போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.
மேலதிக அரசாங்க அதிபரினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
‘போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு போதைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஜனாதிபதியின் நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவின் கீழ் போதைப் பொருளுக்கு எதிரான தேசிய தடுப்பு வேலைத்திட்டமானது மாகாணம் மாவட்டம் மற்றும் பிரதேச ரீதியாக நாடு பூராவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 3 வயது குழந்தையை அனாதையாக தவிக்கவிட்டு இளம்தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சேதன் (34), தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வாணி (27) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
சமீப நாட்களாகவே தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. அந்த சமயங்களில் எல்லாம் இரு குடும்ப உறுப்பினர்களும் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வாணி, நேற்றைக்கு முன்தினம் மதியம் தன்னுடைய தாய்க்கு போன் செய்து, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சேதனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பள்ளியிலிருந்து விரைந்த சேதன், வீட்டிற்கு சென்ற போது உள்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது வாணி தூக்கில் தொங்கியபடியே கிடந்துள்ளார்.
உடனே தன்னுடைய பெற்றோருக்கு போன் செய்து, நடந்தவை குறித்து சேதன் கூறியுள்ளார். மேலும், என்னுடைய மனைவி இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம். நானும் தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறிவிட்டு செல்போனை துண்டித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சேதனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர். ஆனால் அவர்கள் செல்வதற்குள்ளாகவே இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் திருமணமாகி 14 ஆண்டுகளாக மனைவி கர்ப்பமாகாத காரணத்தால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட கணவன், தனது வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜேந்திர குமார் என்பவருக்கும் சுனிதா என்ற பெண்ணுக்கும் 2003 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சுனிதா கர்ப்பமாகவில்லை. இதற்காக மருத்துவம் மற்றும் பல சாமியார்களை சந்தித்தபோதும் பலன் கிடைக்கவில்லை. இதனால் தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார் விஜேந்திர குமார்.
ஆனால், விவாகரத்து கொடுப்பதற்கு சுனிதா மறுத்துள்ளார். இதற்கிடையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்த விஜேந்திர குமார், தனது முதல் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்னர் தனது பெற்றோருக்கு போன் செய்த சுனிதா, தனது கணவரின் முதல் மனைவி தன்னை கொடுப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெற்றோர் , விஜேந்திர குமாரிடம் விசாரித்தபோது அது ஒன்றும் பிரச்சனையில்லை, அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், சுனிதாவை அடித்துகொலை செய்துள்ளார் விஜேந்திர குமார்.
ஆனால், தனது மனைவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அருகில் இருப்பவர்களை நம்பவைத்துள்ளார். ஆனால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் சுனிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, நடந்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது சுனிதாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, விஜேந்திர குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் அண்ணன் கண்முன்னே தங்கை விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சையது ரஃபிக் ஜக்ரியா என்பர் சவுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஊரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதற்காக சந்தோஷமாக வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்துள்ளார் சையது.
இதற்கிடையில் இவரின் இளைய மகள் ஆயிஷா சுஹைனா, வழக்கம் போல தனது சகோதரருடன் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி நுழைவு வாயிலில் இருந்து மாணவி ஆயிஷா வகுப்பறை மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பள்ளியின் பேருந்து பின் நோக்கி வந்து ஆயிஷாவின் மீது மோதியது.
இதில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கிக்கொண்ட சிறுமி சுஹைனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தனது அண்ணன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஓட்டுநரிடமும் பள்ளி நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிய சென்ற சந்தனம் ராமலிங்கம் கலைச்செல்வி தொடர்பாக தகவல் அறிந்தால், அது பற்றி அறிய தருமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிகம் தெரிவித்துள்ளது.
