புகையிரதத்தில் முன்னால் பாய்ந்த 17 வயது பள்ளி மாணவி : வீட்டிலிருந்து அழுது கொண்டே வெளியேறிய பின்னர் எடுத்த முடிவு!!

17 வயது பள்ளி மாணவி

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ரெயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் மகள் காவ்யா (17). இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியிருந்த காவ்யா அதன் முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. இதில் அனைத்து பாடங்களிலும் காவ்யா தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் அவர், 600-க்கு 244 மதிப்பெண்களே எடுத்திருந்தார். இதனால் காவ்யா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். வீட்டில் தனியாக இருந்த அவர், அழுதுகொண்டே வெளியேறினார்.

பின்னர் ரெயில்வே தண்டவாளத்தின் அருகில் அமர்ந்து, ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது கடலூர் மார்க்கத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ரெயில் முன் காவ்யா பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

காவ்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து, உடலை பார்த்து கதறி அழுதனர். இதை தொடர்ந்து பொலிசார் காவ்யாவின் சடலத்தை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யாழ்.பலாலி வீதி உருப்பிராயில் கோர விபத்து!!

கோர விபத்து

யாழ்.பலாலி வீதி உரும்பிராயில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று மாலை 4.15 மணியளவில் உரும்பிராய் இலங்கை வங்கிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேருக்கு நேர் வந்த உந்துருளியும், முச்சக்கர வண்டியொன்றும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒன்றுடன் ஒன்று, மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளான இருவர் வீதியில் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

பரிதாபமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு, வவுணதீவில் வடிசாராயம் அருந்திய நபர் ஒருவர் நேற்று பகல் உயிரிழந்துள்ளார். இலுப்படிச்சேனை பகுதியை சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று முழுவதும் மதுபோதையில் இருந்த நிலையில் வீட்டின் முன்னால் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப் பிரதேசத்தில் வடிசாராய பாவனை அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த விநோத சம்பவம் : விபரீதமாக மாறிய அவலம்!!

விநோத சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் விநோதமான விபத்து ஏற்பட்டமையினால் நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வீதியால் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று ஒன்று புடவைக் கடைக்குள் புகுந்தமையினால் முதியவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

பருத்தித்துறை நகரத்தில் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள புடவை கடைக்குள் குறித்த வாகனம் புகுந்துள்ளது.

குறித்த புடவைக்கடை சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்து உடைகள் அனைத்தும் குறித்த வாகனத்தின் மீது விழுந்துள்ளது. தெய்வாதீனமாக உயிர்ச் சேதங்கள் ஏற்படாத போதும், விபத்துக்குள்ளான வாகனம் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடொன்றில் விபத்தில் சிக்கியுள்ள மூன்று இலங்கையர்கள் : ஒருவர் பலி!!

ஒருவர் பலி

சவூதி அரேபியாவில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை பகுதியை சேர்ந்த முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், விபத்தில் சிக்கிய மருதமுனையை சேர்ந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சவூதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக இவர்கள் மூவரும் சவூதி அதிவேகப்பாதை வழியே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சிக்கிய மூவரூம் மருதமுனையை சேர்ந்தவர்கள். ஒருவர் சம்பவ இடத்தில் மரணித்துள்ளார். ஏனைய இருவரில் ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளது எனவும், மற்றையவர் கோமா நிலையில் இருக்கின்றார் எனவும் தெரியவருகின்றது. இவ்விபத்து தொடர்பில் சவூதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம்!!

சுகாதார அமைச்சினால் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்தார்.

தமது வெளிநாட்டுச் சிறப்புப் பயிற்சியினை நிறைவு செய்து கடந்த வாரம் நாடு திரும்பியிருந்த வைத்தியர் மு.ஞானரூபன் இவ்வாரம் வவுனியா வைத்தியசாலையில் தமது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்

உரிய வைத்திய நிபுணர் இன்மையால் நீண்ட காலமாக வவுனியா மற்றும் வவுனியாவினை அண்டிய பிரதேச மக்கள் கண் சிகிச்சைகளுக்காக தொலைதூரங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்டக் கூட்டம்!!

இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் ரெலோவின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகின்றது.

ஆயுதக் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பாக நிலைப்பாடு, தமிழரசுக் கட்சியின் அண்மைக்கால செயற்பாடு, ரெலோவின் அடுத்தகட்ட நகர்வு, வரவிருக்கும் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக் கலந்துரையாடலில் பேசப்படுகின்றது.

குறித்த உயர்மட்ட கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் ஸ்ரீகாந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இச் சந்திப்பு தொடர்பான செய்தி சேகரிப்புக்கு சென்ற ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வடக்கு , கிழக்கு இளைஞர் அணி மாநாடும் நிர்வாகத் தெரிவும்!!

இளைஞர் அணி மாநாடு

இலங்கை தமிழரசு கட்சியின் வடக்கு கிழக்கு பகுதியினைச் சேர்ந்த இளைஞர் அணி மாநாடும் நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் ப.சத்தியலிங்கம் தலமையில் நடைபெற்று வருகின்றது.

இம் மாநாட்டில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்னசிங்கம் , ஈ.சரவணபவன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த பல இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவ் இளைஞர் அணி மாநாடு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு ஊடகவியலாளர் தவசீலன் பொலிசாரால் கைது!!

தவசீலன் பொலிசாரால் கைது

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பிரச்சனையினை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் பொலீசார் மற்றும் படையினர்,படைபுலனாய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இது தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பல தெரியப்படுத்தியும் எதுவித முன்னேற்றமான நடவடிக்கையும் இல்லாத நிலை தற்போதும் தொடர்ந்து வருகின்றது.

இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.19 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனம் தெரியா நபர் ஒருவர் போராடட காரர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தவேளை அவரை ஆர்ப்பாட்ட காரர்கள் அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என்று வினவியபோது அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பிஓடிய போது ஆர்ப்பாட்ட காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா எனஅடையாளப்படுத்தியபோது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்த போது அவரை குறித்த இடத்தில் வருகைதந்த பொலிசாரிடம் ஒப்படைத்து திரும்பியுள்ளார்.

இன்னிலையினை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் உண்மைக்க புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்யுதுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 18.04.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான ச.தவசீலனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் இன்று காலை பொலீஸ் நிலையத்துக்கு அழைத்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைதுசெய்துள்ளனர் .

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளரை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த பொலீசார் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன .

அதிஷ்டமாக கிடைத்த 35 இலட்சம் ரூபா : நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பெருந்தொகை பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை தெளிவுபடுத்த தவறிய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் 35 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்துடன்கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர். குறித்த நபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையில் பெருந்தொகை பணம் இவர்கள் வசமிருந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்கமைய அவர்களுக்கு பணம் எப்படி கிடைத்ததென அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை. அதற்கமைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மரணித்துப் போன மனிதாபிமானம் : கொலைக்கு யார் பொறுப்பு?

மரணித்துப் போன மனிதாபிமானம்

மனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை காலம் கருத்திக் கொண்டிருந்தோம், ஆனால் இன்றைய உலகில் நடக்கும் செயல்களை காணுகையில், மனிதநேயம் என்பது இறந்து மண்ணோடு புதைந்து விட்டதேன்றே எண்ண தோன்றுகின்றது.

இதனை கேட்டதும் அதிசயிக்கலாம் ஆயினும் அதுவே உண்மை. இதனை ஏற்க மறுக்கும் மனங்களும் அண்மையில் நடந்த கொடூர கொலை சம்பவத்தால் ஒரு இளைஞனின் உயிர் அநியாயமாக பறிபோன கதை கேட்டால், மறுத்ததை எண்ணி ஒரு கனம் மனம் கலங்கும்.

