நாளை முதல் 15ம் திகதி வரை பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக சூரிய உச்சம் கொடுக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல, கெகனதுர, கோடவில மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளுக்கு சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என அந்த திணைக்களம் கூறியுள்ளது. எவ்வாறாயினும், மேல், ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் ஆகிய மாகாணங்களிலும் வவுனியா, அநுராதப்புரம் மாவட்டங்களிலும் நாளைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வெப்பமான காலப்பகுதியில், தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும், பொதுமக்களிடம் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட மாடுகள் பொலிசாரால் மீட்பு!!

வவுனியா புளியங்குளம் இராமனூர் பகுதியில் நேற்று (03.04) இரவு 9.30 மணியளவில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார் அனுமதியின்றி லொறியில் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் ஏற்றிய மாடுகளுடன், மூவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

புளியங்குளம் பகுதியில் இருந்து றுவான்வெல்ல பகுதி நோக்கி லொறியில் அனுமதி பத்திரங்களுக்கு மேலதிகமாக மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. லொறியை வழிமறித்து சோதனை செய்த புளியங்குளம் பொலிஸார் குறித்த மாடுகளை மீட்டுள்ளதுடன், வாகனத்தையும் அதில் பயணித்த 29,34,37 வயதுடையவர்களையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு!!

தனிநாயகம் அடிகளார்

 

வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தமிழுக்கு தொண்டாற்றிய தனிநாயகம் அடிகளாரின் சிலை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (04.04) பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.மரியநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு தனிநாயகம் அடிகளாரின் சிலையை திறந்து வைத்தனர்.

நிகழ்வில் அதிதிகள் மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்களுடன் பவனியாக அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

கழிவறையில் கருகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் : கையும் களவுமாக சிக்கிய இளைஞர்!!

கையும் களவுமாக சிக்கிய இளைஞர்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய இளைஞரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரில் பட்டப்பகலில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கல்லூரி மாணவியான நீது(22) என்பவரே கொடூரமாக பெட்ரோல் ஊற்றி கொல்லப்பட்டவர். சம்பவத்தின் போது நீதுவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடியுள்ளனர். இந்த நிலையில் நீதுவின் குடியிருப்பில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நிதீஷ்(32) என்பவரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

பகல் 7 மணி அளவில் கழிவறையில் சென்ற நீதுவை திட்டமிட்டு, குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த நிதீஷ் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இருச்சக்கரவாகனத்தில் நீதுவின் குடியிருப்புக்கு வந்த நிதீஷ், பின் வாசல் வழியாக குடியிருப்புக்குள் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

திடீரென்று நீதுவின் அலறல் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு அவரது குடியிருப்பின் அருகே ஒன்று கூடியுள்ளனர். இதனிடையே கழிவறையில் இருந்து நீதுவின் உடல் முழுவதும் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி நீதுவின் மார்பில் ரத்தக்காயம் இருந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்துவந்த பொலிசார் நிதீஷை கைது செய்துள்ளனர். மட்டுமின்றி மருத்துவ சோதனைக்கு உட்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணைக்கும் உட்படுத்தப்படுவார். எம்.பி.ஏ பட்டதாரியான நிதீஷ் கடந்த மூன்று ஆண்டுகளாக நீதுவை காதலித்து வந்துள்ளார்.

பலமுறை திருமணம் செய்துகொள்ள கோரியும் நீது மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து சென்ற நிதீஷ், மீண்டும் திருமண கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால் நீது தமது குடும்ப நிலையை கருத்தில்கொண்டு மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளார் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட நீதுவின் தாயார் சில ஆண்டுகளுக்கு முன்னரே மரணமடைந்துள்ளார். தந்தையும் கைவிட்டு சென்றுள்ளார். கல்லூரியில் படித்துவரும் நீது பாட்டி உள்ளிட்ட உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார்.

வவுனியாவில் கஞ்சா விற்பனை செய்த இருவருக்கு நேர்ந்த கதி!!

கஞ்சா விற்பனை

வவுனியாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நேற்று குறித்த நபர்களை முன்னிலைப்படுத்திய போதே அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருவர் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பாக வவுனியா மதுவரி திணைக்களத்தினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நூதன முறையில் பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவன்!!

அதிர்ச்சி கொடுத்த சிறுவன்

சிறுவன் ஒருவன் அடையாளம் தெரியாத சிலர் தன்னை கடத்தியதாக கூறி நாடகமாடியதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கல்வி நிலையத்திற்கு செல்லாமல் கிரிக்கட் விளையாடச் சென்ற, நெல்லியடி மாலுசந்திப் பகுதியைச் சேர்ந்த எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனே இவ்வாறு நாடகமாடியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுவன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனை அடுத்து, மாலை அந்த சிறுவன் தொண்டைமாணாறு பகுதியிலிருந்து பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் காரில் தன்னை கடத்தி வந்து வீதியில் விட்டு சென்றதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற பெற்றோர் சிறுவனை அழைத்து கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் முறைப்பாட்டில் சந்தேகம் கொண்ட பொலிஸார் குறித்த சிறுவனையும், அவனது தந்தையையும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டதை அடுத்து, கல்வி நிலையம் செல்லாது கிரிக்கட் விளையாட சென்றதை மறைக்க தான் கடத்தல் நாடகம் ஆடியதாக சிறுவன் தெரிவித்தார் என நெல்லியடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சிறுவனால் தொண்டைமாணாறு பாலத்தில் மறைத்து வைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சிறுவன் கடத்தப்பட்ட தகவல் பரவியதில் வடமராட்சி பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் உண்மையை வெளிக் கொண்டு வந்ததில் பதற்ற நிலை தணிந்துள்ளது.

