ஹீரோ ஆக ஆசைப்பட்டு சீரோவான காதலன் : சுவாரசியமான உண்மை சம்பவம்!!

மும்பையை சேர்ந்த ரூபேஸ் – உமா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் என்பதால் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபோது, தனது தந்தையின் சம்மதம் இருந்தால் மட்டுமே நான் உங்களை திருமணம் செய்துகொள்வேன் என உமா உறுதியாக தனது காதலனின் கூறியுள்ளார்.

உமாவின் தந்தை ஒரு ஜோதிடர் ஆவார். உமாவின் தந்தையின் மனதில் இடம்பிடித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்க, சினிமாவில் வரும் பழைய யுக்தியை கையாண்டுள்ளார்

அதன்படி, ஷேன் என்பரை தயார் செய்து, அவர் தனது ஆட்களுடன் சென்று உமாவின் தந்தையை வழிமறித்து அடிக்கும்போது, ரூபேஸ் வந்து காப்பாற்றுவார். இதனால், உமாவின் தந்தைக்கு ரூபேஸ் மீது நல்ல அபிப்ராயம் ஏற்படும். இதுதான் திட்டம்.

திட்டமிட்டபடி, கடந்த 19 ஆம் திகதி, அந்தேரி பகுதியில் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். அதிக ஆசைப்பிடித்த ஷேக் கொஞ்சம் அதிகமாக நடித்து, உமாவின் தந்தை கைப்பேசியை பறித்துக்கொண்டார். அதே போல ரூபேஸ் ஹீரோ போல உள்ளே நுழைந்து, காதலியின் அப்பாவை காப்பாற்றி வீட்டில் விட்டார்.

அதன்பின்னர், உமாவின் தந்தையுடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். இதில், புதிய திருப்பமாக, உன் விடயத்தை உங்க மாமனாரிடமும் காதலியிடமும் சொன்னால் கதை அவ்வள வுதான். சொல்லாம இருக்கணும்னா, எனக்கு 90 ஆயிரம் ரூபா கொடுக்கணும் என்று மிரட்டியுள்ளான் ஷேக்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் கொண்ட ரூபேஸ், ஷேக் மீது பொலிசில் புகார் கொடுத்தார். பொலிசார் ஷேக்கை விசாரித்ததில் மேலே கூறப்பட்ட தகவல்கள் தெரியவந்தன.

இதனைத்தொடர்ந்து, ஷேக்கிடம் மீட்கப்பட்ட போன் உமாவின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இப்படி ஒரு மோசடி திட்டத்தை அரங்கேற்றிய ரூபேஸையும் சிறையில் அடைத்துவிட்டனர்.

இருப்பினும், இதனை பெரிதுபடுத்திக்கொள்ளாத உமாவின் தந்தை, சிறையில் இருந்து வெளியே வந்ததும் திருமணம் செய்துவைக்கிறேன் என கூறியுள்ளார்.

22 வருட பாசப்போராட்டம் : வெளிநாட்டில் இருந்து வந்து பெற்ற தாயை கண்டுபிடித்த பெண்!!

22 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் இருந்து தத்தெடுக்கப்ட்ட ஸ்பானிஷ் பெண், தன்னை பெற்ற இந்திய தாயை கண்டுபிடித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து கடந்த 22 வருடங்களுக்கு 14 மாத குழந்தையான ஜீனத் என்பவரை ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த Antich Marti Raman – Garica Batacia Fores என்ற தம்பதியினர் தத்தெடுத்து சென்றனர்.

இதனையடுத்து தனது 10 வயதில் ஜீனத் தன்னுடைய வளர்ப்பு பெற்றோர்களுடன், பெற்ற தாயை சந்திப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். ஆனால் அதற்கான பலன் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் ஸ்பானிஷ் நாட்டிற்கு திரும்பினார்.

