வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் தொல்பொருள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று (29.08.2018) மதியம் 12 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் அங்கு நின்ற பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த 56 வயதுடைய சிவா என்ற நபரே காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது முழுமையான சிகிச்சை வழங்கப்பட்டு உடல் நலம் தேறியுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டையில் உயிரிழந்த தமிழ் – சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் மற்றும் சிங்கள நண்பர்கள் இருவரும் நேற்று ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளனர். அங்குணுகொலபெலெஸ்ஸ பொது மயானத்தில் ஒரே குழியில் குறித்த இருவரும் புதைக்கப்பட்டுள்ளனர்.
அசாரிகம பிரதேசத்தை சேர்ந்த நாலக இரோஷன் மற்றும் காலி நெழுவ பிரதேசத்தை சேர்ந்த ராஜேந்திர ஷிவகுமார் என்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கொழும்பு பிரதேசத்தின் ஒரே இடத்தில் தொழில் செய்த நண்பர்களாகும்.
குறித்த இருவரும் கடந்த 25ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்தில் இரவு 11.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
தமிழ் இளைஞர் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இரண்டு நண்பர்களினதும், இறுதி நடவடிக்கை ஒரே நாளில் ஒரே குழியில் புதைப்பதற்கு உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.
தென்னிலங்கையில் இனவாத ரீதியான மோதல்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இவ்வாறான துன்பியல் நிகழ்விலும் நல்லிணக்கம் பேணப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்னர்.
கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு கிளிநொச்சி பொலிஸார் விரைந்துள்ளனர்.
இதனையடுத்து சடலம் கிடந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சடலத்தின் அருகிலிருந்து சிவில் பாதுகாப்பு படையாளிகள் அணியும் இடுப்புப்பட்டி மற்றும் பேனை என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் சுமார் இருபது வயதானவர் எனவும், சடலத்தின் முகப் பகுதியில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த பெண் தொடர்பான விபரங்கள் எதுவும் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகமானது, மீண்டுமொரு வித்தியாவாக இருக்கக்கூடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் பருமனுக்கும் அது தொடர்பான நோய்களுக்கும் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளே காரணம் என்பது தெரியும். எனவே, கெட்ட கொழுப்பைக் குறைக்க எத்தனையோ உடற்பயிற்சிகளையும், உணவுமுறையில் பல மாற்றங்களையும் செய்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த பிரச்னைக்கு விஞ்ஞானிகள் அறிவியல்பூர்வமாக மாற்று முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.
நம் உடலுக்குள் இருக்கும் கெட்ட கொழுப்பான Low -density lipoproein(LDL) என்பதை வாழ்க்கைமுறையினை அடிப்படையாக வைத்து மாற்றுவது ஒருபுறம் இருக்கட்டும்.
அதே நேரத்தில் மரபணு மருத்துவம், நானோ ஊசிகள் என பல்வேறு முறையில் இவற்றைக் கட்டுப்படுத்த முடியுமா என்றுதான் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
இந்த ஆராய்ச்சியில் தற்போது மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தேவையற்ற கெட்ட கொழுப்பினை, நம் உடல் தேவைப்படும் நேரத்தில் நல்ல கொழுப்பாக High density lipoprotein (HDL) மாற்றி பயன்படுத்திக் கொள்ளும்.
இந்த பணியினை உடல் செல்களின் உட்கருவான மைட்டோகாண்ட்ரியா மேற்கொள்கிறது. மைட்டோகாண்ட்ரியாவின் இந்த ஸ்டைலைப் பின்பற்றி, செயற்கையாக மாற்ற முடியுமா என்றுதான் முயற்சி செய்து வந்தார்கள். அதில் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெற்றியும் கண்டுள்ளனர்.
UCP 1 Protein எனும் புரதப் பொருளை, கெட்ட கொழுப்புகள் படிந்துள்ள இடத்தில் ஊசி மூலம் செலுத்தி கெட்ட கொழுப்புகளை நல்ல கொழுப்பாக மாற்றும் செயலைத் தூண்டுகிறார்கள். 3 வார காலத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. எலிகள் மீது நடந்த ஆராய்ச்சியில் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
இதனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அதனால், உடல் பருமனானவர்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை என்ற செய்தியை சொல்லும் அதேநேரத்தில் உணவுக்கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியினையும் விட்டுவிடாதீர்கள் என்று கூறிக்கொள்கிறோம்.
