வவுனியாவில் 29 தற்கொலை முயற்சிகள்!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 29 தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஜூலை 25 வரையான காலப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் 29 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதன்படி 20 பெண்களும், 09 ஆண்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் காதல் விவகாரம், குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை, பெற்றோருடன் முரண்பாடு என பல்வேறு காரணங்களால் தவறான முடிவெடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இளைஞர், யுவதிகளே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள 8 வயதான திருட்டுக் கும்பல்!!

யாழ்ப்பாணத்தில் எட்டு வயது சிறுவர்களை கொண்ட குழுவினர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் நல்லூர் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

குறித்த முறைப்பாட்டில் இந்த சிறுவர்கள் இரவு நேரத்தில் வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்து பொருட்கள் திருடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைடயக்க தொலைபேசிகள், நகைகள் மற்றும் பணம் என்பனவற்றை இலக்கு வைத்து திருட்டு இடம்பெறுகிறது.

சிறுவர்கள் முகத்தை மூடி வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்த காட்சிகள் சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த திருட்டு கும்பலை கைது செய்வதற்காக நல்லூர் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் குளத்தில் மீன் பிடித்த 4பேர் கைது!!

வவுனியா பாவற்குளத்தில் இன்று(25.07) அதிகாலை தடை செய்யப்பட்ட தங்கூசி வலையைப்பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேரை வவுனியா மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு சபையின் உத்தியோத்தர்கள் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பாவற்குளத்தில் தடை செய்யப்ட்ட தங்கூசி வலையினைப்பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானித்த வவுனியா மாவட்ட தேசிய நீர் உயிரினவளர்ப்பு சபையினர் விஷேட அதிரடிப்படையினருன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பாவற்குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏனைய மீனவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையினைப்பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவனியா மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு சபையின் உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

15 ஆண்டுகளாக கொள்ளையடித்த இலங்கை அகதி : தமிழகத்தின் பிரபல நகை அடகு கடை முதலாளிக்கு பொலிஸார் வலைவீச்சு!!

திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திற்காக தமிழகத்தின் பிரபல நகை அடகு கடை முதலாளிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை அகதி முகாமை சேர்ந்த தம்பதியினரை தமிழக பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

இதன்படி, கொள்ளையடிக்கும் நகைகளை தமிழகத்தின் பிரபல அடகு கடையில் விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

நகைகளை விற்பனை செய்தமைக்கான பற்றுச்சீட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, குறித்த அடகு நகை கடையின் மேலாளர், நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது திருட்டு நகைகளை குற்றத்திற்காக குறித்த அடகு கடையில் முதலாளிக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் அவரை தீவிரமாக தேடி வருவதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாணமாக சுற்றி திரியும் கிரீஸ் பேய் : தலைதெறிக்க ஓடும் பெண்கள் : அச்சத்தில் மூழ்கிய பல கிராமங்கள்!!

ஹோமாகம பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நிர்வாணமாக சுற்றி திரியும் கிரீஸ் பேய்கள் காரணமாக மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

கிரீஸ் பேய்கள் காரணமாக மாலையில் இருள் சூழ்ந்த பின்னர் பெண்கள் வாசல்படி தாண்டுவதற்கு அச்சப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம, பனாகொட, ரொமியல் மாவத்தை, பெலதகொட, கப்புருகொட ஆகிய பிரதேசங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அத்துருகிரிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், கடந்த ஒரு மாதமாக இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு 7 – 10 மணி வரையிலும், அதிகாலை 2 – 5 மணி வரையிலும் நிர்வாண நபர் குறித்த பிரதேசங்களில் சுற்றி திரிவதாகவும், சிலரது வீட்டில் உள்ள சிசிடீவி கமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய அத்துருகிரிய பொலிஸார் இந்த நிர்வாண நபரை கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நபர் மின்விளக்குடன் பயணிப்பதனை பெண்கள் பலர் அவதானித்துள்ளனர். பெண்கள் கூச்சலிட்டவுடன் திடீரென இந்த நபர் காணாமல் போய்விடுவதாகவும், பின்னர் கண்டுபிடிக்க முடியாத அளவு தப்பிச் செல்வதாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளனர்

இலங்கை கடலில் கிடைத்த பெருந்தொகை தங்கம்!!

இலங்கையின் கடற்பரப்பில் வைத்து பெருந்தொகை தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து 4 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடல் வழியாக 5.7 கிலோ கிராம் தங்கத்தை கொண்டு செல்ல முயற்சித்த இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்ட போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்த நாட்டிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து காணொளியாக வெளியிட்ட ஆசிரியர்கள்!!

மொனராகலையிலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனராகலை பிரிவின் குற்ற விசாரணை பிரிவினால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் தனது மனைவியை பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்க வைத்துவிட்டு மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் மற்றுமொரு ஆசிரியருக்கு பாலியல் நடவடிக்கைக்காக மாணவி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் மற்ற ஆசிரியர் மாணவியை மொனராகலை பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். அந்த காட்சியை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியர்கள் பல மாணவிகளை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுப்படவுள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல நடிகர் : காரணம் வெளியானது!!

