ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெற்றது. கலந்துரையாடல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ,
நாங்கள் தாமரை மொட்டுடன் இணைந்து புதிய முன்னணி ஒன்றை உருவாக்குவோம். மஹிந்த ராஜபக்சவை அதன் தலைவராக நியமித்து புதிய பயணம் ஒன்றை ஆரம்பிப்போம் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் ஸ்திரமற்ற ஏற்பட்டுள்ள நிலையில், மஹிந்தவுடன் சேர்ந்த செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஈடுபட்டிருந்தது.
பரபரப்பான நிலையில் மஹிந்தவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கட்சி தீர்மானித்துள்ளது. தற்போதைய அரசியல் மாற்றத்தில் புதிய கூட்டணி. ரணில் தரப்புக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வன்னிமாவட்டம் மற்றும்கிளிநொச்சியைச் சேர்ந்த சமுர்தி அலுவலர்களிற்கான செயலமர்வும், பயிற்சியும் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
சமுர்த்தி திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் திருமதி.பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராஜா, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி ச.சந்திரகுமார் எனபலரும் கலந்துகொண்டனர்.
சமுர்த்தி திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் மூலம் மக்களிற்கு பயன்படக்கூடிய செயற்திட்டங்களை மேலும் விஸ்தரித்து அவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு குறித்த செயலமர்வு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் வளவாளராக சமுர்த்தி தலைமைப்பீடத்தில் இருந்து வருகைதந்திருந்த அரியநாதன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து இங்குள்ள சுமுகமான நிலையை குழப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகள் தொடர்பில் ஜேவிபியினருக்கு எப்படி ஒரு மன்னிப்பை கொடுத்தார்களோ, அதேபோன்று இந்த அரசியல் கைதிகளுக்கும் ஓரு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அதனை அரசியல் ரீதியில் தான் அணுக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது. இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தீர்வை எட்ட முடியாத விடயம்.
காணிவிடுப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரேரணைகள் பெருந்தொகையில் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான காணி சொந்தக்காரர்கள் ஒன்றாக்கப்பட்டு போராப்பட்டிருக்கிறது. அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்தது.
தமிழ், முஸ்லிம் மக்கள் கொடுத்த ஆதரவினால்தான் மைத்திரிபால ஸ்ரீசேன ஜனாதிபதியாக இருக்கின்றார். அதனை நாம் அவருக்கு சுட்டி காட்டியுள்ளோம். அவர் எப்படி வந்தவர் என்பதை சுட்டி காட்டியுள்ளோம். எனவே ஜனாதிபதி இருக்கும் இந்த காலகட்டத்தில் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தெளிவாக சொல்லியிருக்கிறோம்.
அவருடைய இன்றைய செயற்பாடுகள் மீண்டும் ஓரு தடவை ஜனாதிபதியாக வருவதற்கான நகர்வாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக தான் இந்த அரசியல் நாடகங்கள் அரங்கேறியிருக்கின்றது. ஆகவே அப்படி ஓரு எண்ணத்தில் இருப்பவர் அரசியல் கைதிகளை விடுப்பதால் தனது வாக்கு வங்கி கூடும் என சிந்தித்தால் அதனை செய்வார் எனக் கருதுகின்றேன்.
அத்துடன்,1948 இன் பின் ஒரு பிரிவு தமிழ் மக்களுக்கான தீர்வை கொண்டு வந்தால் இன்னொரு பிரிவு அதனை தட்டிவிட்டதாகத் தான் வரலாறுகள் சொல்லியிருக்கின்றது. மாறி மாறி அது நடந்துள்ளன.
பேரினவாத கட்சிகள் இரண்டு பிரிவினரே. அவர்கள் எந்தக் காலத்திலும் தமிழ் மக்களது தீர்வை ஏற்றுக் கொண்டதாகவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் சரி இரண்டும் ஓன்றும் தான்.
