போர்க்களமாக மாறிய நாடாளுமன்றம் : சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் சென்று சண்டையிடும் உறுப்பினர்கள்!!

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த அணியின் உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்று கூறி இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்புக்கள் இடையிடையே தடைப்படுகின்றன.

இதில் மஹிந்தவை சுற்றியும் உறுப்பினர்கள் திரண்டுள்ளனர். அனைவருமே எழுந்து நின்று போராட்டம் நடத்துவதால் நாடாளுமன்றம் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது.

மஹிந்த அணி உறுப்பினர்களுக்கும், ரணில் கட்சியினருக்கும் பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் சபாநாயகரின் இடத்தை முற்றுகையிட்டு குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

மீண்டும் பரபரப்பான நாடாளுமன்றம் : பறிபோனது மஹிந்தவின் பிரதமர் ஆசனம்?

பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று இரண்டாவது நாளாக நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்படாதென அந்த கட்சி அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பாரிய குழப்பநிலை ஒன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்க தரப்பு ஆசனங்களை சபாநாயகர் ஒழுங்கு செய்து தருவார் என்று நம்புகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த உள்ளிட்ட நாம் அனைவரும் எதிரிகளின் சதி வலையில் சிக்கினோம் : குமார வெல்கம!!

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தாம் அனைவரும் எதிரிகளின் சதி வலையில் சிக்கி தவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாம் வேண்டவே வேண்டாம் என கூறிய போது சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செய்த செயலினால் இறுதியில் சில ஆண்டுகளாக கடின உழைப்பில் உருவாக்கிய தாமரை மொட்டு சின்னமும் அழிந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முடிந்தது. அரசாங்கமும் இல்லை, நாமும் முடிந்தோம். நாம் அனைவரும் எதிரியின் சதி வலையில் சிக்கி விட்டோம் என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சில தலைவர்கள் பொறுப்பு சொல்ல வேண்டுமென கடும் தொனியில் அனைவரின் மத்தியிலும் அவர்களை வெல்கம திட்டித்தீர்த்துள்ளார்.

யாழ். குடாநாட்டினை இன்று தாக்கவுள்ள கஜா சூறாவளி!!

மத்திய வங்காள விரிகுடாவில் காணப்படும் கஜா என்ற சூறாவளி மேலும் வலுவடைந்து இன்று இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே சுமார் 590 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்வதுடன் பலமான சூறாவளியாக விருத்தியடையும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இத்தொகுதி நவம்பர் 15ஆம் திகதி மதியத்திற்கு முன்னதாக தென் தமிழ்நாடு கரையைக் கடப்பதுடன் இலங்கையின் வடக்கு கரைக்கு நெருக்கமாகவும் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நிலப்பகுதிகளுக்கு இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் நவம்பர் 14ஆம் திகதி மாலையிலிருந்து 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாளை மாலையிலிருந்து யாழ்.குடாநாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மன்னார், புத்தளம், திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கடற்பரப்புகளுக்கு
முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் நவம்பர் 14ஆம் திகதி மதியத்திலிருந்து நவம்பர் 16ஆம் திகதி வரை காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 110 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

எதிர்பார்க்கப்படும் சேதங்கள்

கிடுகால் வேயப்பட்ட கொட்டில்கள்ஃவீடுகள், கூரைகள் காற்றில் பறக்கலாம், மேலும் முறையாக பொருத்தப்படாத தகடுகள் காற்றில் பறக்கலாம்.
மின்சார மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்கள்
மரக்கிளைகள் முறிந்து வீழ்தல் மற்றும் மரங்கள் வேருடன் சாய்தல்
நெல் வயல்கள், வாழைத்தோட்டம், மற்றும் பப்பாளி மரங்களுக்கும் சேதங்கள்
கரையோரத்தை அண்டிய தாழ்வான பிரதேசங்களில் கடல் நீர் உட்புகுதல்

எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

மீனவர்கள் பொத்துவிலிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடலில் தங்கியிருக்கும் மீனவர்கள் பாதுகாப்பான கடற்பரப்புகளுக்கு நகருமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றது.
வட கரையோரத்தில் குடிசைகளில் வாழ்வோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றது. ஏனையோர் வீடுகளிலேயே தங்கியிருக்கவும்.
விழக்கூடிய மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.
இடி முழக்கத்தின் போது கம்பித்தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று மஹிந்தவுக்கு காத்திருக்கும் பூகம்பம்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பிரதமர் செயலகத்தின் நேற்று மாலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை செல்லுபடியற்றது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரவித்துள்ளார்.

இந்த பிரேணை நிறைவேற்றும் போது செங்கோல் உரிய இடத்தில் காணப்படவில்லை எனவே அது செல்லுப்படியற்றதென அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ச பிரதமர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்க முடியாதென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பரபரப்பான நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூக்கை அழகுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்ய விரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

திருமணத்திற்குமுன் தனது மூக்கை அழகுபடுத்த வேண்டும் என விரும்பிய ஒரு அழகிய இளம்பெண் மூளைச் சாவு அடைந்த பரிதாப சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

Dallasஐச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜண்ட் Laura Avila (36). தனது காதலரான Enrique Cruzஐ திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில், திருமணத்திற்குமுன் அறுவை சிகிச்சை செய்து தனது மூக்கை அழகுபடுத்த முடிவு செய்தார் Laura.

அமெரிக்காவில் அவருக்கு இன்சூரன்ஸ் இல்லாததால், மூக்கை அழகு படுத்தும் அறுவை சிகிச்சைக்கான 7,500 டொலர்களை கட்ட இயலாத நிலையில் Laura தனது காதலருடன் மெக்சிகோவில் உள்ள ஒரு ஒரு அழகியல் மருத்துவமனைக்கு சென்றார்.

மெக்சிகோவில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான கட்டணம் அமெரிக்காவை விட குறைவு. ஆனால் மெக்சிகோ சென்ற Lauraவுக்கு சற்றும் எதிர்பாராத ஒரு பயங்கரம் காத்திருந்தது.
அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டபோது, அது மயக்கம் ஏற்படுத்துவதற்கு பதிலாக, நேராக மூளையைச் சென்று தாக்கியது.

சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட, அவரது மூளைக்கு மேலும் சேதம் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக அவரை ஒரு கோமா நிலைக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றனர். நான்கு நாட்களுக்குப்பின், பில் கட்ட பணமின்றி தவித்து, போராடி, ஒருவழியாக Lauraவை அமெரிக்காவுக்கு கொண்டு வந்தனர்.

அவரை பரிசோதித்த அமெரிக்க மருத்துவர்கள், Laura ஏற்கனவே மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அபாயமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதா இல்லையா என்பதை அவரது குடும்பத்தினர்தான் முடிவு செய்ய வேண்டும். இந்நிலையில் மெக்சிகோவிலுள்ள அழகியல் மருத்துவமனை மீது Lauraவின் குடும்பத்தினர் வழக்கு தொடர முடிவு செய்துளனர்.

வவுனியாவில் பாடசாலைக்கு வழங்கப்பட்ட உணவுப்பொருளில் ஊழலா?

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு உலக உணவுத்திட்டத்தால் வழங்கப்பட்ட தகரத்தில் அடைக்கபட்ட மீன் உணவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துதெரிவிக்கும் போது, கடந்த 9ம் மாதம் நடுப்பகுதியில் உலக உணவுதிட்டத்தால் மூவாயிரம் தகரத்தில் அடைக்கபட்ட மீன் உணவு வழங்கபட்டதாகவும், இன்றுவரை அந்த உணவுகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை, சமையலுக்கு பொறுப்பானவர்களிடம் வினவியபோது சமைப்பதற்காக தமக்கு வழங்கபடவில்லை எனதெரிவிக்கின்றனர்.

