வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (30.07.2018) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் இ.போ.ச பேரூந்து முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பத்து பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா ஏ9 வீதியில் புதூர் சந்திக்கு அருகாமையில், புளியங்குளம் இந்துக்கல்லூரியின் ஆரம்ப பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியுடன் இ.போ.ச. பேரூந்து மோதியதில் 9 மாணவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி எட்டு வயதுடைய ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பேரூந்தானது அதே திசையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியை முந்திச்செல்ல முற்பட்ட நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச. பேரூந்து முச்சக்கர வண்டியை மோதித் தள்ளியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
புதூர் காட்டுப்பகுதியில் ஆதிக்குடிகளான நாகர்களின் புராதன குடியிருப்புக்கள் இனங்காணப்பட்டது.
பாலியாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள புதூர் கிராமத்தின் மேற்குப்பகுதியில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த நாகர்களின் புராதன குடியிருப்பு எச்சங்கள் அங்காங்கே பரவலாக காணப்படுகின்றது.
இத்தொல்லியல் தளங்களை இனங்கண்டு ஆவணப்படுத்தும் நோக்கில் 21-06-2018 அன்று பாலியாற்றின் இருபுறமும் உள்ள புதூர்- நவ்விக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதியில்இரண்டு இடங்களில் சராசரி ஏழு அடி உயரமான 9”12” கனதியான கருங்கற்றூண்கள் நிமிர்ந்த நிலையில் இன்றும் நிற்கின்றன சில தூண்கள் உடைக்கப்பட்டு பாதி நிலத்தில் வீழ்ந்து கிடக்கின்றன.
அவ்விடத்தை சுற்றிலும் ஆங்காங்கே கருங்கல்லிலான தூண் தாங்கு கற்கள் நிலமட்டத்தில் நிறுவப்பட்ட நிலையில் உள்ளது.இவை 8,10,12 அடி அகலங்களில் 20தொடக்கம் 40அடி நீள அளவில் நிறுவப்பட்டிருக்கிறது அவற்றிற்கிடையே நிலத்திற்கு செங்கல் பாவுகற்கள் பதிக்கப்பட்டுருப்பதனை அவதானிக்கலாம்.
இக்குடியிருபுக்கள் பாலியாற்றின் கிளையாறுகளை அண்டியதாகவும் பாழடைந்த புராதன குளக்கட்டுக்களின் அந்தப் பகுதியாகவும் இருப்பதை அவதானிக்கலாம்.அவ்விடங்களில் பல நூற்றாண்டுகால வயதுடைய புளியமரங்களையும் அவதானிக்கமுடிந்ததுஇன்னுமோர் இடத்தில் கட்டிட நிர்மாணத்திற்காக செவ்வககற்பாறைகள்,நீண்ட தூண்கள்,சதுரக்கற்கள் என்பன குவியலாக பெருமளவு காணப்பட்டது.
அதற்கு அண்மையாக நான்கு தூண்தாங்குகல் நிறுவப்பட்ட இடத்தின் மையப்பகுதியில் புதையல் தோண்டுவோர் ஐந்தடி ஆழத்தில் குழி தோண்டி தொல்லியல் தடங்களை நாசப்படுத்தியுள்ளனர்.தூண்தாங்கு கற்களை பயன்படுத்தியவர்கள் நாகர்கள் அவர்கள் காலத்தில் பொன் பெருமளவு பாவனையில் இருக்கவில்லை.
அவர்கள் திரவியங்களை புதைத்துவைக்கும் அளவிற்கு அக்கால சமூகம் இருக்கவுமில்லை என்பதுதான் உண்மை.
ஈழத்தமிழரின் மூத்தையார்களான நாகர்களின் தொல்பொருள் எச்சங்களை பாதுகாத்து நவீன ஆய்வுமுறைக்கு உற்படுத்துவதன் மூலமே ஈழத்ததில் தமிழினத்தின் வரலாற்றுத்தொன்மையை ஐயந்திரிவுபட நிறுவிட முடியும்.
வவுனியா A9 வீதி புதூர் சந்திக்கு அருகில் இன்று மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்தும் அதே திசையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டிமீது மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த (09) ஒன்பது பாடசாலை மாணவர்களும் காயமடைந்த நிலையில் புளியங்குளம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மாணவியொருவர் கவலைக்கிடமான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளனர் .
வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அருகே ஊர்ப்பக்கம் பகுதியில் துண்டிக்கபட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனரின் தலை கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கமலக்கண்ணன். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஊர்ப்பக்கம் ரஜீவ்காந்தி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கமலக்கண்ணன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் கமலகண்ணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கமலக்கண்ணனின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட பெண் வீட்டின் முன் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன், கமலக்கண்ணனின் உடல் பகுதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 கிமீ தூரம் வரை சென்ற மோப்ப நாய் நின்றுவிட்டது.
தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், பால்ராஜ் மற்றும் சம்மந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல நடிகை அன்னபூர்னாவின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விடயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரவு நல்ல உறவு, ஹேராம் போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை அன்னபூர்னா.
இவரது வளர்ப்பு மகளான கீர்த்தி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில் கீர்த்தி நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சரியாக பேச முடியாதாம்.
கீர்த்தியின் மரணம் அன்னபூர்னாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு குழந்தையில்லாததால் கீர்த்தியை தத்தெடுத்து வளர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோ நாட்டில் 9 மாத குழந்தைக்கு தாய்பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியை சுட்டுக்கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Hortencia Balcanzar – Gabriel Hernandez Reyes தம்பதியினருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இதில், 4 வது குழந்தை பிறந்து 9 மாதம் தான் ஆகியுள்ளது.
திருமணம் முடிந்த நாளில் இருந்தே தம்பதியினருக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.சமையல் செய்து கொடுப்பதற்கும், வீட்டினை பராமரிப்பதற்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.
இருவருக்குமிடையே நல்ல ஒற்றுமை இல்லாத நிலையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று வெளியில் செல்ல வேண்டும் வேகமாக புறப்படு என கணவர் கூறியுள்ளார்.
அப்போது, பசியால் அழுத தனது 9 மாத குழந்தைக்கு பாலூட்டிய பின்னர் வருவதாக கூறியுள்ளார். இருப்பினும் நேரம் ஆனதால் கோபம் கொண்ட கணவர், பாலூட்டிக்கொண்டிருந்த தனது மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் தனது துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுள்ளார்.
இதில், சம்பவ இடத்திலேயே ரத்தம் வெளியாகி மனைவி உயிழந்துள்ளார். தாயிடம் இருந்த சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உடன் பணிபுரியும் பெண் ஊழியர் காதலிக்க மறுத்ததால் அவர் குடித்த தண்ணீரில் சிறுநீரை கலந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்ரடோ பெரீஸ் என்பவர் அங்குள்ள உணவகத்தில் வேலை செய்து வரும் நிலையில், உடன் பணிபுரியும் பெண் ஊழியரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் கன்ரடோவுடன் நட்போடு இருக்கவே விரும்பிய அப்பெண் காதலை ஏற்கவில்லை. இதனால் கோபமடைந்த கன்ரடோ, அந்த பெண் குடிக்கும் தண்ணீரில் தனது சிறுநீரை கலந்து கொடுத்துள்ளார்.
தண்ணீரை குடித்த பெண் அதில் சிறுநீர் கலந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் அளித்தார்.
இதையடுத்து பொலிசார் கன்ரடோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு முதலில் 90 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
ஒருநாள் மட்டும் சிறை தண்டனை அனுபவித்த கன்ரடோவின் நன்னடத்தையை ஒரு ஆண்டுக்கு சோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் எதுவும் இல்லை. இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணத்தில் தற்போது சுமூக நிலை நிலவுகிறது. கிரீஸ் மனிதர்கள் என மர்ம மனிதர்கள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை.
யாழ்ப்பாணத்தில் தற்போது ஆவா குழுவினரின் செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் வீதிகளில் வெட்டியாக திரியும் சிலரின் செயற்பாடுகள் மக்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 நான்கு பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து போர் மேகங்கள் நகர்ந்து சென்றாலும், மக்களின் மனங்களில் அது கொடுத்த ரணங்கள் இன்னமும் மாறவில்லை.
இழப்புக்களோடும் வலிகளோடும், வாழும் சமூகத்தில் இளைய தலைமுறையினரின் கனவுகளுக்கும் அவை தடையாகிக் கொண்டிருக்கின்றன. அத்தகு தடைகளை உடைத்து வெளியே வரத் துடிக்கும் நமது அடுத்தடுத்த தலைமுறையினருக்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகத் தான் கிடைக்கின்றன.
