இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் ஹத்துருசிங்க அ திரடியாக நீக்கம்!!

ஹத்துருசிங்க அ திரடியாக நீக்கம்

இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தற்காலிக தலைமை பயிற்சியாளராக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவன தலைமை இயக்க அதிகாரியான ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹதுருசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவன அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவனை ப யமுறுத்த காதல் மனைவி செய்த விபரீத செயல் : நேர்ந்த பரிதாபம்!!

நேர்ந்த பரிதாபம்

சென்னையில் கணவரை ப யமுறுத்த விளையாட்டாக தீ க்குளிக்க முயன்ற பெண்ணொருவர், தீ யில் க ருகி ப லியான சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்தவர் அனிதா. இவரும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.


இந்த தம்பதியர் மதுரவாயல் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், அனிதாவின் தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இ றந்தார். இதன் காரணமாக தனது கணவருடன் தன் தாய் வீட்டிலேயே தங்கியுள்ளார் அனிதா.

இதற்கிடையில், வினோத்குமார் அடிக்கடி கு டித்துவிட்டு அனிதாவிடம் ச ண்டையிட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் கணவரை ப யமுறுத்த நினைத்துள்ளார் அனிதா. இதற்காக, தன் மீது எ ண்ணெய்யை தீ க்குளிப்பது போல் அனிதா நடித்துள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அனிதாவின் உ டலில் தீப் பிடி த்துள்ளது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அனிதா, நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளியலறையில் சடலமாக கிடந்த திருமணமான இளம்பெண்!!

திருமணமான இளம்பெண்

சென்னையில் உள்ள ஒரு வீட்டு குளியலறையில் வடமாநில பெண்ணொருவர் கொ லை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிங்கி (30) இவருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தொழிலதிபரான பிங்கி அண்ணாநகரில் உள்ள வீட்டில் நல்ல வசதியாக வாழ்ந்து வந்தார், மேலும் டாட்டூ வரைதல் வேலையும் பார்த்து வந்தார்.


பிங்கியுடன் 26 வயசு இளைஞர் ஒருவர் தங்கி இருக்கிறார். இந்நிலையில், வெளியே சென்றிருந்த அந்த இளைஞர், வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, குளியலறையில் பிங்கி கொ லை செய்யப்பட்டு கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர் பொலிசுக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த பொலிசார் பிங்கியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பிங்கியின் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கமெராவை ஆய்வு செய்த போது 2 பேர் பேர் பிங்கியின் வீட்டுக்குள் சென்று, சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர்கள் யார் என்று பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.


அதனால் அவர்கள் 2 பேர் மற்றும் பிங்கியின் வீட்டிலேயே தங்கி இருந்த அந்த இளைஞர் என 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. இதை தவிர பிங்கியின் செல்போனையும் ஆராய்ந்து வருகிறார்கள்.

விசாரணையில் முக்கிய தடயம் ஒன்று சிக்கி உள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்பில் பேசிக்கொண்டிருந்த மனைவி : கணவனால் நடந்த விபரீதம்!!

கணவனால் நடந்த விபரீதம்

இந்தியாவில் மனைவி வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ் அப்பில் பேசியதை பார்த்த கணவன் அவரை ஆ த்திரத்தில் கொ டூரமாக கொ லை செய்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவை சேர்ந்தவர் அஞ்சலி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அஞ்சலி சில தினங்களுக்கு முன்னர் தனியாக வாட்ஸ் அப்பில் போன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அவர் கணவர் போனை வாங்கி பார்த்த போது ஆண் ஒருவரின் பெயர் இருந்தது. இதனால் வேறு ஆணுடன் ஏன் பேசுகிறாய் என கோபப்பட்ட நிலையில் தம்பதிக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆத்திரமடைந்த கணவர் அஞ்சலி வாயில் கொசுவை ஒழிப்பதற்காக வீட்டில் இருந்த மருந்தை எடுத்து ஊற்றிவிட்டு பின் க ழுத்தை நெ ரித்துக் கொ லை செய்துள்ளார். இது தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து அஞ்சலி கணவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Wi-Fi கடவுச்சொல்லுக்காக அக்காவை கொ லை செய்த தம்பி : நேரில் பார்த்து அதிர்ந்த தாய்!!

Wi-Fi கடவுச்சொல்லுக்காக..

