யாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்!!

ஆசிரியரின் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் பிரபல பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நகரப்பகுதியில் உள்ள மிகப் பிரபலமான பாடசாலையில் கல்வி பயிலும் அரியாலை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.கச்சேரி நல்லூர் வீதியில் வசிக்கும் ஆசிரியர், இந்த மாணவர்களில் ஒருவருக்கு கற்பித்துள்ளார். சிறிது காலத்தின் பின்னர் ஆசிரியரின் மகளுடன் நட்பை பேணி வந்ததுடன், ஆசிரியரிடம் கதைப்பது போன்று பாசாங்கு காட்டி தினமும் அவர்களது வீட்டிற்கு சென்று வந்துள்ளனர்.

இவ்வாறு சென்று வந்தவர்களில் மாணவர் ஒருவர் பல தடவைகள் வீட்டில் இருந்த மடிக் கணினி மற்றும் தொலைபேசி மற்றும் காசு உள்ளிட்ட பெறுமதி மிக்க பொருட்களை திருடியுள்ளார்.

இவர்கள் வேறு யாரோ திருடுகிறார்கள் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஆனால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வங்கி ATM அட்டையை திருடிச் சென்றதுடன், இரண்டு வாரங்களுக்குள் புட் சிற்றி(food city) ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

அதேநேரம், ATM திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த மாணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் யாழ். நகரில் உள்ள விருந்தினர் விடுதிக்கு சென்று அங்கு மதுபானம் அருந்தி உணவுகள் உட்கொண்டு பெரும் ஆரவாரமாக இருந்ததுடன் புகைப்படங்களும் எடுத்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார் அவர்களை பின் தொடர்ந்து, வீட்டிற்குச் சென்று அவர்களது வீட்டில் வைத்து நால்வரையும் நேற்று கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நால்வரிடமும் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் விபத்து : முதியவர் படுகாயம்!!

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் கோரக்கன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் பரந்தனிலிருந்து நேற்று மாலை 4.45 மணியளவில் முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

மஞ்சள் கோட்டுக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர் உடனடியாகவே நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது!!

 

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமி பேரலை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மக்களை நினைவு கூறும் நிகழ்வு இன்று (26.12) காலை 9.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் சுனாமி அனர்த்தத்தின் போது கடற்கரைக்கு அலைகளை பார்வையிடச் சென்ற அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையிலேயே மரணமானவர்களின் தொகை அதிகரித்திருந்தது.

சுனாமி பேரலை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் காணப்படவில்லை. இதன் காரணமாக ஆற்றலுள்ளவர்கள் பலரை சுனாமி பேரனத்தத்தில் நாங்கள் இழந்துள்ளோம் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.சூரியராஜா, மற்றும் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா வடக்கில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்!!

 

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதன்படி வவுனியா மாவட்டத்தில் மழை காரணமாக வவுனியா வடக்கு பகுதியே பாதிப்படைந்துள்ளது. வவுனியா வடக்கில் மழை காரணமாக பாதிப்படைந்த 132 குடும்பங்களைச் 455 பேருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா வடக்கு பிரதேச செயலகம் ஊடாக எழுகை என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு இந்த நிவாரணப் பொருட்களை வழங்கியது.

வவுனியாவில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 132 குடும்பங்களைச்சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 8 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 132 குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களில், 17 குடும்பங்களை சேர்ந்த 46 அங்கத்தவர்கள் வவுனியா வடக்கு மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பொது மண்டபத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இவ்வாறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எழுகை அமைப்பினர் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

வவுனியா தர்மலிங்கம் வீதியில் வீதிக்கு வந்த கடைகளால் பயணிகள் அசௌகரியம்!!

