உக்ரைனில் ஆறு வயது சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் நாய் போல் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதைக் கண்ட பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர். அவனது இடுப்பில் கட்டப்பட்டிருந்த சங்கிலியின் மறுமுனை வீட்டின் கதவுடன் இணைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அருவருப்பான அந்த தரையில் முழங்காலிட்டிருந்த அந்த சிறுவன் கைகளையும் உயர்த்தியபடியே இருந்தான். வீட்டில் அடிக்கடி சண்டையிடும் அந்த சிறுவனின் தந்தையைக் கண்காணிக்க வந்த பொலிசார், அந்த வீட்டில் ஒரு சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருந்ததைக் கண்டுள்ளனர்.
விசாரித்ததில் அவன் அடிக்கடி குறும்பு செய்வான் என்றும், அதனால் அவனை அப்படி கட்டி வைப்பது வழக்கம் என்றும் சர்வசாதாரணமாக தெரிவித்துள்ளனர் அவனது பெற்றோர்.
இந்த வாரத்துவக்கத்தில் மட்டுமே அவன் பல மணி நேரம் அவ்வாறு கட்டி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அவனை அவிழ்த்து விடும்படி அவனது தாய்க்கு உத்தரவிட்ட பொலிசார், இனி இப்படி செய்யக்கூடாது என பெற்றோரை எச்சரிக்க, அவர்களும் இனி இப்படி செய்வதில்லை என சத்தியம் செய்துள்ளனர். என்றாலும் பொலிசாரும் சமூக சேவை அமைப்புகளும் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக குளங்களில் உள்ள நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் வவுனியா, மகாகச்சக்கொடிய குளத்தில் இருந்த பெருமளவு மீன்கள் உயிரிழந்துள்ளன.
இதனால் அப்பகுதியில் விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் விவசாய செய்கைகளை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் மேய்ச்சல் தரைகளில் குடி தண்ணீர் இன்மையினால் அவதிக்குள்ளாகியுள்ளது.
இதனால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதுடன், அப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசிவருவதாக தெரிவிக்கின்றனர். வவுனியாவில் பெருமபாலான குளங்கள் வற்றியுள்ள நிலையில் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகின்றது.
வங்கி கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக்கும் நோக்கில் கடன் வங்கி வட்டி வீதங்களை குறைந்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் வங்கி வட்டி வீதங்களை குறைக்க, இலங்கை வங்கி கட்டமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையில் செயற்படும் வர்த்தக வங்கிகளுக்கு அதிகளவில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு கடன் வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் காரணமாக நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுத்தவுள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
அண்மையில் அனுராதபுரத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அதிசய நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. திருமணமான பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து ஒரு கிராம் கட்டி ஒன்று அபூர்வ சத்திரசிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி உள்ளனர்.
26 வார குழந்தைக்கு சமமான அளவில் இந்த கட்டி காணப்பட்டுள்ளது. எனினும் வயிற்றினை வெட்டாமல் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட சிரேஷ்ட பேராசிரியர் மற்றும் வைத்தியர் குழுவினர் இணைந்து இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
3D எனும் அதிக தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கட்டி மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த வைத்திய குழுவினால் 33 சத்திரசிசிக்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவே மிகப்பெரிய கட்டி என தெரிவிக்கப்படுகின்றது. இதன் நிறை 1100 கிராம் ஆகும்.
42 வயதான பெண்ணிற்கே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயிற்றில் மில்லி மீற்றர் அளவில் 4 இடங்களில் சிறிதாக வெட்டி இந்த கட்டி நீக்கப்பட்டுள்ளது. அதிக தொழில்நுட்ப திறன் கொண்ட உபகரணங்கள் இந்த சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு மிகவும் பாதுகாப்பாக இந்த கட்டி நீக்கப்பட்டுள்ளது.