எமது போராட்டத்தில் சிலரை பிரித்தெடுத்து குழப்பி விட்டதாக சொல்கின்றோம். அது நாங்களே எங்களை குழப்பி நாங்களே பிரிந்து நின்று கொண்டு இன்னொரு கட்சிதான் பிரித்தார் என்று சொல்வதை விட அது நாங்கள் விட்டதாக தவறாகவே பார்க்க வேண்டும்.
இன்றும் அதேபோல் தமிழர்கள் ஒற்றுமையாக ஒரே கொள்கைகளுடன் நாங்கள் இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தமிழினம் இருக்கும் வரை அவர்களிடம் இருந்து அந்த போராட்ட குணம் இல்லாமல் போகப்போவதில்லை. இன்று அவர்களிடம் இருந்து போராட்ட குணத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் வெளிநாடுகள், உள்நாடுகள், புலனாய்வாளர்கள், இராணுவம் என பல தரப்பாலும் முன்னெடுக்கப்படுகினது. மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இங்குள்ள புலனாய்வாளர்களிடம் இருந்து அவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களது செயற்பாடுகளை மக்கள் மூலம் இங்கு முன்னெடுக்கிறார்கள். தன்னிச்சையாக முன்னெடுக்கின்றார்கள். அரசியல்வாதிகள் வேண்டாம் என முன்னெடுக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்ளெடுக்க வேண்டாம் என்று சொல்லி முன்னெடுக்கிறார்கள். அவை ஆராயப்பட வேண்டும். தமிழ் மக்கள் மனதில் வைத்து அப்படியானவர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். அவர்கள் உள்ளே இருக்கின்ற சுமுகமான நிலையைக் கூட உருக்குலைக்கின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது எனத்தெரிவித்தார்.
யுத்தம் வேண்டாம், தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம் எனப் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் வவுனியாவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
வவுனியா நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் வன்னி மக்கள் என உரிமை கோரப்பட்ட சுவரொட்டிகள் பரவலாக ஓட்டப்பட்டுள்ளன.
அச் சுவரொட்டிகளில் “தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம். 30 வருட யுத்தத்தின் துயரங்கள் போதும், மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையை வன்மையாக கண்டிக்கிறோம், மீண்டும் வன்முறை வேண்டாம். ஒற்றுமையுடன் வாழ விரும்புகின்றோம், தேசிய பாதுகாப்பை காப்போம், சுதந்திரமான நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்” என எழுதப்பட்டிருந்தது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு சட்டவிரோதமாக விடை எழுதிய மாணவன் ஒருவரையும் அதற்கு உதவிய ஆசிரியை ஒருவரையும் பாலங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பாலங்கொட பாடசாலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய அதே பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பரீட்சார்த்தி மற்றும் ஆசிரியையாகும்.
சந்தேக நபரான பரீட்சார்த்தி அவரது கால்களுக்கிடையில் கைத்தொலைபேசியை மறைத்து வைத்து பரீட்சைக்கு விடை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பரீட்சார்த்தி பரீட்சை நிலையத்திற்கு 20 நிமிடங்கள் தாமதமாக வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தாமதமாக வந்தபோதுதான் தொலைபேசியை மறைத்து எடுத்துச்சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஆசிரியை எஸ்.எம்.எஸ் மூலம் பொருத்தமான விடைகளை குறித்த பரீட்சார்த்திக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இடம்பெற்ற ஆங்கிலப் பரீட்சை வினாத்தாளுக்கே இவ்வாறு சட்டவிரோதமாக விடை அளித்துள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
பரீட்சை நிலைய உத்தியோகத்தர்களால் வலய கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமி தனது தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
Beijing-ஐ சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக்கு கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது தந்தை யுயனை சிறுமி யக்சின் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து யயன் கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும், பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள். இதனால் அவளை திருமணம் செய்தேன் என கூறினேன். இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ரஷ்யாவில் பிரிந்து சென்ற கணவனை பழிவாங்குவதற்காக தாய் ஒருவர் குழந்தையின் ஆடைகளை களைந்து தண்டனை கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஷ்யாவை சேர்ந்த எலிசாவே க்ளிமோவா என்று 20 வயது தாய்க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவருக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு அவருடைய கணவன் அலெக்ஸாண்டர் பாட்ரியசோவ் (28) விவாகரத்து கேட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் அந்த பிஞ்சுக்குழந்தை, தாயின் ஆடையில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய், குழந்தையின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக பால்கனியில் வைத்துள்ளார்.
