தமிழகத்தில் காதலியை கொலை செய்துவிட்டு சடலத்துடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த ரவி என்பவர் கல் மாவு மில் நடத்தி வருகிறார். ரவி, தனது மில்லில் கூலி வேலை பார்த்து வந்த பாப்பாத்தி என்ற விதவைப் பெண்ணை உயிராக காதலித்து வந்துள்ளார்.
தினமும் இரவு பாப்பாத்தியும், ரவியும் கல் மாவு மில்லில் உள்ள அலுவலக அறையில் தனிமையை கழித்து வந்துள்ளனர். இதை அறிந்த மற்ற கூலி தொழிலாளர்கள் பாப்பாத்தியை கண்டித்து உள்ளனர் . ரவி, தனது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, தனது 4 குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் உதவியதால் அவருடனான தொடர்பை பாப்பாத்தி துண்டிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கல்மாவு மில் மூடிக் கிடந்ததால், வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். நேற்று மில்லின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மாவு மில்லை திறந்த போது பாப்பாத்தி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது அருகில் ரவி குடிபோதையில் படுத்துக் கிடந்தார். பாப்பாத்தியின் சடலத்தைக் கைப்பற்றிய பொலிசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அவரது உடலை பரிசோதித்தனர்.
இதில் அவரின் தலை சுவற்றில் மோதியதால் மண்டை உடைந்து உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. போதை தெளிந்த பின்னர் ரவி அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று பாப்பாத்தியும், ரவியும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது பாப்பாத்தியின் நடத்தை சம்பந்தமாக எழுந்த சந்தேகத்தில் ஏற்பட்ட தகராறில், அவரைப் பிடித்து ரவி சுவற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். ஆனால் பாப்பாத்தி குடிபோதையில் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்து ரவி அப்படியே விட்டுவிட்டார்.
சம்பவத்தன்று காலையில், பாப்பாத்தி மீது குடம் குடமாக தண்ணீரைக் கொட்டி போதையைத் தெளிய வைக்க முயன்றுள்ளார். பாப்பாத்தி அசைவின்றி கிடந்ததால், அவர் இறந்தது ரவிக்கு தெரியவந்தது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த ரவி அந்த அறையிலேயே படுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் தான் துர்நாற்றம் வீசியதால் அவர் சிக்கி கொண்டார்.
ரவியை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பாப்பாத்தியின் 4 குழந்தைகளும் அனாதையாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த ரன்வித் கவுர் என்ற கர்ப்பிணி பெண்மணி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Gold Coast பகுதியில் வசித்து வரும் ரன்வித் கவுன் என்ற பெண்மணி கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இந்தியா வந்துள்ளார்.
மார்ச் மாதம் 22 ஆம் திகதி மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி பஞ்சாப்பிலுள்ள Bagge Ke Pipal என்ற பகுதியில் தனது கணவரின் வீட்டுக்கு வெளியே நின்று கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த சில மர்மநபர்கள் அவரை கடத்திசென்றுள்ளனர். கடத்தி சென்று 11 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இவரது சடலாம் கால்வாய் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட அன்றே கவுர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் இந்த கொலையில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருக்கிறார் என பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரன்வித் கவுரின் கணவருக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும்,பஞ்சாப்பில் ரன்வித் கவுர் கொலை செய்யப்பட்டபோது அந்த பெண்ணும் இந்தியாவில் இருந்ததாகவும், கொலை நடந்தஅடுத்தநாளே அவர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது,
தற்போது இந்த கொலை தொடர்பான விசாரணைக்காக அவுஸ்திரேலியாவிலுள்ள அவரது கணவரை பஞ்சாப் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரப்பகுதியில் விமானப்படையினரின் சீருடையுடன் சென்ற சிறுவனினால் தையல் நிலையத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் நேற்றைய தினம் சிறுவனொருவர் விமானப்படையினரின் சீருடையுடன் நின்றுள்ளார்.
