கோர விபத்தில் இருவர் பரிதாபமாக பலி!!

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த டிமோ பட்டா லொறியும், கந்தளாயில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் தம்பலகாமம் 174 கட்டைப் பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் கொழும்பு – சீதுவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 மட்டும் 26 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது டிமோ பட்டாவில் பயணித்த சாரதியும், அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளதாகவும், பின்னால் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கந்தளாய் – கன்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இளைஞரால் சீரழிக்கப்பட்ட இளம்பெண் : இறுதியில் தற்கொலை செய்து கொண்ட சோகம்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜோதி நகரில் உள்ள இளம் பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், அங்குள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு முகநூலின் மூலமாக பொள்ளச்சியை சார்ந்த பாலன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இவர்களின் அறிமுகத்திற்கு பின்னர் நட்பு வட்டாரத்தில் பழகி வந்த நிலையில், இவர்களுக்குள் இருந்த பழக்கமானது காதலாக மாறவே, இவர்கள் இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர். இந்த நேரத்தில், எத்தனை நாட்கள் தான் முகநூலில் காதலிப்பது என்ற பேச்சு துவங்கி இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கோயம்புத்தூருக்கு வந்தவுடன் அங்குள்ள விடுதியில் அறையெடுத்து திருமண ஆசையை கூறி பெண்ணை பலவந்தப்படுத்தி சீரழித்த நிலையில், இதனை காரணமாக வைத்து பல முறை நாசம் செய்து தனது வெறித்தனத்தை காட்டியுள்ளான்.

இந்த நிலையில், மாணவியை தனது தேவைக்கு நயவஞ்சக புத்தியால் உபயோகம் செய்து விட்டு திருமணத்திற்கு தேவையான சான்றிதழை என் கொண்டு வரவில்லை என்று கூறி பிரச்சனை செய்து, கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு அழைத்து சென்று நடு ரோட்டில் நாதியற்று விட்டுவிட்டு சென்றுள்ளான்.

இதோ வருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பிவிட்டு சாலையின் வீதியில் செய்வதறியாது நின்ற பெண், சில நேரம் கழித்து தாம் ஏமாற்றப்பட்டு இருக்கும் நிலையினை அறிந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரிடம் விஷயத்தை கேட்டறிந்த காவல் துறையினர் பொள்ளாச்சியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பொள்ளாச்சியில் வந்து புகார் அளித்த பெண்ணிடம் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு சென்று புகார் அளிக்க கூறி திரும்பி அனுப்பியுள்ளனர். இவ்வாறாக சுமார் இரண்டு மாதங்கள் பொள்ளாச்சிக்கும் கிருஷ்ணகிரிக்கும் அலைந்து பார்த்த பெண், தனது வாழ்க்கை சீரழிந்ததற்கு காரணமான நபரின் மீது புகார் அளித்தாலும் புகாரை ஏற்க மறுக்கிறார்கள் என்று கூறி மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

இவர் இறந்த பிறகு இந்த பிரச்சனை குறித்து தக்க விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாணவியின் உடல் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் உள்ளது. இந்த சம்பவமானது மீண்டும் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பில் சிறுவனுக்கு பறிபோன கண்பார்வை : வலியால் துடிக்கும் சிறுமி…. மனம் வலிப்பதாக தாய் கண்ணீர்!!

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதில் 50 குழந்தைகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வெடிகுண்டு தாக்குதலில் பல குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திடுனி நிகன்ஷா என்ற சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உடல்நிலை மருத்துவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. காரணம் திடுனி தனது பேசும் திறனை இழந்துள்ளார்.

அதே போல 7 வயது சிறுவன் ஒருவனுக்கு கண்பார்வை பறிபோகியுள்ளது. 4 வயது சிறுமி கோமா நிலையில் உள்ளார். இதே போல பல சிறார்கள் தீக்காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பிகுனி (7) என்ற சிறுமியும் குண்டுவெடிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு வலியால் துடித்து வருகிறார்.