அங்கு உளவியல் பட்டப்படிப்பு படித்து வந்த அவர், கடந்த 3 வருடங்களாக உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதில் கிடைத்த வருமானத்துடன் சேர்த்து, நண்பர்களின் உதவியுடன் இந்தியாவிற்கு தாயை தேடி மீண்டும் வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய தாயை சந்தித்த உடனே ஜீனத் கட்டி தழுவி பேச முயற்சித்தும் இந்தி தெரியாத காரணத்தினால் கண்ணீரின் வழியாகாவே பாசத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் இதுகுறித்து பேசிய ஜீனத்தின் தாய், தனக்கு 21 வயதாகும்பொழுது உறவினர் ஒருவரின் தொடர் பாலியல் தொல்லையால் தான் கர்பமடைந்ததாக கூறினார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்படைந்ததால் வீட்டில் ஒதுக்கினர். ஆனால் கர்ப்பத்தை கலைக்க என் மனதில் இடம் கொடுக்கவில்லை. நான் கூலி வேலை செய்துகொண்டே குழந்தையை கசப்படுத்த விரும்பவில்லை என கூறினார்.

இதனையடுத்து பேசிய ஜீனத், எனது தாயின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த முறை இந்தியா வரும்பொழுது நிச்சயமாக இந்தி கற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

மின்சாரம் பாய்ந்து இறந்த நண்பனை காப்பாற்ற போராடிய குரங்கு : கண்ணீர் வரவைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் மின்சாரம் பாயந்து இறந்த நண்பனை காப்பாற்றுவதற்கு மனிதர்களைப் போன்று குரங்கு காப்பாற்ற முயற்சி செய்த சம்பவம் அங்கிருந்தவர்கள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள Khargone பகுதியில் குரங்கு ஒன்று அங்கு செல்லும் மின்சார கம்பியியை தொட்டதால், எதிர்பாரதவிதமாக கீழே விழுந்து பலியாகியுள்ளது.

இதைக் கண்ட சக குரங்கு ஒன்று அதை காப்பாற்றுவதற்காக மனிதர்கள் பயன்படுத்தும் Cardiopulmonary resuscitation முறையை பின்பற்றியுள்ளது.

அதாவது வாயில் ஊதுவது, வயிற்றை பிடித்து அழுத்துவது மற்றும் முன்னும் பின்னும் தள்ளுவது போன்று இருந்துள்ளது. ஆனால் அந்த குரங்கு எழும்பாத காரணத்தினால் ஒரு ஏக்கத்துடன் மீண்டும் தன்னுடைய முயற்சியை துவங்குகிறது.

இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் மக்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறுகையில், குரங்கின் மின்சாரம் பாயந்ததால், அதன் மீது நெருப்பு பற்றியது. அதன் பின் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தது.

அப்போது ஒரு குரங்கு அதை காப்பாற்றிய போராடியதாக கூறியுள்ளனர். இந்த வீடியோவைக் கண்ட பலரும் உருக்கமான கமெண்ட்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

பாவ மன்னிப்பு ரகசியம் அம்பலமானதால் தற்கொலை செய்துகொண்ட பெண் : 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல்!!

பாதிரியார் ஒருவரிடம் பெற்ற பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த லில்லி என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தற்போது லில்லியின் சகோதரி லைலாமா ஜார்ஜ் என்பவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அய்ரூர் செயின்ட் ஜான் தேவாலயத்தில் பணியாற்றும் பாதிரியார் ஒருவரிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் என் சகோதரி பாவ மன்னிப்பு கோரினார்.

அவர் கல்லூரியில் படித்த போது ஏற்பட்ட தவறு குறித்த பாவ மன்னிப்பு அது. அந்த தகவலை மற்றொரு பெண்ணிடம் அந்த பாதிரியார் கூறிவிட்டார். அந்த பெண்ணோ பலர் முன்னிலையில் என் சகோதரி குறித்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு என் சகோதரி தற்கொலை செய்து கொண்டார். அந்த பாதிரியாருக்கும், என் சகோதரியின் கணவருக்கும் முன் விரோதம் உண்டு. இதன் காரணமாகவே, அந்த பாதிரியார் அப்படி செயல்பட்டுள்ளார். இப்பிரச்னையை நாங்கள் விடுவதாக இல்லை. இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்க இருக்கிறோம் என கூறியுள்ளார்.

