இலங்கை உலுக்கிய கோர விபத்து : 10 பேரின் உயிர் பறிபோனது எப்படி? பேருந்து சாரதி வழங்கிய வாக்குமூலம்!!

சாரதி வழங்கிய வாக்குமூலம்

மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் நேற்று இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

திருகோணமலையில் இருந்து தியதலாவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயமடைந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழும்பில் உறவினர்களை பார்க்க சென்ற இந்த குடும்பத்தினர், நுவரெலியா பிரதேசத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பிற்கு செல்லும் போது அவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சாரதி வழங்கிய வாக்குமூலத்தில்,

“நான் அதிகாலை 1.15 மணியளவில் மஹியங்கனை நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பேருந்தை நிறுத்தினேன். அங்கு தேனீர் அருந்திய பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தேன். பயணத்தை ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களில் அதிக வேகத்துடன் பிழையான பகுதியில் வேன் ஒன்று வருவதனை நான் அவதானித்தேன்.

நான் முடிந்த அளவு ஓரத்திற்கு பேருந்தை நகர்த்தி கொண்டு சென்றேன். எனினும் அந்த வேன் தனது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நெருங்கிவந்தது. நொடிப்பொழுதில் இடி விழுந்ததனை போன்று இந்த வேன் மோதிச் சென்றது. நான் எவ்வளவு முயற்சித்தும் அதனை தடுக்க முடியவில்லை” என சாரதி குறிப்பிட்டுள்ளார்.

பள்ளத்தில் பாய்ந்த வேன் : 9 பேர் படுகாயம்!!

பள்ளத்தில் பாய்ந்த வேன்

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் காலி பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 9 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிமை விடியற்காலை 5.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனில் 9 பேர் பயணித்துள்ளதாகவும், 9 பேரும் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, ஐவர் தொடர்ந்தும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காலி பிரதேசத்தில் மரண வீடொன்றிற்கு சென்று விட்டு மீண்டும் ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

காயமுற்ற 9 பேரில் மூன்று பெண்கள் அடங்குவதாகவும் தெரிவித்த வட்டவளை பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமையல்காரர்களாக மாறிய சங்கக்கார, ஹரின் : பிரமித்துப் போன வெளிநாட்டவர்கள்!!

சங்கக்கார, ஹரின்

நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சமையல் கலைஞர்களாக மாறியுள்ளனர்.

நுவரெலியா உற்பத்தியாகும் உருளைக் கிழங்கினை உலகம் முழுவதும் பிரபல்யமடைய செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கிலும் நுவரெலிய கிராண்ட் ஹோட்டலில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செசய்யப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த ஹோட்டலில் விசேட புடிங் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட இந்த புடிங்கை சுவைப்பதற்காக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் குமார் சங்கக்கார நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் பிரரபல சமையல் கலைஞரான ரனித்ர் சிங்க உட்பட 15 சமையல் கலைஞர்கள் இணைந்து இதனை தயாரித்துள்ளனர்.இந்த புடிங்கை பார்வையிட பல வெளிநாட்டு பயணிகள் கலந்து கொண்டுள்ளதுடன், அங்கு இடம்பெற்ற உணவு கண்காட்சியிலும் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் நான்கு நாட்களில் மட்டும் வாகன விபத்துகளில் 42 பேர் பலி!!

வாகன விபத்துகளில் 42 பேர் பலி

நாடளாவிய ரீதியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 13ஆம் திகதி காலை 6 மணியிலிருந்து இன்று (17) காலை 6 மணிவரை நாடளாவிய ரீதியில் 31 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது 42 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், பலர் காயமடைந்துள்ளனர். வாகனச் சாரதிகளின் கவனயீனத்தாலேயே இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன”- என்றார்.

நாட்டில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும்!!

இடியுடன் கூடிய கடும் மழை

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியதற்குமான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மின்னல் தாக்கங்களினாலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் சில இடங்களிலும், பொலனறுவை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் 50 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மரணத்திற்கு முன் முழுக் குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்த தருணம் : செல்பியால் சோகமான நாட்டு மக்கள்!!

முழுக் குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்த தருணம்

மஹியங்கணையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தின் காரணமாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 10 உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பயணிகள் தேனீர் அருந்துவதற்கான நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் இருந்து தியதலாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வானும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் நேற்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக இரட்டை பெண் குழந்தைகள் உட்பட 10 பரிதாபமாக உயிரிழந்தனர்.