அமெரிக்காவில் Wi-Fi கடவுச்சொல்லுக்காக அக்காவை க ழுத்தை நெ ரித்துக் கொ லை செய்த தம்பிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கெவோன் (18) என்கிற சிறுவன் தினம் தோறும் வீட்டில் வீடியோ கேம்ஸ் விளையாடும் பழக்கமுடையவன். வீட்டிலிருந்த Wi-Fi-ஐ அனைவரும் பகிர்ந்து கொண்டதால் வீடியோ கேம் விளையாடுவதற்கு சிரமாக இருந்துள்ளது.

ஒருநாள் பள்ளி முடிந்து வேகமாக வந்த வீட்டிற்கு வந்த கெவோன் மற்றவர்கள் வருவதற்கு முன்பாகவே வீட்டின் Wi-Fi கடவுச்சொல்லை மாற்றிவிட்டு, வீடியோ கேம்ஸ் விளையாட ஆரம்பித்துள்ளான்.

அப்போது வீட்டிற்கு வந்த அவனுடைய அம்மா கடவுச்சொல்லை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கெவோன், தன்னுடைய அம்மாவை நோக்கி வேகமாக சென்றுள்ளான். இதனை தடுப்பதற்காக உடனே அவனுடைய சகோதரி அலெக்சஸ் (19) உள்ளே குறுக்கிட்டுள்ளார்.

தரையில் விழுந்து இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்த போதே, அலெக்சஸின் கழுத்தில் கை வைத்த கெவோன் 15 நிமிடங்கள் விடாமல் வைத்து அழுத்தியுள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களுடைய தாய் வேகமாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்ததும், கழுத்தில் இருந்த கையை கெவோன் எடுத்துள்ளான்.

சுயநினைவில்லாமல் கிடந்த அலெக்சஸை மீட்டு பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கெவோன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, கெவோன் ஜாமீனில் வெளிவர முடியாத வாழ்நாள் சி றைத்த ண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சுவிஸ்லாந்தில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த கதி : பெரும் சோ கத்தில் குடும்பத்தினர்!!

சிறுமிக்கு நேர்ந்த கதி

சுவிஸ்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் வி ழுந்து உ யிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவிஸ்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

நிட்வால்டன் மாநிலத்தின் லூசர்ன் ஏரியில் உள்ள அவாசர் ஆற்றின் கரையோரம் தனது உறவினருடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாரா நேரத்தில் சிறுமி தண்ணீரில் வி ழுந்து மூ ழ்கியுள்ளார்.

சிறுமியுடன் மற்றுமொருவரும் நீ ரில் மூ ழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் தம்னுடன் சிறுமி இல்லாததை அவதானித்த உறவினர்கள் தே டிப்பார்த்த பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நாட்டு பொலிஸார் தே டுதலை மேற்கொண்டபோதும் அது பயனளிக்காத நிலையில் விசேட பயிற்சி பெற்ற அந்நாட்டின் சுழியோடிகள் உலங்கு வானூர்தி மூலம் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் குறித்த ஆற்றில் ஒன்பது மீற்றர் ஆ ழத்தில் இருந்து சி றுமியும் மேலும் ஒரு நபரும் மீ ட்கப்பட்டுள்ளனர். மீ ட்கப்பட்ட உடனேயே மு தலுதவிகள் வழங்கப்பட்டபோதும் குறித்த சிறுமி அந்த இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.

மீ ட்கப்பட்ட மற்றுமொரு நபர் உலங்கு வானூர்தி மூலம் வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த ஏரியில் இதுவரையில் எவரும் இவ்வாறு நீ ரில் மூழ்கி உ யிரிழக்கவில்லை எனவும் இதுபோன்ற சம்பவம் இதுவே முதல் தடவை எனவும அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், உ யிரிழந்த சிறுமி அருகில் உள்ளவர்களும் சகஜமாக பழகக் கூடியவரென்றும் சுறு சுறுப்பான அவரது செயற்பாடுகள் அங்கிருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் சிறுமிக்கு அருகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சிறுமியின் இ ழப்பு குடும்பத்தாரையும் அருகில் உள்ளவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவில் தேசிய விளையாட்டு பெருவிழாவில் பதக்கம் வென்ற வீரன் கௌரவிப்பு!!