கேரளாவில் பாதியார்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த 11 பேர் தான் காரணம் : தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் உருக்கமான கடிதம்!!

இந்தியாவில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி சிம்பி (30).
சிம்பியை விஜய், அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் 11 பேர் சேர்ந்து வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து சிம்பி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தின் மாடிக்கு சென்ற சிம்பி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சிம்பியிடமிருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள். அதில், தனது கணவர் குடும்பத்தார் தனக்கு செய்த கொடுமைகளை எழுதியிருந்த சிம்பி, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என எழுதியிருந்தார்.

இந்நிலையில் சிம்பியின் கணவர் மற்றும் குடும்பத்தாரை கைது செய்தால் சிம்பியின் சடலத்தை வாங்குவோம் என அவர் குடும்பத்தார் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

74 பேரிடம் மோசடி : புது கார், புது பங்களா.. சொகுசு வாழ்க்கையில் மிதந்த அழகிய இளம்பெண்!!

தமிழ்நாட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 74 பேரிடம் இருந்து ரூ. 3 கோடி மோசடி செய்த இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இளந்தீபன் (33) என்பவர் இந்திய உணவு கழகத்தில் பணிக்காக முயற்சித்து கொண்டிருந்தார்.

இதை அறிந்த சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா (32) என்பவர் தான் இந்திய உணவு கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி அதற்கான அடையாள அட்டையை காண்பித்தார்.

மேலும் ரூ. 5 லட்சம் கொடுத்தால் போதும் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஷோபியா கூறினார்

இதை உண்மை என்று நம்பிய இளந்தீபன் ரூ. 3 லட்சத்துக்கு 50 ஆயிரத்தை ஷோபியாவிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட ஒரு வாரத்தில் பணி நியமன ஆணையை இளந்தீபனிடம் கொடுத்தார்.

அந்த ஆணையுடன் இளந்தீபன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகியபோதுதான் அது போலியானது என்று தெரியவர அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில், பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஷோபியாவும் அவரது தாய் ஆரோக்கியசெல்வியும் (50) பல இளைஞர்களிடம் இருந்து பல லட்சங்களை வாங்கிக் கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் கடலூரில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்த ரவிச்சந்திரன் (33) என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆரோக்கியசெல்வியும், ரவிச்சந்திரனும் கடந்த 21-ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் ஷோபியா தலைமறைவானார்.

ஷோபியாவை பொலிசார் தேடி வந்த நிலையில் அவர் மொத்தம் 74 பேரிடம் இருந்து ரூ.3 கோடிக்கு மேல் பணம் பெற்றுள்ளது தெரியுவந்தது. இதையடுத்து தனிப்படையினர் கடலூரில் ஷோபியாவை கைது செய்துள்ளனர்.

பணம் கொடுப்பவர்களுக்கு பணி நியமன ஆணையை தருவதும் போலி ஆணை என தெரிந்ததும் பணம் கேட்போரை அடியாட்களை வைத்து மிரட்டுவதையும் ஷோபியா வாடிக்கையாக கொண்டிருந்தார்.

பெற்ற பணத்தில் பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளதும், புதிய கார், புதிய இரு வீடுகளை அவர் கட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.

பிரபல திரைப்பட நடிகை மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

பிரபல மூத்த திரைப்பட நடிகை பசாபி நந்தி தனது 82வது வயதில் கடுமையான மாரடைப்பால் காலமானார்.

பெங்காலி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து மக்களிடையே புகழ்பெற்ற நந்தி கடந்த ஒரு ஆண்டாகவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நந்திக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரின் உயிர் பிரிந்தது.

நடிகையாக மட்டுமில்லாமல் சிறந்த பாடகியாகவும் திகழ்ந்த நந்தி ஹிட் பாடல்கள் பலவற்றை பாடியுள்ளார்.

