நீண்ட நேரம் செல்போனில் பேசிய 17 வயது சிறுவனுக்கும் 13 வயது சிறுமிக்கும் திருமணம்!!

சிறுவனுக்கும் சிறுமிக்கும் திருமணம்

நீண்ட நேரம் செல்போனில் பேசியதால், இரு குடும்பத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையை குறைக்க 17 வயது சிறுவனுகும், 13 வயது சிறுமிக்கும் கிராம பஞ்சாயத்து சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னுடைய அத்தை- மாமா வீட்டில் தங்கி இடையிலை மாணவராக பயின்று வருகிறார். அதேபகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவியுடன் இவர் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.

இதனால் இரு குடும்பத்தாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக கடந்த 30ம் திகதியன்று கிராம பஞ்சாயத்து கூடியுள்ளது.

அதில் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கிராம பஞ்சாயத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்த நாளே திருமணமும் நடைபெற்று, இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு எதிராக குழந்தைகள் நல வாரியம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமைப்பின் தலைவர் ராஜ் குமார் வர்மா, இந்த திருமணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளோம். தகவல்களை சரிபார்த்த பின் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்த மருமகன்!!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் குடும்ப தகராற்றில் மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்த மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள என்.டி.பி.சி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றும் 33 வயதான நபரை, சைபர் கிரைம் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். மாமியாரின் மொபைல் எண்ணை, ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்ததாக அவர் கைது செய்யப்படுள்ளார்.

கைதான நபருக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மனைவி மற்றும் மாமியாருடன் அவருக்கு குடும்ப விவகாரங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும், தனக்கு போதிய மரியாதை தரவில்லை என்று ஆத்திரமடைந்த அவர், மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளம் ஒன்றில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக, கைதான நபரின் 59 வயது மாமியாருக்கு அடிக்கடி அழைப்புகள் வந்துள்ளது.

அப்போது, எதிர்புறம் இருந்தவர்கள் ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும், அடிக்கடி போன் செய்து தொல்லை செய்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், சைபர் கிரைம் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், பெண்ணின் மருமகன் தான் ஆபாச தளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளார் என்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து, அவரை கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எல்லாவற்றையும் மூடித்தான் இருக்கிறேன், நீங்கள் சரியாக பாருங்கள் : ரசிகனின் டுவிட்டிற்கு நடிகை பதிலடி!!

திரிஷ்யா ரகுநாத்

ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற மலையாள படங்களில் நடித்தவர் நடிகை திரிஷ்யா ரகுநாத். சமீபத்தில் தண்ணீரில் இருப்பது போல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ஒருவர், இப்படி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ஏன் உங்களது இமேஜை கெடுத்துக் கொள்கிறீர்கள், ஒரு சகோதரனின் அட்வைஸ் என கூறியிருந்தார்.

அதற்கு நடிகை, புகைப்படத்தில் எல்லாவற்றையும் முடிந்தவரை மூடிக்கொண்டு தான் இருக்கிறேன். குறிப்பாக மார்பகத்தையும் மூடிதான் உள்ளேன், அதை வெட்டி எறிய முடியாது. எனக்கு அட்வைஸ் செய்வதற்கு பதில் நீங்கள் பார்க்கும விதத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.

அவள் என்னிடம் அப்படி சொன்னாள்… கொலை செய்தேன் : டிக் டாக் பெண் கொலை விவகாரத்தில் கணவன் சொன்ன காரணம்!!

பெண் கொலை

தமிழகத்தில் டிக் டாக் ஆப்பில் தொடர்ந்து வீடியோ பதிவேற்றம் செய்து வந்த மனைவியை கணவன் கொலை செய்த நிலையில், ஏன் அவரை கொலை செய்தேன் என்று கணவன் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு நந்தினி (28) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

டிக் டாக்கின் மீது மோகம் கொண்ட நந்தினி தொடர்ந்து அந்த ஆப்பில் வீடியோ பதிவேற்றம் செய்து வந்ததால், ஆத்திரத்தில் கனகராஜ் அவரை கொலை செய்துவிட்டதாக செய்தி வெளியானது. இதனால் கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், நந்தினி போனில் அதிகமாகப் பேசி வந்ததைக் கண்டித்ததால் எங்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நந்தினி தனது டப்ஸ்மாஸ் விடியோக்களை அவ்வப்போது இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்தார். இது எனக்குப் பிடிக்கவில்லை.

