கொடூரமான தாக்குதலில் முழுக் குடும்பத்தையும் இழந்த பெண் : தேவாலயத்தில் தொலைந்த வாழ்க்கை!!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது கணவர் உட்பட முழு குடும்பத்தையும் இழந்த பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

கட்டுவப்பிட்டி செபஸ்டியன் தேவாலய தற்கொலை தாக்குதலில் குமாரி என்ற பெண் தனது முழு குடும்பத்தை பறி கொடுத்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குமாரி,

“நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். இது கடவுள் கொடுத்த வரமாகவே நினைத்தேன். எனினும் எனது குடும்பத்தையும் எனது தங்கையின் குடும்பத்தையும் முழுமையாக பறிகொடுத்து விட்டோம்.

முழு குடும்பமாக உயிர்த்த ஞாயிறு ஆராதனைக்கு சென்று மீண்டும் தனியாகவே திரும்பிவர அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எங்கள் கிராமம் மிகவும் அதிஷ்டமான ஒரு கிராமமாகும். சுனாமி, வரட்சி உட்பட எந்தவொரு அனர்த்தத்திலும் பாதிக்கப்பட்டதில்லை. எனினும் இன்று நான் தனி மரமாகி விட்டேன்.

தாக்குதலில் உயிரிழந்த எனது மூத்த மகள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றிருந்தார். கடைசி மகன் பாடசாலை கல்வியை தொடர்ந்து வந்தார்.

மகள் இரண்டு பட்டம் பெற வேண்டும் என கூறிக்கொண்டிருந்தார். எனது பிள்ளைகள் பெரியவர்களாகிய போது எனது கையிலேயே உறங்குவார்கள். எல்லாம் இழந்து விட்டேன். இனியேனும் இந்த நாட்டில் ஒரு சமாதானம் கிடைக்க வேண்டும்.

எங்களுக்கு எவ்வித இனவாதமும் கிடையாது. எனக்கு பிள்ளைகளும் இல்லை குடும்பமும் இல்லை. இனி நான் கேட்பதற்கு என்ன உள்ளது? இனியாவது சமாதானம் இந்த நாட்டிற்கு கிடைக்க வேண்டும் என்று மாத்திரமே கேட்பதற்கு உண்டு” என கண்ணீருடன் அவர் தெரிவித்தார்.

தலவாக்கலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட மூவரில் ஒருவர் பலி : இருவர் பலத்த காயம்!!

தலவாக்கலை நகரில் கொத்மலை பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள செலான் வங்கிக்கு பின்புறமாக ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் 12.45 மணியளவில் இடம்பெற்ற இந்த மண்சரிவில் வங்கிக்கு பின்புறமாக மதில் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கும் பணியில் 20 பேர் ஈடுப்பட்டிருந்ததுடன், இதில் மூவர் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மூவரையும் மீட்டுள்ள சக பணியாளர்கள், முதலில் இருவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போது சற்று நேரத்திற்கு பின்பாக மீட்கப்பட்ட ஒருவரே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் லிந்துலை பாமஸ்டன் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏ.என்.ஜெயரத்ன வயது 34 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட இவ் மூவரையும் அப்பகுதி பொது மக்கள் இராணுவத்தினர், தலவாக்கலை பொலிஸார் ஆகியோர் பணியில் ஈடுப்பட்டு மீட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சிறி சபாரத்தினத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு இரத்ததானம் வழங்கல்!!

தமிழிழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 33வது நினைவு தினத்தினை முன்னிட்டு சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின் (சிறி ரேலோ) வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரால் வவுனியா இரத்த வங்கியில் இன்று (05.05.2019) இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது இருபதுக்கு மேற்பட்ட சிறி ரேலோ இளைஞர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.

வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் திடீர் சோதனை!!

வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நாளைய தினம் ஆரம்பப் பாடசாலை தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது பாடசாலை வளாகம் மற்றும் பாடசாலையின் கட்டங்கள் அனைத்தும் தீவிர சோதனையிடப்பட்டதோடு சந்தேகத்திற்கிடமான பொருட்களும் சோதனையிடப்பட்டது.

யாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு!!

யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் “இது முஸ்லிம் நாடு. கிருஸ்தவர்களுக்கு இங்கு இடமில்லை” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் கடிதம் தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என பெயரிடப்பட்ட தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் தாக்குதல்தாரிகளின் திட்டம் முற்றாக முறியடிக்கப்படவில்லை என்ற தகவலை புலனாய்வுப் பிரிவு கூறிவந்த நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில் நாளாந்தம் வெடிபொருட்களும், ஆயுதங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

தற்போது சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழ்வின்-

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காலை 8 மணிக்கு பாடசாலைகளை தொடங்க அனுமதி!!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேலும்,

பாடசாலைகளை தொடங்குவது குறித்து ஏராளமான அதிபர்கள், ஆசிரியர்களின் கருத்துகள் கண்டறியப்பட்டு இது தொடர்பாக வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வி பணிப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகள் காரணமாக மாணவர்களால் உரிய நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாது என இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு நிறைவு செய்வதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்க அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் வலய கல்வி பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்று கொள்ள முடியும்.

இது ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்கும் எனவும், அதிபர்களின் வேண்டுகோள்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளனர்.

ஆகையால் இடர்பாடுகள் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியை பெற்று பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு : பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!!

கொழும்பின் எல்லைக்குட்பட்ட வான் பரப்பில் பறந்த ட்ரோன் கமராவினால் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு – ஜாவத்தை பிரதேசத்தின் வானில் அனுமதியின்றி பறந்த ட்ரோன் கமராவுக்கு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ட்ரோன் கமரா வானில் பறப்பதாக கிடைத்த தகவலுக்கமைய நாரஹென்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ட்ரோனுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த ட்ரான் கமரா நிறுத்தாமல் பம்பலப்பிட்டியை நோக்கி பறந்துள்ளது.

கமராவை மீட்க பொலிஸார் கடும் முயற்சி செய்த போதும், அது கடலை நோக்கி பயணித்துள்ளது.

இது தொடர்பில் கடற்படையினருக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து ட்ரோன் கமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களில் பெருமளவு ட்ரோன் கமராக்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு தற்கொலை குண்டுத்தாக்குதல் : பிரதான பயங்கரவாதியை கண்டுபிடித்த பொலிஸார்!!

கொழும்பு உட்பட பல இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை வெடிகுண்டுகளை தயாரித்த பிரதான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் வெடி குண்டை வெடிக்க வைத்து பெருமளவு மக்களை கொலை செய்த தீவிரவாதி தொடர்பில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாழைச்சேனை பிரதேசத்தை மொஹமட் ஹஸ்துன் என்பவர் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பிரதான வெடிகுண்டு நிபுணர் என பாதுகாப்பு பிரிவு உறுதி செய்துள்ளது.

வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பில் மொஹமட் ஹஸ்துன் வெளிநாட்டில் பயிற்சி பெற்றுள்ளார். அவரது மனைவி சாரா என்பவர் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். சாரா வாழைச்சேனையில் வசித்து வந்துள்ளார்.

தற்கொலை தாக்குதலுக்கு தேவையான நிதி தெமட்டகொட இப்ராஹிம் குடும்பத்தினால் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது

-தமிழ்வின்-

136 பயணிகளுடன் ஆற்றில் இறங்கிய விமானம்!!

136பயணிகளை ஏற்றிக் கொண்டு ப்ளோரிடாவுக்கு வந்த போயிங் 737 பயணிகள் விமானம், செயின்ட் ஜான் நதியில் நிலை தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கியூபாவில்இருந்து ப்ளோரிடா நகரத்திற்கு வந்த போயிங் 737 பயணிகள் விமானம் தரையிறங்கும் வேளையில் நிலை தடுமாறி அருகில் இருந்த செயின்ட் ஜான் நதி சென்று நின்றது. இது அமெரிக்க நேரப்படி இரவு 9:40 மணிக்கு இந்த சம்பவம், ஜாக்சன் என்ற இடத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாக்சன்வின் மேயர், தனதுட்விட்டர் பக்கத்தில்,விமானத்தில்இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விமானத்தின் எரிபொருள் நீரில் கலப்பதைத்தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று கூறியுள்ளார்.

பாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம் : கல்வி அமைச்சு அறிவிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

6 தொடக்கம் 13 வரையான ஆண்டு மாணவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

1 தொடக்கம் 5 வரையான வகுப்பு மாணவர்களுக்கு எதிர்வரும் 13ம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சனை காரணமாக கடந்த 22ம் திகதி ஆரம்பமாக வேண்டிய இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு முன் கர்ப்பம் : காட்டுக்குள் எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்!!