கலைச்செல்வி கடந்த 2010 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 7 ஆம் திகதி சவுதி அரேபியா சென்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் உள்ள வீட்டாருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
தன் பின்னர் கலைச்செல்வி பற்றிய எந்த தகவல்களும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. இந்த பெண் பற்றி தகவல்களை அறிந்திருந்தால், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 111 என்ற அவசர அழைப்பு எண் மற்றும் 0114-374384, 0112- 864112, 0112880500 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்புக்கொண்டு அறிய தருமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தி உற்சாகமாக கொண்டாடிய பெண்
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு தனது கணவருடன் விவாகரத்து கிடைத்த நிலையில் அதை வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் எடுத்து கொண்டாடியுள்ளார். மேரி லொலிஸ் என்ற பெண்ணுக்கு குயிண்டன் ஈடன் என்ற நபருடன் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் ஈடனுடன் மேரிக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற மேரி அதை வித்தியாசமான முறையில் கொண்டாடி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளார். அதாவது ஈடனுடன் இருக்கும் திருமண ஆல்பங்களை தன்னுடைய ஷூ கால்களால் உதைப்பது, திருமண போட்டோக்கள் அனைத்தையும் தீயிட்டு எரிப்பது என செய்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி லைக்குகளை குவித்து வருவதோடு அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மேரி கூறுகையில், பெண்கள் வலுவானவர்கள் என்பதை உணர்த்தவே இந்த வித்தியாசமான போட்டோ ஷூட்டை நடத்தினேன்.
எப்படியோ விவாகரத்து பெற்றுவிட்டேன், எனது முன்னாள் கணவர் ஈடன் நல்ல மனிதராக தான் இருந்தார், ஆனால் போதை பழக்கம் அவரை மாற்றிவிட்டது. இது சம்மந்தமாக சிறைக்கு கூட அவர் பலமுறை சென்றுள்ளார், தற்போது கூட ஈடன் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
எனக்கு புதிதாக ஒரு வாழ்க்கை துணை கிடைத்துள்ளார், அவர் மிக நல்ல மனிதர். என்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து பல பெண்கள் எனக்கு போன் செய்து பேசினார்கள். அதாவது, பிடிக்காத நபருடன் வாழ்வதை விட அவர்களிடம் இருந்து விலகுவது நல்லது என என்னை பார்த்து கற்றுகொண்டதாக கூறினார்கள் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண் தாதா என்றழைக்கப்படும் எழிலரசி வரும் மக்களவை தேர்தல் முடியும் வரை காரைக்கால் பகுதியில் நுழையக்கூடாது என்று கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளது அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் திருப்பட்டினத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ராமு, இவர் வினோத என்ற பெண்ணை முதலில் திருமணம் செய்திருந்தார், அதன் பின் எழிலரசி என்ற பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சொத்து பிரச்சனை விவகாரமாக கடந்த 2013-ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு இரண்டாவது மனைவி எழிலரசியோடு ராமு சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த கூலிப்படையினர் எழிலரசி கண்முன்னே ராமுவை துடிதுடிக்க கொலை செய்தனர்.
அதுமட்டுமின்றி எழிலரசியையும் முகங்களில் வெட்டிசிதைத்தனர், எழிலரசி அவர்களிடமிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
அதன் பின் அதற்கு பழி தீர்க்கும் வகையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் ராமன் கொலைக்கு காரணமான திருப்பட்டினம் ஐயப்பன், முன்னாள் அமைச்சர் சிவகுமார் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக எழிலரசி சிறையில் இருந்து, சிலமாதங்களுக்கு அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காரைக்காலில் உள்ள முக்கிய பிரமுகர் அவரின் உதவியை நாடியிருக்கின்றனர்.
இந்த தகவல் மற்ற அரசியல் கட்சியினர் மூலம் காக்கிகளுக்கு தெரியவர, எழிலரசி காரைக்கால் வந்தால் தேர்தல் சமயத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும் அதனால் எழிலரசி தேர்தல் முடியும்வரை காரைக்காலில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று காரைக்கால் சீனியர் எஸ்.பி துணை கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் இரண்டு மாதத்திற்கு எழிலரசி காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதித்கப்பட்டுள்ளது.
