வானின் அதிசயங்களுடன் இணைந்த ஆசியாவின் அதிசயம்!!

ஆசியாவின் அதிசயம் என அழைக்கப்படுகின்ற இலங்கையில் உள்ள தாமரைக்கோபுரத்தினை அமைக்கும் பணிகள் நிறைவை எட்டியுள்ளன.

இந்நிலையில், தாமரைக்கோபுரத்தின் புகைப்படங்கள், அதன் காட்சியமைப்பு, அதன் நிர்மாணப்பணிகள் தொடர்பான புகைப்படங்கள் என்பது தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், கொழும்பில் இன்று பிற்பகல் வேளையில் நிலவிய மந்தமான காலநிலையில், சிறிது மழைத்தூரலுடனான காலநிலையில் ஏற்பட்ட இரட்டை வானவில்லுடன் சேர்ந்த தாமரைக்கோபுரத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

தாமரைக்கோபுரத்தைச் சுற்றி இரண்டு வானவில்கள் இருந்த காட்சி பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் மிக அழகாக அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

அத்துடன் பகல், இரவு மற்றும் மாலை வேலைகளில் புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட பலரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ச்சியாக இலங்கை மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல் மனைவியை கொன்றுவிட்டு, இரண்டாம் மனைவியுடன் வாழ்க்கை : 15 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய கணவன்!!

இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மனைவியை கொலை செய்துவிட்டு, இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்த வந்த நபர் தற்போது பொலிசில் சிக்கியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தருண் ஜினராஜ் (42). இவருக்கும் சஜினி என்ற பெண்ணுக்கும் கடந்த 2002 டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

சரியாக மூன்று மாதம் கழித்து 2003 பிப்ரவரி 14-ஆம் திகதி காதலர் தினத்தன்று சஜினியை கழுத்தை நெரித்து தருண் கொலை செய்துள்ளார். திருமணத்துக்கு முன்னர் வேறு பெண்ணை காதலித்து வந்த தருண், அவருடன் சேருவதற்காகவே சஜினியை கொன்றுள்ளார்.

இதன் பின்னர் தருண் தலைமறைவாகிவிட்டார். பொலிசார் எவ்வளவு தேடியும் அவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இவ்வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் சமீபத்தில் மீண்டு தூசிதட்டி எடுக்கப்பட்டது.

பொலிசார் சமீபத்தில் மத்தியபிரதேசத்தில் உள்ள தருணின் தாய் அன்னம்மா வீட்டை கண்டுப்பிடித்து அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அன்னம்மா பக்கத்து வீட்டில் விசாரித்த போது, அன்னமா அடிக்கடி பெங்களூருக்கு செல்வதாக தெரியவந்தது.

அவரின் போனை சோதனை செய்த போது பெங்களூரில் இருந்து ஒரு தொலைபேசியில் அடிக்கடி அவருக்கு போன் வந்தது தெரியவந்தது. அந்த போன் நம்பர் நிஷா என்ற பெயரில் பதிவாகியிருந்தது.

அந்த முகவரிக்கு சென்று பொலிசார் விசாரித்த போது நிஷா என்ற பெண் பிரவீன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் பிரவீனை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் தருண் தான் தனது பெயரை பிரவீன் என மாற்றி கொண்டு நிஷாவை திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும் நிஷாவிடம் தனது பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டதாக தருண் கூறியுள்ளார்.

தன்னை பார்க்க வரும் பெற்றோரை, தனது மாமா, அத்தை என பொய்யாக கூறியதும் தெரியவந்துள்ளது. போலி சான்றிதழை பிரவீன் என்ற பெயரில் தயாரித்து தருண் கால் செண்டர் பணியில் சேர்ந்துள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் தருணை கைது செய்துள்ளனர்.

சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம்!!

தமிழகத்தின் தாராபுரம் அருகே சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் அருகே உப்பாற்றுப் பாலத்தின் கீழ் வீசப்பட்ட சாக்கு மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார், அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை உடற்கூறு சோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பண் பாலியல் வன்கொடுமைக்கு பின் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் வாரிசுக்காக தவம் இருந்த ராணுவ வீரர்… இறுதியில் நடந்த சோகம்!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நாயக் ரஞ்சித் சிங் உள்ளிட்ட 4 இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் சமீபத்தில் பலியாகினர்.

