நடிகை, தொகுப்பாளினி, நடன கலைஞர் என பல திறமைகளை வெளிக்காட்டியவர் சங்கீதா. இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.
இவர் தனது அம்மாவை வீட்டைவிட்டு வெளியேற சொல்லதாக ஒரு செய்தி வர அதற்கு சங்கீதா தனது அம்மா கொடுமைப்படுத்தியதாக ஒரு பதிவு பேஸ்புக்கில் வெளியிட்டார். தற்போது இதுகுறித்து சங்கீதா அம்மா ஒரு பேட்டியில்,அவங்க அப்பா இறந்ததும் நான் தான் அவரை வளர்த்தேன்,
படிக்க வைத்தேன். எந்த ஒரு படம் என்றாலும் அவரது அனுமதி இல்லாமல் எதையும் நான் செய்ய மாட்டேன். பெண் குழந்தை என்ற ஆசையில் எனது வீட்டை அவரது பெயரில் நம்பிக்கையில் எழுதி வைத்தேன், அந்த நம்பிக்கை மோசமானது.
எல்லாம் பண ஆசைதான், உலகமே அதைச் சுத்திதானே இயக்குகிறது, ஒரே வீட்டில் அம்மா, பெண் இருக்கிறோம் என்று தான் பெயர் பேசி பல வருடம் ஆனது, என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என்று வருத்தமாக பேசியுள்ளார்.
கணவருக்கு பயந்து நித்யா எடுத்த அதிர்ச்சி முடிவுபிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் ஒன்று சேர்ந்தது போல காட்டப்பட்டாலும் அவர்கள் இடையே இன்னும் சண்டை தொடர்ந்து நடக்கிறது.
இந்நிலையில் தேசிய பெண்கள் கட்சி என்கிற அரசியல் கட்சி சார்பாக நித்யா வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் இல்லை, டெல்லியில்.
”காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடறதா முடிவு செய்திருந்தேன். நான் தமிழ்நாட்டுல எந்தத் தொகுதியில போட்டியிட்டாலும், அங்க போய் என்னைப்பத்தி அவதூறு பரப்பணும்கிற ப்ளான் வச்சிருந்தார் பாலாஜி. அவருக்கு பயந்துதான் டெல்லியில் போட்டியிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழக மாணவி ஒருவர் செல்பி மோகத்தால் உயிரிழந்துள்ளார். Briar Cliff பல்கலைக்கழக மாணவியான Andrea Norton(20), மலையேற்றத்தின்போது மலை முகடு ஒன்றில் செல்பி எடுக்க முயலும்போது 100 அடி ஆழத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மலையேற்றத்திற்கு புகழ் பெற்ற Arkansas பகுதியில் அமைந்துள்ள மலை முகடு ஒன்றின் விளிம்பில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது தவறி விழுந்து இறந்துள்ளார்.
சுற்றுச்சூழல் அறிவியல் மாணவியான Norton, தனது வகுப்பு தோழிகளுடன் மலையேற்றத்திற்கு சென்றபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமைதான் Fordham பல்கலைக்கழக மாணவி ஒருவர் இதேபோல் செல்பி எடுக்க முயலும்போது மணிக்கூண்டு ஒன்றிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Sydney Monfries (22) என்ற அந்த மாணவி தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட, புகைப்படம் ஒன்றை எடுக்க முயலும்போது 40 அடி உயரத்திலிருந்து மணிக்கூண்டின் உள்ளேயே விழுந்து உயிரிழந்தார்.
டெல்லியில் டிக் டாக் மோகம் காரணாமாக வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே நண்பனை சுட்டுக்கொலை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த சல்மான் ஜாகிர் (19) என்கிற இளைஞர் தன்னுடைய நண்பர்கள் சோஹைல் மற்றும் அமீர் உடன் டெல்லி கேட் வரை சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது சல்மான் கார் ஒட்டிக்கொண்டிருந்துள்ளார்.
அருகில் அமர்ந்திருந்த சோஹைல் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சல்மான் நெற்றியில் வைத்தபடியே டிக் டாக் செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியில் இருந்த குண்டு திடீரென வெளியேறி சல்மானின் கன்னத்தை ஊடுருவியுள்ளது.
