முறிகண்டியில் விபத்துக்குள்ளான பேருந்து : ஒருவர் வைத்தியசாலையில்!!

விபத்துக்குள்ளான பேருந்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி – செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த விபத்தில் தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகம் காரணமாக குறித்த பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.

பாதையை விட்டு விலகிய பேருந்து ஏ9 வீதியிலுள்ள கனகாம்பிகை குளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் முழுவதும் கொக்கிகளை குத்திக்கொண்டு தொங்கும் பெண் : காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!!

கொக்கிகளை குத்திக்கொண்டு தொங்கும் பெண்

அமெரிக்காவில் வாழும் ஒரு பெண், தன் உடலில் இரும்புக் கொக்கிகளை குத்திக் கொண்டு தொங்குவது தனக்கு இன்பம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அரிசோனாவைச் சேர்ந்த Breanna Cornell (26) ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை. பின்னாட்களில் anorexia மற்றும் body dysmorphia என்னும் மன நலப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார் Breanna.

அப்போதுதான் அவருக்கு பச்சை குத்துதல், உடல் பாகங்களில் ஓட்டை போட்டு கம்மல் போன்றவற்றை அணிந்து கொள்ளுதல் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

உடலில் கொக்கிகளை மாட்டிக் கொண்டு அந்தரத்தில் தொங்குவது போன்ற விடயங்களை செய்ய ஆரம்பித்த Breannaவுக்கு ஒரு கட்டத்தில் அது இன்பம் அளித்திருக்கிறது.

தன்னுடைய anorexia மற்றும் body dysmorphia பிரச்சினைகளை மேற்கொள்ளவும் அது உதவியாக இருப்பதாக தெரிவிக்கிறார் Breanna.

இப்படி உடல் முழுவதும் ஓட்டை போட்டு கொக்கிகளை மாட்டிக் கொண்டு தொங்குவது கஷ்டமாக இல்லையா என்று கேட்டால், தான் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை என்பதை நினைவு படுத்துகிறார் Breanna.

ஓடும்போதும் உடல் வலிக்கத்தான் செய்யும், ஆனால் நாம் வலிப்பதற்காக ஓடுவதில்லை, மகிழ்ச்சிக்காகத்தான் ஓடுகிறோம் என்று கூறும் Breanna, இதுவும் அது போலத்தான் என்கிறார்.

இலங்கையின் 18 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினா்ல இலங்கையின் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, பலத்த மின்னல் தாக்கம் இன்றும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமணடலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மன்னார், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகலை, மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, பதுளை, மொனராகலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கில் பெரும் தாக்கம் இருக்கும் என்றும் இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் ஏனைய சில பிரதேசங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களிலும், மாத்தறையிலிருந்து திருகோணமலை வழியாக அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய கடற்பிரதேசங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்பங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு திடீரென 70 – 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு செல்வதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வாக்குப் பதிவு : கழுதையில் சென்ற வாக்கு இயந்திரங்கள்!!

தமிழ்நாடு வாக்குப் பதிவு

இந்த மலை கிராமத்தில் தேர்தல் பணியில் கழுதைகள் ஈடுபடுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் வேலை செய்கிறார்கள் என்கிறார் சின்னராஜ். இது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன் சின்னராஜின் கதையை தெரிந்து கொள்வோம்.

சின்னராஜ் தருமபுரி மாவட்டம் பாலகோடு தாலுக்காவில் கரகூர் கிராமத்தில் வசிக்கிறார். இந்த கிராமம் கோட்டூர்மலை எனும் மலை கிராமம் அருகே உள்ளது. இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. மலைப் பாதை வழியாகதான் செல்ல வேண்டும்.

