மீண்டும் ஒரு நிர்மலா தேவி : கல்லூரி மாணவிகளுக்கு நடந்தேறிய கொடுமை!!

கோவையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மாணவிகளுக்கு மது அருந்த கொடுத்து, விடுதி காப்பாளர் தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஹாப்ஸ்காலேஜ் பகுதியில் தொழிலதிபர் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான ‘தர்சனா’ பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியின் உரிமையாளர் ஜெகநாதன், ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

அதில் கலந்துகொள்வதற்காக 6 மாணவிகளை விடுதி காப்பாளர் புனிதா அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற மாணவிகளை மது அருந்த வற்புத்தியதோடு, அவர்களிடம் தவறாக நடக்கவும் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அங்கிருந்து பாதியிலேயே கிளம்பிவிட்டனர். பின்னர் இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்கள் உறவினர்களுடன் வந்து விடுதி நிர்வகித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாணவிகளின் எதிர்காலம் கருதி புகார் ஏதும் அளிக்காமல் வீடுகளுக்கு அழைத்து சென்றனர். ஆனால் இதனை கவனித்த அருகாமையில் பூ கடை வைத்திருக்க கூடிய பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டதோடு, இருவரின் பேரிலும் பெண்கள் வன்கொடுமை மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையில் தலைமறைவான ஜெகநாதன் மற்றும் புனிதாவை தற்போது பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டது தொடர்பாக நிர்மலா தேவி என்ற பேராசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்தை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் தற்கால மிதிவண்டியின் ஓவியம் : வியக்க வைக்கும் தகவல்!!

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான பஞ்சவர்ணஸ்வாமி ஆலயத்தில் தற்கால மிதிவண்டியின் ஓவியம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சோழர்கால ஆட்சியில் கட்டப்பட்டதாகும் இந்த பஞ்சவர்ணஸ்வாமி ஆலயம்.

இந்த ஆலயத்தின் சுவர் ஒன்றில் நபர் ஒருவர் மிதிவண்டி மிதித்து செல்வது போன்று செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஓவியத்தை முதன் முறையாக கண்டறிந்த நபர் ஒருவர் இது தொடர்பாக தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி தற்கால மிதிவண்டி வடிவமைக்கப்பட்டது 1800 ஆம் ஆண்டுகளில், அதாவது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர்.

ஆனால் இந்த கோவிலானது 2000 ஆண்டுகள் பழமையானதாகும். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் வரலாற்று ஆய்வாளர் ஒருவரும் பஞ்சவர்ண்ஸ்வாமி கோவிலில் உள்ள மிதிவண்டி ஓவியம் குறித்து பதிவு செய்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் இந்த மிதிவண்டி தொடர்பில் அவர் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆனால் அவருக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்னொரு தகவலும் குறித்த மிதிவண்டி தொடர்பில் வெளியாகியுள்ளது. கடைசியாக 1920 ஆம் ஆண்டு குறித்த கோவிலானது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அக்காலகட்டத்தில் பொதுமக்களின் ஒரே வாகனம் இந்த மிதிவண்டி மட்டுமே. இதனால் கோவிலில் குறித்த மிதிவண்டியை வரலாற்று சின்னமாக ஏதேனும் ஒரு சிற்பி ஓவியமாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தீராக்காதல் : இறந்துபோன மனைவியை சிலையாக வடித்து 2 மணிநேரம் பேசும் கணவர்!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறந்துபோன மனைவிக்கு சிலை வடித்து தினமும் அவருடன் 2 மணி நேரம் பேசுவருகிறார் கணவர் ஆசைத்தம்பி.

தனது காதல் வாழ்க்கை குறித்து ஆசைத்தம்பி கூறியதாவது, 1977 ஆம் ஆண்டு எனது மாமன் மகள் பெரியபிராட்டிக்கும் எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சென்னைக்கு குடியேறினோம்.

எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மனைவியின் வழிகாட்டுதலின்படி மளிகைக் கடை நடத்தினேன். கேபிள் டி.வி தொடங்கவும் அவர்தான் ஆலோசனை கூறினார்.

உடனே அந்தத் தொழிலிலும் ஈடுபட்டேன். கைநிறைய வருமானம் வந்தது. அவர் விருப்பப்படி இடம் வாங்கி வீடு கட்டினேன். எனக்கு எல்லாமே என் மனைவிதான். அவர் சொல்வதுதான் எனக்கு வேதவாக்காக இருந்தது.