 

வவுனியா தர்மலிங்கம் வீதியில் வியாபார நிலையங்களுக்கு முன்னால் கொட்டகை அமைத்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால் போக்குவரத்து செய்யும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு முன்னால் உள்ள வீதியானது இருவழிப் போக்குவரத்து வீதியாகும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அவ் வீதி வழியாக பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த வீதியின் இரு மருங்கிலும் உள்ள வியாபார நிலையங்கள் பலவற்றுக்கு முன்பாக வீதிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வகின்றது.

இதன்காரணமாக அவ் வீதியில் விபத்துக்கள் ஏற்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதடன், அவ் வீதியில் பயணிக்கும் பலரும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை எந்தவித நடவடிக்கையும் எடுக்காது அசமந்தமாக செயற்படுவதாகவும் நகர மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

மனைவி என்னை கண்டுகொள்ளவேயில்லை : மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

 

விபரீத முடிவு

தமிழகத்தில் பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருக்கும் இசக்கியம்மாள் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. அரசு மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்த ஆனந்தி, தன் தாய் வீடு இருக்கும் சீதபற்பநல்லூர் கிராமத்துக்கு வந்துள்ளார்.

குழந்தையைப் பார்க்க வந்த இசக்கிமுத்து குழந்தையுடன் ஆனந்தியையும் தன்னுடன் அய்யனார்குளம் வருமாறு அழைத்துள்ளார். இசக்கிமுத்து மதுபோதையில் இருந்ததால் அவருடன் மகளையும் குழந்தையையும் அனுப்ப மாமியார் மறுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 12-ம் திகதி இசக்கிமுத்து மனைவியைப் பார்க்க சீதபற்பநல்லூர் வந்துள்ளார். அப்போதும் அவருடன் வர ஆனந்தி மறுத்துவிட்டதால், மதுபோதையில் இருந்த இசக்கிமுத்து அங்கேயே தங்கிவிட்டார்.

மறுநாள் கண்விழித்துப் பார்த்தபோது, குழந்தையையும் இசக்கிமுத்துவையும் காணவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தி பொலிசில் புகார் செய்தார்.

பொலிசார் இசக்கிமுத்துவிடம் நடத்திய விசாரணையில் ஆத்திரத்தில் பிறந்து 22 நாள்களே ஆகியிருந்த குழந்தையைத் தூக்கிச் சென்று அருகில் இருந்த குளத்தில் வீசிவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த இசக்கிமுத்துவைச் சந்திக்கவோ அவருக்கு சட்டரீதியாக உதவி செய்யவோ உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. அத்துடன், மனைவியும் அவரைச் கண்டுகொள்ளவில்லை.

தான் செய்தது தவறு தான் என்றாலும் யாருமே தன்னை கண்டுகொள்ளாமல் இருந்தது இசக்கிமுத்துவை மிகுந்த மன உளைச்சலில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நேற்று அவர் திடீரென சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இசக்கிமுத்து மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தலைமுடி வளர்த்து இளம்பெண் கின்னஸ் சாதனை!!

 

இளம்பெண் கின்னஸ் சாதனை

குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்த நிலன்ஷி படேல் என்ற 16 வயது பெண் தலைமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 11 ஆண்டுக்குள் நிலன்ஷி தனது தலைமுடியை மிக நீளமாக வளர்த்து உலக சாதனை படைத்து உள்ளார்.

நிலன்ஷி படேல் தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் சிறுவயதில் இருந்தே ஆர்வம் காட்டியும் தலைமுடியை பராமரிப்பதற்காக பிரத்யேகமாக அவர் நேரத்தை செலவிட்டும் வந்துள்ளார்.

தற்போது அவரது தலைமுடி நீளமாக வளர்ந்தது. தற்போது அவரது தலைமுடியின் நீளம் 170.5 சென்டி மீட்டர் (5 அடி 7 இஞ்ச்) ஆகும். அவரது இந்த சாதனை 2019-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. நிலன்ஷியின் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தக தயாரிப்பாளர்கள் அங்கீகரித்து உள்ளனர்.

