அவமானம் தாங்காமல் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்!!

மும்பையில் இருவேறு இடங்களில் அவமானம் தாங்காமல் அடுத்தடுத்து இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை KD Gaikwad பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருபவர் ஜூலி ஷர்மா. இவர் நேற்று பள்ளியிலிருந்து மதியம் வீடு திரும்பும்பொழுது அழுதுகொண்டே வந்துள்ளார்.

இதனை பார்த்த பெற்றோர் நடந்தவை பற்றி விவரிக்கும்போது, பள்ளியில் அனைவரின் முன்னிலும் அணில் பால் என்ற ஆசிரியர் திட்டத்தியதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து தன்னுடைய அறைக்கு சென்ற சிறுமி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக திரண்ட உறவினர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பேரில் இந்திய தண்டனை சட்டம் 306-ன் படி ஆசிரியரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேபோல 10-ம் வகுப்பு படிக்கும் சலானி என்ற மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், வரும் தேர்விற்காக நன்கு படிக்குமாறு அவருடைய தாய் வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே விவாதம் முற்றியுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து ரெண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்திற் ஏற்படுத்தியுள்ளது.

பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பிச்சையெடுக்கும் குழந்தைகள் : நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!!

இந்தோனேஷியாவில் நிலநடுக்க மற்றும் சுனாமியின் பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சாப்பிட்டிற்காக பிச்சை எடுப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இந்தோனேஷியாவின் Sulawesi பகுதியில் ஏற்பட்ட பயங்கர் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் காரணமாக 1763-பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த இயற்கை பேரழிவு காரணமாக சுமார் 160,000 வீடுகள் தரைமட்டமாகின, 66,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5000 பேர் காணமல் போயுள்ளதால், அவர்கள் இறந்துவிட்டார்களா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இந்தோனேஷியா மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் தங்கள் புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் போன்றவைகளை இழந்துள்ளன.

ஏராளமான பள்ளிக் கூடங்களும் சேதமடைந்துள்ளதால், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. அரசின் உதவி போதுமான அளவிற்கு மக்களுக்கு கிடைக்காததால், உணவிற்கு தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக அங்கிருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், முக்கிய தேசிய சாலையில் நின்று கொண்டு உதவும் படி கேட்டு பிச்சை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், தங்களுக்கு உதவும் படி ஏராளமான குழந்தைகள் நகரின் முக்கிய சாலையில் பலகை ஒன்றை வைத்துக் கொண்டு, அந்த வழியே செல்லும் லாரி போன்ற வாகனங்களின் டிரைவர்களிடம் பிச்சை எடுத்து வருகின்றனர்.

அதில் இருக்கும் ஒரு குழந்தையிடம் இது குறித்து கேட்ட போது, எங்கள் வீடு சுத்தமாக இல்லை, பொம்மைகளும் இல்லை. என்னால் வெளியில் விளையாடவும் முடியவில்லை, பள்ளிக்கும் செல்ல முடியவில்லை, மக்கள் உணவு மற்றும் பானங்கள் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்.

இது போன்ற பல குழந்தைகள் உதவி கேட்டு பலகை தங்கள் உடம்பில் வைத்துக் கொண்டும், பாத்திரத்தை நீட்டுவது தொடர்பான புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்த மனைவி : சினிமாவை மிஞ்சிய மனைவின் வாக்குமூலம்!!

தேனி மாவட்டத்தில் பிரதோஸ் என்ற பெண் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து முகமது சமீரை தீர்த்துக் கட்டிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

மங்களுரை சேர்ந்த கார் டிரைவர் முகமது யாசிக் என்பவருடன் பிரதோசுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவர் முகமது சமீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அவர் மனைவி பிரதோஸ், 6 மாத ஆண் குழந்தையுடன் பெங்களுருவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார்.

அந்த காரை, முகமது யாசிக் ஓட்டினார். இந்த நிலையில் பிரதோஸ், தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து முகமது சமீரை கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசி சென்றது தெரிய வந்தது.

தனிப்படை பொலிசார் நடத்திய விசாரணையில் பிரதோஸ், கள்ளக்காதலுடன் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை பொலிசார் பெங்களூரு சென்று பிரதோஸை கைது செய்தனர்.

அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், முகமது சமீர் அரபு நாட்டிலிருந்து வருடத்துக்கு ஒரு முறை தான் சொந்த ஊருக்கு வருவார்.