வரதட்சனைக் கொடுமை என்கிற பெயரில் தனது கணவர், மாமியாரால் இளம்பெண் ஒருவர் பட்டினி போடப்பட்டு, பல கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றரை வயது குழந்தை, 3 வயது குழந்தை என இரண்டு குழந்தைகளின் தாயான துஷாரா (27), கடந்த வாரம் கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருக்கக்கூடும் என்று புகார் கூறியதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
துஷாரா உயிரிழந்து 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பொலிஸ் கூறுகையில், துஷாரா தன் கணவர் மற்றும் மாமியாரால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாக கூறியுள்ளனர்.
அவர் எத்தனை நாட்கள் கொடுமைப்படுத்தப்பட்டார் என்பது தெரிவில்லை எனவும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் வாக்குமூலம் தர முன்வந்துள்ளதாக கூறினர். அவர்கள் மேலும் கூறுகையில், துஷாரா உயிரிழந்தபோது அவர் வெறும் 20 கிலோ எடையில் மட்டுமே இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் அவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் வரதட்சனை கொடுமைக்கு உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தபோது அவர் உடலில் சதையே இல்லாத அளவிற்கு துன்புறுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, துஷாராவின் கணவர் சந்துலால் (30) மற்றும் மாமியார் கீதா (55) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். துஷாராவின் இரண்டு குழந்தைகளும் கொல்லத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வீட்டின் ஒரு அறையில் துஷாராவை தனிமையில் அடைத்து பூட்டிவிட்டு வெறும் சர்க்கரை தண்ணீரும் நீரில் ஊறவைத்த அரிசியை உண்ண கொடுத்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் இதை இயற்கைக்கு மாறான வழக்காக கருதினோம், விசாரணையை தீவிரப்படுத்தியவுடன் தெரிந்தது, வரதட்சனை கொடுமையால் துஷாரா பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்ததுள்ளார் என்பது என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துஷாராவின் குடும்பத்தினர் காவல்துறையிடம் கூறுகையில், துஷாராவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், திருமணத்தின் போது சந்துலால் குடும்பத்திடம் நகைகள், பணம் என வரதட்சனை வழங்கியதோடு, மேலும் 2 லட்சம் பணத்தை பின்பு தருகிறோம் என கூறியதாக தெரிவித்தனர்.
துஷாராவை ஒரு வருடம் தான் சென்று பார்த்தோம். பின் 5 ஆண்டுகள் அவர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது கூட துஷாராவை சந்திக்க சந்துலாலின் குடும்பம் எங்களை அனுமதிக்கவில்லை என்றும், பொலிசில் புகார் கொடுக்க நினைத்தோம், ஆனால் அதுவே எங்கள் மகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடுமோ என பயந்து புகாரளிக்கவில்லை; இப்படி ஒரு நிலையில் எங்கள் மகள் கொடுமைப்படுத்தப்பட்டது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது எனவும் கண்ணீர் சிந்தியபடி தெரிவித்தனர்.
தற்போது துஷாராவின் பட்டினிக் கொலை செய்தி வலைதளங்களில் வேகமாகிப் பரவி வரும் நிலையில் அவரது கணவருக்கும் மாமியாருக்கும் மரண தண்டனை கொடுத்தால் கூடத் தகும் என்று பொதுமக்கள் கொதித்து பதிவிட்டு வருகின்றனர்.
யாழில் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளார். மானிப்பாய், மருதடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘பத்திரிகை மூலம் மணமகள் தேவையென விண்ணப்பம் செய்தே குறித்த சந்தேகநபர் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் யாழில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதோடு, அவர்களுடைய நகைகளையும், சொத்துகளையும் பெற்றுகொண்டு தலைமறைவாகி விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதோடு அவரின் மனைவி, குழந்தைகள் கிழக்கு மாகாணத்தில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரால் பாதிக்கப்பட்ட இளவாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காங்கேசன்துறை விசேடக் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவில் அண்மையில் செய்த முறைப்பாட்டிற்கமைவாக, பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மூலம் இளைஞரை சிக்க வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் ஒவ்வொரு செயற்பாடும் ஏதோவொரு வகையில் இன்னொன்றோடு பிணைந்தது தான். குடும்பத்தின் வறுமை, அதைப் போக்க தேடியோடும் குடும்பப் பெரியோர். பிள்ளைகளின் துயரத்தைப் போக்கவும், அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் பெற்றோர்கள் செய்யும் கருமங்கள் வர்ணிக்க முடியாதவை.