புதுச்சேரியில் உள்ள முந்திரி காட்டுக்குள் கடந்த 30 ஆம் திகதி எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்பாதுரை என்பவர் தனது சகோதரியை காணவில்லை என பொலிசில் புகார் அளித்திருந்த நிலையில், காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அப்பாதுரையிடம் காட்டியபோது, அது அவரது சகோதரி லட்சுமியின் சடலம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

தனது தந்தையின் இழப்புக்கு பின்னர் குடும்ப கஷ்டத்தை போக்க பாத்திர கடையில் லட்சுமி வேலை பார்த்து வந்துள்ளார். கடையில் விசாரித்ததில் கடந்த 30 ஆம் திகதி லட்சுமியை வேன் டிரைவர் அருண்குமார் என்பவன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

செல்போன் மூலம் அருண்குமாரை கண்டுபிடித்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அருண்குமார் மீது சந்தேகமடைந்த தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

லட்சுமியும், அருண் குமாரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், லட்சுமிக்கு திருமண ஆசை காட்டி அவரிடம் எல்லை மீறியுள்ளார். இவர்களது காதலுக்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், திருமணம் செய்துகொள்வதை அருண்குமார் தள்ளிப்போட்டுள்ளார். இதற்கிடையில் லட்சுமி கர்ப்பமாகியுள்ளார். நான் உன்னுடன் தனியாக பேசவேண்டும் என கூறி, அழைத்து சென்று, கருவை கலைத்து விடு என அருண்குமார் கூறியுள்ளார்.

இதற்கு லட்சுமி மறுத்துவிடவே, இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் உருட்டுகட்டையால் லட்சுமியை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தனது நண்பனுக்கு போன் செய்து வரவழைத்து லட்சுயின் உடலை முந்திரி காட்டுக்கு கொண்டு சென்று அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அருண்குமார் மற்றும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு, முக்கிய தடயங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயின் கண்முன்னே துடி துடித்து இறந்த 5 வயது மகன் : கண்ணீர் விட்டு கதறிய தாய்!!

தமிழகத்தில் பெற்ற தாய் கண்முன்னே மகன் லாரியில் உடல் நசுங்கி பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். மெக்கானிக்கரான இவருக்கு கீதா என்ற மனைவியும் தர்ஷன்(5), தியா (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தர்ஷன் அங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் யூகேஜி படித்து வருகிறான்.

இந்நிலையில் கீதா இன்று காலை மதுரவாயலில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் தன் மகன் மற்றும் மகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது வானகரம் சிக்னல் அருகே வந்த போது, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், கீதா தனது பைக்கை இடதுபுறம் சாலையை விட்டு இறங்கி ஓரமாக சென்றுள்ளார்.

அதன் பின் மீண்டும் சாலையில் ஏற முற்பட்ட போது, இருசக்கர வாகனம் அங்கிருக்கும் மணலில் சிக்கியதால் தடுமாறியுள்ளது. அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த மகன் தர்சன் எதிர்பார்தவிதமாக கீழே விழ, பின்னால் வந்த தண்ணீர் லாரி தர்சன் மீது ஏறியதால், அந்த இடத்திலே உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.

தன் கண்முன்னே மகன் இறப்பதைக் கண்ட கீதா கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அங்கு விரைந்து வந்த பொலிசார், லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10 வருடங்களுக்கு பின் காதலியை சந்தித்ததால் வந்த வினை : பிரேத பரிசோதனையில் அம்பலமான உண்மை!!

டெல்லியில் 10 வருடங்களுக்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த ராகுல் குமார் மிஸ்ரா (32) என்பவர் கடந்த மார்ச் 16ம் திகதியன்று, வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த தன்னுடைய மனைவியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் போதே அவர் பரிதாபமாக உயிரிழநதார். மேலும் இதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது கடிதம் ஒன்றினை கைப்பற்றினர்.

அதில் என்னுடைய தற்கொலைக்கு வேறு யாரும் காரணமல்ல என மிஸ்ராவின் மனைவி பூஜா ராய் (26) எழுதியிருந்தார். இதனால் பூஜாவின் இறப்பில் பொலிஸாருக்கும் பெரிதளவில் சந்தேகம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் பூஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கை 27ம் திகதியன்று வெளியிடப்பட்டது. அதில் பூஜா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், எலும்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சந்தேகத்தின் பேரில் அவருடைய கணவர் மிஷ்ராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மிஸ்ராவும், பத்மா திவாரி (33) என்பவரும் சிறுவயதிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். 12ம் வகுப்பு முடிந்ததும், மிஸ்ரா பொறியியல் படிப்பிற்காக வெளியில் சென்றுவிட்டார். இதனால் இருவரும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர்.