இதனால் மல்லாகாப்பில் உள்ள பெற்றோர் வீட்டில் பிரதோஸ் அடிக்கடி சென்று தங்கி வந்தார். பெற்றோர் வீட்டின் அருகே டிரைவர் முகமது யாசிக்கின் சித்தி வீடு இருந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கடந்த மாதம் 13ம் தேதி முகமது சமீர் சொந்த ஊருக்கு வந்தார். 15ந் தேதி காரில் அவர் குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றார். காரை முகமது யாசிக் ஓட்டினார். அப்போது முகமது சமீரை கொலை செய்ய பிரதோஸ் முகமது யாசிக்குடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

இதற்காக இளநீரில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார். இதில் மயங்கிய அவரை இறந்துவிட்டதாக நினைத்து காரின் பின் சீட்டில் உட்கார்ந்த நிலையில் வைத்து கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களுக்கு சென்றனர்.

அங்கு காட்டு பகுதியில் உடலை வீசி விடலாம் என்று முடிவு செய்துள்ளனா. அது முடியாமல் போகவே கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசி விடலாம் என்று புறப்பட்டு வந்தனர்.

அப்போது ஓசூர் அருகே வந்த போது குழந்தை அழுத சத்தம் கேட்டு முகமது சமீர் முனங்கி உள்ளார். இதையடுத்து அவர் இறக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. உடனே அங்கு கொலை செய்ய கத்தி ஒன்றை முகமது யாசிக் வாங்கியுள்ளார்.

பின்னர் கொடைக்கானல் மலைப்பாதையில் பட்டறைப் பாறை அருகே வைத்து 2 பேரும் சேர்ந்து முகமது சமீரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து உடலை வீசிச் சென்றுள்ளனர். தற்போது குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காதலியை இணையத்தில் ஏலம் விட்ட காதலன் : அதன் பின் என்ன நடந்தது தெரியுமா?

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தன் காதலியை ஆன் லைனில் விற்க முயன்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் எசக்ஸ் பகுதியைச் சேர்ந்த டேல் லீக்ஸ் என்பவர் தன் காதலியுடன் ஏற்பட்ட சின்ன சண்டை காரணமாக காதலியை பழிவாங்குவதற்காக ஒரு விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் திகதி தன் காதலியின் புகைப்படத்தை பிரபல இணையதளமான E-bay-யின் வணிக நிறுவனத்தின் தளத்தில் Girlfriend for sale என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.

அதில் காதலியான கெல்லியின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து, அதற்கு கீழ் அவரைப் பற்றி மோசமாக குறிப்புகளை எழுதியுள்ளார்.

டேல் கெல்லியின் புகைப்படத்தை பதிந்த சில மணிநேரத்தில் இ-பே தளம் இங்கு மனித உறுப்புகளை விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது என்று எச்சரிக்கை தகவல் கொடுத்து, கெல்லியின் புகைப்படத்தை தளத்தில் இருந்து நீக்கிவிட்டது.

ஆனால், அதற்குள் கெல்லி விற்பனைக்கு என்னும் விளம்பரத்தை ஆயிரக்கணக்கானோர் பார்த்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் ஏலத்துக்கான மதிப்பையும் பதிவு செய்தனர்.

விளம்பரம் நீக்கப்படுவதற்கு முன் ஏலத்தின் மதிப்பு இலங்கை ரூபாயில் 1,56,36,603 ஆக இருந்தது. விளம்பரத்துக்குக் கீழே டேல்லை விமர்சித்தும் திட்டித் தீர்த்தும் கமென்ட் செய்திருந்தனர். உன் காதலியை நான் வாங்கி கொள்கிறேன் என்று பலர் பதிவிட்டிருந்தனர்.

ஆனால் கெல்லியுடன் டெல் அன்றே சமாதானம் ஆகிவிட்டதால், புகைப்படத்தை இ-பே தளத்தில் பதிவிட்டிருந்ததை மறந்து அன்றாட வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கெல்லியுடன் டின்னருக்குச் சென்ற டேல்லுக்கு, இ-பே விளம்பரம் குறித்து நினைவுவர, உடனடியாக மொபைலை எடுத்துப் பார்த்தார். அவரின் விளம்பரம் நீக்கப்பட்டிருந்தது. கூடவே ஆயிரக்கணக்கான மெசெஜ்களும் வந்திருந்தன. அதிர்ச்சியில் உறைந்த டேல், இந்த விஷயத்தை கெல்லியிடம் கூறினார்.

