மனைவியை கொலை செய்துவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை : பொலிசாரிடம் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

மனைவியை கொலை செய்துவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை

தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்துவிட்டு, மகளுக்கு போன் செய்து தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கேத்துநாய்க்கம்பட்டியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார்.

ரவி கூலித் தொழில் செய்து வரும் நிலையில், காமாட்சிக்கும் ஊத்தங்கரையை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. இது ரவிக்கு தெரிந்ததால், மனைவி காமாட்சியிடம் இது குறித்து பல முறை சண்டை போட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு மகளான அய்யம்மாளை தொடர்பு கொண்ட இவர், காமாட்சியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள், தாய் இறந்த நிலையில் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அய்யம்மாள் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னரே ரவி தனது மனைவி காமாட்சியை வெட்டி கொன்றதாக காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மனைவியின் நடத்தை சரியில்லாததால் வெட்டிப் படுகொலை செய்தேன் என கூறியுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

18 மாதம் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் : வீட்டை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்திய வெளியுறவு அதிகாரி போல் போலி ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நொய்டாவில் பொலிசார் கைது செய்தனர். டெல்லியைச் சேர்ந்த ஷோயா கான் என்ற பெண் எம்.ஏ அரசியல் அறிவியல் படித்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் இவரது கனவு, இதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியுள்ளார்.

ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் அதிகாரி ஆக வேண்டும், பேர் புகழோடு திகழ வேண்டும் என்ற ஆசை அவரை விட்டு போகாத காரணத்தினால் தான் நினைத்ததை அடைய வேண்டும் சில குறுக்க வழிகளை கையாண்டுள்ளார்.

அதன்படி, இவர் தனது இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என போலியான ஐ.டி கார்டு ஒன்றை தயாரித்துள்ளார். அத்துடன் போலியான இ-மெயில் ஐ.டி-யை உருவாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி செல்போன் ஆப் மூலம் தனது குரலை ஆண் குரலாக மாற்றி பேசியுள்ளார்.

இவரது கணவர் வங்கியில் வேலை செய்து, அங்கிருந்து வெளியேறியவர் என்பதால் இவருக்கு போலியான் ஐ.டி.கார்டு போன்றவைகளை ஷோயா தயாரித்து கொடுத்துள்ளார். அதன் பின் ஒரு அரசு அதிகாரி போலவே ஷோயா வலம்வர தொடங்கியுள்ளார். 18 மாதங்கள் ஒரு அரசு அதிகாரி போல் வலம் வந்துள்ளார். இவரின் இந்த திருட்டுத்தனத்தை அறியாமல் இவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வேறு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் ஷோயா உத்தரப் பிரதேசம் மீரட்டில் நடந்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அங்கும் ஒரு அதிகாரி போல் வலம்வர, இவரை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என அனைவரும் நினைத்துள்ளனர். பல காவல் அதிகாரிகளும் இவருக்கு சல்யூட் அடித்துள்ளனர்.

இதையடுட்த்து நொய்டாவின் கவுதம் புத்த நகர் எஸ்.எஸ்.பி வைபாவ் கிருஷ்ணாவை செல்போனில் தொடர்பு கொண்ட இவர் தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொலிசாரை அனுப்பிவைக்க தாமதப்படுத்தியதாக திட்டியுள்ளார். அதன் பின்னரே இவர் மீது சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவரது வீட்டை சோதனை செய்து போது பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் உண்மையான அதிகாரியே இல்லை போலியான ஐ.டி. கார்டை தயாரித்து 18 மாதங்களாக மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் தங்கியிருந்த 3 படுக்கையறைகள் கொண்ட வீட்டை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். அத்துடன் 2 சொகுசுக் கார்கள், 2 லேப்டாப்கள், 2 போலி ஐ.டி கார்டுகள், 2 வாக்கி டாக்கிகள், 4 ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2 போலி துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். அவரது கணவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் கோ டாடி என்ற இணையதளத்தில் பணம் செலுத்தி போலியான இணைய தளம் ஒன்றையும் உருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் அரசியல் பிரபலங்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் போலியான ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபடும் நபர் தான் என்றும், இவருக்கு வெளிநாட்டில் இருக்கும் ஏஜென்சிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

நழுவினார் மைத்திரி : வரவு செலவுத் திட்டத்தில் அபார வெற்றி பெற்ற ரணில்!!

