ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த 8 வயது சிறுவன் : உறைய வைக்கும் காரணம்!!

டெல்லியில் பழிக்குப்பழி வாங்குவதற்காக ஒன்றரை வயது குழந்தையை 8 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத ஒன்றரை வயது குழந்தை ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மாயமாகியிருக்கிறது. உடனே அந்த குழந்தையின் தாய் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தீவிரமாக தேட ஆரம்பித்துள்ளார்.

வீட்டிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள கால்வாயில் அந்த குழந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வலது கண், வயிறு மற்றும் கால் மீது அதிக காயங்கள் இருந்துள்ளன.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரிக்கையில் பக்கத்து வீட்டை சேர்ந்த 8 வயது சிறுவன் மாயமாகியிருப்பது தெரியவந்தது. அந்த சிறுவனை தேடும்பொழுது அருகாமையில் உள்ள பூங்கா ஒன்றில் படுத்து கிடந்துள்ளான்.

அந்த சிறுவனை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளனர். அப்போது அந்த சிறுவன், கொல்லப்பட்ட குழந்தையின் சகோதரி தன்னை தாக்கியதாகவும், அதில் காயம் ஏற்பட்டதால் இரண்டு குடும்பத்தாருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளான்.

மேலும் இதற்கு பழிவாங்கும் விதத்தில் உறங்கி கொண்டிருந்த குழந்தையை வீட்டிலிருந்து கடத்தி வந்து கால்வாய் நீரில் வீசி எறிந்துள்ளான். பின்னர் தொடர்ந்து கற்களை கொண்டு தாக்கியதாக கூறியுள்ளான்

வவுனியா குழுமாட்டுச் சந்தியில் வாகன விபத்து : குழந்தை உட்பட இருவர் படுகாயம்!!

வவுனியா குழுமாட்டுசந்தியில் இன்று (30.04.2019) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரக்காரம்பளை வீதியிலிருந்து நெளுக்குளம் செல்வதற்கு பட்டாரக வாகனம் குழுமாட்டு சந்தியில் திரும்ப முற்பட்ட சமயத்தில் நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த குழந்தையும் அதன் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக தெரிவித்தமையினையடுத்து வழக்கு பதிவு செய்யவில்லை

இவ் விபத்து காரணமாக அவ்விடத்தில் சிறிது நேரம் பரப்பரப்பான சூழ்நிலை காணப்பட்டதுடன் மன்னார் வீதியூடான போக்குவரத்தும் சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது.

தாக்குதல் நடத்துவதற்கு முன் மசூதிக்கு சென்ற தீவிரவாதியின் பகீர் காணொளி வெளியானது!!

 

இலங்கை தேவாலயம் ஒன்றில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு தீவிரவாதியின் கடைசி நிமிட பிரத்யேக வீடியோவை பிரபல ஆங்கில ஊடகமான ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ளது.

கடந்த 21-ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் நடந்த அடுத்தடுத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலினால் தற்போது வரை 250-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் ஏராளமானோர் தங்கள் உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய திவீரவாதி Mohammed Nasar Mohammed Azar(34)-ன் கடைசி நிமிட சிசிடிவி வீடியோ காட்சியை பிரபல ஆங்கில ஊடகமான ஸ்கை நியூஸ் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.

அதில் அசார் தாக்குதல் நடத்திய நாளான ஞாயிற்றுக் கிழமை காலை 02.10 மணிக்கு மட்டகளப்பில் இருக்கும் Jami Us-Salam மசூதிக்கு இரண்டு பைகளுடன் வருகிறார். அதன் பின் அங்கு சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் காத்திருக்கும் அவர் கையில் தான் வைத்திருக்கும் மொபைல் போனை ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு 4.42 மணியளவில் ஏதோ பொலிசாரின் வாகனம் வருகிறது. அங்கு பொலிசார் பார்க்கும் போது அவன் இல்லை. இதைத் தொடர்ந்து மசூதி திறந்தவுடன் 5.42 மணிக்கு அசார் உள்ளே செல்கிறான்.

அதன் பின் உள்ளே சென்று அங்கிருக்கும் ஒருவரிடம் பேசிவிட்டு, உள்ளே இருப்பவர்களுடன் சேர்ந்து தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென்று எழுந்து செல்கிறார். இதைத் தொடர்ந்து 9.33 மணிக்கு பையில் பேக்குடன் வெளியில் சென்று தாக்குதலை நடத்தியுள்ளான்.