இலங்கையின் பிரபல நடிகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை சிங்கள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மரணத்திற்கு, அவர் பயன்படுத்திய மாத்திரை காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பிரபல சிங்கள நடிகரான 37 வயதான இந்திக்க கினிகே நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்திக்க ஏற்கனவே குறித்த மாத்திரையை பயன்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் அதனை பயன்படுத்தியமையால், நேற்று முன்தினம் இந்திக்க கினிகே தனது வீட்டில் உயிரிழந்திருந்தார்.

மூடப்பட்டிருந்த மகனின் அறை கதவை உடைத்து பார்க்கும் போது மகன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார் என இந்திக்கவின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்திக்க கினிகேவின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய அணியில் அறிமுகமாகிய யாழ். இளைஞர் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அசத்தல்!!

பத்தொன்பது வயதிற்குட்பட்ட இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த போட்டி அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச மைதானத்தில் ஆரம்பாகியுள்ளது. இன்றைய போட்டியில், யாழ் மத்திய கல்லுரியின் மாணவரான வியாஷ்காந் இலங்கை அணியில் அறிமுகமாகியுள்ளார்.

சிறந்த சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஷ்காந் தொடர்ச்சியாக மேல், வடமத்திய மற்றும் வடமேல் மாகாண அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், பத்தொன்பது வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கு எதிரான தொடரில் இடம் கிடைத்திருந்தது.

அந்த வகையில், இன்றைய போட்டியில் வியாஷ்காந் தனது துல்லியமான பந்துவீச்சால் இரண்டு ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பேரூந்து விபத்து : 19 பேர் வவுனியா வைத்தியசாலையில்!!

வவுனியா பூனாவை பகுதியில் இன்று (25.07.2018) அதிகாலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டினையிழந்து பூனாவை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அருகேயுள்ள மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கட்டாக்காலி கால்நடைகளினால் போக்குவரத்திற்கு இடையூறு!!

வவுனியா நகரப்பகுதிகள் மற்றும் மன்னார் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளால் மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் வீதிகளில் நடுவே போக்குவரத்தை மேற்கொள்ளும் போது நடுவீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு கடந்த காலங்களில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கட்டாக்காலி மாடுகளை பிடித்து போக்குவரத்தை இடையூறுகள் இன்றி மேற்கொள்வதற்கு உதவி செய்யுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருமணம் முடிந்த 10 நாட்களில் தற்கொலை : மரண வாக்குமூலத்தில் கண்ணீர் வார்த்தைகள்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணம் முடிந்த 10 நாட்களில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திகானூர் கிராமத்தை சேர்ந்த தாயப்பன்- அபிராமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் நடந்ததிலிருந்தே, தாயப்பன் மற்றும் அவரது பெற்றோர் கொடுமையினால் அடிக்கடி வீட்டில் சண்டை வந்துள்ளது.

இதனால் அபிராமி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதும், பின்னர் அவர்கள் சமாதானப்படுத்தி தாயப்பனிடம் சேர்த்து விடுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், அபிராமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்து போயுள்ளார். இறப்பதற்கு முன்னர், வீட்டிற்கு அனுப்பியுள்ள வாட்ஸ் ஆப் ஆடியோ பதிவில், தன்னுடைய இறப்பிற்கு காரணம் தாயப்பன் குடும்பமே என மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தற்போது மாத்தூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு மரண தண்டனை கொடுங்கள் : திரும்பிப் பார்க்கமாட்டார்கள் : பிரபல நடிகை ஆவேசம்!!

பிரபல திரைப்பட நடிகையான விஜிசந்திரசேகர் சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகையான விஜி சந்திரசேகர் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவரிடம் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து கேட்ட போது, இவர்களுக்கு எல்லாம் மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

சமீத்தில் அயனாவரத்தில் சிறுமி ஒருவர் 11 பேரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். இதை எல்லாம் பார்க்கும் போது அவ்வளவு கோபம் வருகிறது.

2 வயது குழந்தையையும் இப்படி செய்கிறார்கள், இவர்களுக்கு எல்லாம் மரணதண்டனை தான் கொடுக்க வேண்டும்.

இப்படி ஒரு கடுமையான தண்டனை இருந்தால் மட்டுமே இந்த குற்றங்களை தடுக்க முடியும் எனவும், இந்த தண்டனை மட்டும் கொடுத்து பாருங்கள், அவர்கள் திரும்பி கூட பார்க்கமாட்டார்கள்.

இது போன்ற சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, கொடூர கொலை போன்றது தான், இவர்கள் இந்த தவறுக்கு காரணம் என்று தெரிந்துவிட்டால், அது உறுதியாகிவிட்டால் உடனடியாக தண்டனை கொடுத்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தாயின் இறுதிச்சடங்கின் போது மகன் எடுத்த அதிர்ச்சி முடிவு : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

மதுரை மாவட்டத்தில் தாயார் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி செல்வரங்கன் (58) என்பவர் தனது தாயின் மீது அதிக பாசம் கொண்டவர். இவரது தந்தை இறந்து 30 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தனது தாய் தனலட்சுமிதான் பிள்ளைகளை தனியாக இருந்து வளர்த்துள்ளார்.

