இலங்கையில் எட்டு இடங்களில் கோர குண்டு வெடிப்பு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு!!

கோர குண்டு வெடிப்பு

இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் காரணமாக இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர்.  நீர்கொழும்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துளள்ளார்.

கொழும்பு, கட்டான, மட்டக்களப்பு பகுதிகளிலுள்ள தேவாலயம், கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள், மற்றும் பல இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் 500 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவர சிகிச்சைகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 40 பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை : அரசாங்கம் அறிவிப்பு!!

விடுமுறை

அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இன்று காலை முதல் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலை காரணமாக நிலை காரணமாகவே குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் பொது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் இருந்தும் தடுக்கும் முகமாகவே இந்த அறிவித்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில்!!

பொலிசார் பாதுகாப்புக் கடமையில்

நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு அமைய இந்த ஊரடங்கு சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பின் பல இடங்களில் குண்டுவெடிப்பு : இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்!!

ஊரடங்கு சட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு அமைய இந்த ஊரடங்கு சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பேஸ்புக் முற்றாக முடக்கம்!!

பேஸ்புக் முற்றாக முடக்கம்

இலங்கையில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
தொடரும் பதற்ற நிலையை தவிரப்பதற்காக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதற்றத்தை மேலும் கூட்டும் நோக்கில் சமூகவலைத்தளங்களில் போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக மத , இன வாதங்களைத் தூண்டும் செய்திகளும் பதிவுகளும் பகிரப்படுவதனால் சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடரும் தொடர்குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவை அதிகமாக பகிரப்படுவதால் முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் : பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள்

இலங்கை இன்று அதிர வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூடிய எச்சரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்டதாக அரசாங்க புலனாய்வு பிரிவினால், பாதுகாப்பு அமைச்சிற்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்கொலை குண்டு் தாக்குதல் மேற்கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் ஆயத்தங்கள் தொடர்பில் அரசாங்க புலனாய்வு பிரிவினால் பாதுகாப்பு பிரிவிடம் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் மூலம் மேலதிக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்து பொறுப்பான பிரிவுகளுக்கு கடிதம் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த எச்சரிக்கை தொடர்பான உண்மைத்தன்மை குறித்து இதுவரையில் பாதுகாப்பு அமைச்சு அலலது பொலிஸ் திணைகளத்தினால் உறுதி செய்யப்படவில்லை என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வெளியிலுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இதுவரை ஆறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி!!

9 வெளிநாட்டவர்கள் பலி

கொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டு வெடிப்புகளில் காயமடைந்த 251 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் பெரும் பரபரப்பு : நட்சத்திர ஹோட்டல்களில் இறந்துகிடக்கும் வெளிநாட்டவர்கள்!!

கொழும்பில் பெரும் பரபரப்பு..

கொழும்பில் அமைந்துள்ள முக்கிய நட்டத்திர ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள சங்கீர்லா, சினமன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் இன்று காலை பதிவாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த நட்டத்திர ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.

இவ் வெடிப்பு சம்பவங்களில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஆறு பகுதிகளில் வெடிப்பு சம்பவங்கள் : அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

அதிர்ச்சிப் புகைப்படங்கள்

இலங்கையின் ஆறு இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பகுதிகளில் மக்கள் குழுமியிருப்பதனை தவிர்க்குமாறு பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.

கொழும்பு – கொச்சிகடை, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்று தேவாலயங்களில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதேபோன்று ஷங்ரீ லா, கிங்ஸ்பரி மற்றும் சினமன் க்ரான்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு அருகாமையில் மக்கள் சூழ்ந்திருப்பதனை தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார்.

இவ்வாறு மக்கள் குழுமுவது ஆபத்தானது எனவும் விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் எனவும், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதிலும் சிக்கல் நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் பலர் காயமடைந்திருப்பதாகவும், உயிரிழந்தோர் பற்றிய விபரங்களை தற்போதைக்கு அதிகாரபூர்வமாக வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை வெடிப்பு சம்பவம் : 23 பேர் பலி!!

கொழும்பு கொச்சிக்கடை வெடிப்பு..

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் 160 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மேலும் இரண்டு குண்டுகள் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதனை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி..

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் இன்று காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி!!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வெடிப்பு

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் இன்று காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கொச்சிக்கடை வெடிப்பு சம்பவம் : 23 பேர் பலி..

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் 160 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மேலும் இரண்டு குண்டுகள் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதனை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

-தமிழ்வின்-

கொழும்பில் மேலும் மூன்று ஹோட்டல்களில் வெடிப்பு சம்பவம்!!

வெடிப்பு சம்பவம்

கொழும்பிலுள்ள சங்கீர்லா, சினமன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சங்கீர்லா ஹோட்டலின் மூன்றாவது மாடியில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அதே ஹோட்டலில் மேலும் ஒரு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் வெளிநாட்டவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையின் ஆறு இடங்களில் அதாவது மூன்று தேவாலயங்களிலும், மூன்று ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவம் : ஐந்திற்கும் மேற்பட்டோர் மரணம்?

வெடிப்பச் சம்பவம்

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 5இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சியோன் தேவாலயத்திலேயே இந்தம சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கொழும்பிலுள்ள இரண்டு தேவாலயங்கிளிலும் வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்திருக்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பிலுள்ள தேவாலயத்திலும் குண்டு வெடிப்பு : பலர் மரணம்?

குண்டு வெடிப்பு

நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்தில் செபஸ்னடியன் தேவாலயத்திலும் சற்று முன்னர் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யேசு உயிர் தெழுதநாளான இன்று இவ்வாறு 5 இடங்களில் அடுதடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதன்போது சம்பவம் இடம்பெற்ற எல்ல இடங்களிலும் பலர் காயமடைந்து, சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பில் கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு : பலர் படுகாயம்!!

கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. குண்டொன்றே வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டியூடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

மேலும் தேவாலய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் என்பதால் பெருந்திரளான மக்கள் தேவாலயத்திற்கு ஆராதனைக்காக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்தில் செபஸ்னடியன் தேவாலயத்திலும் சற்று முன்னர் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யேசு உயிர் தெழுதநாளான இன்று இவ்வாறு 5 இடங்களில் அடுதடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதன்போது சம்பவம் இடம்பெற்ற எல்ல இடங்களிலும் பலர் காயமடைந்து, சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் மீண்டும் ஒரு பேரவலம்!!

மீண்டும் ஒரு பேரவலம்

புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வன்முறை முயற்சிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை 19 வயதான கர்ப்பிணியான இளம் குடும்பப் பெண் அருகில் உள்ள காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு கள்ளச்சாரயம் காய்ச்சி வரும் 55 வயது மதிக்கத்தக்க நபர் அப்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி மது பருக்கி, அவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

எனினும், அங்கிருந்து தப்பிய அப் பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

ஊர்காவல்துறைப் பொலிஸார் இது தொடர்பான முறைப்பாட்டினை ஏற்று சந்தேக நபரை தேடிவருகின்றனர். இதேவேளை பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிகளவான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு நாட்டில் எங்கும் இராணுவத்தினர் குடிகொண்டிருக்கும் நிலையிலும் யுத்த காலத்தில் இல்லாத அளவிற்கு இன்று பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

பெண்கள் தனியே வெளியே செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள். இது தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் கவனம் செலுத்தி பெண்களின் தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.