இதற்கு முன்பு அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் என்ற பெண்ணின் 152.5 சென்டி மீட்டர் நீளமுள்ள தலைமுடிதான் சாதனையாக இருந்தது. பிறகு அந்த சாதனையை கெயிட்டோ என்ற பெண் 155.5 சென்டி மீட்டர் நீள தலைமுடி வளர்த்து முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நான் உயிரோடு இருந்தால் என்னைச் சந்திக்க அவன் நிச்சயம் வருவான் : தமிழ் நடிகை உருக்கம்!!

 

தமிழ் நடிகை உருக்கம்

சுதந்திர தினத்தன்று மழைநீர் வடிகால்வாயில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட குழந்தை குறித்து நடிகை கீதா பேசியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் பிறந்து இரண்டு மணி நேரமான பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை துணை நடிகை கீதா மீட்டெடுத்ததோடு, சுதந்திரம் என்று பெயரிட்டார்.

சுதந்திரத்துக்கு முதலுதவி சிகிச்சையளிக்க பின்னர் அந்த குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாக கீதா கூறினார். ஆனால் தற்போது அதிலிருந்து அவர் பின்வாங்கியுள்ளார். இது குறித்து கீதா கூறுகையில், குழந்தை சுதந்திரம் நலமாக உள்ளான்.

கடந்த மூன்று தினங்களாக சளி தொல்லையால் சிரமப்பட்ட நிலையில் சிகிச்சைக்குப் பிறகு நன்றாக இருக்கிறான். குழந்தையை தத்தெடுக்க சில விதிகள் இருப்பதாகச் சொன்னார்கள். அதையெல்லாம் பின்பற்றுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு சில சிக்கல்கள் உள்ளன.

எனவே, சுதந்திரத்தை நான் தத்தெடுக்க முடியாத சூழலில் இருக்கிறேன். அவனுக்கு உடல்நலம் சரியில்லை என்ற தகவல் கிடைத்தால் என்னையறியாமல் ஆஸ்பத்திரிக்குச் சென்று கவனித்துவந்தேன்.

குழந்தைகள் இல்லாதவர்களிடம் சுதந்திரம் கிடைத்தால் இன்னும் அவனின் எதிர்காலம் சிறப்பாக அமையும். இதனால்தான் அவனைத் தத்தெடுக்கவில்லை. மேலும், என்னிடம் அவன் வளர்வதைவிட வேறு எங்கு வளர்ந்தாலும் அவன் நலமாகவும் சிறப்பாகவும் இருக்கவேண்டும். குறிப்பாக அவனுக்கு விவரம் தெரியும் போது நான் உயிரோடு இருந்தால் என்னைச் சந்திக்க நிச்சயம் அவன் வருவான் என உருக்கமாக கூறியுள்ளார்.

கௌரவமான ஓய்வுக்குத் தயாராகும் ஜனாதிபதி சிறிசேன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தற்போதைய ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் முழுமையாகப் பூர்த்திசெய்துவிட்டு இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக்கேட்பதற்கு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றுதீர்மானித்திருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் கூறியதாக லங்கா இணையத்தள செய்திச்சேவையொன்று தெரிவித்திருக்கிறது.

விடுமுறையில் தற்போது குடும்பத்தினருடன் தாய்லாந்து சென்றிருக்கும் ஜனாதிபதி சிறிசேன அங்கு அவர்களுடன் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆராய்ந்ததாகவும் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து கடுமையான கவலையை அவர் வெளிப்படுத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி கௌரவமான முறையில் ஓய்வுபெறுமுகமாக அவரது மக்கள் செல்வாக்கை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அவரது ஆலோசகர்களில் ஒருவரிடம் குடும்ப உறுப்பினர் ஒருவர் கேட்டுக்கொண்டதாகவும் அந்த செய்திச்சேவை கூறுகிறது.

கிளிநொச்சியில் மீண்டும் பலத்த மழை : இரணைமடு வான்கதவுகள் திறப்பு!!

