மெக்டொனால்ட்ஸில் சாப்பிட்ட 10 நிமிடத்தில் உயிரிழந்த சிறுவன்!!

அயர்லாந்து நாட்டில் மெக்டொனால்ட்டில் சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் பள்ளி சிறுவன் ஒருவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான்.

மெக்டொனால்ட்டில் விற்பனை செய்யப்படும் Peri Peri chicken சாப்பிட்ட காரணத்தால் அவரது உதடுகள் மற்றும் முகம் வீக்கம் அடைந்து ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Maleek Lawal என்ற 10 வயது சிறுவனுக்கு மெக்டொனால்ட் உணவுகள் என்றால் அதிக ஆசை.

Ilac Centre outlet இல் அமைந்துள்ள துரித உணவகத்திற்கு சென்ற இச்சிறுவன் அங்கு, Peri Peri chicken வாங்கி சாப்பிட்டுள்ளான்.

சாப்பிட்ட 10 நிமிடத்தில் இச்சிறுவனின் உடல்நலம் பாதிக்கப்பட்டு நான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளான்.

கழிவறையை விட்டு வெளியே வந்த பின்னர், அம்மா எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது, என்னால் நடக்க முடியவிலை என கூறியுள்ளான்.

மேலும், அவனது முகம் மற்றும் உதடு வீங்க ஆரம்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவனை பரிசோதித்த மருத்துவர்கள் இச்சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பால், முட்டை மற்றும் மீன் ஆகியவற்றை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Peri Peri chicken பால் கலந்த உணவு ஆகும். இதனால் தான் இச்சிறுவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்துள்ளான் என கூறியுள்ளனர்.

மெக்சிகோ கோவிலில் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்ட்ட குழந்தையின் வன்கூடு கண்டுபிடிப்பு!!

மெக்சிகோவில் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோர் குழந்தையின் வன்கூடு ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். இது Aztec கோவிலின் சூரிய மற்றும் போர்க் கடவுளான Huitzilopochtli இற்கு அர்ப்பணிக்கப்பட்டதென தெரியவருகிறது.

இந்தக் குழந்தையானது மெக்ஸிக்கோ நகரின் தரையில் மி ஆழமாக புதைக்கப்பட்டிருந்தது. அது அவ் வட்டக் குழியில் பூசகர்களால் புதைக்கப்பட்ட வேளை அதன் வயது 5 – 10 வருடங்கள் இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

அக் குழந்தை எவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது இதுவரை தெளிவாகவில்லை. எனினும் அது போர்க் கடவுளைப் போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதனது கணுக்கால் மற்றும் கழுத்துப் பகுதியில் மணிகள் அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மரத்தாலான மார்புக் கவசமும் அணிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் ஆய்வாளர்கள் பறவையின் சிறகொன்றையும் கண்டுபிடித்துள்ளனர், இது Huitzilopochtli கடவுளுடன் தொடர்புடையதாகவுள்ளது.

அக்காலத்தில் போர்க் கடவுளை திருப்திப்படுத்துவதற்காக மனிதர்களின் இதயத்தை எடுத்துவிட்டு உடலை ஆழமாக புதைக்கும் வழக்கம் இருந்துவந்தது. அவ் இதயம் போரில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், அடிமைகளுக்கு சொந்தமானது என்ற கருத்தில் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இதற்கு முன்னரும் இது போன்ற உடல்பகுதிகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது, குறிப்பாக 2005 இல் 5 வருட வயதுடைய ஆணின் உடல் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய நதியில் அனாதையாக கிடந்த £50,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி!!

Scotland பகுதியில் ஓடும் நதி ஒன்றின் பாறை இடுக்குகளில் இருந்து £50,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Scotland பகுதியில் ஓடும் நதி ஒன்றில் இருந்து Douglas (40) என்பவர் தங்கக்கட்டி ஒன்றினை கண்டெடுத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தங்கக்கட்டியினை கண்டெடுத்த இவர், அது குறித்த ரகசியத்தினை வெளியிடாமல் நீண்ட காலம் மௌனம் காத்து வந்த நிலையில் தற்போது மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்த அவர் கூறுகையில், ஒரு நாள் ஆற்றில் முகத்தை புதைத்தவாறு படுத்திருந்தபொழுது, பாறையில் ஏற்பட்டிருந்த விரிசலை பின்தொடர்ந்தேன். அப்பொழுது அங்கிருந்த பாறைப்படுக்கைக்கு கீழே 2 கிராம் மதிப்புள்ள தங்கக்கட்டியை பார்த்து ஆச்சர்யமடைந்தேன். பின்னர் என்னுடைய நபரை அழைத்தபோது, அவர் பார்த்து விட்டு 5 முதல் 7 கிராம் வரை இருக்கும் என கூறினார்.

