ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகள் : பிழைப்புக்காக செய்த தொழில் : மனம் திறந்த முன்னாள் மொடல்!!

மனம் திறந்த முன்னாள் மொடல்

அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகளை பெற்றெடுத்த ஆபாச பட நடிகை ஒருவர் தமது வாழ்க்கையில் தாம் எடுத்த முடிவுகள் அனைத்தும் தற்போது அருவருப்பை தருகிறது என தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியை சேர்ந்தவர் தற்போது 43 வயதாகும் நடாலி சுலேமான். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சிறப்பு அருவைசிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகளை பெற்றெடுத்தார். ஏற்கெனவே இவருக்கு 6 பிள்ளைகள் இருந்தன. தற்போது தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தமது வாழ்க்கையில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அருவருப்பானவை என குறிப்பிட்டுள்ளார்.

கிளாமர் மொடலாக பணியாற்றி வந்த நடாலி சுலேமான், தமக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி ஆபாச திரைப்படத் துறையில் நடிகையானார். அதன் பின்னர், பிழைப்புக்காக இரவு விடுதிகளில் ஆபாச நடனமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார். தமது 14 பிள்ளைகளுக்கு ஒருவேளையேனும் உணவு தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாம் ஆபாச விடுதிகளில் பணியாற்றியதாக கூறும் நடாலி,

இளைமை காலத்தில் என்ன முடிவெடுக்கிறோம் என தெரியாமல், வாழ்க்கையில் பல அருவருப்பான நிகழ்வுகள் அரங்கேறியது என குறிப்பிட்டுள்ளார். ஒருகட்டத்தில் போதைமருந்துக்கு அடிமையானதாக கூறும் அவர், இந்த காலகட்டத்திலேயே உலகம் உற்றுநோக்கிய சோதனை முயற்சிக்கு அவர் தம்மை உட்படுத்தினார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு சிறப்பு அறுவைசிகிச்சை மூலம் மொத்தம் 12 கருவை தமக்குள் பொருத்திக்கொண்டார். இது அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மட்டுமின்றி இந்த விவகாரத்தில் முக்கிய மருத்துவராக செயல்பட்ட Michael Kamrava என்பவரின் அமெரிக்க மருத்துவ உரிமத்தை அந்த நாட்டு அரசு ரத்து செய்தது. மேலும் 8 பிள்ளைகளை பெற்றெடுக்கும் அந்த அபூர்வ நிமிடத்திற்கு மொத்தம் 46 மருத்துவர்கள் உதவி செய்துள்ளனர். சமீபத்தில் பேசிய நடாலி, தமது 14 பிள்ளைகளுக்காக இனிமேல் தமது வாழ்நாளை செலவிட இருப்பதாகவும், அவர்களை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த பெண்!!

உயிரிழந்த பெண்

லண்டனை சேர்ந்த பெண் கணவருடன் தேனிலவு சென்ற இடத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. நிகோலா ஸ்பென்சர் (42) என்ற பெண்ணுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி ஜேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் அதே மாதம் 11ஆம் திகதி புதுமணதம்பதிகள் கெனரி தீவுக்கு தேனிலவு சென்றனர்.

தேனிலவுக்கு கிளம்பும் போதே நிகோலாவுக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. ஆனாலும் அவர் தேனிலவுக்கு கிளம்பினார். போகும் வழியில் நிகோலா ரத்த வாந்தி எடுத்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு நிகோலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நீரிழப்பு பிரச்சனை மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சில மருந்துகளை கொடுத்தனர்.

இதன் பின்னரும் அவருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் தேனிலவுக்கு சென்ற மூன்றாவது நாளே லண்டனுக்கு திரும்ப நிகோலாவும், ஜேசனும் முடிவு செய்தனர். அதன்படி விமானத்தில் அவர்கள் லண்டனுக்கு வந்து கொண்டிருக்கும் போது நிகோலா தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்தார்.

