வவுனியா மத்திய நகரில் மாத இறுதிப்பகுதிகளில் இளம் பெண்கள் கடைத்தொகுதிகளுக்கு முன்னால் நின்று பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து பேருந்து நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கும்போது,
அண்மைக்காலங்களாக ஒவ்வொரு மாத இறுதிப்பகுதியில் 20ஆம் திகதிகளுக்கு பின்னர் மத்திய நகரில் இளம் பெண்கள் பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் இப்பகுதிகளில் தரித்து நின்றுவருகின்றனர். நீண்டநேரமாக காத்திருப்பதுடன் தொலைபேசிகளிலும் தொடர்பு கொண்டு நீண்டநேரமாக பேசி வருகின்றனர்.
இவ்வாறு பல பெண்கள் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் இப்பகுதியில் சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றது. இப்பகுதிக்கு வரும் பெரும்பான்மை இனத்தவர்கள் சிவில் உடையில் அவர்களுடன் உரையாடலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வியாபார நிலையங்களுக்கு பொதுமக்களின் வரவு குறைந்து காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எவையும் பொலிசார், நகரசபையினரால் இடம்பெறவில்லை. இவ்வாறு கலாச்சார சீர்கேடாக மாறிவரும் இந்நிலையிலிருந்து மத்திய நகரை மீட்டுத்தருமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் நகரசபையினால் வவுனியாவிலிருந்த மசாஜ் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டபோதிலும் தற்போது காலச்சார சீர்கேடுகள் இடம்பெறும் நடவடிக்கையினைக்கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் ஆக்கபூர்வாக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உகந்தையிலிருந்து நானும் எனது இரு வாய்பேசாத மகன்களும் முதற்தடவையாக கதிர்காமம் செல்வதற்காக 17ம் திகதி காலை காட்டுக்குள் இறங்கினோம்.
மறுநாள் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சென்றுகொண்டிருக்கையில் எனது கடைசி மகனைக்காணவில்லை. இன்றுவரை காட்டுக்குள்ளும், கதிர்காமத்திலும் தேடிக்கொண்டிருக்கின்றோம்.
இன்னும் கிடைக்கவில்லை. யாராவது கண்டால் அறிவிக்குமாறு கதிர்காம காட்டுப்பாதையில் தனது மகனைப்பறிகொடுத்த தாய் கணபதிப்பிள்ளை யோகநாயகி(வயது 66) கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலுள்ள முனைக்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்தவராவார். இச்சம்பவம் கடந்த 18ம் திகதி நடுக்காட்டுக்குள் இடம்பெற்றிருக்கிறது.
கடந்த 10 நாட்களாகத்தேடியும் கிடைக்கவில்லை. கடந்த 16ம் திகதி வீட்டிலிருந்து தாயுடன் இருமகன்களான நல்லையா குணாநிதி (வயது 36) நல்லையா குகதாஸ்(வயது 28) கதிர்காமம் செல்வதற்காக உகந்தைக்குச் சென்றார்கள்.
மகன்மார் இருவரும் வாய்பேசாதவர்கள். 18ம் திகதி குமுக்கனிலிருந்து நாவலடி செல்லும் வழியில் கடைசிமகனான குகன் என அழைக்கப்படும் நல்லையா குகதாஸ்(வயது28) காணாமல் போயுள்ளார்.
பொலிஸ் தொடக்கம் வனஜீவராசிகள் இராணுவத்துணையுடன் தேடியும் கிடைக்கவில்லை. இன்றுவரை தேடுகின்றார்கள். என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.
தாயார் மகனைக்காணாது அழுதுபுலம்பிக்கொண்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில்,
எனக்கு ஐந்து பிள்ளைகள். 2 பெண்களும் 3 ஆண்களும். இவர்களில் கடைசிமகன்தான் குகதாஸ். கணவர் ஏலவே மரணித்துவிட்டார்.
இரண்டாம் நாள் காட்டுப்பாதையில் ஆயிரக்கணக்கானோர் பயணித்துக்கொண்டிருந்தோம். நடக்கும்போது முன்பின்னாக நடப்பது வழமை. ஆனால் அன்று இரவு தங்குவதற்காக வெட்டைக்குச்சென்றபோது மகனைக் காணவில்லை.
தேடினோம். பலரிடமும் விசாரித்தோம். பலனில்லை. அங்கு தண்ணீர்த்தாங்கி நிரப்பவந்தர்களிடம் விசாரித்தபோது அவரை நாவலடியில் நிற்பதாகச்சொன்னார்கள்.