பெங்களூரில், சொத்தை எழுதி கொடுக்காததால் ஆத்திரமடைந்து தந்தையின் கண்விழியை விரலால் தோண்டி எடுத்த தொழில் அதிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சகாம்பரி நகரில் வசித்து வருபவர் பரமேஸ் (வயது 65). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி வசந்தி. இந்த தம்பதிக்கு சந்தன், சேத்தன் என்று 2 மகன்கள் உள்ளனர்.
சந்தன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி தனியாக வசித்து வருகிறார். சேத்தன் தொழில் அதிபராக இருக்கிறார். இவர், ஊதுபத்தி தயாரித்து மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
பரமேஸ் தனக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடியில் மனைவி வசந்தியுடன் வசித்து வந்தார். தரைதளத்தில் சேத்தன் மட்டும் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடல் நலக்குறைவால் வசந்தி இறந்து போனார்.
இதன் தொடர்ச்சியாக, பரமேசின் பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என்று சேத்தன், தந்தை பரமேசிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கு பரமேஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பாக பரமேசுக்கு, சேத்தன் வக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. நோட்டீசில், சொத்தை பிரித்து கொடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்த நோட்டீசை நேற்று பெற்ற பரமேஸ், சேத்தனிடம் சென்று ‘நேரம் வரும்போது சொத்துகளை உன் பெயருக்கு எழுதி வைக்கிறேன். இப்போது சொத்துகளை எழுதி கொடுக்க முடியாது‘ என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சேத்தன், தந்தை பரமேசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு அஞ்சாத பரமேஸ் வீட்டில் இருந்து வெளியேறி முதல் தளத்துக்கு சென்றுள்ளார். இந்த வேளையில், அங்கு சென்ற சேத்தன், பரமேசின் கண்களை விரலால் தோண்டினார்.
இதனால் பரமேசியின் ஒரு கண்ணில் இருந்த கருவிழி கீழே விழுந்தது. இன்னொரு கண்ணில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் பரமேஸ் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் சேத்தனை பிடித்து வைத்து கொண்டதோடு, பரமேசை மீட்டு அருகே உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இருப்பினும், பரமேசுக்கு மீண்டும் கண்பார்வை கிடைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, பிடிபட்ட சேத்தனை ஜே.பி.நகர் பொலிசில் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர். இதுபற்றி பரமேஸ் கொடுத்த புகாரின் பேரில் ஜே.பி.நகர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து சேத்தனை கைது செய்தனர்.
மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. சொத்தை எழுதி கொடுக்காததால் ஆத்திரமடைந்து தொழில் அதிபர் ஒருவர் தந்தையின் கண் விழியை விரலால் தோண்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உணவகம் ஒன்றில் வெயிட்டர்களின் பர்ஸ்கள் இரண்டை லாவகமாக திருடிச் சென்றார் ஒரு நபர்.
அவர்கள் உணவக உரிமையாளரிடம் இது குறித்து புகாரளித்ததும் அவர் உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து CCTV பதிவுகளையும் போட்டுப் பார்த்தார்.
அவற்றில் சாப்பிட வந்த ஒரு நபர், ஊழியர்கள் யாரும் கவனிக்காத நேரத்தில் இரண்டு பர்ஸ்களை நைஸாக திருடிச் செல்வதைக் கண்டார்.
உடனே அந்த நபரின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட அவர், அந்த நபரை யாருக்காவது தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்த செய்தி 1400 முறைகளுக்கும் அதிகமாக பகிரப்பட்டது. ஆனால் அதற்குப் பின் நிகழ்ந்தது யாருமே எதிர்பாராத ஒரு சம்பவம்.