எங்களுக்கு இது மிகவும் வியப்பாகவே இருந்தது. இதற்கு முன்பு இது போன்ற ஒன்றினை நாங்கள் பார்த்ததே இல்லை என கூறினார்.

தற்போது வல்லுநர்கள் பலரும் அப்பகுதியில் இன்னும் நிறைய தங்கங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தேடி வருகின்றனர். ஆனால் அதற்கான சரியான இடத்தினை இன்னும் கண்டறிய முடியாததால் வேட்டை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக இதனை ஆய்வு செய்த தங்க நிபுணர் Leon Kirk, தங்கக்கட்டி குறைந்தபட்சம் £50,000 பவுண்ட் மதிப்பு இருக்கும் எனவும் விரைவில் பிரித்தானிய அருங்காட்சியத்திற்காக வாங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 1808ம் ஆண்டு Cornwall பகுதியில் கண்டறியப்பட்ட 59 கிராம் தங்கக்கட்டியே பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கக்கட்டிகளில் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படித்தான் எங்களை சீரழித்தார்கள் : சிறுமிகளின் கண்ணீர் வாக்குமூலம்!!

பீகார் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் சுமார் 44 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அரசின் நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் இந்த விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 29 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக தெரியவந்தது.

விடுதியில் இருப்பவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது,

இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு உடலில் தீக்காயங்களை ஏற்படுத்துவார்கள். அதன்பிறகு, போதை மருந்துகளை தினமும் கொடுப்பார்கள், போதை மருந்து கொடுத்த பின்னர் பாலியல் வன்கொடுமை செய்வார்கள் , எங்களை ஒருநாள் கூட நிம்மதியாக இருக்கவிட்டது கிடையாது,

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் நாங்கள் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளோம் என கூறியுள்ளனர்.

இப்போது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அடுத்த கிழமை முதல் முற்றாக முடங்கப் போகும் ரயில்வே சேவைகள்!!

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழில்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தொழிற்சங்க அதிகாரிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர் மற்றும் ரயில் சாரதிகளின் தொழிற் சங்கங்களின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தாமதமாகும் காரணமாக இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் தங்கள் பிரச்சினைகள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீதியில் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூரம்: சிசிரிவி கமராவில் சிக்கிய காட்சி!!

காத்தான்குடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றினால், சைக்கிளில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த வானில் இருந்த நபர் வான் கதவைத் திறந்தபோது சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவன் கதவில் மோதி வீதியில் விழுந்துள்ளார்.

அதேவேளை வேகமாக வந்த முச்சக்கரவண்டி குறித்த மாணவன் மீது ஏறிச் சென்றுள்ளது. இந்த காட்சிகள் நகரில் வர்த்தக நிலையத்தில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் அங்கிருந்தவர்களால் காத்தான்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வீதியில் வாகனங்களை நிறுத்தி வைப்போர் சற்று அவதானமாக செயற்பட்டால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளையாக இருந்த மனிதர் திடீரென கறுப்பாக மாறிய அதிசயம்!!

கண்டியில் நபர் ஒருவர் கறுப்பு முடியை பெறுவதற்காக டை பூசியமையால் ஏற்பட்ட விபரீதம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பணியாளராக தொழில் செய்யும் நபர் ஒருவர் கண்ணாடியில் முகத்தை பார்க்கும் போது, வெள்ளை முடிகளை அவதானித்துள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக கடைக்கு சென்று முடியை கறுப்பாக்கும் டை பக்கெட் ஒன்றை கொள்வனவு செய்து வந்துள்ளார்.

அந்த பக்கெட்டில் வழங்கப்பட்டிருந்த ஆலோசனைகளுக்கு அமைய தனது வெள்ளை முடிகளை கறுப்பு முடியாக்க முடிவு செய்துள்ளார்.

எனினும் அவர் முடிக்கு பூசிய டை முகம் முழுவதும் பட்டு, முழுமையாக முகம் கறுப்பு நிறத்திற்கு மாறியுள்ளது.

எவ்வளவு முயற்சித்தும் அதனை இல்லாமல் செய்ய முடியாமல் போயுள்ளது. பின்னர் டின்னர் எனும் இரசாயனத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள கறுப்பை போக்க முயற்சித்துள்ளார்.

எனினும் அதனால் ஏற்பட்ட விளைவு காரணமாக வைத்தியரிடம் செல்ல வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் : பெருந்தொகை ஆபாச காட்சிகள் மீட்பு!!

இலங்கையில் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அதனை காணொளியாக வெளியிடும் ஆசிரியர்கள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

உயர்தரத்தில் கற்கும் மாணவியை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்து, இன்னுமொரு ஆசிரியருக்கு மாணவியை பகிர்ந்து கொண்ட ஆசிரியர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனராகலை பிரிவு பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்லவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மீட்கப்பட்டுள்ளன.

