தமிழ் சினிமாவில் என்றென்றும் மறக்க முடியாத காதல் தேவதை தேவயானி. கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களுக்கு மத்தியில், கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் மக்களை கிரங்கடித்தவர்.
இயக்குநர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டாலும், இவரது காதல் திருமணம் சில கரடு முரடான பாதைகளை சந்தித்துள்ளன. விண்ணுக்கும் மண்ணுக்கும் மற்றும் சூரிய வம்சம் படத்தினை ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தேவயானி கதாநாயகியாக நடித்தபோதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.
தேவயானியின் தந்தை மும்பையை சேர்ந்தவர். அம்மா ஒரு மலையாளி ஆவார். தேவயானியின் காதல் விவகாரம் இவரது வீட்டிற்கு தெரிவித்ததையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடைசி வரை இவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவரை வீட்டுக்குள் சிறை வைத்துள்ளனர் இவரது குடும்பத்தார்.
ஆனால், ராஜ்குமாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தேவயானி, ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் சுவரை ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
அந்த அளவுக்கு, ராஜ்குமார் மீது அதீத காதல் கொண்டுள்ளார். தேவயானி ராஜ்குமாரை திருமணம் செய்துகொண்டது அவர்களது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
திருமணம் முடிந்த பின்னர் கூட இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு, தேவயானிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்னர்தான் குடும்பத்தினர் இவர்களோடு உறவாட ஆரம்பித்தார்கள். தமிழ் சினிமாவில் காதல் தேவதை மட்டுமின்றி, நிஜத்திலும் இவர் காதல் தேவதை தான்.
கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் இன்று பலர் மகிழ்ச்சியில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று மாத்திரம் பல இலட்ச ரூபாவுக்கு மீன்கள் விற்பனை இடம்பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு தொடர்ந்தும் வான்பகுதிக்குள் பலர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதோடு அவற்றை கொள்வனவு செய்வதற்கு மக்களும் வியாபாரிகள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தைச் சேர்ந்தவரும், Mrs India Universe Globe பட்டத்தை தட்டிச் சென்றவருமான சம்யுக்தா பிரேம் தன்னுடைய வெற்றியின் ரகசியத்தை கூறியுள்ளார். கோயமுத்தூரைச் சேர்ந்தவர் சம்யுக்தா பிரேம். இவர் இந்த ஆண்டு நடைபெற்ற தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று, Mrs India Universe Globe பட்டதைத் தட்டிச் சென்றிருக்கிறார்.
திருமணம்தான் நம்ம சுதந்திரத்துக்கு முடிவு என்று பலரும் புலம்பிக்கொண்டிருக்கும்போது, சர்வதேச திருமதி அழகிப் போட்டிக்குத் தேர்வாகி, பல தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ரோல்மாடலாகியிருக்கிறார்.
தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச திருமதி அழகிப் போட்டியில் பங்குபெற்ற ஒரே தமிழ்ப் பெண்ணான சம்யுக்தா தன்னுடைய வெற்றி பற்றி கூறியுள்ளார். அதில் நான் படித்தது எல்லாம் பேஷன் சம்பந்தமான படிப்புதான். படித்து முடித்தவுடன் லண்டனில் சர்வதேச பிராண்டான பிராடாவோடு இணைந்து வேலை செய்து வந்தேன்.
அதன் பின் எனக்கு திருமணம் ஆகியதால், இல்லத்தரசியாக மாறினேன். நான் முன்னரே பேஷன் பீல்டில் இருந்த போது, அழகிப் போட்டிகள்ல பங்கேற்பது மிகவும் ஆசையாக இருக்கும். ஆனால் அப்போது நான் தீவிரமாக இல்லை. இதையடுத்து அந்த ஆசையை என் கணவரிடம் நான் சொன்னபோது, அடுத்து வரும் திருமதி போட்டியில அவசியம் நீ கலந்து கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
அவருடைய ஆதரவு மட்டும் இல்லையென்றால், நான் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது. இது போன்ற ஆதரவு கிடைத்தால், நிறைய பெண்கள் அவர்களுடைய கனவுகளை நினைவாக்க முடியும். திருமணம் ஆன பெண்கள் இது போட்டியில் சந்திக்கும் சவாலே உடல் எடை பிரச்சனை தான், திருமணம் முடிந்துவிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும்.
நான் திருமணத்துக்குப் பிறகு 90 கிலோ எடை இருந்தேன். கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் பழக்கத்தால இப்போ 60 கிலோ இருக்கேன். கடுமையான பிளான் இல்லை என்றால் இப்படி குறைச்சிருக்கவே முடியாது. என்னோட passion மேல நான் வைத்திருந்த அன்புகூட இதுக்கு ஒரு காரணம்.
