பெண் பத்திரிக்கையாளர் மீது இனவெறித் தாக்குதல்!!

மும்பையில் ஊபர் கேப்பில் பயணம் செய்த பெண் பத்திரிக்கையாளர் மீது, சகபெண் பயணி ஒருவர் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பையை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் உஷாநோட்டா பவுல், இன்று காலை தன்னுடைய சொந்த வேலையாக ஊபர் கேப்பில் பயணம் செய்துள்ளார்.

ஆனால் அவர் காரில் ஏறுவதற்கு முன்னதாக ஏற்கனவே மற்றொரு பெண் ஒருவர் அதில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

காரில் உஷா ஏறிய உடனே, அவரை முறைக்கும் விதமாக சகபயணி பார்த்துள்ளார்.

சிறிது நேரம் சென்றபொழுது, தான் அதிககட்டணம் கொடுத்து பயணம் செய்வதாகவும், ஆனால் இப்போது வந்தவர்களுக்கு பின்னர் தான் இறங்க வேண்டிய நிலைமை இருப்பதாகவும் ஓட்டுனரிடம் புலம்பியுள்ளார்.

இதற்கு உஷா பதிலளிக்க முயற்சிக்கும்போது, தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உஷாவை, அந்த பெண் திட்டியுள்ளார்.

அவர் வேண்டுமென்றே தன்னை குறிவைக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட உஷா, அமைதியாக தன்னுடைய செல்போனை பயன்படுத்திக்கொண்டிருந்துள்ளார்.

உடனே மீண்டும் உஷாவை வம்பிழுக்கும் விதமாக, அவரது கைபையை எடுத்து ஓட்டுநர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வைத்துள்ளார்.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உஷா அவரை தன்னுடைய செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.

உடனே உஷாவின் செல்போனை பறித்து கீழே வீசிய அந்த பயணி, முடியை பிடித்து தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

இதனையடுத்து காரில் இறங்கிய உஷா சம்மந்தப்பட்ட பெண் குறித்து எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் முகத்தில் காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிர்வாண கோலத்தில் 30 ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த நபர் : அதிர்ச்சிக் காரணம்!!

ஜப்பான் நாட்டில் ஆளில்லாத தீவு ஒன்றில் 30 ஆண்டுகளாக நிர்வாண கோலத்தில் வாழ்ந்து வந்த முதியவரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

ஜப்பானில் உள்ள Yaeyama தீவில் கடந்த 30 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார் 82 வயதான Masafumi Nagasaki.

நிம்மதியாக மரணமடைய ஒரு இடம் தேடி அலைந்ததாகவும், இறுதியில் இந்த தீவினை கண்டடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுத்தமான குடிநீர் இன்றி, உடைகள் ஏதும் இல்லாமல், இரவானால் நிலவு வெட்டம் மட்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அவர் தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.

குறித்த தீவில் ஜப்பான் மீனவர்கள் கூட செல்வதில்லை எனவும், ஜப்பானியர்களால் புறந்தள்ளப்பட்ட சில தீவுகளில் இது ஒன்று எனவும் கூறப்படுகிறது.

கடந்த 1989 ஆம் ஆண்டு முதன் முறையாக இந்த தீவுக்கு சென்ற நாகசாகி இரண்டு ஆண்டு காலம் மட்டும் தங்கிச் செல்ல முடிவு செய்துள்ளார்.

ஆனால் நீண்ட 30 ஆண்டு காலம் அவர் அந்த தீவில் தனியாக வாழ்ந்துள்ளார். இருந்த ஒரே ஒரு ஆடையும் காலப்போக்கில் கிழிந்துபோக, அதன் பின்னர் நாகசாகி நிர்வாணமாகவே இருந்து வந்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு இவர் தொடர்பான தகவல் வெளியாகவே, சர்வதேச ஊடகம் ஒன்று இவரை நேர்காணல் செய்துள்ளது.

அப்போது இவரை நிர்வாண துறவி என பெயரிட்டு செய்தி வெளியிட்டது. தற்போது மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் நாகசாகியை மீட்டுள்ள அதிகாரிகள் அரசு குடியிருப்பு ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.

குறித்த தீவை பாதுகாப்பதே தமது தலையாய பணி என கூறி வந்த நாகசாகி, தமக்கு மரணம் நேர்ந்தால் அது இந்த தீவில் நடக்க வேண்டும் எனவும் கூறி வந்துள்ளார்.

கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்துடன் வான் மோதி கோர விபத்து : மூவர் பலி!!

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கிரான் அருகே இந்த விபத்து இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது. காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துடன் வான் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது வானில் பயணித்த பலர் விபத்தின் காரணமாக காயமடைந்துள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமுற்ற பயணிகளை பிரதேச வாசிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போதைக்கு ஐந்துக்கும் ​மேற்பட்டோர் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான தகவல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று விரைந்துள்ளது.

ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!!

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தற்போது சற்று அதிகரிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் வரை டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 161 ரூபாவையும் தாண்டி வீழ்ச்சியடைந்து சென்று கொண்டிருந்தது.

அந்நியச் செலாவணி குறைவு மற்றும் அந்நிய முதலீடுகள் வீழ்ச்சி என்பனவும் இதற்கான காரணங்களாக கூறப்பட்டது.

இதன் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்திருந்ததுடன் இறக்குமதிப் பொருட்களின் விலையும் அதிகரிக்க நேர்ந்திருந்தது.

இந்நிலையில் தற்போது டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 160 ரூபாவரை முன்னேற்றம் கண்டுள்ளது.

யாழில் சிறுமி கழுத்து நெரித்து படுகொலை : விசாரணைகளுக்காக நால்வரை அழைத்துச் சென்ற பொலிஸார்!!

யாழ். சுழிபுரம் பகுதியில் பாடசாலை சிறுமி ஒருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வரை விசாரணைகளுக்காக பொலிஸார் அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து தரம் ஒன்றில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியினை சேர்ந்த சிவனேஸ்வரன் ரெஜினா என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாடசாலை விட்டு வீடு திரும்பிய மாணவியை காணாத நிலையில், தேடிய போது அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் கழுத்தில் கயிற்றால் நெருக்கிய தடயம் காணப்படுகின்றது. அத்துடன், சிறுமி அணிந்திருந்த தோடும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழில் கருங்கற்களை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் திரு­வா­சக அரண்­மனை!!

யாழ்ப்பாணம் நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது.

விநா­யக வழி­பாட்­டு­டன் தவில் நாதஸ்­வர இசை­யு­டன், கருங்­கற்­க­ளில் பொறிக்­கப்­பட்ட 658 பாடல்­களை கொண்ட, 11 மொழி­க­ளில் மொழி பெயர்க்­கப்­பட்ட திரு­வா­ச­கப் பாடல்­களை உள்­ள­டக்­கிய அரண்­மனை விருந்­தி­னர்­க­ளால் திறந்து வைக்­கப்­பட்­டது.

வாச­கம் பொறிக்­கப்­பட்ட அர­ணின் ஒவ்­வொரு தூண்­க­ளின் இடை வெளி­யி­லும் நான்கு சிவ­லிங்­கம் மற்­றும் நான்கு மணி­கள் வீதம் 108 சிவ­லிங்­க­மும் 108 மணி­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

தட்­சணா மூர்த்­திக்கு அமைக்­கப்­பட்ட ஆல­யத்­தின் வழி­பாட்டை தொடர்ந்து 21 அடி­யில் தங்க முலாம் பூசப்­பட்ட பாம்­புச் சிவ­லிங்­கம் இருக்­கும், கருங்­கல்­லில் அமைக்­கப்­பட்ட தேர் திறந்து வைக்­கப்­பட்­டது.

அரண்­மனை உரு­வாக்­கு­வ­தற்கு பல­வ­ழி­க­ளும் பாடு­பட்ட சிற்­பக்­க­லை­ஞர், கட்­ட­டக் கலை­ஞர், செப்பு வேலை கலை­ஞர், கருங்­கல் வேலைப்­பா­டுக் கலை­ஞர்­கள் பொன்­னாடை போர்த்தி பதக்­கம் வழங்கி மதிப்­ப­ளிக்­கப்­பட்­ட­னர்.

கருங்­கற்­க­ளால் பொறிக்­கப்­கப்­பட்ட எழுத்து வேலை­களை செய்­த­வர் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளின் பெயர்­களை கருங்­கல்­லில் பெயர் பொறிக்­கும் இளை­ஞன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

திரு­வா­சக அரண்­மனை நூலும் வெளி­யி­டப்­பட்­டது. இந்த நூலை சிவ­பூமி அறக்­கட்­ட­ளை­யின் பொரு­ளா­ளர் குக­தா­சன் வழங்கி வைக்க நல்லை ஆதீன முதல்­வர் பெற்­றுக்­கொண்­டார்.