ரஞ்சித் சிங் உயிரிழக்கும் அந்த நேரத்தில் அவரது மனைவி ஷிமு தேவி நிறைமாத கர்ப்பிணி. இன்றோ, நாளையோ நம் வாரிசு வந்துவிடும் என காத்திருந்த ரஞ்சித் சிங்கிற்கு மரணமே மிஞ்சியது. தனது வாரிசை காணாமலே இவ்வுலகத்தை விட்டு மறைந்துவிட்டார்.

இதனையடுத்து முழு ராணுவ மரியாதையுடன் ரஞ்சித் சிங்கின் உடல் அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அந்த நேரத்தில்தான் அங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் ஷிமு தேவி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தந்தை மரண ஊர்வலம் வீடு நோக்கி வந்துக் கொண்டிருக்க மகளோ மருத்துவமனையில் அழுகையும், ரத்தமுமாய் பிறந்துள்ளார். இதனையடுத்து எப்படியும் தனது கணவரை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என ஷிமா தேவி துடித்திருக்கிறார்.

இதனால் ஆம்புலன்ஸ் மூலம் தனது பச்சிளம் குழந்தையுடன் அழைத்து வரப்பட்ட ஷிமா தேவி, ரஞ்சித் சிங்கின் உயிரற்ற உடலை கண்டு கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

ரஞ்சித் சிங் நாட்டின் மீது கொண்டுள்ள தீராத காதலால் கடந்த 2003-ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்துள்ளார். மனைவியின் பிரசவத்தையொட்டி விடுமுறை எடுக்க திட்டமிருந்த நிலையில் துரதிஷ்டவமாக அவர் உயிரிந்ததுள்ளார் என்பது வேதனைக்குரிய விஷயமாக அமைந்துள்ளது.

ஒரு முத்தத்தால் பரிதாபமாக பலியான குழந்தை : எச்சரிக்கும் 19 வயது தாய்!!

அமெரிக்காவை சேர்ந்த 19 வயது தாய், தன்னுடைய குழந்தை அரியவகை வைரஸ் தாக்குதலுக்குட்பட்டு இறந்தது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ஓக்லாண்ட் நகரத்தை சேர்ந்த 19 வயதான அபிகாயில் ரோஸ் என்ற பெண், பிறந்த குழந்தைக்கு நீங்களோ அல்லது உங்களுடைய உறவினர்களையோ முத்தம் கொடுக்க அனுமதிக்காதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், எங்களுடைய மகள் பிறந்த ஒருநாள் மட்டுமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அடுத்த 36 மணிநேரத்தில் மந்தமாக, காய்ச்சலுடன் காணப்பட்டாள். நான் பயந்துபோய் மருத்துவரை அழைத்தேன்.

பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர், குழந்தைக்கு ஹெர்பெஸ் வைரல் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கையை கழுவாமல் தூக்கியிருந்தாலோ அல்லது முத்தமிட்டிருந்தாலோ அந்த வைரஸ் தாக்குதல் வரும் என தெரிந்துகொண்டேன்.

ஆனால் அந்த வைரஸ் யாரிடம் இருந்து வந்தது என எனக்கு தெரியவில்லை. குழந்தை பிறந்த மறுநாள் என்னுடைய உறவினர்கள் நிறைய பேர் குழந்தையை பார்க்க வந்திருந்தனர்.

6 நாட்கள் என் மகள் வேதனையுடன் காணப்பட்டாள். அவளுக்க சிகிச்சை அளிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இறுதியில் அவள் எங்களை விட்டு பிரிந்துவிட்டாள் என தெரிவித்துள்ளார். “அவளைப் பற்றி நான் யோசிக்காத ஒரு கணம் இல்லை, அவள் என் எண்ணங்களில் தினமும் இருக்கிறாள்” என வேதனையோடு மற்ற தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டில் ரத்தம் சிந்திய நிலையில் மர்மமாக இறந்த கணவர் : உடலை மீட்க போராடும் மனைவி!!