என்னை அன்போடு வழிநடத்தினார். இந்நிலையில் தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. படுக்கையில் இருந்தபோதும், நான் உங்களுடன் தான் இருப்பேன் என எனக்கு ஆறுதல் கூறினார். ஆனால், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார்.

பெரிய பிராட்டி அம்மாள் இறந்து 16-வது நாளன்று சிலை வடிக்கும் முயற்சில் ஈடுபட்டோம்.

5 அடி, ஓர் அங்குல உயரத்தில் சிலை உருவானது, அவர் இறந்த பத்தாவது மாதத்தில் சிலையை நிறுவினோம். சிலை வடிவத்தில் என்னோடும் என் குழந்தைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

தினமும் அவரோடு இரண்டு மணி நேரம் பேசிவருகிறேன். சிலை வந்தபிறகு எனக்குப் பத்து வயது குறைந்ததுபோல உள்ளது என்கிறார் ஆசைத்தம்பி.

என்னை சீரழித்தது இவர்கள் தான் : அடையாளம் காட்டிய இளம்பெண்!!

தமிழகத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷ்ய பெண் குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார்.

திருவண்ணாமலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ரஷ்ய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பில் வழக்குபதிவு செய்த திருவண்ணாமலை பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன், மணிகண்டன் மற்றும் வெங்கடேசன் என்ற நால்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஷ்ய பெண் கடந்த 20ம் திகதி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.

தற்போது ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ரஷ்ய பெண் முன்பு குற்றவாளிகளை அடையாளம் காட்டும் அணிவகுப்பு நடந்தது.

ஆரணி மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடந்த இந்த அணிவகுப்பில், குற்றவாளிகளை ரஷ்ய பெண் அடையாளம் காட்டியுள்ளார்.

இந்நிலையில் ரஷ்ய பெண்ணை பார்ப்பதற்காக அவரது தாய் தமிழகம் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் : பெண்ணை பழிவாங்க இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!!

இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள பெண் மறுத்ததால் ஆத்திரத்தில், அவரிடம் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் ஹதிம்பாய் ஷயிவாலா (28). இவர் ஓன்லைன் திருமண தகவல் மையம் மூலம் ஏமனை சேர்ந்த 26 வயது பெண்ணுடன் நட்பாகியுள்ளார். பெண்ணிடம் தான் வசதியானவன் என ஷயிவாலா கூறியுள்ளார்.

இதையடுத்து மும்பையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்க்க ஏமனிலிருந்து வந்த அப்பெண், ஷயிவாலாவை சந்தித்துள்ளார்.

அப்போது தான் ஷியிவாலா வசதியானவர் இல்லை எனவும், கடையில் வேலை செய்பவர் எனவும் பெண்ணுக்கு தெரியவந்தது.

இதையடுத்து ஷியிவாலாவை மணக்கமுடியாது என கூறி ஏமனுக்கு திரும்ப அப்பெண் தயாரானார்.

ஆனால் அவர் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என மிரட்டிய ஷயிவாலா, அப்படி செய்யவில்லையெனில் பழிவாங்குவேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து பெண் ஏமனுக்கு செல்லும் விமானம் நிற்கும் மும்பையின் சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு போன் செய்த ஷயிவாலா, குறித்த பெண்ணிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து விமான நிலையத்துக்கு வந்த பெண்ணை அதிகாரிகள் சோதனை செய்த போது அது பொய் என தெரிந்தது.

அதிகாரிகளுக்கு போன் வந்த நம்பரை வைத்து அது ஷயிவாலா நம்பர் என்பதை அப்பெண் உறுதி செய்ததோடு, தன்னை தொடர்ந்து அவர் மிரட்டியதையும் கூறினார்.

இதையடுத்து உடனடியாக ஷயிவாலா வீட்டுக்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு தயாரான புதுமாப்பிள்ளை : பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழவிளை அருகேயுள்ள பூவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி (23). மணிபாரதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில் மணிபாரதி தனது நண்பர் பிரபாகரனுடன் நேற்று இரவு பைக்கில் தனது அக்கா வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்கள் சென்ற மைலாடி விலக்கு பகுதி அருகே பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

ஆனால் பணிகள் சரியாக முடிக்கப்படாமல், அரைகுறையாக நிற்கிறது. ஒருபுறம் பணி முடிந்துள்ளது, அந்தப் பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது.