திருமணத்திற்காக காத்திருந்த பெண் : பெருந்திரளானோரின் கண்ணீர் வெள்ளத்தின் மத்தியில் உடல் அடக்கம்!!

திருமணத்திற்காக காத்திருந்த பெண்

தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு சென்ற நிலையில் உயிரிழந்த இளம்பெண்ணின் சடலம் மன்னாரில் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மன்னார் – தட்சணா மருதமடு, பாலம்பிட்டியை சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா எனும் 28 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் தட்சனா மருதமடுவில் உள்ள இல்லத்தில் வைத்து நேற்று இறுதி கிரியைகள் இடம்பெற்ற பின் பெருந்திரளான மக்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு மத்தியில் ஹேமாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹேமாவுக்கு எதிர்வரும் பத்தாம் திகதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் மணப்பெண்ணான குறித்த இளம் பெண் தலைவலி ஏற்பட்டதை தொடர்ந்து மயக்கமடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவரை உறவினர்கள் உடனடியாக மன்னார் மடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் தலையில் கட்டி இருப்பதை கண்டறிந்து அதனை நீக்குவதற்காக சத்திரசிகிச்சையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளதுடன், கடந்த மூன்றாம் திகதி பிற்பகல் அவர் உயிர் பிரிந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை ஹேமா, மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கல்வி பயின்று கடந்த வருடம் (2018) செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் திருமணமாகி நான்கே நாட்களில் இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழ். நெல்லியடி பகுதியில் திருமணமாகி நான்கு நாட்களிலேயே இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி வடக்கு சரஸ்வதி வீதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமாகி நான்கு நாட்களான நிலையில், குறித்த இளைஞர் தனது உடமையில் 1 கிராமும் 100 மில்லி கிராமும் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட இளைஞனை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வட மாகாணத்திற்கு பயணங்கள் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி

தென்னிலங்கையில் இருந்து வட மாகாணத்தில் அதிவிரைவாக செல்லும் ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய ரயில் சேவையில் ஈடுபடத்தப்படவுள்ளது.

சகல வசதிகளுடனும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. மிக வேகமாக பயணிக்கும் ரயில்களுக்கு பொருத்தமான தண்டவாளங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம் 91 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடப்படவுள்ளது.

ஓமந்தை வரை 128 கிலோ மீற்றர் தூரத்திற்கு ரயில் வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. புதிய ரயில் சேவை ஆரம்பிக்கும் பட்சத்தில் மிக விரைவாக தென்னிலங்கையில் இருந்து வடபகுதியை நோக்கி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

திடீரென மயங்கி விழுந்த இளைஞன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று கரப்பந்து விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 4ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதானஇராசேந்திரம் நிதர்சன் என தெரிவிக்கப்படுகின்றது. இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு விக்னேஷ்வரா விளையாட்டுக்கழக உறுப்பினரான இராசேந்திரம் நிதர்சன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இரத்தினக் கல் தேடிச்சென்றவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

களு கங்கையில் நீரில் மூழ்கி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுகங்கையின் இரத்தினபுரி கிரியல்ல பிரதேசத்திலுள்ள ஹரணியாவக பகுதியிலேயே நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் இன்று காலை தனது சகாக்களுடன் சேர்ந்து இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது ஒட்சிசன் தாங்கிய கொம்பிரஷரின் உதவியுடன் நீரில் மூழ்கி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக கிரியல்ல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர் அவிசாவளை பிரதேசதத்தைச் சேர்ந்த என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காணாமல் போயுள்ளவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கையில் பணத்துடன் கண்கலங்க நின்ற சிறுவன் : இணையத்தில் வைரலான புகைப்படம்!!

வைரலான புகைப்படம்

மிசோரம் மாநிலத்தில் கையில் பணம் மற்றும் கோழிகுஞ்சுடன் மருத்துவமனையில் நிற்கும் சிறுவனின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுவன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டை சேர்ந்தவரின் வளர்ப்பு கோழிக்குஞ்சின் மீது ஏற்றிவிட்டார்.

இதில் காயம்பட்ட அந்த கோழிகுஞ்சுடன் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பணத்தை கொடுத்து கோழிக்குஞ்சை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இதனை அங்கிருந்த ஒரு ஊழியர் படமாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தாயை தவறாக பேசிய நண்பனை கோபத்தில் வெட்டிக்கொலை செய்த மகன்!!

வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் தாயின் நடத்தை குறித்து தவறாக பேசிய நண்பரை வெட்டிக்கொலை செய்த மகன் தானாக சென்று பொலிசில் சரணடைந்துள்ளார்.

எப்போதும்வென்றான் அருகேயுள்ள கன்னக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த வேலனும், கண்ணனும் நண்பர்கள். இருவரும், ஒன்றாக உப்பளத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், கண்ணனின் தாயாரின் நடத்தை குறித்து, வேலன் கேலி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் இரவு நேரத்தில் வேலனை அழைத்துச் சென்று, அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளான். கொலை செய்துவிட்டு தானாக காவல்நிலையத்தில் சென்று சரணடைந்து நடந்தவை குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவளுக்கு கண்ணாடி பார்க்கவே பயம்… நண்பர்கள் இல்லை : தோல் புற்றுநோயால் அவதிப்படும் சிறுமி!!

புற்றுநோயால் அவதிப்படும் சிறுமி

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தோல் புற்றுநோய் காரணமாக அவதிப்படும் சிறுமி தொடர்பில் நெஞ்சைப் பிசையும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் பெற்றோருடன் குடியிருக்கும் 13 வயது வஃபா என்ற சிறுமியே, தமது முகத்தையே கண்ணாடியில் பார்க்க அஞ்சி வருகிறார்.

அரியவகை தோல் புற்றுநோயால் அவதிப்பட்டும்வரும் வஃபா, வலியால் துடிக்கும்போது மொத்த குடும்பமும் ஆதரவாக அவருடன் நின்றுவருகிறது. எல்லா சிறுமிகளுக்கும் இருக்கும் துடிப்புடன், ஏராளமான நண்பர்களுடனும் வலம் வந்த சிறுமி வஃபாவுக்கு தோல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

பகல் வெட்டமே அவருக்கு நரகவலியை அளித்துள்ளது. திடீரென்று சிறுமி வஃபாவின் தோல் கறுப்பு நிறத்தில் மாறியதால், மருத்துவர்களை காண்பித்துள்ளனர் தந்தை அப்துல் மற்றும் தாயார் நசீரா. ஆனால் தங்கள் மகளுக்கு தோல் புற்றுநோய் என தெரியவந்ததும் இருவரும் உடைந்தே போயுள்ளனர்.

வஃபாவின் சகோதரரின் உயிரைப் பறித்ததும் இதே தோல் புற்றுநோய்தான். உடம்பில் இருந்து தொல் கீறி எடுப்பது போன்ற வலியை வஃபாவுக்கு அளித்தது அந்த நோய். அதுவரை கொண்டாட்டமாக இருந்த சிறுமி வஃபாவின் வாழ்க்கை மருத்துவமனை படுக்கையில் முடங்கியது.

ஆனால் தற்போது செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்கான தொகையை சேகரிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளனர் வஃபாவின் பெற்றோர்.

பழைய செய்திதாள்களை வாங்கிய நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் : அடுத்த சில மணி நேரங்களில் தெரிந்த உண்மை!!

கேரளாவில் பழைய செய்திதாள்களில் நகையை வைத்திருந்த பெண், தெரியாமல் நகைகள் இருந்த செய்திதாள்களை எடைக்கு போட்ட சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் Karakkamandapam-ல் இருக்கும் Pottavila பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை தன்னுடைய வீட்டில் இருந்த பழைய செய்திதாள்களை விற்க முடிவு செய்துள்ளார்.

அதன் படி அவருடைய வீட்டிற்கு வந்த பழைய செய்திதாள்களை வாங்கும் நபரிடம் எடைக்கு போட்டுள்ளார். அதன் பின் சிறிது நேரத்தில் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த பழைய செய்திதாள்களை வாங்கிய நபரை பிடிப்பதற்காக தன் மகளுடன் வண்டியில் அவரை தேடியுள்ளார்.

அதன் பின் அவர் கடை வைத்திருக்கும் Attakulangara பகுதிக்கு சென்று தான் விற்ற பழைய செய்திதாள்களின் உள்ளே நகைகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் அந்த நபரோ அது எல்லாம் எதுவும் இல்லை என்று மறுக்கவே, உடனே அந்த பெண் பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போதும், இல்லை என்று கூறியுள்ளான். இதையடுத்து அந்த நபரை கடையில் சோதனை செய்த போது, 17 சவரன் நகைகள் இருந்துள்ளது.

இதனால் அவரை கைது செய்த பொலிசார் மீதம் உள்ள 20 சவரன் நகைகள் எங்கே என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் எனவும், அவர் தற்போது கேரளாவின் Karimadom பகுதியில் வசித்து வருவதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் போதைக்கெதிரான சத்தியப்பிரமாண நிகழ்வு!!

போதைக்கெதிரான சத்தியப்பிரமாண நிகழ்வு

வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் போதைக்கெதிரான சத்தியபிரமாண நிகழ்வு இன்று (06.04) இடம்பெற்றது.

போதைக்கு எதிரான ஜனாதிபதியின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சித்திரை புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை புதுவருட சத்தியபிரமானத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னகோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.