வயிற்றை வெட்டி இந்த கட்டி அகற்றப்பட்டிருந்தால் அவர் 90 நாட்கள் ஓய்வில் இருந்திருக்க நேரிட்டிருக்கும். அத்துடன் சில பகுதிகளில் வயிற்றுக்குள் தங்கிவிடும். எனினும் தற்போது அவருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. குறித் பெண்மணி ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் நாச்சிக்குடா கடல் பகுதியில் அரியவகை மீனொன்று சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த மீன் இன்று காலை மீனவரொருவரின் வலையில் சிக்கியுள்ளது.
இந்த மீன் சுமார் இரண்டாயிரம் கிலோகிராம் எடையுடையது என தெரியவருகிறது. அத்துடன் இந்த அரியவகை மீனை பார்வையிட நாச்சிக்குடா கடற்கரைக்கு பலர் வருவதாகவும் தெரியவருகிறது.
நாச்சிக்குடா கடல் பகுதியில் அரியவகை மீனொன்று சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.குறித்த மீன் இன்று காலை மீனவரொருவரின் வலையில் சிக்கியுள்ளது.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியின், பாலம்போட்டாறு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் திருகோணமலை – முத்துநகர், பாலம்போட்டாறு பகுதியை சேர்ந்த சதுன் மதுசங்க (12 வயது) என்பவரே உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்ணனுடன், தம்பியான குறித்த சிறுவன் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பில் அடுத்த கட்ட விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளமருதங்குளம் காட்டுப் பகுதியில் மரமொன்றின் அடிவாரத்தில் பிளாஸ்ரிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.
ஓமந்தை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று காலை 10 மணிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ்தசில்வா தலைமையிலான குழுவினர் குறித்த காட்டுப் பகுதிக்குச் சென்று மரமொன்றின் அடிவாரத்தின் கீழ் பிளாஸ்டிக் பையொன்றில் சுற்றப்பட்ட நிலையில் சுமார் 25ற்கு மேற்பட்ட நிலக்கன்னிவெடிகள் மற்றும் ஆ.ர்.பீ.ஜீ ரக வெடிகுண்டு ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சீகிரிய – திபிஸ்ஸ பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். தக்காளி தோட்டத்தினை பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு காவலுக்காக கட்டப்பட்டிருந்த நாய்க்கு உணவு எடுத்துக்கொண்டு செல்லும் வேளையில், உணவு தேடி வந்த இரு யானைகள் குறித்த நபரை சுமார் அரை மணித்தியாலம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சத்தமிட்டமையில் அருகிலுள்ளவர்கள் வருகை தந்து யானைகளை விரட்டியதுடன் காயமுற்ற நபரை சீகிரிய வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
சீகிரிய வைத்தியசாலையிலிருந்து தம்புள்ளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். தம்புள்ளை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதித்யா சனலின் தொகுப்பாளினி தாபாவும், அவரது கணவர் ரகுவும் தங்களது திருமண நிகழ்வுகள் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார்கள். “எங்களுக்குக் கல்யாணம் நடந்து முடிச்சிருச்சனானு எனக்கு ஆச்சரியமா இருக்கு. அப்பப்போ, நாங்களே கிள்ளிப் பார்த்துப்போம். ஏன்னா, எங்களுக்குத் திருமணம் நடந்தை எங்களாலேயே நம்ப முடியல” எனப் பேச்சைத் தொடங்குகிறார்கள் புதுமணத் தம்பதிகள் தாபா – ரகு.
”என் வீட்டுக்காரர் ரகு, உதவி நடன இயக்குநர். நான் டான்ஸ் கிளாஸுக்குப் போனப்போ, இவர்கூட எனக்குப் பழக்கம். எனக்கு இவரைப் பிடிச்சதுக்குக் காரணம், எங்க அப்பா மாதிரி இவர் என்னைப் பார்த்துக்கிட்டார்.” என தாபா தொடங்கிவைக்க, ரகு தொடர்ந்தார்.