குண்டுவெடிப்பில் பிகுனியின் உடலை உலோக துண்டுகள் துளைத்துள்ளன. அவள் வாயிலும் காயம் ஏற்பட்டுள்ளதால் சாப்பிட முடியாமல் தவிக்கிறார். இது குறித்து பிகுனி தாய் கூறுகையில், மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளை கூட பிகுனியால் சாப்பிடமுடியவில்லை, அவள் தவிப்பதை பார்த்தால் மனது வலிக்கிறது என கூறினார்.

இப்படி பல குழந்தைகள் உடலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தின் அதிர்ச்சி விலகாமல் பல குழந்தைகள் மனதாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவெளியில் பெண்ணின் உடலிலிருந்து திடீரென வெளியில் விழுந்த கருப்பை!!

சீனாவில் பொதுவெளியில் நடனடமாடி கொண்டிருந்த போது பெண்ணின் வயிற்றிலிருந்த கருப்பை திடீரென பிறப்புறுப்பின் வழியே வெளியில் விழுந்துள்ளது.

சீனாவில் 60 வயது தாய் ஒருவர் பொதுவெளியில் தொடர்ந்து நடனடமாடி கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அவருடைய கருப்பை, பிறப்புறுப்பின் வழியே வெளியில் வந்து விழுந்துள்ளது.

இதனை பார்த்த அந்த பெண், நீண்ட நேரம் நடனடமாடி கொண்டிருந்ததால் சதை ஒன்று வெளியில் விழுந்திருப்பதாக நினைத்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சாங் ஹாங்காஜான், பலவீனமான துணை திசுக்களால் அவருடைய கருப்பை பாதிக்கபட்டு வெளியில் விழுந்திருப்பதாக கூறியுள்ளார்.

பெயர் வெளியிடப்படாத அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், சிறு வயதிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவருடைய கருப்பை வீழ்ச்சிக்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசுகையில், குழந்தை பெற்ற பெண்களுக்கு மலச்சிக்கல், ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாட்பட்ட இருமல் போன்ற நோய்கள் தெரிந்தால் அவை இடுப்புத் தசைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.

குழந்தை பிறந்ததும் இடுப்பு தசைகளுக்கு தேவையான உடற்பயிற்சியினை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கை உட்பட இரு நாடுகளில் நடந்த குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி!!

துபாயில் மனைவியுடன் வசிக்கும் நபர் ஒருவர் இலங்கை மற்றும் மும்பையில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பில் இருந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்தவர் அபிநவ். இவர் மனைவி நவ்ரூப். இருவரும் துபாயில் வசித்து வருகிறார்கள், இந்நிலையில் தொழில் விடயமாக அபிநவ் மற்றும் நவ்ரூப் ஆகிய இருவரும் இலங்கைக்கு சில வாரங்களுக்கு முன்னர் வந்தனர்.

இருவரும் கொழும்பில் உள்ள சினமன் ஹொட்டலில் தங்கினார்கள். இந்த ஹொட்டலில் கடந்த 21ஆம் திகதி குண்டுவெடிப்பு நடந்த நிலையில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

அதாவது சம்பவத்தன்று, இருவரும் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு சினமன் ஹொட்டலுக்கு சென்றனர். அவர்கள் அங்கு செல்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் தான் குண்டு வெடித்தது. இதனால் இருவரும் உயிர் தப்பித்தனர்.

அதே போல அபிநவ் கடந்த 2008-ல் மும்பையில் தங்கி படித்து வந்தார். அப்போது தான் 2008 நவம்பர் 26ஆம் திகதி தீவிரவாதிகள் அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் 164 பேர் கொல்லப்பட்டனர், இந்த தாக்குதலின் போதும் அபிநவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சிறுவயதில் இருந்து துபாயில் வசித்து வரும் அபிநவ் இரு முறை தான் அங்கிருந்து வேறுநாட்டுக்கு சென்றுள்ளார். அந்த இரண்டு முறையும் அவர் சென்ற இடத்தில் குண்டுவெடிப்பு நடந்த நிலையில் இரண்டிலும் அவர் உயிர் பிழைத்துள்ளார்.

கிணற்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட இரட்டை சிறுமிகளின் உடல்கள் : ஏமாற்றிய கொடூரன்!!