 

வவுனியாவில் இருவர் கைது : ஒருவரிடம் வாள்களும் மீட்பு!!

வவுனியா, பட்டானிச்சூர் புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வாள்களுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வர்த்தக நிலையம் ஓன்றில் பிறிதொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பட்டானிச்சூர் புளியங்குளம், வேங்குளம் ஆகிய இடங்களில் நெளுக்குளம் பொலிசார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது 37 வயதுடைய இளைஞர் ஓருவர் வாள்கள் இரண்டினை மறைத்து வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

வீட்டின் முற்பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றினில் குழாய் ஒன்றுக்குள் வைக்கப்பட்டு சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக அதனை கைப்பற்றிய பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் அக் கால்வாய் காணப்பட்ட வீட்டு உரிமையாளரான 37 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், வவுனியா நகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் வர்த்தக நிலையம் ஓன்றில் கடமையாற்றியவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை வவுனியாவில் பாதுகாப்பிற்காக 31 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும், வவுனியா நகரம், பசார் வீதி, பட்டக்காடு, பட்டானிச்சூர் புளியம்குளம், அரபா நகர், மதீனாநகர், செட்டிகுளம் என பல்வேறு பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகள், பொதுக் கட்டிடங்கள், வீதிகள், வாகனங்கள் என்பன சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இரண்டு வாள்களுடன் முஸ்ஸிம் இளைஞர் ஒருவர் கைது!!

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் வாள்கள் வைத்திருந்த குற்றசாட்டில் முஸ்லிம் இளைஞன் ஒருவர் இன்று(30.04) வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிளாஷ்ரிக் குளாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

திருகோணமலையில் வாளால் வெட்டப்பட்ட இளைஞனிற்கு உதவிசெய்ய மறுத்த சாரதிக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலையில் காயம் ஏற்பட்டநிலையில் இருந்த இளைஞனிற்கு உதவிசெய்ய மறுத்த முச்சக்கரவண்டி சாரதி இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரையும் ஆஜர்படுத்திய போதே மே மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகாமையில் இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வாளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதன் போது குறித்த இளைஞன் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் உதவி கோரிய போது அவ்விருவர் உதவி செய்ய மறுத்துள்ளனர்.

முற்றிலும் மனிதாபிமானமற்ற இச்செயல் தொடர்பாக முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரும் துறைமுக பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதோடு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா வர்த்தக நிலையம் ஒன்றில் ஒருவர் கைது!!

வவுனியா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யபட்டுள்ளார்.

நேற்றையதினம் மதியம் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற இராணுவத்தினர் குறித்தநபரை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியா நீதி மன்றிற்கு அருகில் கடமையில் இருந்த இராணுவத்தினர் முச்சக்கரவண்டி ஒன்றை வழிமறித்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது முச்சக்கரவண்டியில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடவுசீட்டு வைத்திருக்காத காரணத்தினால் வவுனியா பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், கடவுச்சீட்டை காண்பித்துவிட்டு செல்லுமாறு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டிருந்தார்.

வவுனியா நகர்ப்பகுதியில் அண்மைய நாட்களாக இராணுவம் மற்றும் பொலிசார் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாதவர்கள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சரியான தகவல்களை வெளிப்படுத்தாதோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வதுடன், சிலர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யபட்டுவருவதுடன், சிலர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல் : புலம்பெயர் தமிழ் சிறுமியின் நெகிழ்ச்சியான செயல்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கனடா வாழ் ஈழத்து சிறுமி ஒருவர் இணையத்தில் நிதி சேகரித்து வருகின்றார்.

கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. இதனால் குறித்த அமைப்புடன் தொடர்பை பேணியதாக கூறப்படும் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குண்டு வெடிப்புகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கனடா வாழ் ஈழத்து சிறுமி ஒருவர் இணையத்தில் நிதி சேகரித்து வருகின்றார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரசாந்தினி ரஜனிகாந்த் என்ற சிறுமியே நிதி சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளார். இவர் 2008ம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவராவார்.

இது குறித்து அந்த சிறுமி கருத்து தெரிவிக்கையில், “இலங்கை என்னுடைய தாய்நாடு என்பதால் மட்டும் நான் நிதி உதவி செய்ய நினைக்கவில்லை.

இந்த வெடிகுண்டு தாக்குதல் உலகளாவிய அளவில் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தனை உயிர்களை இழந்த பின்னும் இந்தப் பிரச்சினை தீரவில்லை.