இதனால் விமானம் போர்சுகல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னரே உயிரிழந்தார். அதாவது திருமணமான 6 நாளில் மண்ணை விட்டு மறைந்தார் நிகோலா.

நிகோலா உயிரிழந்த பின்னர் போர்ச்சுகலில் ஒரு பிரேத பரிசோதனையும், பிரித்தானியாவில் ஒரு பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால் அவர் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியாதது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆரோக்கியமாக இருந்த நிகோலாவுக்கு இந்த நிலையா என அவர்கள் மன வேதனை அடைந்தனர். திருமணத்துக்கு முன்னரே நிகோலாவுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர்.

அவர்களுக்கு தாயின் இழப்பு மிகுந்த வருத்தத்தை கொடுத்ததுடன் அதற்கான காரணம் தெரியாததால் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையில் நிகோலாவின் மரணம் தொடர்பாக வரும் 27ஆம் திகதி விசாரணை தொடங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய தந்தை : அதிரவைக்கும் பின்னணி!!

தூக்கில் தொங்கிய தந்தை

இந்தியாவில் தந்தையும், மகளும் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லலித் பிரகாஷ் (63). இவருக்கு மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர்.

இதில் முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகள் திருமணமாகி விவாகரத்து பெற்றவராவார். இதையடுத்து பிரகாஷ், அவர் மனைவி, மூன்றாவது மகள் மற்றும் நான்காவது மகள் கிருத்திகா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிரகாஷின் மனைவி மற்றும் மூன்றாவது மகள் ஆகிய இருவரும் கோவிலுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த பிரகாஷ் மற்றும் அவரின் நான்காவது மகள் கிருத்திகா ஆகிய இருவரும் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதன்பின்னர் வீட்டுக்கு பிரகாஷின் மனைவி மற்றும் மகள் வந்தபோது இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து இரண்டு சடலங்களையும் கைப்பற்றினார்கள். பொலிசார் நடத்திய விசாரணையில், பிரகாஷ் சில மாதங்களுக்கு முன்னர் அதிகளவில் பணத்தை சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

ஆனால் அதை அவரால் திரும்ப தரமுடியவில்லை. இதன் காரணமாக அவர் வீடு அடமானத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து அவர் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் தான் இது தொடர்பாக அவருக்கும், கிருத்திகாவுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் கிருத்திகா முதலில் தூக்கில் தொங்கினார், மகளின் முடிவை பார்த்து பிரகாஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் பிரகாஷின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரிக்கவுள்ளனர்.

போரில் தொலைந்த கணவனுக்காக 48 ஆண்டுகளாக காத்திருக்கும் மனைவி!!

கணவனுக்காக 48 ஆண்டுகளாக காத்திருக்கும் மனைவி

1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரின் போது தனது கணவரை இழந்த தமயந்தி கடந்த 48 ஆண்டுகளாக கண்ணீர் மல்க அவருக்காக காத்திருக்கிறார். உத்தர பிரதேசம் அலகாபாத்தில் பிறந்தவர் தமயந்தி சுபேதார். பேட்மிட்டன் விளையாட்டில் சிறந்து விளங்கிய இவர், 3 முறை பேட்மிட்டண் போட்டியின் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1970 ஆம் ஆண்டு இந்திய விமான படை வீரர் லெப்டினென்ட் விஜய் வசந்த் தாம்பேவை கரம்பிடித்தார் தமயந்தி. திருமணம் முடிந்து 18 ஆண்டுகள் இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக சென்றது. இந்நிலையில் தான் இந்தியா – பாகிஸ்தான் போர் தொடங்கியபோது டிசம்பர் 5 ஆம் திகதி பாகிஸ்தான் எல்லையில் வைத்து விஜய் வசந்த் கைது செய்யப்பட்டது ரேடியாவில் அறிவிக்கப்பட்டதை கேட்டு தமயந்தி அதிர்ச்சியடைந்தார்.