பொதுவாக இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் தமிழ் வீரர்கள் இல்லாமல் இருப்பது அல்லது உள்வாங்கப்படாமல் இருத்தல் எமக்கான வெற்றிடத்தை எப்பொழுதும் காட்டிக் கொண்டிருக்கிறது.
அந்த வெற்றிடத்தை நிரப்பும் கனவோடு களம் கண்டு வெற்றிப் பாதையில் பயணிக்கிறான் யாழ்.மத்திய கல்லூரி மாணவன் வியாஸ்காந்.
மாகாண அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஒருநாள் தொடரில் வடமாகாண அணிக்காக திறமையை வெளிப்படுத்திய வியாஸ்காந், அடுத்து இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான தொடருக்கு தெரிவு செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.
தமிழ் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாய் மிளிரத் தொடங்கியிருக்கும் வியாஸ்காந்தோடு பேசினோம்.
”என்னுடைய இந்த வெற்றிக்கு யாழ். மத்திய கல்லூரிக்கு பெரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். என் திறன் கண்டு, அதற்கு ஏற்றால் போல பயிற்சிகளை எடுத்துக் கொள்வத்கு என் பள்ளிக்கூடம் பெரும் உதவியாக இருந்தது.
அதேபோன்று என் குடும்பத்தை குறித்துப் பேசியாக வேண்டும். அவர்கள் கொடுக்கும் ஆதரவும், ஊக்குவிப்பும் இல்லையென்றால் என்னால் இவ்வளவு தூரம் வரை செல்ல முடிந்திருக்காது.
என்னுடைய சகோதரர்களும் பயிற்சிக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு இந்தளவு தூரம் நான் வந்திருக்கிறேன்.
வழமையாக அனைத்துப் போட்டிகளும் நன்றாக என்னுடைய திறனை வெளிப்படுத்துவேன். வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப்படும், மத்தியகல்லூரி எதிர் பரியோவான் கல்லூரிகளுக்கிடையில் நடந்த சமர் போட்டிகள் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது.
அந்தப் போட்டிகளில் ஓரளவுக்கு என் திறனை வெளிப்படுத்தி கல்லூரி வெற்றிக்கு என் பங்கும் இருந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். அந்தப் போட்டியில் இரு இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும், 36 ஓட்டங்களையும் பெற்றேன்.
தொடர்ந்து மாகாண மட்டப் போட்டிகள் சவாலாக இருந்தன. அந்தப் போட்டிகளில் விளையாடுவதற்கு அதிகளவான பயற்சிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. வட மத்திய, வட மேல் மாகாணங்களுக்கிடையிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக 19வயது தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டேன்.
சாதாரணமாக எமது மைதானங்களில் விளையாடி விட்டு பெரும் மைதானங்களில் விளையாடுவதென்பது கடினமான ஒன்று. இதற்கு அதிகளவான பயிற்சிகள் தேவை என்பதை உணர்ந்தேன்.
எமது மாகாணங்களில் பல இளைஞர்கள் மாணவர்கள் விளையாடும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்புக்கள், வசதிகள் இடம் கொடுப்பதில்லை. அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” என்று கூறுகிறார் வியாஸ்காந்.
எங்கள் பிள்ளையின் வெற்றிப் பாதையை எண்ணிப் பெருமை கொள்கிறோம் என்கிறார்கள் வியாஸ்காந்தின் பெற்றோர்கள். சிறு வயதிலிருந்தே அவன் பந்தோடு தான் இருப்பான். அவனுக்கான தடைகளை நாங்கள் விதித்ததில்லை. பாடசாலை அணியில் சேர்ந்து விளையாடுவதற்கும் அடம்பிடித்துக் கொண்டான்.
தேசிய அணியில் விளையாடிய முதலாவது யாழ். வீரர் என்ற பெருமையை அவன் பிடித்திருப்பது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவனின் அடைவு மட்டத்தை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றோம் என்கிறார்கள் பெற்றோர்கள்.
பதினாறு வயதேயான விஜயகாந்த் வியாஸ்காந் யாழ். மத்திய கல்லூரியே தன்னை அடையாளப்படுத்தியதாக குறிப்பிடுகிறான். தனக்கு பயிற்சி கொடுத்த சிறு வயது- ராஜதுரை வினோத்குமார் தற்போது- சந்திரமோகன் சுரேஷ்மோகன் ஆகிய பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறான்.