தங்கள் பிள்ளைகளின் எதிர் கால இலட்சியத்தோடு பயணிக்கும் பெற்றோர் அவர்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். அனுராதபுரத்தின் பெரிமியன்குளம் பளுகஸ்வெவ கிராமத்தில் வசித்துவந்த சிறிய குடும்பம் ஒன்று பெரும் துயரத்தை எதிர் கொண்டு நிற்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மிகமிகச் சிறிய வீட்டில் மூன்று ஆண் குழந்தைகளோடு வாழ்ந்துவரும் அவர்களுக்கு பேரிடியாக மாறியது அன்றைய நாள். திடீர் தீ விபத்தில் அவர்களின் முழு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. எனினும் தீ விபத்து ஏற்பட்ட போது, வீட்டில் எவரும் இருக்கவில்லை. வீட்டில் வசிப்பவர்கள், அயல் வீடொன்றில் நடந்த புண்ணியதானம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கிறார்கள்.
புண்ணியதானம் முடிந்து வீட்டுக்கு திரும்பி வரும் போதே வீடு தீப்பிடித்து முற்றாக அழிந்து போயுள்ளதை கண்டு பேரதிர்ச்சியடைந்து நிர்க்கதிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், தீ விபத்துக்கு காரணம் மின் ஒழுக்கு அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குடும்பத்தில் மூன்று சிறிய ஆண் குழந்தைகள் இருப்பதுடன் மூத்த பிள்ளை இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளார். பாடசாலை புத்தகங்கள், உடைகள் என அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது. தினக் கூலிகளாக தினமும் சம்பாதித்து வாழ்க்கையை கொண்டு நடந்தும் பெற்றோர், வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதால், பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்
கொழும்ப புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சற்று முன்னர் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் குறித்த பகுதியில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் விரைந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு படையின் நான்கு ஐந்து வாகனங்களில் தீயைக் கட்டுப்படுத்த கடும் பிரயத்தனப்பட்டும் தீ இன்னமும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.
இத்தீவிபத்தில் பெருமளவான பொருட்கள் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இதேவேளை, அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தீயினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எனினும் தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதேவேளை இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கேரளாவில் திருநங்கை சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. கோழிகோடில் உள்ள ஒரு சாலையின் ஓரத்தில் ஷாலு என்ற திருநங்கை நேற்று காலை சடலமாக கிடந்தார்.
இதை அவ்வழியே சென்ற மக்கள் பார்த்த நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஷாலு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் ஷாலு கொலை செய்யப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளதாக திருநங்கைகள் ஆர்வலர் சிஸ்லி ஜார்ஜ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஷாலு கொலை செய்யப்பட்டிருக்கலாம், ஏனெனில் தன்னை சிலர் துன்புறுத்தி வருவதாக முன்னரே அவர் புகார் தெரிவித்திருந்தார், அவரின் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் உண்மைகள் வெளிவரும் என கூறியுள்ளார்.
உயிரிழந்த ஷாலு பாலியல் தொழில் செய்து வந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர், இது சம்மந்தமாக அவர் அங்கு வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஷாலு இறந்து கிடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்ததில் இரண்டு ஆண்கள் அங்கு இருந்தது தெரியவந்துள்ளது. இதை நோக்கியே பொலிசார் விசாரணை இருக்கும் என தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இளம் விதவை பெண்ணுக்கு அதிர்ஷ்டவசமாக மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த நிலையில் பிரசாரம் செய்வதற்காக சமூகவலைதளம் மூலம் நிதியை வசூல் செய்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி வைஷாலி (28). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விவசாயியான சுதாகர் கடந்த 2011ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ரூ.70000 கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்த முடியாமல் உயிரை மாய்த்து கொண்டார் சுதாகர்.