மட்டக்களப்பை சேர்ந்த இவர்கள், நுவரெலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு வீடு திரும்பிய போதே இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து ஏற்படுவதற்கு முன்னர் குடும்பமாக நுவரெலியாவில் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இலங்கையர்களை கண்ணீர் ஆழ்த்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

4 குழந்தைகளுக்கு வாழ்வு அளித்த கலக்கப்போவது யாரு புகழ் அமுதவாணன்!!

அமுதவாணன்

பிரபல தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தி இப்போது சினிமாவில் ஜொலிக்கும் பலர் உள்ளார்கள்.

அப்படி காமெடி நிகழ்ச்சி, நடனம், இப்போது லொள்ளு சபா 2 என கலக்க இருப்பவர் அமுதவாணன். இப்புதிய நிகழ்ச்சி குறித்து பேட்டியளித்த அவர் இதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தையும் கூறியுள்ளார்.

அதாவது இவர் தன்னுடைய உழைப்பில் வரும் பணத்தில் 4 அரசு பள்ளி குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளாராம், அதோடு காரைக்காலில் ஒரு பையனை கலக்கப்போவது யாரு பாலாவும், நானும் சேர்ந்து பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். அவரின் இந்த நல்ல செயலை கேள்விப்பட்ட மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

நடுரோட்டில் கண்ணீர் விட்டு அழுத கர்ப்பிணி பெண் : பிளேடால் வெட்டிய மாமியார்!!

இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை அவரின் மாமியார் கொடுமைபடுத்தியிருக்கும் நிலையில், அந்த பெண் நடுத் தெருவில் கண்ணீர் விட்டு அழும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

ஆந்திராவின் வைசாக்கில் இருக்கும் பென்டுர்டி பகுதியில் கர்ப்பிண் பெண் ஒருவர் நடக்க கூட முடியாமலும், அவரை அருகில் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி கூறும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அந்த பெண் ஒரு நிறைமாத கர்ப்பிணி எனவும், அவரை கருகலைப்பு செய்யும் படி அவரின் மாமியார் மற்றும் கணவர் கொடுமை படுத்தி வந்ததாகவும், அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல், அவரை எட்டி உதைத்து, பிளேடால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்த பெண் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அந்த பெண்ணின் மாமியார் மற்றும் கணவனை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னை விட 45 வயது அதிகமானவரை மணந்த 24 வயது அழகிய இளம்பெண்!!

அழகிய இளம்பெண்

கனடாவில் தன்னை விட 45 வயது அதிகமானவரை திருமணம் செய்து கொண்டு இளம்பெண் வாழ்ந்து வரும் நிலையில் சமூகத்தில் தான் சந்திக்கும் சவால்கள் பற்றி கூறியுள்ளார்.

பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் ஆர்ம்ஸ்டார்ங் நகரை சேர்ந்தவர் டான் வால்பர் (69). இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மதுபான விடுதியில் பணிபுரிந்த ஸ்டிபனி (24) என்ற இளம்பெண்ணை பார்த்த நிலையில் இருவரும் நட்பாகியுள்ளனர்.

அதன்பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்தனர், அப்போது முதல் மனைவி மூலம் தனக்கு ஒரு மகன் இருப்பதாக கூறியுள்ளார். மகன் குறித்த தகவலை கேட்டதும் ஸ்டிபனி ஆச்சரியமான பல விடயங்களை டானிடம் கூறினார்.

காரணம் டான் மகனும், தானும் சிறுவயதிலிருந்தே ஒரே பள்ளிக்கூடத்தில் படித்து வந்தோம் எனவும், நண்பர்கள் எனவும் ஸ்டிபனி கூறினார். அதே நேரத்தில் தன்னை விட 45 வயது அதிகமான டான் மீது ஸ்டிபனிக்கு காதல் ஏற்பட்டது.

இருவரும் ஒருவரையொருவர் காதலித்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஒன்றரை வயதில் லச்லன் என்ற மகன் இந்த தம்பதிக்கு உள்ளான்.

இது குறித்து ஸ்டிபனி கூறுகையில், நானும் என் கணவர் டானும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். என் சகோதரருக்கு எங்கள் திருமணத்தில் சுத்தமாக விருப்பமில்லை, அதையும் மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

என்னையும், டானையும் சேர்ந்து பார்க்கும் பலர் தந்தை, மகள் என நினைத்து விடுகிறார்கள். ஆனால் இதனால் நான் கோபமடைவதோ அல்லது வேதனையடைவதோ கிடையாது, நானும் அவரும் கணவன், மனைவி என்பதை அவர்களுக்கு புரிய வைப்பேன். இப்படி, எங்கள் வாழ்க்கையில் பல சவால்கள் இருந்தும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறோம் என கூறியுள்ளார்.

