வவுனியா ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தில் சிறப்பான பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்!!

வவுனியா ஒலுமடு மகா வித்தியாலயம்

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட  ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயம்  2018 இல்  நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளது.  கிடைக்கபெற்ற பெறுபெறுகளின் அடிப்படையில்,

பரீட்சை எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 40, உயர்தரம் கற்பதற்கு தகுதியான மாணவர்கள் எண்ணிக்கை -31, பாடசாலை சித்தி வீதம் 77.5%, மேற்படி பெறுபேறுகளில்,

ந. டயந்தன். 8AB, சு. தனுஜா. 7A2B, க.சமர்வாணன். 7AC, ம.டினோயா. 4A, தெ.லிவிதன் 3A,2B,3C  ஆகியோர்  சிறப்பான பெறுபேற்றை  பெற்றுள்ளனர். மேற்படி பாடசாலை  கடந்த  வருட இறுதியில்  1C தர பாடசாலையாக தரமுயர்த்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க தமிழ்நாடு சென்ற இலங்கை தமிழ்ப் பெண் தற்கொலை!!

பெண் தற்கொலை

இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க தமிழ் நாடு சென்று இருந்த இலங்கை பெண் ஒருவர் சென்னையில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்திகளில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் மலர்மேரி (வயது 22) மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த அவினாஷ் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் அதன் பிறகு காதலர்களாக மாறியுள்ளனர். இருவரும் 7 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மலர்மேரி தனது காதலனை சந்திக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுள்ளார். இதையடுத்து இந்த காதல் ஜோடி சென்னையின் பல இடங்களை சுற்றிப்பார்த்துள்ளதுடன், தன் காதலி மலர்மேரியை கடந்த 25ம் திகதி இலங்கைக்கு திருப்பி அனுப்ப அவினாஷ் முடிவு செய்தார்.

ஆனால் காதலன் அவினாஷ் உடன் பல இடங்களை சுற்றிய சந்தோஷத்தில் இருந்த மலர்மேரி அவரை விட்டு பிரிந்து செல்ல மறுத்துவிட்டாராம். இதையடுத்து காதலியை விடுதி ஒன்றில் தங்க வைத்துவிட்டு அவினாஷ் சென்றுள்ளார்.

இந்நிலையில் மலர்மேரி தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அறையின் கதவை தட்டிப்பார்த்து திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மலர்மேரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பம் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

கடும் வெப்பம்

எதிர்வரும் சில தினங்களில் பல பிரதேசங்களில் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

வட மேல் மாகாணம், மன்னார், கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மொனராகலை போன்ற மாவட்டங்களில் இந்த வெப்ப நிலையை எதிர்ப்பார்க்க முடியும்.

நாளைய தினம் பொது மக்களினால் உணரக் கூடிய வகையில் ஆக கூடுதலான காலநிலை இடம்பெறக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வட மேல் மாகாணம், மன்னார், கம்பஹா, மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று ரவுடியாக இருந்து இன்று திருந்தி வாழ்ந்த நபருக்கு பட்டப்பகலில் நேர்ந்த பயங்கரம்!!

பட்டப்பகலில் நேர்ந்த பயங்கரம்

சென்னை அண்ணாநகரில் ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்த நபர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி கடந்த காலத்தில் ரவுடியாக இருந்தவர். இவர் மீது கடந்த 2003, 2004ல் சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ரவுடி தொழிலை விட்டு மனம் திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். தற்போது தண்ணீர் கேன் சப்ளை தொழிலை செய்து வரும் கிருஷ்ணாவை நேற்று பைக்கில் வந்த 6 பேர் அரிவாளோடு விரட்டியுள்ளனர்.

அவர்களிடம் உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பித்து ஓடியுள்ளார். ஆனால், ரவுடிகள் நாலாபக்கமும் சுற்றிவளைத்து அவரை வெட்டிசாய்த்தனர். வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிருஷ்ணா உயிரிழந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். ரவுடி கிச்சாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்து இருக்கலாம் என பொலிசார் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் தனுஷ் எங்களுக்கு பிறந்த மகன் என கூறிய தம்பதி மீண்டும் கிளப்பிய சர்ச்சை!!