அதிகமான குளிரின் காரணமாக நடுக்கம் தாங்காமல் அந்த குழந்தை அழுதுள்ளது. அதனை புகைப்படம் எடுத்த எலிசாவே, முன்னாள் கணவருக்கு அனுப்பி, இறுதியாக உன்னுடைய குழந்தையை ஒருமுறை பார்த்துக்கொள் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அலெக்ஸ்சாண்டர், சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு, என்னுடைய குழந்தையை முன்னாள் மனைவி கொலை செய்ய போகிறாள். யாரவது காப்பாற்றுங்கள் என பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து, பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
அதில், அலெக்ஸ்சாண்டர் பிரிந்து செல்லும்போது செலவிற்கு கூட பணம் கொடுக்காததால், எலிசாவே மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற போராடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், புகைப்படங்கள் அனைத்தும் அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்ட பொலிஸார், குழந்தையின் உடல்நிலை தற்போது நலமாக இருந்தாலும், அவருடைய அம்மாவின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
16 வயது இளைஞன் ஒருவனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பிரித்தானிய இளம்பெண்ணின் உள்ளாடையில் அவளது வளர்ப்புத் தந்தையின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவளது பெற்றோரே அவளைக் கொலை செய்து விட்டு நாடகமாடுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் இருவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.
பிரித்தானியாவைச் சேர்ந்த Viktorija Sokolova (14), Wolverhamptonஇலுள்ள பூங்கா ஒன்றில் அரை நிர்வாணமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். அவளைக் கொலை செய்ததாகவும் வன்புணர்வு செய்ததாகவும் 16 வயது இளைஞன் ஒருவனை பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் Viktorijaவின் உள்ளாடையில் அவளது வளர்ப்புத் தந்தையான Saidas Valantinasஇன் விந்தணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. பூங்காவில் Viktorija இறந்து கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் இருந்த ஒரு குப்பைத்தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட அவளது உள் கால்சட்டையும் வெண்ணிற ஜீன்சும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது, அவற்றிலும் Saidasஇன் விந்து திரவம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து Saidasம் அவரது மனைவியும், Viktorijaவைப் பெற்ற தாயுமான Karolina Valantinieneம் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள். வழக்கறிஞர் Saidasஇடம், நீங்கள் Viktorijaவை பூங்காவில் கண்டுபிடித்ததால் பாலியல் துஷ்பிரயோகம் செய்தீர்களா? என்று கேட்க, இது அர்த்தமற்ற கேள்வி, இந்த குற்றச்சாட்டை மறுக்கிறேன் என்றார் அவர்.
வழக்கறிஞர் தொடர்ந்து, Viktorijaவை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததைத் தொடர்ந்து அவளை மூர்க்கமாக தாக்கிக் கொலை செய்தீர்கள் இல்லையா? என்று கேட்க, அதையும் மறுத்தார் Saidas.
பின்னர் நீதிபதி Karolinaவிடம் உங்கள் மகள் கொலையிலிருந்து உங்கள் கணவரை காப்பாற்ற முயல்கிறீர்களா? என்று கேட்க, அதை அவர் மறுத்ததும், நீங்கள் உங்கள் மகளைக் கொலை செய்தீர்களா? என்று கேட்க அதையும் மறுத்தார் அவர்.
தற்போதைக்கு Karolina மீதும் Saidas மீதும் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், தடயவியல் சோதனை முடிவுகளையடுத்து வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்களால், அவர்கள் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறார்கள் என்றே கூறலாம்.
