வவுனியாவில் இரத்தக்கண்ணீர் வடிக்கும் அம்மனை பக்கதர்கள் சென்று தரிசித்து வருகின்றனர். வவுனியா சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசனிி மற்றும் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் கண்களில் இருந்தே இரத்தக்கண்ணீர் வடிந்து வருகின்றது.
இன்று காலை ஆலயத்தின் பூசகரான பெண் ஆலயத்திற்குள் சென்று பார்த்தபோது அம்மனின் சிலையில் இருந்து சிவப்பாக ஏதோ வடிவதை அவதானித்துள்ளார். உடனடியாக அதனை துடைத்த அவர் மீண்டும் அவ்வாறு கண்களில் இருந்து வருவதை அவதானித்த நிலையில் ஆலயத்தின் தொண்டர்களை அழைத்து சம்பவத்தினை காட்டியுள்ளார்.
அவர்களும் அதனை துடைத்து பார்த்தபோது மீண்டும் கண்களில் இருந்து இரத்தம் சிந்துவதை அவதானித்த அவர்கள் விசேட பூஜைகளை நடத்திய நிலையில் தகவல் கிராமம் முழுவதும் பிரவியது.
இதனையடுத்து நூற்றுக்கணக்கான அடியவர்களும் அம்மனை தரிசிக்க வந்தவண்ணமுள்ளதுடன் அம்மனின் கண்களில் இருந்து இரத்தம் சிந்துவது ஏன் என்ற அச்சம் கிராமத்தவர்கள் மத்தியில் சூழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் வளர்ப்பு மகளை கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ளது குயின்ஸ் நகரம். இங்கு வசிப்பவர் சுக்ஜிந்தர் சிங். இவரது மகள் அஷ்தீப் கவுர் (9).
மனைவியை பிரிந்த சிங், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் என்கிற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். பின் சிங், ஷம்தாய், அஷ்தீப் கவுர் ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி சிறுமி அஷ்தீப் கவுர் குளியலறையில் உயிரிழந்திருந்தாள். குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக ஷம்தாய் தெரிவித்தார். ஆனால், அஷ்தீப் கவுர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது.
இதையடுத்து, வளர்ப்பு மகளை கொன்றதாக ஷம்தாய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர் குற்றவாளி என குயின்ஸ் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
தண்டனை விவரம் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என கூறியிருந்தது. அதன்படி, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஷம்தாய்க்கு 22 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோலாலம்பூரில் இளம் மொடல் அழகி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் முதன்முறையாக, அமெரிக்க கோடீஸ்வரர் அலெக்ஸ் மற்றும் அவருடைய மனைவி மவுனம் கலைத்துள்ளனர்.
டச்சு மொடல் அழகியான இவனா ஸ்மித் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6வது மாடியின் பால்கனியில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். 20-வது மாடியிலிருந்து அவர் விழுந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளரான அலெக்ஸ் மற்றும் அவருடைய மனைவி லூனா கைது செய்யப்பட்டனர். கொலைக்கான எந்த ஆதாரங்களும் கிடைக்காத நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து அவர்கள் இருவரும் வெளியில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இணையதளத்தில் அவர்களுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர்களுடைய குழந்தையை கடத்தி கொலை செய்ய உள்ளதாக கூட மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த லூனா, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவனா அறிமுகமானார். நாங்கள் மூவரும் சேர்ந்து உடலுறவு கொள்வது வழக்கம். டிசம்பர் 6ம் திகதி ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, இரவு மூன்று பெரும் உறவு கொண்டோம்.
மறுநாள் காலையில் அதிக மதுபோதையில் இருந்ததால், இவனாவால் நடக்க முடியவில்லை. என்னுடைய கணவர் தான் அவரை அறைக்கு தூக்கி வந்தார். நான் காலையில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினேன். அந்த சமயம் இவனா உறங்கிக்கொண்டிருந்தார்.
நானும் சிறிது நேரத்தில் அங்கேயே உறங்கிவிட்டேன். விழித்த போது இவனாவின் பொருட்கள் மட்டும் அங்கிருந்தன. இவானா மாடலிங் செய்ய கிளம்பியிருக்கலாம் என நான் நினைத்துக்கொண்டேன். மாலை 5 மணிக்கு காவல்துறையினர் வந்த போது தான் என்ன நடந்தது என்பது எங்களுக்கே தெரியும். எங்களுக்கும் இவனாவின் இறப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறியிருந்தார்.