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் எங்களது மகன் என கூறிய மேலூர் தம்பதி இது தொடர்பான வழக்கை கேரளா அல்லது கர்நாடகாவுக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவர் மாதந்தோறும் பரமாரிப்புத் தொகையாக ரூ. 65 ஆயிரம் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மதுரை தம்பதிகள் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இந்நிலையில் தற்போது மீண்டும் கதிரேசன், மீனாட்சி தம்பதி இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அதில் மதுரையில் இருந்து வழக்கை கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், தனுஷூக்கு உரிமை கோரும் மதுரை தம்பதிகள் வழக்கு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மகள் குறித்த வீடியோவை வட்ஸ் அப்பில் அனுப்பிய கணவன் : அதை பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!

அதிர்ச்சியில் உறைந்த மனைவி

இந்தியாவில் தனது மகளை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் கிருஷ்ணா முக்திபாத். இவர் மனைவி நயினா குமாரி. தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணா குடிபோதையில் நயினாவையும் அவர் மகள்களை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.

இதனால் சில மாதங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்து தனது இரண்டு மகள்களுடன் நயினா தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் மூன்றாவது மகளான 5 வயது சிறுமியை நயினாவால் உடன் அழைத்து செல்ல முடியவில்லை.

இந்நிலையில் மூன்றாவது மகளை தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்திய கிருஷ்ணா, மனரீதியாகவும் அவரை துன்புறுத்தினார். மகளை கொடூரமாக அடிக்கும் வீடியோவை சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவி நயினாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார் கிருஷ்ணா.

வீடியோவை பார்த்த பிறகு மனைவி தன் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று எண்ணியே கிருஷ்ணா அப்படி செய்தார். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நயினா அதை பேஸ்புக்கில் பதிவிட அது வைரலானது.

இது பொலிசார் கவனத்துக்கு சென்ற நிலையில் உடனடி நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் கிருஷ்ணாவை கைது செய்தனர். அந்த சமயத்தில் கிருஷ்ணா முழு குடிபோதையில் இருந்தார். பொலிசார் கூறுகையில், கிருஷ்ணாவின் மூன்றாவது மகளை நயினாவிடம் ஒப்படைக்கவுள்ளோம். அதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சலிங் கொடுக்கவுள்ளோம் என கூறியுள்ளனர்.

விபத்தை காண வந்த கூட்டத்தின் மீது மோதிய லொறி : 18 பேர் பலியான அதிர்ச்சி!!

18 பேர் பலியான அதிர்ச்சி

கவுதமாலா நாட்டில் மக்கள் நிறைந்த இருண்ட நெடுஞ்சாலையில் கட்டுக்கடங்காமல் வந்த லொறி மோதியதால், 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுதமாலாவின் சோலோலா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் விபத்தில் பலியாகியானர். அதனை காண ஏராளமானோர் அங்கு கூடினர்.

அப்போது அவ்வழியாக கனரக சரக்கு லொறி ஒன்று மிக வேகமாக வந்து கூட்டத்தினர் மீது மோதியது. நெடுஞ்சாலையில் எவ்வித விளக்கொளியும் இல்லாமல் இருட்டாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் 30 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த கோர விபத்தில் 18 பேர் பலியானதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோலோலா மாகாணத்தைச் சேர்ந்த நஹூலா நகராட்சி தீயணைப்புத்துறை செய்தித் தொடர்பாளர் செசிலியோ சாக்காஜ் தெரிவித்தத்தை மேற்கோள் காட்டி, பாக்ஸ்நியூஸ் செய்தி நிறுவனம் இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்த விபத்தில் 30 பேர் பலியானதாகவும், அதற்கு தாம் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி ஜிம்மி மொரால்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இத்துயரச் சம்பவத்தில் பலியானோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளும் அரசு செய்யும்’ என தெரிவித்துள்ளார்.

அதிசார குருபெயர்ச்சி : 12 ராசிகளுக்குமான பலன்கள்!!

அதிசார குருபெயர்ச்சி

நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். சனி, குரு சில நேரங்களில் அதிசாரமாக செல்வார்கள். மார்ச் 29ஆம் தேதி குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த இடப்பெயர்ச்சியினால் எந்த ராசிக்கு நன்மை, பாதிப்பு என பார்க்கலாம்.

நவகிரகங்கள் ராசிகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் ஒரு கிரகம் வேகமாக நகர்ந்து அடுத்த ராசிக்குச் செல்வதை அதிசாரம் என்று சொல்வார்கள்.

விருச்சிக ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குருபகவான் தனுசு ராசிக்கு வேகமாக சென்று விடுவது அதிசாரம் எனப்படுகிறது. குருவானவர் விருச்சிக ராசியில் ஏறத்தாழ ஓராண்டு காலம் சஞ்சரிக்க வேண்டும்.