நிகழ்­வில் விருந்­தி­னர்­க­ளாக ஆஸ்­தி­ரே­லியா மருத்­துவ நிபு­ணர் கலா­நிதி மன­மோ­கன் மருத்­துவ கலா­நிதி சிவ­கௌரி தம்­ப­தி­யி­னர், கொழும்பு மனித நேய அறக்­கட்­டளை தலை­வர் அபி­ராமி கயி­லா­ச­பிள்ளை, கம்­ப­வா­ரிதி இ.ஜெய­ராஜ், சிதம்­ப­ரம் அண்­ணா­மலை பல்­க­லைக் கழக பேரா­சி­யர் தி.பால­சந்­தர் தேசி­கர் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

வவுனியாவில் வெடிபொருட்களைத் தேடி வேட்டை!!

வவுனியா கூமாங்குளம் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கைவிடப்பட்ட வீடு ஒன்றினை சுற்றிவளைத்து பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன.

இது தொடர்பாக தகவல் கிடைத்து அங்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கிருந்தவர்கள் செய்தி சேகரிக்கத்தடை ஏற்படுத்தியதுடன், அவ்வீட்டினை துப்பரவுப்பணிகள் இடம்பெற்று வருகின்றதே தவிர அங்கு வெடிபொருட்கள் எவையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அண்மையில் விசேட அதிரடிப்படையினர் சென்று நீதிமன்றத்துடன் அனுமதியைப் பெற்று அகழ்வுப்பணியினை மேற்கொண்டபோதிலும் எவ்விதமான வெடிபொருட்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில் தொலைபேசியில் பேசிய மகள் : கழுத்தை நெரித்து கொன்ற தந்தை!!

பஞ்சாப் மாநிலத்தில் மகள் தனியாக இரவில் கைப்பேசியில் பேசி கொண்டிருந்ததால் தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் உள்ள குர்னே கர்ட் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகளை சந்தேகப்பட்டு கொன்றிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை அன்று இரவு அனைவரும் தூங்கியபின்னும் கைப்பேசியில் அவரது மகள் குல்வந் கவுர் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

ஏற்கனவே தனது மகள் அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிக்கிறார் என்ற சந்தேகத்தில் இருந்த அவரது தந்தை ஜோகா சிங் அவரது மகளை கையும் களவுமாக பிடிப்பதற்காக கவுர் பேசி கொண்டிருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார்.

அதன் பின்னர் ஆத்திரம் தலைக்கேறிய நொடியில் கவுரின் துப்பட்டாவை கொண்டு அவரது கழுத்தை நெரித்து கொன்ற ஜோகா சிங் பின்னர் எதுவும் நடக்காதது போல அமைதியாக வந்து படுத்திருக்கிறார்.

அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த உண்மையை அறிந்த பின் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து புத்லடா டிஎஸ்பி ராச்பால் சிங், அப்பெண்ணின் கழுத்தை நெரித்த அடையாளங்கள் அவரது உடலில் காணப்படுவதால் அவரது தந்தை ஜோகா சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யாழில் பாடசாலை சீருடையுடன் சிறுமியின் சடலம் மீட்பு : சோகத்தில் உறைந்த கிராமம்!!

 

பாடசாலை சீருடையுடன் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி, கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியினை சேர்ந்த சிவனேஸ்வரன் றெஜினா (வயது 6 ) என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவி நேற்று பாடசாலைக்குச் சென்று மதியம் வீடு திரும்பியுள்ளார். மாணவி வீட்டிற்கு வந்த நேரத்தில், தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளார்.

தகப்பனார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். மதியம் 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தேடியுள்ளார்.

எனினும், அங்கு வரவில்லை என சிறுமியின் பெரியதாயார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியியை உறவினர்கள் ஒன்று சேர்ந்து தேடியுள்ளனர்.

விடயத்தினை அறிந்த அந்த பகுதி இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் பூராகவும் தேடியுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.