தன்னுடன் சேர்ந்து விளையாடிய சக வீரர்கள், மாணவர்களை நினைவுபடுத்தும் வியாஸ்காந், முதலாவது சர்வதேசப் போட்டியில் முதலாவது இன்னிங்ஸ் 21 ஓவர் 94 ரண் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருக்கிறான். துடுப்பாட்டத்தில் 3 ரண் (17 பந்துகள்). இரண்டாவது இன்னிங்ஸ் ; துடுப்பாட்டம் 16 ரண்(32பந்துகள்). களத்தடுப்பு – ஒரு ரண் அவுட். எடுத்திருக்கிறான்.
இலங்கையின் தேசிய அணியில் விளையாடி பெரும் சாதனைகளை படைப்பது தனது கனவு என்று கூறும் வியாஸ்காந்திற்கு வாழ்த்துக்கள்.
வடக்கு கிழக்கிலிருந்து தேசிய அணிகளுக்கு தெரிவாகும் வாய்ப்புக்களை பெற இருக்கும் இன்னும் பிற எமது இளைய தலைமுறை வீரர்களுக்கு வியாஸ்காந்தின் வெற்றிப் பயணம் முன்னுதாரணமாக அமையட்டும்.
அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஒரு இனத்தின் வெற்றியென்பது ஒட்டுமொத்த இனத்தின் வெற்றியாகவும், அடையாளமாகவும் மாறும். இன்று பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் எம் அடுத்த தலைமுறையினரின் வெற்றி என்பது மகத்தானது. வரலாற்றில் பதியப்பட வேண்டியது.
அத்தகு பாதையில் பயணிக்கும் வியாஸ்காந் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி மற்றைய அணிகளுக்கு மிரட்டலாய் அமையட்டும். அவன் வழி தேசிய அணியில் தமிழ் இடம் மீண்டும் பிடிக்கட்டும்.
அமெரிக்க செனட் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சிவா அய்யத்துரை மீது இனவாத சொற்களை கூறி தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் சிவகாசியை பூர்வீகமாக கொண்டவர் சிவா அய்யத்துரை. தன்னுடைய 7 வயதில் அமெரிக்காவிற்கு சென்ற அய்யாத்துரை, சைட்டோசல்வ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மேலும், அங்கு தற்போது முன்னனி தொழில் முனைவராக உள்ளார்.
இ-மெயில் அனுப்பும் தொழில்நுட்பத்தை அய்யத்துரை கண்டுபிடித்தாலும், அதற்கான அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்பட்டது. இன ரீதியான பாகுபாடே காரணம் என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கு இடம்பெறவுள்ள தேர்தலில் அவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் அவர் போட்டியிடுவார் என முன்னர் கூறப்பட்ட நிலையில், அவர் தனித்து களமிறங்கியுள்ளார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய செனட் உறுப்பினருமான எலிசபெத் வாரென்-ஐ எதிர்த்து அவர் தேர்தலில் நிற்கிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் டவுண் ஹோல் பகுதியில் அவர் சிறிய ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த எலிசபெத் வாரென்னின் ஆதாரவாளர், சிவா அய்யத்துரையிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.
அவரை இனவாத சொற்கள் கூறி திட்டிய அந்த நபர், ஒலிபெருக்கியை கையால் தள்ளினார். இதனால், ஒலிபெருக்கி சிவா அய்யத்துரையின் முகத்தில் பலமாக தாக்கியது.
இதனையடுத்து, அங்கிருந்த பொலிஸார் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கண்டி – யாழ் பிராதன வீதியில் இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுமிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதுடன், சிறுமி ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றைய சிறுமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த தாய் மற்றும் தந்தை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பளை வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் குறித்த சிறுமி இன்றைய தினம் உயிரிழந்து விட்டார் என அறிவிக்கப்பட்டது.
மேலும், சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா – நகர பள்ளிவாசலுக்கு அருகேயுள்ள நடைபாதையில் வியாபாரம் செய்பவர்களை அகற்றினால் அல்லது அப்பகுதியில் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டால் இலுப்பையடி நடைபாதையில் தாம் வியாபாரம் மேற்கொள்வதை கைவிடுவதாக அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ந்தும் அவர்கள் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நகரசபை ஊழியர்கள் வந்து நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை தடை செய்ததுடன், எமது பொருட்களையும் கையகப்படுத்தியிருந்தனர்.