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய நபரின் கிணற்றில் இருந்து தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

யாதகிரி மாவட்டத்தில் உள்ள ஹாஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாயமான நிலையில், அவரது சடலம் பாழடைந்த கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது,

கிணற்றின் உரிமையாளர் சீனிவாசனிடம் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்த மாணவி மட்டுமல்லாமல் கடந்த 1 மாத‌த்திற்கு முன் மோனிஷா என்ற சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்து உடலை கிணற்றினுள் வீசியதாக விசாரணையில் சீனிவாசன் ஒப்புக்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவார்.

இதேபோல 4 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 பெண்களையும் சீனிவாசன் இதே முறையில் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இதுவரை 5 பெண்கள் இதுபோன்று கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பகுதியில் பேருந்து வசதி இல்லாத‌தால் மாணவிகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள சீனிவாசன், பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து உடலை மறைக்க கிணற்றினுள் வீசியுள்ளார்.

இந்நிலையில் சீனிவாசன் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த அப்பகுதி மக்கள் அவரது வீட்டை அறுத்தி நொறுக்கி தீவைத்துள்ளனர்.

மயானத்தில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை!!

10 ஆம் வகுப்பு தேர்வில் தொடர் தோல்வி அடைந்த காரணத்தால் விரக்தி அடைந்த மாணவன் தனது தாயின் புடவையில் சுடுகாட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்த சுரேந்தர் என்பவருக்கு தந்தை இல்லை. தாய் சித்த மருத்துவமனையில் வேலை பார்த்து மகனை படிக்க வைத்துள்ளார்.

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சுரேந்தர் தோல்வி அடைந்துவிட்டார், இதனால் மீண்டும் டுடோரியல் கல்லூரியில் படித்து 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

ஆனால் , தற்போதும் தோல்வியடைந்ததையடுத்து விரகத்தியில் தனது தாயின் புடவையை எடுத்துசென்று சுடுகாட்டில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எவ்ளோ அசிங்கம் இது.. செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி ஜோடியை கிழித்த முன்னணிப் பாடகர்!!

ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடிக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மட்டும் அனிதா குப்புசாமி இருவரும் அளித்துள்ள பேட்டியில் செந்தில்-ராஜலக்ஷ்மி ஜோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர்.

“பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம், ஆபாசம்.. மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் ஆபாசம். மனைவியை பக்கத்தில் வைத்துகொன்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். யூடியூப்பில் பார்த்து நொந்துபோனேன்” என புஷ்பவனம் குப்புசாமி தாக்கி பேசியுள்ளார்.

“இவர்களை பார்க்கும்போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா?, பாடுவதை நிறுத்திவிடலாமா என யோசிக்கிறேன்”. மேலும் டிவி ரியாலிட்டி ஷோகளில் நடப்பது எதுவும் ரியாலிட்டி இல்லை.

யார் வெற்றி பெற வேண்டும் என முதலில் முடிவு செய்துவிட்டு பின்னர் அனைத்து விஷயங்களையும் செய்து அவர்களை வெற்றி பெற வைப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் கோர விபத்து : ஒருவர் பலி!!

கிளிநொச்சி சேவியர் கடை சந்தி அண்மித்த பகுதியில் நேற்று (30.04.2019) மாலை விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது.

வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் துவிச்சக்கர வண்டியில் சென்றவருடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சதாசிவம் சங்கநிதி வயது 83 என்ற முதியவரை இவ் விபத்தில் பலத்த காயங்களுடன் 1990 நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிலில் பயணித்தவரும் பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

யாழ் தென்மராட்சிப் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் : முதியவர் பலி, ஏழுபேர் படுகாயம்!!

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில் சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதல்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில் சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் இன்று மாலை 4.30 மணியளவில் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தினர்.

