ஒன்லைன் காதலரை நேரில் சந்திக்க சென்ற இளம்பெண் : அவருக்காக காத்திருந்த நான்கு ஆண்கள்!!

காத்திருந்த நான்கு ஆண்கள்

இணையத்தில் சந்தித்து காதல் வளர்த்து, ஒரு நாள் நேரில் சந்திக்கலாம் என ஆசையாக காதலரை காணச் சென்ற இளம்பெண்ணுக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது, காரணம், அங்கு அவருக்காக வாட்டசாட்டமான நான்கு ஆண்கள் கத்திருந்தார்கள்.

பிரித்தானியாவின் Devonஐச் சேர்ந்த Amy Sharp (28) டேட்டிங் இணையதளம் ஒன்றில் James என்ற நபரை சந்தித்து காதலிக்கத் தொடங்கியிருந்தார். ஒரு நாள், ஹொட்டல் ஒன்றில் சந்தித்து இரவு உணவு அருந்தலாம் என முடிவு செய்து Jamesஐ வரச்சொல்லியிருந்தார் Amy.

ஆனால் Amy ஹொட்டலுக்கு சென்றபோது அங்கு Jamesஐக் காணவில்லை. அதற்கு பதில் Amy குறிப்பிட்டிருந்த இடத்தில், கார் ஒன்றின் அருகில் வாட்ட சாட்டமான நான்கு ஆண்கள் நின்றிருந்தார்கள். குழம்பிப்போன Amy, Jamesக்கு போன் செய்ய, அங்கிருந்த ஒரு நபரின் போன் ஒளிர்ந்ததைக் கண்டார் Amy.

அது James என்ற பெயரில் தான் இணையதளத்தில் பார்த்த நபர் அல்ல, அவர் போலியான போட்டோவை பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெரிந்ததும், Amyக்கு பயம் ஏற்பட்டது. அதற்குள் அந்த நால்வரும் Amyயின் காரை நோக்கி நகர, அங்கிருந்து காரை நகர்த்தி வந்துவிட்டார் Amy. நிச்சயம் அவர்கள் தன்னுடன் இரவு விருந்து உண்ண வரவில்லை என்பது மட்டும் நிச்சயம் என்று கூறும் Amy, ஏதோ தவறு நடக்க இருந்தது மட்டும் நிச்சயம் என்கிறார்.

தான் ஒரு பெண், அந்த நான்கு ஆண்களிடம் சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கூறும் Amy, தனக்கு நேரிட்ட அதிர்ச்சி சம்பவத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து மற்றவர்களை எச்சரித்திருக்கிறார். பின்னர் பொலிசாரை Amy தொடர்பு கொள்ள, அவர்கள் கேட்ட முதல் கேள்வி, அவர்கள் உங்களைத் தொட்டார்களா என்பதுதான்.

சட்டத்தில் திருத்தங்கள் தேவை என்று கூரும் Amy, தவறு நடந்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என்றால் எப்படி, அதற்கு முன்னரே தவறை தடுக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிறார். பிரித்தானியாவைப் பொருத்தவரையில், டேட்டிங் இணையதளங்களை பயன்படுத்துவது மட்டுமல்ல, அவற்றில் போலியான பெயரில் உலாவுவதும் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகனின் முதல் பிறந்தநாளுக்கு ஹெலிகொப்டரில் இருந்து மலர் தூவிய தொழிலதிபர் : இன்ப அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!!

ஹெலிகொப்டரில் இருந்து மலர் தூவிய தொழிலதிபர்

தமிழகத்தில் தொழிலதிபர் ஒருவர், தனது மகனின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவியது பரபரப்பை ஏற்படுத்தியது. கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கணேஷ்(50). கொற்கையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளைக் கொண்டு, இவர் பால் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார்.