ஒருவகையில் மகிழ்ச்சி. மறுநாள் காலை நாவலடிக்குச்சென்றோம். அற்கு அவரைக்காணவில்லை. விசாரித்தபோது எவருக்கும் தெரியவில்லை.
பின்னால் நடந்துவரக்கூடும் அல்லது முன்னால் போயிருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் நாம் மனத்தைக்கல்லாக்கிக்கொண்டு முருகனை நினைத்தபடி கதிர்காமத்தை 22ம் திகதி அடைந்தோம்.
அங்கும் தேடினோம். கிடைக்கவில்லை. அங்கு பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்களம், இராணுவம் என்று பலரிடமும் முறையிட்டுள்ளோம். இதுவரை எதுவித தகவலுமில்லை.
இறுதியாக வெண்ணிற காற்சட்டையும், சேட்டும் அணிந்திருந்தார். எனது மகன் வாய்பேசாதவர். எனவேதான் நாம் கூடுதலாக பயப்படுகின்றோம். அவருக்கு என்ன நடந்தது? என்று தெரியாமல் பதறுகின்றோம் என்று கூறி அழுதார்.
அவரது மற்றொரு மகனான நல்லையா குமாரதாஸ் (வயது 40) கூறுகையில்,
நாம் சம்பவத்தைக் கேள்வியுற்றதும் ஞாயிறு தொடக்கம் புதன்கிழமை வரை கதிர்காமத்திலே தங்கியிருந்து அவரது புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரத்தை (தமிழ் சிங்கள மொழிமூலம் ) பரவலாக விநியோகித்தோம்.
செவ்வாயன்று வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இராணுவம் சகிதம் வாடகைக்கு ஒரு ஜீப்வண்டியை அமர்த்திக்கொண்டு கதிர்காமத்திலிருந்து மீண்டும் காட்டுப்பாதையுடாக அவர் தவறிவிடப்பட்ட இடம் வரை சென்று தேடினோம்.
கொக்கட்டிச்சோலைப் பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளோம். தயவுசெய்து யாராவது இப்படத்தில் காணப்படும் எனது தம்பியைக்கண்டால் 0775566052 எனும் செல்லிடத்தொலைபேசிக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை கடந்த 22ம் திகதி உகந்தையில் மூடப்பட்டது தெரிந்ததே. அதாவது இறுதிநாள் 22ம் திகதி காட்டுக்குள் இறங்கிய இறுதிபாதயாத்திரீகர்கள் இன்று (26) கதிர்காமத்தை வந்தடைந்தனர்.
எனவே இனி யாரும் காட்டுக்குள் பயணித்து வருவதற்கு இல்லையென்பது குறிப்பிடத்தக்கது
வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மீது வான் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (26.07) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் வேகமாக வந்த வான் அதன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியநிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் சிங்கம் சூர்யா கெட்டப்பில் போலி ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வந்து 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட மணிகண்டன் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மாயாஜால் பின்புறம் உள்ள பண்ணை வீட்டுக்கு கடந்த வாரம் வட இந்தியாவிலிருந்து ஐபிஎஸ் அதிகாரியைப் போல கம்பீரமாக வெண்ணிற பொலீரோ ஜீப்பில் வந்து இறங்கியுள்ளார்.
இங்குள்ள பண்ணை வீடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் சிறப்பு அதிகாரியாக அனுப்பப்பட்டவர் என்று அங்குள்ளவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
உடனே அதன் உரிமையாளர் அங்கிருந்த பணியாளர்கள் இவருக்கு ராஜ மரியாதை கொடுத்துள்ளனர். இதே போன்று பல்வேறு பண்ணை வீடுகளுக்கு சென்று தன்னை ஐபிஎஸ் அதிகாரி என கூறி பணம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், அங்கு வந்த லோக்கல் பொலிசார், பொலிஸ் ஜீப் ஒன்று நிற்பதையும் அருகில் மணிகண்டன் அதிகாரி நிற்பதையும் பார்த்து சல்யூட் அடித்துள்ளனர்.
சல்யூட் அடித்தாலும் பொலிசாரின் மனதுக்குள் இவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இவரை கண்காணித்துள்ளனர். அப்போது, உங்களை அடையாறு துணை ஆணையர் பார்க்க வேண்டும் என அழைத்துள்ளார், என மணிகண்டனிடம் லோக்கல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, இரண்டு மூன்று கேள்விகள் கேட்டவுடனேயே போலி அதிகாரி என்று அடையாறு துணை ஆணையர், மணிகண்டனை அடையாளம் கண்டுகொண்டார்.