மணிபாரதியும் பிரபாகரனும் அந்தப் பகுதிக்கு பைக்கில் வந்தபோது, பைக் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் மணிபாரதி சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபாகரன் படுகாயமடைந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மணிபாரதியின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

ஒரு கணவன்.. 2 காதலர்களால் நடந்த கொலை சம்பவம்: இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னையில் கள்ளக்காதலனை கொலை செய்த பெண் அது குறித்து பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதுரவாயலை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி நளினி. கடந்த 15-ஆம் திகதி ராஜேஷ், அவரின் நண்பர் குமரேசனுடன் மதுஅருந்திய நிலையில் காலையில் இறந்து கிடந்தார்.

கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நளினி பொலிசில் புகாரளித்த நிலையில், பொலிசார் நடத்திய விசாரணையில் ராஜேஷ் கொல்லப்பட்டது தெரியவந்தது.

குமரேசனே ராஜேஷுக்கு மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது.  ராஜேஷுக்கும் அந்தப்பகுதியைச் சேர்ந்த பத்மாவதிக்கும் பழக்கம் இருந்துள்ளது. பத்மாவதி திருமணமானவர்.

இந்நிலையில் குமரேசனுக்கும் பத்மாவதியுடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜேஷுடனான தொடர்பை பத்மாவதி விட்டுள்ளார்.

இதற்கு ராஜேஷ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குமரேசனுடன் சேர்ந்து ராஜேஷை பத்மாவதி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் பத்மாவதியை கைது செய்தார்கள்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் ராஜேஷை சந்தித்தேன். அதன்பிறகு நாங்கள் பழகினோம். அவருடன் குமரேசன் அடிக்கடி வீட்டுக்குவருவார். குமரேசனுடன் நான் பழகியது ராஜேஷுக்குப் பிடிக்கவில்லை. மேலும் ராஜேஷ், எனக்கு பல வகையில் தொல்லை கொடுத்தார்.

இதனால்தான் நெல்லூரிலிருந்து கொண்டு வந்த சயனைடு மூலம் ராஜேஷை குமரேசன் மூலம் கொலை செய்யத் திட்டமிட்டேன். மதுவால் ராஜேஷ் இறந்துவிட்டதாக அவரின் குடும்பம் நம்பியது.

ஆனால், பொலிசார் துப்பு துலக்கி எங்களைக் கண்டுப்பிடித்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.

குழந்தைகளை தவறாக பயன்படுத்தும் பெண்ணொருவரின் செயல்!!

சிறுவர்களுக்கு பெரியவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சமூகம் அங்கீகரிக்கிறது. ஆனால் கெட்ட முன்மாதிரியை அமைக்கும் பெரியவர்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

ஏற்கனவே ஒருவயது குழந்தைக்கு பியர் கொடுத்த தந்தை தொடர்பாக பரவலாக பேசப்பட்டதுடன், குறித்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேபோன்று மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடவத்தையில் உள்ள ஒரு மதுபான கடைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவர் மதுபான கடையில் வாங்கிய மதுபான போத்தல்களை தூக்கிக் கொண்டு வருமாறு குழந்தையிடம் கொடுக்கிறார்.

இந்த பெண்ணைப் போன்ற பெரியவர்களின் பொறுப்பற்ற செயல்களில் இருந்து மாதிரிகள் பெறும் குழந்தைகள் அழிவுக்குக் கொண்டு செல்வது ஒருபோதும் தடுக்க முடியாது.

இன்று கொண்டு செல்லப்படும் மதுபான போத்தல்கள் நாளை தொண்டைக்குள் போவதற்கு யார் பொறுப்பு

இவ்வாறான பொறுப்பற்ற விதத்தில் நடக்கும் பெரியவர்கள் தங்களின் குழந்கைளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையில் நிர்வாண விருந்து நடத்திய பேஸ்புக் நண்பர்கள் : பல இளம் பெண்கள் கைது!!

