காதலியின் உதட்டை கடித்து எறிந்த காதலன் : நீதிமன்றம் விதித்த கடும் தண்டனை!!

அமெரிக்காவில் பிரிந்து சென்ற காதலியிடம் அடையாளம் வைப்பதற்காக அவருடைய உதட்டை கடித்து எறிந்த காதலனுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கைலா ஹேய்ஸ் என்ற 17 வயது பெண், 21 வயது இளைஞரான சேத் ஆரோன் ஃப்ளூரி என்பவரை 2016ம் ஆண்டு முதல் காதலித்துள்ளார்.

இருவரும் சேர்ந்து டேட்டிங் சென்று வந்துள்ளனர். ஆரோன் தன்னை ஒரு பொருளை போன்றே நடத்துவதை உணர்ந்த கைலா, அவனிடம் இருந்து பிரிய முடிவு செய்துள்ளார்.

அப்பொழுது கப்பற்படையில் வேலை கிடைத்திருப்பதை மகிழ்ச்சியாக தெரிவிக்க ஆரோன், கைலாவை சந்திக்க சென்றுள்ளான். அங்கு நடந்த சம்பவம் பற்றி கைலா கூறுகையில், கையில் மலர்க்கொத்து மற்றும் வாழ்த்து அட்டை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.

வாழ்த்து அட்டையை படித்து முடித்ததும், என்னிடம் ஏதேனும் கூற விரும்புகிறாயா என ஆரோன் கேட்டான். நான் இனி உன்னுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை என பதிலளித்தேன். உடனே ஆத்திரமடைந்த அவன் அந்த பூங்கொத்து மற்றும் வாழ்த்து அட்டையை என்னுடைய தலையின் மீது வீசி எறிந்தான்.

இங்கிருந்து கிளம்பி விடு என கூறினான். நான் என்னுடைய கார் அருகே சென்ற போது, என்னை இழுத்து முத்தமிட முயன்றான். நான் அவனை தள்ளிவிட்டேன்.

மீண்டும் என்னிடம் நெருங்கிய அவன், என்னுடைய கீழ் உதட்டை கடித்து எறிந்தான். வலி தாங்க முடியாமல் நான் கத்த ஆரம்பித்துவிட்டேன். பின்னர் என்னுடைய தலைமுடியை பிடித்து கன்னத்தில் அறைந்தான் என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு கைலாவிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. அதில் 300 தையல்கள் போடப்பட்டன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆரோன் கடந்த 18ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டான்.

அப்பொழுது வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

வவுனியாவில் புதிதாக அமைக்கபட்ட அழகிய வீடு வாடகைக்கு +94776703232

வவுனியாவில்  கோவில்குளம் சிவன்கோவிலுக்கு அண்மையில்  புத்தம் புதிதாய்  அமைக்கபட்ட  அழகிய வீடு வாடகைக்கு

நிறுவனங்கள்

மற்றும்

விசேட  வைபவங்களுக்கும் வாடகைக்கு பெற்று கொள்ளமுடியும்.

தொடர்புகளுக்கு :0776703232



மஹிந்தவிற்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய மைத்திரி : ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பூரண சுதந்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

புதிய அமைச்சரவையை நிறுவுவதற்கான முழு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவிற்கு வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் எந்தவொரு பதவிக்கும் எவரையும் நியமிக்கும் பூரண அதிகாரம் மஹிந்தவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஐ.தே.கவின் ஆனந்த அலுத்கமகே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மஹிந்த ராஜபக்சவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டது.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் மஹிந்தவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவருமான துமிந்த திஸாநாயக்க வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னை கொலை செய்யும் கும்பலில் பொன்சேகா உட்பட பலர் உள்ளனர் : ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

தம்மை கொலை செய்யும் திட்டத்துடன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் அது அரசியல் காரணமாக மறைக்கப்பட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதுவே மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கான காரணம் என்று அவர் நேற்று இரவு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில் தம்மை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட விடயத்துக்கு பின்னால் மற்றும் ஒரு முக்கியஸ்தரின் பெயர் உள்ளதென்று குறிப்பிட்ட அவர், விசாரணைகள் முடிவடையாத காரணத்தினால் அதனை வெளியிட முடியாது என்று தெரிவித்தார்.

அந்தப் பெயரை தெரிந்துக் கொண்டால் மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்றும் மைத்திரி தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

மகிந்தவின் ஆட்சியில் முன்னரைவிட கடுமையாக உழைப்பேன் : உறுதிமொழி எடுத்த டக்ளஸ்!!

நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது, மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து யுத்தமில்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம் என்ற நம்பிக்கையுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ஈ.பி.டி.பின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்படுவதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிபீடமேற்றியதாக கூறிய கடந்த ஆட்சியில் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி வாக்குகளை அபகரித்தவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளான அரசியல் தீர்வு மற்றும் காணாமல் போனோர் விவகாரம், காணிகள் மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை, எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு உரியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டத் தவறியிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளிவிட்டு தமது சுயலாப அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்ததால், தமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்காக வீதியில் இறங்கிப்போராடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

பல தசாப்தங்களுக்கு மேலாக யுத்த அழிவுகளுக்கு முகம்கொடுத்து வந்துள்ள எமது மக்களுக்கு,வாழ்க்கைச் சுமையும், விலைவாசி உயர்வும் மேலும் துயரத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி,பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் என்றும்,எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப அதற்கான முயற்சிகளையும், வழிகாட்டல்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வழங்கும் என்றும் தெரிவித்ததுடன்,

இதேவேளை பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள மாகாணசபைகளுக்கு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் மாகாணசபையை பொறுப்பேற்று நடத்தும் சூழலை உருவாக்கவும், பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் நம்புகின்றோம்.

முன்னர் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது, மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து யுத்தமில்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மகன்கள் இருந்தும் முதியவர்களுக்கு நடந்த சோகம் : நெஞ்சைப் பிசையும் சம்பவம்!!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் குடிசை வீட்டுக்குள்ளிருந்து வயதான தம்பதியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தம்பதிகள் உணவு இன்றி பட்டினியால் சில நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சாரோடு பகுதியில் வயல்காட்டுக்குள் தன்னந்தனியாக அமைந்துள்ள குடிசை வீட்டில் செல்லம் (85), தங்கம்மை (80) தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர்.

அவர்களது இரண்டு மகன்களும், திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இதனால் முதியவர்களான இந்தத் தம்பதி தங்களுக்குக் கிடைத்த உணவை உட்கொண்டு வாழ்க்கையை நடத்தினர்.

இவர்கள் வசிக்கும் குடிசை அருகே வேறு குடியிருப்புகள் எதுவும் இல்லை. எனவே, இந்தத் தம்பதி குறித்து கவலைப்பட நாதியில்லாமல் போய்விட்டது.

இந்த நிலையில் அவ்வழியாக சென்ற ஒருவர் குடிசைக்குள் துர்நாற்றம் வீசியியதை அறிந்து சந்தேகத்தின்பேரில் குடிசைக்குள் சென்று பார்த்திருக்கிறார்.

அங்கு முதிய தம்பதியின் சடலங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அவர்களின் மகன்களும் வரவழைக்கப்பட்டனர்.

வயலுக்குள் இருந்த வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்குச் சடலத்தை தூக்கிச்செல்ல, சுமை தூக்கும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

சுமைதூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது.

முதியவர்கள் இருவரின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12வது குழந்தை : அடம்பிடிக்கும் நிறைமாத கர்ப்பிணி!!

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 48 வயது பெண் ஒருவர் தமது 12 வது குழந்தையை வீட்டிலேயே சுகப்பிரசவம் மூலம்தான் பெற்றெடுப்பேன் என்று போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி கீழத்தெருவில் வசிக்கும் கண்ணன் சந்தி தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளிட்ட 8 பிள்ளைகள் உள்ளன. இதுமட்டுமின்றி, சாந்தியின் 2 குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டனர்.

இந்நிலையில், சாந்தி தற்போது 12வது முறையாக கர்பமாகியுள்ளார். அவரை வீட்டில் சென்று பரிசோதனை செய்துவரும் கிராம சுகாதார செவிலியர் சுப்புலட்சுமி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சாந்தியை பலமுறை அழைத்துள்ளார்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்ல மறுத்த சாந்தி தன்னை அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்து குடும்பக்கட்டுப்பாடு செய்துவிடுவீர்கள்.

அதனால் நான் மருத்துவமனைக்கெல்லாம் வரமாட்டேன் என்று கூறிவந்ததோடு தான் வீட்டிலேயே 11 குழந்தைகளை பெற்றுள்ளேன், அதேபோல் இந்தமுறையும் வீட்டில்தான் குழந்தை பெற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சாந்தியின் வீட்டிற்கு சென்ற கிராம சுகாதார செவிலியர் அவரை அழைத்துக்கொண்டு முசிறி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது சாந்திக்கு ரத்தம் குறைவாக உள்ளதை உறுதிசெய்துள்ளனர். அதன் பின்னர் ரத்தம் ஏற்றுவதற்காக முழு ஏற்பாடுகளையும் செய்த மருத்துவக்குழுவினர் சாந்தி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மருத்துவ குழுவினர் வருவதை அறிந்த சாந்தி அங்கிருந்து முசிறி காவிரி ஆற்று அக்ரஹார படித்துறை பகுதியில் தலைமறைவாகியுள்ளார்.