வடக்கின் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் நிலைமை ஓரளவு சீரடைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் கிளிநொச்சியில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் வீடுகளுக்கு திரும்பிய ஒரு சில குடும்பங்களும் கூட மீண்டும் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, இரணைமடு குளத்தின் வான்கதவுகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அரச தொழில் பெற்றுதருவதாக 27 இலட்சம் பணமோசடி : நபர் ஒருவர் கைது!!

வவுனியாவில் பல நாட்களாக பொதுமக்களை ஏமாற்றி அரச தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் மாவட்ட செலயகத்தின் புனர்வாழ்வு அமைச்சின் தொடர்புடன் கடமையாற்றி வருவதாகவும் தெரிவித்து பொதுமக்களிடமிருந்து சுமார் 27 இலட்சம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் மேலும் தெரிவிக்கும்போது, வவுனியா உக்குளாங்குளம் பகுதியிலுள்ள நபர் ஒருவர் அதே பகுதியில் வசித்து வரும் வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் ஒருவருடன் நெருங்கிப் பழகி அவர் ஊடாக அவரின் கணவருக்கு வேலை இல்லை எனவே அவருக்கு புனர்வாழ்வு அமைச்சில் வேலை பெற்றுத்தருவதாகவும் பலருக்கு அரச தொழில் வாய்ப்பு வெற்றிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன் தன்னை மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு அமைச்சில் பணியாற்றும் உத்தியோகத்தர் என்று அறிமுகம் செய்து நீண்டகாலமாக பழகி வந்துள்ளதுடன் தாதிய உத்தியோகத்தரின் கணவருக்கு தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள்கள் அரச சலுகை விலையில் பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்து தாதிய உத்தியோகத்தரிடமிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணத்தினைப் பெற்றுள்ளார்.

இதையடுத்து தாதிய உத்தியோகத்தரும் தனக்கு நெருக்கமானவர்களிடம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதனால் பலரிடமிருந்து அரச தொழில் பெற்றுக்கொள்வதற்கும் அரச சலுகையில் மோட்டார் சைக்கில் பெற்றுக்கொள்வதற்கும் பாரிய நிதிகள் பொதுமக்களிடமிருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பணத்தினைப் பெற்றுக்கொள்ளும்போது மாவட்ட செயலகத்தில் வேலையிலிருப்பதாகவும் வெளியே வருகின்றேன் பணத்தினைத் தருமாறு தெரிவித்து மாவட்ட செயலகத்தின் வாசலில் வைத்து பலரிடம் பணத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனிடையே குறித்த தாதிய உத்தியோகத்தரின் பாவனையற்ற வங்கிக்கணக்கின் புத்தம் குறித்த நபரினால் திருடப்பட்டு அந்த வங்கியின் இலக்கத்திற்கு பணம் அனைத்தும் வைப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தாதிய உத்தியோகத்தருக்கு நீண்டகாலமாக தெரியவரவில்லை குறித்த தாதிய உத்தியோகத்தரை தனது சொந்த சகோதரி என்று தெரிவித்து அவரின் வங்கிக்கணக்கிற்கு பண வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த தாதிய உத்தியோகத்தர் தனது பாவனையற்ற தனியார் வங்கிப் புத்தகம் உட்பட பணம் பெற்றுக்கொள்ளும் அட்டை என்பன தவறிவிட்டுள்ளதாக நேற்று வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் செயற்படும் விஷேட குற்றப்பிரிவின் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தனியார் வங்கி கணக்கிற்கு 6 தொடக்கம் 7 இலட்சம் ரூபா வரையில் வைப்பிட்டு பணம் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைவிட தனி நபர்களிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாக 20இலட்சத்திற்கும் அதிகமான நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