இத் தாக்குதல்களில் பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்டியால் (பாரை) குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மேலும் வீதியால் சென்ற பாலாவியைச் சேர்ந்த யே.திலிசாந் (வயது-25), பாலாவி வடக்கைச் சேர்ந்த சோ.கணேசமூர்த்தி39, தம்பிராஜா யோகராஜா (வயது -46), த. கவிதரன், நடராஜா வளர்மதி 52, செல்வராஜா குமார் 35 மற்றும் வைரமுத்து தவசீலன் 39 ஆகியோர் வாள் வெட்டு மற்றும் கல் வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் ந.வளர்மதி, செ.குமார் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பேலிப் பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் இது மூன்றாவது வாள்வெட்டுச் சம்பவமாகும்.

கடந்த திங்கட்கிழமை மாலையும் கெற்பேலியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டில் இருந்த பெறுமதியான பொருள்களை அடித்து நொருக்கி சேதமாக்கியமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

இலங்கை தொடர்பில் உலக நாடுகள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கொலை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பல பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

இலங்கைக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட பல நாடுகள் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன.

நோர்வே, சிங்கப்பூர், டென்மார்க், பின்லாந்து, மலேசியா, தாய்வான், கொரியா, ஜப்பான் ​உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

அத்துடன் தேவையான காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குச் செல்லுமாறு அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

நெதர்லாந்தும் தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாமென எச்சரித்துள்ளது. அதேவேளை இலங்கையின் தற்போதைய நிலை வழமைக்குத் திரும்பும் வரை அங்கு சுற்றுலா செல்ல வேண்டாமென பல்கேரியாவும் அறிவுறுத்திள்ளதுடன், மறு அறிவித்தல் வரை இலங்கைக்குச் செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியமும் சீனாவும் தமது நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளன.

சுவீடன், கனடா ஆகிய நாடுகளும் இலங்கைக்கு சுற்றுலா செல்ல வேண்டாமென தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன.

இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 255 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 40 இற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!!

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் தனிமையிலிருந்தபோது பாலியல் துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 14 வயதுச் சிறுமியான பாடசாலை மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் கடந்த மூன்றாண்டுகளாக இடம்பெற்று வருகின்றன.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எவ்விதமான முன்னேற்றமும் இன்றி அடுத்த தவணைக்காக திகதியிடப்பட்டுக் கொண்டு செல்வதாகவும் மகளின் கொடூரச்சம்பவம் இடம்பெற்று மூன்றாண்டுகள் கடந்தும் நீதியை நிலை நாட்டுவதில் காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் தந்தை கண்ணீருடன் தெரிவிக்கின்றார்.

இன்றைய தினம் வழக்கு விசாரணைகளுக்காக திறந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் மன்றில் ஆஜராகியிருந்தார். பெண்கள் அபிவிருத்தி நிலையம் இவ்வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

கடந்த வழக்கு விசாரணைகளின் போதும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிக்கை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இன்றைய தினமும் வழக்கு விசாரணைகளின்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கை மன்றில் பாரப்படுத்தப்படவில்லை. அறிக்கையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வழக்குத் திகதியிடப்பட்டுள்ளது அடுத்த வழக்குத்தவணை 30.09.2019 திகதியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கையில் காலதாமதங்கள் ஏற்படுவதனால் வழக்கு விசாரணைகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை மாறாக திகதியிடப்பட்டுக்கொண்டு செல்வதால் மகளின் கொடூரச்சம்பவத்திற்கு நீதி கிடைக்காமல் சென்றுவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கவலையுடன் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகரின் முக்கியபகுதிகளில் நடைபாதைகளில் வியாபாரம் மேற்கொள்ள வேண்டாம் : நகரசபை அறிவுறுத்தல்!!

வவுனியா நகரின் முக்கியபகுதிகளில் நடைபாதைகளில் வியாபாரம் மேற்கொள்ள வேண்டாம் என வவுனியா நகரசபை அறிவித்துள்ளது.

குறிப்பாக இலுப்பையடி, மற்றும் சந்தை சுற்றுவட்ட வீதி ஆகியபகுதிகளில் நடைபாதை வியாபாரம் மேறகொள்ளும் வர்தகர்கள் நாட்டின் அசம்பாவித நிலை கருதி வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறு வவுனியா நகரசபையால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்த போது, அண்மையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகரின் முக்கிய பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அதிக நெரிசலான நிலை ஏற்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக பொலிசாரும் எமக்கு தெரியப்படுத்தியிருந்தனர். எனவே நாட்டின் தற்போதைய நிலை சீராகும் வரைக்கும் நடைபாதை வியாபாரிகள் முக்கிய பகுதிகளில் தரித்து நின்று வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுத்துள்ளோம்.