அதுமட்டுமின்றி குடும்பத்தாரின் ஆதரவு மிகவும் முக்கியம். அவர்களின் ஊக்குவிப்பு இல்லையென்றால் மிகவும் கஷ்டம். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என் கணவர், அம்மா, அப்பா எல்லோருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். மேலும் பேஷன் என்றாலே தமிழ்ப் பெண்களுக்கு ஆகாது. அதுவும் திருமணமான பெண்கள் நினைத்து கூட பார்க்க கூடாது என்று பலரும் கூறுகின்றனர்.
ஆனால் என்னை பொறுத்த வரை அதுபோன்ற பாகுபாடுகள் எல்லாம் பார்ப்பது இல்லை, அங்கு இருக்கும் மக்கள் எல்லோரும் அன்பாக பழகக்கூடியவர்கள். நாம் எப்படி பழகுகிறோம் என்பதை வைத்தே, அவர்களும் நம்மிடம் பழகுவார்கள். நம் மேல் நமக்கு நம்பிக்கை இருந்தால் எந்த ஒரு பயமும் தேவையில்லை.
இந்த பயணத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது, வெவ்வேறு கலாசாரத்திலிருந்து வந்தவர்களைச் சந்திக்க நல்ல வாய்ப்பாக இருந்தது. சைக்காலஜிஸ்ட், ஸ்டைலிஸ்ட், கோரியோகிராபர் என்று நிறைய மனிதர்களை சந்தித்தது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. வேலைகளைப் பார்த்துட்டு, குடும்பத்தையும் எப்படி கவனிப்பது, நம் உடம்பை எப்படி ஆரோக்கியமா வைத்து கொள்வது, வாழ்க்கையை மேம்படுத்துற வழிமுறைகளையும் இந்த பயணத்தின் மூலம் கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
இந்தோனேசியா தொடக்கம் இலங்கை வரை ஆட்டிப்படைத்த ஆழிப்பேரலை தந்த பேரவலத்தின் 14 ஆம் ஆண்டை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இந்த விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இன்று(26.12.2018) காலை 8 மணிக்கு இடம்பெற்றது.
இதன் போது நெய்விளக்கேற்றி, மோட்ச அர்ச்சனை செய்து தீபங்கள் ஏற்றப்பட்டு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது.
இதில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்மார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.சூரியராஜா, சமூக ஆர்வலர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்றில் தீப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. CVK 7042 என்ற சரக்கு விமானம் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த விமான நேற்று மாலை தாய்லாந்தில் இருந்து மத்தல விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இன்று காலை ஓமானை நோக்கி பறக்க தயாரான போது இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீப்பற்றிய போது விமானத்திற்குள் 7 பேர் இருந்துள்ளனர். அவர்களில் எருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் விமான நிலைய தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
எனினும் தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
காதலை கைவிடுமாறு தாய் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், காதலனுடன் சேரமுடியாது என்ற பயத்தில் அவரை கொலை செய்ததாக கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் திருமுருகன். இவருடைய மனைவி பானுமதி (50). இவர்களது 2-வது மகள் தேவிபிரியா (19). பட்டாபிராம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
தேவி பிரியாவுக்கும் ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசிக் கொண்டு பேசி வந்துள்ளனர். இதனால் இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியது.
சுரேஷ் செங்குன்றம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வேலைக்காக தினமும் சென்னைக்கு வந்தபோது மின்சார ரெயிலில் தேவி பிரியாவை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் தேவி பிரியாவின் தாய் பானுமதிக்கு தெரியவந்ததும் அவர தெரியவர காதலை கைவிடும்படி மகளை வற்புறுத்தி வந்தார்.
ஆனால் தேவி பிரியா கண்டுகொள்ளவில்லை. தேவிபிரியாவுக்கும் சுரேசுக்கும் பேஸ்புக் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நண்பர்களாக இருந்தனர்.
அவர்கள் தங்களது காதலுக்கு உதவுமாறு விக்னேஷ், அஜித்குமாரிடம் கேட்டு இருந்தனர். மேலும் தாய் பானுமதியை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற தேவிபிரியா திட்டமிட்டு இருந்தார்.