பின் பக்கத்தில் அமர்ந்திருந்த அமீர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக காரை சோஹைல் உறவினரின் வீட்டிற்கு செலுத்தி, சல்மானின் ரத்தக்கறைகளை துடைத்துவிட்டு ஆடைகளை மாற்றியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சல்மான் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியதோடு, பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், துப்பாக்கியால் சுட்ட சோஹைல், துப்பாக்கியை மறைக்க உதவிய அமீர் மற்றும் ரத்தக்கறையை துடைத்து ஆடையை மாற்ற உதவிய ஷெரீப் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் எதிர்பாராதவிதமாக நடந்ததா? அல்லது திட்டமிட்ட கொலையா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு, செல்பி எடுத்துக்கொண்டு காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனஞ்செயன் (24) பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும் பல்லவி என்கிற 19 வயது இளம்பெண்ணும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த காதல் ஜோடி, தங்களுடைய விருப்பத்தை வீட்டில் கூறியுள்ளனர். ஆனால் இருவருடைய வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த காதல் ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். மேலும் தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோவில் தங்களுடைய மனக்குமுறல்களை கூறியுள்ளனர்.
அதில், அம்மா, அப்பா ஆகியோருக்கு சென்று வருகிறோம்.
இதுதான் எங்களுடைய கடைசி வீடியோ. நானும் நான் விரும்பிய பெண்ணும் தற்கொலை செய்து கொள்கிறோம். காதலர்களை பிரிக்காதீர்கள் எனக்கூறிவிட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.
திருகோணமலை, கந்தளாயில் பிரதேசத்தில் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கந்தளாய், பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னால் நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மாடு ஒன்றுடன் மோதி பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் சுய நினைவின்றி அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கந்தளாய், பேராற்றுவெளி பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.சரஸ்தீன் மௌலவி எனும் 62 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை மகியங்கனை பிரதேசத்தில் இன்று (17.04.2019) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 6 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவத்தில் லிஸ்டர் அலெக்சான்டர் எனப்படும் 32 வயதுடைய நபர், அவருடைய 27 வயதுடைய மனைவி மற்றும் 4 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்தவர்களுள் உள்ளடங்குகின்றனர்.
திருகோணமலையில் இருந்து தியதலாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேரூந்துடன், பதுளையில் இருந்து மகியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் மகியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் நேருக்கு நேர் மோதி, இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10 பேரும் 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பை சேர்ந்த அவர்கள், நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
அவர்களுடன் பிரின்ஸ் ஹெடிரக் என்ற 48 வயதுடைய நபர், அவருடைய மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மற்றுமொரு மகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஜோஷப் ரெலின்டன் என்ற 56 வயதுடைய நபர், அவருடைய மனைவி, ஆகியோரும் இறந்தவர்களுள் உள்ளடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வேன் மோதுண்ட பஸ்ஸில் பயணித்த 6 பேரும் காயமடைந்து மகியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த தனியார் பஸ், பயணிகள் தேனீர் அருந்துவதற்கான நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், பஸ் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக்கலக்கமே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மகியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை இளைஞர் ஒருவர் கட்டார் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கட்டாரில் சாரதியாக பணிபுரந்து வந்த நிலையிலேயே இவர் இவ்வாறு விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என அவரின் உறவினரகள் தெரிவித்துள்னர். இதன்போது, ஓட்டமாவடி, மீராவோடையைச் சேர்ந்த 21 வயதான லத்தீப் முஹம்மத் ஹஸான் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் கட்டார் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதேசமயம் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெறுவதாக உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பதுளை மகியங்கனை பிரதேசத்தில் இன்று (17.04.2019) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 6 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து தியதலாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேரூந்துடன், பதுளையில் இருந்து மகியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் மகியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் நேருக்கு நேர் மோதி, இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10 பேரும் 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பை சேர்ந்த அவர்கள், நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
சம்பவத்தில், லிஸ்டர் அலெக்சான்டர் எனப்படும் 32 வயதுடைய நபர், அவருடைய 27 வயதுடைய மனைவி மற்றும் 4 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்தவர்களுள் உள்ளடங்குகின்றனர்.
அவர்களுடன் பிரின்ஸ் ஹெடிரக் என்ற 48 வயதுடைய நபர், அவருடைய மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மற்றுமொரு மகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஜோஷப் ரெலின்டன் என்ற 56 வயதுடைய நபர், அவருடைய மனைவி, ஆகியோரும் இறந்தவர்களுள் உள்ளடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வேன் மோதுண்ட பஸ்ஸில் பயணித்த 6 பேரும் காயமடைந்து மகியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த தனியார் பஸ், பயணிகள் தேனீர் அருந்துவதற்கான நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், பஸ் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக்கலக்கமே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மகியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (17.04.2019) மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
உறவினர்கள் அனைவரும் நகரத்திற்கு சென்றிருந்ததுடன் தந்தையார் (கிராமசேவையாளர்) கடமை நிமித்தம் அவரது பணிக்கு சென்றிருந்த சமயத்தில் சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞன் தனிமையில் பண்டாரிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்துள்ளார்.