ஆனால் அவர் விருச்சிகத்தில் இருந்து திடீரென தனுசு ராசிக்கு சென்று விட்டு பின்னர் பின்னோக்கி வக்ரமாக விருச்சிகத்திற்கு வருவார். குருபகவான் அதிசாரம், வக்ரம் அடையும் போது ராசிகளுக்கு சில பலன்களைத் தருவார்.

மேஷம் : திருக்கணிதப்பஞ்சாங்கப்படி குருபகவான் 29.03.2019 முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 9ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் அதிசாரமாக ஒன்பதாம் வீட்டிற்குப் போவதால் மதிப்பும் மரியாதையும் கூடும்.

அதிக நன்மைகள் நடைபெறும் காலம் இதுவாகும். வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் மதிப்பும் மரியாதையும் கூடும். ஒன்பதாம் இடம் தர்ம ஸ்தானம். இந்த இடத்தில் உள்ள கேது, சனியுடன் குருபகவான் இணைகிறார். இந்த கால கட்டத்தில் ஆன்மீக தலங்களுக்கு பயணம் செய்வீர்கள்.

அப்பாவினால் நன்மைகள் கூடும். குருபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. ராசிக்கு மூன்றாவது வீடு, ஐந்தாம் வீட்டின் மீது விழுவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம் : குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 8ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, கவலைகள் வந்து செல்லும். குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்து எட்டாவது வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் சில பாதிப்புகள் ஏற்படும்.

என்னதான் முயற்சிகள் செய்தாலும் சில தடங்கள் ஏற்படும். உடல் நலமும் பாதிக்கப்படும் என்பதால் கவனமாக இருக்கவும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீடு, நான்காவது வீடு, 12வது வீட்டினை பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும், வீடு, நிலம் வாங்குவீர்கள். அஜீரணக்கோளாறு ஏற்படும் என்பதால் உணவு விசயத்தில் கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் பசு நெய் வாங்கி தானம் செய்யலாம்.

மிதுனம் : மிதுனம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்திற்கு செல்வதால் திருமண வாழ்க்கையில் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சிலருக்கு திருமணம் கைகூடி வரும். உங்கள் ராசியை குருபகவான் பார்வையிடுவதால் தொழில் வியாபாரம் சிறப்படையும். பங்கு வர்த்தகத்தில் பலன் கிடைக்கும். அதிசாரத்தில் ராசிக்கு 7ஆம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வாக்குக் கூடும். பணவரவு அதிகரிக்கும்.

கடகம் : குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் இருந்து ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பதால் கடக ராசிக்காரர்கள் சற்றே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம்.

சில நேரங்களில் காயங்கள் ஏற்படலாம். மனதாலும் உடலாலும் சில அழுத்தங்கள் ஏற்படும். போட்டியாளர்கள், எதிர்களின் தொல்லைகள் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, 12ஆம் வீடு, 10ஆம் வீட்டின் மீது விழுவதால் சில நன்மைகள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு வரும். தொழிலில், பணி செய்யும் இடத்தில் புரமோசன் ஏற்படும்.

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள குருபகவான் உங்கள் ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். உடல் ஆரோக்கியத்துடன் உற்சாகத்துடனும் இருக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் ஏற்படும்.

உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டை பார்க்கும் குருபகவானால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வருமானம் கூடும். ராசிக்கு ஒன்பதாம் வீட்டினை பார்க்கும் குருபகவானால் ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். அப்பாவினால் உதவி கிடைக்கும். மகளுக்கு திருமணம் கைகூடி வரும். சொத்து வழக்குகள் முடிவுக்கு வரும்.

கன்னி : கன்னி ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு நான்காம் அதிபதியும் ஏழாம் அதிபதியுமான குருபகவான் இப்போது ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்கிறார். இது கன்னிக்கு சாதகமானதல்ல.

கணவன் மனைவி இடையே சில சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். உணர்வுப்பூர்வமான பேச்சுக்களால் சில பாதிப்புகள் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். சில நோய்கள் எட்டிப்பார்க்கும். பாதிப்புகள் குறைய ஏழை பிராமணர் ஒருவருக்கு தானம் அளிக்கலாம். பசுவிற்கு சப்பாத்தி தானமாக தரலாம்.

துலாம் : குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் அமர்கிறார். உடல் உழைப்பு அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் சின்னச் சின்ன தடங்கல் ஏற்படும். சோம்பேறித்தனத்தை கைவிடுங்கள்.

