த்தாவை வசமாக சிக்கவைத்த பேத்தி
13 வயதிலிருந்து 17 வயதாகும்வரை தன்னை துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை, தனக்கு 23 வயதாகும் நிலையில் வசமாக சிக்க வைத்து சிறைக்கு அனுப்பியிருக்கிறார் ஒரு இளம்பெண்.
பிரித்தானியாவின் லிவர்பூலைச் சேர்ந்த Jade Edwards, 13 வயதாக இருக்கும்போது, அவரது பாட்டி உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரது தாத்தா Joseph அவரை தவறாக தொட்டிருக்கிறார். தனக்கு மிகவும் பிடித்த தாத்தா ஏன் அப்படி செய்தார் என்று Jadeக்கு புரியவில்லை.
பின்னர் மீண்டும் ஒருமுறை காரில் Jadeஐ அழைத்துச் சென்ற அவரது தாத்தா Joseph ஆளரவமற்ற ஒரு இடத்தில் கொண்டு காரை நிறுத்திவிட்டு, அவரை முத்தமிட்டு மீண்டும் தவறாக தொட்டிருக்கிறார். Jade கண்ணீர் விட்டு அழுதபோது Joseph நிறுத்தவில்லை. பின்னர் பீட்ஸா வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று தொடர்ந்து Jadeஐ துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் Joseph.
17 வயதாகும் நிலையில், இதற்கு ஒரு முடிவு கட்டும் தைரியம் வர, Josephஇடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என Jade மொபைலில் செய்தி அனுப்ப, பதிலுக்கு, என்னை மன்னித்து விடு என்னால் அப்படி செய்வதை நிறுத்த முடியவில்லை, உன்னை நான் காதலிக்கிறேன், நீ ரொம்ப அழகாக இருப்பதால்தான் அப்படி செய்வதை என்னால் நிறுத்த முடியவில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் Joseph.
அந்த குறுஞ்செய்திகளை தனது பெற்றோரிடம் காட்டினால், அவர்கள் Jadeஐயே குற்றம் கூறியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட Jade, அந்த குறுஞ்செய்திகளை பொலிசாரிடம் காட்டி தனது தாத்தா மீது புகாரளித்திருக்கிறார்.
கைது செய்யப்பட்ட Josephக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை அதிகம் இல்லை என்றாலும், தன்னை துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை சிறைக்கு அனுப்பியதே போதும் என்கிறார் Jade.








































































