உயிருக்காக போராடும் இரண்டு சிறுவர்களின் தாய் : இச் செய்தியை அதிகம் பகிருங்கள்!!

இச் செய்தியை அதிகம் பகிருங்கள்

இரண்டு சிறு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிருக்காகப் போராடி வருகின்றார்.

அவர் தனது இரண்டு சிறு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தனது உயிர் காக்கும் சிகிச்சைக்கு உதவுமாறு நல்லுள்ளங்கொண்டவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கிறார். கிளிநொச்சி, ஜெயந்திநகரில் வசிக்கும் சந்திரசிறி சுபாசினி என்னும் 38 வயதுடையவரே இவ்வாறு உயிருக்காகப் போராடி வருகின்றார்.

இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு முப்பது இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் வைத்தியர்களால் கூறப்பட்டுள்ளது.

இவரது கணவர் அன்றாட கூலித் தொழிலாளியாவார். இவர்கள் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் வரை இடம்பெற்ற கொடிய யுத்தத்தால் இடம்பெயர்ந்து எல்லாவற்றையும் இழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு வேண்டி முப்பது இலட்சம் ரூபாய் பணத்தைத் திரட்ட முடியாத நிலையில் அல்லலுற்று உயிருக்காகப் போராடுகின்றார்.

நல்லுள்ளங்கொண்டவர்கள் தமக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் தனது சத்திரசிகிச்சைக்கு உதவி செய்து, தனது உயிர் காக்க உதவுமாறு மிகவும் எதிர்பார்ப்புடன் உதவி கோரிக் காத்திருக்கின்றார்.

இவர் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற்று இவருக்கு உதவ விரும்பும் நல்லுள்ளங்கள், இவரது தொலைபேசி இலக்கமான 0094771325372 மற்றும் 0094778302471 எனும் இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு உதவ முடியும்.

இவர் தொடர்பான மேலதிக விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தொலைபேசி இலக்கமான 0094776913244 எனும் இலக்கத்துக்கு தொடர்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவ விரும்பும் நல்லுள்ளங்கள் சந்திரசிறி சுபாசினி, இலங்கை வங்கிக் கணக்கு இல. 71331260 எனும் வங்கி இலக்கத்தின் மூலம் உதவ முடியும். இவர் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அடங்கிய ஆவணங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

மதுபானம் மற்றும் சிகரட்டுக்காக தினமும் 97 கோடியை செலவிடும் இலங்கையர்கள்!!

மதுபானம் மற்றும் சிகரட்

இலங்கையர்கள் தினமும் மதுபானம் மற்றும் போதைப் பொருட்களுக்காக 97 கோடி ரூபாயை செலவிடுவதாக மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

50 கோடி ரூபாய் மதுபானத்திற்காகவும் 9 கோடி ரூபாய் மென் மதுபானமான பியருக்காகவும் 38 கோடி ரூபாய் புகைப்பிடிப்பதற்காகவும் இலங்கையர்கள் செலவிட்டு வருகின்றனர்.

மதுவரி திணைக்களம் மற்றும் இலங்கை புகையிலை நிறுவனம் ஆகியவற்றின் தரவுகளுக்கு அமைய இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இலங்கை பெண்களில் 01 வீதமானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளதுடன் 0.5 வீதமான பெண்கள் மதுபானம் அருந்துகின்றனர்.

இலங்கை ஆண்களில் 34.8 வீதமானவர்கள் மதுபானம் அருந்துவதுடன் 29.4 வீதமானவர்கள் புகைப்பிடிக்கின்றனர் எனவும் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

காதலில் ஏற்பட்ட மோதல் : யாழிலிருந்து வந்த ரயிலில் பாய்ந்த இளைஞன் தற்கொலை!!

இளைஞன் தற்கொலை

யாழ்ப்பாணதிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காதலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனமுடைந்த இளைஞன் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பயணி செய்யும் 24 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று மாலை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் தலை தனியாக பிரித்து சென்றுள்ளது.

ரயில் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் ரயிலை நிறுத்திக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. காதலியுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடங்களாகவே அவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளதுடன், மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த இளைஞன் பிரேக் ஒயில் அருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் போராடி காப்பாற்றப்பட்டார்.

அமுலுக்கு வருகின்றது புதிய சட்டம் : தனியார் பேருந்துகளில் ஏற்பட போகும் பாரிய மாற்றம்!!

அமுலுக்கு வருகின்றது புதிய சட்டம்

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்தது.