இதனைத்தொடாந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
பிடெக் முடித்துள்ள மணிகண்டனுக்கு வேலை கிடைக்கவில்லை. மேலும் பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே இவரது ஆசையாக இருந்துள்ளது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் நண்பர் ஒருவரின் உதவியுடன் பொலிஸ் சீருடையை பெற்றுக்கொண்டு, ஆடம்பரமாக வாழ தன்னை ஐ.பி.எஸ். அதிகாரி என்று சொல்லியதோடு, சைரன் வைத்த காரில் வலம் வந்துள்ளார். காரில் பொலிஸ் என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி வைத்துள்ளார்.
2013-ம் ஆண்டு. அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம், ”நான் ஐபிஎஸ் அதிகாரி. துணை ஆணையராக உள்ளேன், தேர்வு எழுதி ட்ரெய்னிங்கில் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். தான் புழல் சிறையில் பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறிய அவர் பெரவள்ளூரில் ஏராளமான இளைஞர்களை ஏமாற்றிப் பணம் பறித்துள்ளார்.
ஆங்கிலம் பேசுவதில் தனக்குள்ள திறமையைப் பயன்படுத்திக்கொண்டு படித்த இளம்பெண்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். 2014-ம் ஆண்டு பால மணிகண்டனிடம் ஏமாந்த பெண்கள் இவரது தோற்றம், நுனி நாக்கு ஆங்கிலத்தை நம்பி தங்களை இழந்துள்ளனர்.
இப்படி பால மணிகண்டனிடம் ஏமாந்தவர்கள் 9 பெண்கள். இவர்களில் 2 பேர் மருத்துவர்கள், 2 பேர் பொறியாளர்கள். தனது பேஸ்புக் பக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரி என குறிப்பிட்டுள்ளார்.
அதில், புகைப்படங்களை பதிவேற்றம் செய்து பேஸ்புக் மூலம் பல பெண்களுக்கு காதல் வலை வீசியுள்ளார். மணிகண்டனை ஐ.பி.எஸ். அதிகாரி என்று நம்பி பழகியவர்களை அவர் ஏமாற்றியுள்ளார்.
இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து, மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
மணிகண்டன் 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் வெளியே வந்த இவர் இடைப்பட்ட காலத்தில் மீண்டும் போலி அதிகாரிகயாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது, கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
இந்தியாவில் பெண்ணுடன் இளைஞர் தனியாக இருந்த வீடியோவை அப்பெண் சமூகவலைதளத்தில் வெளியிட்டதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சவுரவ் கோஷ். இவர் புத்தக கடையில் வேலை செய்து வந்த நிலையில் அங்குள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அடிக்கடி அப்பெண் வீட்டுக்கு சென்ற சவுரவ் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை சவுரவுக்கு தெரியாமல் அந்த பெண் தனது போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அந்த வீடியோவை சவுரவிடம் காட்டி அப்பெண் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் வீடியோவை சமூகவலைதளத்தில் கசியவிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சவுரவ் தற்கொலை செய்ய முடிவெடுத்து ரயில் முன்னர் பாய்ந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த போது சவுரவ் பாக்கெட்டில் இருந்த செல்போனை கைப்பற்றினார்கள். செல்போனில் அவர் ஒரு வீடியோவை பதிவு செய்து வைத்திருந்தார்.
அதில், என் இறப்புக்கு காரணம் அந்த பெண் தான், நான் அவருடன் இருந்ததை வீடியோ எடுத்து என்னை மிரட்டி வந்தார் என கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
திருப்பூரில் கிருத்திகா என்பவர் சுகப்பிரசவத்தில் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பகாலத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல், யூடியூப் மூலம் பிரசவம் பார்த்த காரணத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளத்தில் உள்ள தகவல்படி ஒவ்வொரு மாதமும் உணவு உட்கொண்டு வந்துள்ளார் கிருத்திகா.
இதன்படி பிரசவ வலி ஏற்படும்போது, தனது நண்பன் பிரவின் உதவியுடன் கணவர் கார்த்திகேயன் பிரசவம் பார்த்து பெண் குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.
ஆனால், மயக்க நிலைக்கு சென்ற கிருத்திகா உயிரிழந்துவிட்டார், தற்போது பெண் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது.