அண்மையில் தமிழர் தலைநகரான திருகோணமலையில் 21 வயதான இளைஞன் தனது நண்பனாலேயே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் என்ன மனிதநேயமில்லை? தினசரி ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என்று நடப்பவை தானே? ஊடகங்களில் நாளுக்கு நாள் இது போன்ற பல செய்திகள் வெளிவந்த வண்ணமாக தானே உள்ளது என்று சட்டென எண்ணி விடுகின்றது நமது மனது. எனினும் இந்த கொலை சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது தான்.

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட காதல் விவகாரத்தால் ஒரு இளைஞன் மற்றைய இளைஞனை கழுத்ததறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன்ற வீதி, வில்லூன்றி பகுதியைச் சேர்ந்த தங்கதுரை தனுஷன் என்ற இளைஞனே கடந்த செவ்வாய் கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த இளைஞன் சம்பவதினத்தன்று வீட்டில் இருந்த வேளையில் அவரது நண்பர் வீட்டிற்கு வந்து வெளியே செல்வதற்காக அவரை அழைத்துள்ளார். எனினும் தனுஷன் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பழுதாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, தனுஷனின் நண்பர் என்னுடைய மோட்டார் சைக்கிளில் செல்லலாம் என்று அழைத்து தனுஷனையே மோட்டார் சைக்கிளை செலுத்துமாறு கூறி பின்னே அமர்ந்து வந்துள்ளார்.

திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக்காணிக்கு மோட்டார் சைக்களில் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து, அங்கு வைத்தே பின்னே அமர்ந்து வந்த நபர் திடீரென தனுஷனின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றுள்ளார்.

உடனடியாக தனுஷன் கழுத்தறுப்பட்ட நிலையில், தனக்கு உதவுமாறு கோரி ஒரு முச்சக்கரவண்டி சாரதியிடம் சென்று கேட்ட போதும் அவர் தனுஷனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அதன்பின் ஓடிச்சென்று கடற்படைத்தளத்திற்கு முன்பாக விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போதே அவர் உயிரிழந்துள்ளார்.

இதனடிப்படையிலேயே உற்றுநோக்கின் கொலையாளியாக தனுஷனின் நண்பன் காணப்பட்டாலும், மறைமுகமான கொலையாளியாக அந்த முச்சக்கர வண்டி சாரதியே இனம் காணப்படுகின்றார்.

ஏனெனில் தனுஷன் வந்து உதவி கோரிய வேளையே தாமதிக்காது அவரை உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருந்தால் நிச்சயமாக அவரை காப்பாற்றி இருக்கலாம் என்றும், வைத்தியசாலைக்கு செல்ல 4 நிமிடங்கள் போதுமானதென்றும் அந்த பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஏன் அதனை அந்த சாரதி செய்ய தவறினார்? கேள்விக்கான பதில் சுயநலம், இவனை காப்பாற்ற சென்றால் தனக்கு நேரும் பிரச்சினைகள் எண்ணி பயம். அந்த சில நிமிடங்கள் சுயநலம், பயம் இவை இரண்டு சேர்ந்து மனிதநேயத்தை வேறோடு அழித்து விட்டன.

என்ன மாதிரியான ஒரு சுயநலம் நிறைந்த உலகிலும், மனிதநேயமற்ற சமூகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எங்கள் மீதே எங்களுக்கு கோபம் வர வேண்டும். அதே கழுத்தறுப்பட்ட தனுஷன் அந்த முச்சக்கரவண்டி சாரதியின் மகனாக இருந்தால் அவர் நிச்சயம் துடிதுடித் திருப்பார். உயிர் என்றாலும் தன்னுடைய உறவானால் மாத்திரமே மதிப்பு, பிற உயிர் என்றால் ஒருவித அலட்சியம்.