”எனக்கும் இவங்களுடைய கேரிங் ரொம்பப் பிடிச்சிருந்தது. என்கூட பத்து வருடங்களாக டிராவல் பண்றாங்க. என்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்குவாங்க. அதனாலதான் இவங்களை மிஸ் பண்ண எனக்கு மனசே வரல. ஆனா, என்ன பண்ண?! தாபா குடும்பத்துலதான் எங்க கல்யாணத்துக்கு ஒப்புக்கவே இல்லையே! எங்க வீட்டை பொருத்தவரைக்கும் உடனே ஓகே சொல்லிட்டாங்க.’ என தாபாவைப் பார்க்க, அவர் தொடர்கிறார்.
“எனக்குக் கல்யாணம் நடக்குமா, நடக்காதானு ஒரே குழப்பம். ஏன்னா, எங்க வீட்டுல காதலைப் பற்றி சொல்லும்போது கொஞ்சம்கூட ரியாக்ஷனே பண்ணல. ‘ஓ லவ் பண்றியா’னு கேட்டுட்டு விட்டுட்டாங்க. பிடிக்குது, பிடிக்கலைனு எதுவும் சொல்லல. இவர் எங்க வீட்டுக்கு வந்தா, எங்க அம்மா சப்பாத்தியெல்லாம் சுட்டுக் கொடுத்தாங்க. ஆனா, கல்யாணத்துக்குப் பதில் மட்டும் சொல்ல இல்லை” என முடிக்க, ரகு தொடர்ந்தார்.
“எங்க கல்யாணத் தேதி முடிவானவுடனே நாங்கதான் சின்னக் குண்டூசியில இருந்து, பெரிய அண்டா வரைக்கும் எல்லாத்தையும் தேடித் தேடி வாங்குனோம். பெற்றோர்களுடைய ஆசிர்வாதம் மட்டும் இருந்தா போதும்னுதான் நினைச்சோம். எங்களுக்கு அரேஞ்ச் மேரேஜ் நடக்காதுனுதான் பலரும் சொன்னாங்க. கஷ்டமோ, நஷ்டமோ பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் நடக்கணும்னு நாங்க தீர்மானமா இருந்தோம், நடந்தது.
முக்கியமா, எங்க கல்யாணத்துக்கு 30 வகையான சாப்பாடு ரெடி பண்ணுனோம். மூர்த்திங்கிறவர்தான் கேட்டரிங் சர்வீஸ் பார்த்துக்கிட்டார். அவர் எந்தக் கல்யாணத்துகெல்லாம் சமைச்சிருக்காரோ, அங்கெல்லாம் போய் யாருக்கும் தெரியாம சாப்பிட்டுத் திருட்டுத்தனமா சாப்பிட்டு வந்துதான் ஓகே பண்னோம்.
காதலிக்கிறப்போ, எங்க ரெண்டுபேருக்கும் நிறைய சண்டை வரும். ஆனா, நான்தான் இறங்கிப்போய் ஸாரி கேட்பேன். முக்கியமா, நான் அடிக்கிற மொக்கை ஜோக்ஸையும் ரகு பொறுத்துக்குவார்.” தாபா சொல்லிச் சிரிக்க.. ரகு தொடர்ந்தார்.
”இவங்க நிகழ்ச்சித் தொகுப்பாளினியா இருக்கிறதனால முதலில் என்னை வெச்சு ரிகர்சல் பார்த்துக்குவாங்க. இவங்க சொல்ற மொக்கை ஜோக்ஸுக்கு நான் சிரிச்சுட்டா, ‘ஓகே இதை இன்னைக்கு ஷோவுல சொல்லிடுறேன்’னு சொல்லிட்டு அதுக்கும் சிரிப்பாங்க பாருங்க.. செம கோபம் வரும். அதேமாதிரி மேடம் இரவு பத்து மணி ஆனாலே தூங்கிடுவாங்க. நான் ரொமான்டிக்கா, ‘ஹாய் பேபி’னு மெசேஜ் அனுப்புனாலும், ‘குட் நைட்’தான் பதிலா வரும்.” ரகு சொல்லும்போதே தாபா குறுக்கிடுகிறார்.