மனிதர்களுடன் உறவு கொள்வது போரடிக்கிறது, அதனால்தான் சிறு தேவதைகளை விரும்புகிறேன் என்கிறார் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண். சிறு தேவதைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு இளம்பெண், தான் ஆண் தேவதைகளுடன் உறவு கொள்வதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளார். ஐஸ்லாந்தைச் சேர்ந்த Hallgerdur Hallgrimsdottir என்னும் இளம்பெண், சிறு தேவதைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர்.
அவை மென்மையான மற்றும் சுறுசுறுப்பாக இயங்கும் உடல் கொண்டவை என்று கூறும் Hallgerdur, உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளும் குணமுடையவை சிறு தேவதைகள் என்கிறார். Alfar என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறு தேவதைகள் ஐஸ்லாந்து இலக்கியத்தில் கி.பி 1000 வாக்கில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பல ஐஸ்லாந்துக்காரர்கள் இன்னும் சிறு தேவதைகள் இருப்பதாக நம்புகிறார்கள். 2013ஆம் ஆண்டு, ஐஸ்லாந்தின் தலைநகரான Reykjavík அருகிலிருந்து, சிறு தேவதைகள் வாழும் இடத்திற்கு பாதை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் நடைபெற்றதாக பிரபல பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது.
அந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த Ragnhildur Jónsdóttir என்பவர், அந்த பாதை சிறு தேவதைகளின் குடியிருப்பை தொந்தரவு செய்யும் என்று கூறியுள்ளார். இதற்கிடையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியான ஒரு நிகழ்ச்சியில், 54 சதவிகிதம் ஐஸ்லாந்து நாட்டினர் சிறு தேவதைகள் இருப்பதை நம்புவதாகவும், சிலர் அவை மனிதர்கள் போலிருப்பதாகவும், வேறு சிலரோ, அவை 36 இஞ்ச் உயரம் இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஒரு மணப்பெண் சிறு தேவதைகள் மீதுள்ள அதீத விருப்பத்தால், அவற்றை போலவே தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக 1000 பவுண்டுகள் செலவளித்து, தன் காதுகளை சிறு தேவதைகளின் காதுகள் போல அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் 16 வயது இளைஞர் சார்ஜ் போட்டுக் கொண்டே ஹெட்போனில் பேசியதால், செல் போன் வெடித்து அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.
மலேசியாவின் Rembau பகுதியைச் சேர்ந்தவர் Mohammed Zaharin. 16 வயது சிறுவனான இவர் சம்பவ தினத்தன்று தன்னுடைய மொபைல் போனை சார்ஜ் போட்ட நிலையில், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பயன்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக போன் வெடித்ததால், அந்த நபர் அந்த இடத்திலே இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
மகன் அறையில் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறான் என்று நினைத்த அவரின் தாய், அறை உள்ளே வந்து பார்த்த போது, மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் Mohammed Zaharin-ஐ பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் சார்ஜ் போட்டுக் கொண்ட ஹெட்போனை பயன்படுத்த வேண்டாம் என்று தொடர்ந்து தகவல்கள் கூறப்பட்டாலும், அதை ஊதாசீனப்படுத்துவதால், இது போன்ற நிலை ஏற்படுகிறது என்று கூறி அந்த இளைஞனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மகனின் கண்முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில் ஷிண்டே (34) என்பவர் வாகன ஓட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தன்னுடைய மனைவி சீமா (30) மற்றும் 11 வயது மகனுடன் மலைப்பகுதிகளை சுற்றிபார்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார்.
மகன் தூங்கிய சிறிது நேரத்திலேயே கணவன் – மனைவிக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. சத்தம் கேட்டு மகனும் விழித்துள்ளான். அப்போது கையில் ஒரு கத்தியை கொண்டு சீமாவின் வயிற்றுப்பகுதியில் ஷிண்டே சரமாரியாக குத்தியுள்ளார்.
