரதி பொலிஸ் தலைமை அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். ஹல்டன் பிராந்தியத்தில் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பீல் நகர பிராந்திய பிரதி பொலிஸ் தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றார்.

25 ஆண்டுகள் சேவை அனுபவம் கொண்டுள்ள நிஷான், குற்ற விசாரணைப் பிரிவின் கீழ், போ தைப் பொ ருள் ஒழிப்பு, து ப்பாக்கி, பாதாள உலக குழுக்கள் தொடர்பான விடயங்களை கையாண்டுள்ளார். அவர் சிறப்பு அதிரடிப்படை பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

நிஷான் பொலிஸ் சேவையில் அடுத்த தலைமுறைக்கு தலைமை தாங்குவார் என பீல் பிராந்திய பொலிஸ் சேவை சபையின் பிரதான அதிகாரி Nando Iannicca தெரிவித்துள்ளார்.

மூவாயிரம் பேரை கொண்ட பீல் பிராந்திய பொலிஸ் சேவையில் பிரதான தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா நியமிக்கப்பட்டுள்ளார். பீல் தலைமை பொலிஸ் அதிகாரியாக Chris McCord கடமையாற்றி வருவதுடன் அவர் மாற்றலாகி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஷான் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெட் துரையப்பாவின் பேரன் என்பதுடன், தனது மூன்று வயதில் அவர் கனடா சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் மர்மநபர் வெறியாட்டம் : இதுவரை 22 பேர் பலி – 40 பேர் படுகாயம்!!

மர்மநபர் வெறியாட்டம்

அமெரிக்காவில் ஆயுததாரி கண்மூடித்தனமாக து ப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையினால் இதுவரை சுமார் 22 பேர் உ யிரிழந்தும் 40 ற்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரபல வால்மாட் கட்டடத்தின் McDonald உணவகத்தினுள் திடீரென நுழைந்த ஆயுததாரி ஒருவர் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

வான்படை மற்றும் தரைப்படை களமிறங்கி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆயுததாரி என சந்தேகிக்கப்படும் 21 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய கொடூரம் : பெண்கள் உட்பட 6 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில்!!

இலங்கையை உலுக்கிய கொடூரம்

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 56 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 5.15 மணியளவில் எல்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் 3 பெண்களும் 3 ஆண்களும் உ யிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

6 பாஸ்போர்ட்… 65 நாடுகள்… உலகத்தை கலக்கும் 68 வயது தமிழ் பாட்டி!!

68 வயது தமிழ் பாட்டி

68 வயதாகும் சென்னையை சேர்ந்த வயதான பெண் ஒருவர் 65க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றிப்பார்த்து வாழ்க்கையின் அழகை ரசித்து வருகிறார். நம்முடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது உலக நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என பலரும் ஆசைப்படுவதுண்டு. ஆனால் அதிகமானோருக்கு அது ஒரு கனவாகவே முடிந்துவிடும்.

ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய விடுமுறை நாட்களில் அதனை நிறைவேற்றி கொள்வார்கள். அந்த வரிசையில் சென்னையை சேர்ந்த 68 வயதான சுதா மஹாலிங்கம் என்பவர் 6 பாஸ்போர்ட்டுகளுடன் 65க்கும் அதிகமான நாடுகளை சுற்றிபார்த்துள்ளார். இதனை இப்படியே நிறுத்திவிடாமல், இன்னும் தன்னுடைய பயணத்தை தொடர உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் பயணம் செய்வது மட்டுமல்லாமல், அனைத்து சாகசங்களையும் மேற்கொண்டு வருகிறார். முன்னாள் பத்திரிகையாளரான சுதா, ‘The Travel Gods Must Be Crazy’ என்ற தன்னுடைய பயணக்குறிப்பில் பிரமாண்டமான மலைகள் மற்றும் மயக்கும் தீவுகளை பற்றி பட்டியலிட்டுள்ளார்.

சுதா தன்னுடைய 40 வயதில், பா துகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்திற்கான ஆற்றல் துறை ஆய்வாளராக ஆனபோது தான் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பயணம் என்பது முன்கூட்டிய கருத்துகளையும், ஒரே மாதிரியானவற்றையும் சோ தனைக்கு உட்படுத்த உதவுகிறது. இது உங்களைக் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் பலங்களை அடையாளம் காணவும் உதவுகிறது. இது உங்கள் கையிருப்பு பற்றியும், நெருக்கடிகளை சமாளிக்கவும் கற்றுக்கொடுக்கிறது.

1996 ஆம் ஆண்டில் கைலாஷ் மன்சரோவருக்கு 32 நாள் மலையேற்றத்துடன் சுதா தனது தனி பயணத்தைத் தொடங்கினார். அந்த பயணத்திற்கு செல்ல தனது 5 வயது மகனை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அந்த பயணம் பற்றி கூறுகையில், “இது என்னைப் பற்றி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. குறிப்பாக என் க டினத்தன்மை. என்னால் தனியாக காரியங்களைச் செய்ய முடியும் என்பதை அறிய இது உதவியது.” எனத்தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலும் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட 5G கோபுரம் : வலுக்கும் எதிர்ப்பு!!

5G கோபுரம்

வவுனியா திருநாவற்குளம் விளையாட்டு மைதானப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 5ஜி கோபுரம் என்று உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும் பட்சத்தில் அக் கோபுரம் உடனடியாக அங்கிருந்து தூக்கி எறியப்படும் என்று வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர்ப்பகுதிகளான பண்டாரிகுளம், திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தைச் சூழவுள்ள குடும்பங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றதுடன்,

5ஜி கோபுர வலையமைப்பினால் உடல், உள ரீதியான பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாக ஆய்வுகள் சிலவற்றிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் எமது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றிவிடுமாறு அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயங்கள் குறித்து வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபனிடம் கேட்டபோது, திருநாவற்குளம் விளையாட்டு மைதானப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கோபுரம் 5ஜி கோபுரம் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும் பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அவ்விடத்திலிருந்து தூக்கி எறியப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதேவேளை பண்டாரிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் குறித்து நகரசபை உறுப்பினர் கே.சுமந்திரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தினை அகற்றுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நகரப்பகுதியில் மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் கோபுரம் நகரசபை உறுப்பினர்களின் அனுமதியின்றி அமைக்கப்பட்டு வரும் 5ஜி வலைமைப்பின் கோபுரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

அண்மையில் வவுனியா இறம்பைக்குளம் மயானப்பகுதியில் கோபுரம் அமைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட வேலை அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டதுடன் உடனடியாகவே அந்நிறுவனம் அங்கு கோபுரம் அமைக்கும் பணியைக் கைவிட்டுச் சென்றதுடன் வெட்டப்பட்ட குழியையும் மூடிவிட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவுக்குள் சிக்கிய தங்கக் குவியல் : மிரண்டு போன அதிகாரிகள்!!

தங்கக் குவியல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகப் பெரிய தங்க சங்கிலிகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தங்கத்தை கொண்டு வந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு கிலோவுக்கும் மேற்பட்ட தங்க சங்கிலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை பெறுமதி இரண்டு கோடி 80 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் கல்கிஸ்ஸ, நிட்டம்புவ, கம்பஹா, கிரிதிவே மற்றும் யக்கல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக் நகரத்தில் இருந்து இன்று அதிகாலை வந்த விமானத்தில் இந்த சங்கிலி கொண்டு வரப்பட்டுள்ளது. தங்கத்தை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்தவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கட்டுநாயக்க சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில் இதுவே மிகப்பெரிய சங்கிலிகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.