கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் பணிகள் தற்போது இடம்பெறுவதாகவும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
பெரும்பாலும் இந்த மாத இறுதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அனுராதபுரம், புளியங்குளம் பகுதியில் 17 வயதுடைய இளைஞன் ஒருவனும் 14 வயதுடைய சிறுமி ஒருவரும் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இன்று (27.12) காலை அனுராதபுரத்தில் இருந்து மதவாச்சி நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்தே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் குறித்த சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காதல் தொடர்பில் குறித்த இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜா-எல தெற்கு நிவந்தம பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காணி தொடர்பான சர்ச்சையில் இந்த கொலை நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரி அவரது வீட்டில் இருந்தபோது சந்தேக நபர் குறித்த வீட்டுக்குச்சென்று கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
சந்தேக நபரைத் தடுக்க முயன்ற பொலிஸ் அதிகாரியின் மனைவியும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரியின் மனைவி தற்போது ராகம அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸ் உத்தியோகத்தர் 49 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
தங்களின் உறவினர்களுடன் 24வது திருமண நாளை கொண்டாடும்போது இந்த தாக்குதல் சம்பவம் இடமபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைச் சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஐக்கிய அரபு அமீரத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் கணவர் அவளது குடும்பத்தாருக்கு Dh200,000 பணத்தை கொடுத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த திவ்யா (25) அவரது கணவர் பிரவீன் (25) மற்றும் குழந்தை தக்ஷ் (2) உடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சார்ஜாவில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள மூவரும் காரில் சென்றனர். விழா முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது காரை ஓட்டிய பிரவீன் தூங்கிய நிலையில் காரானது அங்கிருந்த அறிவிப்பு பலகை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திவ்யா உயிரிழந்த நிலையில் பிரவீனும், குழந்தை தக்ஷும் காயமின்றி உயிர் தப்பினர்.
இதையடுத்து இந்த விபத்தை ஏற்படுத்திய பிரவீன், திவ்யா குடும்பத்துக்கு Dh200,000 பணத்தை கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அறிவிப்பு பலகையை சேதப்படுத்தியதற்கு Dh2500 அபராதமும் செலுத்த உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் பிரவீன் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து பிரவீனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறித்த தொகையை தயார் செய்து கொடுத்தபின்னர் பிரவீன் விடுவிக்கப்பட்டார்.
இதன்பின்னர் துபாய் விமான நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு திவ்யாவின் சடலம் கொண்டுவரப்பட்டது. அப்போது பிரவீனும், குழந்தை தக்ஷும் உடன் வந்தனர். இதனிடையில் சட்ட நடைமுறைகளை நிறைவுசெய்த பின்னர் காப்பீட்டுத் தொகையை கோர தகுதியுடையவராக பிரவீன் இருப்பார் என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள கால்லியர்வில்லே நகரில் கிறிஸ்துமஸ்-க்கு முந்தைய தினம் வீடு ஒன்றில் திடீரெனத் தீப்பற்றியது. அதில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஷர்ரோன், ஜாய் மற்றும் ஆரோன் நாயக் ஆகிய மூன்று இளம் சிறார்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த வீட்டில் புகை ஏற்பட்டால் ஒலிக்கும் அலாரம் செயல்படாமல் போனதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் பெற்றோர், தங்கள் குழந்தைகளை டேனி என்பவரின் வீட்டில் விட்டு விட்டு இந்தியாவுக்கு வந்திருந்தனர்.
இந்த விபத்தில் வீட்டு உரிமையாளர் டேனியும், அவரது மகனும் ஜன்னல் வழியே குதித்து உயிர் தப்பிய நிலையில், அவரது மனைவியும் உயிரிழந்தார். இந்தச் சோக சம்பவம் குறித்து மாணவர்களின் ஃப்ரெஞ்ச் முகாம் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “பாஸ்டர் நாயக் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்காக நாம் வேண்டிக்கொள்வோம்.