மேலும், சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றையும் இவர் வைத்துள்ளார். மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று, ஹெலிகாப்டர் இறங்கும் தளமும் கணேஷ் அமைத்துள்ளார். இவரது மனைவி அகிலா. நீண்டகாலமாக இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில், கடந்த ஆண்டு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தவமிருந்து பிறந்த குழந்தை என்பதால், அவனது முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, தங்களது முக்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்த கணேஷ், ஸ்ரீநகர் காலனி அருகே மண்டபம் ஒன்றில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினார். அப்போது திடீரென ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறந்து வந்து, கணேஷின் மகன் அர்ஜூன் மற்றும் விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் மீது மலர்களைத் தூவியது.

திடீரென மலர்கள் தூவப்பட்டதால் அங்கிருந்தவர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறப்பதைக் கண்டு குழப்பமடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, தங்களது சொந்த ஹெலிகாப்டர் மூலம் தனது மகனின் பிறந்தநாளுக்காக மலர் தூவ ஏற்பாடு செய்ததும், அதற்காக கணேஷ் உட்பட அவரது உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி வாங்கியதும் தெரிய வந்தது. இதனை கும்பகோணம் வருவாய் கோட்டாச்சியர் அப்பகுதி மக்களுக்கு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் : 5 பேர் பலி, பலர் படுகாயம்!!

துப்பாக்கி பிரயோகம்

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய நகரங்களில் ஒன்றான டார்வினியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அனர்த்தம் காரணமாக ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டார்வின் நகரின் மையப்பகுதியில் இன்று பிற்பகல் 6 மணி முதல் இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 45 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்டவர் அண்மையில் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

முன்னதாக McMinn Street-இல் அமைந்துள்ள Palms Motel–க்குச் சென்ற தாக்குதல் மேற்கொண்ட ஆயுததாரி தப்பிச் சென்றுள்ளார். பின்னர் டார்வின் நகரின் Gardens Hill Crescent, Buff Club ஆகிய இடங்களில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். டார்வின் நகரில் இலங்கை, இந்தியாவை சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது நியாயமா…? உச்சக்கட்ட கோபத்தில் நாடாளுமன்றில் சீறிய ரிசாட்!!

தலதா மாளிகைக்கு முன்பாக நேற்றைய தினம் நான் பார்த்தேன் மூன்று முஸ்லிம் இளைஞர்களை காட்டு மிராண்டித் தனமாக அடித்து துன்புறுத்துவதை நான் பார்த்தேன். இது எந்த மார்க்கத்தில் இருக்கின்றது. இது தர்மமா? என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அவசர காலச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது நேற்றைய தினம் கண்டியில் ஒரு சாரார், வாருங்கள் இந்த நாட்டை அழிப்போம், கொல்லுவோம், பயங்காட்டுவோம், நாட்டின் நிம்மதியை தொலைப்போம், இந்த நாட்டை குட்டிச்சுவராக்குவோம், 83 போல மீண்டும் ஒரு இனக் கலவரத்தை தூண்டி இந்த நாட்டை நாசமாக்குவோம் என அழைக்கின்றார்கள்.

இதை எல்லாம் இராணுவத்தினர், பொலிஸார், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத் துறையினர் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இது நியாயமா என நான் கேட்கின்றேன். இதை ஏன் அனுமதிக்கின்றீர்கள் என கேட்கின்றேன்.

கடந்த ஈஸ்டர் தின ஐ.எஸ். தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அதனுடன் தொடர்புடையவர்களுக்கு உச்சப்பட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்குங்கள். அல்லது அதற்கும் மேல் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அப்பாவி முஸ்லிம்களை தண்டிக்காதீர்கள்.

பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்களை சிறையிலடையுங்கள், அவர்களுக்கு தண்டனை வழங்குங்கள். ஆனால் அப்பாவி முஸ்லிம்களை தண்டிக்காதீர்கள்.

தலதா மாளிகைக்கு முன்பாக நேற்றைய தினம் நான் பார்த்தேன் மூன்று முஸ்லிம் இளைஞர்களை காட்டு மிராண்டித் தனமாக அடித்து துன்புறுத்துவதை நான் பார்த்தேன். இது எந்த மார்க்கத்தில் இருக்கின்றது. இது தர்மமா?