“வரலாற்றில் என் பெயர் இந்த விஷயத்துல மட்டும் கண்டிப்பா இடம்பெறும், அது என்னனா, ‘அதிகமா மன்னிப்பு கேட்ட பெண்மணி’. இவர்கிட்ட அவ்வளவு ஸாரி கேட்டிருக்கேன். இவருடைய டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, அதை இவர்கிட்ட சொல்லவே மாட்டேன். சொன்னா ரொம்ப சீன் போடுவார்.” என்றவர், ரகுவின் சினிமா கனவு பற்றியும் சொன்னார்.
”இவர் கிட்டதட்ட பத்து வருடங்களுக்குமேல சினிமாவுல உதவி நடன இயக்குநரா இருக்கார். சீக்கிரமே இவர் டான்ஸ் மாஸ்டர் ஆகணும்ங்கிறது என் ஆசை. இவர்தான் மாஸ்டர் ஆகிட்டா நமக்கு பட வாய்ப்புகள் வருமான்னு ரொம்ப யோசிக்கிறார். எனக்கு இவர்மேல நிறைய நம்பிக்கை இருக்கு. இவர்கூட சேர்ந்து ஓட நான் எப்போவும் ரெடியா இருக்கேன்.” என ரகுவைத் தாபா காதலோடு கட்டிப்பிடித்துக்கொள்ள, நாங்கள் விடைபெற்றோம்.
நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது.
பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று பல்வேறு தனித்தன்மையுடனும் தன்னுள் பல்வேறு அமானுஷ்யங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அவ்வகையில் கர்நாடக மாநிலத்திலிருக்கும் ஒரு கோயிலில் இருக்கும் நந்தி சிலை இந்த நவீன யுக காலத்திலும் விஞ்ஞானிகளால் பதில் சொல்ல முடியாத அளவிற்கு அமானுஷ்யமாக விளங்கிவருகிறது.
கர்நாடக மாநிலத்திலுள்ள, மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்”. இந்த கோயில் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் வெளிவந்தபடியே இருப்பது பெரும் ஆச்சர்யமாகும்.
1997 ஆம் ஆண்டுவரை பூமியின் அடியில் புதையுண்டு இருந்த இந்த கோயில் உள்ளூர் அரசியல் வாதி ஒருவர் கட்டிடம் கட்டுவதற்காக பூமியை தோண்டியபோது எந்த சேதமும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சர்யமிகுந்த தகவலாகும்.
பொதுவாக மற்ற கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிராக நந்தி தேவரின் சிலை இருக்கும் . ஆனால் இந்த கோவிலில் நந்தி தேவரின் சிலை சிவனின் தலைக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. நந்தி தேவரின் வாயிலிருந்து வழியும் நீர் எப்பொழுதும் சிவபெருமானை குளிர்வித்தபடி இருக்கிறது.
நந்தியின் வாயிலிருந்து வரும் நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவ பெருமானின் மீது வழிந்த பின் இந்த நீர் அருகிலிருக்கும் குளத்தை சென்றடைவது போல் இந்த கோயிலின் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நந்தியின் வாயிலிருந்து எப்பொழுதும் வழிந்தபடியே இருக்கும் நீர் இந்த குளத்தை சென்றடைந்தாலும் குளத்தின் நீர்மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி ஒரு அடி கூட உயர்வதில்லை இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது எப்படி மர்மமோ அதே போல் எங்கே செல்கிறது என்பதும் இந்த கோயிலின் மற்றொரு அதிசயமாகும்.
சிவபெருமானை அபிஷேகித்த பின் குளத்தில் சேரும் இந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், இதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். வாழ்க்கையில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோயிலின் வரிசையில் தட்சிண முக நந்தி கோயிலும் ஒன்றேன்றால் மிகையல்ல.
காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோயில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். சில கோயில்களுக்கு நாமே சென்று வந்திருப்போம். ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோயில் குறித்து இதுவரை அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசய நரசிம்மர் கோயில் குறித்து பாப்போம் வாருங்கள்.
கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில் அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். மற்ற கோயில்களுக்கு பயணிப்பதை போல் இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல.
1000 அடி நீளமுள்ள இந்த மலை குகையில் கடுமையான வரட்சியான காலத்திலும் கூட எப்பொழுதும் 4 அடி முதல் 5 அடி நீர் நிறைந்தே இருக்கிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது எங்கே செல்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது .
இந்த தண்ணீரில் அதிசயமான பல மூலிகைகளின் சக்திகள் இருப்பதாகவும் இதில் நடத்து சென்று நரசிம்மரை தரிசித்தால் பல்வேறு வியாதிகள் குணமாகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
குகையில் எப்பொழுதும் வவ்வால்கள் தொங்கியபடியே இருக்கிறது இந்த வௌவால்கள் மனிதர்களை கண்டு பயப்படுவதுமில்லை, இதுவரை எந்த மனிதர்களையும் காயப்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குகையின் இறுதியில் சுயம்புவாக தோன்றிய ஜர்னி நரசிம்மரும் சிவலிங்கமும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். நரசிம்ம பெருமான் இரண்யகசிபுவை பிரகல்நாதனுக்காக வதம் செய்தபின்னர் ஜலாசுரன் என்ற அசுரனை இந்த குகையில் வதம் செய்ததாகவும் இறுதியில் அசுரன் நீராக மாறி நரசிம்மரின் பாதத்தில் சரணடைந்ததாகவும் தல புராணங்கள் கூறுகிறது.
நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்ற மனவுறுதியுடன் கடினமான பாதைகளை கடந்து சென்றால் ஜர்னி நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் முதன்முறையாக கலந்துகொண்ட இந்திய வம்சாவளி பெண் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரியா செர்ராவ் (27), தன்னுடைய 11 வயதிலே அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துவிட்டார்.
விக்டோரியா மாகாணத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வரும் பிரியா, மெல்போர்னில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் கலந்து கொண்டார். இவருடன் மேலும் 26 பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் மாடலிங் துறையில் அனுபவம் இல்லாத பிரியா, தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே அவர்கள் அனைவரையும் வீழ்த்தி பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெல்லா கசிம்பா இரண்டாம் இடத்தையும், மரிஜானா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
பின்னர் இதுகுறித்து பேசிய பிரியா, நான் வெற்றிபெறப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். முதல் பத்து இடங்களில் தான் வருவேன் என நினைத்திருந்தேன். அதனால் என்னுடைய குடும்பத்தினரையோ, நண்பர்களையோ நான் அழைக்கவில்லை. இது மிகவும் ஒரு வேடிக்கையான இரவு என தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலம் கேரளாவில் பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணால் தொழிலதிபருக்கு ரூ.50 லட்சம் பறிபோன சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேரள மாநிலம் இரிங்காலக்குடா பகுதியை சேர்ந்தவர் அந்த 40 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர். பெரும்பாலும் வெளிநாடுகளில் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஒருநாள் அவரது பேஸ்புக் மெசஞ்சரில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குறுந்தகவலை அனுப்பியவர் அழகான பெண் என்பதை அறிந்த அவர், அந்த குறுஞ்செய்திக்கு பதில் அளித்துள்ளார்.