முதலில் விஷயத்தை விழுந்து விழுந்து சிரித்த கெல்லி, இனி இப்படிச் செய்யக் கூடாது எனக் எச்சரித்துள்ளார்.

20 பெண்களை கொன்று சடலங்களை நாய்க்கு உணவாக்கிய கொடூரன் : வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

மெக்சிகோ நாட்டில் மனைவியின் துணையுடன் 20 பெண்களை கொன்று சடலங்களை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்கிய கொடூரனை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த அந்த நபர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மெக்சிகோவின் Ecatepec பகுதியில் குடியிருந்து வருபவர் ஜுவான் கார்லோஸ் மற்றும் அவரது மனைவி பெட்ரீசியா.

Ecatepec பகுதியில் திடீரென்று இளம் பெண்கள் மாயமான விவகாரத்தில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் ஜுவான் கார்லோஸின் குடியிருப்பில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்தே அந்த தம்பதிகளை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தமது மனைவியால் ஏமாற்றி குடியிருப்புக்கு அழைத்து வரப்படும் இளம் பெண்களை ஜுவான் கர்லோஸ் கழுத்தை அறுத்து கொலை செய்வதாகவும், அதன் பின்னர் அந்த சடலத்துடன் பாலியல் உறவு கொள்வதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான். பின்னர் அந்த சடலங்களை துண்டு துண்டாக வெட்டி வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்கியுள்ளனர்.

முதலில் பொலிசாரின் விசாரணையில் ஜுவான் 10 கொலைகள் வரை செய்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் 20 பெண்கள் என தெரியவந்தது.

ஞாயிறன்று நடந்த நீதிமன்ற விசாரணையில், குறித்த நபர் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என்பதால் விசாரணை முடியும் மட்டும் சிறையிலேயே இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரவு தூங்கும் போது ஒரு பல் பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா?

உணவு வகைகளில் சேர்க்கப்படும் பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பொருளாகும். பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பூண்டை காதில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

உடல் வலி : சிறுதுண்டு பூண்டை காதின் உள்ளே வைத்து அடக்கி கொண்டால் உடல்வலி குறையும், இதை செய்த பின்னர் உடல் ரிலாக்சாக இருப்பதை உணரலாம்.

காது வலி : காதில் பூண்டை வைத்தால் வீக்கம், தலைவலி, காய்ச்சல், காது வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும். முக்கியமாக ஒரு பல் பூண்டை இரவு காதில் வைத்து காலையில் எழுந்தால் காதுவலி இருந்த இடம் தெரியாமல் போகும்.

தொடர் இருமல் : தொடர் இருமல் காரணமாக அவதிபடுபவர்கள் பூண்டு மற்றும் தேன் கலந்து அதை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை அகலும்.

இதயத்தின் ஆரோக்கியம் : பூண்டு நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தினமும் காலை இரண்டு பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் நல்லது.

உயர் ரத்த அழுத்தம் : பூண்டானது நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்து ரத்த ஓட்டத்தை சிராக்குகிறது. உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களை சாப்பிடலாம்.

படர்தாமைரை : படர்தாமைரை, கால் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு சிறந்த நிவாரணியாகும். பாதிப்பு உள்ள இடத்தில் பூண்டு எண்ணெய்யை தடவினால் விரைவில் பிரச்சனை தீரும்.

கீல்வாதத்தால் : பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் கீல்வாத நோய் குணமாகும்.

பல்வலி : பூண்டில் உள்ள வலி நிவாரணி குணங்கள் பல்வலியை சரி செய்யும் வல்லமை கொண்டதாகும். பூண்டு எண்ணெய் அல்லது பூண்டு துண்டை வலி இருக்கும் பகுதியில் வைத்தால் உடனடியாக வலி குறையும்.

வவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு!!

வவுனியா, நெடுங்கேணி ஒலுமடு அ.த.க பாடசாலை ஒலுமடு  தமிழ் மகாவித்தியாலயம்   என்ற பெயரில் 1C பாடசாலையாக தரம்  உயர்த்தப்பட்டுள்ளது .