நோன்பாளிகளை அவ்வாறு அடித்து துன்புறுத்துகின்றார்கள். அதற்கு தண்டனையும் இல்லை சட்டமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

குலைநடுங்க வைத்த அந்த 3 நிமிட வீடியோ : தாயார், சகோதரர் மரணத்தில் தந்தையை சிக்க வைத்த மகள்!!

தந்தையை சிக்க வைத்த மகள்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மனைவி மற்றும் சொந்த பிள்ளையைக் கொலை செய்தவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் சிக்கிய 3 நிமிட காணொளி காட்சியே முக்கிய குற்றவாளியை கைது செய்ய உதவியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ் பாபு, கீதாபாய் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். சுரேஷ் பாபு தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். முன்னர், சிட்பண்ட் நடத்தி வந்த இந்தத் தம்பதி, அதனால் ஏற்பட்ட கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்துள்ளனர். தொழிலில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட பல்வேறு இடங்களில் கடன் வாங்கி, அந்த கடனுக்கான வட்டியையும் செலுத்த முடியாமல் தவித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவரால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போனது. இதனையடுத்து தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளனர். தங்கள் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்துகொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.

திட்டமிட்டபடி தனது 12 வயது மகனைக் கொலை செய்துள்ளார் சுரேஷ் பாபு. இதை அவரின் மகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 3 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அந்தக் கொடூர சம்பவம் எப்படி அரங்கேறியது எனப் பதிவாகியுள்ளது.

சுரேஷ் பாபு தன் மகனைக் கொலை செய்கிறார். அவரின் 17 வயது மகள் தம்பியை விட்டுவிடுமாறு கதறுகிறாள். மகன் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் கீதாபாய் தலையால் சுவரில் முட்டிக்கொள்கிறார். இதையடுத்து, கீதாபாய் தன் மகளிடம் இருந்து செல்போனை பறித்துவிடுகிறார்.

இதன்பின்னர் கீதாபாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அடுத்து மகளைக் கொலை செய்ய முடிவுசெய்த சுரேஷ் பாபுவிடம் அவரது மகள் கெஞ்சியதை அடுத்து அவர் தற்கொலை முடிவைக் கைவிட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம்பக்கத்தினரை அழைத்து தமது மகனைக் கொலைசெய்துவிட்டு மனைவி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி காவல்துறையினரிடம் மனைவி தற்கொலை செய்துகொண்டதாகவேக் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பதிவான வீடியோவைப் பார்க்கும் வரை காவல்துறையினரும் சுரேஷ் பாபு கூறியதை நம்பியுள்ளனர். ஆனால், தந்தை செய்த கொடூரச் செயலை உறவினர்களிடம் அவரின் மகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்தே இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து சுரேஷ் பாபு மற்றும் அவரின் மகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் தந்தை மற்றும் மகள் இருவரும் முரணான தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் அந்த வீடியோவைக் காட்டிய பின்னர் சுரேஷ் பாபு நடந்தவற்றைக் கூறியுள்ளார். மகனைக் கொலை செய்ததாக அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், சிட்பண்ட் நிறுவனத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட கடன் வாங்கியதாகவும், கடன் சுமை மேலும் அதிகரித்ததால்.வேறு வழி தெரியவில்லை என காவல்துறை விசாரணையில் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்து வந்த குடும்பம்… இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல் : குவியும் பாராட்டு!!

இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல்

தமிழகத்தில் கணவனை இழந்து வறுமையில் தவித்து வந்த பெண்ணிற்கு இளைஞர் ஒருவர் செய்துள்ள உதவி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர், தினேஷ் சரவணன் (30). சென்னையில், ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவர், அப்துல் கலாம் மாணவர் முன்னேற்றச் சங்கத்தில் மாநிலச் செயலாளராக உள்ளார். இவர் அந்த அமைப்பின் மூலம் வேலூரைச் சேர்ந்த ஏழைகளுக்கு உதவிகளைச் செய்துவருகிறார்.