வேண்டாம் என சிறுவன் கத்தியும், அடுத்த நிமிடமே கழுத்தை அறுத்துக்கொண்டு ஷிண்டேவும் தற்கொலை செய்துகொண்டு தரையில் விழுந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியில், சிறுவன் அங்கிருந்து அலறியபடியே ஹோட்டலின் வரவேற்பு பகுதிக்கு சென்று மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளான்.
பின்னர் மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் – கலைமணி (19) தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் கலைமணியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் ஈஸ்வரன் கடந்த மாதம் 8-ஆம் திகதி உயிரிழந்தார். அவர் சடலத்தை பார்த்து கலைமணி இப்படி குடித்து குடித்தே இறந்து விட்டாயே என கதறி அழுதார்.
பிறகு திடீரென ஒருநாள், தன் குழந்தையை எடுத்து கொண்டு போய் மாமனாரிடம் ஒப்படைத்தார். அதோடு வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், 3 சவரன் நகை எல்லாத்தையும் எடுத்துகொண்டு வெளியே சென்றுவிட்டார்.
திடீரென மருமகள் மாயமானதால் மாமனாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் ஒருநாள் அழகர்சாமி என்ற இளைஞருடன் கலைமணி ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருப்பதை நேரடியாக பார்த்த மாமனார் அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் கொடுத்தார்.
தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக அவர் கூறியதையடுத்து தாசில்தார் முன்னிலையில் ஈஸ்வரன் உடல் தோண்டப்பட்டு பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது. அப்போது அவர் உடலில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கை வந்தது.
இதையடுத்து பொலிசார் கலைமணியிடம் விசாரித்ததில் அனைத்து உண்மைகளையும் அவர் கக்கினார். எனக்கும் அழகர்சாமிக்கு கள்ள உறவு இருந்தது. இதை என் கணவர் ஈஸ்வரன் கண்டுப்பிடித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து ஈஸ்வரனுக்கு ஆசையாக சாப்பாடு தருவது போல அதில் விஷத்தை கலந்து கொடுத்தேன். அதை சாப்பிட்ட அவர் இறந்துவிட்டார் என்றார். இதையடுத்து கலைமணி, அழகர்சாமி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காதலி பேச மறுத்ததால் மனவேதனை அடைந்த காதலன் வட்சப்பில் தான் தற்கொலை செய்யப்போவதாக பதிவிட்டு உயிரை மாய்த்த சோக சம்பவம் நடந்துள்ளது.
புகழேந்தி ராஜா என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் எம்.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த உறவினரின் மகளை காதலித்து வந்தார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பெண் கடந்த சில நாட்களாக அவரிடம் பேசவில்லை. காதலி பேச மறுத்ததால் புகழேந்திராஜா மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் தன்னுடைய அண்ணன் முனியசாமியிடம் செல்போனில் பேசுகையில், உலகில் வாழ பிடிக்கவில்லை, எனவே தற்கொலை செய்து கொள்வதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். இதுகுறித்து முனியசாமி, பெருநாழி பொலிஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இந்த நிலையில் விளாத்திகுளம் அருகே கே.தங்கம்மாள்புரம் காட்டு பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் புகழேந்திராஜா தூக்கில் பிணமாக தொங்குவதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரது உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது செல்போனை பொலிசார் பார்த்தனர். அதில் புகழேந்திராஜா தற்கொலை செய்யும் முன்பாக அவர் கழுத்தில் தூக்கு மாட்டியவாறு புகைப்படம் எடுத்து காதலியின் தோழிக்கு அனுப்பியுள்ளார்.