இதுகுறித்து கிருத்திகாவின் தந்தை கூறியதாவது, என் பொன்னு கர்ப்பமானதுல இருந்தே மகள், மருமகன் இரண்டு பேர் கிட்டயும் மருத்துவமனைக்கு போக சொன்னேன். ஆனா அவங்க அதுக்கு ஒத்துக்கல.
வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறதா சொன்னாங்க, மருமகனோட நண்பரும் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தார், கடைசியில் இப்படி ஆகிவிட்டது என கூறியுள்ளார்.
மகப்பேறு மருத்துவர் பூங்கோதை செல்வராஜ் கூறியதாவது, வீட்டில் பிரசவம் பார்ப்பது தவறில்லை. ஆனால் அதற்குத் தகுதியான நபர்கள் இருக்க வேண்டும். பிரசவ நேரத்தில் ரத்தப்போக்கு என்பது முக்கியப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
பிரசவ நேரத்தில் 500 மில்லி முதல் 1 லிட்டர் வரை ரத்தப்போக்கு இருக்கும், அப்போது அந்த பிரச்சனையை கையாளக்கூடிய மருத்துவர்கள் மட்டுமே பெண்னை சீரான நிலைக்கு கொண்டுவர முடியும்.
கிருத்திகா நிச்சயம் ரத்தப்போக்கு காரணமாகத்தான் இறந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சேலத்தில் அஜித் ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்,
விஜய் என்பவர் சேலம் மாநகர் மாவட்ட அஜித் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். இவர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மேலும், குண்டர் சட்டத்தில் கைதாகிய இவர் சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், நேற்றிரவு ரவுடிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்கள் என்பவருக்கு மானசி, பாரோ, சுகோ என மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். குடிசைப் பகுதியில் வசித்து வந்த அவர்கள் வாடகை கட்டாததால் விரட்டப்பட்டு புதிய இடத்திற்கு வந்தனர்.
இந்நிலையில் மங்களின் ரிக்ஷா திருடு போனதால் அந்தக் குடும்பம் இரண்டு வாரங்களாக வறுமையில் தவித்து வந்தது. வேலை தேடி போன மங்கள் பல நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.குழந்தைகளின் தாய் பீனா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இதனால் மூன்று குழந்தைகளைப் பராமரிக்க யாருமில்லாத நிலையில் மூவரும் பட்டினியால் வீட்டில் மயங்கியுள்ளனர்.
பின்னர் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேத பரிசோதனையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளின் வயிற்றில் தண்ணீரும் உணவும் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இதனால் குழந்தைகள் பட்டினியால் இறந்தது உறுதியாகியுள்ளது.
கேரளாவில் மனைவி கோமாவிலிருந்து மெதுவாக பழைய நிலைக்கு திரும்பி வருவது குறித்து கணவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
கோட்டயம் மாவட்டம், வழூவூரைச் சேர்ந்த பெத்தனா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்.
தலையில் அடிப்பட்டதில் கோமா நிலைக்கு சென்ற பெத்தனாவுக்கு கடந்த 14-ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.
அதன் பிறகு பெத்தனாவிடம் ஏற்பட்ட மாற்றம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்திய நிலையில், இப்போது குழந்தைக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியடையும் அளவுக்கு பெத்தனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து பெத்தனாவின் கணவர் அனூப் கூறுகையில், மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த எங்கள் இல்லற வாழ்க்கைக்குப் பரிசாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மகன் பிறந்தான்.
இரண்டாவதாக என் மனைவி பெத்தனா கர்ப்பமான போது தான் வழுக்கி விழுந்தார்.
மருத்துவமனையில் அவர் உயிர் பிழைப்பதே கடினம் என கூறிய நிலையில் நினைவு திரும்பாமல் பல நாள்கள் வென்டிலேட்டரில் இருந்தாள் பெத்தனா. பின்னர் வீட்டுக்கு அழைத்து வந்து அவரை பார்த்துகொண்டேன்.
பத்தாவது மாதம் பெத்தனாவை டெலிவரிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். கடந்த 14-ம் திகதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு எல்வின் என்று பெயர் வைத்திருக்கிறோம்.
குழந்தை அழும்போதும் பால் குடிக்கும்போதும் என் மனைவி பெத்தனாவின் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டது. கோமா நிலையில் இருந்த என் மனைவியின் முகத்தில் பல உணர்ச்சிகள் தென்படத் தொடங்கின.
