அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற இந்தியப் பெண் உயிரிழப்பு!!

இந்தியப் பெண் உயிரிழப்பு

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக துபாய் சென்ற இந்திய பெண் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு குழந்தைகளுக்கு தாயான ரீட்டா பெர்னாண்டஸ் (42) மும்பையை சேர்ந்தவர்.

இவர் கடந்த மே 9ம் திகதியன்று இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக துபாயில் உள்ள அல் சகாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் தற்போது உயிரிழந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிகிச்சை நடந்த விதம் மற்றும் அனைத்தையும் வெளிப்படையாகவே ரீட்டா பெர்னாண்டஸ் குடும்பத்தாரிடம் தெரிவித்திருந்தோம் என மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமீம் அப்தல்ஹானி கூறியுள்ளார்.

ரீட்டா பெர்னாண்டஸ் பிறந்த பொழுதே அவருடைய இடுப்பு எலும்பு இடம் மாறி இருந்ததால், குடும்பத்தாரின் அனுமதியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த சம்பவம் தற்போது துபாய் சுகாதார ஆணையம் மற்றும் இண்டர்நேஷன்ல் கூட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி, பல தரப்பட்ட மதிப்பாய்வு விசாரணைகளை செய்ய தூண்டியுள்ளது. ரீட்டா பெர்னாண்டஸின் கணவர் தொடுத்த வழக்கின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மகளின் இறுதிச்சடங்கில் சபதம் எடுத்த தந்தை : இன்று அந்த பகையை கொடூரமாக தீர்த்துக் கொண்ட பயங்கரம்!!

சபதம் எடுத்த தந்தை

தமிழகத்தில் மகளின் தற்கொலைக்கு காரணமான நபரை தந்தை திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் குமரவேல். அரசு பேருந்து நடத்துனராக இருக்கும் இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்தார், அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் இவருக்கும், எழுமலை என்பவரின் மகளான ஆனந்த வள்ளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, ஆனந்த வள்ளி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் தன் தற்கொலைக்கு காரணமான குமரவேலை நிச்சயமாக கொலை செய்வேன் என்று ஆனந்த வள்ளியின் இறுதிச் சடங்கின் போது தந்தை எழுமலை சபதம் போட்டுள்ளார். அதன் படி அவருடன் தொடர்ந்து பழகி வந்த அவர், நேற்று விருத்தாசலத்தில் குமரவேலுவுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது மது போதையில் இருந்த எழுமலையை, தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று, வீட்டில் இருந்த மருமகன் சண்முகம், மனைவி வசந்தி ஆகியோரின் உதவியால் குமரவேலின் கழுத்தைக் கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.

அதன் பின் அவரின் உடலை அருகிலிருக்கும் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுரங்கத்தில் போட்டுவிட்டால் யாருக்கும் தெரியாது என எண்ணிய குமரவேல், ஒரு ஆட்டோவில் உடலை ஏற்றிச்சென்றுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால், தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்த அவர், ஆட்டோவில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது வாகனச்சோதனயில் ஈடுபட்டிருந்த பொலிசார் ஆட்டோவில் இருக்கும் இரத்தக்கறையை கண்டு விசாரித்த போது, உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்னரே முழு தகவல்களை கூறுகிறோம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மணப்பெண் இல்லாமல் மகனுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை : என்ன காரணம் தெரியுமா?

மணப்பெண் இல்லாமல் திருமணம்

இந்தியாவில் மகனின் திருமண ஆசையை நிறைவேற்றிய தந்தையின் செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜய் பரோட். 27 வயதாகும் இவர் மனவளர்ச்சி குன்றியவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது சகோதரனின் திருமணத்தைக் கண்ட அஜய்பரோட், இது போன்ற திருமண விழா தனக்கு நடக்க வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார். அதன் படி அவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அஜய்க்கு திருமண ஏற்பாடுகளை தந்தை செய்துள்ளார்.

இதனால் ஒரு திருமணம் என்றால் என்னென்ன நடக்குமோ மெகந்தி நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் என திருமண விழா நடைபெற்றுள்ளது. திருமண விழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து அஜயின் தந்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,

மற்றவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடையும் அஜய், அவனது திருமணம் குறித்து என்னிடம் கேட்டான். என்னால் எந்த பதிலும் சொல்லமுடியவில்லை. அவனுக்கு ஏற்ற ஜோடியை கண்டுப்பிடிப்பது கடினமானதாக இருந்ததால், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து அஜய்க்கு திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.

