பெற்றோரின் திருமண நாளில் 17 பேருடன் விபத்தில் சிக்கி பலியான மகள் : சோக சம்பவம்!!

17 பேருடன் விபத்தில் சிக்கி பலியான மகள்

துபாயில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் இருந்த எச்சரிக்கை பலகையின் மீது மோதியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சுற்றுலா பேருந்து ஒன்று 31 பயணிகளுடன் ஏமனிலிருந்து துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணியளவில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எச்சரிக்கை பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஓட்டுநர் உட்பட பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பியோனா கெரஹாட்டி (28) என்கிற இளம்பெண் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். அயர்லாந்தை சேர்ந்த பியோனா, 20 வயதுள்ள ஆண் நண்பருடன் அந்த பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவர் பியோனாவின் காதலனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போது அந்த இளைஞரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் 40வது திருமண நாளை கொண்டாடி கொண்டிருந்த பியோனாவின் பெற்றோர் மகளின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கான காரணம் என பொலிஸ் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லா அல் மாரி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

கணவனை கொலை செய்து அட்டைப்பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்த மனைவி!!

கணவனை கொலை செய்த மனைவி

திருவள்ளூர் மாவட்டத்தில் கணவனை கொலை செய்து அட்டைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவருக்கு முனியம்மாள் என்கிற மனைவியும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

முருகேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று திடீரென தன்னுடைய கணவருக்கு கை,கால்கள் செயலிழந்துவிட்டதாக கூறி, சகோதரன் ஏழுமலை மற்றும் அவருடைய மனைவியை வீட்டிற்கு வருமாறு முனியம்மாள் அழைத்துள்ளார்.

மூன்று பெரும் சேர்ந்து முருகேசனை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவர்கள், முருகேசன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அன்றைய தினம் முருகேசனை அடக்கம் செய்வதற்காக வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் போது, அவருடைய கழுத்தில் இறுக்கப்பட்டதற்கான தழும்புகள் இருப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கேட்கும் போது, சந்தேகத்திற்குரிய வகையில் முனியம்மாள் பதிலளித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கூறிய முனியம்மாள், வழக்கம் போல வெள்ளிக்கிழமையன்றும் கணவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்து தன்னுடைய சகோதரன் ஏழுமலை மற்றும் அவருடைய மனைவியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

அவர்களின் உதவிடையுடன் முருகேசனின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய உடலை ஏழுமலை மற்றும் அவருடைய மனைவி, குளிர்சாதன பெட்டிக்கான அட்டைப்பெட்டியில் மறைத்து வைத்தனர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.பொதுநூலகத்திலிருந்து அகற்றப்பட்ட வரலாற்று கல்வெட்டு!!

யாழ்.பொதுநூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிழையான வரலாற்றை குறிக்கும் கல்வெட்டை அகற்றும் நடவடிக்கைகள் இன்று யாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டது.

யாழ் பொது நூலகத்தின் வரலாறானது, குறித்த நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்பில் பிழைகள் இருப்பதாக எமது முன்னோர்களும் சபை உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் இந்த பிழையை திருத்தியமைக்க வேண்டுமென மாநகர சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தின் பிரகாரம் நூலக வரலாற்றில் பிழையான தகவல்கள் திணிக்கப்பட்டுள்ளனவா? என ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டு, குறித்த கல்வெட்டில் பிழை உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய நூலக வரலாற்றை திருத்தியமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அண்மையில் நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் மிக விரைவில் வரலாறுகள் திருத்தி அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு சுற்றுலாப் பயணியாக சென்ற இலங்கைப் பெண் : உள்ளாடையை சோதித்த போது அதிர்ந்த அதிகாரிகள்!!

இலங்கைப் பெண்

சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்று துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த அதனான் (36), மற்றும் ஷிபியுல் ரகுமான் (25) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் இருவரும் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 950 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து இலங்கையை சேர்ந்த சீதாலட்சுமி (63) என்பவர் சுற்றுலா பயணியாக சென்னை வந்தார். அவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவரது உடமைகளில் எதுவும் இல்லை. பின்னர் சீதாலட்சுமியை தனியறைக்கு அழைத்துச் சென்று பெண் அதிகாரிகள் உதவியுடன் சோதனை செய்ததில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து தங்க சங்கிலி மற்றும் பிரேஸ்லெட் ஆகியவற்றை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 131 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த தங்கத்தை யாருக்காக துபாய் மற்றும் கொழும்பில் இருந்து கடத்தி வந்தனர் என 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளியில் சென்ற கணவன் : 2 மகள்களுடன் வீட்டில் இருந்த இளம்தாய்க்கு நேர்ந்த கதி!!