இதனால் நாங்கள் பிரிந்து வாழ்ந்தோம். குழந்தைகளுக்காக மீண்டும் சேர்ந்து வாழச் சொல்லி உறவினர்கள் அறிவுறுத்தியால் சேர்ந்து வசித்தோம். ஆனால் நந்தினி எப்போதும் போனில் விடியோ பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை அன்று நந்தினியை நான் போனில் தொடர்புகொண்டபோது 1 மணி நேரத்துக்கும் மேலாக யாருடனோ இடைவெளியில்லாமல் பேசிக் கொண்டே இருந்தார்.

இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர் பணிபுரியும் கல்லூரிக்கு நேரில் சென்று கேட்டபோது, நான் யாருடன் வேண்டுமானாலும் பேசுவேன், எப்படியும் இருப்பேன். அது என் இஷ்டம். நீ கேட்கக் கூடாது என என்னைத் திட்டினார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் என் மனைவியைக் குத்திவிட்டுத் தப்ப முயன்றேன். அங்கிருந்தவர்கள் என்னைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டனர் என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பொலிசார் கனகராஜை நீதித்துறை நடுவர் மன்றம் எண்- 7 இல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சுழற்சி முறையிலான போராட்டம் வியாழேந்திரனால் கைவிடப்பட்டது!!

சுழற்சி முறையிலான போராட்டம்

மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனால் மூன்றாவது தினமாக இன்று மேற்கொள்ளப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று மாலை கைவிடப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ததையடுத்து போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

தேகியத்தன்கண்டி விகாரையில் இருந்து வருகை தந்த பிக்குகளினால் அனுஸாசனம் ஓதப்பட்டு வியாழேந்திரன் எம்.பிக்கு நீர் வழங்கப்பட்டதுடன் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்றைய போராட்டத்தில் பெருமளவான பௌத்த பிக்குகள் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

மட்டக்களப்பில் மற்றுமொரு உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த மோகன் டிலோஜன் தமது போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் மாணவர் அமைப்பின் தலைவர் மோகன் டிலோஜன் நேற்று மாலை சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து தமது சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முடித்துக்கொள்வதாக டிலோஜன் அறிவித்திருந்தார்.

அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகன் ஆகியோர் நீர் வழங்கி போராட்டத்தினை நிறைவு செய்திருந்தனர்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் இதுவரை 2289 பேர் கைது!!

2289 பேர் கைது

தொடர் குண்டுதாக்குதல் இடம்பெற்ற ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து இன்று வரை 2,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தீவிரவாத செயல்கள் செய்தமை மற்றும் சமூகத்தில் அமைதியின்மையை தோற்றுவித்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 423பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, 211பேர் பொலிஸாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் 1655 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுப் பதவிகளை துறந்தாலும் அரசுக்கான ஆதரவு தொடரும் : ஹக்கீம்!!

அமைச்சுப் பதவிகளை துறந்தாலும் , அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த இடமளிக்கமாட்டோம். நாடாளுமன்றத்தில் பின்னிலை எம்.பிக்களாக செயற்பட்டு அரசுக்கான ஆதரவை வழங்குவோம் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து பிரதமருடனும், அமைச்சர்களுடனும் கலந்துரையாடினோம்.

பிரதமருடன் பேசியதன் பின்னர் பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்யும் முடிவை அறிவித்தோம். பிரதமருடனான சந்திப்பின் பின்னர் எம்மால் சுயாதீனமாக எடுக்கப்படும் முடிவுக்கு ஆதரவளிக்கப்படும் என அவர்கள் அறிவித்தனர்.

அத்துடன், முஸ்லிம் அரசியல்வாதிகளை மையப்படுத்தி நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் இரத்த கலரியை உருவாக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர்.

எனவே, நாட்டின் நலன், அமைதி உட்பட மேலும் பல காரணங்களைக் கருத்திற்கொண்டே நாம் இந்த முடிவை எடுத்தோம். சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக நிற்கின்றேன்.

அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களும் வதைக்கப்படுகின்றனர். இவை நிறுத்தப்படவேண்டும். அனைத்துவித நடவடிக்கைகளும் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறவேண்டும் என்றார் ஹக்கீம்.

வவுனியாவில் வரலாற்று சிறப்புமிக்க புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா இராணுவ பாதுகாப்புடன்!!