அதன் படி அவனது ஆசை நிறைவேற திருமணம் செய்து வைத்தோம். இந்த சமூகம் என்ன சொல்லும் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் என் மகனின் கனவை நிறைவேற்றி இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இலட்சத்தில் திருமண ஆடை… பாலிவுட் நடிகைகளை திரும்பி பார்க்க வைத்த இளம்பெண்!!

இலட்சத்தில் திருமண ஆடை

குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அனைவரின் கவனத்தை பெரும் விதமாக, பாலிவுட் நடிகைகளை போல தன்னுடைய திருமண ஆடைகளையும் வடிவமைத்துள்ளார்.

பெண்கள் எப்பொழுதும் தங்களுடைய திருமண நிகழ்வில், ஆடையிலிருந்து தாங்கள் அணியும் நகைகள் வரை ஒவ்வொன்றும் அனைவரின் கவனத்தையும் பெறவேண்டும் என ஆசைப்படுவார்கள்.

அந்த வரிசையில் குஜராத்தை சேர்ந்த அனுஷா பாட் என்கிற இளம்பெண், பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், சோனம் கபூரின் திருமண ஆடைகளைப் போன்று தன்னுடைய திருமண ஆடைகளை வடிவமைத்து, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

சோனம் கபூர் தன்னுடைய மெகந்தி நிகழ்விற்கு அணிந்திருந்ததை போன்ற ஆடையினை தன்னுடைய மெகந்தி நிகழ்விலும், திருமணத்தன்று தீபிகா படுகோன் அணிந்திருந்ததை போன்ற ஆடையினை தன்னுடைய திருமணத்தன்றும் அனுஷா அணிந்திருந்துள்ளார்.

பிரித்தானியாவில் இந்திய மனைவியை 59 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!!

கத்தியால் குத்தி கொலை

பிரித்தானியாவில் தனது மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவின் Berkshire பகுதியை சேர்ந்த லாரன்ஸ் பிராண்ட் என்பவர் 2006 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக் இளம் வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் லாரன்ஸ்.

தனது மனைவியை கொலை செய்துவிட்டு , வீட்டில் சிந்திக்கிடந்த ரத்தத்தினை சுத்தம் செய்துவிட்டு அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து உதவி கேட்காமல், நேரடியாக பொலிசிற்கு தகவல் தெரிவித்து தனது மனைவி காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இதன் மூலம் அங்கு பொலிசார் வந்து, லாரன்ஸிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததில் அவர் மீது சந்தேகம் கொண்டு கைது செய்யப்பட்டார்.

இவர் தனது மனைவியை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு லண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், சம்பவம் நடைபெற்ற அன்று, இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாத்தின்போது லாரன்ஸ் வீட்டின் படுக்கை அறையில் மனைவியை ஒரு கத்தியால் சரமாரியாக குத்தியபோது கத்தி உடைந்துள்ளது. உடனே அவர் சமையலறைக்கு சென்று வேறொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். ஏஞ்சலாவின் உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது.

இது ஒரு மிகவும் கொடூரமான கொலை என கூறிய நீதிபதி, குறைந்தபட்சம் 16 வருடங்கள் 8 மாதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என தீர்ப்பளித்துள்ளார். ஏஞ்சலாவின் பெற்றோர் விடுத்துள்ள அறிக்கையில், திறமையான எங்களது மகள் நேர்மையான வழியில் வாழ்ந்து வந்தாள். நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு, தனது அழகிய குடும்பத்தை செம்மைப்படுத்தி எளிய முறையில் இன்பமாக வாழ்ந்து வந்தார். அவள் இறந்துவிட்டாலும் அவளது நினைவுகள் எப்போதும் எங்களுடன் இருக்கும் என கூறியுள்ளனர்.

கோர முகத்தால் அவமானப்பட்ட நபர் : இன்று உலகமே பாராட்டும் பிரபலம்!!