இளம்தாய்க்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் பல்லி விழுந்த குளிர் பானத்தை அருந்திய தாய், மகள்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (33) விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி (29) என்ற மனைவியும், பெபினா (7), பிருந்தா (5) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாரிமுத்து வெளியில் சென்ற நிலையில், முத்துலட்சுமி வீட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி வந்தார். பின்னர் குளிர்பானத்தை அருந்திய முத்துலட்சுமி தனது மகள்களான பெபினா, பிருந்தா ஆகியோருக்கும் குளிர்பானத்தை குடிக்க கொடுத்தார். குளிர்பானம் அருந்திய சிறிது நேரத்தில் முத்துலட்சுமிக்கும், அவரது மகள்களுக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே குளிர்பான பாட்டிலை பார்த்த போது அதில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை அருந்தியதாலேயே அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்கள் உயிருக்கு ஆபத்து : திருமணம் முடிந்த 2 நாளில் கதறும் இளம் தம்பதி!!

தமிழகத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியினர் தங்களை உறவினர்கள் மற்றும் பெற்றோர் மிரட்டி வருவதால் பாதுகாப்பு வழங்கும் படியும் மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோடி பிரித்திவிராஜ்(25)-ஜீவிதா(20). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 6-ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்து கொண்ட இருவரும், கடலூர் எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அங்கிருந்த அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நாங்கள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6-ஆம் திகதி திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். 7-ஆம் திகதி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டோம்.

இந்நிலையில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருவரையும் பிரிக்கும் நோக்கத்தில் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆகையால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை படித்து பார்த்த எஸ்.பி.அலுவலக காவல் அதிகாரிகள், காதல் ஜோடியினர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என்பதால் அங்குள்ள மாவட்ட பொலிசாரிடம் மனு வழங்க வேண்டும் என அறிவுறுத்தி மனுவை திருப்பி அளித்துள்ளனர்,.

ஆனால் இந்த ஜோடியொ நாங்கள் கடலூரில் திருமணம் செய்து கொண்டோம், மேலும் எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மனுவை பெற்று நடவடிக்கை எடுக்க உதவிட வேண்டும் என காதல் தம்பதியினர் கோரினர்.

ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் மனு அளிக்க வேண்டும் என்று அவர்களை அங்கிருந்து பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.

மனைவியின் கைபேசிக்கு 10 நாட்களாக வந்த குறுஞ்செய்தி : அதை பார்த்து அதிர்ந்த கணவன் செய்த செயல்!!

தமிழகத்தில் தன் மனைவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை சாமர்த்தியமாக கணவர் சிக்க வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது மனைவிக்காக துணிக்கடை ஒன்றை அமைத்து தந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு துணிக்கடையில் சுப்ரமணியன் மனைவி பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் ராம்பிரபு (37) என்பவர் துணி வாங்கியதாக தெரிகிறது.

அப்போது ராம்பிரபு, சுப்ரமணியின் மனைவியிடம் துணி வாங்குவது போன்று இரட்டை அர்த்த வசனங்களில் பேசியுள்ளார். மேலும் கடையின் பெயர் பலகையில் உள்ள அவரின் செல்போன் எண்ணையும் குறித்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

பின்னர் ராம்பிரபு சுப்ரமணியின் மனைவியின் செல்போன் எண்ணிற்கு முதலில் குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் தொந்தரவு தந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இந்த விடயம் 10 நாட்களாக தொடர்ந்த நிலையில் அதிர்ச்சிக்குள்ளான அந்தப் பெண், கணவர் சுப்பிரமணியனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த குறுஞ்செய்திகளை பார்த்த சுப்ரமணியன் அதிர்ந்து போய் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார். ஆனால், பொலிசார் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ராம்பிரபுவை கையும், களவுமாக பிடிக்க நினைத்து, அதற்காக திட்டம் ஒன்றையும் தீட்டினார்.