மனிதர்களே நாங்கள் ஒரு கனம் சிந்திக்க வேண்டும் இந்த உலகில் யாருக்கும் யாரது உயிரை பறிப்பதற்கும் உரிமையில்லை. எனின்னும் சிந்திக்கும் தன்மையிழந்த சில மூடர் கூட்டங்கள் அதனை ஏற்காது இவ்வாறான கொலைகளிலும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை நாங்கள் வண்மையாக கண்டிக்க வேண்டும். கொலையாளிகளில் பார்க்க மிகவும் கொடூரமானவர்கள் தான் இந்த மனிதநேயம் இன்றி செயற்படும் மறைமுக கொலையாளிகள். சுயநலமான மனநிலையிலிருந்து நாங்கள் வெளிவர வேண்டும், நம்மவர்களுக்காக மட்டும் வாழாது பிற உயிர்களையும் மதிக்க வேண்டியது நமது கடமை.

அதேபோல இவ்வாறு ஒரு உயிர் பரிதாபகரமாக செல்வதற்கு நாம் மறைமுகமாக கூட காரணமாகிவிடக்கூடாது, இனியாவது இந்த முச்சகரவண்டி சாரதி போல் செயற்படாது மனிதநேயத்துடன் செயற்பட்டு பிற உயிர்களை மதித்து முடிந்த வரை காப்பாற்றுவோம் என நமக்கு நாமே உறுதியளித்து கொள்வோம்.

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 20 க்கு மேற்பட்ட சாரதிகள் மீது வழக்குத் தாக்குதல்!!

போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (20.04.2019) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் வவுனியா நகரசபை வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுமார் இரு மணிநேரத்தில் மாத்திரம் இருபதுக்கு அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன் பத்துக்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டு்ள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம் எழுப்பும் கோன் போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் ஆபத்தான நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழர்!!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதி ஒருவரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த இலங்கை அகதி புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

2010ம் ஆண்டு அவருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட போதும், பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என தெரிவிக்கப்பட்டு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ள நிலையிலும், அவர் தொடர்ந்தும் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய சட்டங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவரால் மீண்டும் பாதுகாப்பு விசாவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரை விடுதலை செய்ய வேண்டும் என அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் விசேட அதிரடிப் படையினர்!!

விசேட அதிரடிப் படையினர்

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெற உள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி அந்த மண்டபத்தை விசேட அதிரடி படையினர் பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நகரசபை வாயில் மற்றும் நகரசபை மண்டபத்தில் பாதுகாப்பு அதிரடி படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பெருமளவில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இலங்கை அரசாங்கம் : மகிழ்ச்சியில் சாரதிகள்!!

மகிழ்ச்சியில் சாரதிகள்

அமுலிலுள்ள 25000 ரூபா என்ற தண்டப்பணத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வாகனங்களை இடது பக்கமாக முந்திச் செல்லும் குற்றத்திற்காக தற்போது 25,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படுகிறது.

இந்த தண்டப்பணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் கிடைத்துள்ள வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

திருத்தம் தொடர்பான வர்த்தமானி பத்திரத்தை நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்து, கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஷோக் அபேசிங்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஏனைய வீதி ஒழுங்குமீறல்களுக்காக விதிக்கப்படும் 25,000 ரூபா தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது எனவும் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார்.

முல்லைத்தீவில் ஏற்பட்ட பெரும் சோகம் : மின்னல் தாக்கி இளைஞன் பரிதாபமாக பலி!!

இளைஞன் பரிதாபமாக பலி

கிளிநொச்சி விஸ்வமடுப் பகுதியில் மின்னல் தாக்கி 17 வயது இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.  இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கிளிநொச்சி, விஸ்வமடு பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே இருந்த மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கம் ஏற்பட்டதில் 17 வயது இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளார்.

விஸ்வமடுவைச் சேர்ந்த த.தயானந்தன் (வயது 17) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் தற்போது ஓப்படைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக கடும் மின்னல் தாக்கம் காணப்படுவதுடன் யாழில் மின்னல் தாக்கம் காரணமாக மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.