கோர முகத்தால் அவமானப்பட்ட நபர்

கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர் பிறக்கும் போதே வினோத தலை, குள்ள உருவம், கோர முகம் என ஒரு வித ஊனத்துடனே பிறந்துள்ளார். இவரின் உருவத்தை வைத்து இவரை பலர் கேலி, கிண்டல் செய்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே பாடுவதில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது கடின முயற்சியால் இன்று உகாண்டாவில் பிரபல பொப் பாடகராக இவர் திகழ்கிறார். இது பற்றி காட்ஃப்ரே பாகுமா கூறியதாவது, நான் இப்படி பிறந்ததால் சிறு வயதிலிருந்தே என்னை எல்லோரும் வினோதமாக தான் பார்ப்பார்கள்.

ஆது எனக்கு பின்னர் பழகிவிட்டது. எனக்கு சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் அதிகம். என் திறமையை பார்த்து எனக்கு பலர் பாட வாய்ப்பு வழங்கினார்கள். பின்னர் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் என் மனைவி என்னை விட்டு போய்விட்டார்.

பிறகு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இசைக்கு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இசை துறையில் இன்னும் நான் சாதிப்பேன் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் ஏற்பட்ட குழப்பநிலை : பெருமளவான இராணுவம் குவிப்பு!!

கல்முனையில் சற்று முன்னர் மௌலவி ஒருவர் அப்பகுதி இளைஞர்களால் தாக்கப்பட்டதை அங்கு பதற்றமான சூழல் தோன்றியுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் கல்முனையில் உள்ள அனைத்து வீதிகளிலும் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை கல்முனையில் இளைஞர்கள் தங்களது பிரதேசத்தில் பிரதேசத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வீதியால் வந்த மௌலவி அந்த இளைஞர்களை விசாரித்துவிட்டுச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் சற்று தொலைவில் சென்று ஏன் அந்த இளைஞர்கள் அங்கு நிற்கின்றனர் என பிறரிடத்தில் வினவிய போதே மௌலவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கல்முனையில் பல வீதிகளிலும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

-தமிழ்வின்-

அந்த புகைப்படங்களை அழித்துவிடு : வெளிநாட்டில் இருந்து வந்து காதலனை கடத்திய காதலி!!

காதலனை கடத்திய காதலி

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த கல்லூரி மாணவனை அவரது அமெரிக்க காதலி அடியாட்கள் மூலம் கடத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். நவீத் அகமது என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் அமெரிக்காவில் வசித்து வந்து தொழிலதிபரின் மகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து வந்த காதலி, தனது காதலனுடன் திரையரங்கு மற்றும் பூங்காங்களுக்கு சென்றுள்ளார். அதன்போது இவர்கள் இருவரும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

நெருக்கமான புகைப்படத்தை அழிக்கும்படி காதலி கேட்டுக்கொண்டார். ஆனால் நவீத் அகமது மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காதலியை, நவீத் அகமது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த காதலி, தனது நண்பர்கள் பாஸ்கர் (26), சரவணன் (23), பாட்ஷா (22) ஆகியோரிடம், காதலன் நவீத்தை கடத்தி, அவரிடம் உள்ள புகைப்படங்களை அழித்துவிட்டு தாக்குதல் நடத்துமாறு கூறியுள்ளார்.

அதன்படி, கடந்த 9-ந் தேதி இரவு நவீத் அகமதுவை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர். ஜாபர்கான்பேட்டையில் உள்ள இருட்டு பகுதியில் நவீத் அகமதுவை இறக்கிவிட்டு அவரிடம் இருந்த பொருட்களை பறித்துவிட்டு அவரை அடித்து உதைத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இதில் மயங்கிய நவீத், சிறிது நேரம் கழித்து தானாக அங்கிருந்து வீட்டுக்கு சென்று தனது தந்தையின் உதவியுடன் பொலிசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், பாஸ்கர் மற்றும் சரவணனை கைது செய்தனர். பாட்ஷா தலைமறைவாகி விட்டார். அவரை பொலிசார் தேடி வருகிறார்கள். நெருக்கமான புகைப்படத்தை வைத்து காதலன் மிரட்டியதாகவும், அதனால் ஆள் வைத்து கடத்தியதாகவும் அமெரிக்க காதலி பொலிசில் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்த சில மாதங்களிலே கணவனை கல்லால் அடித்து கொலை செய்த மனைவி!!