அதன்படி ராம்பிரபுவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட சுப்பிரமணியன், பெண் குரலில் ஆசையாக பேசி, கடைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதனால் ராம்பிரபு ஏமாற்றமடைந்து சுப்பிரமணியனின் மனைவியை பார்க்க துணிக்கடைக்குச் சென்றுள்ளார். அப்போது ராம்பிரபு சுப்பிரமணியனிடம் வசமாக சிக்கியுள்ளார். பின்னர் சுப்பிரமணியன் பொதுமக்கள் உதவியுடன் ராம்பிரபுவை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியான அடித்த பின் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரோடு இருக்கும் 21 வயது மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த பெற்றோர்!!

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

தமிழகத்தில் உயிரோடு இருக்கும் மகள் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டத்தில் உள்ளது குப்பராஜபாளையம் என்கிற கே.ஆர்.பாளையம் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி இவராணி. தம்பதிக்கு அர்ச்சனா (21) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் எங்களது மகள் அர்ச்சனா அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். இவரது பூவுடல் 10.6.2019ம் திகதி மதியம் 3.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என பேனர் பிரிண்ட் செய்து அதை தெருவில் கட்டி வைத்துள்ளார் சரவணன்.

இந்த பேனர் அக்கிராம மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம், அர்ச்சனா இன்னும் இறக்கவில்லை, உயிரோடு உள்ளார். அர்ச்சனா அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்துள்ளார். அவர் வேறு சாதியை சேர்ந்தவராம்.

இதனால் இவர்களது காதலை வீட்டில் ஒப்புக்கொள்ளாததால் கடந்த வாரம் இறுதியில் தனது வீட்டில் இருந்து ரகசியமாக வெளியேறி காதலனை மணந்துள்ளார். இதனால் அதிருப்தியான அர்ச்சனாவின் குடும்பத்தார், தனது மகள் இறந்துவிட்டதாக பேனர் அச்சடித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர் இல்லாத நேரத்தில் அவர் வீட்டில் மனைவியை சந்திக்க வந்த நபர்.. அதன் பின்னர் நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம்

தமிழகத்தில் மனைவியையும், குழந்தையையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். லொறி ஓட்டுநரான இவர் கெளரி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் புகழ்வின் என்ற ஆண் குழந்தை இருக்கின்றது.

சுரேசும், கெளரியும் சமீப நாட்களாக வீட்டில் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை, சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனக்குச் சொந்தமான தோட்டத்திற்குச் சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததை அடுத்து, அவர்களை உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது மூவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ந்து போயினர். அதில், சுரேஷ் மட்டும் கழுத்தறுபட்டபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, கெளரியும், புகழ்வின்னும் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்தனர். சுரேஷை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அந்த இடத்தில் இருந்து கத்தி ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். பொலிசார், உறவினர்கள் மற்றும் ஊர் மக்களிடம் நடத்திய விசாரணையை அடுத்து அவர்களின் சந்தேகம் சுரேசின் பக்கம் திரும்பியுள்ளது. சுரேஷின் நண்பரான வீரக்குமாரும், கெளரியும் சகஜமாக பேசி பழகியதாகக் கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வீட்டில் இல்லாத போது கெளரியை சந்திக்க வீரக்குமார் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் நடத்தை மீது சந்தேகம் அடைந்த சுரேஷ், மனைவியையும் குழந்தையையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு தனது கழுத்தை அறுத்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். மேலும் சுரேஷ் குணமடைந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்த பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

தென்னிந்திய சினிமா பிரபலத்துடன் ரவூப் ஹக்கீம்!!

ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தென்னிந்திய சினிமா பிரபலமான நடிகர் சத்தியராஜை சந்தித்து பேசியுள்ளார். தமிழர் எழுச்சி நாள் கலைஞர் உதயம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ரவூப் ஹக்கீம் சென்னைக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த நிலையில் அனிதா மேல்நிலை பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே நடிகர் சத்தியராஜை, ரவூப் ஹக்கீம் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிகழ்வில் மலேசிய சபாநாயகர் எஸ்.ஏ.விக்னேஷ்வரன், கவிப்பேரரசு வைரமுத்து, சாலமன் பாபையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட உரையாற்றியிருந்ததோடு, ரவூப் ஹக்கீமும் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

அத்துடன் தனது இந்த பயணத்தின் போது ரவூப் ஹக்கீம், தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்!!

சிவப்பு எச்சரிக்கை

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் காலநிலை தொடர்பில் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே வளிமண்டலவியல் திணைக்களம்இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்ய கூடும். நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்பரப்புகளில் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

திருகோணமலயிலிருந்து காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் முன் பாய்ந்த இளைஞர்!!