இதற்கமைய தனியார் பேருந்துகள் அனைத்தும் தனி நீல வர்ணப்பூச்சு உடையதாக இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு தனியார் பேருந்துகளில் காணப்படும் ஸ்டிக்கர்கள், வர்ணப்பூச்சு, ஒலி அமைப்புகள், ஏனைய ஒலிச் சாதனங்கள் ஆகியவை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும்.

இதற்காக எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இரு மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இக்கால அவகாசத்தினுள் மேற்கூறப்பட்ட விடயங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் காணப்படும் பல வண்ணமயமான வர்ணப்பூச்சுக்களினாலும், வண்ணமயமான ஸ்டிக்கர்களினாலும், ஏனைய பஸ் சாரதிகள் கவனச் சிதறலுக்கு உள்ளாகுவதால், பல்வேறு விபத்துகளும் சம்பவித்துள்ளன.

தனியார் பஸ்கள் தனித்துவமான நீல வர்ணத்தில் காணப்படும் பட்சத்தில் பயணிகளுக்கு அடையாளம் காண இலகுவாக இருக்கும் என்பதோடு, நீல வர்ணம் கண்களுக்குச் சாந்தமாக இருக்கும்.

இதன் காரணமாக வீதி விபத்துகளை ஓரளவுக்கேனும் குறைக்க முடியும் என்பதால், நீல வர்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்தது.

மேலும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விடயங்களைத் தவிர்ந்த, ஏனைய அனைத்துப் பொருட்களையும் நீக்குவதற்காகச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதேவேளை, மேல் மாகாணத்தில் 475 வழித்தடங்கள் ஊடாக 6,000 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருவதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்ட புரட்சி!!

இலத்திரனியல் முச்சக்கர வண்டி

இலங்கையில் முதல் முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சந்தையில் புதியதொரு புரட்சியாக இந்த முச்சக்கர வண்டி நேற்று அறிமுகமாகியுள்ளது.

TREO என்ற பெயரில் இலங்கை சந்தையில் இந்த முச்சக்கர வண்டி அறிமுக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி அறிமுகப்படும் செய்யப்பட்டுள்ளது.

முற்று முழுதான மின்சாரத்திலேயே பயணிக்க கூடிய வகையில் இந்த முச்சக்கர வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முச்சக்கர வண்டி சுற்று சூழலுக்கு மிகவும் நெருக்கமானதாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்காவை கழுத்தை அறுத்துக் கொன்ற தம்பி : இதுவெல்லாம் ஒரு காரணமா?

அக்காவை கொன்ற தம்பி

திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக அக்காவை அவரின் சகோதரரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடகை வாகனங்கள் வைத்து தொழில் செய்து வரும் லெனின் என்பவருக்கும், முதுகலை படிப்பு படித்திருந்த கனிமொழி என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

தனது கணவர் டிரைவராக இருப்பது கனிமொழிக்கு பிடிக்காத காரணத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கனிமொழி தனது கணவருடன் அடிக்கடி சண்டைபோட்டுக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கனிமொழி தாய்வீட்டுக்கு வந்துள்ளதை பார்த்து அருகில் உள்ளவர்கள் தவறாக பேசியிருக்கிறார்கள். இதனால் குடும்பத்தார் சமாதானம் செய்து கனிமொழியை கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், மீண்டும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கணவருடன் கோபித்துக்கொண்டு தாய்வீட்டுக்கு வந்துள்ளார் கனிமொழி. கனிமொழியை அவரின் பெற்றோர், மற்றும் தம்பி சுந்தரபாண்டியன் ஆகியோர் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால் கனிமொழி சம்மதிக்கவில்லை. இதனால் தம்பி சுந்தரபாண்டியனுக்கும், கனிமொழிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கோபமடைந்த தம்பி, அக்கா கனிமொழி தூங்கிகொண்டிருக்கையில் கழுத்தை அறுத்து கொலைசெய்துவிட்டு நேராக பொலிசில் சென்று சரணடைந்து நடந்தவை குறித்து வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இரண்டு கருப்பைகள் : முதல் குழந்தை பிறந்த 26 நாட்களில் இரட்டை குழந்தைகளை பெற்ற அதிசய பெண்!!

அதிசய பெண்

வங்கதேச நாட்டில் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த 26 நாட்கள் கழித்து மீண்டும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள அதிசயம் நடந்துள்ளது. Shyamlagachhi என்ற கிராமத்தை சேர்ந்த Arifa Sultana என்ற பெண்மணிக்கு பிப்ரவரி 25 ஆம் திகதி Khulna மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.

குறைமாத நிலையில் பிறந்த குழந்தை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 26 நாட்கள் கழித்து Arifaக்கு உடல்நலப்பிரச்சனை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்து மருத்துவர் Sheila Poddar கூறியதாவது, இரண்டு கருப்பைகள் இருந்துள்ளன.