கல்லால் அடித்து கொலை

தமிழகத்தில் திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆன நிலையில், மனைவி கணவரை கல்லாலேயே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தலைசங்ககோட்டையை சேர்ந்தவர் சதீஷ் குமார். இவர் அப்பராசபுதூரை சேர்ந்த கலைமதி என்பவரை காதலித்து வந்து அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

அதன் படி இருவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்த போதிலும், இருவருக்கும் இடையே திருமணம் ஆன சில வாரங்களிலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் சில நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளான கலைமதி அவருடைய கணவர் சதீஷ்குமாரை அருகில் இருந்த கல்லை எடுத்து தாக்கியுள்ளார்.

பின்னர் கலைமதி உடன் வந்த அவருடைய பெற்றோரான நாகராஜன், மருமகனை கத்தியால் குத்தி உள்ளார். இதில் சதீஷ்குமார் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, விரைந்து வந்த பொலிசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழுந்துவிட்டெரிந்த விமானம்… நூலிழையில் தப்பிய பயணிகள்!!

கொழுந்துவிட்டெரிந்த விமானம்

பிரித்தானியாவில் ஓல்ட் டிராஃபோர்ட் பகுதிக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்று விபத்தில் சிக்கி கொழுந்துவிட்டெரிந்த நிலையில், அதில் பயணம் செய்த பயணிகள் மூவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

தென் வேல்ஸ் பகுதியில் இருந்து சகோதரர்கள் இருவர் தங்களது உறவினரின் குட்டி விமானத்தில் ஓல்ட் டிராஃபோர்ட் பகுதிக்கு கால்பந்து விளையாட்டை காண புறப்பட்டு சென்றுள்ளனர். கார்டிஃப் சிட்டி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதும் விளையாட்டை காண புறப்பட்டு சென்ற அந்த விமானமானது மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மட்டுமின்றி உடனையே அந்த விமானமானது தீ பற்றியது. மேலும், அவசர அவசரமாக சாலை நடுவே தரையிறங்க முயற்சி மேற்கொள்கையில் விமானம் வெடித்து கொழுந்துவிட்டெரியத் துவங்கியுள்ளது. அந்த விமானத்தில் 19 வயதான ஜாக் மூர் மற்றும் அவரது சகோதரி 16 வயதான பில்லி மான்லேயும் தங்களது உறவினரும் விமானியுமான ஸ்டுவர்ட் மூர் உடன் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

விமானம் சாலையில் விழுந்து தீபிடித்து எரியத்துவங்கியதும், அந்த வழியாக சென்ற பலர் உடனடியாக உதவிக்கு விரைந்துள்ளனர். ஜோயல் மற்றும் டானியேல் ஆகிய இருவரும் அந்த விமானத்தில் சிக்கியிருந்த பயணிகள் மூவரையும் தங்கள் உயிரை பணையம் வைத்து காப்பாற்றியுள்ளனர்.

அந்த இருவரும் இல்லை என்றால் தற்போது தாங்கள் மூவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டோம் என ஜாக் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக காயம் பட்ட மூவருக்கும் சிகிச்சை அளித்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானமானது மொத்தமும் எரிந்து சாம்பலானது.

கர்ப்பமாக இருப்பது தெரியாமலே குழந்தை பெற்றெடுத்த பிரித்தானிய மாணவி!!

பிரித்தானிய மாணவி

மெல்லிடை கொண்ட ஒரு அழகிய மாணவி, தீவிரமாக எல்லைப்படையில் சேருவதற்காக பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது திடீரென குழந்தை பெற்றெடுத்தார். தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்த Blackpoolஐச் சேர்ந்த Beth Martin (18) திடீரென கடுமையான வயிற்று வலிக்கு ஆளானார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பார்த்த ஒரு நர்ஸ் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று கூற, திகைத்தார் பெத். ஆனால், மெல்லிய இடுப்பு கொண்ட Bethஇன் வயிறு கண் கூடாக பார்க்கும் அளவுக்கு பெரிதாகவே இல்லை.

எல்லை பாதுகாப்பு படையில் சேர வேண்டும் என்ற தீராத ஆசை கொண்ட Beth, தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால் தனக்கு வயிறு வலி ஏற்பட்டதாகவே நினைத்தார். கர்ப்ப பரிசோதனைகளும் எதிமறை முடிவுகளையே கொடுத்திருந்தன.

பின்னர் வலி தொடரவே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Beth, 76 மணி நேரத்திற்குபின் அழகிய ஆரோக்கியமான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தைகளே வேண்டாம் என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது என் மகள் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்கிறார் Beth.

நாடு முழுவதிலும் இன்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்!!

