வவுனியாவில் போதையற்ற தேசத்தினை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி!!?

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களமும் வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகமும் இணைந்து நடாத்தும் “போதையற்ற தேசம்” என்ற விழிப்புணர்வுப் பேரணி வவுனியா குருமன்காட்டில் இன்று (28.06.2019) இடம்பெற்றது.

போதையற்ற தேசமாக நம் நாட்டினை ஆக்கவேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஒர் அங்கமாக இவ் விழிப்புணர்வுப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் போதையற்ற தேசம் தொடர்பான விருந்தினர்களின் விழிப்புணர்வு உரை இடம்பெற்றிருந்ததுடன் விருந்தினர்களினால் “நாம் போதைப் பொருட்களுக்கு எதிரானவர்கள் போதையற்ற தேசத்தை நேசிப்பவர்கள்” என்ற வாசகம் தாக்கிய பலூன்கள் பறக்கவிடப்பட்டது. அத்துடன் வாகனங்களிலும் குறித்த வாசகம் தாக்கிய ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டன.

அதன் பின்னர் குருமன்காட்டு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய விழிப்புணர்வுப் பேரணி மன்னார் வீதியூடாக வைரவர் கோவில் வீதியினை சென்றடைந்து வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தினை சென்றடைந்தது.

அதன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கு ‘போதையற்ற தேசம்’ தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனிபா கலந்துகொண்டதோடு செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கே.சிவகரன், வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர், பாடசாலை அதிபர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், மூன்றாம் நிலை கற்கை நெறி கல்லூரி மாணவர்கள், முதியோர் சங்க உறுப்பினர்கள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கம்பளையில் மாமியாரை கொன்று விட்டு நாடகமாடிய மருமகள்!!

மாமியாரை கொலை செய்த மருமகள் மற்றும் இதற்கு ஆதரவாக இருந்த ஆணொருவர் ஆகிய இருவரையும் எதிர்வரும் ஏழாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாமியாரின் மரணத்தில் நிலவிய சந்தேகத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கொலையை தானே செய்ததாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மேலும்,

சந்தேகநபரான பெண்ணின் கணவர் கொழும்பில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கணவரின் தாயான (மாமியார்), மருமகளான அந்த பெண் அவரின் 3 பிள்ளைகள் ஒன்றாக பெல்லப்பிட்டிய – ஹெடம்ப கஸ்ஹின்ன பிரதேசத்தில் வசித்து வந்துள்ளனர்.

தினமும் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து செல்லும் வான் சாரதியுடன், மருமகளான 23 வயதுடைய பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி வான் சாரதி மற்றும மருமகள் வீட்டின் அறையில் இருப்பதை மாமி கண்டுள்ளார். இதன்போது மருமகள், மாமியின் வாய் மற்றும் மூக்கு பகுதியை அடைத்து மூச்சு திணறலை ஏற்படுத்தி கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் வான் சாரதியுடன் இணைந்து மாமியின் சடலத்தை சமையலறை பக்கமாக தூக்கி சென்று கயிறு ஒன்றில் தூக்கிட்டு தொங்கவிட்டுள்ளார்.

மறுநாள் 22ஆம் திகதி பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்பை மேற்கொண்டு தனது மாமி சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர் என தெரியவருகிறது. ரஜஎல ஹெடம்ப கஸ்ஹின்னயை சேர்ந்த 72 வயதான எட்லிங் பெர்ணாந்து என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 27 வயது குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

குடும்பஸ்தர் பரிதாபமாக பலி

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். கிளிநொச்சியிலிருந்து காக்காகடைசந்தி ஊடாக வட்டகச்சி செல்லும் வீதியில் பயணித்த உந்துருளி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது.

குறித்த விபத்தில் 27 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முறை மரணத்தை சந்தித்த அழகிய இளம்பெண் : சுற்றுலா சென்றபோது நேர்ந்த சோகம்!!

அழகிய இளம்பெண்

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு அழகிய இளம்பெண்ணை பாம்பு ஒன்று கடிக்க, அவர் எப்படி இரண்டு முறை மரணத்துக்கு சமீபமாக சென்று திரும்பினார் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.

ஒண்டாரியோவைச் சேர்ந்த Shalabha Kalliath, விடுமுறைக்காக தாய்லாந்துக்கு சென்றிருந்தார். கடற்கரையில் அவர் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென காலில் பயங்கர வலி ஏற்பட, காலைப் பார்த்தால், அவரது பெரு விரலிலிருந்து ஒரு பாம்பு தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது.