அன்று காணாமல் போன கணவரை 48 ஆண்டுகள் ஆகியும் வீடுதிரும்பவில்லை. தமயந்தியும், பல பிரதமர்கள், தூதர்கள் மற்றும் பல்வேறு மனித உாிமை அமைப்புகளை சந்தித்து வீரர்களை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி கோாிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

தமயந்தி கண்ணீர் மல்க கூறியதாவது, பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று எனது கணவரை பலமுறை தேடினேன், ஆனால் சிறை காவலர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது தவிர, எனது கணவர் கிடைக்கவில்லை. கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. என்னால் முடிந்த பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்டேன், இதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

தொழில் பெற்று தருவதாக கூறி 13 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிய நபர்!!

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர்

பொகவந்தலாவை, தோட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை தொழில் பெற்று தருவதாக கூறி கொழும்பிற்கு அழைத்து வந்து கர்ப்பமாக்கிய சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு, அலுத்கடை நீதிமன்றில் குறித்த சந்தேக நபரை இன்று முன்னிலைப்படுத்திய போதே எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ பகுதியில் உள்ள தோட்டப் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை 40 வயதுடைய சந்தேக நபர் தொழில் பெற்றுதருவதாக கூறி கொழும்பிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சிறுமி கர்ப்பமாகியுள்ளமை குறித்து அவரது தாயாருக்கு தெரியவந்துள்ளதையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிக்கிய 1500 காணொளிகள், கதறும் இளம்பெண்கள் : குலைநடுங்க வைக்கும் பாலியல் கொடூரம்!!

கதறும் இளம்பெண்கள்

தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சினையாக மாறி உள்ளது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சினை குறித்து தற்போது குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர்தான் அந்த முறைப்பாட்டை வழங்கியிருந்தார். தன்னை சில இளைஞர்கள் பாலியல் வன்முறை செய்து அதை காணொளியாக எடுத்து மிரட்டி வருகிறார்கள் என்று முறைப்பாடு செய்துள்ளார்.

பொள்ளாச்சி ஊஞ்சவேலாம் பகுதிக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை காணொளியாக எடுத்து மிரட்டினார்கள் என்று முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து பொள்ளாச்சி காவல்துறை தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்தது.

இந்த தனிப்படை விசாரணையில் மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சபரி, வசந்த குமார், சதீஷ் குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் குழுவின் தலைவனான திருநாவுக்கரசு மட்டும் தலைமறைவானார்.

காவல்துறை வருவது தெரிந்து கொண்டு, பொருள் பலமும், பண பலமும் கொண்ட திருநாவுக்கரசு தப்பித்தார். அதன்பின் திமிராக காணொளி பதிவொன்றை வெளியிட்ட திருநாவுக்கரசு, தனது குற்றங்களுக்கு பின் பலர் இருப்பதாக கூறினார்.

இதில் பலருக்கு தொடர்பு இருக்கிறது என்று திமிராக பேசி இருந்தார். இவரை காவல்துறையினர் சில நாட்களில் கைது செய்தனர். தற்போது காவல்துறையினர் இவரை தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

இவர்கள் பெண்களை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நண்பர்களின் உறவுக்கார பெண்கள், பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள், கல்லூரி படிக்கும் பணக்கார பெண்களை நேரிலும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு, நட்பாகி, பின் காதல் செய்து ஏமாற்றி இருக்கிறார்கள்.

காதலை காரணம் காட்டி, இவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு சொந்தமான சின்னப்பபாளையம் பண்ணை வீட்டில்தான் இத்தனை சம்பவங்களும் நடந்து இருக்கிறது.