மருத்துவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த யுவதியுடன் தொழிலதிபரின் நட்பு அடுத்த 6 மாதங்களில் மிக நெருக்கமாக வளர்ந்தது. இதனிடையே பலமுறை நேரலை அழைப்புக்கும், தொலைபேசி அழைப்புக்கும் முயன்ற தொழிலதிபருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பகல் வேளையில் தாம் மருத்துவமனையில் பரபரப்பாக இயங்குவதாகவும், இரவில் கணவர் அருகாமையில் இருப்பதாகவும் கூறி அழைப்புகளுக்கு அந்த யுவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் பேஸ்புக் அரட்டைகளுக்கு எப்போதும் பதில் அளித்தும் வந்துள்ளார். 6 மாத காலத்தில் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர்.
மட்டுமின்றி இருவரும் தங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனிடையே கோவையில் தாம் தங்கியிருப்பதாகவும், சந்திக்கலாம் எனவும் அழைத்துள்ளார்.
தகவல் கிடைத்ததும் வெலிநாட்டில் இருந்த தொழிலதிபர் உடனடியாக இந்தியா திரும்பியுள்ளார். மட்டுமின்றி, மனைவியிடம் ஆயுர்வேத மருத்துவரை காண செல்வதாக கூறி, தமது புதிய காரில் கோவை சென்றுள்ளார்.
கோவையில் சென்ற பின்னரும், அந்த பேஸ்புக் காதலி தொலைபேசியில் பேச மறுத்துள்ளதுடன், காரின் வண்ணமும் எண்ணும் கேட்டறிந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென்று தொழிலதிபரை அணுகிய குழு ஒன்று தாங்கள் தேசிய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் எனவும், தங்களுக்கு அந்த பெண்ணின் மொத்த தகவலும் வேண்டும் எனவும், அவர் மருத்துவர் அல்ல எனவும், சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலில் முக்கிய நபர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலால் அதிர்ந்து போன, தொழிலதிபர், அந்த அதிகாரிகளிடம் உதவ முடியுமா என விசாரித்துள்ளார். ஒரு கோடி ரூபாய் செலவு செய்தால் வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என அந்த அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இறுதியில் 50 லட்சம் அளிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மட்டுமின்றி உறவினர்களை அழைத்து பணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அடுத்த சில மணி நேரங்களில் பணத்தை அந்த அதிகாரிகளிடம் அளித்துள்ளார் தொழிலதிபர். இதனையடுத்து அந்த கும்பல் இவரை விடுவித்துள்ளது. ஆனால் இச்சம்பவம் தொடர்பில் விசாரித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த கும்பல் தம்மை ஏமாற்றியதாகவும்,
பேஸ்புக்கில் தம்மிடம் 6 மாத காலம் அரட்டையில் ஈடுபட்டவர் பெண் இல்லை எனவும், அது ஒரு 24 வயது இளைஞர் எனவும் பொலிசாரின் விசாரணையில் தெரியவந்தது. மட்டுமின்றி தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் அந்த கும்பலில் முக்கிய நபரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் காதலனை கொலை செய்து உடலை வாய்க்கால் புதரில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரைப் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் புவனகிரி காவல் நிலையத்தில் பொலிஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
இவரது நடவடிக்கை காலப்போக்கில் சரி இல்லாததால் பொலிஸ் நண்பர்கள் குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வி என்பவருக்கும், சீனிவாசனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும், மேலும் தாமரைச்செல்விக்கு வேறொரு இளைஞருடன் முறையற்ற உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடிக்கடி குடிபோதையில் தனது கள்ளக்காதலி வீட்டுக்கு செல்லும் சீனிவாசன், தாமரை செல்வியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சீனிவாசன் தாமரைச்செல்வியுடன் தான் நெருக்கமாக இருந்த போது செல்போனில் எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் தான் கடந்த 25-ஆம் திகதி கீரப்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்கால் புதரில் சீனிவாசன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில், சீனிவாசன் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது. இதனால் பொலிசார் தாமரைச்செல்வி மற்றும் அவரது தாயாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த -ஆம் திகதி குடிபோதையில் தனது வீட்டுக்கு வந்த சீனிவாசனிடம் இருவரும் நெருக்கமாக இருந்த- செல்போனில் பதிவு செய்திருந்த போட்டோக்களை கொடுக்கும் படி தாமரைச்செல்வி கேட்டுள்ளார்.