1976ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒலுமடு பாடசாலை, அப்பகுதி மக்களினால் வட மாகாண கல்வி அமைச்சுக்கு மகாவித்தியாலயமாக தரமுயர்த்துமாறு தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைக்கு அமைய மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அப்பாடசாலையில் உயர்தரவகுப்புகளும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைக்கென்று அமைக்கப்பட்ட இரு கட்டிடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலையின் அதிபர் கு.விமலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் பிரதம அதிதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், எம்.தியாகராசா, வவுனியா வடக்கு பிரதேசசபையின் உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தினை சேர்ந்த ஆசிரியர் ம.பகீரதனின் நிகழ்ச்சித்தொகுப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையில் இருந்து பல்வேறு துறைகளிலும் பிரகாசித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

தனது சகோதரிக்கு பயந்து கோழிக்கூட்டுக்குள் வாழும் இளைஞன்!!

மாத்தளை மாவட்டத்தில் கலேவல – இப்பன்கட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதான இளைஞனொருவர் தனது சகோதரிக்கு பயந்து கோழிக்கூட்டுக்குள் வாழ்ந்து வருகின்றமை தொடர்பாக தகவல் வெளியாகியுளள்ளது.

கலேவல பிரதேசத்தில் வசிக்கும் இந்த சகோதரனும், சகோதரியும் ஊனமுற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்து ஒருவருக்கொருவர் எதிராக செயல்படுவதால், இருவரும் அருகில் இருக்க முடியாது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, குறித்த இருவரின் பெற்றோர் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் மூத்த மகனுக்கு தப்போது 29 வயதாகிய நிலையில், அவர் பிறப்பிலிருந்து ஒரு ஊனமுற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பெற்றோருக்கு இரண்டாவதாக மகள் பிறந்துள்ளார். அந்த மகளுக்கு தப்போது 17 வயது எனவும், அவளும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது இரண்டு பிள்ளைகள் தொடர்பாக தாய் கருத்துத் தெரிவிக்கையில்,

இரண்டு பிள்ளைகளையும் இளம் வயதிலேயே என்னுடைய கணவரிடம் விட்டு வெளிநாடு சென்றேன். இரண்ட வருடங்களுக்கு மேல் வெளிநாட்டில் தொழில் செய்து உழைத்த பணத்திலே வீடு கட்டினேன் என குறிப்பிட்டுள்ளார்.

இப்போது, ஊனமுற்ற தங்களின் இரு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக இருவரும் நிறைய வேலைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். குறித்த பிள்ளைகளின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,

அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் வைக்க முடியாது. சில நேரங்களில் அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை தடுக்க முடியாது போகும்.

மகள் தன் சகோதரருடன் எப்போதும் கோபமாக இருக்கிறார். தனது சகோதரனைப் பார்க்க அவள் விரும்பவில்லை.

இந்த நிலையில், வீட்டுக்கு பின்னால் உள்ள தங்களின் கோழிக்கூட்டில் பாதிக்கப்பட்ட தனது மகளை தங்க வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தாங்கள் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார கஷ்டங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளையும் பராமரிப்பது கஸ்டம் என தெரிவிததுள்ளார்.

இரண்டு கைகளாலும் பந்துவீசி இங்கிலாந்து வீரர்களை மிரளவைத்த இலங்கை பந்துவீச்சாளர்!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினார்.

இங்கிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்து அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

இதில் முதல் பயிற்சி ஆட்டம் கடந்த 5ஆம் திகதி Sri Lanka XI அணியுடன் மோதியது. இதில் டக்வெர்த் லிவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீசி அசத்தினார். குறிப்பாக இவர் ஒரே ஓவரில் வலது மற்றும் இடது கைகளில் மாற்றி பந்து வீசினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவரின் பந்துவீச்சுத் திறமையைக் கண்டு இங்கிலாந்து வீரர்கள் மிரண்டு போயினர். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை தொடரில் இவர் இரண்டு கைகளிலும் பந்து வீசி அனைவரையும் மிரட்டியுள்ளார்.

வவுனியாவில் முதலிடம் பெற்ற ஹன்சிகாவின் வீட்டிற்கு சென்ற வட மாகாணசபை உறுப்பினர்!!

புலமைப்பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும், மாவட்ட ரீதியாக முதலிடத்தையும் பெற்ற மாணவியான ஹர்த்திக் ஹன்சிகாவின் வீட்டிற்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் சென்றுள்ளார்.

சிவபுரம் அ.த.க பாடசாலை மாணவியான ஹன்சிகாவின் வீட்டிற்கு மாகாணசபை உறுப்பினர் நேற்றைய தினம் சென்றுள்ளார்.