மதியம் 11.30 மணியளவில் தந்தை மகனுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டிருந்த சமயத்தில் மகன் தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை.
இதனையடுத்து குறித்த தந்தை வீட்டிற்கு சென்று மகனின் அறைக்கு சென்ற சமயத்தில் மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து அயலவர்கள் பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கா.பொ.த உயர்தர இறுதியாண்டு மாணவனாவார்.
கஹவத்த – மடலகம பிரதேசத்தில் யுவதி ஒருவரின் தாக்குதலில் தாயார் உயிரிழந்துள்ளார். இதன்போது தந்தை காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாயார் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான யுவதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யுவதிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாசனை திரவியம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்காரங்கள் இலங்கை சந்தையில் இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய வாசனை திரவியங்கள் பயன்படுத்துபவர்கள் அதன் தரம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் பயன்படுத்துமாறு இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையத்தின் பணிப்பாளர் பவுஸர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த இந்த சுற்றிவளைப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
தனியார்துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் அடிப்படை சம்பளம் தற்போது பத்தாயிரம் ரூபாவாக காணப்படுகிறது. அதனை 12500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் உத்தியோகபூர்வமாக தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பதுளை, மஹியங்கனை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கி பயணித்த பேருந்தும் பதுளை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
வேனில் பயணித்த 12 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு கல்லடி , டச்பார் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் ஆவார்கள்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று பெண்களும் அங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு டச்பார் பகுதியை சேர்ந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் மனைவியின் தலையை வெட்டி, இருசக்கர வாகனத்தில் கணவரே எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் முனியப்பன்(28). இவருக்கும் நிவேதா(19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இருவரும் வேப்பம்பாளையத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், முனியப்பன் நேற்று வேலைக்கு சென்று விட்டு விரைவாக வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது மனைவி வேறொரு இளைஞருடன் தவறான உறவில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவருக்கும், நிவேதாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் நிவேதாவை அவரது தாய் வீட்டில் கொண்டுபோய் விடுவதாக கூறி, தனது இருசக்கர வாகனத்தில் அவரை முனியப்பன் அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் எருக்காட்டு வலசு பகுதியில் அவர்களது வாகனம் சென்று கொண்டிருந்தபோது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முனியப்பன், தான் கொண்டு வந்த கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட சண்டையில் முனியப்பனின் காது அறுபட்டது. எனினும் நிவேதாவை கொலை செய்த முனியப்பன், அவரது தலையை துண்டித்துள்ளார். மேலும் அவரது உடலையும், தலையையும் தனித்தனியே எடுத்துக் கொண்டு தனது வாகனத்தில் சென்றுள்ளார்.
போகும் வழியில் முனியப்பன் வாகனத்தை திருப்பியபோது, வீட்டு சுவரின் மீது மோதியதால் கீழே விழுந்துள்ளார். அப்போது சடலத்துடன் அவரைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் முனியப்பனை கைது செய்ததுடன், நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மனைவியின் தலையை அறுத்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற சம்பவம், பெருந்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பநிலை நீடித்து வருகின்றது. இதன்காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக 39 பாகை செல்சியஸ்சுக்கு அதிகமான வெப்பநிலை நீடித்து வருவதனால் கடுமையான வறட்சி நிலை நீடிக்கின்றது.
கிணறுகள், குளங்களின் நீர்மட்டமும் சடுதியாக குறைவடைந்துள்ளமையால் மக்களது தோட்டப் பயிற்செய்கை, நெற்செய்கை என்பன பாதிப்படைந்துள்ளது. பலரது தோட்டங்கள் கடும் வறட்சியினால் பாதிப்புற்று அழிவடைந்து காணப்படுவதனால் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் நீர் இன்றியும், மேய்சல் புற்தரைகளின்றியும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதுடன் வெப்பம் காரணமாக நோய் தாக்கத்திற்கும் உள்ளாகி வருகின்றன.
வவுனியா வடக்கு காஞ்சிராமோட்டை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட குட்டிநகர், சிறிநகர் ஆகிய பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு காணப்படுவதனால் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதே சபை என்பன தினமும் அம் மக்களுக்கான குடிநீரினை வழங்கி வருகின்றனர்.
இதேவேளை, வெப்பக் காலநிலை காரணமாக வீதிகளில் மக்களது நடமாட்டமும் மதிய வேளைகளில் மிகக்குறைவாகக் காணப்படுகின்றது.