பாலியல் புகார் : காலில் விழுந்து வேண்டுமானாலும் கேட்கிறேன் : நடிகர் அர்ஜுன் ஆவேசம்!!

சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, நிச்சயமாக நீதிமன்றம் சென்று தண்டனை வாங்கிகொடுப்பேன் என தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் அர்ஜுன்.

படப்பிடிப்பின்போது தன்னிடம் அர்ஜுன் நெருக்கம் காட்டியதாக ஸ்ருதி ஹரிஹரன் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதனால், ஸ்ருதிக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனிடையே கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் நேற்று அர்ஜுனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு, கர்நாடக வர்த்தக சபை வளாகத்தில் நிருபர்களிடம் அர்ஜுன் பிரஸ் மீட் வைத்தார். அப்போது கூறியதாவது: எனது தந்தை காலத்திலிருந்து 35 வருடங்களுக்கு மேலாக, கர்நாடக வர்த்தக சபையினரிடம், எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனவே அவர்கள் விசாரணைக்கு நான் ஒத்துழைத்தேன்.

எனக்கு ஏற்பட்ட காயம் எனக்கு மட்டுமானது கிடையாது. எனக்கு மட்டுமானதாக இருந்திருந்தால் இதை எளிதாக கடந்து இருப்பேன். ஆனால் எனது குடும்பத்தினருக்கு, எனது ரசிகர்களுக்கு மனது புண்பட்டுள்ளது.

வருங்காலத்தில் என்னை எதற்காக குறி வைத்தார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் உறுதியாக தெரியவரும். அதுவரை காத்திருங்கள்.

நான் இந்த விஷயத்தில் சமரசமாக போக தயாராக இல்லை. திரைப்பட வர்த்தக சபையின் ஒவ்வொருவரின் காலில் விழுந்து வேண்டுமானாலும் கேட்டுக்கொள்கிறேன், நான் சமரசமாக போக போவதில்லை.

நான் தப்பு செய்து இருந்தால் எனக்கு தண்டனை கிடைக்கட்டும். வேறு யாராவது செய்திருந்தால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கட்டும். மொத்தத்தில் சமரசமாக போக போவதில்லை. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் எங்கள் மகன் என கூறிய தம்பதி : மீண்டும் செய்த செயல்!!

நடிகர் தனுஷை மகன் என உரிமைக் கோரிய மேலூர் தம்பதி தங்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பிரபல நடிகர் தனுஷ் தங்களின் மகன் என மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி வழக்கு தொடர்ந்த நிலையில் அதை ரத்து செய்து கடந்த ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்கள் போலியானது என மதுரை புதூர் காவல் நிலையம் மற்றும் காவல்துறை ஆணையரிடம் கடந்தாண்டு கதிரேசன் புகார் அளித்தார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கதிரேசன் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

ரணிலை பிரதமர் பதவிலியிருந்து தூக்கிய மைத்திரி!!

பிரதமர் ரணில் விச்ரமசிங்கவை பதவிலியிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கியிருப்பதாக மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

பிரதமராக பதிவியேற்ற மகிந்த : மைத்திரி – மகிந்த செய்த முதல் காரியம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச பிதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பதவி பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

இதனால் கொழும்பு அரசியல் பெரும் பரபரப்பை அடைந்துள்ளது. இந்நலையில், ஜனாதிபதியும், பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவும் சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்த சமய வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-தமிழ்வின்-

ரணில் விக்ரமசிங்கவே இந்த நாட்டின் பிரதமர் : ஐ.தே.க திட்டவட்டம்!!

ரணில் விக்ரமசிங்கவே இந்த நாட்டின் பிரதமர் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி செய்து கொண்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டது அரசியல் அமைப்பிற்கு முரணானது என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் அமைப்பின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்க முடியாது எனவும் எனவே அவரே நாட்டின் பிரதமர் எனவும் அஜித் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

கடும் நெருக்கடியில் கொழும்பு அரசியல் : மகிந்தவுக்கு ஆதரவாக அமைச்சர் ரிஷாட்!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவியேற்றுள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சற்று முன்னர் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

சமகால அரசின் பிரதமர் நானே : ரணில் அதிரடி அறிவிப்பு!!