அங்கு காதலன், நட்பு என்ற போர்வையில் பெண்களை அழைத்து செல்லும் இவர்கள், பெண்களை பாலியல் வன்முறை செய்து இருக்கிறார்கள். அதன்பின் அதை காணொளியாக எடுத்து வைத்து மிரட்டி இருக்கிறார்கள். இதை செய்தது வெறும் நான்கு பேர் கொண்ட கும்பல் கிடையாது. இந்த கும்பலில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் கடந்த 7 வருடமாக இப்படி மோசமான செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இதன் மூலம் இவர்கள் 5 கோடிக்கும் மேல் மோசடி செய்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களை பாலியல் வன்முறை செய்து, அதை காணொளியாக எடுத்து மிரட்டி பணம் பெற்று உள்ளனர். பணம் இல்லாத பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறை செய்துள்ளனர்.

இப்படி பாதிக்கப்பட்டது சில பெண்கள் கிடையாது. 200க்கும் அதிகமான பெண்கள் இப்படி பாலியல் வன்முறை செய்யப்பட்டு, மிரட்டப்பட்டு உள்ளனர். அதேபோல் இவர்கள் பின்னணியில் அரசியல்வாதிகள் பலர் இருந்துள்ளனர். பெண்களை மிரட்டி அவர்களை அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையிலும் இவர்கள் ஈடுப்பட்டு இருந்தனர்.

கோவையை சேர்ந்த சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. தற்போது இந்த பிரச்சினை சில முக்கிய காரணங்களுக்காக மீண்டும் பரபரப்பான ஒன்றாக மாறி இருக்கிறது.

இவர்களிடம் இருந்து காவல்துறையினர் இதுவரை 1500 காணொளிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் இருப்பது எல்லோரும் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் கண்ணீருடன் கதறும் காணொளிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த காணொளிகள் சினிமா நடிகர்கள், சமூக போராளிகளிடம் தற்போது சென்று சேர்ந்துள்ளது.

இதனால் தற்போது இந்த பிரச்சினையை அவர்களும் கையில் எடுத்து இருக்கிறார்கள். காவல்துறையினர் இதில் விசாரிப்பதில் மெத்தனம் காட்டுகிறது என்று இந்த காணொளிகளை பார்த்தவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இந்த காணொளிகள் மிகவும் பதற வைக்கும் அளவிற்கு இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த காணொளி தொடர்பாக முதலில் முறைப்பாடு செய்த பெண்ணின் அண்ணனை நான்கு பேர் கொண்ட கும்பல் சில நாள் முன் மோசமாக தாக்கி இருக்கிறார்கள். பார் நாகராஜ், பாபு, செந்தில் குமார், வசந்த குமார் ஆகியோர் இந்த செயலை செய்துள்ளனர்.

அதிமுகவில் உள்ள பார் நாகராஜ் ஜெயலலிதா பேரவை செயலாளர். இந்த நிலையில் இவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆளும் தரப்பு காப்பாற்றுவதாக திமுக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. இதில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று திமுக தரப்பு குற்றஞ்சாட்டி இருக்கிறது. #ArrestpollachiRapists என்ற டேக் உருவாக்கப்பட்டு தற்போது இது தேசிய அளவில் வைரலாகி வருகிறது. இதனால் தற்போது இது தேசிய பிரச்சினையாகி உள்ளது.

குழந்தைக்கு பலவந்தமாக மதுபானம் கொடுத்த நபர் : தாய் முறைப்பாடு!!

தாய் முறைப்பாடு

தனது 6 வயது ஆண் குழந்தைக்கு அயல்வீட்டில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் பலாத்காரமான முறையில் மது அருந்தச் செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை – மொதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வீட்டிற்கு விளையாட சென்ற குழந்தை மீண்டும் வீடு திரும்பிய போது அவரின் வாயில் இருந்து மது நாற்றம் வீசிய நிலையில் , அது தொடர்பில் குழந்தையிடம் தாய் வினவியுள்ளார்.