சவுதி அரேபியால் மர்மமான முறையில் இறந்துபோன கணவரின் உடலை மீட்டுத்தரும்படி மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவகார்த்திகேயன் (43) என்பவருக்கு திருமணமாகி மிதுன கோகிலா என்ற மனைவியும், ஜெய்ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் கடந்த 15 ஆண்டுகளாக ஓட்டுனராக சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 மே மாதம் 19ஆம் தேதி மீண்டும் சவுதி நாட்டில் ரியாத் நகரில் ஃபெச்சர் என்ற நிறுவனத்திற்கு ஓட்டுநர் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர்11ஆம் தேதி சிவகார்த்திகேயன் தனது மனைவி மிதுனகோகிலாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அதன் பிறகு 5 தினங்களாக சிவகார்த்திகேயனிடம் இருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை. இதனால் கலக்கமடைந்த மிதுனகோகிலா கடந்த 22ம் தேதி ரியாத்தில் தனது கணவருடன் பணியாற்றும் நண்பர்களிடம் விசாரித்துள்ளார்.

அப்போது சிவகார்த்திகேயன் கடந்த 12ஆம் தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும் அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தின் பின் இருக்கையில் ரத்தம் சிந்திய நிலையில் இறந்து கிடந்ததாகவும், அவரது உடலை பொலிசார் எடுத்து சென்றுள்ளதாகவும் அதிர்ச்சிகர தகவலை நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் குறித்து அவர் பணியாற்றிய நிறுவனத்திடம் கேட்டபோது, சிவகார்த்திகேயன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏன் இத்தனை நாளாக சிவகார்த்திகேயன் இறந்தது குறித்து தெரிவிக்கவில்லை என கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சிவகார்த்திகேயனின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை அளித்துள்ளனர்.

ஒரு வருடமாக இருந்த நெஞ்சுவலி : மருத்துவமனை சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சீனாவில் நெஞ்சு வலி என மருத்துவமனை சென்ற நபர், உணவுப்பாதையில் 8 அங்குல இரும்பு கரண்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

சீனாவை சேர்ந்த 26 வயதான சாங், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக, நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஒரு பந்தயம் கட்டியுள்ளார்.

அதில் இரும்புக் கரண்டியை விழுங்கிவிட்டு திரும்ப வெளியில் எடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் உள்ளே விட்ட இரும்பு கரண்டி வெளியில் வரவில்லை.

இதனால் எந்தவித பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை. உணவு எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பழக்கவழக்கங்களில் எந்த தடையும் ஏற்படாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி அதிகரித்துள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது உணவுக்குழாயில் 8 அங்குல இரும்பு கரண்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சிடையடைந்துள்ளனர்.

உடனே அவசரமாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த மருத்துவர்கள், 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் எண்டோஸ்க்கோப்பின் உதவியுடன் கரண்டியை வெளியில் பிரித்தெடுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் கூறுகையில், ஆரம்பத்தில் கரண்டியை பார்த்து நாங்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்தோம். தற்போது அறுவைசிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்பிவிடுவார் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக செப்டம்பர் 2015 இல் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து 6 அங்குல கரண்டி நீக்கப்பட்டதும், அதேபோல ஜூன் மாதம் 2015 இல் ஒரு மாணவரின் வயிற்றில் இருந்து 5 அங்குல கரண்டி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

18 மாதங்களாக தன் உடலுக்குள் சிக்கியிருந்த இளம்பெண், மீட்ட தாயின் இசை : ஒரு ருசிகர சம்பவம்!!

அபூர்வ நோய் ஒன்றினால் தன் உடலுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு இளம்பெண்ணை அவளது தாயின் இசை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது.

Miranda 13 வயதாக இருக்கும்போது locked-in syndrome என்ற பிரச்சினையில் சிக்கினாள். மூளையில் திடீரென எற்பட்ட இரத்தப்போக்கினால் கடுமையான தலைவலி, திடீரென்று கேட்கும் திறன் இழப்பு மற்றும் கைகள் செயலிழப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்பட, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Mirandaவுக்கு மிகவும் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உயிர் பிழைத்தாலும் அவளுக்கு locked-in syndrome என்ற பிரச்சினை ஏற்பட்டது. அதாவது கோமா போன்ற ஒரு நிலை, ஆனால் அவளால் தன்னைச் சுற்றி நடப்பதை உணர முடியும், பதிலுக்கு ரெஸ்பாண்ட் செய்ய முடியாது.

இப்படி ஒரு பிரச்சினையில் சிக்கிய Mirandaவுக்கு அந்த பிரச்சினையிலிருந்து விடுபட 5 சதவிகித வாய்ப்பு மட்டுமே இருந்ததாக மருத்துவரான அவரது தாயான Stella (52) தெரிவிக்கிறார்.