பெத்தனாவுக்குப் பழைய நினைவு திரும்பியிருக்கிறது. எந்தக் கணவனுக்கும் மனைவி அழுதால் மகிழ்ச்சி ஏற்படாது. ஆனால், என் மனைவி அழுதபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிறந்த குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்பதுபோல இருந்தது . இப்போது சிரிப்பு, அழுகை என தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறாள்.
படுத்த படுக்கையாக இருந்த அவள் இப்போது வீல் சேரில் உட்காருகிறாள். என் மனைவி பெத்தனாவும் எனக்குக் குழந்தையாகவே மாறிவிட்டாள்
பெத்தனா விரைவில் முழுமையாக குணமடைவார் என்று நம்பிக்கை உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர் பாகிஸ்தானுடன் நடந்த யுத்தத்தில் உயிரிழந்த நிலையில், மனைவியின் கடிதத்தை கடைசி வரை படிக்காமலேயே போனது தெரியவந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் சிங். ராணுவ வீரரான இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்திய ராணுவம் சார்பில் கலந்து கொண்டார்.
சிம்லாவில் ராஜேஷ் இருந்த நிலையில் அவர் மனைவி உத்தரகாண்டில் இருந்தார். கணவரை பல நாட்களாக பார்க்காததால் ராஜேஷுக்கு அவர் மனைவி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
கடிதமானது ராஜேஷுக்கு வந்து சேர்ந்த நிலையில் யுத்தம் சம்மந்தமான வேலையில் இருந்ததால் அவர் அதை பிரித்து படிக்கவில்லை.
யுத்தம் முடிந்தபின்னர் கடிதத்தை படிக்கலாம் என ராஜேஷ் நினைத்தார், ஆனால் துரதிஷ்டவசமாக ராஜேஷ் யுத்தத்தில் கொல்லப்பட்டார். இதன்பின்னர் ராஜேஷின் சடலம் ராணுவ உடையுடன் அவர் குடும்பத்தாருக்கு அனுப்பப்பட்டது.
அப்போது அவரின் சட்டை பாக்கெட்டில் மனைவி எழுதிய கடிதம் அப்படியே பிரிக்காத நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்து ராஜேஷ் மனைவி கதறி அழுதுள்ளார்.
இன்று கார்கில் போர் வெற்றி தினம் நினைவுகூறப்படும் நேரத்தில் இந்த சம்பவத்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பிரிகடிர் குஷல் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் மின் சாதனப் பொருட்கள் விற்பனையகம், டிராவல்ஸ் நடத்தி மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை அனிசா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனிஷா என்கிற பூர்ணிமா, பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் உள்ளார்.
இவரது கணவர் சக்தி முருகனும், அனிசாவும் சேர்ந்து ஸ்கை எக்யூப்மன்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவரின் நிறுவனத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பில் 101 வீட்டு உபயோக ஏ.சி.க்களை இவர்கள் வாங்கியுள்ளனர்.
இதற்கு அனிசா கொடுத்த காசோலை வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. இதனால் ஏ.சிக்களை விற்பனை செய்த பிரசாந்த் குமார் நேரில் சென்று கேட்ட போது பணத்தை தர முடியாது என அனிசா மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் அனிசா மற்றும் அவரது கணவர் சக்தி முருகன் உள்ளிட்டோர் மீது பிரசாந்த்குமார் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிசார் அனிசாவையும் அவரது கணவரின் தம்பி ஹரிக்குமாரையும் கைது செய்துள்ளனர்.
தலைமறைவான அனிசாவின் கணவர் சக்தி முருகனை தேடி வருகின்றனர்
கேரள மாநிலத்தில் பிரபாவதி என்ற தாய் தனது மகனை கொன்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு 13 ஆண்டுகள் போராடி தூக்குதண்டனை வாங்கிகொடுத்துள்ளார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபாவதியின் ஒரே மகன் உதயக்குமார். உதயக்குமாருக்கு ஒரு வயது இருக்கும்போதே தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டதால், சிறு வயதில் இருந்த தனது மகனை கஷ்டப்பட்டு வளர்த்து வந்துள்ளார்.
உதயக்குமார் வளர்ந்தவுடன் கடை ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், 2005 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகையின் போது தனக்கு கிடைத்த போனஸ் பணத்தை வைத்து அம்மாவுக்கு புடவை எடுக்க கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, சந்தேக வழக்கில் உதயக்குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற பொலிசார், அங்கு வைத்து அவரிடம் இருந்த 4,000 ரூபாயை எடுத்துள்ளனர். இதனை திருப்பிதருமாறு உதயக்குமார் கேட்டபோது, பொலிசார் சேர்ந்து உதயக்குமாரை சித்ரவதை செய்து அடித்துள்ளனர்.
