கொழும்பிலிருந்து அதிநவீன காரில் சென்ற இளம் தம்பதியருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

கொழும்பில் இருந்து சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக காலி கோட்டைக்கு சென்ற இளம் தம்பதியரின் காரின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காருககு ஏற்பட்ட சேதம் 3 லட்சத்து 96 ஆயிரம் ரூபா என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தம்பதி பயணித்த அதி சொகுசு காரின் முன்னால் பக்க கண்ணாடிக்கு நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இந்த காரில் பயணித்தவர்கள் தனது மகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும், தாக்குதல் மேற்கொண்ட நபர் போலி முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய குறித்த சந்தேக நபரை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காலி, ரிச்மண்டகந்த பிரதேசத்தை சேர்ந்த நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து இளம் தம்பதி ஒன்று தங்களுக்கு சொந்தமான BMW காரில் காலிக்கு சென்றுள்ளனர். காலை உணவு பெற்றுக்கொள்வதற்காக வீதி ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு உணவகம் ஒன்றுக்குள் சென்றுள்ளனர். அவ்வாறு அவர்கள் செல்லும் போது, திடீரென சந்தேக நபர், காரின் கண்ணாடியை தனது ஹெல்மட்டினால் தாக்கி உடைத்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட நட்டம் 3 லட்சத்து 90 ஆயிரம் என கூறி காரின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய சந்தேக நபரை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கிராமமே நேசித்த ஆசிரியையை கொலை செய்த கணவன் வெளியிட்ட அதிர்ச்சி வாக்குமூலம்!!

பொலன்னறுவை பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியையான மனோரி அசந்திகா கடந்த ஜூன் மாதம் 22ம் திகதி பாடசாலை செல்ல ஆயத்தமானபோது கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின்னர் அன்றைய தினம் பாடசாலை செல்லாது சாரியை கழற்றிவிட்டு பாவாடை, சட்டை அணிந்து கொண்டு தனது தொலைபேசியுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அன்றைய தினம் மனோரி அசந்திகாவின் மகளுக்கு நிறை அளக்கும் தினமாகும். பிள்ளையுடன் அசந்திகாவின் கணவரான மகிந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு நிறை அளந்து முடிந்ததும் அப்பெண்ணை மீண்டும் அவரின் வீட்டில் இறக்கி விட்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

மனோரி அசந்திகா கணவருடன் சண்டை போட்டு வெளியில் சென்று இரண்டு மூன்று மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வருவதை வழமையாக கொண்டுள்ளார்.

அன்றைய தினம் பல மணி நேரமாகியும் மனோரி அசந்திகா வீடு திரும்பவில்லை. மாத்தளையில் அவரின் நண்பி வீட்டுக்கு சென்றிருப்பாரென நினைத்த மகிந்த, மாத்தளைக்குச் சென்றுள்ளார்.

செல்லும் வழியில் மொறகஹகந்த வீதியில் நின்ற யானையைக் கண்டு பயந்து காரைத் திருப்பிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மகிந்த அசந்திகா தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் மகிந்த அசந்திக்காவின் அம்மாவிடமும் அவரைக் காணவில்லையென தெரிவித்துள்ளார். அம்மாவும் வந்து தனது மகளான அசந்திகவைத் தேடியுள்ளார்.

அசந்திகா காணாமல் போய் ஒரு மாதம் கடந்தும் அவர் தொடர்பான தகவல் எதுவுமில்லை.

அதன் பின்னர் பொலிஸார் மகிந்தவின் கைத்தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான அறிக்கையைப் பெற்று விசாரணை நடத்தி உள்ளனர். அசந்திகா காணாமல்போன அன்றைய தினம் மகிந்த மொறஹககந்த பகுதியில் இருந்தமை கண்டுபிடித்துள்ளனர்.

அதன்பின்னர் மகிந்தவிடம் பொலிஸார் விசாரணை செய்தபோது அவர் சில கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மகிந்தவின் மூத்த சகோதரி கடந்த 17ம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மகிந்தவின் கையாலே அசந்திகா கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மகிந்தவை கைது செய்துள்ளனர். பொலிஸார் முன்னெடுத்த விசாணைகளின்போது மகிந்த இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் தனது வாக்குமூலத்தில், அசந்திக்காவிற்கு பிள்ளை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. இப்போது இருக்கும் மகளுடனும் விருப்பமில்லை. பல ஆண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.

அன்றைய தினம் (22ம் திகதி ) காலையில் மகளுக்கு கடலை ஊட்டிக்கொண்டிருந்தார். மகள் கடலையை துப்பிக்கொண்டிருந்தாள். நான் பார்த்தபோது கடலை நன்றாக வேகவில்லை. கடைக்குச்சென்று சாப்பாடு ஏதாவது வாங்கி வர ஆயத்தமானபோது அசந்திகா என்னைத் தடுத்து விட்டு சண்டைபோட்டார்.

அதன்பின் நான் வலது கையில் மகளைத் தூக்கிக்கொண்டு அசந்திகாவின் கழுத்தை சுவரோடு சேர்த்து நெரித்தேன். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து விட்டார்.

தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்தேன் எந்த உணர்வும் இல்லை. அசந்திகாவின் உடலை அறைக்குள் வைத்து பூட்டினேன்.

பின்னர் பிள்ளையை நிறை அளப்பதற்கு கொண்டு சென்று திரும்பி வந்ததேன். அன்று பிற்பகல் 5 மணியளவில் காரில் சடலத்தை ஏற்றிக்கொண்டு மொறகஹகந்த நீர்த்தேக்கத்தில் பேட்டுவிட்டு வந்தேன் என கூறியுள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

15 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய 40 வயதான நபர்!!

15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 40 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எல்ல, ஊவ- கரந்தெகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபரை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் விவகாரம் காணப்பட்டதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

அதன்படி, குறித்த நபர் சிறுமியை ஹாலி-எல , உடதொம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவரது உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

யாழில் பொலிஸார் மீது சற்று முன்னர் தாக்குதல்!!

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் சற்று முன்னர் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து விசாரித்தவேளையிலேயே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இதன்போது படுகாயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா புளியங்குளத்தில் மாட்டுடன் மோதுண்டு கார் விபத்து : மாடு பரிதாபமாக பலி!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (28.08.2018) மாலை 7 மணியளவில் மாட்டுடன் மோதுண்டு கார் விபத்துக்குள்ளானது.

வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக யாழ் நோக்கி பயணித்த கார் புளியங்குளம் 205ம் மைல் கல்லுக்கு அருகே மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் விபத்துக்குள்ளாகிய மாடு சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்தது.

காரில் பயணம் மேற்கொண்டவர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் காரின் முற்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வவுனியாவில் சமூக பொலிஸ் சேவை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு!!

சமூக பொலிஸ் சேவை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு ஒன்று வவுனியாவில் இன்று (28.08) நடைபெற்றது.

வவுனியா பிரதேச தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில், பிரதேச சர்வமத குழுவின் தலைவர் போதகர் பி.என்.சேகர் தலைமையில் குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் செயலமர்வு இடம்பெற்றது.

இச்செயலமர்வில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த சமூக பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பிரியங்கர டீ சில்வா வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

‘மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு’ செயல்திட்டமும் சமூக பொலிஸ் சேவையும் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில் 45 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 23 சமூக பொலிஸ் சேவைக் குழுக்கள் கலந்துகொண்டதுடன் நிர்வாகம், சமூக சேவை, நீதி, சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

வவுனியா பிரதேச சமூக பொலிஸ் குழுக்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய சமூக பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பிரியங்கர டீ சில்வா,  ஒரு நாட்டில் குற்றங்கள் நடைபெற்றபின் அதற்கு தண்டனை வழங்குபவர்களாக பொலிசார் இருக்க கூடாது குற்றங்கள் நடைபெறு முன் விரைந்து செயற்பட்டு குற்றங்களை தடுத்து மக்களை காப்பாற்றுபவர்களாக பொலிசார் செயற்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை காரணங்காட்டி நாங்கள் பின்தங்கியுள்ளோம் என்று பொலிசார் கூற முடியாது. 50 வருடங்கள் கம்போடியாவில் யுத்தம் நடைபெற்ற போதும் அவர்கள் பொலிஸ் துறையில் ,அபிவிருத்தியில் முன்னேறியுள்ளார்கள் என தெரிவித்தார்.