ஊரடங்குச் சட்டம்

நாடு முழுவதிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இரண்டு மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ள வடமேல் மாகாணத்திற்கான ஊரடங்குச் சட்டம் : வடமேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் 2 மணித்தியாளங்கள் தளர்த்தப்படவுள்ளது.

அதன்படி இன்று மாலை 04 மணி முதல் 06 மணிவரை இவ்வாறு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இன்று மாலை 06 மணியிலிருந்து நாளை காலை 06 மணி வரை வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

குறித்த மாகாணத்தில் நேற்று மாலை முதல் மறு அறிவித்தல் வரும் வரையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அது இரண்டு மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்டுள்ளது.

சொகுசு வாழ்க்கையை உதறிதள்ளி ஆடு மாடு மேய்க்கும் வெளிநாட்டுப் பெண்!!

ஆடு மாடு மேய்க்கும் வெளிநாட்டுப் பெண்

காதலுக்கு கண்கள் இல்லை,காதலுக்கு எல்லையும் இல்லை என நிரூபித்துள்ளார் வெளிநாட்டு பெண்மணி ஆண்ரியன் பெரல். கலிபோர்னியாவில் கைநிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என இருந்த 41 வயதான ஆண்ரியன், 2013 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் தன்னை விட வயதில் இளையவரான 25 வயது முகேஷ் குமார் என்பவடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. வேலை முடித்ததும் கிளப்புக்கு செல்வது, விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலி வாழ்க்கை என இருந்த ஆண்ரியன், ஹரியானா மாநிலத்தில் மாடுகளை மேய்த்து வருகிறார்.

எல்லாம் காதல் செய்த வேலை. எல்லை தாண்டி இதயத்தை கிழத்த இந்த காதல், தற்போது சந்தோஷமாக பயணித்துக்கொண்டிருக்கிறது. என்னதான் வயதில் சிறியவராக இருந்தாலும், முகேஷின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பிறகு, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முகேஷ் குடும்பம் விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை மேய்க்கும் குடும்பம். என்னதான் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இங்குள்ள கலாசாரத்திற்குள் நான் மூழ்கிவிட்டேன். இந்திய மருமகளாக வாழ்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது என கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முடக்கப்பட்டது டுவிட்டர் தளம்!!

இலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இன்று தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் பகிரப்படும் கருத்துக்களை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் முகநூல், வட்ஸ் அப், வைபர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட மேலும் சில சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள குமார் சங்கக்கார!!

இனவெறி வேற்றுமையால் நாம் கண்களை மூடிக்கொண்டிருந்தால் நம் நாட்டையே நாம் இழக்க நேரிடும், எனவே அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவசர அழைப்பொன்றை நாட்டு மக்கள் அனைவருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது வன்முறையுடன் கூடிய அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் டுவிட்டர் வாயிலாக அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

இலங்கை மக்களே ஒன்று சேருங்கள் என்றும், அனைவரும் கண்களை திறக்க வேண்டும் என்றும், வன்முறை, இனவெறி, வேற்றுமையால் நாம் கண்களை மூடிக்கொண்டிருந்தால் நம் நாட்டையே இழக்க நேரிடும் என அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமாதானமாக இருங்கள், மற்றவர்களையும் பாதுகாப்பாக வையுங்கள், பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் வாதிகளின் சூழ்ச்சியை நாம் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும் எனவும், ஒரு நாடாக மீண்டும் மீண்டு வருவோம் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வாளுடன் வந்து சபைக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பெண் அரசியல்வாதி!!

காலியில் பிரதேச சபைக்குள் வாளுடன் வந்த பெண் அரசியல்வாதியினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இமதுவ பிரதேச சபை இன்று கூடிய வேளையில், பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ரேணுகா சஞ்ஜீவனி என்ற பெண் உறுப்பினர் வாள் ஒன்றுடன் உள்நுழைந்தார். வாளுடன் உரையாற்ற முயற்சித்த போது, அதற்கு ஏனைய கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெண்களை பாதுகாத்துக்கொள்ள வாள்கள் வைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தனது பாதுகாப்பிற்காக வாளுடன் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் சபையில் இருந்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து சபைத் தலைவர் அந்த வாளை பெற்று வெளியில் எடுத்துச் செல்ல பணித்தார். இதனையடுத்து சபை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்றன