புதூர் நாகதம்பிரான்

வரலாற்று சிறப்புமிக்க புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

காலை முதல் பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்தி வருவதுடன் காவடிகள், பறவைக்காவடிகள், தூக்குக்காவடிகள், என தமது நேர்த்தியைச் செலுத்தும் பக்த அடியார்கள் அலையெனத்திரண்டு வருகின்றதை அவதானிக்க முடிந்துள்ளது.

இன்று காலையிலிருந்து மக்கள் புளியங்குளம் நகாதம்பிரானை வழிபடுவதற்காகச் சென்றுகொண்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது. பொலிசார், படையினர், விஷேட அதிரடிப்படையினர், ஆலய பரிபாலனசபையினரின் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றுவருகின்றது.

பிற மாவட்டங்களிலிருந்து பக்த அடியார்கள் இ.போ.ச சாலை பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் சேவையினை மேற்கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிந்துள்ளது.

வியாபார நிலையங்களில் மின்னொளி பட்டெரிக்கின்றது. அப்பகுதியெங்கும் வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றது. இன்று இரவு அதிகளவான பக்த அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் கூட்டாக அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகினர்!!

முஸ்லீம் அமைச்சர்கள்

அலரி மாளிகையில் தற்போது நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டார்.

அரசாங்கத்தில் வகிக்கும் அமைச்சர் பதவிகளை அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் உதறியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தனர்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளை வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

நான்கு அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதியமைச்சர் என ஒன்பது முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறப்பதாக அறிவித்தனர்.

அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹீர் மௌலானா, பைசல் காசீம், அமீர் அலி ஆகியோர் பதவி துறந்தனர்.

வவுனியாவிலிருந்து புதூர் நோக்கி விசேட பேரூந்து சேவை!!

விசேட பேரூந்து சேவை

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விஷேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தனியார் மற்றும் அரச பேரூந்தின் ஒத்துழைப்போடு இச் சேவை நடைபெறுகின்றது. இன்று (03.06.2019) காலை முதல் நாளை 04.06.2019 காலை வரை இந்த விஷேட பஸ் சேவை நடைபெறவுள்ளது.

கடந்த வருடங்களில் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் விழாவினைக் காண புதூர் நோக்கி வருகை தந்திருந்த போதிலும் நாட்டில் நிலவும் சீரற்ற நிலமை காரணமாக தற்போது பக்தர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதினை காணக்கூடியதாகவுள்ளது.

மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண் : கொதித்தெழும் இணையத்தளவாசிகள்!!

கொலை செய்யப்பட்ட இளம்பெண்

தென் ஆபிரிக்காவில் மார்பங்கங்கள் அறுத்து எடுக்கப்பட்டு கொடூரமான முறையில் 21 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 19ம் திகதியன்று தென் ஆப்பிரிக்காவின் Dagbreek பகுதியில் இளம்பெண்ணின்ஒருவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இளம்பெண்ணின் முகம் எரிக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்ததால் அடையாளம் காணமுடியாமல் தடுமாறினார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 21 வயது நளடி லெத்தோபா என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் சென்று பார்த்த போது அந்த இளம்பெண்ணின் கழுத்தில் கத்தி சொருகியபடியே இருந்தது. மார்பகங்கள் இரண்டும் அறுத்து எடுக்கப்பட்டு, கீழ் பகுதியும், முகமும் தீயினால் கொளுத்தப்பட்டிருந்தது.

சந்தேக நபராக, லெத்தோபாவின் பள்ளியில் பயின்று வரும் 19 வயதான ஓபெட் லெசோரோ என்கிற மாணவரை கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது தென் ஆப்பிரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், #justicefornaledi என்கிற ஹேஸ்டேக் மூலம் இணையதளவாசிகள் ட்விட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.

5 பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட ஹீரோ : குவியும் பாராட்டு!!

ரூப் அகமது தர்

ஜம்மு-காஷ்மீரில் 5 பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நபரின் வீரத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியைச் சேர்ந்த ரூப் அகமது தர், பகல்ஹாம் பகுதியில் சுற்றுலா வழிகாட்டியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு வெளிநாட்டுக்காரர்கள் உட்பட வந்த ஐந்து சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்தனர். அவர்களுடன் ரூப் அகமதுவும் பயணித்த நிலையில், காற்று வேகமாக வீசியதால் படகு திடீரென்று கவிழ்ந்தது. இதில் பயணிகள் அனைவரும் ஆற்றில் விழுந்தனர். அதனைத் தொடர்ந்து, பதறிய அகமது தர் உடனடியாக ஆற்றில் குதித்து அனைவரையும் பத்திரமாக காப்பாற்றினார்.