வரலாறு பாடம் கற்பதற்காக மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியே, இந்த ஆசிரியர்களிடம் சிக்கியுள்ளார்.

வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் குறித்த மாணவியை 5 வருடங்களின் பின்னர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளார். அதனடிப்படையில் மாணவியை பல முறை ஆசிரியர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த ஆசிரியர் ஏற்கனவே திருமணம் முடித்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோகம் செய்த பின்னர் தொழில்நுட்ப ஆசிரியரிடம் மாணவி ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்து வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர்கள் இருவரும் இணைந்து தங்கள் மேலதிக வகுப்பிற்கு வரும் பெருமளவு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக வகுப்புக்கு செல்லும் பெண் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதீத அக்கறையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் பாடசாலை மாணவிகளுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் உதவி!!

வவுனியா கள்ளிக்குளம் மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்றுவரும் கஸ்டப்பிரதேச பாடசாலை மாணவிகள் க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் பரீட்சை மாதிரி வினாப்புத்தகம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மாமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள ஒரே ஒரு தமிழ்பாடசாலையான கள்ளிக்குளம் மகாவித்தியாலயத்திற்கு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பாடசாலை மாணவிகளிடம் நேற்று வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிதி அனுசரணையில் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன், மற்றும் செயலாளர், பொருளாலர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் துர்நாற்றம் வீசும் பேருந்து நிலையம்!!

வவுனியா நகரசபைத் தவிசாளர் பதவிக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியிலுள்ள கால்வாய்களில் துப்பரவுப்பணிகள் மேற்கொள்வதற்கு ஆக்கபூர்வமாக நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப் பிரதேசம் துர்நாற்றம் வீசும் பகுதியாகவே தற்போதும் காணப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் மாணவர்கள், பொதுமக்கள் நடமாடமுடியாத நிலை காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் நகரசபை செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைத்திட்டங்கள் பல தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியிலுள்ள கழிவுநீர் வடிந்தோடும் கால்வாய்கள் பராமரிப்பு இன்றி நீண்டகாலமாக காணப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது.
இப்பகுதியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை.

வவுனியா நகரசபைத் தவிசாளர் பதவிக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் கழிவு நீர் வடிந்து செல்வதற்கும் துர்நாற்றம் வீசுகின்ற நிலையிலும் தவிசாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

பொதுமக்களின் குற்றச்சாட்டு தொடர்பாக பேருந்து நிலைய வர்த்தகர்கள் சிலரிடம் கேட்டபோது, கால்வாய்கள் துர்நாற்றம் வீசுகின்றது. இது தொடர்பாக பல முறைப்பாடுகள் நேரடியாக நகரசபைக்கு வழங்கப்பட்டபோதும் இன்று வரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பழைய பேருந்து நிலையப்பகுதிக்கு பேருந்துகள் இன்றி பொதுமக்களின் வரவு குறைந்த நிலையில் காணப்படுகின்றபோதிலும் துர்நாற்றம் வீசும் காரணத்தினால் மேலும் இப்பகுதிக்கு பொதுமக்கள் வருவது குறைந்து காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

பழைய பேருந்து நிலையப்பகுதிகள் பலவற்றில் இவ்வாறு துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகின்றது. நகரசபையின் பூரண பொறுப்பிலுள்ள பேருந்து நிலையப்பகுதியை கண்காணித்து மேற்பார்வை செய்யவேண்டிய பொறுப்பிலிருந்து நகரசபை விலகிச் சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் யானை தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா செட்டிக்குளம் – சண்முகபுரத்தில் இன்று (26.07) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபரொருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் சுப்பையா பொன்னையா (வயது 70) என்பவர் தனது வீட்டு காணிக்குள் எதோ சத்தம் கேட்பதை உணர்ந்து வீட்டிற்கு வெளியே சென்ற சமயத்தில் காட்டு யானையின் தாக்குலுக்கு உள்ளாகியுள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்ட அயலவர்கள் அவரை மீட்டெடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம், ஓமந்தை, நெடுங்கேணி, ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளின் காட்டு யானைகள் மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன் குடியிருப்புக்களையும் சேதமாக்குகின்றன.

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சப்பர திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா நேற்று 25.07.2018 புதன்கிழமை  இடம்பெற்றது.

மாலை எட்டு மணியாளவில் வசந்தமண்டபபூஜை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பது மணியளவில் அம்பாள் அழகிய சப்பரத்தில் அமர்ந்து பக்தர்கள் கற்பூர சட்டி ஏந்தி வர வெளி வீதியுலா வந்த நிகழ்வு இடம்பெற்றது .