மேலும் இவனாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருடைய உடலில் மதுவும், போதை மருந்துகளும் கலந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் வேறு எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அலெக்ஸ் – லூனா தம்பதியினரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இந்த நிலையில் முதன்முறையாக அலெக்ஸ் மவுனம் கலைத்துள்ளார். கொடூர மரண வழக்கில் எங்கள் மீதான சூனிய வேட்டை முடிவுக்கு வந்ததுள்ளது. நாங்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் துவங்க உள்ளோம். எங்களுக்கு இனி கவலை இல்லை என கூறியுள்ளார்.
பங்களாதேஷில் மண்டி எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது.
அந்த கிராமத்தில் உள்ள பெண்மணி ஒருவர் கூறுகையில், தான் சிறுவயதாக இருந்த போது தந்தை இறந்து விட்டார். அதன் பிறகு என்னுடைய தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவனாக ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார்.
மேலும் இந்த கலாச்சாரத்துடன், இளம் வயதில் கணவன் இறந்து விட்டால், அந்த பெண், கணவரின் உறவினரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் மற்றொரு கலாச்சார பழக்கமும் இருந்து வருகிறதாக கூறப்படுகிறது.
பின் அந்த கணவன் தன்னுடைய மனைவி மூலமாக பெற்ற குழந்தைகளையும், மகள் மூலமாக பெற்றக் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டுமாம்.
தமிழகத்தில் ரயில் முன்னால் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில்வேகேட் பகுதியில் நேற்று அதிகாலை தண்டவாளத்தில் இளைஞன் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் புகையிரதத்தில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தண்டவாளம் அருகே ஸ்கூட்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த ஸ்கூட்டர் யாருக்கு சொந்தமானது? என விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த ஸ்கூட்டர் நீடாமங்கலம் அருகே உள்ள பழங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் ராகுல்பிரியன் (21) என்பவருக்கு சொந்தமானது என்பதும், இறந்து கிடப்பது அவர் தான் என்பதும் தெரிய வந்தது. மேலும் அங்கு இறந்து கிடந்த பெண், காளாச்சேரி மாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் 2-வது மகள் வினிதா (20) என்பதும் தெரிய வந்தது.
பிணமாக கிடந்த வினிதாவின் கையில் ராகுல் என பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதுபற்றி பொலிசார் விசாரித்தபோது ராகுல்பிரியன், வினிதா ஆகிய இருவரும் காதல் ஜோடி என்பதும், இருவரும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், வினிதாவின் அக்காவுக்கும், பழங்களத்தூரை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது பழங்களத்தூருக்கு வினிதா சென்றபோது அந்த ஊரை சேர்ந்த ராகுல்பிரியனுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வினிதா வேலை பார்த்து வந்தார்.
நேற்று அதிகாலை மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நீடாமங்கலம் வந்த வினிதாவை, ராகுல்பிரியன் ஸ்கூட்டரில் வையகளத்தூர் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
பின்னர் இருவரும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வையகளத்தூர் ரெயில்வே கேட் கீப்பர் தெரிவித்த தகவலின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.
இதையடுத்து காதல் ஜோடியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வவுனியாவில் இரத்தக்கண்ணீர் வடிக்கும் அம்மனை பக்கதர்கள் சென்று தரிசித்து வருகின்றனர். வவுனியா சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசனிி மற்றும் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் கண்களில் இருந்தே இரத்தக்கண்ணீர் வடிந்து வருகின்றது.
இன்று காலை ஆலயத்தின் பூசகரான பெண் ஆலயத்திற்குள் சென்று பார்த்தபோது அம்மனின் சிலையில் இருந்து சிவப்பாக ஏதோ வடிவதை அவதானித்துள்ளார். உடனடியாக அதனை துடைத்த அவர் மீண்டும் அவ்வாறு கண்களில் இருந்து வருவதை அவதானித்த நிலையில் ஆலயத்தின் தொண்டர்களை அழைத்து சம்பவத்தினை காட்டியுள்ளார்.
அவர்களும் அதனை துடைத்து பார்த்தபோது மீண்டும் கண்களில் இருந்து இரத்தம் சிந்துவதை அவதானித்த அவர்கள் விசேட பூஜைகளை நடத்திய நிலையில் தகவல் கிராமம் முழுவதும் பிரவியது.
இதனையடுத்து நூற்றுக்கணக்கான அடியவர்களும் அம்மனை தரிசிக்க வந்தவண்ணமுள்ளதுடன் அம்மனின் கண்களில் இருந்து இரத்தம் சிந்துவது ஏன் என்ற அச்சம் கிராமத்தவர்கள் மத்தியில் சூழ்ந்துள்ளது.
புனித நோன்பு பெருநாள் திடல் தொழுகை வவுனியா, பட்டானிச்சூர் குடா வயல் திடலில் இன்று இடம்பெற்றுள்ளது.