இதன்போது, உதயக்குமார் இறந்துவிட்டார், ஆனால் திடீரென மயங்கிவிழுந்துவிட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், உதயக்குமாரின் தொடையில் உருளையால் உருட்டியதில் ரத்த நாளங்கள் உடைந்து அவர் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
தனது மகனின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பிரபாவதி குறித்த பொலிசார் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சுமார் 13 ஆண்டுகள் நடைபெற்றது.
13 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு, உதயகுமாரை கொலை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேருக்கு தண்டனை வழங்கியுள்ளது சி.பி.ஐ நீதிமன்றம்.
பொலிஸ் அதிகாரிகள் ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பொலிஸ் அதிகாரி அஜித்குமார் மற்றும் முன்னாள் எஸ்.பி-க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரபாவதி கூறியதாவது, ஒரு தாயின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. தவறு செய்த காவல் துறையினருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் நினைத்தேன். அதுபோன்றே தண்டனை கிடைத்துள்ளது. என் கண்ணீருக்கு விடை கிடைத்துள்ளது. இனி நான் அழமாட்டேன் என கூறியுள்ளார்.
செந்நிற கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் மிகப்பிரம்மாண்டமான ஏரி இருப்பதற்கான வலுவான ஆதாரத்தினை ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ளனர்.
செவ்வாய் கிரகத்திலன் தென் பகுதியில் உள்ள மூடுபனிப் பகுதிக்கு கீழே இந்த ஏரி காணப்படுகின்றது.
European Mars Express எனும் செயற்கைக் கோளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையாகக் கொண்டே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஏரியானது 20 கிலோ மீற்றர்களாக இருப்பதுடன், மூடு பனி மேற்பரப்பிலிருந்து 1.5 கிலோ மீற்றர் ஆழத்தில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இப் பகுதியில் உள்ள காலநிலையை ஆராய்ந்து பார்க்கும்போது நுண்ணங்கிகள் வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கென்யாவில் சொந்த சகோதரியை அண்ணன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமேகா மாகாணத்தில் அமைந்துள்ளது முகை கிராமம். இங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன், தங்கை இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து யாருக்கும் தெரியாமல் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தற்போது இவர்களின் குடும்பத்தினருக்கும், ஊராருக்கும் தெரியவந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அண்ணனும், தங்கையும் திருமணம் செய்து கொண்டதால் ஊருக்கு தீங்கு ஏற்படும் என எண்ணிய ஊர் தலைவர்கள் சில சடங்குகளை செய்தார்கள். இதோடு திருமணம் செய்து கொண்ட அண்ணன், தங்கையை கட்டி போட்டு பிரம்படி கொடுத்தார்கள்.
இப்படி செய்தால் தான் தலைமுறை சாபம் தங்களை தாக்காது என கிராம மக்கள் கருதுகிறார்கள், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கென்யாவின் Murunyu என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் Mwaura(வயது 29), சம்பவதினத்தன்று அண்டை வீட்டுக்காரருக்கு சொந்தமான பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த போது பிடிபட்டார்.
உடனடியாக ஊர்மக்கள் சூழவே, தன்னை கொன்று விட வேண்டாம் என கெஞ்சியதுடன், பெண்களுடன் உறவு வைத்தால் எய்ட்ஸ் பரவிவிடும் என்ற அச்சத்தில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு முன்பு ஏற்கனவே நான்கு முறை பசுக்களுடன் இப்படி நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
எனினும் கற்கள் மற்றும் தடியால் அடித்த ஊர்மக்கள் பொலிசிடம் ஒப்படைத்தனர், இவருக்கான தண்டனை என்ன என்பது விரைவில் தெரியவரும்.
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்திருவிழா இன்று 26.07.2018 வியாழக்கிழமை இடம்பெற்றது.
மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் காலை முதல் அபிசேகங்கள் சிவஸ்ரீ சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெற்று காலை எட்டரை மணிக்கு வசந்தமண்டபபூஜையை தொடர்ந்து ஒன்பதரை மணியளவில் முத்துமாரியம்பாள் தேரில் ஆரோகணிக்க ஆண் பெண் பக்தர்கள் இருபுறமும் வடம் பிடிக்க நூற்றுக்கணக்கான பக்தர்களின் பிரசன்னத்தின் மத்தியில் தேர் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது .