கால்வாயில் மூழ்கிய காரில் இளைஞனின் சடலம்!!

பொலிகஸ்ஹோவிட்ட பகுதியில் விருந்தகம் ஒன்று அருகில் கால்வாய் ஒன்றில் கவிழ்ந்த சிற்றூர்தியொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

29 வயதான குறித்த இளைஞர் தெஹிவளை பகுதியை சேர்ந்தவருடன், சில நாட்களுக்கு முன்னர் மேலும் சிலருடன் விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக குறித்த விருந்தகத்திற்கு சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த இளைஞர் மீண்டும் வீடு திரும்பாமை காரணமாக தாய் உள்ளிட்ட உறவினர்கள், காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

23 வயது யுவதியை பெற்றோல் ஊற்றி எரித்த நபருக்கு நேர்ந்த கதி!!!

பொலன்னறுவை – புலஸ்திபுர பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை கொலை செய்து எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த மேற்படி யுவதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் கடந்த 12ம் திகதி யுவதியினது என சந்தேகிக்கப்படும் எரியூட்டப்பட்ட உடற்பாகங்கள் பொலன்னறுவை – லக்‌ஷ உயன பிரதேசத்தின் வயலொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டன.

அதன்படி , மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த அவரது காதலன் என கூறப்படும் திருமணமான நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்படி யுவதியை கொலை செய்து பெற்றோல் ஊற்றி எரித்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக பொலன்னறுவை காவற்துறையினர் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டு சில மாதங்களில் தனது காதலன் திருமணமான ஒரு குழுந்தையின் தந்தையென குறித்த யுவதிக்கு தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேகக்கட்டுபாட்டை இழந்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளான காணொளி!!

முச்சக்கர வண்டி விபத்து

கட்டான மிரிஸ்வத்தை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வேக கட்டுபாட்டினை இழந்து சிற்றூர்ந்து ஒன்றுடன் மோதுண்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சிற்றூர்ந்துடன் மோதிய காட்சி, சி. சி.ரீ.வி பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. குறித்த காணொளி இதோ…

வெசாக் தினத்தில் இலங்கையர்களை நெகிழவைத்த ஜேர்மன் பிரஜைகள்!!

ஜேர்மன் பிரஜைகள்

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர், வெசாக் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வெசாக் மென்பானம்(தன்சல்) வழங்கி வைத்துள்ளன்ர.

சுற்றுலாப் பயணிகளின் செலவில் தம்புள்ள பகுதியில் உள்ள சில உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் இந்த தானசாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கரி தம்புள்ள ராஜ மகா விஹாரையில் தங்கள் பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு திரும்பி வந்த பக்தர்களுக்கு அவர்கள் மென்பானங்கள் வழங்கிவைத்தனர்.

மேலும் சமீப காலங்களாக நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற சூழ்நிலைகளை தொடர்ந்தும் வெசாக் பண்டிகை வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின்போது வழமை போன்றே பல வெளிநாட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளம் திருநங்கையை உயிராக காதலித்த இளைஞர்… இறுதியில் நடந்த விபரீதம்!!

திருநங்கையை காதலித்த இளைஞர்

இந்தியாவில் இரண்டு இளைஞர்கள் இரண்டு திருநங்கைகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கேயார் சவுகான் (20). இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.

சவுகான் ஆட்டோவில் சில மாதங்களுக்கு முன்னர் பயலி என்ற திருநங்கை பயணம் செய்தார். அப்போது இருவரும் நண்பர்கள் ஆனார்கள், பின்னர் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து தனது வீட்டில் இது குறித்து சவுகான் கூறினார். ஆனால் திருநங்கையை சவுகான் திருமணம் செய்வதை அவர் குடும்பத்தார் விரும்பாத நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருநங்கையாக இருந்தாலும் அவர் எனக்கு அழகு தான் என கூறிய சவுகான், பயலியை திருமணம் செய்ய முடிவெடுத்தார். அதன்படி கடந்த மாதம் 31ஆம் திகதி சவுகான் பயலியை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இது குறித்து தனது குடும்பத்தாரிடம் சொன்னார். முதலில் இதை ஏற்காத குடும்பத்தார் தற்போது இருவரையும் ஏற்று கொண்டார்கள். இது குறித்து திருநங்கை பயலி கூறுகையில், நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. என் கணவரின் தாய் தற்போது என்னுடன் சகஜமாக பேசுகிறார் என கூறியுள்ளார். இதே போல ரத்வா (30) என்ற நபர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சியை காண சில மாதங்களுக்கு முன்னர் சென்றார்.