நிகழ்வில் வவுனியா பிரதேச செயலகத்தின் நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூக பொலிஸ் சேவைக்குழுக்கள், சர்வ மத குருமார்கள், வவுனியா பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் முல்லைத்தீவு போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகள் இன்றி தவித்த மக்கள்!!

முல்லைத்தீவில் இன்று காலை மகாவலி குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வவுனியாவிலிருந்து செல்வதற்கு ஏற்பாடுகள் இன்றி பெருமளவு மக்கள் கலந்துகொள்ளவில்லை.

இன்று காலை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் அழைத்துச் செல்வதாக அறிவித்தல் வழங்கப்பட்டபோதிலும் பெருமளவானோர் சென்றுள்ளனர் எனினும் போக்குவரத்து ஏற்பாட்டு ஒழுங்கள் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை இதனையடுத்து மாற்றுவழிகளில் சிலர் சென்றபோதும் அதிகளவானோர் பேருந்து எற்பாடுகள் இன்றி திரும்பிச் சென்றுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

ஏனைய பல மாவட்டங்களிலிருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் வவுனியாவிலிருந்து காலை 9 மணிக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டு தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது அதனுடன் தொடர்புகொண்டபோது பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என்று தகவல்,தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு சென்ற பலர் வேறுவாகனங்களில் ஏறிச் சென்றதைக்காணக்கூடியதாக இருந்ததுடன் இன்னும் சிலர் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றதைக்காணக்கூடியதாக உள்ளது இவ்வாறு போராட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காலை பேருந்து நிலையத்திற்குச் சென்ற மக்கள் தம்மைக்கைவிட்டுச் சென்றுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண வீட்டில் ஏற்பட்ட வன்முறை : காதினை கடித்து துண்டாக்கிய இராணுவ சிப்பாய்!!

திருமண வீட்டில் இராணுவ கொப்ராலின் காதை மற்றொரு கொப்ரால் கடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொட்டவெஹேர பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இராணுவ கொப்ரால்களும் விசேட விருந்தினர்களாக திருமண வீட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் போது தகராறு ஒன்று ஏற்பட்டு, இறுதியில் காதை கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிகவும் கடுமையாக காது கடிக்கப்பட்டமையினால், காது துண்டிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். துண்டிக்கப்பட்ட காதினை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் இணைப்பதாக வைத்தியர்கள் உறுதியளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மற்றைய கொப்ராலை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு : முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28.08) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் பாரியளவிலான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது பங்கேற்றிருந்தனர்.

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலிஅதிகார சபை வழங்கியுள்ளது.

இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர் என குற்றம் சாட்டி , அதனால் மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும். தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்யவேண்டும். என்ற 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் தரம் 10 கல்வி கற்கும் மாணவனைக் காணவில்லை என முறைப்பாடு!!

வவுனியாவின் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை நேற்று மாலை முதல் காணவில்லை என்று பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 5மணிமுதல் வவுனியா தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனைக் காணவில்லை என்று நேற்று இரவு 9 மணியளவில் பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

அம்முறைப்பாட்டில் வீட்டிலிருந்து தனது உடுதுணிகள் சிலவற்றையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்தி

காணாமல்போன மாணவன் உறவினர் ஒருவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டு தந்தையால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஒரு நாள் இரவு அவனை சந்தித்தேன் : பாலியல் அடிமையான ஒரு பெண்ணின் துயர்மிகு கதை!!

ஒருவர் கடத்தப்பட்டிருக்கிறார், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்த துயரங்களிலிருந்து தப்பி புது வாழ்வை ஒரு புது நாட்டில் தொடங்கும் போது, அங்கு அவரது பழைய நினைவுகள் துரத்தினால் எப்படி இருக்கும்?