ஏனென்றால் அவர்கள் தங்கள் மூன்று குழந்தைகளை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். ஆனால் ஒரு தீவிபத்து அவர்களின் உயிரை பறித்துவிட்டது எனக் கூறப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நான்கு பிள்ளைகளின் தந்தை பாலசுந்தரம் ஜெகதீஸ்வரனின் வாழ்வில் ஏற்பட்டுள்ள அவல நிலை குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.
நிம்மதியாக வாழ்வதற்கு வீடின்றி, பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு வழியின்றி, அன்றாடம் உணவிற்காக கஸ்டப்பட்டு, விறகு வெட்டி அன்றாட வாழ்வினை கழித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் ,கிழவன்குளம் போன்ற பகுதிகளில் வாழும் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றியும் , வருமானங்களின்றியும் காட்டில் விறகு வெட்டியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றன.
நான்கு பெண் குழந்தைகளின் தந்தையான இவர்கள் யுத்தத்தின் போது ஒரு காலை இழந்த நிலையில் தினமும் காட்டிற்குச்சென்று விறகு வெட்டி அதனை வீதியில் வைத்து விற்பனை செய்வதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இவர்களுக்கான அடிப்படைவசதிகள் எதுவும் கிடைக்காத நிலையில் தற்காலிக வீடொன்றிலே வாழ்ந்து வருகின்றனர். ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட இக்குடும்பம் வீடு,மின்சார வசதி, மலசலகூட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலையில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்பத்திற்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டுள்ள பங்கீட்டு அட்டையில் நிரந்தர வீடு, மலசலகூடம் என்பன வழங்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ள போதும், அவை எதுவும், அவர்களிடம் இல்லாத நிலை காணப்படுகின்றது.
புதிய கல்வி ஆண்டில் பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பாடசாலைக்கான உபகரணங்களை வாங்கமுடியாத நிலையில் தாம் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பள்ளிக்கு சென்று திரும்பிய 15 வயது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள நவுமேலி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சஞ்சாலி(15). இவர் கடந்த 18-ஆம் திகதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, மர்மநபர்கள் சிலர் சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, பெட்ரோல் உற்றி எரித்து கொலை செய்துவிட்டனர்.
இதனால் இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், சிறுமியின் கொலைக்கும் 25 வயதான அவரது உறவினர் மகன் யோகேஷுக்கும் தொடர்பிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகித்துள்ளனர்.
இதையடுத்து பொலிசார் அவரை பிடித்து இரண்டு நாட்களுக்கு மேலாக விசாரித்துள்ளனர். ஆனால் அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி சிறுமியின் பெற்றோரு, எந்த ஒரு குற்றமும் கூறாத்தால், பொலிசார் அவரை விடுவித்தனர்.
அதன் பின் வீட்டிற்கு வந்த யோகேஷ் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு பேரின் இறப்புக்கு ஏதோ காரணம் இருக்கிறது என்று பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதில் முதலாக யோகேஷின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர் அப்போது அங்கு சில கடிதங்கள் மற்று அவரது செல்போன் சாட், இரண்டு நபரின் புகைப்படங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
செல்போனில் இருந்த இருவரையும் கைதுசெய்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், யோகேஷ், சஞ்சாலியின் உறவினர் மகன். இவர், சிறுமியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், ஆனால் சிறுமி இதை ஏற்றுகொள்ளவில்லை.
பல முறை தன் காதலை சொல்லியும் சிறுமி கேட்காததால், ஆத்திரத்தில் இருந்த யோகேஷ் சிறுமியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அதன் படி சிறுமியைக் கடத்தி கொலைசெய்துள்ளார். கொலைக்கு உதவியாக இருக்க தன் நண்பர்களுக்கு தலா 15,000 தருவதாக கூறியுள்ளார். இந்த மூன்று பேரும் இணைந்து திட்டமிட்டு, சஞ்சாலியைக் கொலைசெய்துள்ளது தெரியவந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டும் இதுவரை யோகேஷ் மீது சிறுமி வீட்டில் இருந்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது.
இது குறித்து சிறுமியின் தாய் கூறுகையில், எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள். நாங்கள் அனைவரையும் நன்றாகப் படிக்கவைக்கிறோம். இது, இங்கு உள்ள பலருக்கும் பொறாமையாக உள்ளது. அந்தக் கோபத்தில் தான் யாரோ இப்படிச் செய்துள்ளனர். அதற்காகத்தான், என் மகளின் புத்தகப் பைகளையும் சேர்த்து எரித்துள்ளதாக கூறியுள்ளார்.