புகையிரதம் முன் பாய்ந்த இளைஞர்

கொழும்பு – கோட்டையை நோக்கி பயணித்த தபால் புகையிரதம் முன்பாக குதித்து இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு பதுளையை அண்மித்த எல்ல புகையிரத நிலையத்தின் அருகில் வைத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வெலிமடை, கெப்பிட்டிப்பொல பகுதியைச் சேர்ந்த தக்சின லங்காநாத் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் பண்டாரவளை அரச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி கதறி அழுத பெண்கள் : மயங்கி விழுந்த சோகம்!!

கதறி அழுத பெண்கள்

வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீட்டுத்திட்டம் கோரி இன்று (10.06.2019) காலை 10.30 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் மற்றும் சமயபுரம் நாவலர் வீதி பகுதியினை சேர்ந்த கிராம மக்கள் வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு முன்பாக தங்களுக்கு வீட்டுத்திட்டம் தருமாறு கோரி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

போராட்ட இடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபையின் உபதலைவர் மகேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொலைபேசியில் உரையாடினர்.

அதன் பின்னர் வவுனியா மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எ.கிருபாசுதன் மற்றும் வவுனியா தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உதவி மாவட்ட முகாமையாளர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராமத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் போராட்ட இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கலந்துரையாடினர்.

விரைவில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாக அதிகாரிகள் வாக்குறுதியளித்த போதிலும் தங்களது வீட்டினை தற்போது வந்து பார்வையிட்டு தீர்வு பெற்றுத்தரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவித்து வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் குறித்த அதிகாரிகளும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும் அவர்களது வீட்டினை பார்வையிடச் சென்றனர்.

வவுனியா சமயபுரம் நாவலர் வீதியில் வசிக்கும் 15 குடும்பத்தினரும் கணேசபுரத்தில் வசிக்கும் 25 குடும்பங்களே வீட்டுத்திட்டம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் நியமனம்!!

அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான மூன்று அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

கைத்தொழில், வர்த்தக, மீள்குடியேற்ற, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பதில் அமைச்சராக புத்திக்க பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

ரவூப் ஹக்கீம் அமைச்சராக செயற்பட்ட நகர அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக லக்கி ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கபீர் ஹாசிம் அமைச்சர் செயற்பட்ட நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக அனோமா கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கைத்தொழில், வர்த்தக, மீள்குடியேற்ற, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக ரிசாத் பதியுதீன் பணியாற்றி வந்தார்.

எனினும் நாட்டில் எழுந்துள்ள நெருக்கடி நிலை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த வாரம் ரிசாத் பதியுதீன் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

ரிசாத் பதியுதீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரசாங்கத்தில் செயற்பட்ட ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முஸ்ஸிம் பாடசாலைகள் ஆரம்பம்!!

முஸ்ஸிம் பாடசாலைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயி­றன்று தேவா­ல­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பலத்த பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முஸ்ஸிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள இந் நிலையில் பாட­சா­லை­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் வவுனியாவிலுள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளினதும் பாது­காப்பு குறித்து கவ­னத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்­க­மை­வாக வவுனியாவிலுள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

பொலிஸார், பெற்றோர், பாடசாலை சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் பாடசாலை பைகள் அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. வவுனியாவிலுள்ள ஏனைய தமிழ் சிங்கள பாடசாலைகளிலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வறுமையற்ற இலங்கையை உருவாக்க சமுர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் நிகழ்வு!!

சமுர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் நிகழ்வு

வறுமையற்ற இலங்கையை உருவாக்குவோம் என்னும் தொனிப்பொருளில் வவுனியாவில் சமுர்த்தி நிவாரண உரித்து படிவம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

மாவட்ட அரச அதிபர் எம்.ஹனீபா தலைமையில் நகரசபை மைதானத்தில் நேற்று மாலை ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே மற்றும் முன்னாள் அமைச்சரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் ஆகியோரினால் குறித்த சமுர்த்தி நிவாரண உரித்து பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, வவுனியா மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ஒன்றில் 60 பேர் வீதம் 42 கிராம சேவையாளர் பிரிவிலிருந்து 2520 பேருக்கு புதிய முத்திரை வழங்கப்பட்டது. அத்துடன் பயனாளுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.