கௌரவிப்பு

மாத்தறையில் கடந்த 28.07.2019 அன்று நடைபெற்ற 45 வது தேசிய விளையாட்டு பெருவிழாவில் பங்குபற்றி பதக்கம் வென்ற வவுனியா வீரர் இன்று (05.08.2019) வடக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் குருபரனால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

தொலைத் தொடர்பு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுதுறை அமைச்சினால் நடத்தப்படும் தேசிய ரீதியிலான வூசூ கு த்துச் ச ண்டையில் பங்குபற்றி வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீ.சிந்துஜன் (ஸ்ரீதர்சன்) வடக்கு மாகாண பணிப்பாளரினால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த வீரன் வடக்கு மாகாண வூசூ கு த்துச் ச ண்டை பயிற்றுவிப்பாளரும், வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாரின் மாணவன் ஆவார். குறித்த வூசூ கு த்துச் ச ண்டை போட்டியில் பங்கு பற்றிய வவுனியா குத்துச் ச ண்டை வீரன் கா யமடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் 2512 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்!!

உயர்தரப் பரீட்சை

நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் இரண்டாயிரத்து 512 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இப் பரீட்சைக்காக 33 பரீட்சை நிலையங்களும் 9 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் இரண்டாயிரத்து 512 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

பரீட்சை நிலையங்களுக்கு இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் மாணவர்களது அடையாள அட்டையை பார்வையிட்ட பின்னர் பரீட்சை மண்டபத்திற்கு செல்ல அனுமதித்தனர். அத்துடன் அமைதியான முறையில் பரீட்சைகள் நடைபெறுகிறது.

முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை, முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பதவி நீக்கம் செய்த முறை ச ட்டவி ரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் டெனீஸ்வரனை பதவி நீக்கி, புதிய அமைச்சர் நியமிக்கப்பட்ட விதமும் சட்டவிரோதாமானது என அறிவித்துள்ளனர். இதற்கமைய இந்த வழக்கிற்கான செலவை மனுதாரரான பா.டெனீஸ்வரனுக்கு செலுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட மாகாணத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தன்னை பதவி நீக்கியமை சட்டத்திற்கு புறம்பானது என உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்ற தவறியதால் நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை செப்டம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கும் தீ்ர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை எழுதிய தென்னிலங்கை அமைச்சர்!!

பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திலுள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, பரீட்சை மத்திய நிலையத்தில் அவர் பரீட்சை எழுதியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்றையதினம் ஆரம்பமாகியிருந்தன.

நாடளாவிய ரீதியிலுள்ள இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காதலனை நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

தமிழகத்தில் கல்லூரி மாணவியை காதலித்து பின்னர் கொ லை செய்த காதலன் அதை மறைத்து வேறு பெண்னை திருமணம் செய்தது தொடர்பாக 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பாண்டியின் மகள் முத்தரசி தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தனது சகோதரி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த முத்தரசிக்கு அப்பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன சாரதியான பரத்துடன் காதல் மலர்ந்து, அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் முத்தரசி மா யமானார். இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முத்தரசியை பரத்துடன் பலமுறை பார்த்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலை வைத்து, அவனைப் பிடித்து பொலிசார் விசாரித்துள்ளனர். தொடக்கத்தில் தனக்கு ஒன்றும் தெரியாது என கூறி வந்த இளைஞரிடம் பொலிசார் தங்கள் பாணியில் விசாரிக்கவே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

முத்தரசியை ஆத்துக்கால் புதூருக்கு அழைத்து வந்த பரத் விரைவில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடைய பெற்றோருக்குத் தெரியாமல் தனியே வீடு எடுத்து தங்கவைத்துள்ளான். சில நாட்கள் கழிந்த நிலையில், பரத்துக்கு வேறு ஒரு இடத்தில் பெற்றோர் பெண் பார்த்துள்ளனர்.

புதுப்பெண்ணை திருமணம் செய்யும் ஆசையில், முத்தரசியை கைவிட பரத் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த பரத், ஒரு கட்டத்தில் முத்தரசியை தனியே அழைத்துச் சென்று தலையில் பல மாக அ டித்துள்ளான்.

இதில் முத்தரசி உ யிரிழந்துவிடவே, செய்வதறியாது தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். குடும்பத்தினரும் அவசர அவசரமாக முத்தரசியின் உ டலை வீட்டுக்குப் பின்புறம் குழிதோண்டி பு தைத்துள்ளனர்.