Miranda மருத்துவமனையில் இருக்கும்போது உறவினர்கள் பாட அவரது தந்தையான John (54) கிட்டார் இசைப்பார்.

பிள்ளை செயலற்று இருப்பது மனதை வருந்தச் செய்தாலும் மனம் தளராத Mirandaவின் தாய் அவளது உறவினர்கள் எழுதிய கடிதங்களை வாசித்துக் காட்டுவார். அவற்றைக் கேட்கக் கேட்க Miranda கண்களை சிமிட்டத் தொடங்கினாள்.

திரைப்படங்களில் வருவது போல அவளது கைகள் அசையத் தொடங்கின. மூன்று மாதங்களாக விடாமல் மகளுக்காக தாய் பியானோ வாசிக்க, ஒரு நாள் Miranda தாயுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தாள்.

25 ஆண்டுகளாக நான் மருத்துவராக இருக்கிறேன், இப்படி ஒரு அதிசயத்தை நான் பார்த்ததில்லை என்று கூறும் Mirandaவின் தாய், மகளுக்கு பேச்சுப் பயிற்சி முதல் பல பயிற்சிகளைக் கொடுத்து வருகிறார்.

13 வயதில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த சிறுமி!!

கவுதமாலா நாட்டில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு மூன்று குழந்தைகள் பிறந்து, அதில் இரண்டு குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுதமாலா நாட்டின் Momostenango கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ்கா லோபீஸ் பெரேஸ் என்ற 13 வயது சிறுமி. இவர் தன்னுடைய 7 சகோதரன்கள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெரேஸ்க்கு, காட்டு பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அடுத்த சில மணிநேரங்களில் அவருக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. மூன்று குழந்தைகளுமே 1 கிலோ எடையில் இருந்ததால், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.

அங்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. ஆனால் மற்றொரு குழந்தைக்கு தினமும் ஆக்சிஜன் தேவைப்படுவதால் மருத்துவன்மனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரிக்கையில், தெருவில் மிட்டாய் விற்பனை செய்யும் ஒருவர் துஸ்பிரயோகம் செய்ததாகவும், தற்போது அவர் யார் என்பது தனக்கு நியாபகம் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், கர்பமடைந்திருப்பதே தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கவுதமாலாவின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய மையம், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை கர்ப்பமடைந்த 10 முதல் 14 வயதிற்கு உட்பட்ட 2,102 கர்ப்பிணிகளில் இதுவும் ஒன்று. இதே காலகட்டத்தில் 15 முதல் 19 வயதிற்குட்பட்ட 59,584 இளம் பெண்கள்கர்பமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய உள்ளாடை கண்டுபிடிப்பு!!

பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கிறது. இதன் மூலம் சில முக்கிய நபர்களின் லீலைகளும் அம்பலமாகி வருகின்றன.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான் பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடிபதும் கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினமும் அரங்கேறுகின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கிறது.

இதன் மூலம் சில முக்கிய நபர்களின் லீலைகளும் அம்பலமாகி வருகின்றன. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான் பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடித்துவிட்டு கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினமும் அரங்கேறுகின்றன.

பெண்களின் மார்பை தவறான எண்ணத்தோடு பிடித்தால் இந்த உள்ளாடை 3800 கிலோ வால்ட் மின்சார அதிர்ச்சியைக் கொடுக்கும். அது தொடும் நபரை மயக்க நிலைக்கு தள்ளும். அதுமட்டுமன்றி சம்பவ இடம், நேரம் குறித்த தகவல்கள் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் ஜி.பி.எஸ். மூலம் எஸ்.எம்.எஸ். சென்றுவிடும். 82 முறை ஷாக் கொடுக்க கூடிய அளவுக்கு திறன் வாய்ந்ததாக இந்த பிரா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படி அதி சக்திவாய்ந்த மின்சார தாக்குதல் கொடுக்கப்படும் பொழுது, அதை அணித்து இருக்கும் பெண்களுக்கு அது எந்த கேடும் விளைவிக்காத அளவுக்கு இந்த பிரா வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை அகதி ஒருவர் எழுதிய கடிதம்!!