அரிசி, பருப்பு எனச் சில நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை நண்பர்களின் உதவியுடன் ஏழை குடும்பங்களுக்கு வாங்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில், வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில், வறுமையில் வாடும் சித்ரா (35) என்பவரின் குடும்பத்துக்கு இவர் இலவசமாகக் கழிவறை கட்டிக்கொடுத்திருக்கிறார்.

கணவரை இழந்து, மகள் மற்றும் மகனுடன் சிறிய வீட்டில் வசித்துவரும் சித்ரா, கழிவறை இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதை அறிந்த தினேஷ் சரவணன், இலவசமாக 37 ஆயிரம் மதிப்பில் கழிவறை கட்டிக்கொடுத்திருக்கிறார்.

இது குறித்து சித்ரா கூறுகையில், என் கணவர் இறந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. கணவர் இல்லாததால், நான் தான் வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து கொள்கிறேன். எனக்கு இரண்டு பிள்ளைகள், பெண் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். பையன் ஆறாம் வகுப்பு படிக்கிறாள்.

நான் வீட்டு வேலைசெய்றேன். மாசம் ஆயிரம் ரூபாய்தான் வருமானம் கிடைக்குது. சாப்பாட்டுக்கே வழியில்ல. பாத்ரூம் இல்லாம பொண்ண வச்சிக்கிட்டு ரொம்பவும் கஷ்டப்பட்டேன். காலை விடிவதற்கு முன்னாடியும், இரவு நேரத்தில் மட்டுமே திறந்த வெளியில் சென்று கொண்டிருந்தோம்.

அரசாங்கத்திடம் கேட்ட போது, இலவச கழிவறை திட்டத்துல இப்ப கட்டமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் இப்போது அந்த தம்பி பெரிய கழிவறையா கட்டி கொடுத்திருக்கார், அவர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினேஷ் சரவணன் கூறுகையில், கழிவறை கட்டி தருவதற்கு நண்பர்கள் முடிந்தளவிற்கு உதவி செய்தார்கள். எஸ்ட்டிமேட் போட்டுத்தான் கழிவறை கட்டுற பணியைத் தொடங்கினோம்.
ஹாலோ பிளாக் கல்லை லோடுவண்டியில ஏத்தி இறக்க கூலி கேட்டதால், நாங்களே ஏத்தி, இறக்கினோம்.

மணலுக்கு தட்டுப்பாடு இருக்கிறதுனால, சத்துவாச்சாரி பொலிசாரிடம் உதவி கேட்டோம். பொலிசார் சேவை மனப்பான்மையோடு பறிமுதல்செய்து வெச்சிருந்த ஒரு யூனிட் மணலைக் கொடுத்து உதவி செய்தார்கள் என்று கூறி முடித்தார்.

வவுனியாவில் கடும் வறட்சியால் வீதிக்கு வந்த முதலை!!

வீதிக்கு வந்த முதலை

வவுனியா மடுகந்தை பகுதியில் வீதிக்கு வந்த 7 அடி நீளமான முதலையால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டது. வவுனியா மடுகந்தை அம்பலாங்கொட பகுதியில் வசிக்கும் மக்கள் காலை வீதியில் பயணித்த போது 7 அடி நீளமான முதலை ஒன்றை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊர்மக்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை வந்த மடுகந்தை பொலிசார், வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்தனர். அவர்கள் முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.

தச்சன்குளத்தில் இருந்தே நீர்நிலை தேடி இல் முதலை ஊர்மனைக்குள் வந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக வவுனியாவில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக குளங்களில் உள்ள நீர் வற்றிக்காணப்படுவதனாலே இந்நிலையேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண்!!