கோட்டூர் மலையில் உள்ள நியாய விலை கடைகளுக்கு அரிசி மற்றும் தேவையான பிற பொருட்களை மலை பாதையில் கழுதைகள் மூலம் எடுத்து செல்லும் தொழில் செய்து வருகிறார் சின்னராஜ். இந்த கழுதைகள் மூலமாகதான் தேர்தல் ஆணையமும் வாக்கு இயந்திரங்களை எடுத்து செல்கிறது. தேர்தலுக்கு முதல்நாள் சின்னராஜ் வாக்கு இயந்திரங்களை கழுதைகள் மூலம் எடுத்து சென்று கோட்டூர் மலையில் உள்ள வாக்கு சாவடியில் வைத்திவிட்டு,

பின் மலை பாதை வழியாக இறங்கி வந்து தனது சொந்த கிராமத்தில் வாக்களித்துவிட்டு, பின் மலை பாதை வழியாக கோட்டூர் மலை சென்று அரசு அதிகாரிகளுடன் வாக்கு இயந்திரங்களை எடுத்து வருவார். கோட்டூர் மலையில் உள்ள நியாய விலை கடைகளுக்கு அரிசி மற்றும் தேவையான பிற பொருட்களை மலை பாதையில் கழுதைகள் மூலம் எடுத்து செல்லும் தொழில் செய்து வருகிறார் சின்னராஜ்.

இந்த கழுதைகள் மூலமாகதான் தேர்தல் ஆணையமும் வாக்கு இயந்திரங்களை எடுத்து செல்கிறது. தேர்தலுக்கு முதல்நாள் சின்னராஜ் வாக்கு இயந்திரங்களை கழுதைகள் மூலம் எடுத்து சென்று கோட்டூர் மலையில் உள்ள வாக்கு சாவடியில் வைத்திவிட்டு, பின் மலை பாதை வழியாக இறங்கி வந்து தனது சொந்த கிராமத்தில் வாக்களித்துவிட்டு, பின் மலை பாதை வழியாக கோட்டூர் மலை சென்று அரசு அதிகாரிகளுடன் வாக்கு இயந்திரங்களை எடுத்து வருவார்.

சாலை வசதி ஏற்படுத்தி தந்தால்தான் வாக்களிப்போம் என்று அந்த மக்கள் தெரிவித்திருந்தனர். பிபிசி தமிழும் அந்த செய்தியை வெளியிட்டு இருந்தது. மாவட்ட நிர்வாகம் அந்த மக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தியதை அடுத்து அந்த மக்கள் வாக்களிக்க சம்மதித்தனர்.

பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசிய கோட்டூர்மலையை சேர்ந்த சக்திவேல், “சாலை வசதியை ஏற்படுத்தி தருவதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. அவர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த தேர்தலில் வாக்களித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் கூறியப்படி நடக்க வேண்டும்” என்றார்.

– BBC – Tamil

கடலில் வீடு கட்டிய அமெரிக்க கோடீஸ்வரர்கள் : மரண தண்டனை விதிக்கப்பட்டதால் தலைமறைவு!!

கடலில் வீடு கட்டிய  கோடீஸ்வரர்கள்

அமெரிக்க பிட்காயின் முதலீட்டாளர்களான கோடீஸ்வர தம்பதி கடலில் கட்டிய வீடு தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

Chad Elwartowski என்னும் அமெரிக்க கோடீஸ்வரர் தனது காதலியான தாய்லாந்தைச் சேர்ந்த Supranee Thepdetஉடன் தாய்லாந்து கடல்பகுதியில் கடல் வீடு ஒன்றைக் கட்டியுள்ளதோடு தொடர்ந்து பல வீடுகளைக் கட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.

தாய்லாந்து அந்த தம்பதி கடல் வீட்டைக் கட்டியதன்மூலம் தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் Chad தான் கரையிலிருந்து 13 நாட்டிக்கல் மைல் தொலைவில்தான் வீடு கட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.

தாய்லாந்தின் பிட்காயின் பெண் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் Supranee, அந்த கடல் வீட்டில் அமர்ந்து மதுபானம் அருந்தும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கிடையில் தம்பதியினர் மீது மரண தண்டன விதித்துள்ள தாய் அரசு அவர்களை தேடுவதை அறிந்ததும் அவர்கள் தலை மறைவாகிவிட்டனர்.

எந்த அரசின் கட்டுப்பாட்டிலும் அந்த வீடு வரவில்லை என்று கூறப்பட்டாலும், தாய்லாந்தின் பொருளாதார மண்டலத்திற்குள் அது இருப்பதாக கூறப்படுகிறது. சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று எண்ணியதைத் தவிர நாங்கள் சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை என்று அந்த தம்பதியினர் கூறியுள்ளனர்.