நந்தியின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யூடியூப் பார்த்து மிருகத்தனமாக பிரசவம் பார்த்த கணவன் : பரிதாபமாக உயிரிழந்த பெண்!!

திருப்பூரில் யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம் பார்த்ததால் நிறைமாத கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அருகே நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் – கிருத்திகா தம்பதியினர். கார்த்திக் தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கிருத்திகா பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு திருமணமான இந்த தம்பதியின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்துள்ளது. இதில் மேலும் மகிழ்ச்சியளிக்கும் விதமாகா கிருத்திகா கர்ப்பமடைந்துள்ளார்.

இதனால் குடும்பமே மகிழ்ச்சியில் திளைந்திருந்தது. அப்பொழுது தான் கார்த்திக் நண்பர் பிரவீன் என்பவரின் உருவில் எமன் அடியெடுத்து வைத்திருக்கிறான்.

அடிக்கடி கார்த்திக் வீட்டிற்கு வரும் பிரவீன், கிரித்திகாவை மருத்துவமனைக்கு எல்லாம் அழைத்து செல்ல வேண்டாம். பழையகாலத்தை போல வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம், யூடியூப்பில் இதுகுறித்து பார்த்து கொள்ளலாம் என கூறியுள்ளான்.

அதை கேட்டு கார்த்தியும், தன் மனைவியிடம் கூறி சம்மதம் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் கிருத்திகா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும், கணவரின் ஆசைக்காக சம்மதம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரசவ வலியில் கிருத்திகா துடிதுடித்துள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த கார்த்திக் உடனடியாக பிரவீனை அழைத்துள்ளார்.

பின்னர் யூடியூப் மூலம் இருவரும் பிரசவம் பார்க்கும்பொழுது, மிருகத்தனமாக குழந்தையை வெளியில் இழுத்துள்ளனர்.

இதனால் வலிதாங்க முடியாமல் கிருத்திகா, கார்த்திக் கண்முன்னரே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

காட்டுக்குள் என்னடி வேலை : ஆண்களின் பாலியல் வக்கிரம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ!!

உத்திரபிரதேச மாநிலத்தில் வயலில் வேலை பார்த்த தாய்க்கு சாப்பாடு கொண்டு சென்ற 16 வயது சிறுமியை இரண்டு நபர்கள் காட்டுக்குள் இழுத்து சென்ற வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பிறகு, மொத்தம் 6 ஆண்கள் அந்த சிறுமியை சூழ்ந்து, காட்டுக்குள் என்னடி வேலை என்று மிரட்டியுள்ளனர். பின்னர், அச்சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது, அச்சிறுமி சத்தம்போட்டு கூச்சலிட்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் வயலில் வேலை பார்த்த தாய்க்கு சாப்பாடு கொண்டு சென்ற 16 வயது சிறுமியை இரண்டு நபர்கள் காட்டுக்குள் இழுத்து சென்ற வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பிறகு, மொத்தம் 6 ஆண்கள் அந்த சிறுமியை சூழ்ந்து, காட்டுக்குள் என்னடி வேலை என்று மிரட்டியுள்ளனர். பின்னர், அச்சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது, அச்சிறுமி சத்தம்போட்டு கூச்சலிட்டுள்ளார்.

இதனால், பயந்துபோய் அந்த நபர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

ஹாலிவுட் நடிகை போல மாற நினைத்து பேய் போல மாறிய பெண்!!

ஈரானில் ஹாலிவுட் நடிகை போல் மாற நினைத்து பேய் போல் மாறிய பெண்ணின் உண்மை முகம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஈரானின் Tehran பகுதியைச் சேர்ந்தவர் Sahar Tabar(22). ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையான இவர், அவர் போல் மாற வேண்டும் என்று கூறி, தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகவும், இதனால் 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

அது தொடர்பான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின.

ஏஞ்சலினா ஜோலி போல் மாற முயன்ற இந்த பெண் பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக, அதாவது பேய் போன்று இருப்பதாக இணையவாசிகள் எல்லாம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த பெண் தொடர்பாக இரண்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதில் பார்ப்பதற்கு அந்த பெண் மிகவும் அழகாக உள்ளார். தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை பார்க்கும் போது, இந்த பெண் தானா? இது என்றளவிற்கு மிகவும் அழகாக உள்ளார்.

புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் உள்ளனர்.
இவர் தன்னுடைய அழகிற்காக முகம், உதடு மற்றும் மூக்கு போன்றவைகளை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இவர் தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியது. அப்போது வெளியாகிய புகைப்படங்கள் சில மேக்கப் மற்றும் எடிட் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் இப்போது எடுக்கப்பட்டதா? அல்லது சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.

அன்று 11 வயதில் திருமணம் செய்த சிறுமி.. இன்று அவருடைய நிலை என்ன : நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம்!!

11 வயதில் திருமணம் செய்த சிறுமி கணவனை பறிகொடுத்ததால், தற்போது அவர் பாலியல் தொழிலாளியாக இருந்து வருகிறார்.

வங்கதேசத்தில் குழந்தை திருமணம் செய்வது மற்றும் பெண்கள் பாலியல் தொழில் செய்வது சட்டபூர்வமானவை. அப்படி வங்கதேசத்தின் Kandipara பகுதியில் பாலியல் தொழில் செய்து வரும் பெண் தான் Rupa.

19 வயதான இவர் தான் எப்படி பாலியல் தொழிலுக்கு வந்தேன் என்ற உருக்கமான நிகழ்வை பிரபல ஆங்கி ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார்.

அதில், தனக்கு 11 வயதிலே திருமணம் முடிந்துவிட்டது. தன்னுடைய கணவருக்கு தன்னை மூன்று மடங்கு வயது அதிகம் இருக்கும், நான் கர்ப்பாமாக இருந்த நிலையில் என்னுடைய கணவர் இறந்துவிட்டார்.

கணவரை பறிகொடுத்த நிலையில் என்னையும், என் குழந்தையையும் யாரும் ஆதரிக்கவில்லை. உதவவும் முன்வரவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.

அதுமட்டுமின்றி என்னை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. என்னுடைய 13 வயதில் நான் வலுக்கட்டாயமாக தலைநகர் டாக்காவிற்கு வேலைக்காக அழைத்துவரப்பட்டேன்.

ஆனால் என்னை அவர்கள் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்றுவிட்டனர். அதன் பின் அவர்கள் என்னை Kandipara-விற்கு அழைத்து வந்து மூன்று நாட்கள் ஒரு தனி அறையில் அடைத்துவிட்டனர்.

என்னை கண்மூடித்தனமாக் அடித்தனர். நான் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற போதும் என்னால் முடியவில்லை, அப்போது அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக Oradexon மாத்திரையை சாப்பிட வைத்தனர்.

ஏனெனில் அது சாப்பிட்டால் உடம்பு அதிகரிக்கும், பார்ப்பதற்கு பெரிய பெண் போன்று இருப்பேன். வங்கதேசத்தில் 18 வயதிற்கும் குறைவான பெண்கள் பாலியல் தொழில் செய்தால் குற்றம், அதற்காக அவர்கள் இப்படி செய்தார்கள்.

அவர்களிடம் தப்பிக்க முயன்றும் என்னால் முடியவில்லை. அப்போது பாலியல் தொழில் செய்வதற்கு வங்கதேசத்தில் உரிமம் பெற வேண்டும்.

உரிமம் பெற்றால் மட்டும் தான் பாலியல் தொழில் செய்ய முடியும் என்பதால், அவர்கள் என்னை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று எனக்கு வயது 18 ஆகிவிட்டது, மகிழ்ச்சியாக இந்த தொழிலுக்கு வருகிறேன், இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று கூறி எனக்கு உரிமம் பெற்றுக் கொடுத்தனர்.

இப்படி தான் நான் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டேன். நாள் ஒன்றுக்கு நான் 10 முதல் 12 வாடிக்கையாளர்களை சந்திப்பேன். ஒரு முறைக்கு 200 taka வாங்குவேன்.

