வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தீர்த்தோற்சவம் !(படங்கள்,வீடியோ)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று 27.07.2018 வெள்ளிகிழமை இடம்பெற்றது.

மேற்படி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் காலை முதல் அபிசேகங்கள் சிவஸ்ரீ சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெற்று காலை எட்டரை மணிக்கு வசந்தமண்டபபூஜையை தொடர்ந்து ஒன்பதரை மணியளவில் தீர்த்தமாடிய நிகழ்வு இடம்பெற்றது .இரவு 7.30
மணியளவில் கொடியிறக்க வைபவமும் சண்டேஸ்வர உற்சவம் ஆச்சாரிய அபிசேகம் என்பனவும் இடம்பெற்றன .

வவுனியா பூந்தோட்டத்தில் வீட்டுடன் காணி விற்பனைக்கு!!

வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை கல்வியற்கல்லூரி வீதி எனும் விலாசத்தில் அமைந்துள்ள 2 1/2 பரப்பு (25 Perches) சுற்று மதிலுடன் கூடிய அழகான வீடு ( 4 Rooms, Hall , Dining hall , Kitchen with attached bathroom) விற்பனைக்குண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும்

விலை பேசித்தீர்மானிக்கப்படும்

தொடர்புகளுக்கு
Jathuson +49 15216113371 (Germany)

வவுனியாவில் நகரபையின் அனுமதிபெறாமல் அமைக்கப்பட்ட கட்டிடப்பணிகள் இடை நிறுத்தம்!!

வவுனியாவில் இன்று (27.07) பிற்பகல் வேளையில் நகரசபையின் அனுமதி பெறப்படாமல் தனியார் நிறுவனம் ஒன்றால் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட கட்டிடப்பணிகள் நகரசபை உறுப்பினர் சு.கண்டீபனின் தலையீட்டால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவருகையில்,

வவுனியா வைரவப்புளியங்குளம் வட்டாரப் பகுதியில் வவனியா தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் தனியார் நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலைக்கான பணிகள் அவசர அவசரமாக இடம்பெற்று வந்துள்ளது. இதையடுத்து பொதுமக்களினால் வவுனியா நகரசபை உறுப்பினர் சு.கண்டீபனுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நகரசபை உறுப்பினர்களான உப தவிசாளர் சுந்தரம் குமாரசாமி, நா.சேனாதிராசா, திருமதி.லக்சனா நாகராஜன், ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து நகரசபை தவிசாளருக்கு உறுப்பினர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் பதிலுக்கு ஒருவரை அனுப்புவதாக தவிசாளர் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் உப தவிசாளர் குறித்த தனியார் நிறுவனத்தின் கட்டிடப்பணியாளருடன் சென்று நகரசபையின் அனுமதியை காண்பிக்குமாறு கோரியபோது அனுமதி பெற்றிருக்கவில்லை. இதையடுத்து ஆரம்பிக்கப்பட்ட கட்டிடப்பணிகளை இடை நிறுத்துமாறும் எதிர்வரும் திங்கட்கிழமை நகரசபையின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு சட்ட ரீதியில் கட்டிடப்பணிகளை ஆரம்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அங்கு சென்ற பொலிசார் நகரசபையின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி கட்டிடப்பணிகளை ஆரம்பிக்குமாறு தனியார் கட்டிடப்பணியாளருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கட்டிடப்பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகள் இருளில்!!

வவுனியா நகரின் பல பகுதிகள் இரவு வேளைகளில் இருளில் மூழ்குவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகருக்குள்ளான பிரதான வீதிகள் இரவு வேளைகளில் இருளில் மூழுகுவதால் நகருக்குள் வரும் பிரயாணிகள் உட்பட பொதுமக்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் அதிக வருமானமீட்டும் நகரசபையின் செயற்பாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பட்டானீச்சூர் தொடக்கம் வேப்பங்குளம் பகுதி வரையில் இரவில் இருள் சூழ்ந்த பிரதேசமாகவே உள்ளது.

வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் அவை எரியாத நிலையிலேயே காணப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வவுனியா நகரசபை உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாகவே திருட்டுச் சம்பவங்கள் வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வர்த்தகர்களின் நலனுக்காக இருவழிப்பாதை திறந்துவைப்பு!!

வவுனியாவில் கடந்த மூன்று வருடங்களாக ஒரு வழிப்பாதையாக மக்களின் பயன்பாட்டில் பயன்படுத்திவரப்பட்ட வவுனியா மில் வீதி இன்று முதல் இரு வழிப்பாதையாக மக்களின் போக்குவரத்து பாவனைக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

மில் வீதியிலுள்ள வர்த்தகர்கள் வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு வழங்கியிருந்த கடிதத்தில், மில் வீதி ஒரு வழிப்பாதையாக இருப்பதால் மக்கள் தமது வியாபார நிலையங்களுக்கு வரவின்றி காணப்படுகின்றது. வாகனங்களில் வரும் மக்கள் இப்பகுதி ஒருவழிப்பாதையக இருப்பதால் இப்பகுதியிலுள்ள வியாபார நிலையங்களுக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். முன்னர் பாவனையிலிருந்ததுபோல இருவழிப்பாதையாக மாற்றித்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தனர்.

இவ்விடம் நேற்று வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீதிப்பாதுகாப்பு கூட்டத்தில் வர்த்தகர் சங்கம் கலந்துகொண்டு கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியிலுள்ள வர்த்தகர்களின் நலனினை மையப்படுத்தி இன்று முதல் மில் வீதியை இருவழிப்பாதையாக திறந்து மக்களின் வாகனப் பாவனைக்கு அனுமதிப்பதற்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

வவுனியா பொதுவைத்தியசாலைக்கு முன்பாக தண்ணீர் தாக சேவை!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு முன்பாக இன்று (27.07.2018) காலை 10 மணியளவில் தண்ணீர் தாக சேவை இடம்பெற்றது.

வவுனியா பொது வைத்தியசாலையில் சதகம் சுப பௌத்த சங்கத்தினால் 8வது தடவையாக இத் தண்ணீர் தாக சேவை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள், வாகன சாரதிகளுக்கு குளிர்பாணம், பிஸ்கட் வழங்கினார்கள்.

வவுனியா நகரசபையினால் நகரத்தில் கொட்டப்படும் கழிவுகள் : மக்கள் அசௌகரியம்!!

வவுனியா நகரப்பகுதியில் நகரசபை ஊழியர்களினால் அகற்றப்படும் குப்பைகள், கழிவுகள் நகரசபை எல்லைக்குட்பட்ட தட்சணாங்குளம் பகுதியிலுள்ள குளத்திற்கு அருகில் கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா நகரசபை ஊழியர்கள் நகரப்பகுதியில் அகற்றப்படும் குப்பைகள், கழிவுகளை தமது உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்று நகரசபையின் எல்லைக்குட்பட்ட பண்டாரிக்குளம் தட்சணாங்குளம் பகுதியிலுள்ள குளக்கட்டு வீதிகளில் கொட்டி எரியூட்டி வருகின்றனர். இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இப்பகுதியில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதும், இம்மக்களின் குற்றச்சாட்டுத் தொடர்பாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமனிடம் தொடர்புகொண்டு வினவியபோது, நாங்கள் தட்சணாங்குளம் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு அனுமதிக்கவில்லை என்றும் என்ன காரணத்திற்கு கொட்டியுள்ளார்களோ என்று தெரியவில்லை என்றும் பம்மைபடுப் பகுதியிலே குப்பைகள் கொட்டுவதற்கு நகரசபைக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது என்றும் இவ்விடயத்தை கவனத்தில் எடுப்பதாக தெரிவித்தார்.

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானம்!!

வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறைகளை வழங்கி சகல வர்த்தகர்களும் தமது ஊழியர்களும் தத்தமது குடும்பத்தினருடன் விடுமுறையைக்கழிக்குமாறு இன்று இடம்பெற்ற வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக சபைக்கூட்டத்தில் அனைத்து வர்த்தகர்களின் ஒத்துழைப்புடன் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் பொதுக்கூட்டம் இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற்றது. இதன்போது தலைவராக எஸ்.சுஜன், செயலாளராக அ.அம்பிகைபாகன், பொருளாலாளராக ந.சுந்தரதாசன் உப தலைவராக எம்.கே.எம்.பாகீம், உப செயலாளராக எம்.எச்.எம்.அஸ்கர், நீண்டநாள் வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் பி.எஸ்.அப்துல்லாவின் மகன் பி.எஸ்.ஏ.பசீர் நிர்வாக சபையினரால் கௌரவ உப தலைவராக தெரிவு செய்யப்பட்டனர்.

வர்த்தகர் சங்கமானது வர்த்தகர்களின் நலனிலேயே அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்புடனும் செயற்படுத்தவதற்கு உறுதி பூண்டுள்ளது. வர்த்தகர் சங்கமானது தமது முதல் நடவடிக்கையாக சகல வர்த்தக நிலைய உரிமையாளர்களையும் ஒன்றிணைத்து நடாத்துவதன் மூலம் வர்த்தகர்களுக்கிடையேயான ஒற்றுமையினை மேம்படுத்துவதற்கான வழிவகைகளைமேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்,

தங்களால் ஒரு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த வர்த்தகர்களின் ஆய்வறிக்கையின் மூலம் தற்போது வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வர்த்தகர் சங்கத்திடமிருந்து எவ்வாறான தீர்வை எதிர்பார்கின்றனர்கள் என்பதற்கிணங்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் நலன்கருதியும் எதிர்வரும் ஓகட்ஸ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை வழங்கி சகல வர்த்தகர்களும் தமது ஊழியர்களும் தமது குடும்பத்தினருடன் இணைந்து விடுமுறையினை கழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இன்று இடம்பெற்ற முதலாவது நிர்வாக சபைக்கூட்டத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், தனியார் போக்குவரத்துச்சங்கம், சிகை உரிமையாளர்கள் சங்கம், உள்ளுர் விளை பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம், மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுவதாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சரிவு!!

சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ் புக் என்றமுகப்புத்தக நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது.

உலக பங்குச் சந்தைகளில் இன்று பேஸ் புக் நிறுவனத்தின் பங்குகள்பாரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன. இதற்கமைய பேஸ் புக் நிறுவனத்தின் பங்குகள் 20வீத சரிவை சந்தித்திருக்கின்றது.

இது பேஸ் புக் நிறுவனத்தின் பங்குகளின் சந்தைப் பெறுமதியில் 150 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருப்பதாக பங்குச் சந்தை புள்ளிவிபரங்கள்தெரிவிக்கின்றன.

பேஸ் புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த சரிவு சிறிலங்காவின் ஒட்டுமொத்தபொருளாதாரத்தையும் விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய 2017 ஆம்ஆண்டில் அதன் மொத்த தேசிய உற்பத்தி 87 தசம் 17 பில்லியன் டொலராக பதிவாகியிருந்தது.

பிழையான செய்திகளை பரப்பியமை மற்றும் வாடிக்கையாளர்களின்தரவுகளை வெளியாருக்கு விற்றமை தொடர்பிலான பாரதூரமான குற்றச்சாட்டுக்களை அடுத்தே பேஸ்புக்நிறுவனத்திற்கு இந்த அளவிற்கு பெரும் பின்னடைவிற்கு முகம்கொடுத்திருப்பதாக முன்னணிபொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை பேஸ் புக் நிறுவனம் தனது நற்பெயரை அதிகரிப்பதற்காக சுயவிளம்பரத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை மேலும் 50 வீதத்தால் அதிகரிக்கத்தீர்மானித்துள்ளதாகவம் அறிவித்துள்ளது.