எனவே அதில் ஊழல்நடைபெற்றுள்ளது, அதன் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக எமக்கு தெரிவிக்கபடுகின்றது. அத்துடன் மாணவர்களிற்கு வழங்கப்பட்ட உணவு வேறு நிகழ்விற்காக பயன்படுத்தபட்டிருக்கிறது. அத்துடன் நீண்ட நாட்களின் பின்னர் இன்றையதினமே மீன் உணவு சமைப்பதற்காக வழங்கபட்டுள்ளது. எனவே இது தொடர்பாக வலயகல்வி அலுவலகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்கள்.

பாடசாலை அதிபர் இவ் விடயம் தொடர்பாக தெரிவிக்கும்போது எமது பாடலையில் அதிகமான இந்து ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களும் இருக்கின்றனர். தகரத்தில் அடைக்கபட்ட மீன் உணவு இந்துக்களின் விரதகாலங்களிலேயே வழங்கப்பட்டது. தற்போது விரதகாலம் முடிவடைந்துள்ளதால் இன்றிலிருந்து குறித்த உணவு வழங்கபட இருந்ததாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

வவுனியா பாடசாலை ஆசிரியர்களிடையே குழு மோதல்!!

வவுனியா தெற்கு கல்வி வயலத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் ஆதரவாளர்களும் அதிபருக்கு எதிரான ஆசிரியர்களுக்கிடையே கடந்த பல நாட்களாக முரண்பாடுகள் இடம்பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரு ஆசிரியை குழுவினரிடையே தலைமுடியைப்பிடித்து சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு கல்வி வயலத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கடந்த சில தினங்களாக அதிபருக்கு ஆதரவான ஆசிரியர்களுக்கும் அதிபருக்கு எதிராக ஆசிரியர்களும் இரு குழுக்களாகப்பிரிந்து நின்று முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில் நேற்று முந்தினம் திங்கட்கிழமை அதிபரின் அலுவலகத்திற்குள் அதிபருக்கு முன்பாகவே இரு குழுக்களும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக்கொண்டுள்ளதுடன் ஆசிரியைகள் இருவருக்கிடையே தலைமுடியைப்பிடித்து சண்டையும் இடம்பெற்றுள்ளதை மாணவர்கள் சிலர் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் நேற்று முந்தினம் வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளரிடம் இது குறித்து முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தனக்கு வேறுபாடசாலைக்கு மாற்றம் வழங்குமாறும் கோரியுள்ளார்.

இந்நிலையில் கல்வி வலயத்தின் அசமந்த செயற்பாடுகள் காரணமாகவே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் இடம்பெற்ற தலைமுடிச்சண்டையே பாடசாலையில் இடம்பெற்ற மிகப்பெரிய சண்டையாகும் இதற்கு முன்னரும் இவ்வாறு பாடசாலையின் அதிபருடன் முரண்பாடுகள் சச்சரவுகள் இடம்பெற்று மூன்று ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் மேலும் 8 ஆசிரியர்கள் அதிபரின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்து குறித்த பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாடசாலையின் அதிபரின் செயற்பாடுகளே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கின்ற தரக்குறைவான வார்த்தைப்பிரயோகம் மாணவர்களுக்கு முன்பாகவே ஆசிரியர்களை குறைவாக மதிப்பிடுவதுடன் ஆசிரியர்களுக்குரிய மரியாதையுடன் நடந்து கொள்வதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான ஒருசில அதிபர்களின் செயற்பாடுகள் காரணமாக பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுகின்றன. வவுனியா நகரிலிருந்து 6கிலோ மீற்றர் தூரத்திலுள்ள வசதியற்ற பாடசாலைக்கு இவ்வாறான நடவடிக்கையினால் அபகீர்த்தியும் ஏற்படுகின்றன. மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கும் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வியடம் குறித்து வவுனியா தெற்கு கல்வி வயலப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணனிடம் வினவியபோது, சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொள்வதாகவும் ஆசிரியர்கள் அதிபரின் செயற்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டு வெளியேறிவருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை மேலும் நீடித்துச் சென்றால் பாடசாலையினை மூடவேண்டிய நிலை ஏற்படும் ஆசிரியர்களில் ஒருவர் முறைப்பாடு ஒன்றினையும் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து நாளைய தினம் (15.11) அதிபர்களுக்கான கூட்டம் ஒன்று கல்விப்பணிமனையில் இடம்பெறவுள்ளது இந்நிலையில் குறித்த அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை இடம்பெற்று அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்த அணியில் இணைந்த திலக்கரட்ன தில்ஷான்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டதுடன் அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்.

கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தில்ஷான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிடலாம் என தெரியவருகிறது.

வவுனியாவில் கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை : அரச அதிபர்!!

வவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். நாட்டின் காலநிலை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீரற்ற காலநிலை காரணமாக கஜா சூறாவளியானது யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக கடுமையான காற்று வீசக்கூடும் என்பதுடன், நாளை மாலை கடுமையான மழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த நிலையை கருத்தில் கொண்டு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், முப்படையினர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு என்பன அனர்த்த நிலையை எதிர்கொள்ள கூடிய நிலையில் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்த அவசர நிலைமைக்கு ஏற்ப பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, கடந்த நான்கு நாட்களாக அதிகாலை தொடக்கம் காலை 8 மணிவரை கடுமையான பனிமூட்டம் காணப்படுவதுடன், ஏ9 வீதியில் பயணிக்கும் சாரதிகள் கடும் சிரமங்களையும் எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புற்றுநோயால் பாதிக்கபட்டவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி : கண்ணீர் விட்டு அழுத விவசாயி!!

புற்றுநோய் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும் ‘நெல்’ ஜெயராமனின் மொத்த மருத்துவ செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்று கொண்டுள்ளார்.

விவசாயத்தில் பல புரட்சிகளை செய்த நெல் ஜெயராமன் என்பவரை புற்றுநோய் தாக்கியது. தற்போது அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல் ஜெயராமனை அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சென்று பார்த்து வருவதோடு தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

“என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்” என்றார் #நெல்_ஜெயராமன். தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் “நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை” என்றார். ஒரு விவசாயியை காக்க துடிக்கும் நல்ல மனசு கோயிலுக்கு சமம்!

இந்நிலையில் அப்பல்லோவில் அவரை சேர்த்து, மொத்த மருத்துவ செலவுகளையும் ஏற்றது நடிகர் சிவகார்த்திகேயன் என தற்போது தெரியவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமனை சந்தித்து அவருடன் பேசும் புகைப்படத்தை இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும் என்றார் நெல்_ஜெயராமன்.

தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை என்றார் என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த பதிலைக் கேட்டு கண்கலங்கி போய்விட்டாராம் நெல் ஜெயராமன். இதோடு ஜெயராமன் மகனின் முழு படிப்பு செலவையும் அவர் படிக்கும் காலம் முழுக்க ஏற்பதாகவும் சிவகார்த்திகேயன் சொல்லி இருப்பதாக சரவணன் தெரிவித்துள்ளார்.

பிணவறையில் கணவரின் உடல்…. மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!

கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை முன்பு பணத்திற்காக அவரது மனைவி பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின தம்பதியினர் டாக்ராய் மற்றும் அவரது மனைவியான முண்டா. கடந்த சில மாதங்களுக்கு முன் தினசரி பிழைப்புக்காக தங்களது சொந்த கிராமத்தில் குழந்தைகளை விட்டு விட்டு பட்டமண்டாய் நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். இதனிடைய டாக்ராய்க்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே அவர் பட்டமண்டாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி டாக்ராய் உயிரிழக்க அவரது மனையியான முண்டாய் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய நினைத்த முண்டா அதற்கு முயற்சி செய்தார்.