இதன்போது , திருமண வைபவம் இடம்பெற்ற வீட்டில் இருந்த நபரொருவர் தனக்கு ஒருவித பானத்தை அருந்தச் செய்ததாக குழந்தை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் எமது செய்திப் பிரிவு அம்பலாந்தோட்டை காவற்துறையின் உயரதிகாரியொருவரை தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், குழந்தையை அம்பலாந்தோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி மருத்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

“எனது குடும்பத்தை சீரழிக்காதே, மனைவியை விட்டு விலகிவிடு”: முகாமையாளர் கொலையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின!!

பிறேமரமணன் வெட்டிக் கொலை

கிளிநொச்சி காப்புறுதி நிறுவன முகாமையாளர் கொலை விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. காப்புறுதி முகாமையாளரை கொல்லப் போகின்றேன் என சந்தேகநபர் தனது மனைவியிடம் முதல்நாள் தெரிவித்துவிட்டே இந்த கொலையை செய்தார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி உதயநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளரான வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (32) என்பவர் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார். தனது மனைவியுடன் தகாத உறவை பேணினார் என்று குறிப்பிட்டே, வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், இந்த கொலையை புரிந்தார்.

சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்குத் திரும்பும்வேளை விமான நிலையப் பொலிஸாரால் கடந்த புதன்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துவந்த பொலிஸார், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேகநபரை மேலும், 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கேட்டனர்.

நீதிமன்று அனுமதித்தது.அதனடிப்படையில் இரண்டு நாள்கள் தடுத்துவைத்து சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், அவரது தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் ஒவ்வொன்றாக ஆராயப்பட்டன.

எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பிறேமரமணன் எனது நீண்டநாள் நண்பர். அதனால், எனது மனைவியை அவரது காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்ற அனுப்பி வைத்தேன். கிளிநொச்சியில் சீரான தொழில் வாய்ப்புக் கிடைக்காத்தால் பகரைன் நாட்டுக்கு தொழில் தேடிச் சென்றுவிட்டேன். நான் வெளிநாடு சென்றதும் எனது மனைவியுடன் பிறேமரமணன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார்.

அவர்களது தொடர்பு அண்மைக்காலமாக மிகவும் நெருக்கமடைந்தது. எனது மனைவியுடன் தகாத உறவில் இருக்கும் புகைப்படம், வீடியோ எனக்கு அனுப்பிவைத்து பிறேமரமணன் என்னை மிகவும் மன உளைச்சலுக்குள்ளாக்கினார். எனது நண்பனான அவரை நான் பல தடவைகள் எச்சரித்தும் மன்றாடியும் பேசியிருந்தேன்.

எனது குடும்பத்தை சீரழிக்காதே, மனைவியை விட்டு விலகிவிடு என்று அவரிடம் கடைசிவரைக்கும் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் என்னை கோபமூட்டும் வகையிலான புகைப்படங்கள், வீடியோக்கள், குரல்பதிவுகளைத் தொடர்ச்சியாக அனுப்பிவைத்தார்.

அதனால் நாடு திரும்பிய நான், பிரேமரமணனை சந்திக்கப் போகின்றேன் என எனது மனைவிக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினேன்’ என்று சந்தேகநபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் சந்தேகநபரின் மனைவி, அக்கராயன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, தனது கணவர் பிறேமரமணனைக் கொலை செய்யப் போகிறார் எனத் தெரிவித்துள்ளார். எனினும், கொலை இடம்பெற்ற பின்னர் தான் அவ்வாறு சொல்லவில்லை என்கிறார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, கொல்லப்பட்ட பிரேமரமணனால், கைதான சந்தேகநபருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள், குரல்பதிவுகள் சந்தேகநபரின் தொலைபேசியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பா வேண்டாம் விட்டுவிடுங்கள் என உயிர்பிச்சை கேட்ட மகன் : கண்விழித்த தாய் கண்ட அதிர்ச்சி காட்சி!!

