நீரில் மூழ்கி மாயமான மாணவன் சடலமாக மீட்பு!!

மாணவன் சடலமாக மீட்பு

நாவலப்பிட்டி – கலபொட நீர்வீழ்ச்சியில் நீராட சென்று காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று கடற்படையினரின் உதவியோடு மீட்கபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்வீழ்ச்சிக்கு கீழ் பகுதியில் அமைந்திருந்த ஆழமான குழியொன்றில் இருந்தே கடற்படையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை விக்ரபாகு வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் கம்பள, போவள பகுதியை சேர்ந்த 18 வயதுடைய துஷார பிரதீப் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் பாதணி ஆற்றில் விழுந்ததாகவும் பாதணியை எடுப்பதற்கு முற்பட்ட போதே அவர் ஆற்றில் தவறி விழுந்ததாகவும் உயிரிழந்த இளைஞரின் காதலி வாக்கும்மூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இளைஞனும் அவரின் காதலியும் காலபொட ஆற்றில் நீராடி கொண்டிருந்தவேளை இளைஞனை நீர் ஆழமான பகுதிக்கு இழுத்து சென்றதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாவலபிட்டி நீதவான் தலைமையில் மரண விசாரனைகள் இடம்பெற்றதன் பின்னர், உயிரிழந்த இளைஞனின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.

மேலும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காட்டுக்குள் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடல் : நீதி கேட்கும் 50 ஆயிரம் மாணவர்கள்!!

எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவி

கர்நாடகா மாநிலத்தில் மது என்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி வேண்டி சுமார் 50 ஆயிரம் பேர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது வைரலாகியுள்ளது.

ராய்ச்சூரில் உள்ள நவோதயா பொறியியல் கல்லூரியில் Civil Engineering பயின்று வந்துள்ளார். கல்லூரிக்கு சென்ற இவர் காணாமல் போன நிலையில் 2 நாட்கள் கழித்து காட்டுக்குள் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

கல்லூரியில் இருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுக்குள் பாதி உடல் எரிக்கப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனக்கூறி வழக்கை மூடி மறைக்க முயல்வதாக மனித உரிமை அமைப்பினர் மற்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், மாணவி மதுவுக்கு நியாயம் வேண்டி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர். தற்போது 50 ஆயிரம் பேர் இதில் இணைந்துள்ளார்கள். மேலும் தேர்தல் நேரம் என்பதாலும் இதனை அதிகாரிகள் ரகசியமாக கையாளுகிறார்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த 2 குழந்தைகள் : அலறியடித்து ஓடிய சகோதரி!!

ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த 2 குழந்தைகள்

ஐதராபாத் மாநிலத்தில் வீட்டிலிருந்து மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த தேவராயா குமார் (38) என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற தன்னுடைய காதல் மனைவி சிரிஷாவை அழைத்து வர சென்றிருக்கிறார்.

ஆனால் அவருடைய மனைவி வீடு திரும்ப மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், மனைவியுடன் சண்டை போட்டதுடன், உன்னுடைய குழந்தைகளை அனுப்பி வைக்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

அன்றைய தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு, அதிகமான மது போதையில் குமார் வீடு திரும்பியிருக்கிறார். அந்த சமயம் அவருடைய மூன்று குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.

1 மணியளவில் அவருடைய 6 வயது மகன் அகிலை தனியாக அறைக்கு எடுத்துச்சென்று தூக்கில் தொங்கவிட்டுள்ளார். பின்னர் அவனை இறக்கி தரையில் கிடத்தும்பொழுது, லேசாக அசைந்திருக்கிறான்.

இதனை பார்த்த குமார், உடனே ஒரு கத்தியை எடுத்து மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறான். பின்னர் தன்னுடைய 4 வயதான மகள் சரண்யாவை கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு, சிறிது நேரம் புகைபிடித்துக்கொண்டிருந்துள்ளான்.

இதற்கிடையில் விழித்தெழுந்த 10 வயதான மகள் மல்லேஸ்வரி, ரத்தவெள்ளத்தில் சகோதரனும் சகோதரியும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை கவனித்த குமார், மல்லேஸ்வரியையும் கழுத்தை அறுக்க முற்பட்டுள்ளார். ஆனால் அவரிடம் சண்டையிட்ட மல்லேஸ்வரி லேசான ரத்த காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்துக்கு வீட்டு நபர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இரண்டு குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!