 

சென்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று இந்திய ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார் என்ற நபர் சென்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் புழல் சிறையில் நடந்து வரும் கொடுமைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நேற்று மாலை திடீரென என்னை `ஏ’ வகுப்பில் இருந்து செல்லுலார் பிளாக் (Cellulor block) – தனியறைக்கு மாற்றம் செய்துவிட்டனர். காரணம் ஏதும் கூறவில்லை. `கண்காணிப்பாளர் கூறினார்’ என்று மாற்றம் செய்துவிட்டனர். தனியறையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள், சிறைக் குற்றம் புரிந்த சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்தத் தொகுதியில் `ஏ’ வகுப்பு சிறைவாசியை அடைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது துன்புறுத்தும் நடவடிக்கையாகும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்னிடம், `இலங்கை சிறைவாசிதானே நீ. எதாவது செல்போனில் பேசுகிறாயா?’ என்றார்.

`இல்லை அய்யா…நான் இன்னும் 3 மாதங்களில் விடுதலையாக உள்ளேன். வாரம் இரண்டு முறை என் மனைவியை நேர்காணலில் சந்திக்கிறேன். நான் சிறையில் எந்தத் தவறான செயலிலும் ஈடுபடவில்லை’ என்று கூறினேன். இருப்பினும், திடீரெனப் பழிவாங்கும்விதமாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் அறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.

சந்தேகம் என்ற பெயரில், இலங்கை நாட்டைச் சேர்ந்த சிறைவாசி என்றாலும் சந்தேகப்படுவதும் கேவலமாக நடத்துவதும் மனவருத்தத்தைத் தருகிறது. மேலும் இந்தச் சிறையிலிருந்து வேறு மாவட்டங்களில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யவும் அவருக்கு (கண்காணிப்பாளர்) அதிகாரம் உள்ளது.

ஆதலால், மனநிம்மதியின்றி, பாதுகாப்பற்ற சூழலில் உள்ளேன். தாங்கள் ஆணையின்படி, தங்கள் மேற்பார்வையில்தான் சிறையில் உள்ளேன். கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்ட நீதிபதி சிறைக்கு வந்து திடீரெனப் பார்வையிட்டபோது, அனைத்துச் சிறைவாசிகளையும் சந்தித்தார்.

அப்போது இதுபோன்ற செயல்கள் குறித்து சிறைவாசிகள் அவரிடம் கூறியபோது, `அப்படி எல்லாம் இவர்கள் செய்ய முடியாது. உங்கள் பிரச்னைகளைப் பற்றி நீதிமன்றத்தில் பதிவு செய்துவிடுங்கள். நீங்கள் தாக்கப்பட்டாலோ, துன்புறுத்தப்பட்டாலோ உங்களைக் கட்டாயப்படுத்தி எதாவது கேட்டாலோ அதைத் தயங்காமல் நீதிபதியிடம் தெரிவித்துவிடுங்கள்’ என்றார்.

அய்யா… எனக்குப் பெரிய அளவில் யாரும் இல்லை. உங்களை மட்டும்தான் மலை போல நம்பியுள்ளேன். நான் தாக்கப்பட்டாலோ அல்லது வேறு சிறைக்கு மாற்றப்பட்டாலோ அதற்கு கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் பொறுப்பு. அவர் மேல் இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சரியான முறையில் வழக்கை நிரூபிக்காததால் மிஸ்டேக் ஆஃப் ஃபேக்ட் என்ற அடிப்படையில் பல வழக்குகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

சிறைக்குள் நான்கு சுவர்களுக்குள் அவர் மீது புகார் அளிப்பதும் அதை நிரூபிப்பதும் சாத்தியமில்லாத ஒன்று. ஆதலால், நீதிமன்றத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்பில் பதிவு செய்கிறேன். எனக்கு உடல்ரீதியான எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாமலும் ஏன் தொகுதி மாற்றம் செய்தீர்கள் என்ற விளக்கத்தையும் என் மீது குற்றம் ஏதும் இல்லை என்றால் `ஏ’ வகுப்பு தொகுதியில் அடைக்கும்படியும் ஆணை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

16 வயது பாடசாலை மாணவி ஐந்து மாத கர்ப்பிணி : பரிசோதனையில் கண்டறிந்த மருத்துவர்கள்!!