வடக்கு இராக்கில் யசிதி மக்கள் நிறைந்து வாழும் பகுதியிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பிடித்து செல்லப்பட்ட பெண் தம் வலி மிகுந்த அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.

தமது 14 வயதில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட அஷ்வக், நூறு டாலர் பணத்திற்கு அபு ஹுமம் என்பவரிடம் பாலியல் அடிமையாக விற்கப்பட்டு இருக்கிறார். அவர் மட்டும் அல்ல அவருடன் ஏறத்தாழ ஆயிரம் பெண்கள் விற்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட அவர் மூன்று மாத போராட்டத்திற்கு பின் அங்கிருந்து தப்பி ஜெர்மனி வந்திருக்கிறார்.
ஆனால், ஜெர்மன் வீதியில் ஒரு நாள் இரவு மீண்டும் அபு ஹுமமை சந்தித்து இருக்கிறார்.

நான் துயர்மிகு நினைவுகளிலிருந்து தப்ப நினைத்தேன். ஆனால், அந்த துயரத்திற்கு யார் காரணமோ, அவரை ஜெர்மனில் சந்தித்தேன்.

“பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு கார் என் அருகே நின்றது. அந்த காரில் முன் இருக்கையில் அபு ஹுமம் அமர்ந்து இருந்தார். என்னிடம் ஜெர்மனியில் பேச தொடங்கினார், ‘நீ அஷ்வக் தானே என்றார் ? அச்சத்தில் என் உடல் நடுங்க தொடங்கிவிட்டது. ‘இல்லை… நீ யார் என்றேன்?. ஆனால், அவர், ‘உறுதியாக நீ தான் அஷ்வக். நான் அபு’ என்றார்” என்று பிபிசியிடம் அந்த நிகழ்வை விளக்குகிறார்.

மேலும் அவர், “பின் என்னிடம் அரபியில் உரையாட தொடங்கினார். நான் எங்கே வசிக்கிறேன், யாருடன் இருக்கிறேன் என அனைத்தும் அவருக்கு தெரியும் என்றார்.”

“இப்படி ஒரு சூழ்நிலை எனக்கு ஜெர்மனியில் நிகழும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. என் நாட்டைவிட்டு, என் பெற்றோரைவிட்டு என் துயரத்தை மறக்க… கடக்க ஜெர்மனி வந்தேன். ஆனால், அங்கும்அந்த துயரம் துரத்தியது” என்றார்

பின் இந்த நிகழ்வை அஷ்வக் போலீஸிடம் கூறியதாக ஜெர்மன் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார். இராக்கில் தமக்கு ஏற்பட்ட அச்சமூட்டும் நிகழ்வையும் கூறி இருக்கிறார்.

அபு தன்னை சந்தித்த இடம் அருகே இருக்கும் பல்பொருள் அங்காடியின் சிசிடிவி கேமிரா வையும் போலீஸிடம் ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறார். ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார் அஷ்வக்.

“நான் இது தொடர்பான நடவடிக்கைக்காக இரண்டு மாதங்கள் காத்திருந்தேன். ஆனால், எதுவுமே நடக்கவில்லை”

அபுவை மீண்டும் சந்திக்க நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இருந்த அஷ்வக், அங்கிருந்து மீண்டும் வடக்கு இராக் வந்திருக்கிறார்.

மீண்டும் கல்வியை தொடர வேண்டும் என்பது அஷ்வக்கின் விருப்பம். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் மீண்டும் கடத்தப்படுவோம் என்ற அச்சம் அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் இருக்கிறது. அதனால், அவர் இப்போது இருக்கும் குர்திஸ்தான் பகுதியிலிருந்து வெளியேறவே விரும்புகிறார்கள்.

ஆனால், ஜெர்மனி செல்வதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான முயற்சியில் அவர்கள் இருக்கிறார்கள்.

பிறந்து 6 வாரங்களே ஆன என் குழந்தையை ஏன் விற்றேன் : கண்ணீர் மல்க கூறிய தாய்!!