இதனை அவதானித்த பொலிஸார் குறித்த சிறுவனை அழைத்து சீருடை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது நெளுக்குளத்தில் அமைந்துள்ள தையல் நிலையத்தில் சீருடையை கொள்வனவு செய்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சம்பந்தப்பட்ட தையல் நிலையத்திற்கு நேற்று மதியம் 3 மணியளவில் சென்ற வவுனியா பொலிஸார் தையல் நிலைய உரிமையாளரை விசாரணைக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அத்துடன் இவ்வாறான சீருடைகளை விற்பனை செய்ய வேண்டாமென தையல் நிலைய உரிமையாளர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருமணமான உடனேயே கணவன் மற்றும் மனைவிக்கு புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் இருவரும் அதிலிருந்து மீண்டு வருகின்றனர். அமெரிக்காவின் Illinois மாகாணத்தை சேர்ந்தவர் பிரயன். இவருக்கும் மிச்சேல் முர்தக் என்ற பெண்ணுக்கும் கடந்த 2015-ல் திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில வாரங்களில் பிரயனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பரிசோதனையில் அவருக்கு இரத்த புற்றுநோய் உள்ளது தெரியவந்தது.
இதற்கு சில மாதங்கள் கழித்து பிரயன் மனைவி மின்சேலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரும் தொடர் சிகிச்சை எடுக்க தொடங்கினார்கள்.
தம்பதிகள் ஒன்றாக புற்றுநோயை எதிர்த்து போராடியதால் என்னவோ அதுவே அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதலை அதிகமாக்கியது. இதனிடையில் தன்னம்பிக்கையுடன் தொடர் சிகிச்சை எடுத்து கொண்டதன் பலனாக மிச்சேலுக்கு புற்றுநோய் குணமாகியுள்ளது.
அதே போல பிரயினுக்கு இறுதி சிகிச்சை கடந்த அக்டோபரில் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தங்களது வாழ்க்கையை இருவரும் புதிதாக தொடங்கியுள்ளனர்.
இது குறித்து தம்பதி கூறுகையில், எங்களுக்கு வந்த புற்றுநோய் நாங்கள் எவ்வளவு தன்னம்பிக்கை மற்றும் தைரியமானவர்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தியது. எங்களின் குழந்தைகளுக்காகவே நாங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என விரும்பினோம்.
எங்களுக்கு உள்ள நோய் குறித்து எங்களின் குழந்தைகளிடம் சூசகமாக கூறினோம், ஆனால் அவர்கள் பயப்படுவார்கள் என்பதால் புற்றுநோய் என்ற வார்த்தையை அவர்களிடம் பயன்படுத்தவில்லை என கூறியுள்ளனர்.
தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கையை தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கியுள்ளதற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
முத்துவின் மனைவி அறுவை சிகிச்சைக்கு பின்னர் படுக்கபடுகையானதை அடுத்து அவரை மகிழ்விப்பதற்காகவும், காதல் மனைவியின் கஷ்டத்தை போக்குவதற்காகவும் தொலைதூர கட்டுப்பாட்டின் படி இயங்கும் கழிப்பறையுடன் கூடிய படுக்கை உருவாக்கியுள்ளார்.(ரிமோட் கண்ட்ரோல் டாய்லெட் பெட்)
படுக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் : ஒரு ஃப்ளஷ் டேங்க், மூடியுடன் கூடிய குழாய், செப்டிக் தொட்டிக்கு ஒரு இணைப்பு மற்றும் நடுவில் ஒரு இடைவெளி ஆகியவை உள்ளன. இதன் ரிமோட் கண்ட்ரோலில் மூன்று பொத்தான்கள் உள்ளன.
படுக்கையின் அடிதளத்தை திறக்கவும், கழிவறையின் மூடியை திறக்கவும் மற்றும் கழிவறையை ப்ளஷ் செய்யவும் இந்த மூன்று பொத்தான்கள் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளிகளின் தனிஉரிமை மற்றும் அவர்களின் கண்ணித்தைய காப்பதற்காகவும் இதனை வடிவமைத்துள்ளேன் என கூறியுள்ளார்.