திருட்டு நடந்தால் தங்களிடம் புகார் தெரிவிக்க வேண்டுமேயொழிய யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது என்று பொலிசார் உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரைவசி விதிகளை மீறியதாக அவர் மீது ஒருவேளை நடவடிக்கை கூட எடுக்கப்படலாம். தொடர்ந்து பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்சூரன்ஸ் பணத்துக்காக ஒரு பெண்ணை திட்டமிட்டு கொலை செய்து அதை விபத்து போல் காட்டி ஏமாற்றிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதை செய்வதற்கு காரணமாக இருந்ததே அந்தப் பெண்ணின் கணவர்தான் என்னும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ச்சியாக பல பிரச்சினைகளில் சிக்கி நஷ்டமடைந்த Iqbal என்னும் ஒருவர் பணப்பிரச்சினைகளிருந்து விடுபடுவதற்கு ஒரு குற்றச்செயலை செய்ய முடிவெடுத்தார்.
Iqbalம் அவரது மனைவியான Kulwinder Gillம் ஆளுக்கு 3 மில்லியன் டொலர்கள் இன்சூரன்ஸ் எடுத்திருந்தனர்.
Gurpreet Singh Atwal (32) என்பவர் Iqbalக்கு அறிமுகமானவர். தனது மனைவியை கொலை செய்தால், கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தில் 50,000 டொலர்கள் Atwalக்கு தருவதாக ஆசை காட்டினார் Iqbal.
திட்டத்திற்கு சம்மதித்த Atwal, இரண்டு குழந்தைகளுக்கு தாயான Kulwinder Gillஐ ட்ரக் ஒன்றை வைத்து மோதினார்.
அவர் மோதிய வேகத்தில் 30 மீற்றர்கள் பறந்து சென்ற Kulwinder Gill பள்ளம் ஒன்றில் விழுந்தார்.
ஒன்றும் தெரியாதது போல ஆம்புலன்சுக்கு தகவலளித்தார் Iqbal. பொலிசார் வந்தபோது Kulwinder Gill உயிருடன் இல்லை.
Kulwinder Gillஇன் மரணத்தில் அவரது கணவர் மேல் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட அவர்கள் மாறு வேடத்தில் விசாரணையைத் தொடர்ந்தனர். பின்னர் உண்மை வெளிவர Iqbalக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு உதவியாக கொலை சம்பவத்தை அரங்கேற்றிய Atwalக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் மனைவியை கொலை செய்த இந்தியர் 8 ஆண்டுகளுக்கு பின்னர், பிரித்தானிய சிறை சட்டத்தின்படி இன்று நாடு கடத்தப்பட உள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த Harpreet Aulakh (35) – Geeta Aulakh (28) தம்பதியினர் லண்டனில் உள்ள Greenford பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
Geeta லண்டனில் உள்ள ஆசிய சூரிய ஒளி வானொலி நிலையத்தில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
Geeta கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி பள்ளியிலிருந்து மகன்களை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது Sher Singh (19) Jaswant Dhillon (30) என்ற இரண்டு பேர் திடீரென வாளால் Geeta மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் அவர்களின் தாக்குதலை தடுக்க முற்பட்டபோது Geeta-வின் கை துண்டாகி கீழே விழுந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், படுகாயங்களுடன் கிடந்த Geeta-வை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தலை பகுதியில் ஏற்பட்டிருந்த பலத்த காயத்தால் அடுத்த 30 நிமிடத்திலேயே Geeta சிகிச்சை பலனின்றி பலியானர்.
பிரித்தனியா ஊடங்கங்கள் அனைத்திலும் தாளிப்பு செய்தியாகி வந்த ஈச்சம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, Geeta-வின் கணவர் Harpreet-ஐ கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக வாக்குவாதம் நடந்து வந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Harpreet-க்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பிரித்தானிய சிறையில் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது Harpreet இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் ஐஜி கூறுகையில், பிரித்தனியா பொலிஸார் குற்றவாளியை 3 பேர் கொண்ட இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்கள் டெல்லி விமான நிலையத்தை அடைந்தவுடன் குற்றவாளி பஞ்சாப் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.
ஆம்பூர் மாவட்டத்தில் திருமணமான ஒன்றரை வருடத்தில் காதல் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நந்தினி(19), ஞானமூர்த்தி(24) ஆகிய இருவரும் காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு திக்கீஸ் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஞானமூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் பிரச்சனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்,
வழக்கம்போல குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் பிரச்சனை செய்துள்ளார். தகராறின்போது வீட்டில் இருந்த டிவி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை ஞானமூர்த்தி உடைத்துள்ளார். மேலும் அவர், நந்தினியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நந்தினி அதே இடத்தில் பரிதாபமாக இறந்துள்ளார்.