அம்பலாங்கொட பிரதேசத்தில் ஹோட்டலுக்குள் இடம்பெற்ற வித்தியாசமான விருந்து ஒன்று தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக நண்பர்களான இளைஞர், யுவதிகள் சிலர் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஹோட்டலை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கு போதைப்பொருள் மற்றும் கஞ்சா பயன்படுத்திய இளைஞர், யுவதிகள் 19 பேரை கைது செய்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக அறிந்து கொண்ட இளைஞர், யுவதிகள் சிலர் அம்பலாங்கொட, ஆதாதொல ஹோட்டலுக்குள் இந்த விருந்தை நடத்தியுள்ளனர்.

இரவு ஆரம்பித்த விருந்து அதிகாலை வரை இடம்பெற்றுள்ளது. இங்கு போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருந்தில் கலந்து கொண்ட யுவதிகள் பலர் நிர்வாண நடனத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் பல யுவதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விருந்து தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் இரவு முதல் அதிகாலை வரை ஹோட்டலுக்கு வெளியே நின்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த விருந்தில் கிட்டத்தட்ட 250 இளைஞர், யுதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விருந்தில் கலந்து கொள்வதற்கு 2000 ரூபாய் டிக்கட் பெற்றுக் கொள்ள வேண்டும் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 பேர் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 9 பேருக்கு 4500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு!!

சிலாபம், வென்னப்புவ பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நன்கு வளர்ந்த 5, 6 மாத குழந்தையே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய அந்த பெண்ணின் வீட்டிற்கு பின்னால் உள்ள கழிப்பறைக்கு அருகில் இந்த குழந்தை புதைக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த குழந்தை புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது தொடர்பில் சிலாபம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான இந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிரகணத்தின் போது மறந்தும் கூட இவற்றை செய்துவிடாதீர்கள் : மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

எதிர்வரும் 27ஆம் திகதியான பௌர்ணமி தினத்தன்று இலங்கை உட்பட சில நாடுகளுக்கு முழுமையான சந்திர கிரகணத்தை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் “ரெட் மூன்” என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில், இலங்கை நேரப்படி இரவு 10.45 மணியளவில் இருந்து, மறுநாள் அதிகாலை 4.58 வரை சந்திர கிரகணம் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் எந்த வேலையும் செய்யக் கூடாது, அவர்கள் சந்திரனைப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறது.

சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும், அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகளை பாதித்து விடக் கூடாது என்ற அடிப்படையிலேயே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று நம்பப்படுகின்றது.

ஆனால், இந்த நாளில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் தெய்வ சிந்தனையுடன் இருந்தால் குறையில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டு விட வேண்டும். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது என்றும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும், கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொண்டு, தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். முக்கியமாக ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும்.

கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும் என சில பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது.

கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக் கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் சந்திர கிரகணத்தை பார்க்கக் கூடாது.

மேலும், கிரகண நேரத்தின் போது வெளியே சென்றால் கதிர்வீச்சுக்களினால் கர்ப்பிணிகளுக்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்புகள் ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

அத்துடன், கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் காய்கறி நறுக்கக் கூடாது என்றும் மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப் பிளவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு.

இந்த பாதிப்பை `கிரகண மூலி’ என்றும் சொல்கிறார்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கர்ப்பிணிகள் பத்திரமாக இருப்பது நல்லது.

சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர் நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்து விடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே வரிசையில் வரும் போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். இது கேது உடன் சந்திரன் இணைந்திருக்கும் போது நிகழ்கிறது.

கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் செயற்கையான இருட்டு ஏற்படுகிறது.

இதன் காரணமாக பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே கர்ப்பிணிப் பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரபல இளம் நடிகர் திடீரென உயிரிழப்பு!!

 

இலங்கையின் பிரபல இளம் கலைஞர் இந்திக்க கினிகே காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இலங்கையின் சிங்கள கலைத்துறையின் இளம் நடிகரும், பாடகருமான இந்திக்க கினிகேவே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார்.

கண்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றிரவு இந்திக்க உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திக்கவின் சடலம் தற்பொழுது கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழக்கும் போது இந்திக்கவிற்கு 37 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

மரணத்திற்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதுடன், இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

இலங்கையில் அதிநவீன முச்சக்கர வண்டி : நல்லாட்சியில் ஏற்படவுள்ள புரட்சி!!

இலங்கையில் விரைவில் இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் மற்றும் இலங்கை இணைந்து இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் முதல் தொகுதி 2020 மத்திய காலப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.