நைஜீரியாவில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தையை செல்போனுக்காக தாய் விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் Anambra மாநிலத்தின் Onitsha பகுதியைச் சேர்ந்தவர் Johnson Kokumo. 25 வயதான இவர் தனக்கு பிறந்து ஆறு வாரமே ஆன குழந்தையை 9,77,429-ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிசார் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

என்னுடைய கணவரும் வேலையின்றி தவித்து வருவதால், ஒரு வருமானமும் இல்லை. குழந்தையை பார்த்து கொள்வதற்கும் வழி தெரியவில்லை.

இதனால் குழந்தையை விற்று புதிததாக ஒரு போன் மற்றும் மீதிப் பணத்தை கணவர் தொழில் துவங்குவதற்காக கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

குழந்தை கடந்த ஜுலை மாதம் 2ஆம் திகதி பிறந்தது, அதன் பின் ஆறு வாரங்கள் கழித்து குழந்தையை விற்றேன், இதில் என் கணவருக்கு உடன்பாடில்லை என்று கண்கலங்கிய நிலையில் கூறியுள்ளார்.

மேலும் இவரின் கணவர் கூறுகையில், நான் அவளிடம் பொறுமையாக இருக்க சொன்னேன், இதைப் பற்றியே நினைக்காதே, மறந்துவிடு என்று கூறினேன். ஆனால் அவள் இப்படி செய்தது எனக்கு பிடிக்கவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

கடத்தப்பட்டு பாலியல் அடிமையாக விற்பப்பட இருந்த மொடல் அழகி தப்பியது எப்படி : திகில் சம்பவம்!!

 

பிரித்தானிய மொடல் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அடிமையாக விற்கப்பட இருந்த நிலையில் அவர் ஒரு குழந்தைக்கு தாயானவர் என்ற உண்மை தெரிய வந்ததால் தப்பிப் பிழைத்த திகில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி Chloe Ayling. இத்தாலியின் Milan என்ற நகரில் கடத்தப்பட்ட அவர் ஆறு நாட்கள் ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டார்.

அவரைக் கடத்தியவர்கள் அவருக்கு போதை மருந்து கொடுத்து அவரை புகைப்படம் எடுத்துள்ளனர்.

பின்னர் dark web எனப்படும் சட்ட விரோத இணையத்தில் அவரை பாலியல் அடிமையாக விற்பதற்காக விளம்பரம் செய்வதற்காக அந்த புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளனர்.

Lukasz Herba என்பவன் அவளை விற்பதற்காக ஏலம் விடப்படும் இடம், அவளது உடல் அளவு, வயது போன்ற விவரங்களுடன் விளம்பரம் செய்துள்ளான்.

அவளது ஆரம்ப விலையாக 224,000 பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்தாலியில் கடத்தப்பட்ட Chloe Aylingஐத் தெரியுமா? அவள் இப்போது விற்பனைக்கு தயாராக இருக்கிறாள் என்று கூறியது அந்த விளம்பரம்.

பின்னர் ஒரு கட்டத்தில் Chloe Ayling திருமணமானவள் இரண்டு வயது குழந்தைக்கு தாய் என்பது தெரிய வந்ததும் அவளை அங்கிருந்து போக விட்டிருக்கிறது அந்த கும்பல்.

கைது செய்யப்பட்ட Lukasz Herbaவுக்கு 16 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனைவியை கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த கணவன் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரை அடுத்த டி.பி.சத்திரம் நியூ காலனியில் வசிப்பவர் சீனிவாசன்(30). இவர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம்மு(26). இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார்.