அங்கு சென்று மருத்துவக்குழுவினர் பார்த்தபோது காவிரி ஆற்றில் தண்ணீருக்குள் ஒளிந்துகொண்டார்.

பின்னர் அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்த மருத்துவக்குழுவினர் நீண்ட நேரமாக போராடியும் சாந்தி மருத்துவமனைக்கு வர மறுத்துவந்தார்.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் அளித்த கிராம சுகாதார செவிலியர், பொலிசாரின் அறிவுரைப்படி சாந்தியை முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

சற்றுமுன் ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

நாட்டின் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலேயே நான் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்றுமுன் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெரும்பான்மை பலம் யாருக்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கும். அந்த வகையில் நாட்டின் பிரதமர் யார் என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மனோ கனேசன், சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் : அதிரடியாக தடை விதித்த ஜனாதிபதி!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை அடுத்து நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை சபாநாயகர் அனுமதித்த போதும், ஜனாதிபதி அதற்கு தடை விதித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் ஆராய நாளை உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜெயசூரியவுக்கு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் கருஜெயசூரிய தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அதிரடியாக ஒத்திவைத்துள்ளார்.

திங்கட் கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதாக சபாநாயகர் தெரிவித்திருந்த போதும் ஜனாதிபதி தலையிட்டு இரண்டு வாரங்களுக்கு அதை ஒத்திவைத்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானதை கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

வவுனியாவில் இன்று காலை பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள கொப்பேக்கடுவ நினைவுச்சிலையருகில் நேற்று மாலை கொழும்பில் பிரதமராக பதிவியேற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக பட்டாசு கொழுத்தி அவரின் ஆதரவாளர்களினால் வெற்றிக்கொண்டாட்டம் இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கொப்பேகடுவ நினைவுச் சிலையருகில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபாலா செனவிரத்ன தலைமையில் மஹிந்த ராஜபச்சவின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து கொப்பேகடுவ சிலைக்கு தேசியக்கொடி அணிவித்து, மலர் மாலை அணிவித்து பட்டாசுகள் கொழுத்தி ஆர்ப்பரிப்பு செய்தனர். இதன்போது கலந்துகொண்டவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தி கோஷமிட்டனர்.

யாருக்கு ஆதரவு? முக்கியமான தமிழ் கட்சிகள் சிலவற்றின் இறுதித் தீர்மானம் வெளியானது!!

நேற்று இரவு புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக்ஸவும், அரசியல் யாப்பின்படி நானே பிரதமர் என அறிவித்துள்ள ரணில் விக்ரமசிங்கவும் தமது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அந்த வகையில் பலத்தை நிரூபிப்பதற்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு என்பது முக்கியமாக கருதப்படுகின்றது. இதனால் சிறுபான்மை கட்சிகள் சில தமது ஆதரவு யாருக்கு என்பதை வெளியிட்டு வருகின்றன.

சிறுபான்மை கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் தமது ஆதரவு யாருக்கு என்ற செய்தியை வெளியிட்டுள்ளன.

அந்த வகையில் தமத ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கே என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் 7 ஆசனங்களை தம் வசம் கொண்டுள்ளது.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது ஆதரவு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸவுக்கே என தெரிவித்துள்ளது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் 2 ஆசனங்களை கொண்டுள்ளது.

மேலும், ஈ.பி.டி.பி கட்சியும் தமது ஆதரவு மஹிந்த ராஜபக்ஸவுக்கே என தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் 1 ஆசனங்களை கொண்டுள்ள ஈ.பி.டி.பி கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் 6 ஆசனங்களை தம்வசம் கொண்டுள்ள மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தமது தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தமது ஆதரவு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கே என தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் அவரை சந்தித்த ஆனந்த சங்கரி, புதிய பிரதமருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் மர்ம நபர்கள் தாக்குதல் : தாயும் மகளும் வைத்தியசாலையில்!!