இதற்காக கடந்த 15-ஆம் திகதி தேவிபிரியாவும், காதலன் சுரேசும் முன் கூட்டியே திட்டமிட்டனர். தடா பகுதியில் இருவரும் சந்தித்து பேசி தங்களது திட்டத்தை வகுத்தனர். அதன்படி நேற்று மாலை தேவிபிரியா பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகிய அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்தார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த தேவிபிரியாவும், நண்பர்கள் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து பானுமதியை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அஜித்குமார், விக்னேசை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த பொலிஸ் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. அப்போது தாய் பானுமதியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து தேவி பிரியா வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், கல்லூரிக்கு மின்சார ரெயிலில் செல்லும்போது சுரேசுடன் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்த் வந்தோம். ஆனால் இதனை அறிந்த தாய் பானுமதி எங்களது காதலை கைவிடுமாறு தொடர்ந்து கூறி வந்தார்.
அவர் உயிரோடு இருந்தால், காதலனுடன் சேர முடியாது என்று நினைத்தேன். இதனால் இது பற்றி சுரேஷிடம் பேசினேன். இதற்கிடையில் எங்களுக்கு பேஸ்புக் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் எங்களுக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்களிடம் எங்களது காதல் நிலைமை குறித்து தெரிவித்த போது அவர்கள் காதலுக்கு உதவுவதாக கூறினார்கள்.
இதுபற்றி காதலன் சுரேசிடம் கூறி நாங்கள் 4 பேரும் தாய் பானுமதியை தீர்த்துக்கட்டி விடலாம் என்று முடிவு செய்தோம். இதற்காக பேஸ்புக் நண்பர்களான அஜித்குமார், விக்னேஷ் மூலம் வீட்டில் கொள்ளை நாடகம் நடத்தி தாய் பானுமதியை கொலை செய்ய திட்டமிட்டோம், அதன் படியே எல்லாம், நடந்தது.
இறுதியை தாயை கத்தியால் குத்தி கொலை செய்த அவர்கள், வெளியில் ஓடும் போது கையில் இரததக் கறையுடன் இருந்ததால், அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்துவிட்டனர். இதனால் நானும் சிக்கிக் கொண்டேன். எங்கள் 3 பேரையும் பொலிசார் கைது செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை இன்று (26.12.2018) காலை 9.20 மணிக்கு பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபி முன்றலில் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மௌன பிராத்தனையுடன் ஆரம்பமான இப் பிராத்தனை நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றுதல், மலர் அஞ்சலி செலுத்துதல், பிராத்தனை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன
இலங்கைத் தீவிலே முதன் முதலாக வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினரால் சுனாமி பேரலையின் 31ம் நாள் நினைவாக 26.01.2005ம் ஆண்டு பூந்தோட்டம் சிறுவர் பூங்காவில் சுனாமிப்பேரலை அனர்த்த நினைவுத் தூபி நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம் , வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர் , செயலாளர் , உறுப்பினர்கள், கிராம சேவையாளர்கள், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வி.பிரதீபன், குடும்ப நல உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கத்தினர், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சுனாமியினால் உயிரிழந்த உறவினர்களின் உறவுகள், மதத்தலைவர்கள் , பொதுமக்கள் , சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.
இதன் போது வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினரால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஒர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிதியினை அக்கிராமத்தின் கிராம சேவையாளர் பெற்றுக்கொண்டார்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் இறுதி நொடியில் உயிர் தப்பிய அனுபவத்தை 14 வருடங்களின் பின்னர் இலங்கை குடும்பம் ஒன்று பகிர்ந்துள்ளது.
மொரட்டுவ ரயில் நிலையத்தின் மூன்றாவது பிரிவில் ரயில் டிக்கட் பெற்றுக் கொண்டு நானும் எனது கணவரும் அப்போது 12 வயதாக இருந்த மகனுடன், மாத்தறை, கும்புருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் அம்மாவை பார்க்க சென்றோம்.
வேறு நாட்கள் போலின்றி அன்றைய தினம் நேரத்திற்கு ரயில் வருகைத்தந்தது. எனினும் அதில் ஏற முடியாதளவு மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
எப்படியோ கடின முயற்சியில் ரயிலில் ஏறி கதவிற்கு அருகில் நின்றோம். ரயில் அம்பலங்கொட ரயில் நிலையத்தை நெருங்கியவுடன் பயணிகளின் குழுவொன்றை காண முடியவில்லை. எனினும் நாங்கள் நின்றுக் கொண்டே பயணித்தோம்.