தூக்கில் தொங்கிய பெண்

கோவையில் அரசு மருத்துவமனை செவிலியர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதால், கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோவையை சேர்ந்த முரளி என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக பாண்டி மீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

பாண்டி மீனா, பல்லடம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் வரதட்சணை கேட்டு முரளி கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் கூட மீனா தனது பெற்றோரிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் வாங்கி முரளியிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் கடைக்கு சென்றுவிட்டு முரளி வீடு திரும்பியபோது, மீனா தூக்கில் தொங்கியதாகவும், காப்பாற்ற முயற்சி செய்தும் அவர் இறந்துவிட்டதாக, அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விரைந்து வந்த மீனாவின் பெற்றோர், உடலில் காயம் இருப்பதாகவும், முரளி மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். பின்னர் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

ஆண் நண்பரை சந்திக்க அமெரிக்காவுக்கு சென்ற பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

தனது ஆண் நண்பரை சந்திக்கச் சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர், கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் காவலில் அடைக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.

எஸ்ஸெக்சை சேர்ந்த Sophie Frampton (30), தனது ஆண் நண்பரை சந்திப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, கைவிலங்கிடப்பட்டு, உடை களையப்பட்டு சோதிக்கப்பட்டதாகவும், தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படாமல், மின்சாரம் பாய்ச்சப்பட்டு கொல்லப்படப்போவதாக மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Sophie நான்காவது முறையாக தனது நண்பரை காணச்சென்றிருந்தாலும், தான் Estaவுக்கு விண்ணப்பித்தபோது வேறு முகவரியை கொடுத்ததாகவும் ஒப்புக் கொண்டார்.Estaவுக்கு ஒரு முறை விண்ணப்பித்தால் போதும் என Sophie தவறாக புரிந்து கொண்டதால் பிரச்சினை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Esta என்பது விசா இன்றி அமெரிக்காவில் 90 நட்கள் தங்குவதற்கான ஒரு ஏற்பாடாகும். இந்த பிரச்சினை காரணமாக Sophieயை கைது செய்த அமெரிக்க பொலிசார், அவரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதாகவும், அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த கழிவறை பயன்படுத்தப்பட முடியாத நிலைமையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவசரப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி : 44 நாட்களுக்கு பின் வெளியான உண்மை!!

தற்கொலை செய்துகொண்ட மாணவி

தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக வந்த முடிவால் 44 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மாணவி, தற்போது மறுகூட்டலில் தேர்ச்சி பெற்றிருப்பதாக வந்துள்ளது. ஐதராபாத்தில் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 18ம் திகதியன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெறவில்லை என 26 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர்.

இவர்களை போலவே அனாமிகா அருதுளா (17) என்கிற மாணவியும் தன்னுடைய பாட்டி வீட்டில் இருக்கும் போது தற்கொலை செய்துகொண்டார். தெலுங்கு மொழி பாடத்தில் 20 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்ததாக முடிவு வெளியாகியிருந்தது. அதனை மறுகூட்டல் செய்வதற்கு, அனாமிகாவின் சகோதரி உதயா விண்ணப்பித்திருந்தார். அதற்கான முடிவுகள் திங்கட்கிழமையன்று வெளியானது. அதில், அனாமிகா 48 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாக வந்துள்ளது.

இதனை பார்த்து கோபமடைந்துள்ள அவருடைய சகோதரி, என்னுடைய தங்கை தற்கொலை செய்துகொள்ளவில்லை. இது நிச்சயமாக அரசாங்கம் செய்த கொலை. அவள் இறந்ததை கேள்விப்பட்டதிலிருந்து என்னுடைய அம்மா, அப்பா மனம் உடைந்து போயுள்ளனர். என் சகோதரி திரும்பி வரமாட்டாள் என்று எனக்கு தெரியும்.