இதன்போது அவர் மாணவியை பாராட்டி கௌரவித்ததுடன், தொடர்ந்தும் கல்வியில் ஊக்கத்துடன் ஈடுபட்டு சமூகத்தில் உச்ச நிலைக்கு வளர வேண்டுமென வாழ்த்தியுள்ளார்.

வவுனியாவில் தபால் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கை!!

வவுனியாவில் தபால் தினத்தை முன்னிட்டு இன்று காலை பழைய பேருந்து நிலையப்பகுதிகளில் விழிப்புணர்வு செயற்றிட்டம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் தபால் சேவைகளின் விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்கள், வியாபார நிலையங்களுக்கு விநியோகம் செய்து தபால் தினத்தை அனுஷ்டித்தனர்.

வவுனியாவில் உளவள ஆலோசனை தொழிற்பயிற்சி கருத்தரங்கு!!

இளைஞர், யுவதிகளுக்கான உளவள ஆலோசனை தொழிற்பயிற்சி கருத்தரங்கு இன்று (08.10) வவுனியாவில் இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய வடக்கு இணைப்பாளர் ஜெ.ஆர்.வினீத்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

சமூதாய சீர்திருத்த திணைக்களமும், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய வடக்கு பிராந்தியமும் இணைந்து நடாத்திய இத் தொழிற்பயிற்சி கருத்தரங்கில் 75 இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.

இச்செயலமர்வில் திறன்களை வளத்துக் கொள்வதற்கான பயிற்சி நெறிகள் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் கைத்தொழில் பயிற்சிகளை வளவாளர்களாக கலந்தகொண்டிருந்த எஸ்.செல்வராஜ் மற்றும் தோமஸ் திலக் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் சமுதாய சீர்திருத்த வேலைப்பரிசோதகர் எ.சி.அசாருதீன், வவுனியா சிறைச்சாலைகள் நலன்புரி உத்தியோகத்தர் எ.பி.எல்.எலிபிட்டிய, வட மாகாண சிரேஸ்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.அனஸ், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய நிர்வாக உத்தியோகத்தர் கெ.தாவீது, இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய அமைப்பின் தேசிய இயக்குனர் எஸ்.ஜெயராஜா, சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் சுதர்சியா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அணிவகுப்பு!!

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அணிவகுப்பு நிகழ்வு ஓன்று வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா, மன்னார் வீதியில் பட்டானிச்சூர் பகுதியில் இன்று காலை ஆரம்பமான இராணுவத்தின் அணிவகுப்பானது மன்னார் வீதி ஊடாக கண்டி வீதியை அடைந்து நகரின் ஊடாக மூன்றுமுறிப்பு சந்தியில் இராணுவ தலைமையகம் முன்றலில் நிறைவடைந்தது.

இந்த அணி வகுப்பில் நிகழ்வில் இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா மாணவன் சர்வதேச ரீதியில் வெங்கலப் பதக்கம் : பாடசாலை சமூகத்தால் கெளரவிப்பு!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பாடசாலை சார்பாக சர்வதேச ரீதியில் இடம்பெற்ற விஞ்ஞான, கணித பாடத்தில் வெண்கலப்பதக்கத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் ஜெயக்குமார் லெவிந் மற்றும் இப்போட்டியில் பங்குபற்றிய பத்மநாதன் ஆவினன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலை காலைப் பிரார்த்தனையின்போது பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சீனாவில் இடம்பெற்ற கணித விஞ்ஞான ஒலும்பியாட் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்ற மாணவன் மற்றும் பங்குபற்றிய மாணவன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வில் வவுனியா தெற்கு கல்வி வலய உதவிப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் கணிதம், விஞ்ஞானம், மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு மாணவனைக் கௌரவித்தனர்.

பாடசாலையின் மலர்மாலை அணிவித்து நுழைவாயிலிருந்து பாண்ட் வாத்தியங்களுடன் காலைப்பிரார்த்தனை மைதானத்திற்கு மாணவர்கள் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

28 வருடங்களுக்குப் பின் விடுதலையான கணவர் : மனதை நெகிழ வைக்கும் இலங்கை அகதியின் காதல் கதை!!

இந்தியா – திருப்பூர் மாவட்டத்தில் 28 வருடங்களுக்குப் பின் வெளியில் வந்த தன் கணவரை, தள்ளாடும் வயதிலும் மிகவும் அன்புடனும் காதலுடனும் வரவேற்ற இலங்கை அகதி குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் கணவன் மனைவி என இருவரும் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இலங்கை அகதியான பக்கா விஜயா 2013ஆம் ஆண்டு வெளியில் வந்தார்.