கல்லூரி மாணவியின் சடலம்

கர்நாடக மாநிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவி மதுவின் சடலம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் உள்ள நவோதே பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மது என்கிற மாணவி கடந்த 13ம் திகதி முதல் மாயமாகியிருக்கிறார்.

16ம் திகதி கல்லூரியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் இவரது உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் பொலிஸார் தற்கொலை என வழக்கினை முடிக்க நினைத்தனர் . ஆனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மது பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டாயத்தின் பேரில் கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இணையதளவாசிகள் இணைந்து, மதுவிற்கு நீதி கேட்கும் ஒரு ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் : அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

பதறவைக்கும் சம்பவம்

இந்தியாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் மகேந்திரா. இவருக்கும் பல்கர் (21) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு முன்னர் பல்கர், சோலாங்கி என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் அவருடனான தொடர்பை துண்டித்தார். ஆனால் சோலாங்கியால் பல்கரை மறக்க முடியவில்லை, இதன் காரணமாக தன்னுடன் தொடர்ந்து பழக வேண்டும் என பல்கரை சோலங்கி வற்புறுத்தி வந்தார். ஆனால் இதற்கு பல்கர் சம்மதிக்காத நிலையில் அவர் மீது சோலாங்கி ஆத்திரம் கொண்டார்.

இந்நிலையில் தன்னை சோலாங்கி மிரட்டுவதாகவும், அவர் தன்னை கொன்றுவிடுவார் என பயப்படுவதாகவும் தனது கணவர் மகேந்திராவிடம் பல்கர் கூறினார். இது தொடர்பாக புகார் அளிக்க பல்கரும், மகேந்திராவும் காவல் நிலையம் சென்றனர்.

அப்போது வழியில் மகேந்திராவின் நண்பர் அவசர உதவி தனக்கு வேண்டும் என கூறி அவரை உடன் அழைத்து சென்றார். இதையடுத்து அடுத்துநாள் காவல் நிலையத்துக்கு செல்லலாம் என பல்கர் முடிவெடுத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பல்கர் தனது தாய் ஜெயஸ்ரீ உடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அதிகாலை 3.30 மணியளவில் பல்கரின் முன்னாள் காதலன் சோலாங்கி அவர் வீட்டுக்கு வந்த நிலையில் முதலில் இரும்பு கம்பியால் ஜெயஸ்ரீயை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் பல்கரை கழுத்தை கூரான கத்தியால் அறுத்து கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார்.

தாய், மகள் இறப்பதற்கு முன்னர் வலியால் அலறிய நிலையில் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரின் உயிரும் பிரிந்திருந்தது. சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்து இரு சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் கூறுகையில், கொலையாளி சோலாங்கி மீது ஏற்கனவே கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது, இதற்காக அவர் முன்னர் சிறையில் இருந்தார் என கூறியுள்ளனர்.

காதலியுடன் நீர் அருவிக்கு சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட நிலைமை!!

மாணவனுக்கு ஏற்பட்ட நிலைமை

நாவலப்பிட்டி – கலபொடை நீர் அருவியில் குளிக்க சென்ற நிலையில் காணாமல்போன பாடசாலை மாணவனைத் தேடும் பணிகளை கடற்படை சுழியோடிகள் இன்று ஆரம்பித்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவன் தனது காதலியுடன் கலபொடை நீர் அருவியை பார்க்க சென்றுள்ளதுடன் இருவரும் அருவிக்கு சுமார் 500 மீற்றர் தொலைவில் கீழே உள்ள ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். குளித்துக் கொண்டிருந்த போது மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் நடந்துள்ளது.

கம்பளை – போவல பிரதேசத்தை சேர்ந்த, கம்பளை விக்ரமபாகு கல்லூரியில் உயர்தர வகுப்பில் தகவல் தொழிநுட்பம் கற்று வந்த 18 வயதான மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கம்பளை பிரதேசத்தில் பகுதி நேர வகுப்புக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு, தனது காதலியுடன் மாணவன், கலபொடை அருவியை பார்க்க சென்றுள்ளார்.