வவுனியா வடக்கில் மாகாண நிதியொதுக்கீட்டில் வீதிகள் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட உள்ளக வீதிகள் புனரமைக்கும் பணிகள் வவுனியா வடக்கு பிரதேச சபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் வேண்டுகோளிற்கமைவாக வடக்குமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைநிதியில் முதற்கட்டமாக மூன்று வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.

மருதோடை உஞ்சல்கட்டி வீதி, கிரிசுட்டான் வீதி, பனைநின்றான் வீதி என்பனவே திருத்தப்படவுள்ளன. 10 மில்லியன்ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது

நேற்று முன்தினம் மருதோடையில் நடைபெற்ற வீதிதிருத்த ஆரம்ப நிகழ்வில் வ.மா.ச உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், மா.ச.உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற 20 மாடுகள் மற்றும் 7 ஆடுகள் மீட்பு!!

 

வவுனியா இரணை இலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட 20 மாடுகளையும் 7ஆடுகளையும் இன்று(25.07) கிடாச்சூரியில் கைப்பற்றியுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று விஷேட அதிரடிப்படையினரால் இரணை இலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 20 மாடுகளை வாகனத்துடன் சாரதி உதவியாளர் இருவருடன் கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்ட்டவர்களுடன் வாகனம், 20 மாடுகள் ஈச்சங்குளம் பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் நாளை கைப்பற்றப்பட்ட 20 மாடுகளையும் வாகனம், சாரதி உதவியாளர் ஆகியோரை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 7 ஆடுகளையும் சந்தேக நபர் ஒருவருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இரணைஇலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளபோதே ஈச்சங்குளம் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் வடிகால் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் வடிகால் அமைப்பு சீரின்மை காரணமாக கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக பல அலுவலகங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.

இந்நிலையில் வடிகால்களை சீராக்குமாறு அலுவலகத்தினர் கோரியதையடுத்து மாவட்ட செலயகத்தினால் தற்போது சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது மாவட்ட செயலகத்தில் வடிகால்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றதைக்காணக்கூடியதாக உள்ளது.

சகல திணைக்களங்களுக்கும் முன்பாக வடிகால்கள் அகலமாக்கப்படுவதுடன் மழை வெள்ளம் வடிந்தோடுவதற்கான அமைப்புக்களை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து பருவமழைக்கு முன்னர் சகல வடிகால் சீராக்கும் அமைக்கும் பணிகள் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளின் செயலைக் கண்டு அதிர்ச்சியில் இறந்த கணவர் : கதறி அழுத மனைவி!!

தமிழகத்தில் அதிகாரிகள் வீட்டிற்கு சீல் வைத்து பொருள்களை எல்லாம் எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்ததால், இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் மிகவும் பிரசித்திபெற்றது ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தனசேகரன் என்பவர் சுமார் 70 ஆண்டுகளாக அவரின் தந்தை காலத்திலிருந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதற்கான வாடகையையும் கோவில் நிர்வாகத்திடம் கொடுத்து வந்துள்ளார். ஆனால் பல ஆண்டுகளாக அவர் வாடகை செலுத்ததாக காரணத்தினால், கோவில் நிர்வாகம் சார்பில் வாடகை பாக்கியைச் செலுத்த வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும் தனசேகரன் வாடகை செலுத்தவில்லை. இதன் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆனையர் கடந்த 2015-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாடகை பாக்கியான 2 லட்சம் ரூபாயை தனசேகரன் விரைவில் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது

வாடகை பாக்கியான 2 லட்சம் ரூபாயில், 1,37,000 ரூபாய் மட்டுமே தனசேகரன் செலுத்தியுள்ளார்.

இதனால் மீதி பணம் இருந்ததால், தனசேகரனிடம் வாடகை பாக்கித் தொகையைக் கேட்டு கோவில்ல் நிர்வாகத்தினர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதற்கு தனசேகரன் நோட்டீஸ் அனுப்பாமலும், தொகையை செலுத்தாமலும் இருந்துள்ளார். வாடகை பாக்கி 80,000 ரூபாய் செலுத்தாத காரணத்தால் தனசேகரனை வீட்டை விட்டு வெளியேற்றி, வீட்டிற்கு சீல் வைக்கும் படி மயிலாடுதுறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பொலிசார் உதவியோடு தனசேகரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கு வீட்டை சீல் வைக்க வந்த தகவலைக் கூறி வீட்டில் உள்ள பொருள்களைத் தெருவில் எடுத்து வைத்தனர்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த தனசேகரன் திடீரென அதிர்ச்சியில் இறந்தார். இதைக் கண்ட மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும், அதிகாரிகளின் இந்தச் செயலைக் கண்டித்து அவர்களையும் முற்றுகையிட்டனர்.