ஆனால், அவர் திடீரென ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்டார். மேலும், அப்போது அவர் பாதுகாப்பு கவசம் அணியாததால், அவரால் ஆழத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

அதன் பின்னர் பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், அகமது தர்-ஐ இரவு வரை தேடியும் அவர் உடல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பாலத்தின் அருகே அவரது உடல் நேற்று கிடைத்ததை, மீட்ட பேரிடர் மீட்புக்குழுவினர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய ரூப் அகமதுவின் வீரத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், அவரது துணிச்சலைப் பாராட்டி காஷ்மீர் நிர்வாகம், ரூ.2 லட்சத்தை ரூப் அகமது குடும்பத்திற்கு வழங்கியுள்ளது.

உலகின் முதல் பறக்கும் கார் : மணிக்கு 150கிமீ வேகத்தில் பயணம்!!

பறக்கும் கார்

அமெரிக்காபறக்கும் கார்வைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 644 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கக் கூடிய வகையிலான, உலகின் முதல் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.

கலிபோர்னியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலெஜிஸ் நிறுவனம், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்த பறக்கும் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஸ்கை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார், 5 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஒருமுறை எரிபொருளை நிரப்பினால், 644 கிலோ மீற்றர் வரை பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த காரில் ஒரு மணிநேரத்திற்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும். ஹெலிகாப்டரின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த காரை, அலைகா நிறுவனம் முதலில் விமானி இயக்கும்படியான மொடலாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, முழுமையான Automation கொண்ட மொடல் பிறகு அறிவிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் மொத்த எடை 454 கிலோ ஆகும். இந்த கார் குறித்து தயாரிப்பு நிறுவனத் தரப்பில் கூறுகையில்,

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, அதே வேளையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதை வாடகை காராகவும், ஆம்புலன்ஸாகவும் மற்றும் அவசரக்கால பயன்பாட்டுக்கும் இதைப் பயன்படுத்தலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் மாசு ஏற்படுத்தாது என்பதால், ஸ்கை காருக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தரை மாற்றக்கோரி அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு!!

மகஜர் கையளிப்பு

வவுனியா பண்டாரிகுளம் பகுதியை சேர்ந்த சமூர்த்தி உத்தியோகத்தரை மாற்றித் தருமாறு கோரி மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ. ஹனீபாவிடம் மகஜர் ஒன்று இன்று (03.06) கையளிக்கப்பட்டது.

பண்டாரிகுளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சமூர்த்தி பயனாளிகள் தங்கள் கிராமத்தின் சமூர்த்தி உத்தியோகத்தர் பக்கசார்பாக நடந்துகொள்வதாகவும், சமூர்த்தி பயனாளிகளை மரியாதை குறைவாக நடாத்துவதாகவும் தெரிவித்து வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தையடுத்து சமூர்த்தி பயனாளிகள் கலைந்து சென்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது!!

உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு

அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி விலகுமாறு கோரி கடந்த நான்கு நாட்களாக கண்டியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல போராட்டங்கள் இடம்பெற்றிருந்த வேளையில்,

வவுனியா A9 வீதியில் குடியிருப்பு துர்க்கை அம்மன் ஆலய சந்தியில் இன்று காலை VT கோபால் என்பவர் அத்துரலிய தேரருக்கு ஆதரவாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்நிலையில் ஆளுநர்களான அசாத் சாலி, மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவி விலகலின் பின் இன்று பிற்பகல் 3மணியளவில் கோபால் மற்றும் அவருடன் கூட இருந்தவர்களும் தமது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

வவுனியாவில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு பெருகும் ஆதரவு!!

உண்ணாவிரதம்

அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்க வேண்டும் என தெரிவித்து கண்டியில் தலதா மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று (03.06.2019) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்ட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக தேவராஜா கோபாலகிருஸ்ணன் என்பவரது தலைமையில் அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் நடவடிக்கையை கண்டித்தும், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் உப தவிசாளர் வசந்த மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.