இவரின் இந்த கண்டுபிடிப்புக்காக , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து தேசிய விருது மற்றும் ரூ. 2 லட்சம் பரிசு தொகையுடன், முதல் படுக்கையின் தயாரிப்பு செலவான 35,000 ரூபாயையும் திரும்ப பெற்றுள்ளார். இதுவரை ஒரு படுக்கையை விற்பனை செய்துள்ளார். தற்போது, இந்தியா முழுவதும் இருந்து 350 க்கும் மேற்பட்ட ஓர்டர்கள் வந்துள்ளன என்று முத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கல்லூரி சுற்றுலா சென்ற போது மாணவர் ஒருவர் மலை மற்றும் காட்டுப்பகுதியில் தனியாக சிக்கி கொண்ட நிலையில் 8 நாட்கள் தண்ணீர் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் ஹிமன்சூ அகுஜா (20). இவர் உட்பட 40 கல்லூரி மாணவர்கள் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு அனைவரும் சென்ற நிலையில் ஹிமன்சூ மட்டும் மாயமாகியுள்ளார். இதையடுத்து ஹிமன்சூவை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதன் பின்னர் பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் பொலிசார் அவரை தேடி வந்தனர். சரியாக 8 நாட்கள் கழித்து ரஞ்சித் என்ற மலையேறுபவர் மாணவர் ஹிமன்சூ மலைப்பகுதியில் உள்ள மரத்துக்கு அடியில் உட்கார்ந்திருப்பதை பார்த்துள்ளார்.
கால்களில் காயத்துடன் அவர் இருந்த நிலையில் அவர் இருந்த இடத்தின் அருகில் சிறிய குகையும், குட்டையும் இருந்துள்ளது. குட்டையில் இருந்த தண்ணீரை மட்டும் குடித்தே அவர் எட்டு நாட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் உதவியுடன் ஹிமன்சூ மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்தளவு குளிர் உள்ள பகுதியில் வெறும் தண்ணீரை மட்டும் குடித்து அவர் உயிர் வாழ்ந்தது ஆச்சரியம் அளிக்கிறது. சக மாணவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர்களை பிரிந்து ஹிமன்சூ தனியாக சென்ற நிலையிலேயே தொலைந்து போயுள்ளார் என கூறியுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த பலர் அகதிகளாக தமிழகத்தில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுக-வின் தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
2019-ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக கடந்த 19ஆம் திகதி வெளியிட்டது. அதில், திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்று தரப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராமேஷ்வரத்தில் உள்ள முகாமில் வாழும் இலங்கை தமிழ் பெண் ஒருவர் கூறுகையில், எங்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, ஏனெனில் நாங்கள் இங்கு வாழவே விரும்புகிறோம் என கூறியுள்ளார்.
இன்னொருவர் கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் இன்னமும் உள்ளன.
மறுவாழ்வுத் தொடர்பான திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை. எங்களில் பலர் இந்தியாவில் தொடர்ந்து தங்கவே விரும்புகிறோம்.
எங்களுக்கு கொடுக்கப்பட்ட அகதிகள் என்ற நிலை அகற்றப்பட வேண்டும், இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம் என கூறியுள்ளார்.
ஆசியாவின் சிறந்த 50 ஹோட்டல்களில் இலங்கை ஹோட்டல் ஒன்றும் இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவுக்கு சொந்தமான ஹோட்டலும் இணைந்துள்ளது.
Ministry Of Crab என்ற ஹோட்டலே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த ஹோட்டல் ஆசியாவில் சிறந்த ஹோட்டல்களில் 35வது இடத்தை பிடித்துள்ளது.
பிரபல சமையல் கலைஞர் தர்ஷன முனிதாஸவின் கண்கானிப்பின் கீழ்ந்த இந்த ஹோட்டல் நடத்தி செல்லப்படுகின்றது. கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகத்தின் கிளைகள் தற்போது சீனா, பிலிபைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரப்பகுதியில் விமானப்படையினரின் சீருடையுடன் சென்ற சிறுவனினால் தையல் நிலையத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் நேற்றைய தினம் சிறுவனொருவர் விமானப்படையினரின் சீருடையுடன் நின்றுள்ளார்.