சற்று தூரம் முன்னால் ரயில் சென்று நின்றவுடன் கஹவ ரயில் நிலையத்தை கடக்கும் போது ரயில் பக்கத்தை நோக்கி மக்கள் ஓடிவந்ததனை அவதானித்தோம். ரயிலில் இருந்து யாரோ குதித்துவிட்டதாக தான் நினைத்தோம். கடல் வருகின்றதென கூறி கொண்டு அவர்கள் ரயிலுக்குள் ஏறினார்கள்.
ஒன்றும் புரியாமல் நின்ற போது ரயில் நோக்கி கடல் அலை வந்தது. அங்கிருந்த வீடுகள் பாடசாலைகள் அனைத்தை உடைத்து கொண்டு கடல் அலை எங்களை நோக்கி வந்தது. ரயில் முழுவதும் கடல் நீர். மீண்டும் மிகப்பெரிய சத்தத்துடன் கடல் நீர் ரயிலை நோக்கி வந்து ரயிலை சாய்த்தது. அனைவரும் மரணத்துடன் போராடினோம். நானும் எனது மகனும் கணவரும் ரயில் கதவை பிடித்து கொண்டு நின்றோம்.
நாங்கள் இருந்த ரயில் கடல் அலையில் அடித்து சென்று 400 மீற்றர் தூரத்தில் நின்றது. உதவி கேட்பதற்கு ஒருவரும் இல்லை. ரயிலை எட்டி பார்க்கும் அதில் இருந்த அனைவரும் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சிலர் மாத்திரம் போராடி உயிரை காப்பாற்றி கொண்டனர். உயிரிழந்த சடலங்களுக்கு மத்தியில் எழுந்து பார்க்கும் போது கண்டி போன்ற ஊரையே கண்டோம். அங்குள்ள ஒரு விகாரையில் தங்கியிருந்தே உயிர் பிழைத்தோம் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவுகளில் ஏற்பட்ட பாரிய பூகம்பம் சுனாமி அலைகளாக உருப்பெற்று பல நாடுகளை தாக்கியது. இதன்போது இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை தாக்கியது. இதில் பல இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் மாத்திரம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்காலை குடாவெல்ல துறைமுகத்தில் நேற்று காலை இரண்டு நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பெருந்தொகையான மக்கள் பார்த்து கொண்டிருந்த வேளையில் மர்மநபர்களால் துப்பாக்கி சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 4 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தங்காலை குடாவெல்ல துறைமுகத்தில் வர்த்தக துறையை கட்டியெழுப்பும் லதிஷ் உதயகுமார எனப்படும் ரனா என்ற வர்த்தகரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்களில் ரனாவும் ஒருவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த கொலையின் பின்னர் தங்காலை திக்வெல்ல உட்பட சுற்றுப்புற பகுதியில் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கொலையாளிகளை தேடி விசேட பொலிஸ் குழுக்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட ரனாவின் தந்தையான மஹிந்த என்பவர் திக்வெல்ல துறைமுகத்தில் பிரதான வர்த்தகர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மஹிந்த என்ற வர்த்தகருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மீன் வர்த்தகத்திற்கு தொடர்புடைய பாரிய அளவிலான 21 ட்லோலர் படகுகளுக்கு சொந்தக்காரர்களாகும். நேற்று காலை கலன என்ற படகில் கொண்டுவரப்பட்ட மீன் தொகையை விற்பனை செய்யும் போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரனா தனது ஊழியர்களுக்கு படகில் மீன் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் துறைமுகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
முகத்தை மூடிய ஹெல்மட் அணிந்திருந்த இருவரும் படகு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு நுழைந்து டீ 56 துப்பாக்கி மற்றும் 9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளை பயன்படுத்தி நாலா பக்கமும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தையடுத்து துறைமுகத்தில் இருந்த வர்த்தகர்கள் மற்றும் மீன் கொள்வனவு செய்ய வந்த மக்கள் தப்பியோடியுள்ளனர்.
கொலையாளிகள் இருவரும் கலன படகு மற்றும் அதற்கு அருகில் இருந்த அனைவர் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன், விழுந்து கிடந்த ரனா அருகில் சென்று அவரது தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் 4 பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 8 பேர் தங்காலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு 16 வயதான இளைஞர் ஒருவரும் உள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொலையை செய்தவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று இடையில் மோட்டார் வாகனம் ஒன்றில் ஏறிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ரனாவின் தந்தை மஹிந்த மற்றும் குடாவெல்ல துறைமுகத்தில் இன்னும் ஒரு பிரதான வர்த்தகருடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்து மோதலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோதலின் முடிவாக இதற்கு முன்னர் மஹிந்தவின் சகோதரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த துறைமுகத்தின் கட்டுப்பாட்டை மஹிந்த மற்றும் அவரது மகன்கள் கைப்பற்றியுள்ளமையினால் எதிர் தரப்பு வர்த்தகருடன் மோதல் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக தொடரும் இரு தரப்பு மோதலில், ரனா மேற்கொண்ட தாக்குதலில் எதிர்தரப்பு நபர் ஒருவர் ஊனமுடையவராகியுள்ளார். அத்துடன் இந்த மோதலில் பின்னர் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரனா வழங்கிய தகவலுக்கமைய திக்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் ரனாவின் எதிர் தரப்பு வர்த்தகருடன் நெருக்கமானவர் என விசாரணைகளில் தெரியவந்து்ளது.