அதன் தலைவர் மௌலவி எம். எப். சாபிக்கின் (பாரி) தலைமையில் தொழுகைகள் இடம்பெற்றது.
இதன்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை உலகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானை சேர்ந்த பெண் மூன்று மாதங்களுக்கு பின்னர் இந்தியாவில் உள்ள தனது கணவருடன் இணைந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்தவர் சுமைரா. இவருக்கும் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த ஷேக் மொயிதீன் என்பவருக்கும் கடந்த 2011-ல் திருமணம நடைபெற்றது.
தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் நோய் வாய்ப்பட்ட தனது தந்தையை காண தனது பிள்ளைகளுடன் சுமைரா பாகிஸ்தான் சென்றார்.
பிப்ரவரி 27ஆம் திகதி ஹைதராபாத் திரும்ப எமிரேட்ஸ் விமான டிக்கெட்களை சுமைரா எடுத்திருந்த நிலையில் விமான நிலையத்துக்கு வந்து விமானத்தில் ஏறினார்.
ஆனால் அந்த சமயத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாலாகோட் வான்வழி தாக்குதலை இந்திய விமானப்படையினர் நடத்தியிருந்தனர்.
அந்த சமயத்தில் குறித்த விமானத்தில் இந்தியாவுக்கு செல்ல வேறு பயணிகள் இல்லாததால் சுமைரா மற்றும் அவர் குழந்தைகளும் இந்தியா திரும்பமுடியாத சூழல் ஏற்பட்டது.
அதே நேரத்தில் மார்ச் 3ஆம் திகதியோடு சுமைராவின் விசா காலம் முடிவடைந்தது. இதன் காரணமாக இந்தியாவுக்கு வரமுடியாமல் அவர் தவித்தார்.
இதன்பின்னர் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்னர் சுமைரா மற்றும் அவரின் பிள்ளைகளுக்கு விசா வழங்கப்பட்டது.
இதையடுத்து மூன்று மாதங்கள் கழித்து இந்தியாவுக்கு வந்த சுமைரா ஹைதராபாத் சென்று கணவர் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கழட்டிவிட்டு சென்ற காதலியை உண்ணாவிரத போராட்டம் நடத்தியே காதலன் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆனந்த பர்மன். இவர் கடந்த 8 வருடங்களாக லிப்பிக்கா என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் லிப்பிக்கா, பர்மனுடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் திடீரென துண்டித்துள்ளார். இதுகுறித்து பர்மன் விசாரித்த போது, லிப்பிக்காவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே லிப்பிக்காவின் வீட்டிற்கு சென்ற பர்மன், உண்ணாவிர போராட்டத்தில் இறங்கியுள்ளார். ”என்னுடைய காதலை திரும்ப கொடு, என்னுடைய 8 வருடத்தை திரும்ப கொடு” போன்ற பதாகைகளுடன் வீட்டின் முன்பு அமர்ந்திருந்துள்ளார்.
இதனை அறிந்த ஊர் மக்கள், நடந்தவற்றை கேள்விப்பட்டு பர்மனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டிற்கும் இந்த தகவல் சென்றடைந்துள்ளது. அவர்களுடன் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்துள்ளனர். மற்றொரு புறம் வேகமாக வந்த பொலிஸார் பர்மனிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் பர்மன் தன்னுடைய போராட்டத்தில் இருந்து பின்வாங்காமல் இருந்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் பர்மனின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இறுதியாக லிப்பிக்கா தன்னுடைய பழைய காதலன் பர்மனை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். லிப்பிக்காவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததும், உடனடியாக திருமணம் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த பெண் நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்தநபர் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து தப்பி ஓடிய குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடிவருகின்றனர். மேலும் குறித்த நபரை கைது செய்ய திறந்த பிடியானை உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலிருந்து சென்ற வான் ஒன்று செட்டிபாளையத்தில் வைத்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சுகயீனமுற்ற குடும்ப ஒருவரை கொழும்பில் வைத்தியாசலையில் அனுமதித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இச்சம்சம்பவம்நேற்று இடம்பெற்றுள்ளது.
சாரதியின் நித்திரை மயக்கத்தால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென நம்பப்படுகிறது. விபத்து பாரதூரமாகவிருந்த போதிலும் உயிரிழப்பு ஏற்படவில்வை.
மின்கம்பமும் பலதத் சேதத்துக்குள்ளாகியுள்ளது. இவர்கள் தம்பிலுவிலை சேர்ந்தவர்களென்றும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மேலதிக விசாரணைணை களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குளியாப்பிட்டியில் கோழி இறைச்சி சாப்பிட்ட வைத்தியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வாங்கிய கோழி இறைச்சியுடன் உணவினை சாப்பிட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து ஹெட்டிபொல நோக்கி பயணித்த வைத்தியர் காலை உணவுக்காக கோழி இறைச்சி அடங்கிய உணவினை வாங்கியுள்ளார். இதன்போது கோழியின் ஒரு பகுதி இளம் பச்சை நிறத்தில் காணப்பட்டுள்ளது.