தம்பதி தலைமறைவாகியுள்ளதோடு, அவர்களது நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், Chadம் Supraneeயும் அந்த வீட்டுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்காவுக்காக தங்கையின் முடிவு : வாய்பிருந்தும் கலைந்த கனவு : இலங்கை சகோதரிகளுக்கு ஏற்பட்ட பெரும் சோகம்!!

அக்காவுக்காக தங்கையின் முடிவு

மொனராகலையில் குடும்பத்தின் வறுமை காரணமாக பல்கலைக்கழக கல்வி கனவாகிய மாணவி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. மொனராகலை – மக்குஆரா பிரதேசத்தில் வாழும் தினுஷா குமாரி என்ற மாணவிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

W.M.தினுஷா குமாரி என்ற மாணவி 2017ஆம் ஆண்டு கலை பிரிவில் உயர் தர பரீட்சை எழுதினார். கடுமையான வறுமையில் வாழும் தினுஷாவிற்கு உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் கிடைத்தது.

மாவட்டத்தில் 178 வயது இடம் அவருக்கு கிடைத்திருந்தது. எனினும் அவரால் பல்கலைக்கழக கற்கையை தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது பெற்றோரை பாதுகாப்பதற்காக தினுஷா தொழிற்சாலை ஒன்றில் தொழில் செய்தி வருகின்றார்.

அன்றாட உணவுக்கு வழியில்லை என்பதே தங்களின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதெனவும், தினுஷாவின் பல்கலைக்கழக கனவை நிறைவேற அவரது தங்கை தனது கல்வியை தியாகம் செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளார். அக்காவுக்காக தொழிற்சாலை ஒன்றில் தொழில் சேர திட்டமிட்டுள்ளதாக தங்கை குறிப்பிட்டுள்ளார்.

கண்ணீர் வெள்ளத்தின் மத்தியில் இரட்டையர் உட்பட பத்து பேரினதும் சடலங்கள் மண்ணுடன் சங்கமம்!!

பத்து பேரினதும் சடலங்கள் மண்ணுடன் சங்கமம்

மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலம் இறுதி அஞ்சலியின் பின்னர் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் மண்ணுடன் சங்கமமாகியுள்ளன.

மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரட்டை பெண் பிள்ளைகள் உட்பட பத்து பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் சடலங்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டதுடன், பத்து பேரின் சடலங்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருந்தன.

இதன் பின்னர் சடலங்கள் புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இறுதி அஞ்சலி வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறு பேரின் சடலங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

டச்பார் பிரதேசத்தினை சேர்ந்தவர்களின் சடலங்கள் தன்னாமுனை பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற தேவ ஆராதனைகளை தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

விலகிச் சென்றாள்… வெளிநாட்டில் இருந்து வந்து அவளை தீ வைத்து கொளுத்தினேன் : காதலன் வாக்குமூலம்!!

காதலன் வாக்குமூலம்

கொச்சியில் கடந்த மாதம் 14ம் திகதி இளம்பெண் ஒருவருர் மர்மநபரால் தீவைத்து கொளுத்திய நிலையில் ஒருமாதம் கழித்து இந்த சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரீட்டா என்ற மாணவி கல்லூரியில் படித்துக்கொண்டே ஒரு கடையிலும் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 14 ஆம் திகதி தனது தோழியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவரால் வழிமறிக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தப்பட்டார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் ரீட்டா மற்றும் அவரது தோழியும் உயிர் தப்பியுள்ளனர். இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வந்த நிலையில், பெட்ரோல் கொண்டுவந்த காலி பாட்டில் மட்டும் தான் பொலிசிற்கு ஆதாரமாக கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஒரு மாதம் கழித்து குற்றவாளி மானு கைது செய்யப்பட்ட நிலையில் நடந்த சம்பவம் குறித்து பொலிசார் அளித்துள்ள விளக்கத்தில், மானும், ரீட்டாவும் ஒன்றாக படிக்கும்போது இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

சமீபகாலமாக, ரீட்டா மானுவுடன் பழகுவதைத் தவிர்த்துவந்துள்ளார். இதனால் அவள் வேறு யாரையும் காதலிக்கிறாளா என மானு சந்தேகம் அடைந்துள்ளார். இருப்பினும், தனது காதலியை சமாதானப்படுத்த துபாயில் இருந்து கடந்த ஜனவரி மாதம் கொச்சி வந்துள்ளார் மானு.

தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு ரீட்டா சம்மதிக்காததால், அவர் மீதான கோபம் அதிகரித்துள்ளது. மீண்டும் துபாய் சென்றவர், கோபம் அதிகரித்த காரணத்தால் ரீட்டாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனால், மீண்டும் துபாயில் இருந்து கொச்சி வந்த தனது காதலியை கொலை செய்யப்போவது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, பெங்களூரு விமான நிலையம் வந்து, அங்கிருந்து கோயம்புத்தூர் வந்துள்ளார். பின்னர், கோயம்புத்தூரில் இருந்து டூவீலரை எடுத்துக்கொண்டு கொச்சிக்கு விரைந்துள்ளார்.

அங்குவைத்துதான் ரீட்டாவை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். கொச்சி நகரத்தில் மட்டும் அதிகமான கமெராக்களை ஆய்வு செய்ததில்தான் மானுவின் பைக் உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தது.

அடையாளம் கண்டுகொண்ட பின்னர், மானு அபுதாபியில் இருப்பது தெரியவந்தது. அவரைத் தொடர்புகொண்டு விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர், துபாய் அதிகாரிகள் உதவியுடன் அவரை மீட்டு கேரளா கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறோம் என பொலிசார் கூறியுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்ய முயன்றேன் என மானு பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்த புதுமணத்தம்பதி : வைரலாகும் புகைப்படங்கள்!!

வைரலாகும் புகைப்படங்கள்

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த புதுமண தம்பதி திருமணம் முடிந்த கையோடு வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் மக்களவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், ஒடிசா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடக்கும் வாக்கு சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் புதுமண தம்பதி வந்து வாக்களித்தனர்.

திருமணம் முடிந்த கையோடு, இருவரும் வந்து வாக்களித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இளம் நடிகைகள் வீதியில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சோகம்!!

இளம் நடிகைகள்

இளம் தெலுங்கு நடிகைகள் பார்கவி மற்றும் அனுஷா ரெட்டி ஆகிய இருவரும் கார் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

20 வயதான பார்கவி மற்றும் அனுஷா ஆகிய இருவரும் படப்பிடிப்பினை முடித்துக்கொண்டு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, Vikarabad மாவட்டத்தின் Chevella பேருந்து நிறுத்தத்தின் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது எதிரா வந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து மோத வந்ததால், காரை ஓட்டுநர் வேறு பக்கம் திருப்பியதில் மரத்தின் மீது மோதி அப்பளம் போல கார் நொறுங்கியுள்ளது.

இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இரண்டு நடிகைகளும் உயிரிழந்தனர். இந்த இரு நடிகைகளும் தெலுங்கில் பிரபல தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : மனதை உருக்கும் கண்ணீர்க் காட்சிகள்!!

மனதை உருக்கும் கண்ணீர்க் காட்சிகள்

மகியங்கனை பகுதியில் விபத்திற்கு இலக்காகி உயிரிழந்த பத்து பேரின் சடலங்களுக்கும் மட்டக்களப்பில் ஏராளமானோர் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மகியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் சடலங்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டதுடன், பத்து பேரின் சடலங்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையை உலுக்கியுள்ள இந்த கோர சம்பவம் மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இதில் உயிரிழந்தவர்களுக்கு பெருமளவானோர் அஞ்சலி செலுத்தி வருவதுடன், உறவினர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்திய காட்சி அனைவர் மனதையும் உருகச் செய்துள்ளது.

விபத்துப் புகைப்படங்கள்..

மன்னாரில் இடி, மின்னல் தாக்கத்தால் வீடொன்று முற்றாக சேதம்!!

வீடொன்று முற்றாக சேதம்

மன்னார் – மேற்கு மாந்தை, வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று மாலை இடி, மின்னல் தாக்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.