அப்போது அங்கு பணிபுரிந்த ரீனா என்ற திருநங்கையை பார்த்த உடனேயே ரத்வாவுக்கு பிடித்து விட்டது. இதையடுத்து அவரை பார்ப்பதற்காகவே அடிக்கடி சர்க்கஸுக்கு ரத்வா சென்றார். பின்னர் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் ரீனா மற்றும் ரத்வாவை பேச வைத்தார்.

இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கினர், பின்னர் இது குறித்து ரத்வா தனது குடும்பத்தாரிடம் சொன்ன போது முதலில் ஏற்கவில்லை. பின்னர் சமாதானம் அடைந்த குடும்பத்தார் ரத்வா திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க ரத்வா – ரீனா திருமணம் சமீபத்தில் நடந்துள்ளது.

திடீரென துப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண் : பயத்தில் 2வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்!!

அமெரிக்காவில் இளைஞரை துப்பாக்கியால் சுட முயன்ற இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ஆன்னிஷா ஸ்பீட் என்கிற 19 வயது இளம்பெண், தன்னுடைய ஆண் நண்பர் ஒருவரின் அறைக்கு சென்றுள்ளார்.

அங்கு இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பெண், தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு அந்த பெண் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு இளைஞர் மறுப்பு தெரிவித்ததால், திடீரென ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து இளைஞரின் நெற்றியில் வைத்துள்ளார்.

அதனை பார்த்து பயந்துபோன இளைஞர், அந்த பெண்ணின் கைகளை மடக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சுவற்றை துளைக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாத அந்த இளைஞர், இரண்டாவது மாடியின் பால்கனியில் இருந்து குதித்துள்ளார்.

இதற்கிடையில் துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலாளி உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், தாக்குதல் நடத்த முயன்ற இளம்பெண்ணை கைது செய்தனர்.

பின்னர் துப்பாக்கி குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் திருடியிருப்பது தெரியவந்துள்ளது.

எனக்கு விருப்பமே இல்லை : சாமி 2 படக்குழு மீது ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சி குற்றச்சாட்டு!!

ஐஸ்வர்யா ராஜேஷ்

காக்கா முட்டை, வடசென்னை என பல படங்களில் தன் நடிப்பு திறமையை நிரூபித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். விக்ரம்-ஹரி கூட்டணியில் வெளியான சாமி படம் ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை சென்ற வருடம் வெளியிட்டனர். முதல் பாகத்தில் திரிஷா நடித்திருந்த ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தம் ஆனார், ஆனால் அவர் பின்னர் நடிக்கமுடியாது என கூறி ஒதுங்கிக்கொண்டார். இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படம் பற்றி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியுள்ளார். “நான் இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை.

ஆனால் விக்ரம்-ஹரி என்னை பர்சனலாக கேட்டுக்கொண்டதால் ஒப்புக்கொண்டேன். வேறு எந்த நடிகையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என அவர்கள் கூறியதும் ஒரு காரணம்” என கூறியுள்ளார். சில காட்சிகளில் மட்டுமே வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பை பற்றி இந்த படத்தை பார்த்த பலரும் மோசமாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

உடல் முழுவதும் பணமாலையுடன் வந்த புதுமாப்பிள்ளை மற்றும் குடும்பத்தார்… வாய்ப்பிளந்த மக்கள்!!

வாய்ப்பிளந்த மக்கள்

இந்தியாவில் மணக்கோலத்தில் மாப்பிள்ளை ஒருவர் பணமாலையுடன் வாக்களிக்க வந்ததை பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் வாய்ப்பிளந்தனர்.