அதனை சாப்பிட்ட வைத்தியருக்கு வயிற்று வலி, தலைவலி ஏற்பட்டுள்ளது. அத்துடன் கை நடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வைத்தியர், குளியாப்பிட்டிய அவசர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்நிலையில் சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் குறித்த ஹோட்டலில் சோதனை நடத்தி வருகின்றனர்.
41 இலங்கையர்களுடன் மூழ்கிக்கொண்டிருந்த படகு ஒன்றினை அவுஸ்திரேலிய – இலங்கை கடற்படையினர் இணைந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சர் Peter Dutton-உடன் சென்றுள்ள அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படைத்தளபதிகளில் ஒருவரான Major General Craig Furini இந்த தகவலை அங்கு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தமது படையினருடன் இணைந்து குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக The Australian ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“குறித்த சம்பவம் மே மாதம் 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. படகினுள் தண்ணீர் புகுந்துகொண்டதால் அது மூழ்கத்தொடங்கியபோது. எனினும் அதிஷ்டவசமாக படையினரால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. படகில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆஸ்திரேலியா நோக்கிய படகுப்பயணங்கள் தீவிரமடைந்துள்ளதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.
மார்ச் 7 ஆம் திகதி இதேபோன்றதொரு பயணத்தின்போது 40 பயணிகளுடன் ஒரு படகு இடைமறிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த தொடர்ச்சியான சம்பவங்களையடுத்து எல்லைப்பாதுகாப்பினை அவுஸ்திரேலிய கரையோர காவல்படையினர் அதிகரித்துள்ளதாகவும்” அவர“கள் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய பெண்ணொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான குறித்த பெண், மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
குறித்த பெண் நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது குறித்த பெண்ணை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்தநபர் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து தப்பி ஓடிய குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடிவருகின்றனர். மேலும் குறித்த நபரை கைது செய்ய திறந்த பிடியானை உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அத்துருகிரிய பிரதேசத்தில் வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் ஆசனத்தில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாலபே கஹன்தோட்டையை சேர்ந்த ராஹுல ஜயசம்பத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரித்தானிய விமான நிலையம் ஒன்றிற்குள் கத்தியுடன் நுழைந்தவரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே, நான் எல்லோரையும் கொல்லப்போகிறேன் என மிரட்டல் விடுத்த தகவல் தெரியவந்துள்ளது.
அதிகாலை 2 மணியளவில் Gatwick விமான நிலையத்திற்குள் இரண்டு கத்திகளுடன் நுழைந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருநபர், எல்லோரையும் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகள் வெளியேற்றப்பட்டதோடு, விமான நிலையத்திற்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய பொலிசார் டேஸர் கொண்டு அந்த நபரை தாக்கி அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் விமான நிலைய ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இடத்தில் நிகழ்ந்துள்ளதால், ஒரு வேளை அவர் விமான நிலைய ஊழியராக இருக்கலாம் என்னும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், பேருந்து பயணி ஒருவர், விமான நிலையம் நோக்கி சென்ற ஒரு மனிதரை சந்தித்ததாகவும், அவர், விமான நிலையத்தில் ஒரு படுகொலையை நிகழ்த்தப்போகிறேன், எல்லோரையும் கொல்லப்போகிறேன் என்று கூறிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Callum Oldfield (21) என்னும் அந்த நபர் வேலைக்கு செல்லும்போது பேருந்து நிலையம் ஒன்றின் அந்த சந்தேகத்திற்குரிய நபரைக் கண்டதாகவும், அப்போதுதான் அவர் இவ்வாறு தெரிவித்ததாகவும் தெரிவித்தார். உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்த Oldfield, அந்த நபர் தனது கையில் ஒரு பெட்டியை வைத்திருந்ததாக தெரிவித்தார், அந்த பெட்டியில்தான் அந்த மர்ம நபர் கத்திகளை வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அந்த நபர் நான் எல்லோரையும் கொல்லப்போகிறேன் என்று கூறியதல் கேட்டு அதிர்ந்து தான் பின்வாங்கியதாக தெரிவித்துள்ள Oldfield, லொட்டரியில் பெரும் தொகையை வென்றது போன்ற மகிழ்ச்சியுடன் அந்த நபர் காணப்பட்டதாக தெரிவித்துள்ளதையடுத்து ஒரு வேளை அவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருப்பாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.