ஆனால் அவளுக்காகவும் என் பெற்றோர்களுக்காகவும் நான் நீதி கேட்டு போராடுவேன் என தெரிவித்துள்ளார். இந்த விவகாரமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தெலுங்கானா இடைநிலை கல்வி பொறுப்பாளர் அசோக் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அதில், அனாமிகாவின் தற்கொலைக்கு எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கிறோம். மறுகூட்டலில் அனாமிகா 21 மதிப்பெண்கள் மட்டும் தான் பெற்றிருக்கிறார். அதற்கான சான்றுகளையும் நாங்கள் வழங்க தயார். 48 என தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தளராத மனம் உடையவர்களாம் : உங்கள் ராசியும் உள்ளதா?

உங்கள் ராசியும் உள்ளதா?

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணமுடையவர்கள். அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த தளராத மனதுடன் இருப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.

மேஷம் : மேஷ ராசிக்காரர்கள் பதில்களை பெறுவதில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள், மற்ற எதையும் பற்றி இவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள். அந்த பதிலில் மட்டுமே அவர்களின் முழு கவனமும் இருக்கும். அவர்களின் பிடிவாதத்தால் அவர்கள் எளிதில் அதை விடமாட்டார்கள்.

அவர்களுக்கான பதில் கிடைத்தே ஆகா வேண்டும் அதன் பின்விளைவுகளை பற்றி அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். சாதாரணமாக தொடங்கும் இவர்களின் தேடல் இறுதியில் இவர்களின் இலட்சியமாக மாறிவிடும்.

கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு பிடிக்காத ஒன்று ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் இருப்பது. அது சிறிதாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி அவர்களுக்கு அதன் மீது ஆர்வம் வந்துவிட்டால் அதற்கான பதிலை தெரிந்து கொள்ளும்வரை அதைப்பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள். வீட்டிற்கு சென்று குழப்பமான மனநிலையில் இருப்பதை விட நேரம் செலவழித்து அந்த மர்மத்தை தெரிந்து கொண்டு நிம்மதியாக இருப்பது நல்லது என்று நினைப்பவர்கள் இவர்கள்.

சிம்மம் : இவர்களுக்கு சிற்றலை விளைவு சுத்தமாக பிடிக்காது.சிற்றலை விளைவு என்பது எந்தவொரு பெரிய விஷயமும் ஒரு சிறிய விஷயத்தில் இருந்துதான் தொடங்கும் என்பதாகும். ஒரு விஷயத்தை கண்டு பிடிக்க வேண்டுமென்றாலோ அல்லது மாற்றம் செய்ய வேண்டுமென்றாலோ அதனை முடிக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள். தைரியமான இவர்கள் செயலில் ஈடுபட்டு தீர்வு ஏற்பட காரணமாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் பார்த்து கொள்வார்கள் என்றோ அல்லது சோம்பேறித்தனத்தாலோ ஒருபோதும் தொடங்கிய செயலை விடமாட்டார்கள்.

மிதுனம் : யாராவது குழப்பமாக இருந்தால் அதனை தீர்த்து வைக்க மிதுன ராசிக்காரர்கள் அங்கு நிச்சயமாய் இருப்பார்கள். சரியான கேள்வியை கேட்டு, என்ன செய்ய வேண்டுமென்று நன்கு தெரிந்து அதனை எப்படி முடிக்க வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். ஒருவரின் பொய்கள் மற்றவர்களை காயப்படுத்துவதை இவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வரை இவர்கள் விடமாட்டார்கள்.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் ஒருபோதும் மற்றவர்களை பொய் சொல்ல அனுமதிக்க மாட்டார்கள். அதனை பொய் என்று நிரூபிக்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். உண்மையை கண்டுபிடிக்க எவ்வளவு காலம் தேவைப்பட்டாலும் பரவாயில்லை அதற்காக காத்திருப்பார்கள். ஒரு செயலில் ஈடுபட்டு விட்டால் இவர்கள் மிகவும் உறுதியானவராக மாறிவிடுவார்கள். முடிவை கண்டுபிடிக்க இவர்கள் பிடிவாதமாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்கள்.