கலபொடை நீர் அருவிக்கு அருகில் உள்ள பிரதேசவாசிகள், நாவலப்பிட்டி பொலிஸார் இணைந்து நேற்று முழுவதும் காணாமல் போன மாணவனை தேடிய போதிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து உடலை தேடும் பணிகளை கடற்படையின் சுழியோடிகள் இன்று ஆரம்பித்துள்ளனர் என நாவலப்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா நகரசபையின் முடிவை உதாசீனப்படுத்திவரும் தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்டநடவடிக்கை!!

தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்டநடவடிக்கை

வவுனியா நகரசபை அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நேற்றயதினம் நடைபெற்றது. இதன்போது நகரசபையினால் அறிவித்தல் வழங்கபட்டும் பல தனியார்கல்வி நிலையங்கள் மாலை 7 மணிக்கு பின்னரும் கல்விசெயற்பாடுகளை மேற்கொள்வதாக சபையின் உறுப்பினர்கள் பலர் குற்றம்சாட்டியிருந்ததுடன் அவ்வாறான கல்விநிலையங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு தவிசாளரிடம் தெரிவித்திருந்தனர்.

போதிய வளங்கள் கிடைக்காத பட்சத்தில் கல்வியை தேடிக் கற்பதற்கு மாணவர்களிற்கு உரிமைஇருக்கிறது என்று உறுப்பினர் காண்டீபன் தெரிவித்ததுடன் அதற்கு சட்டநடிவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராயவேண்டும் என்றார்.

இதேவேளை இரவு நேரங்களில் கல்விநிலையங்கள் நடாத்தபடுவதால் மாணவிகளிற்கும் பாதுகாப்பில்லாதநிலை உருவாகியுள்ளது. அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவும் இந்த சபைக்கு பொறுப்பு இருக்கிறது என சில உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் பாடசாலைகளில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையங்களில் கற்பிக்கமுடியாது என சட்டத்தில் உள்ளது. எனவே நீங்கள் சட்டநடவடிக்கையை எடுங்கள் என்று உறுப்பினர் செந்தில்ரூபன் தவிசாளரிடம் தெரிவித்தார்.

ஓரு ஜனநாயக தன்மையை பேணுவதற்காகவே தனியார் கல்வி நிலையம் நடாத்துபவர்களை நாம் நேரில் அழைத்து கலந்துரையாடியிருந்தோம். அவர்களிற்கு பல விடயங்கள் தொடர்பாக அறிவுறுத்தியிருந்தோம். எனினும் அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தாத நிலை காணப்படுகின்றது.

எனவே உள்ளுராட்சி அமைப்பொன்றில் எடுக்கபட்ட தீர்மானத்தினை உதாசீனம் செய்வதை கருத்தில்கொண்டு இனிவரும் காலங்களில் சட்டநடவடிக்கைக்கு நேரடியாக செல்லவுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.

இலங்கையின் கடற்பரப்பிற்குள் அமெரிக்க போர்க்கப்பல்!!

அமெரிக்க போர்க்கப்பல்

இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுப்படுவதற்காக அமெரிக்காவின் கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. யு.எஸ்.என்.எஸ் “மில்லிநோகேட் ” மற்றும் யு.எஸ்.எஸ் “இஸ்ப்ருவன்ஸ் ” ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளன.

குறித்த போர்க்கப்பல்கள் இரண்டும் இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டன. மேலும், இவ்விரண்டு போர்க்கப்பல்களும் இலங்கை கடற்படை கப்பல்களுடன் இணைந்து தமது கடற்படை பயிற்சிகளை முன்னெடுக்கவுள்ளன.

யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் போர் கப்பலானது 2362 தொன் நிறைகொண்டதுடன் 155.3 மீட்டர் நீளம் கொண்டதாகவும், அதேபோல் யு.எஸ்.எஸ் இஸ்ப்ருவன்ஸ் கப்பலானது 9580 தொன் நிறை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இரண்டு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு நட்புறவு வலுவடைந்துள்ள நிலையில் இரு நாடுகளின் கடற்படை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலும் நட்புறவை மேலும், வலுப்படுத்தும் வகையிலும் இந்த கூட்டு கடற்படை பயிற்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களுக்காக புதிய விடயத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்!!