ஆனால் அதனை தர மறுத்த தால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் சீனிவாசனை பிடித்து தாம் தள்ளியதாகவும், இதில் கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அவரை தட்டிய போது எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் இருந்ததால், அவர் இறந்துவிட்டார் என்பதை அதிர்ச்சியடைந்தேன். அதன் பின் பக்கத்து வீட்டில் இருந்த தாயார் லட்சுமியை அழைத்து வந்து கீழே விழுந்து கிடந்த சீனிவாசனின் கழுத்தில் கயிற்றை மாட்டி தரதரவென வீட்டின் பின்பக்கமாக இழுத்துச் சென்று வாய்க்கால் புதரில் போட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் சீனிவாசன் வைத்திருந்த செல்போனை எடுத்து அதனை கல்லால் சுக்குநூறாக உடைத்து அருகில் மண்ணைத் தோண்டி புதைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து தாமரைச்செல்வி மற்றும் அவரது தாயாரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி கும்பல் ஒன்று தாயாரையும் மகளையும் தலை மொட்டையடித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் கிராம தலைவரின் முன்னிலையில் நடந்தேறியது, அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பீகாரின் வைஷாலி கிராமத்திலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று வீடு புகுந்த கும்பல் ஒன்று 19 வயது இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளது.
இதில் அதிர்ச்சியடைந்த 48 வயதான அவரது தாயார், மகளை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற போராடியுள்ளார்.
இதனால் ஆத்திரம் கொண்ட அந்த கும்பல் தாயாரையும் மகளை கொடூரமாக தாக்கியுள்ளது. மேலும், இருவரையும் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றுள்ளது.
பின்னர் கிராம தலைவரின் முன்னிலையில், இருவரையும் தடியால் தாக்கி, தலை மொட்டையடித்துள்ளனர். இருவரும் பாலியல் தொழில் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்து இருவரையும், தெருவில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் காவல் துறைக்கு தெரியவரவே, அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று விசாரித்துள்ளனர்.
விசாரணையில், அந்த தாயார் மற்றும் மகள் மீது எந்த குற்றவும் இல்லை என்பது உறுதியான நிலையில், கிராம தலைவர் மற்றும், தலை மொட்டையடிக்க தூண்டிய கும்பல் உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளனர்.
வீடு புகுந்து தாக்குதல், கொலை மிரட்டல், பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆறு வருடங்களுக்கு முன்பு உதடுகள் இல்லாமல் பிறந்த ரஷ்ய நாட்டுக் குழந்தை டரினா ஷ்பெங்லர் உலகத்தவரால் அவலட்சணமான குழந்தையாக இது வரையில் பார்க்கப்பட்டார். இவரின் முக அமைப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், இவர் அரிய வகை நோயினால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக டரினா ஷ்பெங்லரின் குடும்பம் சமூகத்தில் அதிகம் நெருக்கடிகளைச் சந்தித்தது. ரஷ்ய மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காததால் ஆறு வயதான டரினா ஷ்பெங்லர் தமது பெற்றோருடன் லண்டனுக்குச் சென்றுள்ளார்.
இவருக்கு லண்டனில் அமைந்துள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த அறுவை சிகிச்சை இவரின் வாழ்க்கையை மாற்றும் எனப் பெற்றோராலும் மருத்துவராலும் நம்பப்படுகின்றது.
இந்த சிகிச்சையின் பின் தனது மகளுக்கும் ஏனைய குழந்தைகள் போல் சமூகத்தில் வாழ்வதற்கு வழிபிறக்கும் எனவம் தனது மகளுக்கு பேசுவதற்கான குரலைக் கொடுக்கும் எனவும் இவரின் தாயார் திருமதி ஷ்பெங்லர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.