சிலருக்கு மோட்டார் சைக்கிளின் மாதிரி சாவியை வழங்கிவிட்டு இது உங்களுக்கான மோட்டார் சைக்கிளின் சாவி வைத்திருக்கவும் மோட்டார் சைக்கிள் வந்ததும் பெற்றுக்கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று மாலை குறித்த பண மோசடியில் ஈடுபட்டுள்ள உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஏற்கனவே குருமன்காடு பகுதியில் பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாக தெரிவித்து பெருந்தொகை பணமோசடி இடம்பெற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பலரிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாகவும் அரச சலுகையில் மோட்டார் சைக்கிள் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்து சுமார் 27 இலட்சம் ரூபாவினை பல வழிகளிலிருந்து பொதுமக்களிடம் வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இன்னும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கலாம் என்று பொலிசார் எதிர்பார்க்கின்றனர். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் மேலும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்ய பெண் ஊழியர்கள்!!

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைவிற்பனை நிலையங்களில் பெண்களின் உடைகளை
விற்பனை செய்யும் பகுதிகளிற்கு பெண் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக வவுனியா நகரசபையின் உப தவிசாளர் சு.குமாரசாமி தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள ஆடைவிற்பனை நிலையங்களில் பெண்கள் தொடர்பான ஆடைகளை விற்பனைசெய்யும் பகுதிக்கு பெண் ஊழியர்களயே நியமிக்கவேண்டும் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்ததுடன் நகரசபையிடமும் சிலர் வேண்டுகோள் முன்வைத்திருந்தனர்.

அதற்கமைவாக கலாசாரத்தை பெணிப்பாதுகாப்பதற்கும், பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தவிர்த்துகொள்வதற்கும் ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்யும் பிரிவிற்கு பெண் ஊழியர்களை நியமிப்பதே சிறந்தது என நாம் தீர்மானித்துள்ளோம்

இச்செயற்பாட்டால் பெண்கள் சந்திக்கும் சில அசௌகரியங்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளமுடியும். அத்துடன் கலாசாரத்தை பாதுகாப்பதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுமே இதன் பிரதான நோக்கம். எனவே மிகவிரைவாக உரிய தரப்புகளுடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடவிருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் வர்த்தகர்களினதும் ஒத்துழைப்புகளும் பெறப்படவுள்ளதுடன் இவ்விடயம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வண்ணம் வவுனியா வர்த்தகசங்கம், வர்த்தகர் நலன்புரிசங்கம் ஆகியவற்றுடன் பேச்சுவார்தைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கால்களை பிடித்து கணவர் கெஞ்சியும் கொன்றுவிட்டோம் : இளம் மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!!

 

பரபரப்பு வாக்குமூலம்

தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் கடந்த 23ம் திகதி இரவு கரூரை அடுத்த மணல்மேடு பகுதியில் தலை கல்லால் நசுக்கப்பட்டு இறந்துகிடந்தார்.

சம்பவம் குறித்து விசாரித்த பொலிசாருக்கு மணிவண்ணனை யாரோ திட்டமிட்டு கல்லால் நசுக்கி கொலை செய்திருக்கிறார்கள்’ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் மணிவண்ணனின் மனைவி காயத்ரிதேவி (21) கணவரின் சடலத்தை பார்த்து கதறி அழுதார்.

இதைப் பார்த்த அங்கிருந்த பலரும் காயத்ரிதேவியின் அழுகையைப் பார்த்து கண் கலங்கினர். காயத்ரிதேவியின் அழுகையைப் பார்த்த பொலிசாருக்கும் அவர்மீது சந்தேகம் வரவில்லை. ஆனால், பல கோணங்களில் விசாரித்த பொலிசார் கடைசியில் காயத்ரிதேவியின் பக்கம் திரும்பினர்.

என் கணவர் மேல நான் உசுரா இருந்தேன். அவர் இல்லாமப் போனதால், நானும் செத்துப் போயிருவேன்’ என்று கூறிவந்துள்ளார். ஆனால், அவர்மீது இருந்த சந்தேகத்தால், தங்கள் பாணி கிடுக்கிப்பிடி விசாரணையை பொலிசார் நடத்தியுள்ளனர்.