அப் அறிமுகம்

திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறையினரிடம் உடனடி பிரதிபலனை பெற்றுக்கொள்ள புதிய அப் (Emergency App) ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பாகவே இந்த அப் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த அப் மூலம் உடனடி அம்பியூலன்ஸ் சேவை, தீயணைப்புச் சேவை, பொலிஸ் சேவை உட்பட அரச பாதுகாப்பின் அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல் துஷ்பிரயோகங்கள் உட்பட அவசர பிரச்சினைகளுக்கு உள்ளானோருக்கு அரச பாதுகாப்புத் துறைக்கும் அறிவிக்கும் பொறிமுறையில் உள்ள குறைபாடுகளை புரிந்துகொண்டு அதற்கான தீர்வை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தமக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பில் பொலிஸாருக்கும், இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கும், அம்பியூலன்ஸ் சேவைக்கும் அறியப்படுத்தும் காலம் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் காலம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

1990 அம்பியூலன்ஸ் சேவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. தொலைப்பேசி அழைப்பு விடுத்து 12 நிமிடங்களுக்குள் குறித்த அம்புலன்ஸ் சேவையை விபத்துக்கு உள்ளான நபர் பெற்றுக்கொள்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் உட்பட பத்து பேரின் உயிரை பறிந்த கோர விபத்து : சாரதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

கோர விபத்து

இலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்த கோர விபத்து தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர்.

10 பேரின் உயிரை பறித்த மஹியங்கனை விபத்தில் வானை செலுத்திச் சென்ற சாரதி மிகவும் வயது குறைந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சாரதி நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவன் என தெரியவந்துள்ளது.

அவர் தனது சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று 6 மாதங்கள் கூட முழுமையாக நிறைவடையவில்லை என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 200100202172 v என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொண்ட மாணவன் தனது சாரதி அனுமதி பத்திரத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே பெற்றுள்ளார்.

இவ்வளவு குறைவான வயதுடைய மாணவன் சாரதி அனுமதி பத்திரம் பெற்று சிறிய காலப்பகுதிக்குள் 2 அல்லது 3 மீற்றர் தூரம் மாத்தரமே பயணித்தில் ஈடுபடுத்த வேண்டும். எனினும் இவ்வளவு தூரம் சாரதியாக குறித்த மாணவனை பயன்படுத்தியமை பாரிய குற்றம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் ஒருமாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் வீட்டுக்கும் திரும்பும் வேளையில், மஹியங்கனையில் வைத்து நேற்று முன்தினம் பாரிய விபத்திற்கு முகங்கொடுத்தனர். இதன்போது இரட்டை குழந்தைகள் உட்பட பத்துப் பேர் உயிரிழந்தனர்.

இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எதிராக வந்த பேருந்துடன் வான் மோதுண்டமையினால் இந்த கோர விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாணவன் ஒருவரை காணவில்லை!!

காணவில்லை

வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வரும் சதீஜ்வரன் கோபிகன் என்ற மாணவனை நேற்று (18.04) மாலையிலிருந்து காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவனை நேற்று மாலை வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இறுதியாக கண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் தனது மகன் காணாமல் போனது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொண்டுள்ளதாக காணாமல் போன மாணவனின் தந்தை எஸ்.சதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மாணவனை யாராவது அடையாளம் கண்டால் 0779169113 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். மாணவன் காணாமல் போனமை தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சீரான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் சடலம்!!

பழுதடைந்த நிலையில் சடலம்

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் சீரான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இறந்தவரின் சடலம் பழுதடைந்து சீல்வைக்கப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 15.04.2019 அன்று மல்லாவி, துணுக்காய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய உடல் அன்றைய தினமே முல்லைத்தீவில் அமைந்துள்ள மாஞ்சோலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு மறுநாள் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும் சடலத்தை யாரும் பார்வையிட முடியாத அளவிற்கு மூடி கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு விபத்தில் இறந்த அவருடைய உடலை ஏன் இவ்வாறு மூடி கட்ட வேண்டும்.