உயிர்பிச்சை கேட்ட மகன்

சென்னையில் பெற்ற மகனை சந்தேகத்தால் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் வேதவள்ளி என்பவரின் கணவர் சக்திவேல். இந்த தம்பதியினருக்கு சதீஷ் என்ற மகன் இருக்கிறான். சந்தேக குணத்திற்கு அடிமையான கணவர், அவ்வப்போது தனது மனைவி வேதவள்ளியுடன் சண்டைபோட்டு வந்துள்ளார்.

குடும்பநலன் கருதி வேதவள்ளி அமைதியாக இருந்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அறிவுரை வழங்கியும் அவர் கேட்பதற்கு தயாராகவில்லை. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மகன் சதீஷ், தனது அம்மாவுக்கு சாகமாக பேசியுள்ளார்.

இதனால் கோபம் கொண்ட தந்தை, தனது மகனை சந்தேகப்பட்டுள்ளார். அன்றிரவு அனைவரும் தூங்கியபிறகு கத்தியை எடுத்து தனது மகன் சதீஷை கத்தியால் குத்தியுள்ளார். அப்பா என்னை விட்டுவிடுங்கள் என சதீஷ் கதறியும், அதனை கேட்காத சக்திவேல் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.

கண்விழித்து பார்த்த வேதவள்ளி தனது மகன் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக மகனை மருத்துவமனையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உனக்கு ஏன்தான் இந்தக் கேவலமான சிந்தனை வந்தது. நாங்கள் என்ன பாவம் செய்தோம் என வேதவள்ளி கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்திலிருந்த சக்திவேல், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பொலிசார் விசாரித்தபோதுகூட வேதவள்ளி என்னை ஏமாற்றிவிட்டாள் என்று கூறியுள்ளார். நீண்ட நேரத்துக்குப்பிறகு சக்திவேல், மனமுடைந்து கதறி அழுதுள்ளார். தற்போது சக்திவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தின் இறுதி நிமிட வீடியோ வெளியானது!!

157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்

157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Ethiopian Airlines Boeing 737 பயணிகள் விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை காலை எத்தியோப்பியாவின் தலைநகர் Addis Ababa-விலிருந்து கென்யாவின் Nairobi நகருக்கு 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றது.

அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களின் விவரம் மற்றும் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.

உறவினர்களை இழந்த சோகத்தில் பலர் எத்தியோப்பியா விமான நிலையத்தில் கதறி அழுத புகைப்படங்களுக் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய பயணிகள் விமானத்தின் கடைசி நிமிட வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பயணிகள் முகத்தில் மாஸ்க் அணிந்திருக்கின்றனர். இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் உயிரிழந்தவர்களின் கடைசி நிமிடம் என கண்கலங்கும் வகையில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த கணவன் : சோகம் தாங்க முடியாமல் மகளுடன் சேர்ந்து விஷம் குடித்த தாய்!!

விஷம் குடித்த தாய்

நாகை மாவட்டத்தில் கணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த துக்கம் தாளாமல் மகளுடன் சேர்ந்து தாயும் விஷம் குடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் கடந்த மாதம் 27ம் திகதி சாலை விபத்தில் பலியாகினார். இவருக்கு அகிலாதேவி என்ற மனைவியும் ஹர்ஷா என்ற 3 வயது மகளும் உள்ளனர்.

கணவர் இறந்ததிலிருந்து இருவரும் சோகமாகவே இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அகிலா தன்னுடைய காதில் விஷத்தை ஊற்றிக்கொண்டும், மகளுக்கு விஷத்தை குடிக்கவும் கொடுத்துள்ளார்.

இருவரும் ஒரே நேரத்தில் திடீரென மயங்கி விழுவதை பார்த்த வீட்டார், அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின், தன்னுடைய கணவன் இல்லாத நிலையில் தனக்கு வாழ விருப்பமில்லை எனவும், மகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக விஷம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பெண்களுக்கு நடந்த கொடுமை : பேஸ்புக்கில் அம்பலமான உண்மை!!