இது அனைவரது பாதுகாப்பு கருதி எடுக்கபட்ட முடிவு என்றும் நாட்டு நிலமை சீரானதன் பின்பு நடைபாதை வியாபாரிகள் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்கபடும் என்று தெரிவித்தார்.

மயானங்களில் தீவிர தேடுதலில் விசேட அதிரடிப்படையினர்!!

மயான பூமிகளிலும் விசேட அதிரடிப் படையினர் சல்லடை போட்டுத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல்களின் பின்னர், பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது வாள்கள், கத்திகள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், வெடிகுண்டுகள் மற்றும் தற்கொலை அங்கிகள் உட்படப் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருவதுடன் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக மயான பூமிகளிலும் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் உட்பட மூவர் கைது!!

தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் உட்பட மூன்று பேர் காத்தான்குடியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஊடக இணைப்பாளர் மற்றும் அதன் பொருளாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவராக இருந்து முகமட் சர்ஹான் ஹாசீம் தலைவராக நீக்கப்பட்டதன் பின்னர் தலைவராக செயற்பட்டு வரும் முகமட் தௌவீக், தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பின் ஊடக இணைப்பாளர் முகமட் லெப்பை முகமட் பைரூஸ் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாய்தின் பொருளாளர் முகைதீன் பாபா முகமட் பைசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பின் ஊடக இணைப்பாளராக செயற்பட்டவரே தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பின் சமூக வலைத்தளங்களை நடத்தி வருவதாகவும் புலனாய்வுப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக தற்கொலை தாக்குதல்தாரிகள் தோன்றும் வீடியோ இவரால் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதெனவும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் இன்று காலை புதிய காத்தான்குடி சபீனா வீதியில் உள்ள வீடு ஒன்று விசேட அதிரடிப் படையினாரால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதியான முகமட் சர்ஹான் ஹாசீமுடன் தொடர்புகளை பேணிவந்ததாக தெரிவிக்கப்படும் அவரின் நண்பர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் சாய்ந்தமருதில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரியின் மனைவி உட்பட 15இற்கும் மேற்பட்டவர்கள் காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியான காத்தான்குடியை சேர்ந்த முகமட் ஹசீம் என்பவரின் மனைவியான செய்யது அகமது அஸ்மியா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதுவரையில் காத்தான்குடி பகுதியில் 12இற்கும் மேற்பட்டோர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளம் பெண்களை திருமணம் செய்து கழற்றி விடும் கில்லாடி காதலன் : மனைவி மூலம் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!!

தமிழகத்தில் இளம் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர், அந்த பெண்ணை ஏமாற்றி வேறோரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளவுதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது உறவினரின் மகளான நாமக்கல் மாவட்டம் குமாரபளையத்தைச் சேர்ந்த இளவரசியை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திக், இளவரசியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இளவரசி இது குறித்து திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், கார்த்திக்கிற்கும், இளரவசிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் திகதி பொலிசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் கார்த்தியின் பெற்றோருக்கு, இளவரசியை மருமகளாக ஏற்க மறுத்ததோடு, சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி திருமணம் ஆன மறுநாளே வீட்டை விட்டு சென்ற கார்த்திக் தற்போது வரை வீடு திரும்பவில்லை என்றும் தனது பெரியம்மாள் மகளை தற்போது கார்த்திக் திருமணம் செய்திருப்பதாகவும் கூறி இளவரசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்பு இதுபோன்று அவர் இரண்டு பெண்களை ஏமாற்றியுள்ளார் என்றும், நான் மூன்றாவது பெண், தற்போது நான்காவது பெண்ணாக அவரை திருமணம் செய்யவுள்ளார் என்று செய்தியாளர்களிடம் இளவரசி கூறியுள்ளார்.