வீண் பழி ஏற்பட்டு மனதை பாதிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும், பதினொன்றாம் வீட்டையும் பார்க்கிறார் குருபகவான். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெறும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு பாசிப்பயறு தானமாக கொடுக்கலாம்.

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களே… உங்கள் ஜென்ம ராசியில் இருந்த குருபகவான் இரண்டாம் வீடான தன ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவது நன்மை தரும் அமைப்பாகும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும், தம்பதியர் ரொமான்டிக்காக சிறு பயணம் செல்வீர்கள். திருமண முயற்சிகள் சிலருக்கு கை கூடி வரும். வீடு கட்டும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு : தனுசு ராசிக்காரர்களே… உங்கள் ராசி நாதன் குரு பகவான் உங்கள் ராசிக்கு வருகிறார். ஏற்கனவே உங்கள் ராசியில் சனிபகவான், கேது ஆகியோர் குடியேறியிருக்க, இப்போது அதிசாரமாக குருபகவானும் சஞ்சரிக்கிறார்.

ஜென்ம குரு பொருளாதார ரீதியாக சில சங்கடங்களை ஏற்படுத்துவார். எவ்வளவுதான் பணம் வந்தாலும் செலவு கையை கடிக்கும். பொருளாதார நெருக்கடியை சந்திக்க தயாராகுங்கள். சில காலம்தான் கவலை வேண்டாம். ராசிக்கு 5ஆம் வீடு, ஏழாம் வீடு, ஒன்பதாம் வீட்டை பார்க்கும் குருபகவானால் திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மகரம் : மகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் அமர்கிறார் குருபகவான். இன்பமும், துன்பமும் இணைந்த காலகட்டம் இதுவாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.

ஆன்மீக தரிசனம் மன அமைதியைத் தரும். பாக்கெட்டில் மஞ்சள் நிற கர்ச்சிப் பயன்படுத்த மேலும் நன்மைகள் நடைபெறும். செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடியுங்கள். ஆன்மீக பயணம் அதிகரிக்கும்.

கும்பம் : கும்பம் ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் குருபகவான் அமர்வது நன்மை தரும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணபலமும் அதிகமாகும். தொழிலில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அமைதியும் ஆனந்தமும் குடியேறும். புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். அரசமரத்திற்கு தினசரி தண்ணீர் ஊற்ற நன்மைகள் நடைபெறும்.

மீனம் : மீன ராசிக்காரர்களே… உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீடான கர்ம ஸ்தானத்தில் குடியேறுகிறார். நீண்ட நாள் உடல் பாதிப்பில் இருந்து உங்களின் அம்மா குணமடைவார். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பண முதலீடுகளை கவனமாக கையாளுங்கள்.

குருபகவான் ராசிக்கு இரண்டாம் வீடு நான்காம் வீடு, மற்றும் ஆறாம் வீடுகளின் மீத விழுகிறது. கடன்கள் அடைபடும். எதிரிகள் தொல்லை ஒழியும். பணவருமானம் அதிகமாக இருந்தாலும் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை.

வவுனியாவில் நுண்கடன் தொல்லையால் குடும்பப் பெண் தற்கொலை!!

குடும்பப் பெண் தற்கொலை

நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அதிக மாத்திரை வில்லைகளை உட்கொண்டு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 5ஆம் திகதி நுண்கடன் நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் அளவிற்கு அதிகமான மாத்திரை வில்லைகளை உட்கொண்ட நாகராசா பரமேஸ்வரி 45வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அளவிற்கு அதிகமான மாத்திரை வில்லைகளை உட்கொண்டதால் பக்கவிளைவினை எதிர்கொண்ட குறித்த பெண்மணி தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் எவ்வித முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிவித்து கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையிலிருந்து வீடு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று குறித்த பெண்மணி தனது வீட்டில் உரிழந்துள்ளார். இன்றைய தினம் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளது.

 

-தமிழ்வின்-

க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர் விபரம்!!

க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்று முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு விசாக பெண்கள் கல்லூரியின் மாணவி நிலக்னா வர்ஸ வித்தான முதலாவது இடத்தை பெற்றுள்ளார். விசாக பெண்கள் கல்லூரியின் மாணவி சஜித்தி ஹங்சதியும், கம்பஹா ரத்னாவலி பெண்கள் மகா வித்தியாலயத்தின் மாணவி சஞ்சானி திலேக்கா குமாரியும்,

மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி மிந்தி ரெபேக்கா ஆகியோர் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர். ஐந்தாவது இடத்தை கேகாலை புனித ஜொசப் கல்லூரியின் மாணவி கயத்ரி ஹர்சிலா லிஹனி கடுவாரச்சி பெற்றுள்ளார்.