சிறுமியின் சகோதரியோ, யோகேஷ் கொலை செய்தான் என்பதை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவன் குடும்பம் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கியவர்கள். அதனால், அவன்மீது தவறு இருந்தாலும் எங்கள் குடும்பத்தினர் யோகேஷை காப்பாற்றவே பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாள்களாக, அரசியல் தலைவர்கள் அந்தச் சிறுமியின் வீட்டுக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, சிறுமியின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
முன்னர் இது சாதி ரீதியிலான கொலை எனப் பேசப்பட்டது. இதனால், கொலையைக் கண்டித்து அந்தக் கிராம மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். சிறுமியின் கொலைக்கு நியாயம் வேண்டும் என்றும், அவரது வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும் கோஷமிட்டனர். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.
பிறகு நடந்த விசாரணையில்தான், இது சாதி ரீதியிலான கொலை இல்லை எனக் காவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருத்தாசலம் மாவட்டத்தில் திருமணமான 14 நாட்களில் காதல் கணவர் பிரிந்துசென்றுவிட்டதால் அவருடன் சேர்த்து வைக்ககோரி காதல் மனைவி போராட்டம் நடத்தியுள்ளார். சிலம்பொலி மற்றும் செல்லதுரை ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 12ம் தேதி, முதனை செம்பையனார் கோவிலில் இருவரின் வீட்டிற்கும் தெரியாமல், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. சிலம்பொலியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்த செல்லதுரை, அதன்பின் பேசுவதை தவிர்த்துள்ளார்.
சிலம்பொலி, தனது உறவினர்களுடன் சின்னகண்டியங்குப்பத்தில் உள்ள செல்லதுரை வீட்டிற்கு நேற்று காலை நியாயம் கேட்க வந்தார். அப்போது, அவரது வீடு பூட்டியிருந்ததால், காதல் கணவருடன் சேர்த்து வைக்கும் வரை, இங்கிருந்து செல்ல மாட்டேன் எனக் கூறி, தனது திருமண புகைப்படத்துடன் வீட்டின் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
சிலம்பொலி கூறுகையில், ஐந்து ஆண்டுகளாக காதலித்து, 12ம் தேதி முதனை செம்பையனார் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். அவரது அம்மா, விஷம் குடித்துவிட்டதாக தகவல் தெரிய வந்ததால், திருமணமான 2 மணி நேரத்திலேயே தாலியை கழற்றிய கணவர், இரண்டு நாட்களில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிச் சென்றார்.
ஆனால், அதன்பின் பேசுவதை தவிர்த்ததால், மகளிர் பொலிசில் புகார் கொடுத்தேன். ஒரு வாரத்திற்கு மேலாகியும் நடவடிக்கை இல்லாததால், கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, வந்து விட்டேன் என கூறியுள்ளார். மகளிர் பொலிசார், சிலம்பொலியை சமாதானப்படுத்தி காதல் கணவருடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
தமிழகத்தில் திருமண ஆசைகாட்டி ஏமாற்றப்பட்ட 17 வயது மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவருக்கும் மண் அள்ளும் இயந்திர டிரைவராக வேலை செய்து வரும் சக்தி (26) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் 3 ஆண்டுகளாக பழகி வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, மாணவியை சக்தி பலாத்காரம் செய்துள்ளார்.