சில நாட்கள் கழிந்த நிலையில், திருமணம் நடைபெறவுள்ள வீட்டில் பி ணம் இருப்பது சரியல்ல என்று கருதி, அதனை மீண்டும் தோண்டியெடுத்து வேறு ஒரு இடத்துக்கு எடுத்துச் சென்று எ ரித்துவிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் பரத்துக்கு திருமணமும் நடந்துள்ளது. விசாரணையில் இந்த உண்மைகள் வெளிவந்ததை அடுத்து, பரத், அவனது தாய் லட்சுமி மற்றும் உ டலை எரிக்க உதவியதாக கோவிந்தன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரத்தின் தந்தை உள்ளிட்ட மூவர் தேடப்பட்டு வருகின்றனர்.

திருமணம் ஆன 5 மாதத்தில் வி பரீத முடிவெடுத்த கர்ப்பிணிப் பெண்!!

கர்ப்பிணிப் பெண்

கடலூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசெந்தூரான் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் திகதியன்று செல்வசுந்தரி என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடித்ததிலிருந்தே ராஜசெந்தூரான் அடிக்கடி ம து கு டித்துவிட்டு வீட்டில் தொ ந்தரவு செய்து வந்துள்ளார்.

பலமுறை கூறியும் கூட திருந்தாத கணவன் வேலைக்கும் செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்ததால், செல்வசுந்தரி மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த செல்வசுந்தரி திடீரென தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக, ராஜசெந்தூரான் குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் செல்வசுந்தரியின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் பெண்ணின் பெற்றோர் தங்களுடைய மகளை அ டித்துக் கொ லை செய்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ராஜசெந்தூரானிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யானைத் தா க்குதலுக்கு உள்ளாகி 8 வயதுச் சிறுமி ப லி!!

சிறுமி ப லி

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பல்ல, குடாவெவ பகுதியில் யா னை தா க்குதலுக்கு உள்ளாகி 8 வயது சி றுமி ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

அத்துடன் குறித்த சிறுமியின் பாட்டி ப லத்த கா யங்களுடன் மஹியங்கனை வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மஹியங்கனை குடாவெவ பகுதியை சேர்ந்த ஷாலிக மதுஷானி எனும் 8 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். யா னை ஒன்று வீடொன்றை உ டைத்துக் கொண்டு சென்றதில் குறித்த சிறுமி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான லொறி : ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!!

விபத்துக்குள்ளான லொறி

தலவாக்கலை பகுதியிலிருந்து டயகம பகுதிக்கு கோதுமை மா ஏற்றிச்சென்ற கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் நாகசேனை பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதில், லொறியின் சாரதி, உதவியாளர் உட்பட 5 பயணித்துள்ளனர். இதேவேளை, ஐவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த கனரக லொறியில் இருந்த 800ற்கும் மேற்பட்ட கோதுமை மா பைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மாவனெல்ல பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு 10 டொண் தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று அகரகந்தை பகுதியில் அமைந்துள்ள நீர் மின் உற்பத்தி நிலைய கட்டடத்தின் மீது விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ச டலமாக மீட்பு!!

குடும்பஸ்தர் ச டலமாக மீட்பு

மட்டக்களப்பு, டச்பார் பகுதியில் உள்ள வாவியில் இருந்து ஆணொருவரின் ச டலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகத்துவாரம், பாலமீன் மடு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய நற்குணம் சகாயநாதன் என்பவரே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றையதினம் மீன்பிடிக்க படகில் சென்றிருந்த நிலையில் இன்றையதினம் வாவிக்குச் சென்ற மீனவர்களால் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த மீனவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ப லி, மூவர் படுகாயம்!!

இளைஞன் ப லி

வவுனியா செட்டிகுளம் கல்லாறு அருவித்தோட்டம் சந்தியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூவர் ப டுகாயமடைந்ததுடன் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிவருகையில், செட்டிகுளம் பகுதியில் இருந்து மெனிக்பாம் நோக்கி சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்ட போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் மெனிக்பாமை சேர்ந்த சுப்ரமணியன் தனுஜன் என்ற 19 வயது இளைஞன் ப லியாகியுள்ளார். அத்துடன் அதே பகுதியை சேர்ந்த மூவர் ப டுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.