அதேவேளை பேஸ’புக் நிறுவனம் சடட் சிக்கல்களுக்கு முகம்கொடுக்கநேரிட்டுள்ள தரவுத் திரட்டு மற்றும் வாடிக்கையாளர்களின் தரவுகள் வெளியிடங்களுக்குசெல்வதை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மும்படுத்துவதற்கான செலவீணங்களையும்,விளம்பரதாரர்களை கண்காணிக்கவும் மேலதிகமாக நிதி ஒதுக்கியிருக்கின்றது.

இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் முதலீடுபவர்களின் லாபத்தின்அளவு வீழ்ச்சியடையும் என்று எச்சரிக்கப்பட்டமையும் பேஸ்புக் நிறுவனத்தின்பங்குகளின் திடீர் சரிவுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டகிறாம், வட்ஸ்எப், ஆகியநிறுவனங்களினதும் உரிமத்தை தன்னத்தே கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் சமூக வலைத்தளசந்தையில் 30 வீதத்திற்கு அதிகமாக வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டுவிட்டரினதும் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன.

2 மணி நேரத்தில் 150 பில்லியன் டாலரை பறிகொடுத்த பேஸ்புக்!

பேஸ்புக் நிறுவனம் 2 மணி நேரங்களில் 150 பில்லியன் டாலரை இழந்து பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமையன்று மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. 2 மணி நேரத்தில் அந்நிறுவனத்துக்கு 150 பில்லியன் டாலர் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்பு, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பைவிட அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

இதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் 15.8 பில்லியன் குறைந்துள்ளது. இதனால் அவரது சொந்து மதிப்பு 70 பில்லியன் டாலருக்குக் கீழே சென்றுவிட்டது.

அண்மையில் பேஸ்புக் தனது புதிய பயனாளர்கள் எண்ணிக்கையின் உயர்வு மிகவும் மந்தமடைந்துவிட்டதாக அறிவித்தது. இதன் எதிரொலியாகவே அந்நிறுவனத்துக்கு இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாரான புகையிரத்திற்கு நேர்ந்த சிக்கல்!!

வவுனியா – கொழும்பு கடுகதி புகையிரதம் பிரேக் இறுகியதால் ஒரு மணி நேரம் தாமதமாகி புறப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை 5.45 மணியளவில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாரான கடுகதி புகையிரதத்தின் பிரேக்கே இறுகியுள்ளது.

இதனால் அதனை சீர் செய்து புகையிரதம் புறப்பட்டதால் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்ட நிலையில் பயணிகள் அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர்.

யாழில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்த மர்மநபர் : 12 தையல் போட்ட பரிதாபம்!!

யாழ்ப்பாணம் – தும்பளைப் பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர், தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய சத்தியசோதி சிறிகௌசி என்ற பெண் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கழுத்தில் 12 தையல்கள் போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

தும்­ப­ளைப் பகு­தி­யில் பிள்­ளை­யு­டன் வசித்து வரும் குறித்த பெண் வீட்டில் தனிமையில் ஆடைகளை தைத்துக்கொண்டு இருந்துள்ளார்.

இதன்போது அவ­ருக்கு பின்­பக்­க­மாக வந்த மர்ம நபர் ஒரு­வர் அவரு­டைய வாயை பொத்­தி­யுள்­ளார். இத­னால் அதிர்ச்சி அடைந்த பெண் ந­ப­ரின் பிடி­யி­லி­ருந்து தப்­பப் போரா­டி சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து பெண்­ணின் கழுத்தை கத்­தி­யால் அறுத்­து­விட்டு மர்ம நபர் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­றுள்­ளார் என்று பொலி­ஸில் முறைப்­பாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், பருத்­தித்­துறை பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம்!!

எண்ணற்ற அதிசயங்களை தாங்கி நிற்கும் வான்வெளியில் இன்று அரிய காட்சியாக, சரியான நேர்கோட்டில் அமையவுள்ள சந்திரகிரகணம் 21ஆவது நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணமாக இரவில் நிகழவுள்ளது.

வானில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் அதிசயமானவை. அப்படி ஒரு அதிசயம் இன்று நிகழப் போகிறது. இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணத்தை காண பலர் ஆர்வமுடன் உள்ளனர்.