அத்துடன், வியாபாரம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் அவகாசம் தந்துள்ளார்கள். எமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் நகர பள்ளிவாசலுக்கு முன்பாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அவர்களுக்கு எவ்விதமான தடைகளும் விதிக்கப்படவில்லை. அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு நகரசபையினர் பள்ளிவாசலுக்கு முன்பாக வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு சட்டமும், இலுப்பையடியில் வியாபாரம் மேற்கொள்ளும் எமக்கு ஒரு சட்டத்ததையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
எதிர்காலத்தில் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அகற்றும் பட்சத்தில் அல்லது அவ்விடத்தில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை செய்யும் பட்சத்தில் நாங்களும் இலுப்பையடியில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை நிறுத்திக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – அராலி பகுதிகளில் மரத்திற்கு மரம் தாவி திரிந்து மக்களை பயமுறுத்தும் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அராலி – ஐயனார் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இந்த குள்ளர்களின் நடமாட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குள்ள மனிதர்கள் மரத்திற்கு மரம் தாவி திரிந்து பெண்கள், குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதுடன், வீடுகள் மீது கல் வீச்சு தாக்குதலிலும் ஈடுபடுவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குள்ளர்கள் வீட்டு கூரைகள் மீது தாவி திரிவதுடன், மக்கள் பயத்தில் கத்தும் சத்தம் கேட்டதும், கூரையில் இருந்து மதிலுக்கு பாய்ந்து மரங்களுக்கு மரங்கள் தாவி பாய்ந்து அராலித்துறை நோக்கி ஓடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குள்ளர்களின் கைகளில் கைக் கோடரி காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த சம்பவங்கள் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் கிறீஸ் பூதத்தின் அச்சுறுத்தல் காரணமாக பெண்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
வாதுவ, பொஹந்தரமுல்ல, பொத்துபிட்டிய, கம்மனயாவத்தை மற்றும் கொலபத ஆகிய பிரதேசங்களில், கறுப்பு கட்டை காற்சட்டை மாத்திரம் அணிந்து இளம் பெண்களை கட்டிப்பிடிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றது.
அந்த வகையில் தற்போது யாழ். அராலி பகுதியில் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்து மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இளைஞரொருவர் சிலரால் அழைத்து செல்லப்பட்டு, ஒரு நாள் முழுவதும் கட்டி வைத்து தாக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா, கொக்குவெளி பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான குறித்த இளைஞரை கடந்த புதன்கிழமை மதியம் சிலர் அழைத்து சென்றுள்ளனர்.
அழைத்து சென்றவர்கள் அந்த இளைஞனை கட்டி வைத்து தாக்கிய பின்னர் மறுநாள் வியாழக்கிழமை மாலை கொக்குவெளி பிரதேசத்தில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
உடல் முழுவதும் காயங்களுடன் உறவினர்களால் மீட்கப்பட்ட இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – அரியாலை, நெலுக்குளம் புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த பூம்புகார், நாவற்குழி மற்றும் அரியாலை பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் தலைக்கவசமும் அணிந்திருக்கவில்லை.
மேலும், புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்கு போடப்பட்டு இருந்த போதும், அங்கு பாதுகாப்பு வேலி இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சமிக்ஞை விளக்கு போடப்பட்டு இருந்த போதும், பாதுகாப்பு வேலி இல்லாத காரணத்தினால் இளைஞர்கள் கடவையை கடக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது வந்த கடுகதி புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (27.07.2018) மதியம் கிணற்றில் விழ்ந்து காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாயும் மகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக மகள் (வயது 17) சென்றிருந்த சமயத்தில் தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த தாயார் (வயது 48) மகளை காப்பாற்ற போராடிய சமயத்தில் அவரும் கிணற்றினுள் வீழ்ந்துள்ளார்.
இருவரின் குரல் கேட்டு அயலவர்கள் உடனடியாக கிணற்றினுள் காயங்களுடன் காணப்பட்ட இருவரையும் மீட்டெடுத்து சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிகிச்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் தாயாரின் நிலமை சற்று கவலைக்கிடமாக காணப்படுவதாவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.