கணவர் உண்ணும் உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துவிட்டு மனைவி செய்த செயல்!!

மனைவி செய்த செயல்

தமிழகத்தில் கணவரை அம்மிக்கல்லால் தலையை நசுக்கி கொலை செய்த வழக்கில் மனைவி உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கடந்த 14ஆம் திகதி பொலிசார் மீட்ட நிலையில் விசாரணையில் அவர் பெயர் கோவிந்தராஜ் என கண்டுப்பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் மனைவி செல்வியிடம் பொலிசார் விசாரித்ததில் கணவரை கொன்றதை ஒப்பு கொண்டார். அதாவது, செல்விக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தங்கதுரை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கணவர் உண்ணும் உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துவிட்டு தங்கதுரையும், செல்வியும் தனிமையில் இருந்து வந்தனர். இதை கோவிந்தராஜ் கண்டுபிடித்த நிலையில் மனைவி செல்வியிடம் சண்டை போட்டுள்ளார்.

இதையடுத்து கணவரை கொல்ல முடிவெடுத்த செல்வி வழக்கம் போல உணவில் அவருக்கு தூக்க மாத்திரையை கலந்து கொடுக்க அவர் தூங்கியுள்ளார்.

பின்னர் தங்கதுரை உதவியுடன் கோவிந்தராஜை இரும்பு கம்பியால் குத்தியும், கல்லால் தலையை நசுக்கியும் செல்வி கொன்றது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமி : அவர் காலில் எழுதியிருந்த அந்த வார்த்தை… அதிர்ச்சித் தகவல்!!

தற்கொலை செய்துகொண்ட சிறுமி

பிரித்தானியாவை சேர்ந்த பள்ளி சிறுமி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் முன்னரே பதிவிட்டது தெரியவந்துள்ளது.

Warrington நகரை சேர்ந்தவர் ஜெசிகா ஸ்கேடர்சன் (12). பள்ளி மாணவியான இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிக்கூடத்தில் சில பேர் ஜெசிகாவை கிண்டலடித்ததோடு, அவரை தாக்கியதால் இம்முடிவுக்கு ஜெசிகா வந்தார் என தெரியவந்தது. இதனிடையில் இறப்பதற்கு முன்னர் தனது வலது காலில் ஜெசிகா RIP என பேனாவால் எழுதியிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் காலில் எழுதியிருந்த அந்த வார்த்தையை ஜெசிகா புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது, இதோடு தான் தற்கொலை செய்வது தொடர்பாக ஓவியங்கள், கடிதங்களையும் சமூகவலைதளங்களில் பதிவிட்ட ஜெசிகா தன்னை பள்ளியில் தொந்தரவு செய்த நபரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெசிகா, உடன் படித்த மாணவ, மாணவிகளுடன் வேண்டுமென்றே சண்டை போட்டாரா மற்றும் பிரச்சனையை முதலில் தொடங்கியது யார் என்பது குறித்து தெளிவான விபரம் தெரியவில்லை.

இது தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஜெசிகாவுக்கு தாய் இல்லாத காரணத்தால் அவரை உடன் படித்தவர்கள் கிண்டலடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதோடு எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என இணையத்தில் ஜெசிகா முன்னர் தேடியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண் : 5 நாட்களில் சிதைந்து போன வாழ்க்கை!!

சிதைந்து போன வாழ்க்கை

மதுரை மாவட்டத்தில் பல்வேறு கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண், 5வது நாளில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி (24) – வீரபாண்டி (27) ஆகிய இருவருக்கும் கடந்த 10-ஆம் திகதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணமான நாளில் இருந்து கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திருமணமான 5 வது நாளில் தோட்டத்திற்கு அருகில் விஷ மருந்து குடித்து ராஜலட்சுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மகளின் நிலை கண்டு கதறிய பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜலட்சுமி பரிதாபமாக இறந்துபோனார்.

தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக ராஜலட்சுமியின் தந்தை ஒய்யப்பன், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரிலும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

பாரிஸ் தேவாலயத்தில் தீப் பிழம்பின் நடுவே தோன்றிய இயேசு : வைரலாகும் புகைப்படம்!!