பட்டென Shalabha காலை உதற, ஒருவர் வந்து பாம்பைக் கொன்றிருக்கிறார். சற்று நேரத்தில் Shalabha மயங்கி விழுந்திருக்கிறார். தோழி ஒருவர் அவரைக் கொண்டு ஒரு கிளினிக்கில் சேர்த்திருக்கிறார். அங்கிருந்த மருத்துவர் ஒருவர் Shalabhaவிடம் நீங்கள் செத்துப்போய்விட வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

வலியும் மயக்கமுமாக Shalabhaவின் நினைவு தடுமாறிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில், அந்த மருத்துவர் கூறிய வார்த்தைகள் மனதையும் என்னவோ செய்ய, அந்த பாம்பின் விஷம் அவரது இரத்தத்தில் கலந்து விட்டதாகவும் அதை முறிக்கும் மருந்து தங்களிடம் இல்லை என்று அந்த கிளினிக் மருத்துவர்கள் கூற, வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் Shalabha.

தான் பார்த்ததிலேயே அது மிகவும் மோசமான மருத்துவமனை என்று கூறும் Shalabha, அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு மருத்துவர், மனிதர்கள் என்றால் சாவும் சகஜம்தான், சாவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதானே என்று கூற, ஏற்கனவே வெறுப்பிலிருந்த Shalabha , நல்லது ஆனால் நான் சாக விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் இன்னொருவர் Shalabhaவில் காலை அகற்ற வேண்டியிருக்கும் என்று கூற, Shalabhaவால் தான் எங்கிருந்து வருகிறேன் என்பது போன்ற விடயங்களை நினைவு கூர முடியாததால் அவரது காப்பீட்டு ஆவணங்களை நிரப்ப இயலாமல் போயிருக்கிறது.

கடைசியாக விஷ முறிவு மருந்து ஏற்றப்பட, ஒரு வழியாக அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட, கனடா திரும்பியிருக்கிறார் Shalabha. செத்துப் பிழைத்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டிருந்த Shalabha வுக்கு அவ்வப்போது உடல் மிகவும் பலவீனமாக, மீண்டும் ஒரு கிளினிக்குக்கு சென்றிருக்கிறார் அவர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அதிர்ந்துபோய், உடனடியாக அவரை கனடாவிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது இரத்தம் பரிசோதிக்கப்பட்டதில் அதில் இன்னும் பாம்பின் விஷம் மீதி இருப்பதைக் கண்ட மருத்துவர்கள், Shalabhaவிடம் அவர் உயிரோடிருப்பது ஆச்சரியம் என்றும், எந்த நேரமும் அவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும், சாதாரணமாக கீழே விழுந்திருந்தால் கூட உள்ளுறுப்புகளில் இரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

கனடாவிலும் அவரை கடித்த அந்த பாம்பின் விஷத்திற்கான மாற்று மருந்து இல்லாததால், வன விலங்குகள் பூங்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட அதேபோன்ற மற்றொரு பாம்பின் விஷத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மாற்று மருந்து Shalabhaவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஓரளவு உடல் நலம் தேறி விட்டாலும் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டியுள்ளது Shalabhaவுக்கு. இரண்டு முறை உயிர் தப்பிய நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறும் Shalabha, வேலை ஒன்றை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

கொடூரத்தின் உச்சம் : கழிவறை பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 வயது குழந்தையின் உடல்!!

கொடூரத்தின் உச்சம்

சென்னையில் 4 வயது குழந்தையை பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கழிவறை பக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சென்னையை சேர்ந்த 4 வயது குழந்தை நேற்று மதியம் முதல் திடீரென மாயமாகியுள்ளார்.

பல இடங்களில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காததால், கண்ணீருடனே அவருடைய பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கழிவறையில் இருந்த பக்கெட்டில், சாக்குப்பைக்குள் மகளின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் கதறி அழ ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் விரைந்த வந்த பொலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொள்கையில், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது, சிறுமியின் காதணி கம்மல் அவருடைய பெரியப்பா உறவுமுறை கொண்ட மீனாட்சிசுந்தரத்தின் படுக்கையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொள்கையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும்போது கதறி கூச்சலிட்டதால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் குழந்தையின் உடலை சாக்குப்பையில் மறைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதவர் போல மற்றவர்களுடன் சேர்ந்து தேட ஆரம்பித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மீனாட்சிசுந்தரம் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவமானது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் பிரசவித்த குழந்தையுடன் வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