இருப்பினும் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. வீட்டினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின் சாதன பொருட்கள், உடைகள் உட்பட ஏனைய பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

பாட்டியை மகிழ்விக்க யுவதி மேற்கொண்ட முயற்சி : இறுதியில் நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம்

இதயத்துடிப்பு மானி (stethoscope) ஒன்றை கழுதில் மாட்டி கொண்டு மருத்துவரை போல் எல்பிட்டிய வைத்தியசாலையில் நடமாடிய யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிலான என்ற பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த யுவதி மருத்துவராக வர வேண்டும் என்று யுவதியின் பாட்டிக்கு எதிர்பார்ப்பு இருந்துள்ளது எனவும், எனினும் பாட்டியின் எதிர்பார்ப்பை யுவதியால் நிறைவேற்ற முடியாது போனதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயர் தரத்தில் கலை பிரிவில் பயின்றுள்ள இந்த யுவதி, பின்னர் மனநல பாடநெறியை படித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் இதயத்துடிப்பு மானியை (stethoscope) பாட்டி, யுவதிக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

பாட்டியின் நண்பி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாட்டியை மகிழ்விக்க இதயத்துடிப்பு மானியுடன் (stethoscope) வைத்தியசாலைக்கு சென்றுள்ள யுவதி, அங்கு சுற்றித்திரிந்துள்ளார்.

இதயத்துடிப்பு மானியுடன் (stethoscope) பெண்ணொருவர் வைத்தியசாலைக்குள் சுற்றி திரிவதாக வைத்தியசாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, எல்பிட்டிய பொலிஸார் யுவதியை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட யுவதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். எல்பிட்டிய தலைமையக பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ராவணா செயற்கைகோள்!!

ராவணா செயற்கைகோள்

இலங்கையின் இளம் பொறியாளர்கள் இருவரினால் நிர்மாணிக்கப்பட்ட ராவணா-1 என்ற முதலாவது செயற்கைகோள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நாசா விண்வெளி நிலையத்தினால் இந்த செயற்கைகோள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1.1 கிலோகிராம் நிறையுடைய இந்த செயற்கைகேள் ஜப்பான் க்யூஷு இன்ஸ்டீடியுட் என்ற நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த தரிந்து தயாரத்ன மற்றும் துலனி சாமிகா என்ற பொறியியலாளர்களினால் இந்த செயற்கைகோள் நிர்மாணிக்கப்பட்டது. ஜப்பான் விண்வெளி நிலையத்தினால் அமெரிக்காவிலுள்ள நாசா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராவணா – 1 என்ற இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக தற்போது வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் செயற்கை கோளை வெற்றிகரமாக அனுப்பிய நாடுகளில் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளது.

வீடு திரும்பிய கணவருக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!!

மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி

பக்கமுன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியம்பலாவ பகுதியில் உணவு உட்கொள்ளாது அதிக மதுபோதையில் இருந்ததன் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

56 வயதான ஹெட்டியாரச்சிலாகே விமலாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமலாவதி கணவரைப் பிரிந்து வேறும் ஓர் நபருடன் வாழ்ந்து வருவதாகவும், இருவரும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற தினம் விமலாவதியின் கணவர் பணிக்காக சென்று வீடு திரும்பிய போது, வீட்டில் விமலாவதி உயிரிழந்திருந்ததனை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

உணவு எதனையும் உட்கொள்ளாது அதிகளவில் மதுபானம் அருந்திய காரணத்தினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற மரண விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காவு கொள்ளப்பட்டது இரட்டையர் உட்பட பத்து பேரின் உயிர்கள் : வெளியானது மற்றுமொரு சோக தகவல்!!

மற்றுமொரு சோக தகவல்

மஹியங்கனையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நபரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளமை நாட்டு மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரச பத்திரிகையொன்றில் இன்றைய தினம் வெளியாகியுள்ள செய்தியிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ஜோஷப் ரெலின்டன் ஜோப்ஸ் மற்றும் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளிட்ட பத்து பேரே உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜோஷப் ரெலின்டன் ஜோப்ஸ் ஓமானில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி நாடு திரும்பியவர் என தெரியவருகிறது. இவரை அழைத்து செல்வதற்காக மட்டக்களப்பிலிருந்து அவரின் உறவினர்களான, விபத்தில் இறந்தவர்கள் உட்பட அனைவரும் கொழும்பிற்கு வந்துள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று ஜோஷப் ரெலின்டன் ஜோப்ஸை அழைத்து கொண்டு தெஹிவளையிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

இதன் பின்னர் கொழும்பிலிருந்து கண்டிக்கு சுற்று பயணம் மேற்கொண்டு பதுளை வீதியூடாக மட்டக்களப்பு நோக்கி செல்லும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறித்த பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.