வைரலாகும் புகைப்படம்

பாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்தின் போது இயேசு நிற்பதை போன்ற புகைப்படத்தை இளம்பெண் ஒருவர் வெளியிட்டுள்ளார். திங்கட்கிழமை இரவு அன்று பாரிஸ் நகரத்தின் முக்கிய மைல்கல்லாக விளங்கிய நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பல்வேறு வரலாறுகளை தாங்கி 853 வருடங்கள் நிலைத்து நின்ற இந்த தேவாலயம் சிதைந்து போனது உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்களின் கடுமையான முயற்சியால் தேவாலயம் முழுவதும் சிதைந்து விடாமல் பாதுகாக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 38 வயதான லெஸ்லி ரோவன் என்கிற பெண் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அந்த தீ பிழம்புகளுக்கு நடுவே கடவுள் மகன் நிற்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நேற்று இரவு இந்த புகைப்படத்தை பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன். நான் அதில் இயேசுவின் நிழலை பார்த்தேன். நான் உண்மையாகவே ஒரு தெளிவான படத்தை அதில் பார்த்தேன்.

அதை பகிர்ந்து, மக்களிடம் கருத்துக்களை கேட்டேன், என் அவுஸ்திரேலிய சகோதரர் அது இயேசு போல் இருப்பதாக கூறினார். இந்த உலகம் முழுவதுமே சோகமாக உள்ள நேரத்தில், இது பாரிசில் உள்ள மக்களுக்கு ஆறுதலளிக்கும் என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல லூயிஸ் பிளேயர் என்பவர், இயேசுவின் உருவத்தைப் போல் தெரிகிறதா? அல்லது எனக்கு அப்படி தோன்றுகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார். அவர் அணிந்திருக்கும் கவுன் மற்ற அனைத்தும் தெளிவாக தெரிகிறது என டொம் டிசாண்டோ பதிவிட்டுள்ளார்.

மற்றுமொரு பெரும் துயர் : கொழும்பைச் சேர்ந்த சகோதரர்கள் பலி!!

சகோதரர்கள் பலி

படகுச் சவாரியில் ஈடுபட்டிருந்த சகோதரர்கள் நீரியில் மூழ்கிப் உயிரிழந்துள்ளனர் என தெமடகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு தெமட்டகொடையை சேர்ந்த 11 மற்றும் 16 வயதுடைய சகோதரர்கள் இருவர் விடுமுறைக்காக பொத்துவில் சென்று கொட்டுகல ஆற்று பகுதியில் படகொன்றில் சவாரி செய்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு வந்த யானையை கண்டு அச்சம் கொண்ட அவர்கள் நீரில் குதித்துள்ளனர். எனினும் நீச்சல் தெரியாததனால் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சடலத்தை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

முன்னதாக பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.

திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கி பயணித்த பேருந்தும் பதுளை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த வான் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஏற்பட்டு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டுமொரு துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் புதுவருட கொண்டாட்டத்தின் உச்சம் : சடலமாக மீட்கப்பட்ட நபர்!!

சடலமாக மீட்கப்பட்ட நபர்

மட்டக்களப்பு காஞ்சிரங்குடா கிராமத்தில் உள்ள மாமரத்தில் இருந்து கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி தருமலிங்கம் என்பவரின் சடலமே இவ்வாறு நேற்று மீட்கப்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணிக்கு எழுந்து வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டு வளவிலுள்ள மாமரக் கிளையில் தனது கணவர் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்ததாக மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுவருட மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் இவர் அதிக மதுபோதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை, விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சோக சம்பவம்!!

சோக சம்பவம்

மஹியங்கனை – பதுளை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரட்டை பிள்ளைகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ரெலின்டன் ஜோசப், அவரது மனைவி, அவர்களின் இரண்டு மருமகன்கள், மகள் இருவர், மூன்று பேத்தி மற்றும் ஒரு பேரன் இந்த விபத்தில் உயிரிழந்துதுள்ளனர்.

இந்த குடும்பத்தில் 13 வயதான சேஹான் மாத்திரமே அந்த குடும்பத்தில் உயிர் தப்பி பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் உறவுக்கார பிள்ளை ஒன்றும் காயத்துடன் சிசிக்சை பெற்று வருகின்றார்.

உறவுக்கார பிள்ளை இந்த குடும்பத்தினருடன் மட்டக்களப்பிற்கு செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பில் இருந்து வந்த இந்த குடும்பத்தினர் ஜாஎல, பின்னவல, உட்பட பல இடங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்று மீண்டும் சொந்த ஊர் திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூவர் சிறு காயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகின்றனர். விபத்தை தடுக்க முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த இலங்கையர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.