இதன் காரணத்தினாலேயே 3 பிள்ளைகளில் மூன்றவாது மகனான சிவாஜி செல்வரங்கனுக்கு தனது தாயின் மீது அதிக பாசம்.

இந்நிலையில், தனலட்சுமி உடல்நலமில்லாமல் ஞாயிறு காலையில் இறந்தார். இவருடைய இறுதிச்சடங்குகளை உறவினர்கள் கவனித்துக் கொண்டிருந்தபோது, தாயார் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் புலம்பிக்கொண்டிருந்த சிவாஜி செல்வரங்கன் விஷம் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

தாயின் இறுதி சடங்கின் போதே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதால், இவரது உடலும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நாங்க கதறி அழுதோம் : அந்த மாமாவை தயவு செய்து விட்டுற சொல்லுங்கப்பா என கெஞ்சிய சிறுமி!!

தமிழகத்தில் விபத்தில் சிக்கிய சிறுமி விபத்திற்கு அந்த டிரைவர் காரணமில்லை எனவும், என்னுடைய தவறு தான் காரணம் அவரை விட்டுவிடுங்க என தந்தையிடம் கூறியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி இசை என்பவர் தன்னுடை காலனியில் நடந்த திருவிழாவின் போது, சக தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரதவிமாக அங்கு வந்த கால் டாக்ஸி ஒன்று, இசையின் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த இசையின் கால்மீது டாக்சியின் சக்கரம் ஏறிவிட்டது.

இதனால் அந்த சிறுமி தற்போது மூன்று அறுவை சிகிச்சைகளை தாண்டியிருக்கிறாள்.

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் தாயார் கூறுகையில், தங்களுடைய காலனியில் நடந்த விழாவில் ஒரு போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் என்னுடைய பெரிய மகள் ஓட்டப்பந்தயத்தின் போது, தடுமாறி கீழே விழுந்துவிட்டாள்.

இதை தெரிவிப்பதற்காக சிறிய மகள் இசை வேகமாக ஓடிவந்துள்ளார். அப்போது இந்த சம்பவம் நடந்துவிட்டது. நாங்கள் அவளை சென்று பார்த்த போது கதறி அழுதோம், துடி துடித்து போனோம் அதன் பின் தற்போது அவள் மேற்கொண்டு வரும் சிகிச்சையால நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் மீது இசையின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் பொலிசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த சிறுமி இவர் தான் மோதினார் என்று கூறியிருந்தால், ஓட்டுனருக்கு கண்டிப்பாக சிறை தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அவர் தந்தையிடம் என்ன சொன்னார் தெரியுமா?

அந்த மாமாவை விட்டுருங்க. இந்த விபத்திற்கு நான்தான் காரணம். அவசரத்தில் வேகமா ஓடிப்போய் காரில் இடிச்சுக்கிட்டது நான்தான். அவர் மேல் எந்த தவறும் இல்லை.

தயவு செய்து அவரை விட்டுவிடுங்க, என கூறியுள்ளார். மேலும் அப்பா, அந்த மாமாவை விட்டுடச் சொல்லுங்க எனக் கெஞ்சியிருக்கிறார். மகளின் ஆசைக்காக, தந்தை விவேக் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதுமட்டுமா, அந்த ஓட்டுனரை போனில் தொடர்பு கொண்ட இசை தப்பு என் மேல தான் அண்ணா. அக்கம் பக்கம் கவனிக்காமல் ஓடியது என் தப்புதான், அங்க பாட்டு ஓடிக் கொண்டிருந்ததால், நீங்கள் அடித்த ஹாரன் சத்தம் கேட்கவில்லை, மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

7 வருட காதல் : 3 முறை கருக்கலைப்பு : சாதியால் தொலைந்துபோன வாழ்க்கையை தேடி அலையும் பெண்!!

ஈரோடு மாவட்டத்தில் 7 வருடம் காதலித்த நபர் தனக்கு தாலிகட்டிய நிலையில், தற்போது தன்னை வெறுத்து ஒதுக்குவதால் அவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி போராடி வருகிறார் ஷீலா.

தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஷீலா என்பவர் தனது கல்லூரி காதலன் கவின் என்பவரை கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

2017 ஏப்ரல் 10ம் தேதியன்று ஷீலாவும், கவின்குமாரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவரவர் வீட்டில் தனித்தனியாக வாழ தொடங்கினர்.

கவின்குமாரின் பெற்றோருக்குத்தான் ரகசிய திருமணம் நடந்த சங்கதி தெரியவந்தது. இந்த திருமணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை. அதற்கு முக்கிய காரணம், ஷீலா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுதான்.

இந்நிலையில், கவின்குமார் தற்போது ஷீலாவை வெறுத்து ஒதுக்கியுள்ளார். அவரது பெற்றோர் அவரின் மனதை மாற்றிவிட்டதாக ஷீலா கண்ணீர் வடிக்கிறார்.

எப்படியாவது தன்னை கணவருடன் இணைத்து வைக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஷீலா.