இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பகுதியில் இரு சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நீர்கொழும்பு பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரையில் பொலிஸ் ஊடரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
மேலும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இன வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்களை பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக தரிந்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்தது .
நேற்று காலை முதல் குறித்த பகுதியல் இவ்வாறு மோட்டர் சைக்கிள் ஒன்று தரித்த நின்றதாக தெரிவித்து பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.
பிற்பகல் 5 மணியளவில் குறித்த மோட்டார் சைக்கிளை உரிமை கோரி வந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையிலான பையினை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைக் தொடர்ந்து பாடசாலைகயின் இரண்டாம் தவணைக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றய தினம் குறிப்பிட்ட வகுப்பினருக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் தற்போது நிலவுகின்றன.
அந்த வகையில் கல்வி அமைச்சு மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய, பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பல பாடசாலைகளில் நேற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று ஓடுதளத்தில் வைத்து தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து மர்மேந்ஸ்க் நகருக்கு புறப்பட்டு சென்ற SU1492 என்ற பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த விமானமானது தரையிறங்க அனுமதி கோரியுள்ளது.
அனுமதி கோரி சில வினாடிகளில் விமானத்தின் ஒருபகுதி கரும்புகையை கக்கியபடி எரிந்துள்ளது. எனினும், விமானம் தீபிடித்த சில நொடிகளுக்கு முன்னர் அதில் இருந்த அனைத்து பயணிகளும் காப்பாற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, மொத்தம் 80 பயணிகள் அந்த விமானத்தில் இருந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று இடம்பெற்ற வாகன வித்தில் கல்முனையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது.
இவர்கள் அனைவரும் மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு காரில் சென்றுகொண்டிருக்கும் போதே குறித்த நெடுஞ்சாலை வீதியில் ஓந்தாச்சிமடம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் பாதையை விட்டு விலகிச் சென்று மரத்துடன் மோதுண்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பர் யோகி பாபு. ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் வரை அவர் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.
அவர் நாயகனாக நடித்துள்ள தர்மபிரபு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மே-4 சென்னையில் நடைபெற்றது. யோகி பாபுவுடன் பல வருடங்களாக ஒரே அறையில் தங்கியிருந்த முத்துக்குமரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் முத்துக்குமரன், யோகி பாபு டிவியில் நடித்து வாங்கி வரும 300 ரூபாய்க்காக நாங்கள் காத்துக் கொண்டிருப்போம். அதன்பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு எல்லாம். அன்று முதல் இன்று வரை அவர் பாபுவாக அப்படியே இருக்கிறார் என்று நெகிழ்ச்சியிடன் பேசினார். அதைக் கேட்டு யோகிபாபு மேடையிலேயே கண்கலங்கினார்.
பின்னர் பேசிய யோகிபாபு, நான் விஜய் டிவி லொள்ளு சபாவில் நடித்துவிட்டு 300 ரூபாய் வாங்கி வருவேன். அதைத்தான் முத்துக்குமரன் அப்படி சொன்னார். நான் பத்து லட்சம், பதினைந்து லட்சம் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.
அப்படியில்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரிந்தவன் நான். நேற்று கூட ஒரு புதுமுக இயக்குனர் கேட்டார். உடனே அவரது தயாரிப்பாளரிடம் சொல்லி சம்பளத்தை பாதியாகக் குறைத்துக் கொண்டேன் என்றார்.
ஐந்து வயதில் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்தான் இன்றுவரை உலகின் மிக இளவயது தாயாக கருதப்படுகிறார்.
Lina Medina, ஐந்து வயதாக இருக்கும்போது அவளது வயிறு இயற்கைக்கு மாறான அளவுக்கு வீங்கியிருப்பதையும் அவ்வப்போது தனக்கு வயிறு வலி ஏற்படுவதாகவும் கூறியதையடுத்து அவரது தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவமனையில் Linaவை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றனர். பின்னர்தான் Linaவின் தாய், அவள் மூன்று வயதிலேயே பருவம் அடைந்ததைக் குறித்து தெரிவித்திருக்கிறார்.
சில வாரங்களுக்குப்பின் Lina ஆரோக்கியமான ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தாள். குழந்தையை பிரசவிக்கும் அளவிற்கு அவளது இடுப்பெலும்பு வலிமையாக இல்லாததால், அறுவை சிகிச்சை முறையில்தான் அவளது குழந்தை பிரசவிக்கப்பட்டது.