அதை தோழி புகழேந்திராஜா விளையாட்டாக இதுபோன்று அனுப்பியுள்ளதாக நினைத்துள்ளார். ஆனால் அதுவிபரீதமாக முடிந்துவிட்டது. இந்த விவரம் அறிந்த புகழேந்திராஜாவின் பெற்றோர் சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதனர்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவர் மீது மோசடி புகார்கள் உள்ளன. இந்நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் வீடு திரும்பவில்லையாம். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மோசடி புகாரில் சிக்கியுள்ள அவரை யாரேனும் கடத்தி சென்றுவிட்டனரா இல்லை அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகை சேதுலட்சுமி தனது மகனது உயிரை காப்பாற்ற உதவுங்கள் என சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஏற்கனவே இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் சேதுலட்சுமிக்கு, சிலர் உதவியதன் பேரில் மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் , இவரது மகன் கிஷோருக்கு இரண்டு சிறுநீரங்களும் பாதிக்கப்படைந்துவிட்டன.
கிஷோர் உயிர்வாழ வேண்டுமென்றால், உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 35 லட்சம் பணம் வேண்டுமென்று கூறியுள்ளனர். ஆனால், தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால், வீடியோ ஒன்றில் அனைவரிடமும் தனது மகனை காப்பாற்ற உதவி செய்யுங்கள் என கண்ணீர் மல்க வேண்டினார்.
இதனைத்தொடர்ந்து, இவருக்கு உதவிகள் வந்தன, ஆனால், சிறுநீரகம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகை பொன்னம்மா பாபு, தன்னிடம் கொடுப்பதற்கு பணம் இல்லை, ஆனால் சிறுநீரகத்தை தானம் செய்கிறேன் என முன்வந்துள்ளார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த சேதுலட்சுமி, பொன்னம்மா பாபுவின் உதவியால் எனது மகன் வாழ்க்கை பெறப்போகிறான், இதனால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த பெண் பற்றி பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை கீழ்ப்பாக்கம் லாக்நகரைச் சேர்ந்தவர் சுவேதா(23), இவர் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்ததால், இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின் பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில், இருவரும் எங்கிருக்கின்றனர் என்பதை கண்டுபிடித்து, சுவேதாவை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் ஒருவர் கூறுகையில், சுவாதிக்கு ஏற்கானவே இரண்டு திருமணங்கள் ஆகியுள்ளன.
அதில் முதல் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், முருகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.vமுருகன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சுவேதா சென்னை குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவேதாவின் உறவினர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரை பார்ப்பதற்கு சுவதே அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார். அப்போது சுவேதாவின் உறவினரின் பெட்டிற்கு அருகில் பிரசாத் என்பவரின் உறவினர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அடுத்தடுத்த பெட் என்பதால் சுவேதாவுடன் பிரசாத்தின் 17 வயது மகன் பேசியுள்ளார். அதன் பின் இருவரும் தங்களுடைய போன் எண்களை மாற்றிக் கொண்டு பேசி வந்துள்ளனர். மருத்துவமனையிலிருந்து சென்ற பிறகும் இவர்களின் நட்பு தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் தான் திருமணமானதையே மறந்த சுவேதா அவரிடம் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் கடந்த 27-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற பிரசாத்தின் மகன் மாயமாகியுள்ளார். அப்போது அவர் குறித்து தேடிய போது தான் சுவேதா பிரசாத்தின் மகளை காதலிப்பது தெரியவந்தது. அவருக்கு 17 வயது என்பதால் அவர் மீது நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பிரசாத்தின் மனைவி, சுவேதா மீது புகார் கொடுத்தார்.
அதன்பேரில் நாங்கள் சுவேதாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளார். மேலும் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சுவேதாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முதல் கணவனிடம் ஒரு குழந்தையும், சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது கணவன் முருகனிடம் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்துள்ளார்.
அப்போது அவர் உங்களுடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறிய பின் தான், பிரசாத்திடம் மாயமாகியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுவேதாவிடம் பொலிசார் பேசிய போது, அவர் பிரசாத்தின் மகனுடன் தன்னை வாழ அனுமதியுங்கள் என்று அடம்பிடித்துள்ளார்.
பெற்ற குழந்தைகள் மீதுகூட அவருக்கு பாசம் இல்லை. மூன்று குழந்தைகளை பெற்ற அவர், 17 வயது சிறுவனுடன் வாழ விரும்புகிறார், இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.