பேஸ்புக்கில் அம்பலமான உண்மை

இலங்கை வந்த அமெரிக்க பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் மாதம் 08ஆம் திகதி மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தான் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக அமெரிக்க நாட்டு பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

கெரன் என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் “கடந்த 8ஆம் திகதி இரவு எனது நண்பருடன் கோப்பி அருந்திக் கொண்டிருந்தேன். இதன்போது அவ்விடத்திற்கு வந்த நபர் ஒரு திடீரென என எனது அந்தரங்க உறுப்பை பிடித்துவிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் கோப்பி கடையில் இருந்த அனைவரும் அதனை பார்த்தார்கள். இதன் போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் போய்விட்டது.

என் மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்ட நபர் குடிபோதையில் இருந்தார். இதனால் அவரை மன்னிக்க வேண்டும் என அருகில் இருந்தவர்கள் குறிப்பிட்டார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பாலியல் சேட்டையில் ஈடுபட்டவர் முச்சக்கர வண்டியில் ஏறி தப்பிச் செல்ல முயற்சித்தார். எனினும் நானும் எனது நண்பரும் அதே முச்சக்கர வண்டியில் ஏறி தப்பி செல்ல முடியாத வகையில் அவரை பிடித்து கொண்டோம்.

பின்னர் சம்பவம் தொடர்பில் அருகில் பயணித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு அறிவித்தோம். சந்தேக நபரையும் பொலிஸ் அதிகாரிகள் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு முச்சக்கர வண்டியில் அழைத்து சென்றோம். அதற்காக 700 ரூபாய் முச்சக்கர வண்டி கட்டணம் அறவிடப்பட்டது.

இந்த சம்பவத்தில் பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் திருப்தியடைய முடியவில்லை. தனது தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அமெரிக்க வீட்டு விலாசம் போன்றவற்றை பொலிஸார் பெற்றுக் கொள்ளாமல் இரண்டாம் தரப்பு நபர் ஒருவரே பெற்றுக் கொண்டார்.

பொலிஸார் என கூறி நபர் ஒருவர் எனக்கு அழைப்பேற்படுத்தி சந்திக்க வருமாறு அழைத்தார். பொலிஸ் அதிகாரியை சந்திக்க சென்ற போது சிவில் உடையில் இருந்த நபர் பொலிஸ் அதிகாரி அல்ல என தெரிந்த பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டேன். அது தொடர்பில் பொலிஸாரிடம் தெரியப்படுத்தினேன்.

எப்படியிருப்பினும் இந்த முழுமையான சம்பவத்தை பார்க்கும் போது இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்லும் போது அவதானமாக இருக்க வேண்டும். எனக்கு நடந்த துன்புறுத்தல் போன்று வேறு பெண்களுக்கும் நடந்திருந்தால் அச்சப்படாமல் சட்டத்திற்கு முன் செல்ல வேண்டும்” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மரண தண்டனையை எதிர்நோக்கும் தாயார் : மகள் விடுத்த உருக்கமான கோரிக்கை!!

மகள் விடுத்த உருக்கமான கோரிக்கை

தெய்வ நிந்தனை பேரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பெண்மணியை பாகிஸ்தானைவிட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என அவரது மகள் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். இஸ்லாம் மதத்தையும் இறை தூதரையும் இழிவாக பேசியதாக கூறி பாகிஸ்தான் நாட்டில் Asia Bibi என்பவர் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