இதில் கணவரை கொன்றதை அவர் ஒப்பு கொண்டார். காயத்ரி அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் கமலக்கண்ணன் என்பவரை காதலித்து வந்தேன். எங்கள் வாழ்க்கைக்கு கணவர் இடைஞ்சலாக இருந்ததால் அவரைக் கொலை செய்ய முடிவெடுத்தோம்.

அதன்படி, கமலக்கண்ணனின் நண்பர்கள் உதவியுடன், கணவர் மணிவண்ணனைக் கொன்றது நான்தான். நைசா பேசி இங்க வரவழைச்சோம். என்னை விட்டுரு காயத்ரி. நீ விருப்பப்பட்டபடியே யாரோட வேண்ணாலும் வாழு’ன்னு அவர் கெஞ்சியும் விடவில்லை, கொன்றுவிட்டோம் என்று கூறியுள்ளார்.

இச்சம்பவத்தில் காயத்ரிதேவிக்கு துணையாக இருந்த கள்ளக்காதலனான கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் ரூபன்குமார் உள்ளிட்ட மூவரையும் கைதுசெய்து, சிறையில் அடைத்திருக்கிறது காவல் துறை.

சுரங்க லக்மலின் அசுர வேகத்தில் 178 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி!!

கிறிஸ்ட்சேர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்டில் இலங்கை வீரர் லக்மலின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சேர்ச்சில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜீத் ராவல், டொம் லதம் களமிறங்கினர். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மலின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். பின்னர் வந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சனை 2 ஓட்டங்களில் லக்மல் வெளியேற்றினார்.

அதன் பின்னர் வந்த நிக்கோல்ஸின் ஸ்டம்பை லக்மல் சிதறடித்தார். இதனால் நியூசிலாந்து அணி 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் வாட்லிங் 46 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், டிம் சவுதி மட்டும் அதிரடியாக ஆடி 65 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம், ஓரளவு நல்ல ஸ்கோரை நியூசிலாந்து எட்டியது. லஹிரு குமார 3 விக்கெட்டுகளை வீழ்த்த நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. குணதிலக(8), கருணரத்ன(7), சண்டிமல்(6) ஆகியோர் ஒற்றை இலங்க ஒட்டங்களில் அவுட் ஆகினர்.

பின்னர் வந்த குசல் மெண்டிஸ் 15 ஓட்டங்களில் கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி முதல் நாள் முடிவில் 32 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 88 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அஞ்சலோ மத்யூஸ் 27 ஓட்டங்களுடனும், ரோஷன் சில்வா 15 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி 3 விக்கெட்டுகளும், கிராண்ட்ஹோம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

விளையாடிக்கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்!!

மும்பையின் பண்டுப் பிராந்தியத்தில் டென்னிஸ்-பந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கு பெற்று விளையாடி வந்தன.

கடந்த 23ம் திகதி 2 அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது வைபவ் கேஸ்கர் என்ற 24 வயதான வீரர் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

த்ரிஷாவும், நானும் காதலித்தது உண்மைதான் : மனம் திறந்த நடிகர் ராணா!!

 

த்ரிஷா – ராணா

நடிகை த்ரிஷாவும், நடிகர் ராணாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் என கூறினர். இந்நிலையில் இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹர் நடத்தும் டி.வி நிகழ்ச்சி ஒன்றில், பிரபாஸ், ராணா, ராஜமவுலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராணா, பத்து வருடத்துக்கும் மேலாக அவர் எனக்கு நல்ல தோழியாக இருந்தார். எனது நீண்ட நாள் தோழி அவர். குறைந்த காலம் இருவரும் காதலித்தோம்.

பின்னர் இது சரியாக இருக்காது என்று நினைத்ததால் அதை முடித்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.