அப்போதுதான் மருத்துவர்கள் Linaவின் உடல், வளர்ந்த ஒரு பெண்ணின் உடல் பாகங்களைக் கொண்டிருப்பதைக் கவனித்தார்கள். அவளுக்கு precocious puberty என்னும் பிரச்சினை காரணமாகவே, அவள் மிகவும் இள வயதிலேயே பருவம் அடைந்ததும் தெரியவந்தது.
அவளை பாலியல் வன்புணர்வு செய்ததாக சந்தேகத்தின் பேரில் Linaவின் தந்தையே கைது செய்யப்பட்டாலும், ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இன்றுவரை Linaவின் குழந்தைக்கு தந்தை யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. Linaவின் மகனான Gerardo 40 வயது வரை வாழ்ந்தார், பின்னர் எலும்பு நோய் ஒன்றின் காரணமாக அவர் உயிரிழந்தார்.
இன்று 85 வயதாகும் Lina, பெருவில்தான் வசிக்கிறார், இன்று வரை உலகின் மிக இளவயது தாய் என்ற பெயர் அவருக்கு மட்டும்தான்.
பிரசவத்திற்கு இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஜனவரி மாதம் ஒண்டாரியோவைச் சேர்ந்த Nicholas Baig தனது ஒன்பது மாத கர்ப்பிணி மனைவியான Arianna Goberdhanஐ கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
உடலில் 17 கத்திக் குத்துக் காயங்களுடன் இடுப்புக்கு கீழ் ஆடையின்றி தனது கணவரின் பெற்றோரின் வீட்டில் இறந்து கிடந்தார் Arianna. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Nicholasக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, அவர் 17 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வரமுடியாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சற்றும் இரக்கமின்றி தங்கள் மகளை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த நபருக்கு இந்த தண்டனை போதாது என்று கூறி, அவரது பெற்றோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறைந்தது 20 ஆண்டுகளுக்காவது குற்றம் செய்த நபர் ஜாமீனில் வர முடியாது என தீர்ப்பு வரும் என்று எண்ணியதாக தெரிவிக்கும் Ariannaவின் பெற்றோர், இப்படித்தான் நாம் குடும்ப வன்முறையை தடுத்து நிறுத்தப்போகிறோமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவளுக்கு நீதியே கிடைக்கப்போவதில்லை என்று கூறிய Ariannaவின் தாய் Sherry, கனடாவில் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை உயிரிழக்க காரணமாக இருப்பவர்களுக்கு தண்டனை இல்லை என்பதால், அந்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று கோரும் புகார் மனு ஒன்றை தயார் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. முச்சக்கரவண்டி சாரதிகளின் குழுக்களுக்கு இடையிலான முறுகல் நிலை வன்முறையாக மாறியுள்ளது.
இதன்போது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அதிரடி படையினர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு படையினர் அருகாமையிலுள்ள வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியில் பெருமளவு முஸ்லிம்கள் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இந்த வன்முறை சம்பவம் அந்த மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் லொரிக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாததால், நிதி நிறுவனத்தின் அதிகார்களின் மிரட்டலுக்கு பயந்து ரமேஷ் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ராஜாபாளையத்தில் உள்ள சைக்கிள்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(40) விவசாயியான இவருக்கு தமிழ்ச் செல்வி என்ற மனைவியும் 14 வயதில் மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் நாமக்கலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதற்காக மாதந்தோறும் கடன் தவணையை செலுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் தவணை செலுத்தவில்லை என்பதால் நிதி நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பவ தினத்தன்று ரமேசின் வீட்டிற்கு சென்று, சரியாக பணத்தை கட்ட சொல்லுங்கள், இல்லையென்றால் லாரியை பறிமுதல் செய்துவிடுவோம் என்று எச்சரித்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் திகதி திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள வி.ஐ.பி. சிட்டி பகுதிக்கு வந்த ரமேஷ், லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, அவரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு போன் செய்து, லாரிக்கான பணத்தை தன்னால் கட்ட முடியாத காரணத்தினாலும் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டிச் சென்றதாலும் மனமுடைந்து, தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன், குடும்பத்தை பார்த்து கொள் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி உடனடியாக தன்னுடைய உறவினர்களுடன் அங்கு சென்று பார்த்த போது, அங்கு ரமேஷ் விஷம் குடித்த நிலையில், லாரி ஸ்டீரிங்கில் படுத்தவாறு கிடந்தார்.
இதனால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி கொடுக்கப்பட்டு, அதன் பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்றிரவு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து உப்பிலியபுரம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு, கடிதம் ஒன்றையும் எழுதி சட்டைப்பையில் வைத்திருந்தார்.
அதில், நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியதால் தற்கொலை செய்ததாக கூறியுள்ளார். அந்தக் கடிதத்தை பொலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பு தன் இறப்புக்கு நிதி நிறுவன அதிகாரிகளே காரணம் என்று கூறி வீடியோ பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் நீர்கொழும்பு பகுதியில் தங்கயிருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வாழ்விடம் இல்லாது பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு மத்தியில், இவர்கள் இவ்வாறான பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர். 160 இற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த மாதம் 24 ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரினர். ஐக்கிய நாடுகள் முகவர் ஆணையத்தின் மூலம் இவர்கள் இலங்கையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டவர்களாவர்.
இவர்களில் 60 இற்கும் மேற்பட்டவர்கள் கத்தோலிக்கம் மற்றும் கிறிஸ்தவர்களாவர். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் சன்னி முஸ்லிம்களும் இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நகரில் உள்ள வீடுகளில் வாடகைக்கு தங்கியிருந்த இவர்களை அசம்பாவிதங்களை அடுத்து வீட்டுரிமையாளர்கள் தமது வீடுகளிலிருந்து செல்லுமாறு கூறினர்.
இதனை அடுத்து பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரிய பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை சில இடங்களில் தங்க வைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்தபோதும், அங்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள வாகன தரிப்பிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பத்து தினங்களுக்கு மேலாக பொலிஸ் நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை காரணமாக மழை மற்றும் வெயிலில் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். பொலிஸ் நிலையத்தில் உள்ள மூன்று மலசலகூடங்களையும் இரண்டு குளியலரைகளையுமே சகலரும் பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவர்கள் உட்பட பலர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இவர்கள், தம்மை பாதுகாப்பான இடமொன்றில் விரைவில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதிகளின் குழுக்களுக்கு இடையிலான முறுகல் வன்முறையாக மாறியுள்ளது. இதன்போது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் அதிரடி படையினர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு படையினர் அருகாமையிலுள்ள வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு வழமைக்குத் திரும்பும் வரை பாடசாலைகளை மீண்டும் ஒரு வாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அஸ்கிரிய மாநாயக்கர்கள் அரசாங்கத்திடம் இது தொடர்பான அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இரண்டாம் தவனைக்கான கற்றல் நடவடிக்கைகள் கடந்த 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக கற்றல் நடவடிக்கைகள் இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டன.
இந்நிலையில், நாளைய தினம் மீண்டும் கற்றல் நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மீண்டும் பாடசாலைகளை தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும், நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயற்சி நிலையமாகவும் மட்டக்களப்பில் செயற்பட்டு வந்த இடம் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்மனை, ஒல்லிக்குளம் பகுதியிலேயே இந்த முகாம் இயங்கி வந்துள்ளது.
இந்த அமைப்பினை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் அப்துல் ரவூப் என்பவரை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முகாம் தொடர்பில் தெரியவந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முகாமில் வைத்து, சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலில் பலியான தற்கொலைதாரியான ரில்வான் என்பவர் 2017ஆம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடித்து கைவிரல்களையும், கண் ஒன்றையும் இழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையின் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இங்கிருந்தே தற்கொலை தாக்குதலுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும், குண்டுகள் இங்கிருந்தே அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் முகாமில் இருந்து குண்டுகளை அடைத்து கொண்டு செல்ல பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்களும் தயார் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இது போன்ற குழாய்களே கடந்த 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் குண்டுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இங்கிருந்துதான் அங்கு கொண்டுசெல்லப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த முகாமிற்காக நூறு மீற்றர் தூரத்திற்குள் யாரும் நுழையும் போது அதனை கண்டுகொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், முகாமில் இருந்து இரகசியமான முறையில் வெளியேறும் வழியும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.