அபார வெற்றி பெற்ற ரணில்

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் 45 மேலதிக வாக்குகள் வெற்றி பெற்றுள்ளது. ரணில் அரசாங்கம் சபையில் முன்வைத்த வரவு செலவுத்திட்டத்திற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரும் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. எனினும் மகிந்த தரப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரணில் அரசாங்கம் வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளையும் பெற்றுள்ளதுடன், இதன் அடிப்படையில் 45 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவு திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாம் வாசிப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பில் வாக்கெடுப்பின்போது 119 வாக்குகள் ஆதரவாகவும், 76 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய தரப்புக்கள் எதிராகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இன்றைய வாக்கெடுப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டது.

அலரி மாளிகைக்குள் நடந்த விபரீத காதல் அம்பலம் : பொலிஸார் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

விபரீத காதல்

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை வளாகத்தில் அதிரடிபடை வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட காதல் உறவு முறிந்தமையினால், விரக்தியடைந்த நிலையில் தற்கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று காலை குறித்த அதிரடிபடை வீரர் தனது கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வரக்காபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான தில்ருக் சமரசிங்க என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பேஸ்புக் காதலிக்கு எழுதிய கடிதம் ஒன்று உயிரிழந்த அதிரடிபடை வீரரின் உடமையிலிருந்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தாயான இந்த பெண் சில காலங்களாக பேஸ்புக் ஊடாக இந்த அதிகாரியுடன் தொடர்பு ஒன்றை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

எனினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலி!!

இளைஞன் பலி

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காக 8ம் வகுப்பில் பரீட்சை!!

8ம் வகுப்பில் பரீட்சை

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காக எட்டாம் வகுப்பில் புதிய பரீட்சை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடவத்த மஹாமாய வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார். இந்த புதிய பரீட்சையின் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்தின்படி 8ஆம் வகுப்பின் பின்னர் மாணவர்கள் தமக்கு உரிய பாடநெறிகளை தெரிவுசெய்து உயர் கல்வியை தொடரமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் வீடு ஒன்று முற்றாக தீயில் எரிந்து நாசம்!!

வீடு தீயில் எரிந்து நாசம்

வவுனியா ஓமந்தை பறநட்டகல் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது இதனால் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 40 நெல் மூட்டைகள் உட்பட வீட்டின் உடமைகளும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓமந்தை பறநட்டகல் பகுதியில் வசித்து வந்த ஒருவர் தனது கொட்டில் வீட்டில் வயலில் விளைந்த நெல் மூட்டைகளை பாதுகாத்து வைத்துள்ளார். நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றபோது மாலை திடீரென்று வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.

இத் தகவலையடுத்து வீட்டிற்குச் சென்று அயலவர்களின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டபோதும் வீட்டிலுள்ள உபகரணங்கள் அலுமாரியிலுள்ள பொருட்கள் உட்பட வயலில் விளைந்த 40 நெல் மூட்டைகளும் எரிந்து நாசமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தீவிபத்திற்கு அருகிலுள்ள வயல்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் அத்தீபரவல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க ஆட்டோ ஓட்டுநர் செய்த அற்புத செயல் : குவியும் வாழ்த்துக்கள்!!

ஆட்டோ ஓட்டுநர் செய்த செயல்

கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ரிக்ஷாவின் மேற்பகுதியில் அழகான சிறிய தோட்டம் அமைத்து வளர்த்து வருகிறார்.

கொல்கத்தாவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் நபர் பிஜோய் பால். இவர் மரங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக “மரங்களை பாதுகாத்து உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்ற பொன்மொழியை தன்னுடைய ஆட்டோவில் பின் பக்கமாக எழுதி வைத்தும், ஆட்டோவின் மேற்புறத்தில், அசந்து போகும் அளவிற்கு சிறிய செடிகளை வளர்த்து அழகிய பூந்தோட்டமாக வைத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கும் போது, “எங்கு சென்றாலும் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது என்றும், எவ்வளவு வெயில் அடித்தாலும் அதிலிருந்து மிக எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும்.. அதேவேளையில் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

மேலும் இதை ஒரு விளம்பரமாக கருதாமல் பசுமை ஆர்வலர்கள் உருவாக வேண்டும் என்பதற்காகவும், நாட்டில் மரங்களை அழிக்காமல் ஒவ்வொருவரும் மரத்தை பேணிக்காக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளேன்” என அவர் தெரிவித்து உள்ளார்.