நேர்ந்த பரிதாபம்

யாழ்ப்பாணத்தில் பிரசவித்த ஆண் குழந்தையுடன் வீடு திரும்பிய பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீசாலை, மேற்கு சாவகச்சேரியை சேர்ந்த குபேந்திரன் லோஜிதா என்ற 37 வயது பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் கடந்த 17ஆம் திகதி பிரசவத்திற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சத்திரசிகிச்சை மூலம் ஆண் குழந்தையொன்று பிறந்துடன், தாயும், சேயும் கடந்த 19ஆம் திகதி வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பகுதியில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக தெரிவித்து நேற்று முன் தினம் மீண்டும் குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

காது வலி என மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

தாய்லாந்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் தன்னுடைய இடது காதில் இரைச்சல் அதிகமாக இருக்கிறது என பீட்சணுலோக் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பிராடி சான்மண்டன் (37) என்கிற மருத்துவர் சோதனை மேற்கொண்டபோது இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணி ஒன்று உள்ளே ஒளிந்திருப்பதை கவனித்துள்ளார்.

பின்னர் 6 மிமீ நீளமுள்ள மைக்ரோ-உறிஞ்சும் குழாயைப் பயன்படுத்தி அதனை வெளியில் எடுத்தார். பின்னர் இதுகுறித்து நோயாளியிடம் கேட்டறிந்த போது, அவர் தன்னிடம் பல நாய்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

அவை வயல்களில் ஓடவும் கால்வாய்களில் நீந்தவும் அனுமதிப்பதாக கூறியுள்ளார். அவற்றிடம் இருந்து தான் இந்த ஒட்டுண்ணி பரவியிருக்கலாம் என பிராடி தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் படையினரின் சோதனை நிறுத்தம் : பொலிசார் பாதுகாப்புக் கடமையில்!!

வவுனியா வைத்தியசாலை

கொழும்பில் கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கேந்திர முக்கிய நிலையங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை படையினர் பொலிசார் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற அனாமதேய துண்டுப்பிரசுரத்தினால் வைத்தியசாலைக்கு பெருமளவு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நண்பகலுடன் படையினரின் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து பொலிசார் சிவில் பாதுகாப்புப்பிரிவினருடன் இணைந்து பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நடைமுறை காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள், வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களுக்கு எடுத்துச் செல்லும் உணவுப்பொருட்கள் உட்பட அனைத்தையும் தீவிர சோதனைக்குப்பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் வைத்தியசாலைக்கு செல்லும் உறவினர்கள் பெரும் நெருக்கடிகளையும், கெடுபிடிகளையும் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2019

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2019

02.07.2019 செவ்வாய்க்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும். 06.07.2019 சனிக்கிழமை 5ம் நாள் உற்சவம் இரவு – முத்துச்சப்பரத் திருவிழா, 08.07.2019 திங்கட்கிழமை 7ம் நாள் உற்சவம் இரவு – கைலாய வாகனத் திருவிழா

11.07.2019 வியாழக்கிழமை 10ம் நாள் உற்சவம் காலை – கைலாய வாகனத் திருவிழா
இரவு – திருமஞ்சத் திருவிழா, 12.07.2019 வெள்ளிக்கிழமை 11ம் நாள் காலை_ #கருட #சர்ப்பபூஜைஇரவு – பூந்தண்டிகையில் அம்பாள் எழுந்தருளல், 14.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 13 நாள் உற்சவம் – கைலாய வாகனத் திருவிழா மாலை – சப்பரதத்தி ருவிழா

15.07.2019 திங்கட்கிழமை காலை – இரதோற்சவப் பெருவிழா, 16.07.2019 செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தத் திருவிழா, இரவு – துவஜாவரோகணம் (கொடியிறக்கம்), 17.07.2019 புதன்கிழமை இரவு – தெற்போற்சவத் திருவிழாவுடன் (பூங்காவனம்) நிறைவுபெறும். “தாயாகி வளர்தாய் போற்றி போற்றி எம் வாழ்நாள் முதல் ஆகிய தாயே நாகபூஷணி அம்மையே போற்றி போற்றி”

யாழில் மாணவிகளிடம் பணம் பெற்ற அதிபர் பிடிபட்டார்..!

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பிரபல பெண்கள் உயா்தர பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி என்ற பெயாில் இடம் பெற்ற பாாிய நிதி மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.

இப் பாடசாலையில் உயா்தர வகுப்பு மாணவா்களிடம் பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி என்ற போர்வையில் தலா 1600 ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளது. எனினும் குறித்த நிதி எதற்காக பெறப்படுகின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்ட வகையில் கூறப்படாததுடன், பெற்றுக் கொண்ட பணத்திற்கு பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் விசேட அதிகாாிகள் குழு நேற்று முன் தினம் பாடசாலைக்குள் நுழைந்து நடாத்திய அதிரடி சோதனையில், பாடசாலை அதிபாின் ஒழுங்கில் நடைபெற்ற இந்த முறைகேட்டு சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ள நிலையில் உடனடியாக பாடசாலை அதிபா் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை அதிகஷ்ர பிரதேசங்களாக இனங்காணப்பட்ட வலயங்களிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விழாக்கள், கொண்டாட்டங்களுக்காக பணம் வசூலிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் கோர விபத்து : தாயும் மகளும் பரிதாபமாக பலி!!