என்னை தினந்தோறும் அடித்து துன்புறுத்திதான் இந்த தொழிலுக்குள் தள்ளினர். மிகவும் அவதிப்பட்டேன். என்னுடைய பிற்கால வாழ்க்கையாவது நன்றாக இருக்கும் என்று கனவில் இருக்கிறேன். ஆனால் என்னுடைய தற்போதை நிலையை பார்த்தலே தெரிகிறது. இருப்பினும் நம்பிக்கையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

13 வயதில் பாலியல் தொழிலுக்கு வந்த ரூபாவிற்கு தற்போது 19 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் 20 கிராமங்களில் பாலியல் தொழில்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 22 சதவீதம் 15 முதல் 19 வயதிற்கிடையே உள்ள சிறுமிகள் திருமணம் செய்து கொள்வதாகவும், 59 சதவீதம் 18 வயதுள்ள சிறுமிகள் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும் குழந்தைகள் அதிகம் திருமணம் செய்யும் நாடுகளில் Niger முதல் இடத்திலும், Central African Republic இரண்டாவது இடத்திலும் Chad மூன்றாவது இடத்திலும் வங்கதேசம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மனநிலை சரியில்லாதவர்!!

கனடாவின் டொரண்டோவில் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் மனநிலை சரியில்லாதவர் என அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

நகரின் கிரீக்டெளன் பகுதியில் நடைபாதை வழியாக வந்து கொண்டிருந்த பைசல் ஹூசன் என்ற நபர் அந்த பகுதியில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 18 வயதான இளம்பெண்ணும், 10 வயதான சிறுமியும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடந்த பகுதிக்கு பொலிசார் உடனடியாக வந்த நிலையில் ஹூசனை சுற்றி வளைத்து சுட்டதில் அவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் ஹூசனுக்கு மனநலம் சரியில்லை என அவர் குடும்பத்தார் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளனர்.

5 பெண்களை திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுவன் : திடுக்கிடும் பின்னணி!!

வங்கதேசத்தில் தனது வயதை பொய்யாக கூறி 5 பெண்களை திருமணம் செய்து கொண்ட சிறுவனை பொலிசார் தேடி வருகிறார்கள்.

ரஷித் என்பவரின் மகன் ராணா (17). இவர் தனக்கு 21 வயதாகிவிட்டது என பொய்யாகி பிறப்பு சான்றிதழை தயார் செய்து கடந்தாண்டு ஜனவரியில் ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.

ஆனால் ராணாவுக்கு 17 வயது தான் ஆகிறது என்பதை கண்டுபிடித்த மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

இதே பொய்யை கூறி ராணா இதுவரை ஐந்து பெண்களை திருமணம் செய்துள்ளார். கடைசியாக கடந்த 20ம் திகதி மவுசுமணி என்ற பள்ளி மாணவியை ராணா மணந்தார்.

மவுசுமணியை தவிர மற்ற நால்வரும் ராணாவை விவாகரத்து செய்துவிட்டனர். ராணாவின் மோசடி செயல் குறித்து பொலிசுக்கு தெரியவந்துள்ள நிலையில் அவரின் தந்தை ரஷித் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணா தலைமறைவாகியுள்ளதால் பொலிசார் அவரை தேடி வருகிறார்கள்.

ஊர் தலைவருக்கு பணம் கொடுத்து பொய்யாக பிறப்பு சான்றிதழை ராணா வாங்கியுள்ளது தெரியவந்துள்ள நிலையில் இது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

80 வயதில் 20 வயது உடலமைப்பு : இளைஞர்களுக்கு சவால் விடும் முதியவர்!!

ஜப்பானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 80 வயதில் தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் டோஷிசுகே கனஸாவா(81). தனது 34 வயது வரை ‘Body Builder’ ஆக இருந்த இவர், அதன் பிறகு ஓய்வு எடுத்துக்கொண்டார்.

பல சாம்பியன் பட்டங்களையும், பதக்கங்களையும் வென்றிருந்த கனஸாவா, பின்னர் மருந்து அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் விரும்பிய உணவுகளை உண்ணுதல் என அவர் உடல்நிலையை கெடுத்துக் கொண்டார்.