பின்னர் 2015ம் ஆண்டு பள்ளி நண்பர்கள் மட்டும் இருந்த வாட்ஸ் ஆப் குழுவின் மூலம் மீண்டும் மிஸ்ராவின் தொடர்பு பத்மாவிற்கு கிடைத்துள்ளது.

உடனடியாக இருவரும் காதல் வலையில் விழுந்துள்ளனர். ஆனால் இதற்கு மிஸ்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 23, 2017 அன்று பூஜாவை திருமணம் செய்து வைத்தனர்.

பத்மா தன்னுடைய தோழி என மிஸ்ரா, பூஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலித்து வருவதை கண்டறிந்த பூஜா கணவருடன் சண்டையிட ஆரம்பித்துள்ளார். இதனால் இருவரும் பூஜாவை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

யூடியூபில் கொலை செய்வது பற்றி ஆராய்ந்த மிஸ்ரா, தன்னுடைய திட்டம் குறித்து பத்மாவிடம் கூறியுள்ளார். மார்ச் 16ம் திகதியன்று வழக்கம் போல மிஸ்ரா வேலைக்கு சென்றுவிட்டார். அந்த சமயம் வீட்டிற்கு வந்த பத்மா சாப்பிடும் பழச்சாறில் எலி மருந்தை கலந்து பூஜாவிற்கு கொடுத்துள்ளார்.

விஷம் கலந்திருப்பதை தெரிந்துகொண்ட பூஜா அங்கிருந்து தப்பியோட முயன்ற போது , அவருடைய தலையை பிடித்த பத்மா சுவற்றில் அடித்து தரையில் சாய்த்துள்ளார்.

பின்னர் தன்னுடைய காதலன் மிஸ்ராவிற்கு போன் செய்து, வேலையை முடித்துவிட்டேன் எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு விரைந்த மிஸ்ரா, ஒன்றுமே தெரியவர் போல மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் வேலைசெய்பவர்களுக்காக புதிய செயலி அறிமுகம்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சால் வெளிநாடுகளில் வேலைசெய்பவர்களுக்காக புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் வேலைசெய்பவர்களுக்காக விசேட செயலி (App) ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த செயலியின் மூலம் வெளிநாடுகளில் வேலைசெய்பவர்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் அறிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில் இலங்கையில் முன்னணி தொலைத்தொடர்பாடல் நிறுவனமொன்றுடன் இணைந்து, வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்காக பிரத்தியேக சிம் (Sim) அட்டைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தொலைபேசி கட்டணத்திற்கு அமைவாகவே, இலங்கையிலுள்ள தமது உறவினர்களுடன் அவர்கள் உரையாட முடியும்.

வெறிச்சோடிக் கிடக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

முன்னரைப் போல வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை வரவேற்க யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பயணிகளை வழியனுப்பவும் யாரும் உள்ளே செல்ல முடியாது.

இதனால் பயணிகளை வீதியிலேயே வழியனுப்பிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு, பயணிகளை வரவேற்க மணிக்கணக்கில் உறவினர்கள் வீதிகளில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டாலும் தாக்குதல் பீதியில் வெளிநாடுகளிலிருந்து வருகைதருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

நாளொன்றிற்கு 7 ஆயிரம் வரையான பயணிகள் வெளியேறும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போது இரண்டாயிரம் வரையான பயணிகளே வெளியேறுகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் தாக்குதல்தாரிகளின் திட்டம் முற்றாக முறியடிக்கப்படவில்லை. அதனை நிரூபிக்கும் வகையில் நாளாந்தம் வெடிபொருட்களும், ஆயுதங்களும் மீட்கப்பட்டு வருகின்றது.

மன்னாரில் மர்ம பொதிகளில் வெடிப்பொருட்கள்!!

மன்னார், சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள பற்றைக்குள் மர்மமான இரண்டு பொதிகளை அவதானித்த நபர் ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதிகளை பார்வையிட்டதோடு, சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வெடிப்பொருட்கள் படையினரினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.