சிறுமியைச் சடலமாக கண்ட இளைஞர் கதறி அழுதவாறு தாயாருக்கு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் உறவினர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் சிறுமியின் சடலத்தினை மீட்டுள்ளனர். சிறுமி சீருடைகள் அற்ற நிலையில் அரை நிர்வாணமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் கழுத்தில் கயிற்றால் நெருக்கிய தடயம் காணப்படுகின்றது. அத்துடன், சிறுமி அணிந்திருந்த தோடும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கழுத்தில் காணப்படும் அடையாளத்தினை வைத்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்து 3 நாட்களான குட்டிக்கு பால் கொடுக்க முயற்சிக்கும் தாய் குரங்கு : கண்ணீரை வரவைக்கும் புகைப்படம்!!

தமிழகத்தில் இறந்த குட்டியை பிரிய மனமின்றி தாய் குரங்கு சுற்றுத் திரியும் காட்சி அங்கிருக்கும் சுற்றுலாப் பயணிகளிடம் கண்ணீர் வரவைத்துள்ளது.

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று முக்கொம்பு. இங்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தாய்க் குரங்கு ஒன்று இறந்து மூன்று நாட்கள் ஆன தன்னுடைய குட்டியை பிரிய மனமின்றி, அதை மார்போடு தூக்கிக் கொண்டு திரிகிறது.

அதுமட்டுமின்றி அதற்கு பேன் பார்ப்பது மற்றும் பாலூட்ட முயற்சி செய்வதை பார்க்கும் போது அங்கிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களை அறியாமலே கண்கலங்குகிறது.

நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன் : அதனால் இவ்வாறு செய்தேன் : பெண்ணின் வாக்குமூலம்!!

சிவகாசியில் கணேசன், முகமது இப்ராஹிம், முருகன் கௌதம், சரவணன், அந்தோனி ராஜ், ஹரிஹரன் உட்பட 7 பேர் மதுபானம் அருந்தியதில், 4 பேர் வாயில் நுரை தள்ளி இறந்துபோயுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒன்றாக வேலை பார்ப்பதால், வேலை முடித்துவிட்டு மது வாங்கி ஒன்றாக அருந்தியுள்ளனர். மேலும், மது அருந்துவதற்கு முன்னர் முருகன் வீட்டில் சமைத்த சாப்பாட்டையும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.

மது அருந்தியவர்களில் 6 பேர் வாயில் நுரை தள்ளியது, இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 பேர் பரிதாபமாக இறந்துபோயினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் சிவகாசியில் உள்ள மதுபான அரசு கடையில் மது வாங்கி அருந்திய காரணத்தால், மதுகுடித்துதான் இவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது எனக்கருதி உறவினர்கள் அனைவரும் மருத்துவமனை முன்பாக குவிந்தனர்.

இதற்கிடையில், உயிரிழந்தவர்கள் உடலில் இருந்த உணவை பரிசோதித்ததில், அதில் விஷம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

மது குடிக்கும் போது அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்தது யார் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலியான முருகனின் சகோதரி வள்ளி என்பவரும், அவரது காதலரான அச்சக ஊழியர் செல்வம் என்பவரும் உணவில் மது கலந்தது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட வள்ளி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், கணவரை பிரிந்து வாழும் நான், செல்வம் மீது காதல் வயப்பட்டேன், இதனை சகோதரர் முருகன் கண்டித்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டு, உணவில் விஷம் கலந்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து வள்ளி மற்றும் செல்வத்தை கைது செய்துள்ள பொலிசார், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமனாரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இப்படி ஒரு மாப்பிள்ளை!!

ஒடிசா மாநிலத்தில் நபர் ஒருவர் தனது திருமணத்திற்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம், மாறாக மரக்கன்றுகள் கொடுங்கள் எனக்கூறி மாமனாரை மட்டுமல்ல அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.

பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்த சரோஜ்காந்த் பிஸ்வால் எனும் ஆசிரியருக்கும், அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஷ்மி ரேகாவுக்கும் திருமணம் நிச்சயமானது.

இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக பிஸ்வால், தனது மாமனாரிடம் பணம் நகைக்கு பதிலாக மரக்கன்றுகளை பரிசாகக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து,கடந்த 22 ஆம் திகதி சரோஜ் காந்த் பிஸ்வால்-ராஷ்மிரேகா திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது மணமகளின் தந்தை மரக்கன்றுகளை வரதட்சணையாக அளிக்க, அதை மணமக்கள் தங்களை வாழ்த்த வந்தவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

பிஸ்வாலை நினைத்து அந்த கிராமத்து மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பள்ளி வாகனத்தில் மது அருந்தியதை கண்டித்த காவலர் அடித்துக் கொலை!!