கோர விபத்து

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கிரான்ட்பாஸில் நேற்று மதிய வேளையில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளும், கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலையில் இருந்து மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில் எட்டு வயது மகளும் 35 வயதான தாயும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே சிறுமி பலியாகி உள்ளதுடன், படுகாயம் அடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் தாயும் மகளும் சென்ற வேளையில், வேக கட்டுப்பாட்டை இழந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

படகு வழியே ஒருபோதும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது : அவுஸ்திரேலிய அரசு!!

அவுஸ்திரேலியா

சட்டவிரோத படகு பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் எவரும் நுழைய முடியாது என்றும் அவுஸ்திரேலிய அரசு சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது என்றும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரின் ஆலோசகர் தாரா கவானக் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜூன் 25 அன்று சென்னையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் ‘ஜீரோ சான்ஸ் (Zero Chance)’ பிரசார பணிகளை தொடங்கி வைத்த அவர், “அவுஸ்திரேலியாவின் வலிமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. அண்மையில் நடந்த தேர்தல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை,” எனக் கூறியுள்ளார்.

கடந்த 2013 முதல் அவுஸ்திரேலிய அரசு எடுத்து வரும் எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கையில், 35 ஆட்கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டு 847 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடலில் மூழ்குவதிலிருந்து உயிர்களை காப்பாற்றவும் ஆட்கடத்தல்காரர்கள் கையில் மக்கள் சிக்குவதையும் தடுக்க தற்போது புதிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பிரசாரம் வாயிலாக சட்டவிரோத படகு பயணத்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரின் ஆலோசகர் தாரா கவானக் குறிப்பிட்டிருக்கிறார்.

வெளியானது விசேட வர்த்தமானி அறிவித்தல்!!

ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

ரயில்வே பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பின் மத்தியில் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவேண்டும் என்பதற்காகவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இன்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவினால் இந்த வர்த்தமானியில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் படி (1979 ஆம் ஆண்டின் எண் 61) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவியை 12 முறை கத்தியால்குத்திக் கொலை செய்த கணவர் : யாழில் கொடூரம்!!

யாழில் கொடூரம்

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், குருநகரில் இடம்பெற்றது.

கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி இன்று பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் கழுத்து, நெஞ்சு என 12 இடங்களில் கத்திக்குத்து ஆழமாகப் பதிந்திருந்ததால் அவருக்கு அதிகளவு குருதி வெளியேறியது.

அதனால் அவர் உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தாயார் என்று தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தகராறு காரணமாக மனைவி மீது கணவன் இந்தக் கொடூரத்தைப் புரிந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து கணவர் தலைமறைவாகியுள்ளார்.

மனைவியின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய கடவுள் : நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்

பிரபல திரைப்பட நடிகையான விஜய நிர்மலா தமிழகத்தில் கடந்த 1946-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி பிறந்தார். அதன் பின் தன்னுடைய 7 வயதில் திரைத்துரையில் அடியெடுத்துவைத்த விஜய் நிர்மலா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 44 திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒரு பெண் இயக்குநர் அதிகபட்சமாக 44 திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நிலை மோசமானததால், சிகிச்சைக்காக ஹைதராபாத் நகரில் கச்சிபோலி பகுதியில் உள்ள கான்டினென்டல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி இன்று தன்னுடைய 73 வயதில் இறந்தார்.

விஜய நிர்மலா தீவிரமான சாய்பாபா பக்தையாம். இதனால் அவர் கோவிலுக்கு வரும் தனக்கு தெரிந்த பக்தர்களிடம், நான் இறப்பது முக்கியமல்ல. தான் இறந்தால் வியாழக்கிழமை தான் இறக்க வேண்டும் என கூறி வந்துள்ளார். அதன்படியே மரணத்தில் அவரின் ஆசையை ஆண்டவன் நிறைவேற்றிவிற்றார் என்று பக்தர்கள் உருக்கமாக கூறியுள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!!

விபத்து

கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணிளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இராமநாதன் கமம் பகுதியை சேர்ந்த செல்லையா பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து காக்காகடைசந்தி ஊடாக வட்டகச்சி செல்லும் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பின்புறமாக பார்த்தவாறு பயணித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.