30 ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள் போராட்டமும் இனப்படுகொலையின் சோகமும் இன்னும் இருக்கிறது. ஆனாலும் யாரும் உதவவில்லை. இந்நிலையில் இப்போது நடந்த தாக்குதலை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் இலங்கையைக் காப்பாற்றுங்கள்.

இங்கு திரட்டப்படும் தொகை அனைத்தும் ஆசிரி மருத்துவமனை மற்றும் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைக்காகவும் அவர்களின் தேவைக்காகவும் பயன்படுத்தப்படும்’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம் : ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!!

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை உடன் அமுலுக்கும் வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் வட்ஸ் அப், வைபர், இன்ஸ்டகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தேடுதலின் போது ஆயுதங்கள் மீட்பு : ஹோட்டல் உரிமையாளர் கைது!!

வவுனியா, கனகராயன்குளம் தாவீது ஹோட்டல் மற்றும் அவரது வீடு என்பன சோதனை செய்யப்பட்ட போது ஆயுதங்கள் மீட்கப்பட்டது. இச் சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளர் கனகராயன்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கனகராயன்குளம், ஏ9 வீதியில் உள்ள தாவீது ஹோட்டலில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் சோதனை மேற்கொண்டதுடன்,

மேலதிக தேடுதல் நடவடிக்கைகாக புளியங்குளம் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மற்றும் கனகராயன்குளம் பொலிசார் ஆகியோரையும் வரவழைத்தனர்.

இதனையடுத்து நேற்று மாலையில் இருந்து தாவீது ஹோட்டல், அதன் உரிமையாளரின் வீடு, மலசலகூடம் என அப்பகுதி சல்லடை போட்டு தேடப்பட்டது.

இதன்போது மலசலகூட தாவரம் அருகே மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டன.

அந்தவகையில் ஆர்பிஜி செல்கள்-02, கைக்குண்டுகள்-01, மிதிவெடிகள்-03, சொக்கன் ரவைகள்-17, ஆள் அடையாள அட்டைகள்-06 என்பன கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் குறித்த தாவீது ஹோட்டல் உரிமையாளரை நேற்று இரவு 8.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரும், கனகராயன்குளம் பொலிசாரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா குழுமாட்டுச் சந்தியில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

 

வவுனியா குழுமாட்டுசந்தியில் இன்று (30.04.2019) காலை 9.15 மணியளவில் இரு தனியார் பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக குழுமாட்டுச்சந்தி பகுதியிலுள்ள பயணிகள் தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் சுந்தரபுரத்திலிருந்து வந்த தனியார் பேரூந்து தரித்து நின்ற பேரூந்தினை முந்திச்செல்ல முற்பட்டடது.

இதன் போது தரித்து நின்ற பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இரு பேரூந்துகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

சுந்தரபுரத்திலிருந்து – வவுனியா நோக்கி பயணிக்கும் குறித்த தனியார் பேருந்து தினசரி இவ்வாறே அதிவேகமாக பயணிப்பதாக பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

வவுனியா வீரபுரம் பகுதியில் டெட்டனேற்றர்கள் மீட்பு!!

வவுனியா வீரபுரம் பகுதியில் 24 டெட்டனேற்றர் குச்சிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மீட்கப்பட்டதாக செட்டிகுளம் பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.

வீரபுரம் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் வீதிக்கரையில் உள்ள பற்றை ஒன்றில் மறைத்து வைக்கபட்டிருந்த நிலையில் காணப்பட்ட 24 டெட்டனேற்றர் குச்சிகளையும், அதனுடன் இணைந்த வயர்களையும் மீட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து செட்டிகுளத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதற்கமைய வீரபுரம் பகுதியிலும் இராணுவத்தினரால் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டு பேருந்துகள், ஏனைய வாகனங்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் முழுமையான சோதனை செய்யபட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி!!

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களின் ஈஸ்ரர் புனித நாளிலே ஆறாத வடுவான தேவாலயங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கும் கொல்லப்பட்ட வெளிநாட்டவருக்கும் தீபமேந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா இறம்பைக்கும் அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (29.04.2019) காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

தேவாலய வாயிலில் மெழுகுதிரி ஏற்றப்பட்டு ஆலயத்தினுள் சென்று மெழுகுதிரியினை ஆலயத்தினுள் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இவ் அஞ்சலி நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள், சிறுவர்கள், அருட்சகோதரி என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இறுதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு தேவாலயத்தினுள் இருந்து நடைபயணமாக சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கிருந்து கடை வீதி வழியூடாக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை சென்றடைந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் முன்னெடுத்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் 800 நாள்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வவுனியாவில் மினி சூறாவளியால் 36 குடும்பங்கள் பாதிப்பு : 26 வீடுகள் சேதம்!!