ஆனால் சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் தலையிட்டதை அடுத்து கடந்த ஆண்டு அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் கைவிடப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் பாகிஸ்தான் நாட்டின் மத அடிப்படைவாத கும்பலிடம் சிக்காமல் இருக்க, அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் அவர் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Asia Bibi விடுவிக்கப்பட்ட விவகாரம் பாகிஸ்தானில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பல மாகாணங்களில் கலவரமும் வெடித்தது. ஞாயிறன்று, கனடாவில் உள்ள ரகசிய இருப்பிடத்தில் இருந்து பேசிய Asia Bibi-இன் 18 வயதான இளைய மகள் Eisham Ashiq, தாயார் தங்களுடன் இல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும், அவரது நிலையை எப்போதும் எண்ணியிருப்பதாகவும், தொலைபேசி வழியாக மட்டுமே தற்போது அவருடன் பேச முடிகிறது எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, பாகிஸ்தானில் இருந்து அவர் வெளியேற அங்குள்ள அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் எனவும், பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக தாங்கள் ஒருபோதும் பேசியது இல்லை எனவும், தாங்கள் பிறந்த மண்ணை ஒருபோதும் இழிவாக பேசியது இல்லை எனவும் Eisham Ashiq கலங்கிய கண்களுடன் தெரிவித்துள்ளார்.

கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

பத்தில் ஒருவர் பரிதாபமாக பலி

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் நொச்சியாகம மக்கள் சந்தைக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளொன்றும், சிறியரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த விவசாய பரிசோதகர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். வில்பத்து – ஹோரிவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய விவசாய பரிசோதகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அலுவலகத்திலிருந்து கடமை முடிந்து மோட்டார் சைக்கிலில் நொச்சியாகம நகருக்கு சென்று கொண்டிருந்த வேளையில் சிறிய ரக லொறியுடன் மோதி பலத்த காயத்திற்குள்ளாகிய நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாதம்பை – இட்டிகுளம் பகுதியை சேர்ந்த சிறிய ரக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகளின் திருமணத்தை அதிரடியாக நிறுத்திய கோடீஸ்வர தந்தை : இப்படியும் ஒரு காரணமா?

இப்படியும் ஒரு காரணமா?

தாய்லாந்தில் தமது மகள் தெரிவு செய்த மாப்பிள்ளை மிகவும் அழகாக இருப்பதாக கூறி திருமணத்தை தந்தை ஒருவர் அதிரடியாக நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் தாய்லாந்தின் சும்ஃபோன் மாகாணத்தில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் 58 வயதான அர்னோன் ரோதாங். இவரது 28 வயது மகள் Karnsita இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது இவருக்கு மன வருத்தத்தை அளித்துள்ளது.

இதனையடுத்து உள்ளூர் வழக்கப்படி, தமது மகளை திருமணம் செய்துகொள்பவருக்கு 240,000 பவுண்டுகள் சீதனமாக வழங்கப்படும் எனவும், அதற்கு 3 நிபந்தனைகள் உள்ளன எனவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இவரது விளம்பரத்தை காண நேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டியில் குதித்தனர்.

இதில் 28 வயதான Premyosapon Khongsai என்ற இளைஞரை அர்னோனின் மகள் தெரிவு செய்தார். ஆனால் தமது மகள் தெரிவு செய்துள்ள மாப்பிள்ளை மிகவும் அழகாக இருப்பதாவும், நாளை ஒருநாள் தமது மகளை அவர் கைவிட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வரன் தேடும் போட்டியை கைவிட்டாலும், எதிர்காலத்தில் தமது மகளை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளும் வரனுக்கு தாம் அறிவித்த தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்றார்.

தமது மருமகன், கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் சரளமாக பேசவும் எழுதவும் வேண்டும் என தெரிவித்துள்ள அர்னோன், தமது தொழிலை முன்னெடுத்து நடத்தும் திறமை அவரிடம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். திருமணம் முடிந்ததும் தமது மொத்த சொத்துக்களையும் மகள் மற்றும் மருமகனிடமும் ஒப்படைக்க இருப்பதாகவும் அர்னோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைக்கப்படவுள்ள மற்றுமொரு பிரமாண்டம்!!

தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம்

தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ள இந்தப் பாலம் 5 மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. 175 மீற்றர் உயரத்தைக் கொண்டதும், 10 மீற்றர் அகலத்தைக் கொண்டதாக இந்த பாலம் நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.