இந்த மோதல்களை அடிப்படையாக கொண்ட இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளார்.
இந்தகொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 11 குழுக்கள் அனுப்பி வைக்க்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புகையிரத தொழிற்சங்கங்கள் சில, வேலைநிறுத்தப் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நள்ளிரவு முதல் சில தொழிற்சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
சம்பள முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக புகையிரத என்ஜின் சாரதிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடு தொடர்பில் அதிகாரிகள் இதுவரையில் சாதகமான பதில் எதனையும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பண்டிகை மற்றும் விடுமுறை காலமான தற்போது புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்தால் இலங்கை மக்கள் போக்குவரத்தில் சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானியாவில் உள்ள தனது காதலருடன் நடிகை ஸ்ருதிஹாசன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், பிரித்தானிய நடிகர் மைக்கேல் கோர்சேலை காதலித்து வருகிறார்.
இதையடுத்து மைக்கேலை சந்திப்பதற்காக அடிக்கடி பிரித்தானியாவுக்கு செல்வதை வழக்காக கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன். இந்நிலையில் சமீபத்தில் மைக்கேலுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர் கொண்டாடியுள்ளார்.
இது சம்மந்தமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
வவுனியா வடக்கில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர், கனகராயன்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர், நைனாமடு கிராம அலுவலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர்,
மன்னகுளம் கிராம அலுவலர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர், மாறா இலுப்பை கிராம அலுவலர் பிரிவில் ஓரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர், கற்குளம் கிராம அலுவலர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர்,
கனகராயன் குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேருமாக மொத்தம் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒர் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் 17 குடும்பங்களை சேர்ந்த 46 அங்கத்தவர்கள் வவுனியா வடக்கு ஊஞ்சல்கட்டி அ.த.க பாடசாலையில் தங்கவைக்கபட்டுள்ளனர்.
உதவிக்கரங்களை எங்கள் எல்லைக்கிராமங்கள் பக்கமும் மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது செய்கை செய்யப்பட்ட நெற்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் கால்நடைகள் பல வெள்ள நீரில் சிக்கி காணாமல் போயுள்ளதுடன் வீடுகள் வியாபார நிலையங்களுக்குள் வெள்ளம் சென்றமையால் சொத்திழப்புக்களும் ஏற்ப்பட்டுள்ளன.
வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்து உள்ளதுடன், குளத்தின் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவும் ஈரட்டை குளத்தின் வான் பாய்ந்து வருவதனாலும் பாவற்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.
19.4 அடியாக உள்ள பாவற்குளத்தின் நீர்மட்டம் தற்போது 18.3 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும் நிலை இருப்பதால் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைய வாய்ப்புள்ளது.
இதன்காரணமாக குளத்தின் கீழான பகுதிகளில் உள்ள பாவற்குளம், மீடியாபாம், கிறிஸ்தவ குளம், மெனிக்பாம் மக்கள் அவதானமாக இருக்கவும்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீரை வெளியேற்றுவது குறித்து நீர்பாசன, மாவட்ட செயலக, அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் குளத்தின் வான் கதவுகளை பார்வையிட்டு அவதானித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
பண்டாரவளையில், செல்பி எடுக்க முயற்சித்த போது நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமல் போயுள்ளனர்.
பண்டாரவளை அம்பதண்டேகம பம்பரகம நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞர்கள், அந்த இடத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை எடுக்கச் சென்றிருந்த போது நீர் வீழ்ச்சியின் உச்சியிலிருந்து கீழே வீழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மற்றுமொரு இளைஞரும் கீழே வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
பாண்டாரவளை ஹீல்ஓயா என்னும் இடத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞரும், வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞருமே இவ்வாறு நீரில் வீழ்ந்து காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன இளைஞர்களை தேடும் பணிகளில் பண்டாரவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.