வவுனியாவில் குடும்பப் பெண் மீது வட்டிக்கு பணம் கொடுத்தவர் தாக்குதல் முயற்சி!!

தாக்குதல் முயற்சி

வவுனியாவில் வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர் வீடு புகுந்து குடும்ப பெண் ஒருவரை தாக்க முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று (04.06) வவுனியா திருநாவற்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

வட்டிக்கு பணம் கொடுத்த நபர் குறித்த பெண்ணின் கணவன் வீட்டில் இல்லாத சமயத்தில் பணம் கேட்க சென்று குறித்த குடும்ப பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி உடனடியாக பணத்தை செலுத்து என கூறி தாக்க முயற்சி செய்ததாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வியாபாரம் நிமித்தம் கடன் பெற்றிருந்த நிலையில் வியாபாரம் நட்டமடைந்நததில் குறித்த பணத்தை செலுத்த தாமதமானதினால் பணம் கொடுத்த நபர் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

வவுனியாவில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அடாவடித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதும் அவர்கள் மீது பொலிசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தயங்கி வருகின்றமை வட்டிக்காரர்களின் அட்டகாசம் அதிகரிக்க காரணமாக இருப்பதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறித்த முறைப்பாடு தொடர்பாக வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு : வருட இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்!!

நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்

இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ் வருட இறுதிக்குள் குறித்த இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் வெளியிடப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இதில் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

15 வயதுக்கு மேற்பட்ட சகலரும், இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற வேண்டும் என, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச மக்களுக்காக பெண்கள் செய்த அட்டகாசம்!!

ரிதிமாலியெத்த மற்றம் மஹியங்கனை பிரதேச சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் மூவர், நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஹாவலி எல்லையில் வசிக்கும் 47 குடும்பங்களை சேர்ந்த மக்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களை தங்கள் இடங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு மஹவலி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு குறித்த உறுப்பினர்கள் மூவரும் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கடிதம் மூலம் வாக்குறுதியளித்த பின்னர் மூன்று உறுப்பினர்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

வவுனியா புதூரில் விபத்தில் சிக்கி மூவர் காயம்!!

விபத்தில் மூவர் காயம்

வவுனியா புதூரில் விபத்தில் சிக்கி மூவர் காயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் இரவு 7.40 மணியளவில் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியொன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் படுகாயமடைந்து நிலையிலும் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவர் உட்பட இருவரும் காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டியின் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் விபத்து குறித்து புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் நோயாளர் காவு வண்டி சேவையின் துரித சேவையின் காரணமாகவே காயமடைந்தவர்கள் விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடிந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்முன்னே பறிபோன 3 உயிர்கள் : கோர சம்பவம்!!

பறிபோன 3 உயிர்கள்

தெலுங்கானாவில் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்த போது மச்சினிகளுடன் குளியல் போட்டு கொண்டிருந்த இளைஞர் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அவினாஷ், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பாக திவ்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஐதராபாத்தில் வசித்து வரும் இருவரும் சில நாட்களுக்கு முன்பு திவ்யாவின் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அங்கு தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மச்சினிகள் சங்கீதா, சுமலதா ஆகியோருடன் நர்மதா ஆற்றின் பொம்மக்கூறு அணை கால்வாய் அருகே சென்றுள்ளார். கரையோரத்தில் நின்று திவ்யா வீடியோ எடுக்க, அவினாஷ் தன்னுடைய மச்சினிகளுடன் தண்ணீரில் இறங்கி விளையாட ஆரம்பித்துள்ளார்.

அப்போது திடீரென அவினாஷ் நீருக்குள் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற சங்கீதா, சுமலதா இருவரும் அடுத்தடுத்து நீருக்குள் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யா, உதவி கேட்டு கூச்சலிட ஆரம்பித்துள்ளார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் கணவாயில் இறங்கி மூன்று பேரையும் சடலங்களாக மீட்டெடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.