சமகால அரசாங்கத்தின் பிரதமராக நானே உள்ளேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். எனினும் நானே நாட்டின் பிரதமர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு விரோதமான முறையில் மஹிந்த பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ரணில் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியலமைப்பு நடைமுறைகளை மீறி மஹிந்தவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு அவ்வாறு பிரதமர் பதவி வழங்க முடியாது. அது சட்டவிரோத செயல் என ரணில் சுட்டிக்காட்டியள்ளார்

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவேன் என ரணில் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு : முப்படையினர் களத்தில் குவிப்பு!!

ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, பெருமளவிலான பொலிஸார் ஜனாதிபதி செயலகத்தை சுற்றி குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு கடமைகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மகிந்தவின் ஆதரவாளர்கள் பெருமளவிலானோர் திரண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு அரசியலில் அதிரடி : புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றார்!!

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

குறித்த அறிவிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின பொது செயலாளர் மகிந்த அமரவீர சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

மேலும் விலகுவது குறித்த கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

-அத தெரண-

ஜோதிடத்தில் கணிக்கப்பட்ட மரணம் : தனது உயிரை காப்பாற்ற கூலிப்படை உதவியுடன் மனைவியை கொன்று எரித்த கணவன்!!

தர்மபுரி மாவட்டத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு தனது இரண்டாவது மனைவியை எரித்து கொலை செய்து கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மூர்த்தியின் முதல் மனைவி சாலா, இவர்களுக்கு 2மகன்கள், 1மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4ஆண்டுகளுக்கு முன் இவரை பிரிந்து சாலா சென்று விட்டார்.

கடந்த ஓராண்டிற்கு முன், பெங்களூரை சேர்ந்த துர்காதேவி என்பவரை 2வதாக மூர்த்தி திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் மூர்த்தி ஜோதிடம் பார்த்துள்ளார்.

அப்போது துர்காதேவிக்கு நாக தோஷம் இருப்பதாகவும், அதன் மூலம் மூர்த்தியின் உயிருக்கு ஆபத்து எனவும் ஜோதிடர் கூறியுள்ளார்.

இதனால், கூலிப்படை உதவியுடன் மனைவியை கொலை செய்ய மூர்த்தி திட்டமிட்டுள்ளார். 3 பேருடன் சேர்ந்து மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து பெட்ரோல் ஊற்ற எரித்துள்ளார்.

இதையடுத்து கொலைக்கு காரணமான 3 பேருடன் சேர்ந்து மூர்த்தியும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மனைவிக்கு 10 முறை பிரசவம் பார்த்த கணவன் : 11 குழந்தைகள், 4 பேரக்குழந்தைகள்.. மீண்டும் கர்ப்பமான மனைவி!!

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே 10 முறை பிரசவம் பார்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணன் என்பவரது மனைவி சாந்தி (45). இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. இதில் மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

மனைவியின் பிரசவத்தை இதுவரை கண்ணன் தனது வீட்டிலேயே யார் துணையுமின்றி பார்த்து வந்துள்ளார். இதில், தற்போது 8 குழந்தைகள் உயிரோடு உள்ளனர்.

இந்நிலையில் சாந்தி மீண்டும் கர்ப்பமுற்றார். இதையறிந்த அப்பகுதி சுகாதார செவிலியர்கள் சாந்தியை மருத்துவமனைக்கு வருமாறு பலமுறை அழைத்தும் வர மறுத்துள்ளார். மேலும் தன் வீட்டிலேயே கணவர் மூலம் பிரசவம் பார்த்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சாந்தியை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், அவருக்கு சோதனை செய்ததில் ரத்தசோகை இருப்பது தெரியவந்தது.

தற்போது, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சாந்திக்கு நான்கு பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் பதினோறாவது பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடவுள் அழைப்பதால் உயிரை விடுகிறேன் : தீயில் கருகி இறந்த பெண் மருத்துவரின் உருக்கமான கடிதம்!!

இந்தியாவில் பெண் மருத்துவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் நகரை சேர்ந்தவர் சிவசங்கர். இவர் மனைவி பொங்கரலா வீணா (38). வீணா அங்குள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் உள்ள ஒரு அறைக்கு சென்ற வீணா தன்னிடம் இருந்த பெட்ரோலை மேலே ஊற்றி கொண்டு தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் தீயில் முழுவதுமாக கருகி வீணா உயிரிழந்தார்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் வீணா சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டதும் தெரியவந்தது.