அதன்பின்னர், மனைவியின் கழுத்தில் சேலையை மாட்டி தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு சிறிது நேரத்தில் எதுவும் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது நந்தினியின் சடலம் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உமராபாத் பொலிசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், நந்தினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர் வாழைத்தோப்பில் மறைந்திருந்த ஞானமூர்த்தியை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பர்தா அணிந்து வந்த பெண், பூஜை நடத்திக் கொண்டிருந்த மந்திரவாதி மீது ரசாயனம் ஊற்றி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சையது பசீருதீன் (63) என்பவர் திருவல்லிக்கேணியில் மந்திரம் ஓதும் தொழில் செய்து வந்தார்.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சையதிடம் தொழில் வளர்ச்சி, குடும்ப பிரச்னை, தீராத நோய் உள்பட பலவற்றிக்காக தாயத்தை பெற்று செல்வார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சையது அறையில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மந்திரம் செய்த தாயத்தை பெற்று கொண்டிருந்தனர்.
அப்போது, கருப்பு நிற பர்தா அணிந்து கொண்டு அங்கு ஒரு பெண் வந்த நிலையில் தான் வைத்திருந்த ரசாயனம் போன்ற திரவத்தை சையது மீது வீசிவிட்டு ஓடிவிட்டார்.
இதையடுத்து வலியால் துடித்த சையது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த பெண் சம்பவத்தின் போது பர்தா அணிந்து வந்ததால் அவரை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பெண்களுடனான தவறான பழக்கத்தால் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.
ரசாயன திரவம் ஊற்றிய பெண் மந்திரவாதி சையத்தால் ஏமாற்றப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
கார் டிரைவருடன் மகளுக்கு ஏற்பட்ட கள்ளக்காதலை அவமானமாக நினைத்த தந்தை, கூலிப்படை ஏவி கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த இந்த தொழில் அதிபருக்கு கொடைக்கானலில் சொகுசு பங்களா மற்றும் தோட்டம் உள்ளன. இவருடைய மகள் விஷ்ணுபிரியா நடிகை ஆவார். இவர், மாயாவி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இவர், கொடைக்கானல் பங்களாவையும், தோட்டத்தையும் பார்வையிட அவ்வப்போது கொடைக்கானல் செல்லும்போது டாக்ஸி டிரைவர் பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
காரில் வரும்போது பேசிப் பழகியதன் மூலம் இது கள்ளக்காதலாக மாறியது. பிரபாகரனுக்கு ரூ.15 லட்சத்துக்கு கார் வாங்கிக்கொடுத்தார் விஷ்ணுபிரியா. மேலும், பிரபாகரனை மறுமணம் செய்துகொள்ள முடிவுசெய்தார்.
இத்தனை செல்வாக்கோடு வாழ்ந்து வரும் தனக்கு ஒரு கார் டிரைவரால் நிம்மதி பறிபோனது என்று ஆத்திரமடைந்த தந்தை பிரபாகரனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, கூலிப்படையினர் மணிகண்டன், முகம்மது சல்மான், முகமது இர்பான் ஆகியோரோடு சேர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை பிரபாகரனைக் கொலை செய்து, பள்ளத்தாக்கில் சடலத்தை வீசியுள்ளார்.
பிரபாகரனின் கார் கொடைக்கானல் உகார்தே பகுதியில், கடந்த 24-ம் தேதி, அங்கங்கே ரத்தச் சிதறல்களோடு அனாதையாக நின்றது.
24 மணி நேரத்தில் துப்புத் துலக்கி, கூலிப்படையினரை வளைத்துப் பிடித்து பொலிசாரின் விசாரணையில், செந்தில்குமார் உள்ளிட்ட கூலிப்படையினர், காரில் வைத்துப் பிரபாகரனைக் கொலை செய்துவிட்டு, 8 கி.மீ. தூரம் தள்ளியுள்ள செண்பகனூர் பள்ளத்தாக்குப் பகுதியில் பிணத்தை எறிந்ததை ஒப்புக்கொண்டனர்.
கூலிப்படையினர் அனைவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகிவிட்ட தொழிலதிபர் சூரியநாராயணனை பொலிசார் தேடி வருகிறார்கள்.