உடலைப் பாதுகாக்கும் இடத்தில் மின்சாரம் இல்லாத காரணமா? மருத்துவ அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருந்தமையா? என உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலை வைத்திருக்க முடியாத நிலை இன்றும் தொடர்கின்றது.

நேற்று முன் தினம் முள்ளியவளை பகுதியில் வெப்பத்தினால் உயிரிழந்தவரின் சடலம் கூட உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதால் மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திடீர் திருப்பம்!!

வழக்கில் திடீர் திருப்பம்

இலங்கை தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, சிவலோகநாதன் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், அவர் இல்லாது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. 2017ம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிவலோகநாதன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டார். தனபாலசிங்கத்தின் மனைவி அனுஜா பாஸ்கரன், அவரது வீட்டில் கழுத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த கொலை குற்றச்சாட்டுக்கு இடைக்காலத்தடை வாங்கியதைத் தொடர்ந்து தனபாலசிங்கம் சமுதாயத்துக்கு ஆபத்தானவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மீண்டும் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையிலும், மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்னரே தனபாலசிங்கம் நாடு கடத்தப்பட்டார்.

இந்நிலையில், தற்போது கீழ் நீதிமன்றத்தின் முடிவு தவறானது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்டவர் கனடாவில் இல்லையென்றாலும் அவர் மீதான வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 இளம் பெண்கள்!!

3 இளம் பெண்கள்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மிகவும் நுட்பமான கொள்ளையில் ஈடுபடும் மூன்று இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி நகரத்திலுள்ள பேருந்து நிலையத்தில் பணப்பை திருடும் போது இந்தப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி பேருந்து நிலையத்திலுள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் வைத்து குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பொலிஸாருக்கு புத்தாண்டு தினத்தன்று கிடைத்த முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண்கள் தொடர்பில் கண்காணித்துள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குள் நுழைந்த 3 பெண்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய பெண் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து சோதனை மேற்கொண்ட போது அங்கு வெற்று பணப்பைகள் மூன்றும், 7000 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 3 பெண்களும் நீர்கொழும்பில் இருந்து முச்சக்கர வண்டியில் இரத்தினபுரிக்கு சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது. அவர்கள் 26, 23 மற்றும் 21 வயதுடைய திருமணமானவர்கள் என தெரியவந்துள்ளதுடன் இவர்களை அழைத்து வந்த முச்சக்கர வண்டி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்படும் பணம் குறித்த முச்சக்கர வண்டி சாரதியிடமே ஒப்படைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்தவர்களுக்கு நேர்ந்த கதி : மகன் பலி – ஆபத்தான நிலையில் தந்தை!!

விபத்து

நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த குடும்பத்தினர் பாரிய விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். Zevenbergen பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று மாத்தளையில் பாரிய விபத்து ஒன்றிற்கு முகம் கொடுத்துள்ளது.

இலங்கைக்கு விடுமுறையை கழிக்க வந்த குடும்பம் ஒன்றே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளது. இந்த விபத்தில் Timo என்ற 21 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Timo, அவரது அக்கா மற்றும் பெற்றோர் ஆகியோர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். தங்கள் பெற்றோரின் 30வது திருமண விழாவை கொண்டாடுவதற்கே இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் பயணித்த வாகனம் ட்ரக் வண்டியுடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மொத்தமாக 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மகன் உயிரிழந்துள்ளார். 62 வயதான தந்தை ஆபத்தான நிலையில் உள்ளார்.

அக்கா மற்றும் தாயார் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர். Timo மரணத்தால் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கள் வருத்தத்தை பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் நடந்த சோகம் : இளம் பெண் சடலமாக மீட்பு!!

இளம் பெண் சடலமாக மீட்பு

தமிழர் பகுதியான மட்டக்களப்பில் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளதுடன், 25 வயதான பிரகாஸ் லபோஜினியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது தாயை பார்ப்பதற்காக நேற்று முன் தினம் பதுளையில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவரை நேற்று காலை வீட்டின் முன்பாக உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பெண் பதுளையில் தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளதுடன், இவருக்கு இரண்டரை மற்றும் ஒரு வயதுடைய இரு குழந்தைகள் உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.