சென்னைக்கு அருகில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் மோகன் ராஜ் என்பவர் காவலராக பணி புரிந்து வந்தார்.

வேலூரை சேர்ந்த இவர் கடந்த வாரம்தான் மாற்றலாகி சுங்குவார் சத்திரம் வந்திருக்கிறார். நேற்று பணி முடிந்து மோகன் ராஜ் வீடு திரும்பி கொண்டிருக்கையில் பள்ளி வாகனம் ஒன்றில் சிலர் மது அருந்தி கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார்.

இங்கு ஏன் குடிக்கிறீர்கள் என்று காவலர் மோகன் ராஜ் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த குடிகாரர்கள் மோகன் ராஜ் மீது மது பாட்டிலை உடைத்து வீசியுள்ளனர். மேலும் உடைந்த பாட்டிலால் அவரது கழுத்தில் குதியுள்ளனர் .

இதனால் சம்பவ இடத்திலேயே காவலர் மோகன் ராஜ் உயிரிழந்தார். அதன் பின் அவரை ரோட்டில் வீசிவிட்டு குற்றவாளிகள் தப்பினர்.

காவல்துறைக்கு தகவல் அறிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினர், கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மோகன் ராஜுக்கு அன்பு ரோஜா என்கிற மனைவியும், அஷ்வின், அவினாஷி , அஜயா என மூன்று குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா வயது பெண்ணை திருமணம் செய்த இளைஞன்!!

இந்தியாவில் 65 வயதான பெண்ணுக்கும், 27 வயதான ஆணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஹரியானாவை சேர்ந்தவர் பிரவீன், அமெரிக்காவை சேர்ந்த கரென் லிலியன் எப்னர். இவர்கள் இருவரும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நட்பாகியுள்ளனர், வீடியோ சாட்டில் தொடங்கிய உரையாடல் காதலில் முடிந்துள்ளது.

இதனையடுத்து இருவருக்கும் கடந்த 21ம் திகதி சண்டிகரில் திருமணம் நடைபெற்றது, உறவினர்கள் சம்மதத்துடன் பிரவீனை மணந்து கொண்டுள்ளார் கரென்.

தற்போது வாடகை அடுக்குமாடி கட்டிடத்தில் புதுமண தம்பதியினர் குடியேறிள்ளனராம்.

அடுத்த மாதம் 18ம் திகதி கரென் அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என்பதால், பிரவீன் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். அது கிடைக்காதபட்சத்தில் நிரந்தரமாக இந்தியாவிலேயே தங்க கரென் முடிவு எடுத்துள்ளாராம்.

வவுனியாவில் தலைமறைவாகிய நுண்நிதி நிறுவன ஊழியர்!!

வவுனியாவில் இயங்கிவரும் நுண்நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் சிதம்பரபுரம் பகுதியில் குழுவாக கடன் பெற்றுத்தருவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் சிலரிடம் பணம் பெற்று தலைமறைவாகி விட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து அப்பகுதிகள் தெரிவிக்கும்போது,

கடந்த வாரம் சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 1 இல் குடும்பப் பெண்களுக்கு நுண்நிதி நிறுவனம் ஒன்றில் முன்பு கடன் பெற்றுக்கொடுத்த ஊழியர் ஒருவர், ஒரு குழுவினர் பெற்றுக்கொண்ட கடனைச் செலுத்தவில்லை என்று தெரிவித்து திரும்பவும் அவர்களுக்கு கடன் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஊழியரின் வார்த்தையை நம்பி திரும்பவும் கடன் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர்களிடம் ஆயிரம் ரூபா வீதம் 20 பேரிடம் பணம் பெற்றுவிட்டு தற்போது அவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், குறித்த ஊழியர் தம்மை ஏமாற்றிவிட்டு பணத்துடன் தலைமறைவாகி விட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிறுவனத்திற்கு சென்று இவ்விடம் தொடர்பாக முறையிட உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் சிறுத்தையை கொலை செய்த 6 பேர் சிக்கினார்கள்!!

கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றுமொருவர் நேற்று காலை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த இருவரையும் நேற்றய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கிரேசியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதிவரை காவலில் வைக்குமாறும் ஏனையவர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன் பின்னர் நேற்று மாலை மேலும் மூவர் பொலிஸில் சரணடைந்ததுடன், மற்றுமொருவரை இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறிப்பிட்ட நால்வரையும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், ஏனையவர்களை கைது செய்ய தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.