இந்த முச்சக்கவண்டிக்கு சமுராய் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டையின் மஞ்சள் கரு இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிடாதீர்கள்!!

முட்டைகளின் மஞ்சள் கரு குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இதில் எந்த நிறமான மஞ்சள் கரு நல்லது என்றால், அது ஆரஞ்சு நிறமுள்ள மஞ்சள் கரு தான்.

ஆரஞ்சு நிற மஞ்சள் கரு நல்லது ஏன்?

முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான கோழியிடமிருந்து வந்திருக்கிறது என்று அர்த்தம்.

இந்த மாதிரியான கோழிகள் ஆரோக்கியமான புழு புற்களை மேய்ந்து, சூரிய வெளிச்சம் பெற்று இயற்கையான முறையில் அவை வளர்வதால் அவற்றின் முட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே நாம் அன்றாடம் சாப்பிடும் முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மட்டுமே சாப்பிடுவது நல்லது.

மேலும் வெளிர் ஆரஞ்சு நிறத்தில் மஞ்சள் கரு இருந்தாலும், அது நல்லது. ஏனெனில் அது ஆர்கானிக் முட்டை என்று கூறலாம்.

மஞ்சள் நிறத்தில் உள்ள மஞ்சள் கரு ஆபத்தா?

முட்டையின் மஞ்சள் கருமஞ்சள் நிறத்தில் இருந்தால் அது நல்லதல்ல. ஏனெனில் அவை முற்றிலும் குறைவான தரம் கொண்டவை. அந்த முட்டை ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கப்பட்டதாகும்.

தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம்?

தினமும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் வரை சாப்பிடலாம். அதுவே மஞ்சள் கருவை சாப்பிடுவதாக இருந்தால், தினமும் 1 முட்டை சாப்பிட்டால் போதும்.

கடுமையான ஜிம் பயிற்சி செய்பவராக இருந்தால், ஒரு நாளைக்கு 4 முட்டை சாப்பிடலாம். ஆனால் கணிணி முன் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் ஒரு முட்டைக்கு மேல் சாப்பிடக் கூடாது.
முட்டையை தரமானதாக இருந்தால் பச்சையாக சாப்பிடலாம். அதைவிட வேக வைத்து சாப்பிடும் போது அதன் சத்துக்கள் இருமடங்கு கிடைக்கும்.

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

இதய நோய் மற்றும் கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.
வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் மட்டும் முட்டையை தவிர்ப்பது நல்லது.
குறிப்பு

முட்டையை அதிக நேரம் வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடக் கூடாது. ஆனால் காய்கறிகளை சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிடலாம்

13000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் நாய் செய்த செயலால் பரபரப்பு : அவசரமாக தரையிறக்கம்!!

 

ரஷ்ய விமானம் ஒன்றில் ஏற்றப்பட்ட நாய் அதன் கூண்டிலிருந்து வெளியே வந்து கதவை திறக்க முயன்றதால் விமானம் அவசரமாக தரையிறக்கபட்டது.

St. Petersburgலிருந்து கிளம்பிய Boeing 737 ரக விமானம் 13000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது பொருட்கள் வைக்கும் அறையில் நாய் ஒன்று கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

கூண்டின் கதவு சரியாக பூட்டப்படாத நிலையில் அதிலிருந்து வெளியேறிய நாய் கதவை திறக்க முயன்றுள்ளது.

இதையடுத்து அவசர அலாரம் சத்தம் கேட்க தொடங்கியது. அதே சமயத்தில் விமானத்தின் பாதுகாப்பு மின்னணுவியல் நாயை கதவை திறக்க விடாமல் தடுத்துள்ளது.

இதன் காரணமாக நாயின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனாலும் பாதுகாப்பு கருதி விமானமானது அவசரமாக மாஸ்கோவில் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய விதிமுறைகளின்படி விமானத்தில் 8 கிலோ எடை வரையிலான மிருங்களை மட்டும் ஏற்றி செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்த பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு பெண்கள் இருவரினால் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கிரிக்கெட் வீரரின் நண்பர் நேற்று கைது செய்யப்பட்டார்.

நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், வெளிநாட்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்திற்கு தனுஷ்க குணதிலக்க தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய தனுஷ்க குணதிலக்க இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனுஷ்க குணதிலக்கவுக்கு தற்போது ஒழுக்காற்று விசாரணை ஆர்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவருக்கு போட்டித்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.