அதன் பின்னர், தனது 50வது வயதில் தன்னுடைய தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மீண்டும் ‘Body Builder’ ஆக வேண்டும் என்று நினைத்தார்.

அதற்காக தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். மது, புகைப்பிடித்தலை முற்றிலும் கைவிட்டார் கனஸாவா. பின்னர், இளைஞராக இருந்தபோது தினமும் 6 மணிநேரம் செய்த உடற்பயிற்சியை, 3 மணிநேரமாக குறைத்து மேற்கொள்ள ஆரம்பித்தார்.

அவரது உடலில் மாற்றம் வர ஆரம்பித்தது. நோய்களும் காணாமல் போயின. அதன் விளைவாக கடந்த 2016ஆம் ஆண்டு தனது 80வது வயதில் உலக ‘Body Builder’ போட்டியில் கலந்து கொண்டு 6ஆம் இடம் பிடித்தார். மேலும், வயதான போட்டியாளர் என்ற தங்கப்பதக்கத்தையும் பெற்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘85 வயது வரை என் உடல் ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். அதுவரை Body Builder ஆக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

லண்டன் சென்று திரும்பியபோது கணவருடன் சண்டைபோட்ட ஐஸ்வர்யா ராய் : கணவரை பிரிந்துவிட்டதாக தகவல்!!

அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது.

இருவரும் லண்டனுக்கு சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது.

இதற்கு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ள அபிஷேக்பச்சன், தயவு செய்து தவறான தகவலை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

அபிஷேக்பச்சன் தாய் ஜெயபாதுரிக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடப்பதாகவும் கூறப்பட்டது. அபிஷேக் பச்சன் சகோதரி சுவேதாவுக்கும் ஐஸ்வர்யாராயை பிடிக்கவில்லை என்று பேசப்பட்டது.

திருமணத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வேறு நடிகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பதை அபிஷேக் பச்சன் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.

மாமியார் சண்டை காரணமாக மும்பையில் ரூ.21 கோடியில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு தனிக்குடித்தனம் செல்ல அபிஷேக் பச்சனிடம் ஐஸ்வர்யாராய் வற்புறுத்தியதாகவும் இதற்கு முன்னர் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெளியான ஒரே ஒரு புகைப்படம் : வசமாக சிக்கி கொண்ட பிரபல வீரர்!!

ஆறு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிரபல நீச்சல் வீரர் ரையன் லோக்டே அதிகளவு ஐ.வி எனும் ஊக்கமருந்தை பயன்படுத்தியதால் 14 மாதங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க நீச்சல் வீரரான ரையன் லோக்டே தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த மே மாதம் வெளியிட்ட புகைப்படத்தில் ஐ.வி மருந்தை உடலில் செலுத்திக் கொண்டிருந்த காட்சி பதிவாகியிருந்தது.

ஐ.வி மருந்து தடை செய்யப்பட்ட மருந்து அல்ல, என்றாலும் அதை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

இந்த புகைப்படத்தை கண்ட அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் (USADA) இது குறித்து விசாரணை நடத்தியதில், ரையன் 12மணி நேரத்திற்குள், 100 மில்லிக்கும் அதிகமான ஐ.வி மருந்தை எந்த விதமான மருத்துவ சிகிச்சை அவசியமும் இன்றி பயன்படுத்தியதாக தெரிவித்தது.

இதையடுத்து அதிகளவில் ஐ.வி ஊக்கமருந்தை பயன்படுத்திய குற்றத்திற்காக, ரையன் மே மாதம் 24 -ஆம் திகதியில் இருந்து (அந்த மருந்தை அவர் பயன்படுத்திய நாள்) கணக்கிடப்பட்டு 14 மாதங்களுக்கு நீச்சல் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரையன் கூறுகையில், நான் சட்டத்திற்கு புறம்பாக எதையும் உட்கொள்ளவில்லை. அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்தது என கூறியுள்ளார்.