8 ஆண்டுகளுக்கு பின் பேஸ்புக் உதவியால் தாயிடம் சேர்ந்த மகன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பேஸ்புக்கின் உதவியோடு நேற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு 8 வயதான தனது மகன் தினேஷ் ஜனா காணாமல் போனதாக, சுசானா குஷாய்குடா என்ற பெண் பொலிசில் புகார் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பொலிசார் அந்த சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. இந்நிலையில், சுசானா தனது பேஸ்புக் கணக்கில் மகன் தினேஷ் ஜனாவை பல பெயர்களைக் கொண்டு தேடியுள்ளார்.

அப்போது தனது மகனின் புகைப்படத்தை பார்த்த அவர், அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக சைபர் பிரிவு பொலிசாருக்கு இது குறித்து தெரியப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தினேஷின் பேஸ்புக் கணக்கின் ஐ.பி எண்ணைக் கொண்டு, பஞ்சாப்பின் அம்ரித்சார் மாவட்டத்தில் உள்ள ரனகலா கிராமத்தில் சுசானாவின் மகன் வசிப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பொலிசார் ஒரு குழுவாக பஞ்சாப் சென்று தினேஷை மீட்டு வந்தனர். பின்னர் நேற்றைய தினம் சுசானாவிடம் அவரது மகன் தினேஷ் ஒப்படைக்கப்பட்டார்.

மலசலகூடத்தில் தூக்கில் தொங்கிய மாணவி : அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்!!

தூக்கில் தொங்கிய மாணவி

கடலூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி, ஆண் மாணவர்களின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூரை சேர்ந்த ஏழுமலை (39) என்பவரின் இரண்டாவது மகள் துர்கா தேவி (13). இவர் அதேபகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

வீட்டின் அருகே பள்ளி இருந்ததால், தினமும் அதிகாலை பள்ளி திறக்கும் பொறுப்பு தேவிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு வீட்டில் பெற்றோர்களிடம் கூறிவிட்டு தேவி கிளம்பியுள்ளார். வழக்கம் போல பள்ளிக்கு வந்த சில மாணவர்கள் கழிவறையை திறந்துள்ளனர். அப்போது துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடியே தேவி கிடப்பதை பார்த்து அலறியுள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த தலைமையாசிரியை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் பள்ளிக்கு விரைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தலைமையாசிரியரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மாணவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனை தடுக்கும் விதமாக பேச்சு வார்த்தை கூட நடத்தாமல் பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 10 பேரை கைது செய்து பொலிஸார் சிறையில் வைத்துள்ளனர்.

180 நாட்களில் கசந்த மாணவாழ்க்கை : வேதனையில் பெண் எடுத்த சோகமுடிவு!!

பெண் எடுத்த சோகமுடிவு

சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக விக்னேஷ்வரி என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களிலே, உறவினர்களுடன் பேச கூடாது என்றும் பண்டிகை காலங்களில் பணம் நகை கேட்டும் மாரியப்பன் தொடர் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த விக்னேஷ்வரி வீட்டில் ஆளில்லாத சமயம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் விக்னேஷ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் விக்னேஷ்வரி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி மாரியப்பனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவுக்கு சுற்றுலா சென்ற அழகிய இளம்பெண் மரணம் : அதிர்ச்சிக் காரணம்!!

இளம்பெண் மரணம்

கனடாவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்த நிலையில், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோதி லக்‌ஷ்மி பிள்ளை (27), கனடாவின் அழகைக் காண்பதற்காக சுற்றுலா சென்றார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 9 அன்று கியூபெக்கின் Mont-joli பகுதிக்கு அருகில் உள்ள கடற்கரை ஒன்றில் அவரது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரிஸ்டலில் பிறந்த ஜோதியின் பெற்றோர் ஃபிஜியைச் சேர்ந்தவர்கள்.