இந்தியாவில் உள்ள 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் நேற்று மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி தொகுதியில் 8ஆவது வாக்குச் சாவடி மையத்துக்கு மணக்கோலத்தில் வந்தார் மணமகன். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்தனர்.

மணமகன் உள்பட அனைவரும் பணமாலை அணிந்து கொண்டு வாக்களித்தனர். இதை அங்கிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர் இன்னும் சிலரோ பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியா அலப்பறை செய்வது என மனதிற்குள் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியிடப்பட வைரலாகியுள்ளது.

தம்பி, தாய், தந்தையை கொலை செய்த அண்ணனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!!

அதிர்ச்சி வாக்குமூலம்

விழுப்புரம் மாவட்டத்தில் சொந்த குடும்பத்தையே தீ வைத்து எரித்த இளைஞர், கொலைக்கான காரணம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். திண்டிவனத்தில் கடந்த 14-ம் தேதி அன்று ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் அறையில் உறங்கிக்கொண்டிருந்த, ராஜு, அவருடைய மனைவி கலைச்செல்வி மற்றும் இளைய மகன் கவுதமன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆரம்பத்தில் விபத்து எனக்கருதியே பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால் சம்பவம் நடந்த அன்று ராஜுவின் மூத்த மகனின் சட்டையில் இருந்த ரத்தக்கறை மற்றும் அறையில் இருந்து வந்த பெட்ரோல் வாசம் போன்றவை பொலிஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் தன்னுடைய சகோதரி விபத்தில் இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என கலைச்செல்வியின் சகோதரர் ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். ராஜுவிற்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், சொத்துக்களை அபகரிக்க கொலை செய்யப்பட்டாரா என்கிற, சந்தேகத்தின் பேரில் நேற்று ராஜுவின் மூத்த மகன் கோவர்த்தனன் மற்றும் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கொலை சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, சிறுவயதில் இருந்தே என்னை விட என்னுடைய தம்பிக்கு தான் அதிக பாசம் கொடுத்தனர். 7 மாதங்களுக்கு முன் என்னுடைய திருமணத்தை எளிமையாக நடத்தினர்.

ஆனால் ஜூன் மாதம் நடக்கவிருந்த என்னுடைய தம்பியின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டனர். மேலும் என்னுடைய தம்பிக்கு அதிக சொத்துக்களை எழுதிக்கொடுக்க உள்ளதாகவும் என்னிடம் கூறினர். இதனால் ஆத்திரத்தில் அவர்களை தீர்த்து கட்ட முடிவெடுத்தேன்.

பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த அறையில் தூக்கியெறிந்தேன்.தீ பற்றி எரிந்துகொண்டிருந்த போது என்னுடைய தந்தை மட்டும் ஜன்னலை உடைத்துக்கொண்டு உதவி கேட்டார். உடனே பாட்டிலை வைத்து அவருடைய கழுத்தை அறுத்துக்கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

வவுனியா வளாகத்தின் கற்றல் நடவடிக்கைகள் 22ம் திகதி ஆரம்பம்!!

யாழ் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகத்தின் கற்றல் நடவடிக்கைகள் 22 ஆம் திகதி புதன் கிழமை ஆரம்பமாகவுள்ளதாக வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியிருந்த நிலையில் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளையும் ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் பிரயோக விஞ்ஞானபீடம் மற்றும் வர்த்தக பீடங்களின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் விடுதியில் தங்கியுள்ள மாணவாகள் 21 ஆம் தகிதி காலை 9 மணியில் இருந்து 3 மணிவரை வருகை தரமுடியும் எனவும் வளாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இளைஞனிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு!!

ஹெரோயின்  மீட்பு

வவுனியா கற்குழி பகுதியில் இன்று மதியம் இளைஞன் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவுடன் போதை ஒழிப்புப்பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது இன்று மதியம் கற்குழிப்பகுதியில் 510 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக 23வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

அதிகவேகத்தில் சென்ற முச்சக்கரவண்டி 20அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்து!!

குடைசாய்ந்து விபத்து

ஹட்டனில் இருந்து டிக்கோயா, ஒஸ்போன் பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று 20அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று மதியம் 12.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் ஹட்டன், அலுத்கல பகுதியிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியில் ஒரு சிறிய குழந்தையோடு மொத்தம் மூன்று பேர் பயனித்துள்ளதாகவும் பின்னால் சென்ற எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் முச்சக்கர வண்டியின் அதிக வேகத்தின் காரனமாகவே இந்தவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பல்லத்தில் குடைசாய்ந்த முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் மூன்று உயிர்கள் பரிதாபமாக பலி!!

மூன்று உயிர்கள் பரிதாபமாக பலி

மட்டக்ககளப்பு, வாகரை – திருகோணமலை பிரதான வீதியின் கதிரவெளி பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் மூன்று எருமை மாடுகள் பலியாகியுள்ளன.

வாகரை பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி வாகனமொன்று பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த எருமை மாடுகள் திடீரென வீதியின் குறுக்காக வந்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்திலேயே மேற்படி விபத்து நேர்ந்துள்ளதுடன், இதனால் அந்த மூன்று உயிர்களும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளன.

எனினும் வாகனத்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதும் வாகனம் பகுதியளவில் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

காளான் வளர்ப்பில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் பெண் : விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி!!

விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்ணொருவர், காளான் வளர்ப்பு தொழில் மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டி பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எரமல்லூரைச் சேர்ந்தவர் ஷிஜே வர்கீஸ். கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போதிலிருந்து லாபகரமான பண்ணையாக வளர்த்து வருகிறார்.

மலையாளத்தில் ‘கூன்’ என்று அழைக்கப்படும் காளான், கேரளாவில் அதிகமான அளவில் சாகுபடி செய்யப்படாமல் இருந்தது. ஆனால், அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு காளான்கள் தானாகவே ஆங்காங்கே முளைத்திருந்தன. இதனை கவனித்த ஷிஜே வர்கீஸுக்கு, சிறு வயதிலிருந்தே காளான் வளர்ப்பு மீது ஆவல் ஏற்பட்டுள்ளது.

திருமணம் முடிந்து வீட்டில் குழந்தைகளை கவனித்து வந்த ஷிஜே, அவர்கள் பெரிதாக வளர்ந்த பின்னரே கிடைத்த ஓய்வு நேரத்தில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட இவர், பயிற்சியை முடித்த பின்னர் காளான் வளர்ப்பு தொழில் ஆரம்பிக்க முயன்றார்.

ஆனால், ஆரம்பத்தில் இந்த தொழிலில் அவருக்கு தயக்கம் இருந்த நிலையில், தனது கணவரின் நம்பிக்கையான பேச்சால் உடனடியாக காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் ரப்பர் மரங்களின் துகள்களை வைத்து அடுக்குகள் அமைத்து காளான்களை வளர்த்துள்ளார். அவற்றின் வளர்ச்சியும், கணவரின் ஊக்கமும் ஷிஜேவுக்கு பண்ணையை விரிவுபடுத்த தூண்டின.

அதன் பின்னர் 6 மாதங்களில் 300 அடுக்குகள் கொண்ட காளான் பண்ணையை அமைத்தார். ஆனால், அது துரதிர்ஷ்டவசமாக தோல்வியில் முடிந்தது. இதனால் மனமுடைந்த ஷிஜேவை அவரது கணவர் தேற்றினார். அதனைத் தொடர்ந்து எச்சரிக்கையுடன் காளான் வளர்ப்பில் ஈடுபட்ட அவர், கேரளாவில் உள்ள பல்வேறு பண்ணைகளை பார்வையிட்டு தொழிலை புரிந்துகொண்டார்.