இதனை அவதானித்த பொலிஸார் குறித்த சிறுவனை அழைத்து சீருடை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது நெளுக்குளத்தில் அமைந்துள்ள தையல் நிலையத்தில் சீருடையை கொள்வனவு செய்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சம்பந்தப்பட்ட தையல் நிலையத்திற்கு நேற்று மதியம் 3 மணியளவில் சென்ற வவுனியா பொலிஸார் தையல் நிலைய உரிமையாளரை விசாரணைக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அத்துடன் இவ்வாறான சீருடைகளை விற்பனை செய்ய வேண்டாமென தையல் நிலைய உரிமையாளர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வேலை மற்றும் பாடசாலைக்கு செல்வதற்காக புகையிரதங்களில் பயணம் செய்யும் மக்கள் சிக்கலை எதிர்கொள்வார்கள் என சமூகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், புகையிரத நிர்வாக பிரச்சினையை முன்னிறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாதியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறை போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்ந்து வரும் நிலையில் வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – வாகல்கட, ஹெப்பற்றிகொலாவ பகுதியில் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த சிறுவனை காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதில் படுகாயமடைந்த குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஷாமோட் (வயது 15) என்ற சிறுவன் தன்னுடைய நண்பனின் வீட்டுக்கு சென்று விட்டு பின்னர் தனது வீடு நோக்கி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை யானை அவரை தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அந்த சிறுவன் ஹெப்பற்றிகொலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் மிகவும் நேர்மையாக செயற்பட்ட இலங்கையர் தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.
மெல்பேர்ன் பகுதியில் காணாமல் போன பணப்பை ஒன்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நபர்கள் 19500 அவுஸ்திரேலிய டொலர்களை (2.46 மில்லியன்) வங்கியில் மாற்றி கொண்டு பிட்ஸா கடை ஒன்றுக்கு சென்று அமர்ந்துள்ளனர்.
பிட்ஸாவுக்கு காத்திருந்த நபர்களில் ஒருவரது கையில் இருந்து பணப்பை கீழே விழுந்துள்ளது. எனினும் அதனை கவனிக்காமல் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். பலர் அங்கு நடமாடியுள்ளனர். அங்குள் CCTV கமரா அதனை படம்பிடித்த போதிலும் அதனை ஒருவரும் அவதானிக்கவில்லை.
இந்நிலையில் அங்கு வந்த சாரதி ஒருவர் அதனை கண்டெடுத்து, கடையின் உரிமையாளரான இலங்கையரிடம் கொடுத்துள்ளார்.
இதன்போது அந்து பணத்தை தொலைத்தவர்கள் பதற்றத்துடன் கடைக்கு வந்து பையை தேடியுள்ளனர். அதனை அவதானித்த இலங்கையரான கடை உரிமையாளர் பையை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
பை கிடைத்த மகிழ்ச்சியில் இலங்கையருக்கு ஒரு தொகை பணத்தை அவுஸ்திரேலியர்கள் வழங்கியுள்ளனர். எனினும் அதனை வாங்க கடையின் உரிமையாளர் மறுத்துள்ளார்.
குறித்த கடை உரிமையாளரான இலங்கையின் வரக்காபொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர்களை கடுமையாக திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் அமுலாகும் மின்சார விநியோகத் தடை தொடர்பில், கடுமையாக விமர்சிக்கும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், மக்கள் அரசாங்கத்தை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இப்படியே சென்றால் விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆண்களின் கவனத்தில் இருந்து தப்புவதற்காக பிரித்தானியாவில் 1000க்கும் அதிகமான பெண்கள் தங்களுடைய மார்பகங்களை சூடான கற்களால் துடைத்தெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆண்களின் கவனம் தங்கள் மீது திரும்ப கூடாது என்பதற்காக பிரித்தானியாவை சேர்ந்த 1000க்கும் அதிகமான பெண்கள் தங்களுடைய மார்பகங்களை துடைத்தெறிந்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு சென்றால் இதற்கான செலவு அதிகரித்துவிடும் என்கிற அச்சத்தால், சிறு வயதிலே சூடான கற்களை கொண்டு மார்பகங்களின் மீது தேய்த்து துடைத்தெறிகின்றனர்.
இந்த சம்பவத்தால் தான் அடைந்த வேதனை குறித்து சிமோன் என்கிற இளம்பெண் பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில், எந்த ஒரு ஆண் நபரின் கண்களும் என்னை உற்றுநோக்க கூடாது என்பதற்காக 13 வயது நடக்கும் போது சூடான கற்களை கொண்டு என்னுடைய தாய் மார்பை துடைத்தெடுத்தார்.
இது உண்மையில் ஒரு முறைகேடு. மனிதருக்கு இருக்கும் குணங்களை பறிக்கும் செயல். அவர்கள் உங்கள் கைகளை பிடித்துகொண்டு சூடான கற்களால் மார்பில் அழுத்துவார்கள். இது மிகவும் வேதனையளிக்கும்.