 

வவுனியாவில் முகமூடி அணிந்த இளைஞர் குழுவினால் வீடு ஒன்றும் உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (26.10) இரவு ஐந்து நபர்கள் கொண்ட கும்பல் வீட்டினுள் புகுந்து அங்கிருந்த தாயையும், மகளையும் தாக்கியதுடன் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், வீட்டின் யன்னல் கதவுகள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றையும் அடித்து நொருக்கிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

மேலும் இத்தாக்குதலுக்கு இலக்காகிய தாயும் மகளும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதேவேளை குறித்த நபர்கள் முகத்தை மூடிமறைத்துகொண்டு வந்ததுடன் தலைக்கவசமும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா நெளுக்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ரணிலை பதவியில் இருந்து நீக்கியது ஏன்? உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்தமை, நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடைய செய்தமை, நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தமை உட்பட பல விடயங்களின் அடிப்படையில் பிரதமரை பதவி நீக்க தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை அரசியலமைப்பின் 42(4) சரத்திற்கு அமைய, இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பிரதமராக தங்களை நியமித்த தான், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, உடன் அமுலுக்கு வரும் வகையில், பிரதமர் பதவியிலிருந்து தங்களை நீக்குவதாக இதனூடாக அறியத் தருகின்றேன் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி : நாட்டில் இரண்டு பிரதமர் : நடக்கப் போவது என்ன?

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றம் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எந்தவித முன் அறிவிப்பும் இல்லாத நிலையில், தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு விலகியது.

இதனையடுத்து புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த பதவியேற்று விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், துறைசார் நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அரசாங்கத்தில் இருந்து விலகியதாக சபாநாயகரிடம் முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

எனினும் எவ்வாறான மாற்றம் ஏற்பட்ட போதிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் பிரதமர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி செயலகம், சமகால அமைச்சரவையை கலைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு, மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு. அது அரசியலமைப்பிற்கு எதிரான மற்றும் சட்டவிரோத செயல் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகியவுடன், அரசாங்கத்தை கலைக்க முடியாதென சட்டத்தரணி அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். எனவே பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதும் வேறு பிரதமரை நியமிப்பதும் சட்டவிரோதமான செயல் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் குழுவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் தான் இன்னும் பிரதமாக செயற்படுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் அடுத்த பிரதமர் யார் என்பது தொடர்பில் கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

தோழியின் 54 வயது தந்தையை மணந்த 27 வயது இளம்பெண்!!

 

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது உயிர்த் தோழியின் 54 வயது தந்தையை திருமணம் செய்துள்ளார். அரிசோனாவின் பீனிக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் டெய்லர்(27). இவருக்கு வேலை பார்க்கும் இடத்தில் அமெண்டா எனும் தோழி உள்ளார். ஒருமுறை அமெண்டாவின் தந்தை கெர்ன் லேமனை சந்தித்துள்ளார் டெய்லர்.

அதனைத் தொடர்ந்து லேமனுக்கும், டெய்லருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்துள்ளது. அதன் பின்னர், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது, இரண்டு பேரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தோழி அமெண்டாவுக்கும் இதில் விருப்பமில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், லேமன்-டெய்லர் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து டெய்லர் கூறுகையில், ‘முதன் முதலாக லேமனை சந்தித்தபோதே பிடித்தது. இருவருக்கும் இசை, பயணம், திரைப்படத்தில் ஒத்த ரசனை இருந்தது. அது காதலாக மாறியபோது தோழியின் தந்தையைத் திருமணம் செய்ய முயற்சிக்கிறோமே என்று குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டேன்.

ஆனால், அமெண்டா என்னைப் புரிந்துகொண்டார். அதனால் விரைவிலேயே அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். கடந்த ஆண்டு மெக்சிகோவில் 25 நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.

என்னை விட வயதில் மிகவும் மூத்தவர் என்பதால், அவரின் வருங்காலம் குறித்து என் நண்பர்கள் அச்சம் தெரிவித்தனர். நாளையே கூட நான் முதலில் விபத்தால் இறந்துவிடலாம். என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இன்றைய நாளை மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

கற்பை நிரூபிக்க எரியும் நெருப்பில் மனைவியை சுட்ட கணவனின் அதிர்ச்சி செயல்!!

மனைவியின் கற்பை நிரூபிக்க எரியும் நெருப்பில் கையை சுட்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் நம்பிக்கையில்லை எனக் கூறி அவரது கணவர் வீட்டார் பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்த மந்திரவாதி எரியும் நெருப்பில் கை வைக்குமாறும், சூடு படாதவர்கள் பொய் சொல்லவில்லை என அர்த்தம் எனவும் கூறியுள்ளார்.

முதலில் நெருப்பை நோக்கி கை வைத்த கணவர், சில நொடிகளில் கையை எடுத்துள்ளார். அவரது மனைவி கைவைத்தபோது, கையை நெருப்பிலிருந்து அகற்றாமல் கணவர் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டார்.

கற்பை நிரூபிக்க நெருப்பில் நீண்ட நேரம் வலுக்கட்டாயமாக கையை வைத்திருந்த பெண்ணின் கைது வெந்து போனது. இதுகுறித்த படம் வைரலானதை அடுத்து பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.