இந்த நிலையில் தனது கணவர் 28 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் விடுதலையான நிலையில் இருவர் தொடர்பாக தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இது குறித்து தெரியவருவதாவது, பக்கா விஜயா ஒரு இலங்கை அகதி. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் இடம்பெயர்ந்து தமிழகம் சென்று ஒரு கலைக்கூத்தாடியாக வாழ்ந்துள்ளார்.

அப்போது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி பக்கா விஜயாவை காதலித்துள்ளார். பின்னர் பல தடைகளைத் தாண்டி இருவரும் கரம் பிடித்து 7 ஆண்டுகள் மகிழ்வுடன் வாழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் உறங்கிக்கொண்டிருக்க பக்கா விஜயாவிடம் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதில் தனது காதல் மனைவியை காப்பாற்ற முயற்சி செய்து, தவறாக நடந்த நபரை சுப்பிரமணி தாக்க அவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் விஜயாவையும், சுப்ரமணியையும் பொலிஸார் கைது செய்த போது, இருவரும் பிரிந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருவருமே இந்த கொலைக்கு காரணம் என ஒப்புக்கொண்டுள்ளனர். இதில் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

25 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினியின் நட்பு விஜயாவுக்கு கிடைத்துள்ளது.

நளினியின் வழக்கறிஞரின் உதவியுடன் விஜயா 2013ஆம் ஆண்டு விடுதலையானார். விடுதலையான நாள் முதல் கணவரின் வருகைக்காக முதியோர் இல்லத்தில் காத்திருந்தாள் இலங்கை அகதியான விஜயா.

இந்த நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கண்கள் சுருங்க தள்ளாடிய படி சிறையிலிருந்து வெளியில் வந்தார் சுப்பிரமணி.

வெளியேறிய அடுத்த நொடியே ஓடோடி வந்து 28 வருடங்களுக்குப் பின் “மாமா” என தனது கணவரை கூப்பிட்டு கண்ணீர் விட்டுள்ளார். கண்கலங்கி தன் காதலை வெளிப்படுத்தினார் விஜயா.

இதன்போது 28 வருடங்களுக்குப் பிறகு மனைவியின் கரம் பிடித்த சுப்பிரமணி “சாப்டியா” என முதல் வார்த்தை கேட்டமை அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

வெகு வேகமாக உலகத்தை நெருங்கும் பேரழிவு… 2030 குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை!!

உலகம் 2030ஆம் ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் “இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)” அமைப்பு 400 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மனித குலத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது என கூறப்படுகின்றது.

மனிதர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் இந்த வாகனங்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட இரு மடங்கு அதிகரித்து விடும். இதன் காரணமாக புகையின் அளவும் அதிகமாகும். அதேபோல் தொழிற்சாலை புகை மூன்று மடங்காக உயரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறு சென்றால் பூமியின் வெப்பநிலை வெகு வேகமாக உயர்வடைந்து 2030இல் உலகம் நீரில் மூழ்கிவிடும் என்று ஐ.நாவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களில் பூமியின் வெப்பநிலை 1 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்துள்ளது. இது இப்போதே உலகில் பல பனிப்பாறைகளை கரைத்துவிட்டது.

இந்த நிலையில் இந்த வெப்பநிலை உயரும் வேகம் இன்னும் அதிகம் ஆகும். இது பெரிய பேரழிவிற்கு கொண்டு செல்லும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி 2030ல் பூமியின் வெப்பநிலை 3.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும். 3.5 செல்ஸியஸ் என்பது உலகையே அழிக்கக் கூடிய அளவு வெப்பநிலை ஆகும்.

இதே வேகத்தில் வெப்பநிலை உயர்ந்தால், உலகில் உள்ள முக்கிய பனிப்பாறைகள் எல்லாம் அப்படியே மொத்தமாக உருகிவிடும்.

இதனால் உலகில் 8 – 10 சதவிகிதம் மட்டுமே நிலம் இருக்கும். மற்ற பகுதிகள் அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடும்.

இது கண்டிப்பாக 2030க்குள் நடந்துவிடும். அதை தாண்டி போகாது அதற்குள், இந்த மோசமான அசம்பாவிதம் நடக்கும் என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.