இதனிடையில் வீணா இறப்பதற்கு முன்னர் எழுதிய கடிதத்தில், என் கணவர் மற்றும் குழந்தைகளை நான் நேசிக்கிறேன். இப்படி ஒரு கணவர் கிடைக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். கடவுள் என்னை அழைப்பதால் உயிரை விடுகிறேன் என எழுதியுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம் செய்து ஒரு வருடம் கூட ஆகவில்லை : கின்னஸ் சாதனை தமிழருக்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (27). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது விரல் நகத்தை துளையிட்டு, 22.5 கிலோ எடையுள்ள பொருளைத் தூக்கிக் காட்டி சாதனை படைத்தார்.
ஹேமச்சந்திரனின் இந்த அரிய சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.

இதையடுத்து பல்வேறு முன்னணி தொலைக்காட்சி சேனல்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நிறைய அசாத்திய முயற்சிகளை செய்துகாட்டி பாராட்டுப் பெற்று வந்தார்.

இந்நிலையில் தனது வீட்டில் ஹேமச்சந்திரன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் செய்துகொண்டு இன்னும் ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில், அவர் உயிரை மாய்த்து கொண்டது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியா வர்த்தகர்களுக்கு வரி பொறுப்பல்ல சமூகத்தின் கடமை விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

வவுனியா வர்த்தகர்களுக்கான வழிப்புணர்வுக்கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை காலை 9மணிமுதல் பிற்பகல் 5மணிவரையும் ஓவியா விருந்தினர் விடுதியில் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் வர்த்தகர்களின் நன்மை கருதி தமிழ் மொழியில் நடாத்துவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரி பொறுப்பல்ல சமூகத்தின் கடமை எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் வரி செலுத்துபவர்கள் வரி செலுத்தாதவர்கள் அனைவருக்குமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்கத்தின் உள்நாட்டு இறைவரி சட்டத்தின் கீழான கொள்கைகள் தொடர்பான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு உங்களது சந்தேகங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் வினாக்களைக் கேட்டுக்கொள்ள முடியும்.

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் உள்நாட்டு இறைவரித்திணைக்களம், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இதனை முதல் முறையாக தமிழ் மொழியில் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இப்படியொரு பொலிஸ் அதிகாரியா? அனைவரையும் வியக்க வைக்கும் செயற்பாடு!!

இலங்கையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் யக்கல பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டி ஒன்று புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் வீதி முழுவதும் மணல் பரவி கிடந்துள்ளது. இதனால் வீதியில் ஏனைய வாகனங்களுக்கு பயணிக்க முடியாத அளவு சிரமங்கள் ஏற்பட்டது.

எனினும் அந்த மணலை அகற்ற எவரும் முன்வரவில்லை. மணலை அகற்றவில்லை என்றால் இன்னுமொரு விபத்து ஏற்படும் என்பதனால், பொலிஸ் அதிகாரி ஒருவர் தனியாக அந்த மணலை அகற்றியுள்ளார்.

பொதுவாக இலங்கை பொலிஸார் மீது தவறான பெயர் ஒன்றே உள்ள நிலையில், குறித்த அதிகாரியின் செயற்பாடு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எடுத்துக்காட்டாகும்.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

9 வருடமாக ஆட்டுக்கொட்டிலில் வசிக்கும் மாவீரரின் தந்தை!!

இறுதி யுத்தத்தின் பின்னர் தனது சொந்த இடத்தில் மீள்குடியேறிய தந்தை ஒருவர் 9 வருடமாக ஆட்டுக்கொட்டிலில் வசித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 68 வயதுடைய செ.கோபாலகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு ஆட்டுக்கொட்டிலில் வசித்து வருகின்றார்.

குறித்த தந்தையின் மகன் ஜெகதீஸ்வரன் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்து இறுதி யுத்தத்தின்போது களமாடி, கிளிநொச்சி பகுதியில் வைத்து மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேறிய காலப் பகுதியில் இருந்து தனது மனைவியுடன் ஆட்டுக்கொட்டிலில் வசித்து வந்ததாகவும், கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இவரது மனைவி கடும் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்ற அமைச்சினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் வழங்கப்பட்ட நிரந்தர வீட்டுத்திட்டம் புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதால் தனக்கு நிரந்தர வீடு கிடைக்கவில்லை என குறித்த தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவர் பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், ஆட்டுக்கொட்டிலில் இருந்து தனது வாழ்நாளை கழித்து வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.