கொழும்பு தேவிபாலிகா மகா வித்தியாலயத்தின் மாணவி சந்தலிமுத்துனிமா ரத்நாயகவும், கொழும்பு ரொயல் கல்லூரியின் மாணவன் சஹான் யசங்க சமரகோனும், கொழும்பு ரொயல் கல்லூரியின் மாணவன் கவிரு மெத்னுக்கனும்,

காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சஸ்மித்த ஆகாஸ்வர லியனகேயும், ஹொரணை தக்சிலா கல்லூரியின் மாணவி ஹமாசி ஹெரந்திகாவும் ஆறாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். வெளியாகி பெறுபேறுகளுக்கு அமைய முதல் பத்து இடங்களில் எந்தவொரு தமிழ் மாணவர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது : 9413 பேர் 9A சித்திபெற்று வரலாற்று சாதனை!!

9413 பேர் 9A சித்தி

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எழுதிய பரீட்சாட்திகளின் பெறுபேறுகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதே வேளை இம்முறை பரீட்சை எழுதிய பரீட்சாத்திகளில் 9413 பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த சித்திகள் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என தெரிவிக்கப்படுகின்றது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் உத்தியோகபூர்வ பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது!!

பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது

கடந்த வருடம் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த வருடம், டிசம்பர் மாதம் 3ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் முழு இலங்கையிலும் இருந்து 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

பல முறை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்!!

ரவி கதிர்காமர்

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய ரவி கதிர்காமர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பிரித்தானியாவின் பினர் நகரில் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி சென்ற நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை காலை 6.30 அளவில் வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கு வருகை தந்த போதே அவர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவி கதிர்காமர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பொது மக்கள் தகவல் அறியும் பட்சத்தில் காவல் துறையினருக்கு தந்துதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ரவி கதிர்காமர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் குறித்த பகுதியில் நடமாடியமைக்கான காணொளியையும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் வௌியிட்டுள்ளனர்.

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் நேரம் அறிவிப்பு!!

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8 மணிக்கு பின்னர் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளம் அல்லது www.hirunews.lk என்ற இணையத்தளம் ஊடாக பரீட்சை பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

2018 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றது. அதில், 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதலனை காண சென்னைக்கு ஆசையாக வந்த இலங்கை பெண் : விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இலங்கையை சேர்ந்த இளம்பெண் காதலனை காண சென்னை வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மலர்மேரி (22). காஞ்சீபுரம் மாவட்டத்தின் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் (22). சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

மலர்மேரிக்கும், அவினாஷ்க்கும் சமூகவலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அதுகாதலாக மாறியது. கடந்த 7 மாதங்களாக இருவரும் சமூகவலைதளம் மூலம் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து விமானம் மூலம் மலர்மேரி தனது காதலனை பார்க்க சென்னை வந்தார். மலர்மேரியை அவினாஷ் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்தார். காதல்ஜோடி சென்னையில் பல இடங்களுக்கு ஒன்றாக ஜாலியாக சென்று வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 25-ம் திகதி மலர்மேரியை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அவினாஷ் விமான டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மலர்மேரி இலங்கை செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவினாஷ் விடுதியில் காதலியை தங்க வைத்துவிட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார்.

மலர்மேரி தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் மலர்மேரி பிணமாக தொங்கினார்.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து மலர்மேரியின் காதலன் அவினாஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாயில் துணி.. பல நாட்கள் பாலியல் வன்கொடுமை : 6 வயதுச் சிறுமி கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அதிர்ச்சித் தகவல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 6 வயது சிறுமி விவகாரத்தில் அதிர்ச்சி தரும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கோவையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமையன்று மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதூர் என்ற இடம் அருகே சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், சிறுமி பல நாட்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யயப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில். வன்புணர்வு செய்வதற்காக சிறுமியின் வாய் மற்றும் மூக்கில் துணியை வைத்து அழுத்தியுள்ளனர். சிறுமியின் கழுத்தில் கயிறு போன்ற பொருளை வைத்து இறுக்கி வன்புணர்வு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கினை போக்ஸோ சட்டத்திற்கு மாற்றியிருக்கும் பொலிஸார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள செல்போன் சிக்கனல்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் சிறுமியின் பெற்றோர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.