உங்கள் உடலில் ஒரு சூடான பொருளை வைத்து அழுத்தினால் எப்படி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். ஒரு இறுக்கமான பெல்டால் மார்பகத்தை கட்டி வைத்துவிடுவார்கள். சில நேரங்களில் மூச்சுவிடுவதற்கு கூட சிரமாக இருக்கும்.
இது நீண்டகாலமாக உங்களை பாதிக்கும். கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். என்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கூட சாதாரணமாக கொடுக்க முடியாது என வேதனை தெரிவித்துள்ளார்.
தாய்மார்கள் மற்றும் பாட்டியர்களால் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட இந்த கொடூர செயல்கள் தற்போது பிரித்தானியாவில் அதிகரித்திருப்பதை நினைத்து அரசு வேதனை தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து விழுப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி பாடத்திட்டத்தில் இதனை சேர்க்கவும் முடிவு செய்துள்ளனர்.
செயற்கை மழை பெய்வதற்கான Rainfall Mission வேலைத்திட்டத்தினை இலங்கை மின்சார சபை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை விமானப்படையின் Y12 விமானத்தை பயன்படுத்தி செயற்கை மழைக்கான இரசாயன பதார்த்தம் தூவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், 25 நிமிடங்களுக்கு மழை பெய்ததாகவும் அறிவித்திருந்தனர்.
மவுஸ்ஸாகலை நீர்த்தேக்க பிரதேசங்களில் செயற்கை மழையின் பெய்ய வைப்பதற்காக வான் பரப்பில் இரசாயன பதார்த்தம் தூவப்பட்டது. இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தாய்லாந்து நிறுவனமொன்றினால் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் , காசல்ரீ மற்றும் மவஸ்ஸாகலை நீர்த்தேக்க பிரதேசங்களில் எதிர்வரும் தினங்களிலும் முன்னெடுக்கப்படும் என மின்சார சபை தெரிவித்திருந்தது. எனினும், அத்திட்டத்தினை மின்சார சபை திடீரென நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் காணப்படும் மேகக் கூட்டங்களில் போதியளவான ஈரப்பதம் இல்லாத காரணத்தினால் இத்திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரப்பதனுடனான மேகக் கூட்டங்களை கொண்ட பகுதிகளில் ஆராய்ந்து இத்திட்டம் அப்பகுதிகளில் மேற்கொள்வதற்காக ஆராய்ந்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் வரட்சி காரணமாக நீர்த் தேக்கங்கள் வற்றிப் போயுள்ளன. இந்நிலையில், மின்சாரத்தினை பெறுவதில் பெரும் இடர்களைச் சந்தித்துவருகின்றது இலங்கை. இந்த நெருக்கடியான நேரத்தில் செயற்கை மழை பெய்வதற்கான திட்டம் பெரும் வாய்ப்பாக அமையும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு அது பரீட்சார்த்தமாக செய்து பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மகளுக்கு இருக்கும் குரோமோசோம் குறைபாட்டால் தன்னுடைய வேலையை இழந்து பெரும் குழப்பத்தில் இருப்பதாக தாய் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பூர்விகமாக கொண்ட நாகராஜா சுகிந்தன் (53) – நிலானி (52) தம்பதியினர் கடந்த 1990ம் ஆண்டு பிரித்தானியாவில் குடியேறினர். இப்போது டப்ளினில் வசித்து வரும் இவர்களுடைய குடும்பம், கடந்த 25 ஆண்டுகளாக பக்கிங்ஹாம்ஷையரில் வசித்து வந்தது. இவர்களுக்கு தன்யா (19), பூமிகா (15) மற்றும் சௌமியா (14) என்கிற மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
ஐ.டி ஆலோசகராக பணிபுரிய $ 140,000 சம்பளத்தில் நிலானிக்கு கடந்த ஆண்டு நியூசிலாந்தில் வேலை கிடைத்தது. அங்கு குடியேற விரும்பிய நிலானி தன்னுடைய குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
அதற்காக அனைவரும் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் அனைவருக்குமே விசா வந்துவிட்டது. ஆனால் அவருடைய இரண்டாவது மகள் பூமிகாவின் ஆவணங்களில் சிக்கல் இருப்பதால் அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகாரிகள் விசா கொடுக்க மறுத்துள்ளனர்.