அல்ட்ராசோனோகிராஃபி பரிசோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் குழந்தை ஒரு கருப்பையிலிருந்து பிறந்தது. அடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளும் பிற கருப்பையிலிருந்தே பிறந்துள்ளன.

“இது ஒரு அரிய சம்பவம். நான் முதன் முறையாக இப்படி ஒரு நிகழ்வை பார்த்துள்ளேன். இதுபோன்ற சம்பவம் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என கூறியுள்ளார்.

தூக்கிட்டு இளம் தாய் மற்றும் மகன் தற்கொலை : பொலிஸார் தீவிர விசாரணை!!

தாய் மற்றும் மகன் தற்கொலை

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் மற்றும் மகனின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொட, மஹவலதென பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இருவரது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

26 வயதுடைய பெண் ஒருவரது சடலமும் 5 வயதுடைய குறித்த பெண்ணின் மகனின் சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் தீவர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கற்பித்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கௌரவித்த விமானியான மாணவன்!!

கற்பித்த ஆசிரியையை கௌரவித்த மாணவன்

டில்லியை சேர்ந்த 33 வயதான ரோகன் பாசின் என்ற விமானி தான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டில்லியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றபோது அங்கு கற்பித்த ஆசிரியையை வித்தியாசமான முறையில் கௌரவித்துள்ளார்.

குறித்த விமானி தனக்கு கல்வி அறிவு அளித்து உயர்ந்த நிலைக்கு வர அடித்தளமிட்ட சுதா சத்யன் என்ற ஆசிரியை கௌரவப்படுத்த ரோகன் விரும்பினார். எனவே, அவரை டில்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ நகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

விமானத்தில் ஏறிய ஆசிரியை சுதா சத்யன் தனது இருக்கையில் அமர்ந்ததும், விமானி உடையில் அங்கு வந்த ரோகன் அவரை சக பயணிகள் முன்பு அறிமுகம் செய்து வைத்தார். இவர்தான் எனக்கு முதன் முதலில் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியை. இன்று நான் விமான தலைவராக உயர இவரே காரணம் என பெருமையுடன் தெரிவித்துள்ளார். அதை கேட்டதும் பயணிகள் அனைவரும் கைதட்டி அவரை வரவேற்றனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சுதா சத்யன் என்ற ஆசிரியை ஆனந்த கண்ணீருடன் தனது மாணவனான விமானி ரோகனை கட்டித் தழுவினார். இந்த மகிழ்ச்சியான தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது.

கப்டன் ரோகனின் தாயார், ஆசிரியை சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ரோகன் 3 வயது சிறுவனாக இருந்தபோது பாடசாலையில் சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட படமும் அதில் அடங்கும். தனது மகன் ரோகன் பாடசாலையில் சேரும்போது நடந்த ருசிகர சம்பவத்தையும் அதில் நினைவு கூர்ந்துள்ளார்.

கொழும்பிலிருந்து சென்ற ரயிலில் சற்று முன்னர் விபத்து : ஒருவர் பலி : 3 பேர் ஆபத்தான நிலையில்!!

புகையிரத விபத்து

கொழும்பில் இருந்து சென்ற ரயிலுடன் மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் தொடன்நுவர பிரதேசத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலர் தினத்தில் கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி!!

கணவனை வெட்டி புதைத்த மனைவி

டெல்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

50 வயதான ராஜேஸ்க்கும், 25 வயதான சுனிதாவுக்கும் 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். இவர்கள் கடந்த ஆண்டு புது வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். அன்றிலிருந்து இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஆரம்பமானது. சுனிதா அருகில் உள்ள இளம் ஆணுடன் பேசுவதை ராஜேஷ் சந்தேகத்துடன் பார்த்துள்ளார்.

அதுமட்டுமின்றி வயது பிரச்சனை காரணமாக இவர்கள் இருவருக்குள்ளும் சிறு சிறு விடயங்கள் கூட ஒத்துப்போகாமல் இருந்துள்ளது. இதனால் மணவாழ்க்கை பிடிக்காமல் இருந்தால் சுனிதா இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவு செய்து தனது கணவரை கொலை செய்வதற்காக குற்ற சம்பவங்கள் மற்றும் கொலை செய்வது குறித்து தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்.

பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் திகதி தனது கணவருக்கு அதிக மயக்கமருந்தினை கலந்து பானத்தில் குடிக்க கொடுத்துள்ளார். இதனை குடித்த சிறிது நேரத்திலேயே கணவர் இறந்துவிட, அவரது உடலை 8 துண்டுகளாக வெட்டியுள்ளார். இதில் தலையினை தனது குடியிருப்பில் இருந்து சுமார் சில கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சாக்கடை தொட்டியிலும், காலினை அதற்கு அடுத்த தொட்டியிலும் வீசியுள்ளார்.