அதற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் இலவச அமரர் ஊர்தி சேவை பெற அணுகினார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ரூபாய் 300 கொடுத்தால் தான் அமரர் ஊர்தி சேவை வழங்க முடியும் என கூறிவிட்டது.

இதனையடுத்து 300 ரூபாய் பணத்திற்காக மருத்துவமனை முன்பு முண்டா பிச்சை எடுத்தார். முண்டா விரித்து வைத்த துண்டில், அங்கு வந்தவர்கள் தங்களால் முயன்ற பணத்தை இட்டுச் சென்றனர்.

இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை கொண்டு அமரர் ஊர்தி சேவையை பெற்ற முண்டா, தனது கணவரின் உடலை அடக்கம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பறக்கும் விமானத்தில் ஊழியர் முகத்தில் எச்சில் துப்பிய பயணி : பரபரப்பு சம்பவம்!!

பறக்கும் விமானத்தில் ஐரிஷ் பெண் ஒருவர் குடிபோதையில் தகராறு செய்து ஊழியர்கள் மீது எச்சில் துப்பி தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் கைதில் முடிந்துள்ளது.

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று சனிக்கிழமை சென்றுள்ளது. இந்த விமானத்தில் ஐரிஷ் நாட்டு பெண் ஒருவரும் பயணம் செய்துள்ளார். பயணத்தின்போது அதிகஅளவு மதுபானத்தை கேட்டுக் குடித்துள்ளார்.

ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து கூடுதலாக மது வழங்க வேண்டும் என அவர் வற்புறுத்தியுள்ளார். அளவுக்கு அதிகமாக குடிபோதையில் இருந்த அந்த பெண்ணுக்கு மதுபானம் வழங்க விமான ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து விமான ஆண் ஊழியர் ஒருவரிடம் அந்த பெண் தகாரறில் ஈடுபட்டுள்ளார்.

அவரது இடத்துக்கே சென்ற உடனடியாக தனக்கு மதுபானம் தர வேண்டும் என நிர்பந்தித்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் தாம் என்றும், தம்மை மதிக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் கூறி விமான ஊழியரை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அவரது நடவடிக்கைகள் எல்லை மீறியது. விமானி இருக்கும் பகுதிக்கு சென்ற அவர் அங்கு விமான ஊழியர் மீது எச்சிலை உமிழ்ந்து, இன ரீதியாகவும் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தியும் திட்டியுள்ளார். அவரது செயலால் சக பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதனை பயணிகள் சிலர் மொபைல் போனில் படம் எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூகவலை தளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது. பலரும் அந்த பெண்ணுக்கு சமூகவலைதளங்களில் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

லண்டன் விமான நிலையத்தை சென்றடைந்தவுடன் அந்த போதைப் பெண்ணை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். சர்வதேச விமான பயணிகள் நடவடிக்கை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காதலியின் தாயாரை கொடூரமாக கொலை செய்த இளைஞர் : அதிர்ச்சிக் காரணம்!!

மராட்டிய மாநிலம் மும்பையில் பணியாற்றும் மகளின் பேஸ்புக் காதலனால் தாயார் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் எனவும் மும்பையில் பணியாற்றி வருகிறார் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலத்தில் குளத்துப்புழ பகுதியில் குடியிருந்து வருபவர் மேரிக்குட்டி. நேற்று மாலை சுமார் 3 மணியளவில் பார்சல் சேவை என கூறி இளைஞர் ஒருவர் மேரிக்குட்டியை அணுகியுள்ளார்.
வீட்டுக்குள் புகுந்த அவர், திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் மேரிக்குட்டியின் வலப்பக்க மார்பில் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மேரிக்குட்டி உயிர் தப்பிக்கும் பொருட்டு வீட்டுக்கு வெளியே ஓடியுள்ளார். பின்னர் சாலையோரத்தில் குழந்து விழுந்துள்ளார். கணவர் ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வருகிறார், இளைய மகள் லின்ஸா பெங்களூருவில் கல்வி பயின்று வருகிறார். இதனால் சம்பவத்தின்போது குடியிருப்பில் எவருமே இல்லை என கூறப்படுகிறது.