தனது பெற்றோர் வீட்டுக்கு அருகில் வீடெடுத்து மனைவி, மகனுடன் சீனிவாசன் வசித்து வந்தார். சீனிவாசனுக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அந்த சந்தேகம் தீவிரமானதால் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தகராறு ஏற்பட்டால் நள்ளிரவு வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் சீனிவாசன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அம்முவை பலமாக தாக்கிய சீனிவாசன் பின் அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, உடனடியாக தனது உடைகளை மாற்றிக் கொண்ட சீனிவாசன், தூங்கிக் கொண்டிருந்த தனது மகனை தூக்கிக் கொண்டு தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு நடந்தவற்றை கூறிய சீனிவாசன், மகனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவசர உதவி பொலிசை தொலைபேசியில் அழைத்துள்ளார். தனது வீட்டின் முகவரியை கூறி, கணவன்-மனைவி இரவு முழுவதும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகவும், மிகவும் சத்தமாக இருப்பதால் தொல்லையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார் சீனிவாசன். இந்நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பதற்றத்துடன் இருந்த சீனிவாசனின் பெற்றோரிடம் நடந்த விடயங்களை கேட்டுள்ளனர்.

அவர்களும் தனது மகன் அம்முவை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அம்முவின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பிணமாக கிடந்த மாணவன் அரை நிர்வாணத்துடன் ஓட்டம் : வெளியான வீடியோ!!

திருவள்ளூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவன் பொலிஸாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறி போராட்டம் நடந்து வரும் நிலையில், மாணவன் அரை நிர்வாணமாகி ஓடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சின்ன காவனம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மௌலீஸ்வரன், அரசினர் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வருகிறான்.

கடந்த 25-ம் தேதி ரயில்வே பொலிஸார் விசாரணைக்காக மௌலீஸ்வரனை அழைத்து சென்றனர்.

ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பாத மௌலீஸ்வரன், நேற்று கும்மிடிப்பூண்டிக்கும்- எளாவூருக்கும் இடையிலான தண்டவாளத்தில் அரைநிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளான்.

விசாரணைக்காக அழைத்து சென்றுவிட்டு பொலிஸார் தான் கொலை செய்துவிட்டனர் என உறவினர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அங்கத் குமார், காவலர் வினைய் குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவன் அரை நிர்வாணமாக தப்பி ஓடுவதை போன்ற காட்சியினை ரயில்வே பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதனால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கணவனை அறையில் அடைத்து வைத்து சூடு போட்டு கொடுமை செய்த மனைவி : என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் கணவன் சொத்து எழுதி தராததால், மனைவி அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சூடு போட்டு கொடுமைய செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர் ரமேஷ்(50). இவருக்கு 45 வயதில் லலிதா என்ற மனைவியும், ஸ்ரீநாத் என்ற மகனும் உள்ளனர்.

நாரயணசாமிக்கு 2 கோடி ரூபாய்க்கு பரம்பரை சொத்து உள்ளது. அதே போன்று வீட்டு வாடகையாக மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் வருகிறது.

இதையடுத்து அவரின் மனைவி மற்றும் மகனும் தினம் தினமும் சொத்தை எழுதி கேட்டுள்ளனர். மனைவி லலிதா உங்களிடம் உள்ள சொத்துகளை இப்போதே எனது பெயரில் மாற்றி எழுதி வைத்துவிடுங்கள் என்று தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

ஆனால் இதற்கு கணவர் நாராயணசாமி மறுத்து உள்ளார். உன் பெயருக்கு இப்போது சொத்தை மாற்ற மாட்டேன். பிறகு பார்க்கலாம் என்று கூறினாராம். இதன் காரணமாக இருவருக்கும் தினந்தோறும் பிரச்சனை வந்துள்ளது.

எப்படி கேட்டும் இவர் சொத்தை எழுதி வைக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த மனைவி மற்றும் மகன் இருவரும், ரமேஷை ஒரு தனி அறையில் அடைத்து வைத்து சொத்தை எழுதி தரும் படி கேட்டுள்ளனர்.

அவர் தொடர்ந்து மறுக்கவே, உடலில் பல இடங்களில் சூடு வைத்துள்ளனர். நேற்று இது போன்று சூடு வைத்த போது, ரமேஷ் வலி தாங்க முடியாமல் கத்தியதால், அருகிலிருப்பவர்கள் உடனடியாக அவரது உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பின் விரைந்து வந்த அந்த நபர் ரமேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு கொடுமை படுத்திய மனைவி லலிதா மற்றும் மகன் ஸ்ரீநாத்தையும் கைது செய்தனர். பிறகு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.