யாரோ இருவர் அவருக்கு லிஃப்ட் கொடுத்ததும் அவரை கடற்கரையில் இறக்கி விட்டதும் தெரியவந்தது. பின்னர் அவரது உயிரற்ற சடலம்தான் கிடைத்தது, அவரது பொருட்கள் அனைத்தும் அவரது அருகிலேயே கிடந்தன.

சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ உதவிக் குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் உடற்கூறு பரிசோதனையில், மரணத்திற்குமுன் ஜோதி போதைப்பொருட்களோ, மதுபானமோ அருந்தவில்லை என்பது தெரியவந்தது. நேற்று பிரிஸ்டலில் நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் ஜோதி தண்ணீரில் மூழ்கியதால் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

வவுனியாவில் வீதியில் முச்சக்கரவண்டியை கைவிட்டு தப்பியோடிய சாரதி!!

தப்பியோடிய சாரதி

வவுனியாவில் முச்சக்கரவண்டி ஒன்றினை பொலிசார் சோதனை மேற்கொண்டபோது முச்சக்கரவண்டியை கைவிட்டு சாரதி தப்பிஓடியுள்ளார். இதையடுத்து முச்சக்கரண்டியை சோதனைக்குட்படுத்தியபோது பொதி செய்யப்பட்ட கஞ்சாவை மீட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 7மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் போதை ஒழிப்புப் பிரிவினருடன் பூந்தோட்டம் மயானத்திற்கு அருகில் முச்சக்கரண்டி ஒன்றினை வழிமறித்த பொலிசார் அதில் சோதனை செய்ய முயற்சித்துள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டியைச் செலுத்தி வந்த சாரதி முச்சக்கரவண்டியை கைவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்தியபோது 1கிலோ 265மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிசார்,

தப்பிச் சென்ற சந்தேக நபரைத் தேடிவருவதாகவும் முச்சக்கரவண்டி கைப்பற்றப்பட்ட கஞ்சா என்பன பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

பல இலட்சம் மோசடி செய்த அரச அதிகாரிக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு!!

இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு

திருகோணமலை – கந்தளாய் பிரதேச சபை செயலாளர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அரச பணம் 30 லட்சத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு 10 வருடம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்த 30 லட்சத்துடன் மேலதிகமாக 90 லட்சத்தினை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என்றும், செலுத்த தவறும் பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சந்தேகநபர் பிரதேச சபைக்குரிய வங்கிக் கணக்கில் இருந்து அரச பணம் 30 லட்சத்தினை பெற்று அரைமணி நேரத்தில் அவரின் சொந்த கணக்கில் வைப்பு செய்துள்ளார். பின்னர் மூன்று, நான்கு மாதங்களின் பின்னர் நிரந்தர வைப்பில் இருந்து தனது சேமிப்புக்கு மாற்றியுள்ளார். பிரதேச சபை அதிகாரிகள் வங்கி முகாமையாளரை ஆதாரப்பூர்வமாக நிறுத்தி மன்றில் சாட்சி வழங்கியுள்ளனர்.

இதன் பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 10 வருடம் கடூழிய சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடுகடத்தப்பட்ட பிரபல நடிகர் விசாரணைகளின் பின் கைது!!

நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் விசாரணைகளின் பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டுபாயில் வைத்து பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட குறித்த நடிகர் உட்பட நால்வர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதனையடுத்து, நடிகர் ரயன் வேன் ரோயன் உட்பட நால்வர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து நடிகர் ரயன் வேன் ரோயனிடம் 18 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின் பின்னர் நடிகர் ரயன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சா வைத்திருந்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவர் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

தூக்கிட்டு தற்கொலை

கொழும்பில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வத்தளை ஹேகித்த பிரதேசத்தில் 17 வயதான ஹேஷான் சத்துரங்க என்ற இளைஞனே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர் அயல் வீட்டில் இருந்த நாயை தனது வீட்டிற்கு குறித்த இளைஞன் கொண்டு சென்றுள்ளார். அதனை மீண்டும் உரிமையாளரிடம் கொடுப்பதற்காக இந்த இளைஞன் சென்றார். அங்கு நாயின் உரிமையாளர் குறித்த இளைஞனை கடுமையாக தாக்கி அதனை காணொளியாக பதிவு செய்தார். அத்துடன் அதனை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினால் மனவேதனையடைந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.