எஞ்சியுள்ள பாகங்களை பிளாஸ்டிக் பையில் அடைத்து தனது படுக்கையறையில் மறைத்து வைத்துள்ளார். சம்பவம் நடைபெற்ற 2 நாட்கள் கழித்து பொலிசில் சென்று தனது கணவரை காணவில்லை என புகார் அளித்திருந்தார். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் உரிமையாளர் சுனிதாவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோதுதான் இந்த கொலை அம்பலமாகியுள்ளது.

சுனிதாவின் வீட்டை சென்று சுற்றிப்பார்த்த உரிமையாளர், படுக்கையறையில் இருந்த பிளாஸ்டிக் பையை பார்த்து, அதில் என்ன இருக்கிறது என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு சுனிதா முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த உரிமையாளர் அந்த பையை திறந்துபார்த்தபோது அதில் உடல் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக சுனிதா கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் நடந்த சம்பவத்தை பொலிசாரிடம் வாக்குமூலமாக அளித்ததையடுத்து தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்து

தொடங்துவ பாலத்தின் அருகில் சிற்றூர்ந்தொன்று தொடருந்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து காரணமாக கடலோர தொடருந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

மெழுகை உருக்கி மாணவன் கையில் ஊற்றி தண்டித்த இளம் ஆசிரியை!!

தண்டித்த இளம் ஆசிரியை

தமிழகத்தில் மாணவன் கையில் மெழுகை ஊற்றி சூடுவைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது.

இங்கு நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் பெற்றோர் அப்பள்ளியின் ஆசிரியையும், தாளாளரின் மகளுமான ரம்யா மீது பொலிசில் புகார் கொடுத்தனர்.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் நான்காம் வகுப்பு மாணவன் வீட்டுப்பாடத்தை தவறாக எழுதியதற்காக ஆசிரியை ரம்யா மெழுகுவர்த்தியை பற்றவைத்து உருகிய மெழுகை அவன் கையில் ஊற்றி சூடுவைத்தது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் ரம்யாவை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

விடுதியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை : பள்ளியில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!!

மாணவி தற்கொலை

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாணவியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நுவரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள்,கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்றைய தினம் பள்ளியில் கணிதத் தேர்வு எழுதிய குறித்த மாணவி, வழக்கம்போல் விடுதிக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது பொலிசில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த மாணவியின் உடலை மீட்ட பொலிசார், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 150க்கும் மேற்பட்டோர், சின்ன சேலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், பள்ளி நிர்வாகத்தினர் முறையாக பதிலளிக்காததால், பள்ளியில் நுழைந்த மாணவியின் உறவினர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையகத்தில் நீரில் மாயமான கோயில்கள் மீண்டும் காட்சி கொடுத்தன!!

நீரில் மாயமான கோயில்கள்

இன்று அதிகாலை வரையில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 50 அடி அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதை நிலையில் நீர்த்தேக்கத்திலுள்ள நீரில் 9 அடி நீர் மாத்திரம் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த முடிவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் பொதுவான அளவில் இருந்து 63 அடி வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வீழ்ச்சியடைந்தமையினால் நீர்த்தேக்கத்தில் மூழ்கிய பல தீவுகள் இதுவரையில் தோன்ற ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணிப்பின் போது மூழ்கிய ஆலயம் தற்போது காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. அந்த கோவிலில் உள்ள சிலைகளில் நீர் கோரி மக்கள் தினமும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த ஆலயம் 1917ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மிகவும் அலங்காரமிக்க இந்த கோயில் முழுவதுமாக கருங்கல்லிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 100 வருடங்கள் பழமையான இந்த கோயில் இன்னமும் பாதுகாப்பாகவே உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

மது அருந்துவதற்காக பிறந்து ஐந்தே நாட்களான குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம்!!

குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம்

திக்வெல்ல பகுதியில், பிறந்து ஐந்து நாட்களான தனது குழந்தையை விற்ற தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்துவதற்கு பணம் இல்லாததன் காரணத்தினால் குறித்த நபர் தனது குழந்தையை விற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையை தாயிடம் இருந்து பிரித்துச் சென்று மற்றுமொரு பெண்ணிடம் ஆயிரம் ரூபாவிற்கு குறித்த நபர் விற்றுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், குறித்த நபரை மாத்தறை நீதவான் நிதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவருக்கு ஐயாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு இரண்டு லட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.