பின்னர் அங்கன்வாடியில் மாதம் ரூ.3500-க்கு வேலை செய்து வந்த வைஷாலிக்கு விதவை பென்ஷனாக ரூ 600 வந்தது. இந்த சொற்ப வருமானத்தில் தான் பிள்ளைகளை கவனித்து வந்தார் வைஷாலி.
இந்நிலையில் இலக்கிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு வைஷாலி பிரமாதமாக பேசினார். இதை பார்த்த பிரஹர் ஜனசக்தி கட்சியின் எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் அவரின் திறமையை பார்த்து வியந்து அந்த கட்சியின் சார்பில் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் செலவுகள், பிரசார செலவுகளுக்கு தனக்கு பணம் வேண்டும் என வாட்ஸ் மூலம் வைஷாலி கோரிக்கை வைத்தார். இதையடுத்து அவருக்கு நிதியுதவி குவிந்தது. இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்ததுள்ளது.
வைஷாலி கூறுகையில், நான் தேர்தலில் போட்டியிடுகிறேன், இது எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாகும். விவசாயிகளின் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம் என கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேனியில் திருமணமான பெண் ஒருவர் பேஸ்புக் சமூகவலைதளத்தில் எல்லைமீறி பயன்படுத்தி தேவையற்ற நட்பு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். அயூப் என்பவரின் மனைவி பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். நாளடைவில் அதற்கு அடிமையானதையடுத்து ஆண் நண்பர்களுடன் அதிக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வாசிம் அக்ரம், முகமது மற்றும் பர்ஜீஸ் என்ற மூவருடன் பழகி வந்துள்ளார். நட்பு ரீதியாக பழகிய இந்த பழக்கம் நாளடைவில் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு மாறியது. இந்நிலையில் திடீரென குறித்த பெண் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதன்பின்னர் தான் கணவர் அயூப்பிற்கு தெரியவந்துள்ளது மனைவியின் எல்லை மீறிய பேஸ்புக் பயன்பாடுதான் இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று.
இதுகுறித்து அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார், மேலும் அயூப் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது மனைவி அந்த 3 ஆண்களை நம்பி சென்று புகைப்படம் எடுத்துள்ளார். அவர்கள் எனது மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர்.
புகைப்படங்களை காண்பித்து எனது மனைவியிடம் தொடர்ந்து பணம் பறித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவள் தற்கொலை செய்துகொண்டாள் என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் அந்த மூவரின் விபரங்களையும் சேகரித்து காவல்துறை வழக்கை விசாரித்து வருகிறது.
மனித உடல் உறுப்பு சட்டவிரோத வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்ட குழு ஒன்று இந்தியாவின் – தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராச்சகொண்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த குழுவை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர் ஒருவரின் சிறுநீரகத்தொகுதி களவாடப்பட்டு அவர் பணமோசடிக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில், இவ்வாறு பணமோசடிக்கு உள்ளாகியவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைவாக புதுடெல்லியின் குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீண்டகாலமாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை ஏமாற்றி அவர்களது முக்கிய அவயங்களை அபகரித்து பணம் பெற்றுக் கொள்ளும் தொழிலையே குறித்த குழு மேற்கொண்டு வந்துள்ளது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை இலங்கை, எகிப்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளை மையப்படுத்தி இந்தியாவில் செயற்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைவாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் சம்மந்தமான தகவல்களை பெற்றுகொள்ள விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருகோணமலையில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய வழக்கிற்கு சமூகமளிக்காத சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே இம்மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திவுலப்பிட்டிய, கம்பஹா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சீனக்குடா பகுதியில் தொழில் செய்து வந்த நிலையில் அப்பிரதேசத்திலுள்ள 14 வயதுடைய சிறுமியை காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக சீனக்குடா பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சந்தேக நபர் வழக்கொன்றிற்கு சமூகமளிக்காது இருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.