வவுனியா, பறநாட்டாங்கல், பனிக்கர் புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட மினி சூறாவளியால் 36 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன், 26 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பாதிப்புற்ற பகுதிகளை பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கையில், வவுனியா, பறநாட்டங்கல், பனிக்கர் புளியங்குளம் பகுதியில் நேற்று (28.04) மாலை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த போது மினி சூறாவளி ஏற்பட்டது.

இதன் காரணமாக அப் பகுதியில் உள்ள தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், பல வீடுகளும் சேதமடைந்தன. இதனால் மழை நீர் வீட்டுக்குள் சென்றமையால் மக்களது உடுபுடவைகள் மற்றும் அனைத்தும் பொருட்களும் நீரில் நனைந்தன.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் அம்மக்கள் உடனடியாக தங்க வைக்கப்பட்டதுடன், அவர்களது வீட்டுக் கூரைகளுக்கு தற்காலிகமாக போடுவதற்காக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்ததால் 20 தறப்பால்கள் வழங்கப்பட்டது.

இக் காற்று காரணமாக 5 வீடுகளின் கூரைகள் முழுமையாகவும், 22 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. தென்னை, வாழை, பலா போன்ற பயன்தரு மரங்களும் நிலத்துடன் சாய்ந்து விழுந்துள்ளன. இம் இம் மக்களுக்கான உதவிகளையும், வீடுகளுக்கான இழப்பீடுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ சேவைகள் நிலைய உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதிப்படைந்த மக்களைப் பார்வையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாதிப்படைந்த மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை வழங்கப்படும் என தெரிவித்ததுடன், இம் மக்களுக்கான அனர்த்த உதவித் திட்டங்கள வழங்கல் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் நிலைய மாவட்ட உதவிப் பணிப்பாளருடனும் கலந்துரையாடியிருந்தார்.

100 பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளேன் : உன்னால் என்ன முடியுமோ செய்துகொள் : தொழிலதிபர் கைது!!

ஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதோடு மட்டுமல்லாமல் 100 பெண்களை சீரழித்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதான ராதகிருஷ்ணன் என்பவருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தின் காரணமாக, ராதாகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் தனது பிறந்தநாள் என்று, அதற்கு விருந்து கொடுப்பதற்காக கல்லூரி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு காரில் அழைத்து சென்றார்.

காரில் அழைத்து செல்கையில் பலமுறை சில்மிஷம் செய்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், ஹொட்டலுக்கு அழைத்து சென்று பலமுறை ஒன்றாக இருந்தததில் மாணவி கர்ப்பமானதையடுத்து, காரில் வைத்து தாலிகட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.

பின்னர், அந்த மாணவியை அவரது நண்பர்களிடம் அனுசரித்து போக வேண்டும். அவர்களது ஆசைக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டி வந்தார்.

இதனால் பயந்துபோன மாணவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், கல்லூரி மாணவியை தகாத வார்த்தையால் திட்டி, உன்னை போல் நான் 100க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ளேன். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டியுள்ளார்.

இதனால் கைது செய்யப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் பல பெண்களை மிரட்டி தவறாக நடத்திருக்ககூடும் என பொலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராதாகிருஷ்ணனின் செல்போனில் 600 எண்கள் சேமித்து வைத்திருந்ததாகவும், அதில் பாதி எண்கள், பெண்கள் தொடர்பு எண்கள் என்பது தெரியவந்தது.

ராதாகிருஷ்ணனால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர், இவரிடம் விவாகரத்து கோரி இவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையை மூச்சுத்திணற கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்!!

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த 24 வயதான பெண்மணி தனது குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் – ஆதிரா தம்பதியினருக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது.

ஆதிரா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பதறியடித்துக் கொண்டு சென்றார்.

தனது குழந்தை மூச்சு திணறல் காரணமாக மயங்கி விழுந்துவிட்டதாக கண்ணீர் சிந்தியுள்ளார்.

மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதனால் மருத்துவர்கள் ஆதிராவிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளார்.

இதனால் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக இதுபற்றி பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில்,

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பெற்ற குழந்தையை ஆதிராவே தலையணையால் முகத்தை மூடி மூச்சு திணறவைத்து கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

தற்போது ஆதிரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.