இதன் காரணமாக மாணவி கர்ப்பமானார். சில காலம் கர்ப்பத்தை மாணவி மறைத்த நிலையில் பின்னர் அதை பெற்றோர் கண்டுப்பிடித்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவியை கல்லுாரிக்கு செல்லவிடாமல் பெற்றோர் நிறுத்தி விட்டனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டதும், மாணவியை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். இங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
தன்னை திருமண ஆசைகாட்டி கர்ப்பமாக்கிய சக்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி மாணவி மகளிர் பொலிசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் சக்தியை கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 ரூபாய் பணத்திற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் – சுபிதா தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
3-வது முறையாக சுபிதா கர்ப்பமடைந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, தான் வைத்திருந்த 200 ரூபாயை காணவில்லை என கூறிய மணிகண்டன், மனைவி சுபிதாவை கடுமையாக அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த சுபிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணிகண்டன் ஏற்கனவே தனது தாய் பேபியிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது 5 மாத கர்ப்பிணி மனைவியையும் அடித்தே கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் மணிகண்டனை கைது செய்தனர்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 65 வயது பெண் ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளதால் இந்தியாவின் வயதான தாய் என அழைக்கப்படுகிறார். Hakim Din (80) என்பவரின் மனைவிதான் குறித்த பெண். இவரது பெயர் வெளியிடப்படவில்லை.
இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 65 வயதில் இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
இது மருத்துவ உலகில் ஆச்சரியான ஒன்றுதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்தியாவில் அதிகமான பெண்களுக்கு 47 வயதிலேயே மாதவிடாய் நின்றுவிடுகிறது.
மேலும், அதற்கு மேல் செல்லும் பெண்கள், குழந்தை இல்லாவிட்டாவில் IvF முறையில் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். அப்படியிருக்கையில் சுகப்பிரசவம் மூலம் இவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். தந்தை கூறியதாவது, இது எங்களுக்கு அல்லா கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு என கூறியுள்ளனர்.
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் இலங்கை கறிவேப்பிலைக்கு உள்ளதாக தெரித்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமே இலங்கை கறிவேப்பிலைக்கு இவ்வாறான தடையினை விதித்துள்ளது.
இதேவேளை இத்தாலி, சைப்ரஸ், கிரேக்கம் மற்றும் மோல்டா ஆகிய நாடுகளுக்குள் இலங்கை கறிவேப்பிலையை கொண்டுவர வேண்டாமென பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை கடனியா, சிசிலி மற்றும் இத்தாலியிலுள்ள இலங்கை கொன்சியூலேட் காரியாலயங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கையில், அதிகளவான கறிவேப்பிலைகளை கொண்டு வருகின்றமையானது, ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் உணவு பொருட்களின் ஏற்றுமதியில் எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்தலாமென ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையின் கொன்சியூலேட் காரியாலயங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, இதன் காரணமாக இலங்கையிலுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பிரத்தியேக பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம், ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்த இலங்கையர்கள் பலர் பெருமளவான கறிவேப்பிலைகளை கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச ஊடகமொன்று குறித்த தீர்மானம் தொடர்பான செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.
முச்சக்கரவண்டி கட்டணங்களுடன், பாடசாலைக்கான வான் கட்டணங்களும் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் முச்சக்கரவண்டிகளில் முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக மாற்றப்படும் என்பதுடன், பாடசாலை வான்களுக்கான கட்டணம் மூன்று சதவீதத்தால் குறைக்கப்படும் என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி கட்டணங்களுடன், பாடசாலைக்கான வான் கட்டணங்களும் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் முச்சக்கரவண்டிகளில் முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக மாற்றப்படும் என்பதுடன், பாடசாலை வான்களுக்கான கட்டணம் மூன்று சதவீதத்தால் குறைக்கப்படும் என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை 6 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் சென்ற பாதசாரதிகள் வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் சுமார் 65 – 70 வயது மதிக்கதக்கவர் எனவும், இதுவரையில் அவர் தொடர்பான விபரங்கள் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது.
வவுனியாவில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணிவரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது.
எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காணமுடியாத அளவிற்கு காலை கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது.
இதனால் வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி செல்வதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏ9 வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளும் பனிமூட்டத்தால் அவதிக்குள்ளாகினர்.
அதிகாலையில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக குளிரான காலநிலை நிலவுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளதோடு இயல்புநிலை பாதிப்படைந்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் உள்ள ஒருவரை வைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்துக்கு செல்வது என்பது நீதி விரோதமான செயல் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
வெறுமனே 8 மாதங்களுக்காக 45 பேர் கொண்ட அமைச்சரவையை ஏற்படுத்துவது நியாயமற்ற செயல் என்றும் யாப்பா செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.