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், தடை தாண்டுதல் ஓட்டம் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயின் மகன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்தோனேஷியாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தருண்(21) கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
தருண், திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தர் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் அய்யாசாமி-பூங்கொடி. விவசாயியான அய்யாசாமி, தருண் 4ஆம் வகுப்பு படிக்கும்போதே இறந்துவிட்டார்.
தருணின் தாயார் பூங்கொடி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தருணுக்கு சத்யா(19) என்கிற தங்கை உள்ளார். இந்நிலையில், தனது விடாமுயற்சியால் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து தருண் கூறுகையில்,
‘எனக்கு 8 வயதாக இருக்கும்போது தந்தை இறந்துவிட்டார். தாயார் எனக்காக நிறைய தியாகம் செய்து இருக்கிறார். அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.
தற்போது அவர் ஆசிரியையாக வேலை பார்த்து மாதத்துக்கு ரூ.14 ஆயிரம் தான் சம்பாதித்து வருகிறார். எனது தாயாருக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். சிறந்த திறனை வெளிப்படுத்தி பதக்கம் வென்றதன் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன்.
என்னுடைய போட்டியாளர்கள் பற்றி சிந்திக்காமல் எனது ஓட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனது தேசிய சாதனை நேரத்தை விட சிறப்பான நேரத்தில் பந்தயத்தை முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 6 மாதங்களாக போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் பயிற்சி பெற்றது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் தருணின் தாயார் பூங்கொடி கூறுகையில், ‘தருண் விடா முயற்சியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டான். எங்களை சந்திக்க வருவதை கூட குறைத்துக் கொண்டு பயிற்சி மேற்கொண்டான்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கு செல்லும் முன் தங்கம் எப்படியும் வென்று விடுவேன் என்று உறுதியாக கூறி சென்றான். 400 மீற்றர் தடை தாண்டுதல் ஓட்ட போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதும் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.
தருணின் தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றி இது. எனது பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்த என்னிடம் வாழ்த்து கூறிய போது மிகவும் சந்தோஷமாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.
தருண் இதற்கு முன்பு தெற்காசிய போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீற்றர் ஓட்டம் மற்றும் 400 மீற்றர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் உயிர் இழந்த நிலையில் பிரபல நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையான ஹரிகிருஷ்ணா சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் அவர் பலியானார்.
ஹரிகிருஷ்ணாவின் மறைவு தமிழ், தெலுங்கு நடிகர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சரத்குமார் தனது இரங்கல் பதிவில், விபத்தில் ஹரிகிருஷ்ணா மரணமடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
நடிகை கெளதமியின் டுவிட்டர் பதிவில், ஹரிகிருஷ்ணாவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கடவுள் தைரியம் கொடுக்க வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். இப்படி பல நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பொலிசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அமிர்தவள்ளி என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
எனவே, இதுதொடர்பாக திருவேற்காடு காவல் நிலையத்தில் ரேணுகா மீது அமிர்தவள்ளி புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரேணுகா விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
அதன் பின்னர் நேற்று காவல் நிலையம் வந்த ரேணுகா, திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனைக் கண்ட பொலிசார் உடனடியாக தீயை அணைத்து, ரேணுகாவை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரேணுகா மரணமடைந்துள்ளார். பொலிசார் அமிர்தவள்ளி குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்டது தான் ரேணுகாவின் தற்கொலைக்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குருணாகல் கொகரல்ல பிரதேசத்தில் 14 வயதான மகள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததையடுத்து அதிர்ச்சியில் உயிரிழந்த தாயின் உடல் பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் 14 வயதுடைய மகள் நேத்மி நிஷாதி பெரேரா நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 24ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
மெல்சிறிபுர மெதமுதல்ல மத்திய மஹா வித்தியாலயத்தின் தரம் எட்டில் கல்வி பயின்று வந்த நெத்மீ நிசாதி பெரேரா என்ற சிறுமியே மாரடைப்பால் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், மகளின் சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட போது, குறித்த பெண் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார்.
சிறுமி மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாகவும், தாயின் மரணம் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் உடல் பாகங்கள் கொழும்பு ரசாயன பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.