அதன்படி தனது பண்ணையில் நவீன குளிர்பதன முறையில், வெப்பநிலையை வைத்து காளானை வளர்க்க ஆரம்பித்தார். அந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவரது காளான் பண்ணை வளர்ச்சியடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக காளான் வளர்ப்பு கைகொடுத்ததால், தனது பண்ணையில் கிடைத்த காளான்களை ‘கூன் பிரெஷ்’ எனும் பெயரில் வீட்டு முன் கடை அமைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

தொடக்கத்தில் வருமானம் பெரிதளவில் இல்லையென்றாலும், போக போக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது ஒரு கிலோ காளானை ரூ.300க்கு கொடுக்கும் ஷிஜே, மாதம் சுமார் 1 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார். இவரது பண்ணையில் வளரும் காளான்கள் கேரளா முழுவதும் விற்பனை செய்யப்படும் நிலையில், காளான் வளர்ப்புக்காக பல விருதுகளை ஷிஜே பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஷிஜே வர்கிஸ் கூறுகையில், ‘குறைந்த பராமரிப்பு தேவைப்பட்டாலும், காளான்களைப் பயிரிடுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் பொறுமையாகவும், மன உறுதியுடனும் இருந்தால் காளான் வளர்ப்பும் நல்ல லாபம் தரும் விடயம் தான்’ என தெரிவித்துள்ளார். தற்போது இவரது பண்ணையில் பயிற்சி பெற வெளிநாடுகளில் இருந்தும் ஆட்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் நடிகரை வெறித்தனமாக அடித்து துன்புறுத்திய பொலிஸ் : மருத்துவமனையில் அனுமதி!!

நடிகரை துன்புறுத்திய பொலிஸ்

சினிமா பிரபலங்கள் சிலர் சர்ச்சைகளை சந்திப்பதை சகஜமாக கருதுகிறார்கள். ஹிந்தி சினிமா பிரபலங்களுக்கு இது சர்வ சாதாரணம் போல தான். பத்திரிக்கைகளில் அடிக்கடி கிசுகிசுக்களிலும் மாட்டிக்கொண்டு முழிப்பார்கள்.

தற்போது ஹாட்டாப்பிக்கா ஓடிக்கொண்டிருப்பது நடிகர் Aansh Arora பற்றிய செய்தி தான். அண்மையில் இவர் தன் சகோதரர் உடன் போலிசாரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் காயமடைந்த அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே 13 முதல் 16 வரை மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

விசாரணையில் அவர் உத்தர்பிரதேஷ் காஜியாபாத் இந்திராபுரம் போலிஸ் நிலையத்தில் என்னை துன்புறுத்தினர். முதல் நாள் இரவிலிருந்து மறுநாள் காலை வரை என்னையும் என் மைனர் தம்பியையும் தொந்தரவு போலிசார் செய்தனர் என நடிகர் கூறியுள்ளார். எல்லாவற்றிக்கும் காரணம் சாப்பிடும் இடத்தில் ஹோட்டல் ஊழியர்களுக்கு இவருக்கும் நடந்த தகராறு தானாம்.

கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு நடந்த விபரீதம்!!

மாணவிக்கு நடந்த விபரீதம்

சென்னையில் வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த சிறுமி, தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த வடிவேல் – ஹேமா தம்பதியின் மகள் அஸ்வதி (11). பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அஸ்வதி, தனது பாட்டி ரமாவுடன் சென்னை ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் வசிக்கும் தனது மாமா வினோத்குமார் வீட்டுக்கு வந்து இருந்தாள்.

வினோத்குமாரின் மகன் யஷ்வந்துக்கு உடல் நிலை சரி இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். மகனுக்கு துணையாக வினோத்குமாரின் மனைவி அங்கேயே உள்ளார். யஷ்வந்தை பார்க்க ரமா மருத்துவமனைக்கும், வினோத்குமார் வேலைக்கும் சென்று விட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த அஸ்வதி, கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு வீட்டில் யஷ்வந்துக்கு கட்டி இருந்த தொட்டில் சேலையில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் சேலை, மாணவியின் கழுத்தை இறுக்கியதில் அஸ்வதி பரிதாபமாக இறந்தாள்.

தற்செயலாக வீட்டுக்கு வந்த அஸ்வதியின் சித்தப்பா ஈஸ்வரன், ஜன்னல் வழியாக இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.