செவனகல பிரதேசத்தில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

செவனகல – களுதியஹார பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவியே கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவி 5 மாத கர்ப்பிணி என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் மாணவி தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸார், மாணவியின் தாயாரிடம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியுள்ளனர். எனினும் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என மாணவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

விசாரணைகளில் தெரியவந்த விடயங்களுக்கு அமைய மாணவியின் சிறிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவியின் கர்ப்பத்திற்கு மற்றுமொரு நபரும் காரணம் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வவுனியா றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்!!

வவுனியா றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்று(25.10) காலை மேற்கொண்டனர்.

வவுனியா, சூடுவெந்தபுலவு, ரஹ்மத்நகர் றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயம் முன்பாக ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் சூடுவெந்தபுலவு பள்ளிவாசல் வரை ஊர்வலமாக வந்து பின்னர் அங்கிருந்து பாடசாலையை நோக்கி சென்று பாடசாலை முன்றலில் முடிவடைந்தது.

ஊர்வலத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர். இவ் ஊர்வலத்தில் அதிபர், ஆசிரியர்கள், பொலிசார், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் வீதியிலுள்ள கால்நடைகளை அகற்ற நடவடிக்கை : தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் ரவி!!

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வீதியில் கைவிடப்பட்ட கட்டாக்காலி கால்நடைகளை அகற்ற இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) தெரிவித்துள்ளார்.

வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் வீதிகளில் கைவிடப்பட்ட கட்டாக்காலி மாடுகள் தரித்து நிற்பதால் வாகனங்கள் பயணிப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன. இவ் விடயம் தொடர்பாக வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கைவிடப்பட்டுள்ள கட்டாக்காலி கால்நடைகளை உரிமையாளர்கள் தமது வீடுகளில் கட்டிவைத்து பராமரிப்பதற்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் வீதி விபத்துக்கள் இடம்பெறுவது தொடர்பாக எனது கனவத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து எமது பிரதேச சபையினூடாக வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகள் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

நடிகையின் பாலியல் புகார் : நடிகர் அர்ஜுன் எடுத்த அதிரடி முடிவு!!

தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மட்டுமே இது குறித்த விசாரணை கூட்டத்தில் பங்கேற்பேன் என நடிகர் அர்ஜுன் அதிரடியாக கூறியுள்ளார்.

நிபுணன் என்ற திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் அர்ஜுன் தன்னிடம் வரம்பு மீறியதாக ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்திருந்தார், இதை அர்ஜுன் மறுத்தார்.

இந்நிலையில் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்த, ஸ்ருதி ஹரிஹரனிடம் விசாரணை நடத்த, கன்னட திரைப்பட வர்த்தக கவுன்சில் கூட்டம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அர்ஜுனையும் அழைத்து சமாதானம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், ஸ்ருதி ஹரிஹரன் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கோரி கடிதம் தந்தால் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல் ஸ்ருதியும், அர்ஜுன் மீதான புகாரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப் போவதாக சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆண்டில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை : அடுத்தடுத்து இறந்த தம்பதி : அனாதையான 2 மாத குழந்தை!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தனிக்குடித்தனம் செல்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கணவன்- மனைவி அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் ரிச்சர்டு பிராங்ளின் (30). ஜெபக்கூட்டத்தில் போதகராக இருந்து வரும் ரிச்சர்டு, அவினாசி தாரம்பாளையத்தை சேர்ந்த ஜெர்சி (28) என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்துள்ளார். பிரசவத்திற்காக தாய் வீட்டில் வீட்டில் இருந்த ஜெர்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக அவிநாசிக்கு சென்ற இடத்தில் தனிக்குடித்தனம் போகலாம் என ஜெர்சி பேச்சு கொடுத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரிச்சர்டு, அனைவரும் கூட்டு குடும்பமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ரிச்சர்டு, வேகமாக பெட்ரோலை எடுத்துவந்து உடல் முழுவதும் ஊற்றியுள்ளார். அதனை பறிக்க முயன்ற போது ஜெர்சியின் உடலிலும் பெட்ரோல் விழுந்துள்ளது.

உடனே கையில் வைத்திருந்த தீப்பட்டியை கொண்டு ரிச்சர்டு உடலில் தீ வைத்துள்ளார். வலி தாங்கள் முடியாமல் கதறிய கணவனை காப்பாற்ற சென்ற ஜெர்சியின் மீதும் தீ பரவியுள்ளது.

இதனையடுத்து பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அடுத்தநாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.