அதன்பிறகு சமர்ப்பித்த ஆவணங்களில் பூமிகாவிற்கு குரோமோசோம் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நியூசிலாந்து குடியேற்ற அதிகாரிகள், பூமிகா சுமையாக இருப்பார் எனக்கூறி அவருக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதனை எதிர்த்து நாகராஜா மற்றும் அவருடைய மனைவி நிலானி கடந்த 3 மாதங்களாக மேல்முறையீடு செய்தனர். கடந்த வாரம் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்பொழுது அதிகாரிகளின் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் நிலானி, நான் என்னுடைய மகளிடம் எப்பொழுது கூறுவேன், அவளிடம் எதுவும் வித்யாசமாக இல்லை என்று. ஆனால் இந்த முறை கண்ணீர் தான் அதிகரிக்கிறது. அவள் அடிக்கடி நாம் ஏன் நியூசிலாந்து செல்லவில்லை என கேட்கிறாள். அதனை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவளை ஒரு சிறப்பு பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப அதிக பணம் செலவிட வேண்டும் என அந்த அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். என்னுடைய ஒரு மாத வரி பணம் அவளுடைய ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பிற்கும் போதுமானதாக இருக்கும். ஆனால் அதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை என கூறிவிட்டனர். பாரபட்சம் பார்ப்பதை தவிர இதில் வேறு எந்த அர்த்தமும் இல்லை.
பூமிகாவிடம் ஒரு மிதமான இயலாமை உள்ளது. ஆனால் அவளால் நடக்க முடியும், பேச முடியும், உடை கூட அணிந்துகொள்ள முடியும். வகுப்பறையில் மட்டுமே அவளை கூடுதலாக கவனிக்க உதவி தேவைப்படும்.
அப்படி இருந்தும் தற்காலிக விசாவிற்கு கூட அவர்கள் ஏன் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் அங்கு ஒரு புதிய வாழ்வை துவங்கலாம் என திட்டமிட்டோம். அதற்கு பதிலாக தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.
நியூசிலாந்திற்கு செல்ல முடியாமல் மலேசிய விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டோம். அந்த நாட்டின் உணவுகளை சாப்பிட்டு அங்கேயே ஒரு ஹோட்டலில் அறை எடுத்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினோம்.
என் மகள்களை மிகவும் நேசிக்கிறேன். அவர்களுக்கு உலகின் மற்றொரு பக்கத்தை காட்ட விரும்பினேன். ஆனால் தற்போது ஒரு புதிய வாழ்க்கையினை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்த காரணங்களால் தற்போது நியூசிலாந்து வேலையை வேண்டாம் என நிலானி கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசுகையில், நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். அது ஒரு நல்ல இடமாகவும், எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கு நிறைய கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன்.
4 பேருக்கு விசா கிடைத்த பின்னரே நான் அந்த வேலைக்கு முழுமையாக ஒப்புக்கொண்டேன். பூமிகாவிற்காக நான் அதிக ஆவணங்களை அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் இன்னும் அவளை நிராகரிக்கிறார்கள். பூமிகாவிற்கான சிறப்பு கல்வி முறைக்கு மிகவும் செலவாகும் என்று அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர்.
நான் கடினமாக உழைத்து என் மகளுக்கான கல்விச்செலவில் பங்களிக்க தயாராக இருந்தேன். ஆனால் போய்விடு என்று அவர்களால் சொல்லப்பட்டுவிட்டேன்.
இந்த சம்பவம் நடந்ததிலிருந்து தூக்கமில்லாத பல இரவுகளை சந்தித்திருக்கிறேன். நான் செய்த காரியங்களில் இது தான் மிகவும் கடினமான ஒரு விடயம். நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டேன். பணம் சம்மந்தப்பட்டதில் அல்ல. கொள்கை சம்மந்தப்பட்டதில்.
குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுடைய தாய்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்று தான். கவலைகளில் இருந்து உங்களை நீங்கள் தான் காத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வேலையை முழுமையாக கைவிட்டு தற்போது பெரும் குழப்பத்தில் நாங்கள் இருக்கிறோம் என வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நியூசிலாந்து குடியேற்ற அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமிகாவின் உடல்நிலை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லாத காரணத்தினாலும், சுகாதார மற்றும் கல்விச் சேவைகளில் “குறிப்பிடத்தக்க செலவினங்களைச் சுமத்தக்கூடும்”என்பதாலும் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.