சூரியன், பூமி, சந்திரன் ‌ஒரே நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகின்றது.

பொதுவாக சந்திர கிரகணம் சில மணித்துளிக‌ள் நீடித்து பின் படிபடியாக விலகிவிடும். ஆனால் ‌இன்றைய சந்திரகிரகணம் தான் மொத்தம் 103 நிமிடங்கள் அதாவது 1மணி நேரம் 43நிமிடங்கள் வரை நீடிக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பதால் இந்த அதிசயத்தைக் காண பலர் ஆர்வமோடு காத்திருக்கின்றனர்.

யாழில் தேர் இழுத்த இராணுவத்தினர்!!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது. இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர்.

அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், தமது சீருடையின் மேலங்கியை கழட்டி விட்டு தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இராணுவத்தினரின் திடீர் செயற்பாட்டை கண்ட பக்தர்கள் செய்வதறியாது இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த ஆலயத்தில் வருடாந்த தேர்த்திருவிழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற போது, அங்கு வருகைத்தரும் இராணுவத்தினர் தேர் இழுக்கின்றமை சிறப்பம்சமாகும்.

பெண்களை கட்டிப்பிடித்து அச்சுறுத்தும் கிறீஸ் பேய் : அச்சத்தில் பல கிராமங்கள்!!

அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் கிறீஸ் பூதத்தின் அச்சுறுத்தல் காரணமாக பெண்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
இரவில் சுற்றி திரியும் புதிய கிரீஸ் பூதம் தொடர்பில் மற்றுமொரு தகவல் வெளியாகி உள்ளது.

வாதுவ, பொஹந்தரமுல்ல, பொத்துபிட்டிய, கம்மனயாவத்தை மற்றும் கொலபத ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கிரீஸ் பூதம் தொடர்பில், மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கறுப்பு கட்டை காற்சட்டை மாத்திரம் அணிந்து இரவு நேரத்தில் வீடுகளுக்கு சென்று அங்குள்ள பெண்கள் மற்றும் இளம் பெண்களைக் கட்டிப்பிடித்து கொள்ளும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பொலிஸ் பரிசோதகர் தம்பதியினர் வசிக்கும் வீட்டிற்கு சென்று அந்த வீட்டில் இருந்த பெண்ணின் காலை பிடித்து இழுக்கும் போது அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். பேய் என கூறி வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளதாக வீட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், உரிய நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் மனைவி, பிள்ளைகள் : இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த கணவன்!!

கம்பளையில் டயர் வெடித்ததில் நபர் ஒருவர் 30 அடி தூரம் வீசப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். பல்விலதென்ன பிரதேசத்தில் வாகனம் பழுது பார்க்குமிடத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

பாரிய ட்ரக் வண்டி ஒன்றின் டயரின் மீது ஏறி காற்றடித்து கொண்டிருந்த நபர் 30 அடி தூரம் உள்ள தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நிலந்த வீரரத்ன என்ற 46 வயதான 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

அவரது மகன் மற்றும் மனைவி வெளிநாட்டில் தொழிலுக்காக சென்றுள்ள நிலையில் கடைசி மகனுடன் இந்த நபர் வாழ்ந்து வருகின்றார்.

நிரந்தர தொழில் இல்லாமையினால், அவர் பழுது பார்க்குமிடத்தில் சிறிய சிறிய வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காற்றடிப்பதற்காக டயர் மீது ஏறியுள்ளார்.

எனினும் திடீரென டயர் வெடித்தமையினால் அவர் 30 அடி உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டு விழுந்துள்ளார். விழுந்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் தமிழ் தேசிய வீரர்கள் தின ஞாபகார்த்த இரத்ததான நிகழ்வு!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், சிவபாதம் உட்பட 1983 ஜீலையில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53பேர் மற்றும் இக் கலவரத்தின் மூலம் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் 35வது ஆண்டு நினைவாக இன்று (27.07.2018) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் கோகிலகுமார் அஞ்சலா, அக்கினி சிறகுகள் அமைப்பின் தலைவர் அரவிந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணியினர், கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.