இதனிடையே அப்பகுதி மக்கள் மேரிக்குட்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். மும்பையில் செவிலியராக படித்துவரும் லிஸா, பேஸ்புக் வழியாக குறித்த இளைஞருக்கு அறிமுகமாகியுள்ளார்.

நாளடைவில் இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இதனிடையே திருமணம் செய்து கொள்ள நிர்பந்தித்த இளைஞரிடம், தமது குடும்பத்தாரின் ஒப்புதல்படியே திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக குறித்த இளைஞர் லிஸாவை தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆத்திரம் கொண்ட இளைஞர் தமது காதலியை கொலை செய்யும் நோக்கத்தில் கேரளா சென்றுள்ளார்.

லிஸாவை தமக்கு திருமணம் செய்து தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மேரிக்குட்டி எதிர்பாராத நிலையில் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற இளைஞரை அப்பகுதி மக்கள் பொலிசில் பிடித்துக் கொடுத்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து கணவருடன் ஊருக்கு திரும்பிய இளம் மனைவி செய்த அதிர்ச்சி செயல் : கதறும் கணவன்!!

கணவருடன் வெளிநாட்டில் தங்கியிருந்த பெண் சொந்த ஊருக்கு திரும்பிய உடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹர்ஷிதா (32). திருமணமான இவர் தனது கணவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஹர்ஷிதாவின் கணவருக்கு அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹர்ஷிதாவையும் அங்கு அழைத்து சென்றார். இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பினர்.

இந்நிலையில் நேற்று தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து ஹர்ஷிதா தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஹர்ஷிதாவின் சடலத்தை கைப்பற்றினார்கள். ஹர்ஷிதாவின் சடலத்தை பார்த்து அவர் குடும்பத்தார் கதறி அழுதார்கள்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் ஹர்ஷிதா சில காலமாக மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்கான சிகிச்சையை பெற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதமாக ஹர்ஷிதா இறந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி மைத்திரி, மஹிந்தவை சூழ்ச்சியினால் வீழ்த்தியுள்ளார் : ஜே.வி.பி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சூழ்ச்சியினால் வீழ்த்தியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மஹிந்த ராஜபக்ச சூழ்ச்சிகாரர்களின் சதி வலையில் சிக்கிவிட்டார்.
மஹிந்த ராஜபகசவின் அரசியல் வரலாற்றில் மிகவும் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு, நாடாளுமன்றிலிருந்து வெளியேறி சென்றார்.

1970ஆம் ஆண்டு இளைய நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றில் அங்கம் வகித்த மஹிந்த ராஜபக்ச, இன்று பலரின் கேலி கிண்டல்களுக்கு மத்தியில் நாடாளுமன்றை விட்டு வெளியேறினார்.

நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் எவருக்கேனும் சந்தேகம் இருந்தால் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் கூடிய ஆவணமொன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வெட்கமேனும் இருந்தால் மஹிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அமைய பதவி விலக வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தோல்வியைத் தழுவியுள்ளார்.

ரணில் – மைத்திரியின் தனிப்பட்ட பிரச்சினைக்கு மக்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை. கட்சி மட்டுமன்றி மக்களும் பயங்கரவாதத்திற்கு மக்கள் ஆளாகக்கூடாது.

ராஜபக்ச – மைத்திரி தரப்பிற்கு பெரும்பான்மை பலம் இருந்திருந்தால் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு இடமளிக்கப்பட்டிருக்கும்.

ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்க நாம் பின்நிற்கப் போவதில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.